கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: September 1, 2025
பார்வையிட்டோர்: 3,930 
 
 

மதுரை – அனுப்பானடி

வாசலில் செருப்பை கழட்ட பொறுமை இல்லதவனாய் , தூக்கி எறிந்தவாறு வீட்டிற்குள் நுழைந்தான் கதிர்.

கதிர் உள்ளே வருவதை பார்த்து , அம்மா மீனாட்சி , “என்னடா , கதிர் , நீ மட்டும் வர்ற? மார்க்கெட்டுக்கு உன்கூட போன உன் பொண்ணு சாம்லி, உன் பொண்டாட்டி கயல் , அங்கேயே விட்டுட்டு வந்திட்டியா?” என்று விசாரித்தாள்.

கோவமாக அம்மா மீனாட்சியை பார்த்த படி , “உனக்கு , கொஞ்சம் கூட மனசாட்சி இல்லயா? இன்னைக்கு ஒரு நாள் தான் எனக்கு லீவு. நேத்து நைட்டு லேட்டா தான் வந்தேன். தூக்கம் வருதுன்னு தூங்க போகலாம்னு நெனச்சா , போய் மார்க்கெட்ல மீனு வாங்கிட்டு வா, கறி வாங்கிட்டு வான்னு என்னைய அனுப்புறிங்க , நீங்க அவளுக்கு துணையா போய் வாங்கிட்டு வர வேண்டியது தான?” என்று கதிர் சலிப்புடன் பேசினான்.

அதற்க்கு மீனாட்சி , “கதிர் , நானும் உங்க அப்பாவும் தான் மார்க்கெட் போறோம்ன்னு சொன்னேன். கயல் தான், நாங்க போயிட்டு வாரோம் அத்தைனு சொன்னா. நீ வர மாட்டன்னு, அவட்ட சொன்னேன், நான் உங்க பையன்ட பேசி கூட்டி போறேன்னு, கயல் சொன்னா. அதுலயும் உன் பொண்ணு சாம்லி , நான் சொன்னா அப்பா வருவாருன்னு சொல்லிட்டு போச்சு” என்று கூறினாள்.

அம்மா மீனாட்சி கூறியதை கேட்டு, “மார்க்கெட்ல அவ்ளோ கூட்டம். எனக்கு தூக்கம் வருது. கண்ணு எரியுது. நீங்க பொறுமையா நின்னு வாங்கிட்டு வாங்க , நான் வீட்டுக்கு போறேன்னு சொல்லிட்டு கிளம்பி வந்துட்டேன். ஷாம்லி வண்டியில தான் வருவேன்னு சொன்னா , சரி ரெண்டு பேரும் வண்டியில வாங்க , நான் நடந்து போறேன்னு , நடந்து வந்துட்டேன்.” என்று கோவமாக கூறினான் கதிர்.

அப்போது , வெளியில் யாருடனோ பேசி விட்டு வீட்டிற்குள் நுழைந்தார் அப்பா சுந்தரம்.

“அம்மா , பிள்ளையும் என்ன தனியா ரகசியம் பேசுறிங்க?” என்று கேலியாய் பேசியபடி உள்ளே நுழைந்தார் சுந்தரம்.

கதிர் பதில் பேசவில்லை. “ ஒன்னும் இல்லைங்க, மார்க்கெட் போக சொன்னதுக்கு உங்க பையனுக்கு அவளோ கோவம். மருமகளை , பேத்திய அங்கேய விட்டுட்டு நடந்து வந்துட்டான்.” என்று அம்மா மீனாட்சி கூறினாள்.

அதை கேட்டு அப்பா சுந்தரம் சிரித்தார்.

“தம்பி கதிர் , தூங்க போறியா? ஒரு ஐந்து நிமிடம் வா. நம்ம தெரு முக்குல திரும்பிற இடத்தில் ஒரு பாதாள சாக்கடை நேத்து வேலை பார்த்தாங்க. அங்க மறுபடியும் காலையில் ஒரு பள்ளம் விழுந்திருக்கு. மாநகராட்சியில சொல்லிட்டு வந்துட்டேன். அவங்க நாளைக்கு தான் வருவாங்க. நாம போய் அந்த பள்ளத்தை சுத்தி யாரும் விழாம இருக்கிற மாதிரி கல்லையோ , ஒரு குச்சியை ஊண்டி வச்சிட்டு வருவோம். “ என்று அப்பா சுந்தரம் பொது நலத்தில் கூற, கதிர் மீண்டும் கோவம் கொண்டான்.

“அப்பா , அது மாநகராட்சிகாரங்க வேலை. உன் வேலை என்ன? போ சாப்பிட்டு வீட்ல படு. வீட்ல இருக்கிற சின்ன சின்ன வேலையை பாரு. நீ மார்க்கெட் போயிருக்கலாம் , என்னைய கூட்டி போய் கோவபடுதிறாங்க. வீட்ல இருக்கிற வேலைய பாருப்பா. அப்புறம் ஊருக்கு நல்லது பண்ணலாம்“ என்று கதிர் கோவமாக கூறினான்.

“கதிர் , அது மாநகராட்சிகாரங்க வேலை தான். அவங்க வந்து அந்த பள்ளத்தை சரி செய்வதுற்க்குள் யாரவது விழுந்துட்டா என்ன பண்றது? அதுவும் தெருவுக்கு திரும்பிற இடத்தில் இருக்கு , நாம வண்டியில் வந்தா கூட , அங்க பள்ளம் இருக்கிறதுன்னு கவனிக்க முடியாது , வண்டியோட உள்ளே விழுந்துருவோம்.” என்று அப்பவின பொதுநல பேச்சு கதிருக்கு மேற்கொண்டு எரிச்சல் ஊட்டியது.

“அப்படி , விழுந்தா விழட்டுமே. மத்தவங்களுக்கு இல்லாத அக்கறை , நமக்கு மட்டும் எதுக்கு? உங்க பொதுநலத்தை மூட்டை கட்டிவைங்க. வீட்ல இருக்கிற வேலைய பாருங்க” என்று கூறி விட்டு தன் அறையை நோக்கி நடந்தான் கதிர்.

கதிரின் பேச்சு கேட்டு , “கிறுக்கன் , என்ன சொல்றேம்னு புரிஞ்சிக்க மாட்றான் , உன் புள்ளை.” என்று தன் மனைவி மீனாட்சியிடம் புலம்பிய படி சுந்தரத்திற்கு சிரிப்பு தான் வந்தது.

சில மணி துளி பிறகு , வாசலில் தின நாளிதழை படித்தவாறு சுந்தரம் அமர்ந்து இருந்தார்.

அப்போது வாசலில் இருந்து பார்த்தால் , அந்த பள்ளத்தை சுற்றி கூட்டம் கூடி இருப்பதை கண்டு ஓடினார் சுந்தரம்.

“அச்சச்சோ , யாரோ பள்ளத்தில் விழுந்துட்டாங்க போல “ என்று மனதில் புலம்பிய படி அங்கு ஓடினார் சுந்தரம்.

கூட்டம் கூடி உள்ளே விழுந்தவர்களை மேல தூக்கி விட முயற்சி நடந்து கொண்டு இருந்தது. சுந்தரம் அருகே சென்றார்.

பள்ளத்தில் விழுந்து , ஒரு பொண்ணுக்கு ரத்த காயம் ஏற்பட்டு இருந்தது. உடம்பெல்லாம் சாக்கடை. உற்று பார்த்த சுந்தரத்திற்கு அதிர்ச்சி. அந்த பொண்ணு வேறு யாரும் இல்லை, தன் மருமகள் கயல். பள்ளத்தின் உள்ளே அரைகுறை மயக்கத்துடன் இருந்த தன் பேத்தி ஷாம்லியை காப்பாற்ற முயற்சி நடந்து கொண்டு இருந்தது.

இதனை பார்த்த சுந்தரம் தன் தலையில் கை வைத்து கண் கலங்கிய படி இருந்தார்.

அக்கம் பக்கம் வீட்டாரின் பேச்சை கேட்டு , அம்மா மீனாட்சியும் , தூங்க சென்ற கதிரும் அந்த பள்ளத்தை நோக்கி ஓடி வந்து கொண்டு இருந்தனர், கண்களில் கண்ணீருடன்.

தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை.

# நாம் இருக்கும் இடத்திலும் இது போன்ற பள்ளங்கள் இருப்பின் , அதில் விபத்து ஏற்படாத விதத்தில் , தகுந்த முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வைப்பது நமது பொறுப்பு. (துறை சார்ந்தவர்கள் வந்து சரி செய்வார்கள் என்று அலட்சியம் நமக்கு வேண்டாம்)

# பொது நலத்தில் ஒரு சுயநலம்.

மணிராம் கார்த்திக் என் பெயர் : மணிராம் கார்த்திக். பிறந்த வருடம் : 25-ஜனவரி -1987 ஊர் - மதுரை மாவட்டம் , அனுப்பானடி . அப்பா : மணிராம் - அம்மா : மகாலட்சுமி - மனைவி : சித்ரா. நான் BCOM பட்டதாரி. 2007ம் ஆண்டு கல்லுரி படிப்பை முடித்தேன். தற்போது தனியார் ஜவுளி சார்ந்த கடை ஒன்றில் கணக்காளராக பணியாற்றி வருகிறேன். எனக்கு கதை எழுதும் ஆர்வம் ,…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *