வினா
(1964ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

கோழி சொன்னதுஞ் சரியே. முட்டையை இட்டது கோழிதான்.
முட்டை சொன்னதிலும் பிழையில்லை. முட்டையிலிருந்து தான் கோழி வெளிவந்தது.
எது முதலிலே தோன்றிற்று?
இந்தக் கேள்விக்கு ஆத்திகர்களும் நாத்திகர்களும் இற்றை வரை விடைகாணும் பிரயத்தனத்தில் ஈடுபட்டிருக்கின்றார்கள்.
– மரபு (உருவகக் கதைகள்), முதற் பதிப்பு: தைப் பொங்கல் 1964, அரசு வெளியீடு, கொழும்பு.