சிலந்தியின் படிப்பினை




(1945ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஆறுமுறை பகையரசரை எதிர்த்துப் போராடி யும் வெற்றி பெறாமல் மனமுடைந்த அரசனொரு வன், ஒரு குகையில் ஒளிந்து நினைவிலாழ்ந்திருந் தான்.
அந்த நேரத்தில் ஒரு சிலந்தி குகையின் ஒரு சுவரிலிருந்து மறு சுவருக்குத் தன் நூலைப் பறக்க விட்டு மிதந்து செல்ல முயன்று கொண்டிருந் தது. ஆறு தடவை முயன்றும் அது தோல்வியே அடைந்தது கண்டு, அரசன் அதன் செயலில் முற் றும் ஈடுபட்டு, “இப்போது அதன் நிலையும் என் நிலையும் ஒன்றே. அது, என்ன செய்கிறது என்று பார்க்கிறேன்,” என்று எண்ணிக் கொண்டான்.
மாந்தரின் அறிவுக்கு இடமில்லாத அச்சிலந் தியினிடத்தில் மாந்தரின் மனமுறிவுக்கும் ஒரு சற் றும் இடமில்லை என்றே தோற்றிற்று. அது சற்றும் அயர்வடையாமல் மீண்டும் பொறுமையுடன் சுவர் ஏறித் தாவிற்று. இம்முறை அதற்கு வெற்றியும் கிடைத்தது.
அரசனுக்கு இஃது ஒரு பெரும் படிப்பினை ஆயிற்று. ‘முயற்சி திருவினையாக்கும்’ என்ற உறுதியுடன் மறுமுறையும் போரில் வெற்றி பெற் றான்.
உண்மைகள் ஒன்றுக்கொன்று மாறுபட்டுக் கடமை மயக்கம் ஏற்படுங் காலத்தில் நடுநிலை கண்டு ஒழுகுந் திறம் வாய்ந்தவர், “செயற்கரிய செய்யும்” ஒரு சிலரே.
– கதை இன்பம் (சிறு கதைகள்), மலர்-க, முதற் பதிப்பு: 1945, திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், லிமிடெட், திருநெல்வேலி.