கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: September 16, 2025
பார்வையிட்டோர்: 29 
 
 

(1945ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

கிட்டத்தட்ட நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன் ஃபிரான்சு நாட்டில் நெப்போலியன் ஒரு பேரசனாக விளங்கினான். அவன் பெரும்பாலும் அந் நாளைய உலகத்தை முற்றும் வென்றடக்கிய வீரன். அவன் குடிகளும் படை வீரரும் அவனைத் தந்தை யென நினைத்து மதிப்பும் அன்புங்கொண்டு அவ னுக்குத் துணைபுரிந்து வந்தனர். அன்பினால் மதிப்புக் கெடுவதும், மதிப்பினால் அன்பு குறைவ தும் உலக இயற்கை. நெப்போலியன் போற்றத் தக்க வகையில் இரண்டும் கெடாதபடி பார்த்து வந்தான். 

ஒரு நாள் நெப்போலியன் தெருவிழியேபோய்க் கொண்டிருந்தபோது போரில் நற்பெயர் வாங்கிய படை வீரன் ஒருவன் அவனைப் பார்த்து, “ஐயனே! இங்கே நான் ஒரு பந்தயம் வைத்துவிட்டேன். நான் வெற்றிலை போடும்போது தங்கள் உடை வாளால் பாக்கு வெட்டிக்கொண்டால் ஒரு நூறு பொன் பெறுவது என்றும் இல்லாவிட்டால் நூறு பொன் கொடுப்பது என்றும் பேசி யிருக்கிறேன். நட்புரிமையில் சொல்லிவிட்ட என்சொல்லைப் பாது காக்க வேண்டும்,” என்றான். 

நெப்போலியன், “நான் என் நட்புரிமையை யும் பாதுகாக்க வேண்டும், அரசுரிமையையும் பாதுகாக்க வேண்டும். நீ பந்தயமாக வைத்துக் கிடைக்கும் பணத்தின் பதின்மடங்கு உனக்குத்தரு கிறேன். அன்றியும் பந்தயம் வைத்த உன் நண்ப ரும் நீயும் என் பெயரால் அரசமாளிகையில் விருந் தயர்க!” என்று அவர்களை அழைத்துக்கொண்டு சென்றான். 

– கதை இன்பம் (சிறு கதைகள்), மலர்-க, முதற் பதிப்பு: 1945, திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், லிமிடெட், திருநெல்வேலி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *