தங்கச்சியின் பேராசை…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 15, 2025
பார்வையிட்டோர்: 181 
 
 

“ஏங்க நீங்க கேரளா பம்பர் லாட்டரி ஒன்னு வாங்கப் போறதா சொன்னீங்களே? திருவனந்தபுரத்தில் இருக்கிற உங்க தங்கச்சி வீட்டுக்காரர்கிட்டேயா வாங்கி அனுப்ப சொன்னீங்க?” என்று என் மனைவி மஞ்சுளா கேட்டாள்.

ஆமாம் ஏன்? தீடீர்னு கேட்கறே?

அவருக்கு பணம் அனுப்பிட்டீங்களா? என்றாள்

ஏன் கேள்வி மேல கேள்வியா கேட்கறே?

ஆமாம், அவரைத்தான் வாங்கி அனுப்ப சொல்லியிருக்கேன். பணம் இனிமேல் தான் அனுப்பனும்..!.. ஏன் என்ன விஷயம்?

இல்ல சொந்தக்காரங்கன்னா…..? அதுவும் உங்க தங்கச்சி ஒரு மாதிரி,

எதற்கெடுத்தாலும் ஏதாவது ஏடா கூடமா சொல்லின்னே இருப்பாங்க. அதான்…? ஒரு வேளை நமக்கு முதல் பரிசு தொகை ரூ.25 கோடி கிடைச்சா..? பிரச்சினை வருமோன்னு ஒரு சின்ன பயம்..!

ஏன்? நம்ம பணத்தை அனுப்பி தானே வாங்கி அனுப்ப சொல்றேன்…!.. இதுல என்ன பிரச்சினை வரும்?

“பணம் அதிகம் வந்தாலே, பிரச்சினையும் கூட சேர்ந்து வரும்ன்னு எங்க அம்மா அடிக்கடி சொல்லுவாங்க…” “அதுவும் அவங்க வாங்கி அனுப்பின லாட்டரிச் சீட்டுக்கு முதல் பரிசு கிடைச்சது.. அவ்வளவு தான் ஏகப்பட்ட ரகளை பண்ணிடுவாங்க உங்க தங்கச்சி ‘

இப்ப என்ன பண்ணனும் சொல்லு? இரண்டு லாட்டரி சீட்டு வாங்க சொல்லி ரூ.1000/- அதை கூரியர்ல்ல அனுப்ப சொல்லி அதுக்கு ரூ.50/- சேர்த்து ரூ.1050/- அனுப்ப போறேன்.

உங்களுக்கு கேரளாவில் வேறு யாரும் இல்லையா என்றாள் மஞ்சுளா?

இவர்கள் பேசிக்கொண்டே இருக்கும்போது சார் கூரியர் என ஒருவர்

அழைக்க, ராகவன் யார் சார்? என அவர் கேட்க, நான் தாம்ப என்றேன். உங்களுக்கு கேரளாவில் இருந்து ஒரு கடிதம் வந்திருக்கிறது. Sign பண்ணிட்டு அப்படியே உங்க மொபைல் நெம்பரை எழுதுங்கள் என்றார், கூரியர் கடிதம் கொண்டு வந்தவர்.

கவரை பிரித்து பார்த்தேன். அதில் இரண்டு கேரளா லாட்டரி சீட்டுக்கள் இருந்தன. முதல் பரிசு இருபத்தி ஐந்து கோடி ரூபாய். குலுக்கலுக்கு இன்னும் 2 நாட்கள் இருக்கிறது….

ஏங்க கூரியர் எங்கே இருந்து வந்துள்ளது? என மஞ்சுளா கேட்டாள். இப்ப நாம எத பத்தி பேசிக்கிட்டு இருந்தோமோ அதான் வந்திருக்கு.

என்னது? லாட்டரி சீட்டா? எப்படிங்க? பணமே இன்னும் அனுப்பல…. இனிமேல் தான் அனுப்ப போறேன்ன்னு சொன்னீங்க…? அதுக்குள்ள வாங்கி அனுப்பிட்டாரு ?

என் தங்கச்சி வீட்டுக்காரர் நல்ல ரொம்ப மனுஷன்..!.. நீ தான் வீணா சந்தேகபடறே என்றேன்..?

அவர் நல்லவர் தான்..!.. ஆனா நான் சொன்னது உங்க தங்கச்சி பத்தி தான்..?

ஏங்க பணம் எப்படி அனுப்ப போறீங்க? ஏன்? மணியார்டர் மூலமாகத்தான்…! மணியார்டர் வேணாம்?, G pay மூலம் இன்னிக்கே, இப்பவே அனுப்புங்க..

ஏம்மா என்ன ஆச்சு உனக்கு…? எதுக்கு இப்படி பேசறே…? அவசரப்படறே…?, என்னமோ நமக்கு முதல் பரிசு 25 கோடி கிடைச்சிட்ட மாதிரி இருக்கு, நீ நடந்துக்கிற விதத்தை பார்த்தா?

நான் பேசறதை பார்த்தா, இப்ப அப்படி தான் தோணும்..!.

இத பத்தி நாம அப்பறமா பேசிக்கலாம்.. முதல்ல உங்க தங்கச்சி வீட்டுக்காரருக்கு போன் பண்ணி லாட்டரி சீட்டு வாங்கி அனுப்பியதற்கு

நன்றின்னு, சொல்லிட்டு இப்பவே அதற்கு பணம் அனுப்பி வைக்கறதா சொல்லுங்க என்றாள் மஞ்சுளா ..

சரிம்மா தாயே அப்படியே உன் எதிரிலேயே பண்றேம்மா…!..

போன் செய்தேன், என் தங்கை தான் எடுத்தாள். அலோ.. என்றாள். ஏம்மா அண்ணன் பேசறேன்ம்மா. சொல்லுங்கண்ணா..என்ன திடீர்னு போன்…!.. ? தங்கச்சி

மேல் பாசமோ…? ஏம்மா மச்சான் போனை நீ எடுத்து பேசறே ? ராஜசேகர் போனை எடுத்து கொண்டு போக மறந்திட்டாரா?

“இல்ல, இல்ல…, அவருக்கு இரண்டு நாளா ஜுரம் லீவு போட்டிருக்காரு”. அப்படியா…? சரிம்மா போனை அவர் கிட்ட கொடும்மா..! என்றேன்

ஏன் என்ன விஷயம்? எங்க கிட்ட சொல்ல மாட்டீங்களோ…?.,

“என்னம்மா… நீ? எதுக்கெடுத்தாலும் தப்பு கண்டுபிடிக்கறே..? ” கோகிலா நீ மாறவே மாட்டியா? என்றேன் … என்னை குறை சொல்லறதுக்கு தான் போன்

பண்ணியா? என்றாள் என் தங்கை .

இல்லம்மா… போனை மச்சான் கிட்ட கொடும்மா… என்றேன். அப்படி என்ன ரகசியம்? உங்க இரண்டு பேர் நடுவுல….

சொல்றேன்… போனை மச்சான் கிட்ட கொடு என்றேன் சற்று கோபமாக..

ஏங்க உங்களுக்கு தான் போன்.. எனக்கா? என் போனலையா நீ இவ்வளவு நேரம் பேசி கிட்டே இருந்தே…? ஏன் பேச கூடாதா? என்று கேட்டுக் கொண்டே

இந்தாங்க பேசுங்க .. என்று என் மச்சானிடம் போனை கொடுத்தாள் கோகிலா. “அலோ யாரு..? என்றார் என் மச்சான் ராஜசேகர்.

மச்சான் நான் ராகவன் பேசறேன்….

சொல்லுங்க எப்படி இருக்கீங்க? தங்கச்சி மஞ்சுளா எப்படிஇருக்கங்க? பசங்க நல்லா இருக்காங்களா? என்று தொடர்ந்து கேட்டார். எல்லாரும் நல்லா இருக்காங்க என்றேன். இவர் குணம் இப்படி…!.. ஆனால் என் கூட பிறந்த தங்கச்சி ஒரு வார்த்தை கூட இவர் மாதிரி கேட்கல…..! என் மஞ்சுளா சொன்னது சரிதான் போல…!..

கோகிலா உங்களுக்கு இரண்டு நாளா ஜுரம் என்றாலே… இப்ப எப்படி இருக்கு? என்றேன்.

இப்ப பரவாயில்லை..!.. உடம்பு தான் ரொம்ப வலியா இருக்கு என்றார்.

ரொம்ப நன்றி ராஜசேகர், லாட்டரி சீட்டு வாங்கி அனுப்பியதற்கு…இப்பதான் வந்தது. நான் பணமே அனுப்பல, லாட்டரி சீட்டு வேணும்ன்னு WhatsApp தான் போட்டேன். உடனே வாங்கி அனுப்பிட்டீங்க..!..

இல்லப்பா, குலுக்கலுக்கு 4 நாள் தான் இருக்கு. உனக்கு வந்து சேர 2 to 3 days ஆகும். இது வரைக்கும் நீ எதுவும் என் கிட்ட கேட்டதேயில்லை..அதனால் தான் உடனே வாங்கி அனுப்பி வைத்தேன் என்றார் ராஜசேகர்.

நான் இப்பவே Google pay-ல பணம் அனுப்பிடறேன்னு சொன்னேன். பரவாயில்லை, அவசரம் இல்லே நிதானமா அனுப்பு என்றார் என் மச்சான்.

என்ன ராகவன்? உன் தங்கச்சி ரொம்ப நேரம் பேசினாளே..!.. எதாவது தப்பா பேசிட்டாளா? அவ அப்படி பேசினாலும் நீ தப்பா எடுத்துக்க மாட்டே..!.. என சிரித்துக்கொண்டே உனக்கு அவள பத்தி தான் தெரியுமே..!.. என்றார் என் மச்சான். சரிப்பா உடம்ப பார்த்துக்கோ… நான் இன்னிக்கு பணம் அனுப்பிடறேன் என்றேன்.

அங்கே திருவனந்தபுரத்தில் …

“என்னங்க எவ்வளவு நேரம்தான் பேசிக்கொண்டே இருப்பீங்க…? என்று

கோகிலா என் மச்சானிடம் அங்கே கேட்பது இங்கு என் காதில் விழுகிறது. அவர் போனை ஆஃப் செய்ய மறந்து விட்டார் போலும்..

என் அருமை தங்கச்சி, என் மச்சானிடம் என்ன? என் அண்ணன் என்ன சொன்னாரு? என்று மச்சானிடம் கேட்க அவர் நடந்ததைசொல்லலாமா? வேண்டாமா? என்று யோசிக்க… ஏங்க உங்களைத்தான் கேட்கிறேன் என்று என் தங்கச்சி மிரட்டலாக அவரை கேட்க…அது ஒண்ணுமில்லைம்மா, அவரு கேரளா லாட்டரி சீட்டு வேணும்ன்னு WhatsApp போட்டாரு, நான் வாங்கி அனுப்பி வைச்சேன். அது வந்து சேர்ந்திடுச்சுன்னு சொல்றதுக்கு போன் பண்ணியிருக்காரு என்று என் மச்சான் கூற,

“மச்சானும், தங்கச்சியும் கேரளால இருக்கிறது இப்ப தான் தெரிஞ்சுதா அவருக்கு? அவர் கேட்டா நீங்க வாங்கி அனுப்புவீங்களா? லாட்டரி சீட்டு வேணும்ன்னு கேட்டு WhatsApp போட்டாரே, பணம் அனுப்புனாறா? என்று கோகிலா அவரிடம் கேட்க, அவர் உண்மையை சொல்ல…

ஏன்? பணமே அவரு அனுப்பல, அதுக்குள்ள எதுக்கு அவ்வளவு அவசரமா அவருக்கு வாங்கி அனுப்பினீங்க ?

லாட்டரி வாங்கி 4 நாளா என்கிட்டேயே இருந்தது. குலுக்கலுக்கு இன்னும் 4 நாள் தான் இருக்கு, அனுப்புனா போய் சேருவதற்கு 3 நாள் ஆகும். அதனால் தான் உடனே அனுப்பினேன்.

“இன்னைக்கு தான் அவருக்கு கூரியர் போய் சேர்ந்திருக்கு, நாளைக்கு லாட்டரி குலுக்கல்…அதனால் தான் அவரே போன் போட்டு ரொம்ப நன்றின்னு சொன்னார்., பணம் இன்னைக்கு அனுப்பறதா சொன்னாரு, அனுப்பிடுவாரூ”.

“அனுப்பனா பார்க்கலாம்…? என்று கோகிலா கூற,

“ஏன் கோகிலா அப்படி சொல்றே? அவரும் அவருடைய மனைவி, மஞ்சுளாவும் நல்ல குணமுள்ளவங்க.

அப்ப நாங்கெல்லாம்..?.”என்றாள் கோகிலா

“நான் உன்னை பற்றி எதுவுமே சொல்லவில்லையே..?” என்றேன்.

சொல்லி தான் பாருங்களேன்… ! என்றாள், கோகிலா. அம்மா தாயே உன் கிட்ட மல்லு கட்ட என்னால் முடியாது….. போய் உன் வேலையை பாரு…

என் மச்சான் போனை ஆஃப் செய்வதற்கு மறந்து விட்டது நல்லதுக்கு தான், அங்கு அவர்கள் இருவரும் பேசியதை இங்கிருந்தே கேட்டு கொண்டிருந்த என்னை..

“என்னங்க எவ்வளவு நேரம்தான் பேசிக்கொண்டே இருப்பீங்க…? என்று இங்கே என் மனைவி கேட்டாள் “

போனில் நடந்த அனைத்தையும் சொன்னேன். பார்த்தீங்களா….? நான் சொன்னது சரியா….? உங்க தங்கச்சிய பத்தி, உங்கள விட எனக்கு தான் அதிகம் தெரியும் என்றாள் மஞ்சுளா.

“சரி விடு, அவ குணம் அப்படி…. தான். என் மச்சான் எல்லோரையும் எவ்வளவு விசாரிச்சார் தெரியுமா என்றேன்…?..”

“உங்க கிட்ட பணம் வாங்காம அவர் லாட்டரி சீட்டு வாங்கி அனுப்பியது உங்க தங்கச்சிக்கு தெரிஞ்சிடுச்சு…’அவ்வளவு தான்…!… முதல்ல பணத்தை அனுப்புங்க என்றால் என் மனைவி’

ஒரு மணி நேரத்திற்கு பிறகு மீண்டும் ஏங்க பணம் அனுப்பிட்டீங்களா? என மஞ்சுளா கேட்டாள்..

நீ வேற, எனக்கு அனுப்ப தெரியும்.. போய் உன் வேலையை பாரு என்று சற்று எரிச்சலுடன்.. பணம் அனுப்பிட்டு நானே சொல்றேன் என்றேன்.

பேங்க் surver -ல ஏதோ problem போல

பணம் transfer ஆக மாட்டேங்குது… நானே டென்ஷன்ல இருக்கேன் இவ வேற பணம் அனுப்பியாச்சான்னு ? தொல்லை பண்றா…

நானும் சாயங்காலம் 5 மணியிலிருந்து amount அனுப்ப try பண்றேன் இன்னிக்குன்னு பார்த்து வேலைக்கு ஆகல. மணி 11.00 ஆகுது. தூக்கம் வேற கண்ணை கட்டுது.. சரி நாளைக்கு காலைல முதல் வேலையா பணம் அனுப்பிடனும். இல்லன்னா என் தங்கச்சி, மச்சானை ஒரு வழி பண்ணிடுவா..

மறுநாள் காலை எனக்கு முன் எழுந்த என் மனைவி நான் பணம் அனுப்பி விட்டேனா என்று பார்க்க, போனை எடுக்க, அது அவள் கை தவறி கீழே விழுந்த சத்தம் கேட்டு நான் எழுந்து பார்க்க, போன் தரையில் விழுந்து கிடந்தது. அவள் என்னை பார்க்க, நான் அவளை முறைத்தபடியே குனிந்து போனை எடுக்க முயலும் போது, என் கை தவறி மீண்டும் கீழே விழுந்தது. எடுத்து பார்த்தேன். தலையில் கை வைத்தேன்.

“என்னங்க என்ன ஆச்சு?” என்றாள் மஞ்சுளா,

“என்ன…ஆச்சா…? போன் display போச்சு… உடைஞ்சு போச்சு..”

“ஆமாம்..! எதுக்கு..? காலையில் என் போனை எடுத்தே? நான் பணம் அனுப்பினேனா…? இல்லையான்னு….பார்க்கதானே..? ” என்று கேட்டேன். ஆமாம் என்று தலையாட்டினாள்…!

அனுப்பிட்டு உன் கிட்ட சொல்றேன்னு சொன்னேன் இல்ல ..?, அதுக்குள்ள என்ன அவசரம்? நேற்று 11 மணி வரைக்கும் amount transfer செய்ய try பண்ணேன், Bank surver problem போல, amount transfer ஆகல. நாளைக்கு முதல் வேலையா அனுப்பி விடலாம்ன்னு நினைச்சு படுத்துட்டேன்.

“உன் அவசர புத்தியால் போன் display உடைஞ்சு போச்சு”. “இதை ரிப்பேர் செஞ்சு அனுப்ப 2 நாள் ஆகும், அங்கே என் தங்கச்சி அவர்கிட்ட சண்டை போட போறா…” அவர் மொபைல் நம்பர் கூட தெரியாது? எல்லார் நம்பரையும் mobile ல save பண்ணி வச்சு போன் பண்றது எவ்வளவு பெரிய தப்புன்னு இப்ப தான் தெரியுது. இல்லன்னா போன் பண்ணி விஷயத்தை சொல்லலாம்.. என்ன பண்றதுன்னு தெரியலையே?

‘இன்னிக்கு தான் குலுக்கல் வேற.. நீ சொன்ன மாதிரி முதல் பரிசு நமக்கு கிடைச்சதுன்னு வச்சுக்கோ…. ஒரு பேச்சுக்கு கேட்கிறேன்… சரியா?… பதில் சொல்லு என்றேன்”.

“என்ன சொல்ல வர்றீங்க? புரியலையே என்றாள்”.

“அதாவது நமக்கு அவர் வாங்கி அனுப்பிய லாட்டரி சீட்டுக்கு முதல் பரிசோ இல்ல இரண்டாவது, மூன்றாவது பரிசு தொகை கிடைக்குதுன்னு வச்சுக்கோ…! அந்த பரிசு யாருக்கு சொந்தம்? நமக்கா…? இல்ல…..அவருக்கா..?”

ஏன் இப்படி கேட்கறீங்க..? பரிசு சீட்டு நம்மகிட்ட தானே இருக்கு ? அப்ப எந்த பரிசு கிடைத்தாலும் அது நமக்கு தான் சொந்தம்…! ” என்றாள் என் மனைவி மஞ்சுளா.

இல்ல நாம தான் அவர் வாங்கி அனுப்பிய லாட்டரி சீட்டுக்கு பணம் அனுப்ப வில்லையே? அதுக்கு தான் கேட்டேன் என்றேன்.

ஏன் நீங்களே உன் தங்கச்சிகிட்ட போயி இந்தாம்மா உங்க வீட்டுக்காரர் வாங்கி கொடுத்த சீட்டுக்கு பரிசு கிடைச்சிருக்கு, நான் இன்னும் அவருக்கு பணமே தரல, அதனால், இது உனக்கு தான் சொந்தம்ன்னு சொல்லுவீங்க போல இருக்குதே…?

என்றாள் கோபமாக பேசினாள் என் மனைவி.

மறுபடியும், இத பாருங்க, இது மாதிரி ஏதாவது நடந்துச்சிஅவ்வளவுதான்… உங்க தங்கச்சி நேரா Airport போயி பிளைட்டை புடிச்சு சென்னைக்கு இன்னிக்கு

சாயங்காலத்துக்குள்ள வந்து உங்க கிட்ட சண்டை போட்டு பரிசு விழுந்த லாட்டரி சீட்டை கேட்பா…. என்றாள்.

நான் சிரித்துக்கொண்டே அப்போ பரிசு தொகை நம்மகிட்ட இருக்கிற சீட்டுக்கு விழ வேண்டுமா..? இல்ல வேண்டாமா…?

“ஏங்க நம்ம கிட்ட இருக்கிற சீட்டுக்கு தான் பரிசு விழுந்திருக்கு உங்க தங்கச்சிக்கு நாம சொன்னாதானே தெரியும்…?” “அப்படி பரிசு கிடைச்சாலும் நீங்க சொல்லாதீங்க…!. மொபலை அவசரமா வேண்டும்ன்னு சொல்லி, போன் ரெடியான உடனே, பணம் அனுப்பிடுங்க…. ஒரு வேளை… லாட்டரி சீட்டில் பணம் கிடைச்சாக்கூட…அப்புறமா சொல்லிக்கலாம் என தன் புத்திசாலித்தனமான யோசனையை கூறினாள்.

அம்மாடி….! இந்த பெண்களுக்கு மட்டும் எப்படி தான் இது மாதிரிஐடியாக்கள் வருதோ தெரியலடா சாமி என்றேன்.

அன்று காலையில் 9.00 மணிக்கு கடை திறந்தவுடன் என் போனை கொடுத்து display மாற்ற சொன்னேன். சார் உங்க போன் display பழைய மாடல் சார், கிடைக்கிறது ரொம்ப கஷ்டம் என்றார் கடைக்காரர். சரி என்ன செய்யலாம் என்றேன், கொடுத்துட்டு போங்க சாயங்காலம் 6.00 மணிக்கு மேல வாங்க கிடைச்சா சரி பண்ணி வைக்கிறேன் என்று சொல்லி அட்வான்ஸ் கேட்டார் கொடுத்தேன்.

அவர் கூறியபடியே 6.30 மணிக்கு கடைக்கு போனேன். அவர் கடையில் இல்லை. வெளியே போயிருப்பதாக கடையில் இருந்த பையன் கூறினான். மனைவிக்கு போன் செய்து விஷயத்தை சொன்னேன். எவ்வளவு நேரம் ஆனாலும் இருந்து போனை வாங்கி பணத்தை அனுப்பிட்டு வீட்டுக்கு வாங்க என்று கூறினாள். எல்லாம் என் நேரம் என்று உட்கார்ந்தேன்.

“கடைக்காரர் 9.00 மணிக்கு வந்தார். சார் நீங்க அதிர்ஷ்ட சாலி சார், இன்னைக்கு உங்களுக்கு நேரம் ரொம்ப நல்லா இருக்கு, display இப்ப தான் கிடைச்சது. நாளைக்கு காலைல வாங்க ரெடி பண்ணி தருகிறேன் என்றார். இல்லப்பா ரொம்ப அவசரம். ஒருத்தருக்கு அவசரமா g pay அனுப்பனும், அவர் நெம்பர் கவனம் இல்லை. Display open ஆனா தானே அவர் மொபைல் நம்பரை பார்த்து அவருக்கு பணம் அனுப்ப முடியும் என்றேன்.

“ஏன் சார்? இத காலைல சொல்ல வேண்டியதுதானே..? அவர் நம்பர் தானே வேணும்? உங்க office Computerல இல்லன்னா உங்க மனைவிகிட்ட போனிலோ உங்க G mail ஐ open பண்ணி contact ல போய் அவர் பேரை பார்த்த நம்பர் தெரிய போகுது. அந்த நம்பரை பார்த்து வேற உங்க நண்பரோட மொபைல் இருந்து பணம் அனுப்பிட வேண்டியது தானே? இது கூட தெரியாம என்ன தான் ஆபீஸ்ல வேலை செய்யறீங்களோ தெரியல…? என்றார் கடைக்காரர் “.

ஆமாம்பா…! நீ சொன்னது எனக்கும் தெரியும்..!.. அவசரத்தில எல்லாம் மறந்து போச்சு என்றேன்.

சரி நான் வீட்டுக்கு போய் முயற்சி பண்றேன், நாளை காலையில் வர்றேன் போன் ரெடியா இருக்கணும்ன்னு சொல்லிட்டு வீட்டுக்கு வந்தேன். மணி 11.00.

ஆனது. என்னை பார்த்தவுடன் ஏங்க…. என்றாள். முதல்ல உன் போனை கொடு என்று வாங்கி கொண்டு கொஞ்சம் இரு வர்றேன் என்று கூறி என் லேப்டாப் open செய்து g mail login செய்தேன். ஒரு வழியாக போன் நம்பரை கண்டுபிடித்தேன். மணி 11.30.

அவள் போனில் G pay app இல்லை. என்னடா…. இது? உன் போனில் G pay app இல்லையா? என்றேன். என்ன புதுசா கேட்கறீங்க…? எனக்கு எதுக்கு G app….. நான் யாருக்கு பணம் அனுப்ப போறேன்? என்றாள் மஞ்சுளா.

– தொடரும்…. பகுதி 2ல்

வேலூர் டி.சீனிவாசன் என் பெயர்: D. சீனிவாசன் வயது: 65 (02.1960) பணி: ஓய்வு பெற்ற்வர் Mobille No: 9382899982 தற்போதைய முகவரி: சென்னை  email ID : mvdsrinivasan@gmail.comமேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *