அழகு மாயையும் அன்பு நெறி வாழ்க்கையும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 2, 2025
பார்வையிட்டோர்: 157 
 
 

அழகு அமைதி இரண்டும் கோலோச்சுகின்ற அந்த பெரிய வீட்டின் நிலைமை இப்போது கவலைக்கிடமான ஒரு காட்சி செய்தியாய் மனதில் உறைத்தது.

அழகு என்பது ஒரு மாயத் தோற்றம் இதில் சிக்கி அழகு உருக்குலைந்து போனவர்களின் சோக வரலாற்றை பின்னர் பார்ப்போம் என்று விடுவதற்கல்ல இந்தக் கதையும் கரு மாந்தர்களூம் அப்பு வாயிலிருந்தே இதைத் தொடங்குவோம்.

அப்புவும் அம்மாவுமான வாழ்க்கை, இப்போது மண்ணிலே போய் விட்ட மறை பொருள் தான் என்றாலும், கூட தூய அன்பு நிலை மறந்து, பேச்சாய் வருகின்ற ஒவ்வொரு வார்த்தை சிதறலும் மனங்களை வாழ வைக்கவல்ல, அதனை வெட்டி சாய்க்கவே என்பதை அறிவு பூர்வமாக விளக்கி, மாயத் திரை மூடியே மரிக்க நேரிடும் மனிதர்களுக்கு அறிவு வெளிச்சம் புகட்டவே , இக் கருமூலம் கதையாய் வருகிறது.

இருட்டிலே தான் எப்போதும் அம்மா . அதுவும் சொந்த மச்சானை மணமுடித்த பாவத்திற்காக கழுவாய் சுமந்தே களைத்துப் போன நிலை தான் அவளூக்கு.

அப்படியென்ன மனக் குறை அவளுக்கு? பிள்ளைச் செல்வத்துக்கு குறைவில்லை அவளுக்குஅதில் மட்டும் சளைத்துப் போகாத மனம் அப்புவிற்கு அவருக்கு பத்துப் பிள்ளைகள். முருகன் தான் முதல் வாரிசு.அவனுக்கு வயது இருபதாகிறது. அப்போது அவன் கொழும்பிலே சித்தப்பா வீட்டிலே தங்கி பல்கலைக் கழகத்தில் படித்துக் கொண்டிருந்தான், ஒரு கலைப்பட்டதாரியாக வர இருக்கிறவன். அம்மாவின் மகா பிரியத்துக்குரிய செல்லப் பிள்ளை அவன் . அவன் வீட்டிற்கு வந்தால், ஒரே கொண்டாட்டம் தான் அம்மாவின் கைப் பக்குவத்தில் சமையல் அவ்வளவு விசேஷமாக இருக்கும் அதுவும் சைவ சாப்பாடு. ஒருகாலத்தில் வறுமை காரணமாக அப்புவின் ஆச்சி, எலியைக் கூட பிடித்து சமைத்துக் கொடுத்தாளாம் பின்னர் அரச வேலையாகி ஞானிகளின் தொடர்பால், முழு சைவமாக மாறினது ஒரு தனிக் கதை. அம்மாவும் மீன் சாபிடுவதை விட்டு, வெகுகாலமாகிறது. அப்பு சைவத்துக்கு திரும்பினாலும் குட்டை குழம்பின மனம் தான் அவருக்கு முருகன் ஒரு சமயம் அதை அம்மா வாய் மொழியாகவே அறிய முடிந்தது.

விடுமுறையில் அவன் வீட்டிற்கு வந்த, போது, சாப்பாட்டு மேசையில் அவன் அமர்ந்திருக்க, உணவு பரிமாறிக் கொண்டே அழாத குறையாக , குரல் கம்மிக் கொண்டே, அவள் சொன்ன ஒரு பழங் கதை அவனை திடுக்கிட வைத்தது.

தெரியாமல், தான் கேட்கிறன். சொல்லு முருகா! நான் வடிவில்லையே?

ஆர் சொன்னது?

எல்லாம் கொப்பர் தான்

என்ன சொல்லுறியள்?

நான் வடிவாயிருந்தால், அந்த ஆள் என்னை மடியிலை தூக்கி வைச்சிருப்பாராம்.

நிஜமாய்த் தான் சொல்லுறியளே? அவன் கையை உதறிவிட்டு, ஆவேசத்தோடு கேட்க, அவளூக்கு அழுகையே வந்து விட்டது,பேச வரவில்லை மூச்சு முட்டிற்று. சிறிது நேர இடைவெளிக்குப் பிறகு அவளே பேச்சைத் தொடர்ந்தாள்.

எனக்குப் பொய் பேசத்தெரியாதடா சத்தியமாய் உண்மையைத் தான் சொல்லுறன். அதற்கு இடை மறித்து அவன் கேட்டான் அப்ப எதுக்காம் அவர் பத்தை பெத்துத் தள்ளினவர் ? அதுவும் சொந்த மச்சாள் நீங்கள்…….. என்னவொரு வெட்கம் கெட்ட மனுஷன். ஆம்பிளை புத்தி இப்படித் தான் பேச வைக்கும் வெறும் உடல் மோகம் இப்படித் தான் முடிஞ்சு போகும் இவன்களையெல்லாம் செருப்பாலை அடிச்சு துரத்த வேணும்.

இதைக் கேட்டு அவன் விரக்தியோடு சிரித்தான். அம்மா! உங்களை நினைக்க பாவமாக இருக்கு. சொந்த மச்சாளான உங்களூக்கே இந்தக் கதியென்றால் வேறு இடத்திலே பெண் எடுத்தால் எப்படி இருக்கும.? நினைக்கவே பயமாக இருக்கு. பாவம் இந்தப் பெண்கள்.

இதைக் கேட்டு அவள் மெளனமாக இருந்தாள். அதைப் பார்த்து விட்டு மேலும் அவன் சொன்னான் நீங்கள் இப்படித் தான் சொல்லுவியள். உது விசர்க்கதை. எனக்குத் தெரியும் எப்படி நீங்கள் மூடி மறைச்சாலும் எரிமலை ஒரு நாளைக்கு, வெடிக்காமலா போகும்? இருந்து நான் பாக்கத் தான் போறன்.

விசர்க் கதை கதைக்காதை படிக்கிற வழியைப் பார்.

படிப்பு எங்கை ஏறுது? உலக வலம் வந்தால், படிக்கிறது எங்கை? உறவு முள் குத்தித் துளைக்கேக்கை வருத்தம் தான் மேலிடுகிறது? அப்புவுக்கு புத்தி சொல்ல நான் ஆர்? அவரே மகா ஞானி, தத்துவ ஞானிபேருக்குத் தான் அவர் ஆசிரிய திலகம் இப்படியொரு கூத்து நடந்திருக்கே1 இந்தக் கறையை எங்கே போய்க் கழுவுவது? காலம் இதை சரிசெய்யுமா? கங்கை குளித்து நான் மீண்டு எழுவேனா? தெரியவில்லை சகதியில் தூக்கி எறிந்த அம்மாவின் முகம் கண்களில் நிறைந்து போயிருந்தது. படிக்க மனம் வரவில்லை. படிச்சு கிழிச்சு என்ன ஆகப் போகுது ? ஒருவரும் கடவுளாய் மாறப் போறதில்லை , கிழக்கு வெளூக்க , சூரியனும் வராது அப்ப என்ன வரும்?

பூகம்பம் தான் வெடித்தது அவர்கள் வீட்டில். அவன் பார்த்துக் கொண்டிருக்க காலச் சுழற்சியில் இழுபட்டு எத்தனையோ மாற்றங்கள் .அம்மாவின் ஐயாவும் அம்மாவும் அந்த ஊரில் வேறாகத்தான் இருந்தார்கள். அம்மையா அந்தக் காலத்து நொத்தாரிசு அதாவது பதிவாவளர் காணி உறுதியெல்லாம் பதிவு செய்கிற, வேலை அவருக்கு இப்போது வயோதிபம் காரணமாக அதுவும் நின்று விட்டது. அவருக்கு வயது எண்பது ஒரு சமயம் வெறும் மண்ணில் விழுந்து முழங்காலில் முறிவு ஏற்பட்டு விட்டதால், முருகனின் அப்பாதான் அவரைப் போய்க் கவனித்து வந்து, டாக்டர்மாரும் கை கழுவி விட வீட்டிற்குக் கூட்டி வர வேண்டியதாயிற்று வீடு பெரிதாக இருந்தாலும் ஒதுக்குப் புறமாக வீட்டிற்கும் பின்னால், நீண்டதொரு சாமான் அறை, அம்மையாவை அங்கு தான் இருக்க விட்டார்கள் எழும்பி நடக்க முடியாத நிலை முருகனின் அப்பாவுக்கே இது சுமை இதில் அம்மாவின் தாய் ஆச்சி புத்தி மாறாட்ட நிலையில் பள்ளர் வீடுகளூக்கெல்லாம் போய் வரும் கிடுகு வேலியை பிடுங்கி கையோடு கொண்டு வரும் ஓலையில் அடுப்பு எரித்த பழைய ஞாபகம் அம்மையாவுக்கு முழங்கால் வலிக்கு மருந்து கட்ட ஓடலி ஓன்ற விட்ட ஒருநாள் வந்து போய்க் கொண்டிருந்தான் இப்படித் தான் இதை வேடிக்கை பார்க்க, ஆச்சியின் பிரசன்னம் தவறாது நிகழும் முருகன் சின்ன வயதில் அவர்கள் வீட்டிற்கு போய் வரும் போதெல்லாம் ஆச்சியைப் பார்த்த ஞாபகம்,, இளமையில் அவள் ஒரு உலக அழகியென்று அம்மா சொல்லியிருந்தாள் அவள் அழகில் மயங்கித் தானாம், அம்மையா அவளைக் கட்ட நேர்ந்தது.

ஆனால் அவள் இப்போது வெறும் பட்ட மரம் அப்பா முன்னிலையில் அவளைப் பார்க்க நேரும் போதெல்லாம் அம்மாவுக்குள் எரிமலையே வெடித்துப் பொங்கும். ஒரு முறை இப்படித் தான் ஓடலி அம்மையாவுக்கு மருந்து கட்ட வந்த போது, அவள் பிரசன்னம் சடுதியில் நேர்ந்தது.அப்போது முருகனும் அங்கிருந்தான் அவன் ஒரு பி ஏ கலைப்பட்டதாரி. அப்பா மாதிரி அவனும் ஆசிரியனாகவே இருக்கிறான் கல்யாணமாகி கொக்குவிலில் இருந்தாலும் உறவுகளை குசலம் விசாரிக்க நேரம் கிடைக்கும் போது அடிக்கடி வந்து போவான் அன்றும் அப்படித்தான் இது சோக நிகழ்வு . இப்போது வலி முக்கியமல்ல மருந்து கட்டு போது வலியில் அம்மையா கத்தினதும் கேட்க மறந்து அவன் அம்மா முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான் அழகை ஆராதிக்கிற அப்பா முன், இன்று அவள் வெறும் நிழல் பொம்மை அவள் உயிரை விட்டு வெகு நாளென்ன இருள் கனத்த ஒருயுகமே முடிகிறது. அம்மா அப்படி பஸ்மமாகி விட்டிருந்தாள் அப்பா வாயால் வேதமல்ல விஷத்தையே அவர் உமிழ்ந்து விட்டுப் போக,அதைக் கேட்க நேர்ந்த பாவம் , முருகனையே சுட்டெரிக்கும் விதமாக பெருந் தீ அவளைப் பற்றிக் கொண்டிருக்க, ஆச்சியின் கரங்களுக்கே விலங்கிட்ட மாதிரி, இழுத்துக் கொண்டு ஓடிய விதம் அதில் அம்மாவின் பகை நெருப்பு பற்றி எரிவதாய் அவன் உணர்ந்தான் அப்பா இதைக் கவனிக்கத் தவறினாலும் உடல் மாயையில் கவனம் சிதறி அவர் உதிர்த்து விட்ட அந்த ஒரு சொல், இன்று அம்மாவே இதில் எரிந்து சாம்பலாகிப் போயிருக்கிறாள். அன்பு தோற்று விட்ட ஒரு வாழ்க்கையில் இதைவிட இன்னும் மோசமாகவும் நடக்கும் மனிதர்கள் திருந்துவதற்கு இது வெறும் பாடமாக மட்டுமல்ல இதை ஒரு வேத தேவதையே நேரில் தோன்றி கூறினாலும் காடு வெறித்த வாழ்க்கையில் இது வெறும் கனவாகவே போய் விடுமென்று அவன் மிகவும் மனவருத்தத்துடன் நினைவு கூர்ந்தான்.

ஆனந்தி என் எழுத்துயுகத்தின் இனியதொரு விடிவு. இருள் கனத்த நீண்ட என் எழுத்து யுகம் தாண்டி இது எனக்கு ஒரு மறு மலர்ச்சிக் காலம். இலை மறை காயாக அதில் வாழ்ந்த காலம் போய், இத்தளத்திற்கு வந்த பிறகு பல நூறு அல்ல அதிலும் கூடுதலான வாசகர்களை பெற்று, புறம் தள்ளப்பட்ட என் கதைகள்அமோக வரவேற்புப் பெற்று, கொடி கட்டிப் பறக்க நேர்ந்த பெரும் பேற்றினை, ஒரு கடவுள் வரமாகவே நான்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *