எந்த முனையில் ஐயனே!




(1945ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

செங்கட் கடுங்கோ என்னும் பெயருடைய வழக்குமன்றத் தலைவர் ஒருவர் இருந்தார். அவர் நடுநிலை தவறாதவராயினும் கடுமைமிகுதி உடைய வர். குற்றவாளிகளிடம் சொட்டுச் சொட்டென்று கடுஞ்சொற்களும் வழங்குவார்.
ஒருநாள் துணிவும் வாய்த்துடுக்கும் உடைய ஒரு குற்றவாளியை நோக்கித் தம் கைப்பிரம்பை நீட்டிக் காட்டியவண்ணம் அவர், “இதோ இந்தப் பிரம்பின் முனையில் ஒரு போக்கிலி நிற்கிறான்; பார்,” என்றார். அவன் உடனே “எந்த முனையில், ஐயனே!” என்றான். தலைவர் அதைக் கேட்டு வெட்கிப் போனார்.
‘எண்ணாது பேசுபவர் இழுக்குறுவர்.’
– கதை இன்பம் (சிறு கதைகள்), மலர்-க, முதற் பதிப்பு: 1945, திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், லிமிடெட், திருநெல்வேலி.