இருமையில் வாழும் மனம், இறைவனை அறிவதில்லை

தூக்கமும் விழிப்பு மாய் வாழ்க்கை போய்க் கொண்டிருந்தது ராதாவிற்கு, மட்டும் இது அனுபவமாகிக் கொண்ருந்தது கல்யாணமான நாளிலிருந்து எதிரும் புதிருமாய் ஒரு வாழ்க்கை ஓட்டம். அந்த சகதிக்குள் வரும் போது அவள் நினைத்து வந்தது வேறு. யோக புருஷன் ஒருவனே தனக்கு இலட்சியக் கணவனாக, வருவான் வரவேண்டுமென்று அவள் விரும்பிக் கொண்டிருந்ததற்கு மாறாக நடந்தது என்னவோ பூஜ்யம் தான் அதை விளக்குவது, மிகவும் கடினம் பூஜ்யமென்றால், வேதமே அறியாத வெற்று மனம் தான்.அது என்னவென்றுவாழ்ந்து பார்ப்பவர்கே புரியும் வாழ்க்கை அனுகூலமான சங்கதிகளூடன் பொருந்தி வராத நிலைமை, தான் . வானமே பொய்த்து கறை பூசிக் கொண்டு, கிடக்கையில் வாழ்க்கையை எங்கே தேடுவது? அது ஒரு மனிதனின் நிழலாய், துரத்தி துரத்தி அடிக்கையில் அதைஒரு விலங்காய் பூட்டிக் கொண்டு விட்ட பின்னர், நிஜத்தில் விழிப்பதே, உயிருடனேயே அவளைக் கொன்று போடும் வெறும் கதைதான் அதற்கு ஈடு கொடுக்கவே,இந்த சதை வழி வாழ்க்கை.
அதுவும் புதைகுழியாகப் போகிறது அவள் தலையிலோ பெரும் சுமை ஆடிக் கலவரத்தை முன்னிறுத்தி தியாகு வேலையையும் விட்டுவிட்டான் அவனுக்கு அப்போது பொலநறுவையில் வேலை, ஆரம்பநிலையில் இனமோதலை சாட்டி அங்கு போய் சறுக்கிவீழ்ந்தவன் தான் அதுவும் வரும் போது பால் வேறு குடித்து விட்டு வந்தானாம் அவன் இப்படிக் கையறு நிலையில் வந்தால், வீடு தாங்குமா? வீடென்ன சுமை முழுதும் அவள் தலை மீதல்லவா வந்து விடிந்திருக்கிறது. இந்த விடிதல் எதன் பொருட்டு?எல்லாம் தீக்குளிக்கத்தான் இந்த நட்ட நிசி தவம் விடிய எழும்பும் போது இன்றைய பொழுதுக்கு குழந்தைகள் பசியாற, அவள் என்ன செய்யப் போகிறாள் நகை நட்டு இருந்தாலாவது விற்று சுட்டு பிழைக்கலாம் அதுவும் தியாகு வீட்டோடு கரைந்து போனது அதுவும் கெட்ட கனவு அவள் தன்னையே உரித்து உயிரைக் கொடுத்து உழைத்தாலும் இதை யார் நினைக்கப் போகிறார்கள்? அவளை உயிருடன் சமாதி வைக்கவே தியாகு உட்பட அவர்களின் பிழைப்பு எல்லாம். இனி என்ன, வீடு தெருவுக்கு வந்த கதைதான் அவள் அப்படித் தான் ஆகி விட்டிருந்தாள் காசுக்காக தெருத் தெருவாய் சுற்றி வந்தாலும் அள்ளிக் கொடுக்க ஆளின்றி வரட்சி காய்கிற, நிலைமை தான். வயிறும் பற்றி எரிகிறது. வாழ்க்கையும் போய் விட்டது. இதற்காகவா அவள் தவம் செய்தாள்?வேண்டாத பெண்டாட்டியாக ஆனபின், அவள் என்னவானால், என்ன அவன் எதையும் கருணை கூர்ந்து கேட்கப் போவதில்லை. அந்நேரம் உறவும் மனிதர்களும் இரண்டாம் பட்சம் தான் அவள் எல்லாவற்றையும், கண்டு, தெளிந்து, வேதாந்தியாகவே ஆகி விட்டிருந்தாள் இனி வேதம் சொல்கிற நிலைதான் அவள் காலடியில் பூக்களே வந்து கொட்டினாலும் போகிற போக்கில் அவள் வெறும் நிழல் தான் உயிர்களை ஆகர்ஷிக்கும் புனிதம் மட்டுமே தனக்கானது என்று அவள் நம்பினாள் இப்படி இந்தப் போக்கில் ஒரு வருடம் எப்படிப் போனதென்றே, தெரியவில்லை யாரோ தயவில் தியாகு வேலக்குப் போனாலும் சம்பளம் என்னவோ கிம்பளம் தான் .அவன் அப்படி ஏமாற்றி வருவதால், வேறு வழியின்றி தன் படிப்புக் கனவைத் துறந்து விட்டு சிவா, அவளின் இரன்டாவது மகன், வெளிநாடு போன சமயம் சாண் ஏற முழம் சறுக்கின கதையாய், வீடே இருண்டது மனநலம் பாதிக்கப்பட்டு மகள் ஒருத்தி வீட்டுச் சிறையுனுள் அடைபட்டு நொந்துநூலாகி அது ஒரு தனிக் கதை. இது இவ்வாறு இருக்கபக்கத்து வீட்டு பிராமணப் பெண்ணால் இன்னும் நரகம் தான். அவள் செய்யாத கொடுமையில்லை, அவளை எதிர்த்து தர்மயுத்தமே செய்யும் அளவுக்கு அவளுக்குத் துணிவு வரவில்லை.
அவள் இருப்பது ஒரு சிறு வீட்டில் அதுவும் துண்டுக் காணிக்குள் அதுவும் கோவில் சொத்து அதற்கு தர்மசாதனம், எழுதாததால், அங்கிருது, அவளை வெளியேற்றவும் முடியவில்லை, அதனால், தான் தான் அவளின் ஆட்டம் அகங்காரத் தொனி எல்லாம் அவள் வாயைத் திறந்தால், பத்து வீட்டிற்குக் கேட்கும்.
இனி என்ன செய்வது? கடவுள் விட்ட வழி. அவளோடு வரிந்து கட்டிக் கொண்டு, சண்டைக்கு நின்றால், சகதி குளித்த மாதிரித் தானாகி விடும. அவ கூட்டிப் பெருக்கி அள்ளிக் கொட்டுகிற, குப்பை மட்டுமல்ல குழந்தைகளின் கழிவுகள் கூட வேலிக்கு அப்பாலிருந்து ராதா வீட்டுக் கோடிக்குள் தான் வந்து விழும் அதில் ஒரு பலா மரம் கூட இருந்தது காய்கள் காய்த்து பழுக்கும் முன்பே கறிக்காக, ராதாவைக் கேட்காமலே அவள் பறித்து விடுவதுமுண்டு. எல்லாம் எடுபிடி மூலமாகத் தான் கச்சிதமாக நடந்தேறும் ஒருநாள் அந்த எடுபிடி ஆள் சுப்புவிடம் அவள் சொன்னாள்.
சுப்பு வேலியிலை ஆட்டைக் கட்டு. ராதாவை கதியால், போட வைக்கிறன்.அதாவது வேலி போட வைக்கிறன் என்றாள் அப்போது ராதா மிகவும் மனவருத்தத்தோடு, நினைவு கூர்ந்தாள் ஒரு சிறு துரும்புக்குக் கூடநான், கனவிலும் கூட தீங்கு நினைக்கிறேலை. எதற்காக இவர் இப்படி பழி தீர்த்துக்கொள்ள நினைக்கிறாள்? இது எங்கே போய் முடியப் போகுது ? கடவுளே1 எனக்கு வெட்டவெளி ஞானம் வர, இது போதும் .அவளை அப்படி வெளிச்சத்தில் கொண்டு வந்து நிறுத்தி ஞானமடையச் செய்ய, இன்னும் ஒரு காரியம் செய்தாள் அவள் தியாகு சரிவர சம்பளம் அனுப்பாததால்., அன்று யாரிடமோ கடன் கேட்டு காசு வங்கிக் கொண்டு மிகவும் களைத்துப் போய் மிகவும் சோர்வாக வீடு திரும்பும் போது, சின்ன மகள்தேவி கேட் திறக்கும் சத்தம் கேட்டு ஓடி வந்து அவளை வழி, மறித்து சொன்ன செய்திஅவளை அதிர வைத்தது.
அம்மா! இண்டைக்கும் ஐயரம்மா வேலிக்குள்ளாலை வந்து மூன்று பலாக்காய் வெட்டிக் கொண்டு போனவ கூப்பிட்டு ஏசுங்கோவம்மா.
சரி விடு, இது நடக்கிறது தானே அது பசியிலை வெட்டி இருக்கும்.
எனக்கெனவோ இது சரியாய்படேலை இதின்ரை ஆட்டம் உங்களை மேலும் மேலும் அழ வைக்காமல், ஓயாது என்று தான் நான் நினைக்கிறன்.என்ராள் அந்த அதி புத்திசாலி மகள்
ராதா அதைக் கேட்டவாறே கிணற்றடிக்கு முகம் கழுவப் போன நேரத்தில் தான், இடி முழக்கம் போல் அவள் குரல்கேட்டது.
உதுகளுக்கு எங்கை கல்யாணம் நடக்கப் போகுது? ஒன்று விசர் இன்னொன்று செவிடு.. ஒரு ஆசாரமானநன்னடத்தை கொண்ட ஒரு நல்ல பிராமணனுக்கு இவள் பிறந்திருந்தால், இப்படி பேசுவதை விடுத்து, நான் வாழும்படியாக, இவள்வேதமே சொல்லிருப்பாள், மாறாக தவறி வீழ்ந்த இவள் வாய் மொழி தீயாகச் சூழ்ந்து என்னைக் கொன்றே போட்டாலும் இந்த அக்கினிக் குண்டத்திலிருந்துஎன்னைக் காப்பாற்றி உயிர்த்தெழ வைக்க கடவுளே வருவார் . அவர் நிச்சயம் வருவாராக, இருந்தால், இந்தப் பிராமணத்தி, பாவ தோஷம் பற்றிக் கொண்டு, அப்படியே பஸ்மமாகி எரிந்து போயிருக்க வேண்டுமே, இவ்வளவு நேரத்துக்குள்ளூம் அப்படி நடக்காமல், போனதால், அவள் வாய்க் கொழுப்பு இன்னும் அடங்கவில்லை. மனநலம் பாதிக்கப்பட்ட, என் மகளுக்காக தினமும் நான் தீக்குளித்தே செத்து மடிவது கூட கண்ணில் படாமல்,என்னவொரு மனவக்கிரம் இவளூக்கு, என் மீதும் என் பிள்ளைகள் மீதும் பாவம் தேவி கூட இதனால், அசிங்கபட்டுப் போய் நிற்கிறாள் சிறு வயதில் இவள் கிணற்றில் விழுந்து தலை அடிபட்டதால், காதாலே சீழ் வடிந்து ஓரளவு கேட்கும் திறனையும் இழந்து, போய் சந்தி சிரிக்க வந்து நிற்கிறது இவளின் கதையும் கூட ஒட்டுமொத்த சமூகத்தின் களங்கப்பட்ட பார்வையின் நிழல் வழியே தான் இவளூம் . இவள் இதை சொல்லி விட்டதற்காக, இவளின் தலையைக் கொய்து நெருப்பில் போடவா முடியும்.
இதை நடத்திக் காட்டாமல்,நான் ஏன் இப்படி மெளனமாக இருந்து ஆகாய தவம் செய்கிறேன்?இந்த தவத்தை நிலைகுலைய வைத்து நிர்மூலமாக்கவே பிராமணத்தி குறி வைத்துஎறிகணைகளை எறிகிறாள். எனினும் அவள் நிஷ்டை கலையவில்லை, தேவி அவள் தொட்டு உலுக்கிய வேளையில் தான் அவளூக்கு விழிப்பு வந்தது. அன்பு வரண்டுபோன மண் கண்ணை எரித்தது.
அப்போது கோபம் மேலோங்க தேவி கேட்டாள்.
இதைக் கேட்ட பின்னுமா உங்களூக்கு கோபம் வரேலை. இப்ப ஐயர் பூசை செய்வதும் பொய்ச்சு போச்சுது. இதையெல்லாம் யோசிச்சால், நீங்கள் காளி அவதாரமல்லே எடுத்திருக்க, வேணுமே ஏனம்மா?அநீதியைக் கண்டு பொங்காத உங்களை நினைச்சு அழுவதா சிரிப்பதா என்று எனக்குத் தெரியேலை உந்தப் பிராமணத்தியைசெருப்பால் அடிச்சு துரத்த வேணும் இல்லை கொன்று போட்டால், தான் எனக்கு மனம் அடங்கும்.
அப்பவும் ராதா வாயைத் திறக்காமல்,தன் உயிர் பிரகாசமான கன்களால், வானத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள் அகிம்சையும் அன்பு வழிபாடும் இல்லாமல் போனால், நான் நிக்கிற பூமிகூட எனக்கு அக்கினிக் குண்டம் தான் ஏன் இந்த வானமே பொய்யாகி சூனியம் வெறித்த இந்த வாழ்க்கையில் துருவமாகிப் போன உலகில் சடம் மரத்துப்போயிருக்கிற, இவர்கள் போல் நானும் ஆக நேர்ந்திருந்தால்,இந்த வானம் கூட இல்லை என்று மிகவும் மனவருத்தத்தோடு, அவள் நினைவு கூர்ந்தாள் இருமை நிலை இருக்கும் வரை இறைவனில்லை உயிர் வழி உறவு ஒன்றாகும் போது தான் வாழ்க்கையென்ன வானமே வந்து, கையில் நிற்கும் என்று அவளுக்குப்பட்டது.
![]() |
என் எழுத்துயுகத்தின் இனியதொரு விடிவு. இருள் கனத்த நீண்ட என் எழுத்து யுகம் தாண்டி இது எனக்கு ஒரு மறு மலர்ச்சிக் காலம். இலை மறை காயாக அதில் வாழ்ந்த காலம் போய், இத்தளத்திற்கு வந்த பிறகு பல நூறு அல்ல அதிலும் கூடுதலான வாசகர்களை பெற்று, புறம் தள்ளப்பட்ட என் கதைகள்அமோக வரவேற்புப் பெற்று, கொடி கட்டிப் பறக்க நேர்ந்த பெரும் பேற்றினை, ஒரு கடவுள் வரமாகவே நான்…மேலும் படிக்க... |