வழியில் வித்துவான் திரவியத்தைப் பிடுங்கிக்கொண்டது

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: July 18, 2025
பார்வையிட்டோர்: 1,343 
 
 

(2001ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஒருவித்துவான் தேசாந்திரம் போய்க் கொஞ்சம் திரவி யம் சம்பாதித்துக்கொண்டு ஊரின் அருகே தனிமையாக வருகையில் ஒருவன் வந்து அவன் மூட்டையைப் பிடுங்கிக் கொண்டு, “இது என் மூட்டை” என்று சொல்லிக்கொண்டு தன் வீட்டுக்குப் போய்விட்டான். 

வித்துவான் மரியாதைராமனிடத்துக்குப் போய் ‘பிராது செய்தான். மரியாதைராமன் அந்தத் திருடனை அழைப்பித்துக் கேட்க திருடன். “நானொன்றும் அறியேன்” என்று பொய்ச் சத்தியம் செய்தான். 

அதைக்கேட்டு நியாயாதிபதி திருடனுக்கு, வீட்டுக்குப் போக உத்தரவு கொடுத்துவிட்டு, அவனுக்குத் தெரியாமல் அவன் பின்னே தானே இரண்டுபேர் சேவகரை அனுப்பி னான். திருடன் தன் வீட்டுக்குள்ளே போன உடனே, அவன் பெண்சாதி, “நீ போன காரியம் எப்படி முடிந்தது” என்று கேட்டாள். அதற்கு அவன், நான் ஒன்றும் அறியேன் என்று ஏமாற்றிவிட்டேன் ” என்று சொன்னான். 

அந்தச் சொல்லை அவ்வேவுகாரர் ஒளிந்திருந்து கேட்டுப்போய், நியாயாதிபதியிடம் சொன்னார்கள். நியாயாதிபதி திருடனைப் பிடித்துக்கொண்டு வரச்சொல்லி அடிமேலடி அடித்தால் அம்மியும் நகரும் என்றபடியே அடிப்பித்து நன்றாக விசாரித்து, அவன் வாயைக்கொண்டே நிஜத்தை வெளிப்படுத்தி அவன் திரவியத்தை வித்துவா னுக்கு வாங்கிக்கொடுத்துத் திருடனுக்குச் சாஸ்திரப்படி தெண்டினையும் செய்தான். 

– மரியாதைராமன் கதைகள் (ஆய்வுப் பதிப்பு), இரண்டாம் பதிப்பு: மே 2001, பதிப்பாசிரியர்: முனைவர் ய.மணிகண்டன், சரசுவதி மகால் நூலகம் வெளியீடு, தஞ்சாவூர்.

பதிப்பாசிரியர் முகவுரை (மரியாதைராமன் கதைகள் - பதிப்பியல் நோக்கில சில குறிப்புகள்)  மரியாதைராமன் கதைகள் இப்பொழுது இரண்டாம் பதிப்பாக வெளிவருகிறது. இவ்வேளையில், முதற்பதிப்பு வெளிவந்த காலத்திற்குப்பின் இக்கதைகள் தொடர்பாக என்னால் தொகுக்கப்பெற்ற சில அரிய குறிப்புகளை இங்குப் பதிவுசெய்கிறேன். அவற்றோடு இப்பதிப்பினைக் குறித்தும், மரியாதைராமன் கதைப்பதிப்புகள் குறித்தும் குறிப்பிடத் தக்க செய்திகளையும் இங்கே அளிக்கின்றேன். இச்செய்திகள் இக்கதையிலக்கிய ஆர்வலர்க்கும் அன்பர்களுக்கும் பயன்மிக நல்கும் பான்மையனவாகும்.  புகழ்மிகு கதையிலக்கியங்கள் :  விக்கிரமாதித்தன்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *