எதிலிருந்து பாதுகாப்பு?




(1945ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஒரு பாதுகாப்புப் பொருளகத்திற்கு ஆட்கள் சேர்க்கப் பலர் ‘ஆட்பேர்’ அமர்த்தப்பட்டிருந்த னர். அவர்களுள் ‘காலடி’ என்பான் ஒருவன் இருந்தான். அவன் வாயடியிலும், பிறரை நய மாகப் பேசி வலியுறுத்துவதிலும் திறமை வாய்ந்த வன். ஆனால் அவன் பெரும்பாலும் எதிரியின் நிலைமையைக் கவனிப்பதோ, அவன் நேரத்தை யும் வேலைகளையும் மதிப்பதோ இல்லை.
ஒரு நாள் தமது வேலையின் பொருட்டாக ஒரு வர் விரைந்து தம் அலுவலகம் போய்க் கொண்டி ருந்தார். காலடி பலகால் அவரைத் தன் பொருள கத்திற்கு உறுப்பினனாகச் சேர்க்க முயன்றும், அவர் நாளை நாளை என்று கடத்தி வந்தார். இன்று எப் படியாவது அவரை இழுத்துவைத்துத் தன் நோக் கம் வெற்றிபெறச் செய்யவேண்டும் என்று அவன் தன் உள்ளத்தில் உறுதி செய்து கொண்டான். ஆகவே அவரைப் புன்முறுவலுடன் வலுவந்த மாகத் தனது நிலையத்திற்கு இழுத்து வந்து, ‘எப் படியாவது இன்று என் கருத்திற்கு இணங்கியாக வேண்டும்,’ என்றான்.
அப்பெரியவர் ஏதோ எண்ணியவராய், ‘சரி உம் அலுவலகத் தலைவரை இங்கே அழைத்துக் கொண்டு வருக !’ என்றார்.
அலுவலகத்தில் சேரத்தான் தலைவரை அழைக்கிறார் என்று எண்ணிக்கொண்டு, காலடி மகிழ்ச்சியுடன் ஓடித் தன் தலைவரை அழைத்துக் கொண்டு வந்தான். தலைவரும் வந்தவரை வணங்கி முகமெலாம் புன்முறுவல் கொண்டு சேர்ப் புத்தாளை ஏந்தி, “எங்கள் அலுவலகத்தில் எல்லா வகையான பாதுகாப்புக்களும் கிடைக்கும். உயிர்ப் பாதுகாப்பு வெள்ளப் பாதுகாப்பு நெருப்புப் பாது காப்பு ஆகப் பல பாதுகாப்புக்களும் கிடைக்கும். தமக்கு எதிலிருந்து பாதுகாப்பு வேண்டும்?” என்றார்.
பெரியார், “எனக்கு வேண்டும் பாதுகாப்பு ஒன்றுதான். அது தங்கள் ‘ஆட்பேரிடமிருந்து வேண்டும் பாதுகாப்புத்தான்,” என்று கூறிவிட்டுச் சரேலென்று வெளியேறி விட்டார்.
– கதை இன்பம் (சிறு கதைகள்), மலர்-க, முதற் பதிப்பு: 1945, திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், லிமிடெட், திருநெல்வேலி.