கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: December 14, 2024
பார்வையிட்டோர்: 1,085 
 
 

(1951ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

இளையோர் முதியோராகிய ஒவ்வொருவரும் தாம் உடல்நலத்தோடும் உறுதியோடும் உயிரோடிருக்க ஓரளவு உணவு கொள்ளவேண்டும். ஆனால், சிலர் சிறிதளவாகவும் சிலர் மிகுதியாகவும் உணவெடுத்துக்கொள்கின்றனர். ஒரு வன் உடல் வலிமையும் உடல்நலமுங் கொண்டவன், ஒரு வன் மெலிவும் நலிவுங் கொண்டவன். இவ்விருதிறத்தா ரில் ஒவ்வொருவனுக்கும் போதுமான ஓரளவு இருக்கின்றது. அளவு மீறுகின்றவனுக்குத் தீங்கு வந்தே தீரும். உணவு சுவையோடு கூடியிருப்பின் அதனை மிகுதியாக உட்கொள்வதற்கு மக்கள் மனஞ்செல்லும். அவ்விச்சைக் கிடங்கொடுப்பது நோய்க்கிடங்கொடுப்பதாகும். இத்த கைய மீதுணைத் தொடர்ச்சியாக விரும்பின் உடம்பு விடா நோயடையும். 

மீதூண் விரும்புபவன் வயிறுதாரி; சுவையுணவு இச் சிப்பவன் உணவுவிருப்பன். உண்பதிலேயே விருப்பங் கொண்டு இன்பம் நுகர விரும்புகின்றவன், அதை விரும் பாத அயலாரால் இழிவாக எண்ணப்படுகின்றான். உணவை மகிழ்ச்சியோடு அளவாக உண்ணவேண்டும். ஆனால், உணவே எண்ணமாயிருப்பதும், சோற்றுச் சுவை யையே போற்றிக்கொண்டிருப்பதும், உணவின்பமே இன்பம் என்றுணர் தலும் மக்கட் பண்பிற்கொத்ததன்று. பேருண் டியைப்போன்று அருவருக்கத்தக்கது வேறொன்றில்லை. 

பேருண்டிக்காரனுக்காவது போதும் என்னும் ஓரளவு உண்டு, கள்ளுண்பானுக்கு அஃதில்லை; குடிக்கக் குடிக்கத் தன்னை மறந்துவிடுவான். கள்ளுண்பவன் பிறரெல்லாராலும் எள்ளப்படுவான்; நாணத்தை இழப்பான்; அரும் பொருள்கொடுத்து அறியாமையைக் கொள்வான்; ஊர் கைப்புக்கும் உறவினர் இகழ்ச்சிக்கும் ஆளாவான்; குடி யானவன் என்பதுபோய்க் குடியன் என்னும் பெயரெடுப் யான்; எந்த வேலைக்குமே ஏற்றவனாகான்; உள்ள பொரு ரு ளைக் கொள்ளை கொடுத்து இல்லாதவனாவான்; அவன் குடும் பமோ பாழ்பட்டு நோய்பட்டுப் பட்டினிகிடக்கும். 

மீதூண் விரும்புபவனை மிதமாக உண்ணச்செய்யப் பல்வேறு வழிகள் உண்டு; கள்ளுண்பவனைக் காரணங் காட்டிக் குணப்படுத்தமுடியாது; அப்படிச் செய்வது நீர்க்குள் மூழ்கியிருப்பவனை விளக்குக்கொண்டு தேடுதல் போலாக முடியும். ஆகையால் கட்குடியைக் கனவிலும் நினைக்கப்படாது. 

1. இரு தேனீக்கள் 

ஒரு தோட்டத்திலிருந்த இரண்டு தேனீக்கள் ஒருநாள் தேன் தேடிவரப் புறப்பட்டுச் சென்றன. ஒன்று பூப் பூவாக நாடி. நாடித் தேன் திரட்டியது மன்றிக் கூண்டுக்குப் பயன்பட மெழுகை யும் தன் கால்களிற் பற்றிவைத்துக்கொண்டது. உடன்வந்த ஈயோ தேனை வெறுக்க வெறுக்கக் குடித்து வெறிகொண்டு கால் சிறகுகள் தேன்மெழுகுப் பசையால் மரத்துக் கட்டிப்போய்ச் சிறிதும் அசைய முடியாமல் ஒரு தேனிறைந்த பெரும்பூவில் பிணமபோற் கிடந்தது. மற்றொரு தேனீயோ நண்பனைக் காணாது தோட்டமெல்லாந் சேடிப்போய்க் கடைசியாகக் கண்டு, “நண்பா! கூண்டுக்கு வரவில்லையோ!” என்று கேட்டது. அஃது “அப்பா! மட்டற்ற இன்பம் மாள்வதற் கிடங்கொடுத்தது!” என்றுசொல்லி உயிர்விட்டதாம். 

2. கார்நரன் 

வெனிசுநகரில் கார்நரன் என்னும் ஒரு குலமகன் இருந்தான்.. அவன் நாற்பதாண்டுவரையிலும் குடிகாரருடன் கூடிக்கொண்டு குடித்து வெறித்து உடலைப் பற்பல நோய்களுக்கு உட்படுத்திப் படாத பாடுபட்டான். நோய்முதலும் அவிழ்தமுறையும் நன்கறிந்த. ஒரு மருத்துவர், அவனுக்குற்ற நோய்களையெல்லாம் மருந்து கொடுத்து நீக்கினார். அவன வாழ்க்கையையே முற்றும் மாற்றி விட்டார். அவன் அதுமுதல் இசசைகடிந்த இல்வாழ்க்கையில் அமர்ந்தான். அமரவே அவன் உடல்நலம் பெற்று உள்மகிழ்வடைந்தான். 

இக்குலமகனுக்கு எழுபதாவது அகவையில் ஓர் இக்கட்டு வர, கைகால் என்புகள் உடைபட்டன. எனினும் அவன் நல்ல செய லால் உடலுறுதிபெற்றிருந்தமையால் அறுவை மருத்துவத்தால் உடைந்த என்புகள் உடனே கூடி உடல்நலம் பெற்றான் அவன் எண்பதாவது வயதிலும் மலைமேலும் ஏறிப்போகத்தக்க உடல் வலிமையும் மனத்திடமும் கொண்டவனானான். அவன் தனது தொண்ணூற்றெட்டாவது வயதில் நோய்வருத்த மின்றி அமைதி யுடன் ஆண்டவனடி சேர்ந்தான். 

3. சம்பன்னன் 

இங்கிலாந்தில் சம்பன்னன் என்னும் ஒருவன் கப்பல் செப்ப னிடுந் துறையில் வேலைசெய்துகொண்டிருந்தான். அவன் கூடுவா ருடன் ன் கூடிக் குடிக்கக் கற்றுக்கொண்டான். அதனால் தானுந் தன் குடும்பத்துடன் நோய்வாய்ப் பட்டு ஊணுடையின்றி மிக வருந்தினான். இல்லிடமும் பொல்லிடமாய்த் தட்டுமுட்டுக் களுக்கும் முட்டுவந்துவிட்டது. 

ஒருநாள் சம்பன்னன் ஒரு பெருந்தெருவிற் போய்க்கொண்டு டிருக்கும்போது ஒருபெருங் கூடத்தில் நன்மக்கட் கூட்ட மொன்று நடந்தேறிக் கொண்டிருப்பதைக் கண்டு உள்ளே நுழைந்தான். ஆங்கு ஒரு பெரியார் கள்ளுண்ணா திருத்தலைப் பற்றிச் சொற்பொழிவு செய்துகொண்டிருந்தார். அவர் குடித் தலின் தீமைகளைப் பற்றியும் குடியாமையின் நன்மைகளைப் பற்றி யும் மக்கள் மனத்தில் பசுமரத் தாணிபோல் பதியும்படி பேசினார். அதனை நன்கு கேட்டுக்கொண்டிருந்தான் சம்பன்னன். அதனால் அவன் முற்றும் மனமாறிப்போய்ச் சரேலென்று சொற்பொழி வாளரிடஞ் சென்று, “பெரியீர்! அடியேனை இக்கழகத்தில் ஓர் உறுப்பினனாக ஏற்றுக்கொள்ள வேண்டும்,” என்று சொல்லிக் கையொப்பமுஞ் செய்து விட்டான். 

அதுமுதல் சம்பன்னன் தன் வேலையைத் தான் செய்து கொண்டு குடும்பத்தையும் பாதுகாத்துக்கொண்டு வந்தான்; தனது ஊதியத்திலும் மிச்சப்படுத்திக்கொண்டு வந்தான். அவன் குடிகாரக் கூட்டாளிகளைத் தூற்றாமலே தூர விட்டுவிட்டான். 

ஒருநாள் சம்பன்னன் சேமநிதியிற் செலுத்தப் பொற்காசு களை எடுத்துக்கொண்டு ஒரு தெருவழியே நடந்து சென்றான். பழைய கூட்டாளிகளிற் சிலர், அவனை ஆங்குக்கண்டு, “சம்பன்னா குடியா நோன்பு எப்படி யிருக்கின்றது! உன்முகம் மஞ்சட்பூத்துப் போயிருக்கின்றதே!” என்றார்கள். அதற்குச் சம்பன்னன்; “என் முகம் மாத்திரம் அன்று, எனது சட்டைப்பையும் மஞ்சட் பூத் திருக்கின்றது,” இதோ பாருங்கள் அதனிற் பொற்காசுகள் என்று அப்பொற்காசுகளைத் தன்கையில் எடுத்து வைத்துக் கொண்டு காண்பித்தான். அவர்கள் தங்கள் வறுமையை நினைந் வெட்கிப் போய்விட்டார்கள். 

4. எளிய உணவே இன்பந் தருவது 

உள்ளக் கவர்ச்சிதரும் உயர்தரமான உணவானது தன்னால் உண்டாக வேண்டிய உடல்நலப் பயனையே ஒழித்துவிடுகின்றது; நோய் கொடுக்கின்றது; பசி கெடுக்கின்றது; அருட்சேகரன் என்னும் பாரசீக அரசன் தன் பகைவர்க்கஞ்சிப் பட்டிக்காடான ஓரிடத்திற் சென்று பதுங்கி வாழ்ந்துவந்தான். ஆங்கு அவன் அத்திப் பழமும் வாற்கோதுமை அப்பத்தையுமே உண்டுவந்தான். அப்போது ஒருநாள் அம்மன்னன், “இவ்வெளிய உணவின் இன் பத்தை இத்தனை நாளும் அறியாமலிருந்தேனே!” என்றியம்பிக் கழிவிரக்கங் கொண்டானாம். 

5. கிழவனும் சிறுவனும் 

சிறுவன்: தாத்தா! நீர் தொண்டு கிழவராய் விட்டீர், நரைத்துப் போய் உதிர்ந்து போகாமல் நின்ற சில தலைமயிரே தலைகாட் டிக் கொண்டிருக்கின்றது; மேலும் உம் உடல்நலமும் மனோதிடமும் சிறிதுங் குறைந்திருக்கவில்லையே! இதற்குக் காரணம் என்ன? தயவுசெய்து தெரியச் செய்வீராக!

கிழவன்: பிள்ளாய்! இளமைப் பருவம் நிலையற்றதென்று யான் எப்போதும் நினைவில் வைத்திருப்பேன். ஆகையால் அப்பரு வத்திலேயே, முதுமையில் அதனைப் பற்றிக் கழிவிரக்கங் கொள்ளாதிருக்கவேண்டி, யான் உடல்நலத்தையும் உடல் வலிமையையும் தீத்தொழில்களிற் செல்ல விட்டேனில்லை. அக்காலத்திலேயே யான் எது செய்தபோதிலும் எதிர் காலத்தைப் பற்றிய எண்ணம் என் மனத்தின்கண் இருந்து கொண்டே யிருக்கும். 

சிறுவன்: தாத்தா! வாழ்நாட்களோ பறந்து போய்க்கொண் டிருக்கின்றன! நீரோ மரணத்தைப் பற்றி மகிழ்ச்சியொடு மகிழ்ந்து பேசிக்கொண்டிருக்கின்றீர்! இது வியப்பினும் வியப்பன்றோ! சற்றுத் தெரிவிப்பீரோ? 

கிழவன்: பிள்ளாய்! யான் மகிழ்ச்சியாக இருப்பது உண்மையே! யான் சொல்லப்போகின்றதை நீ உன்கருத்தில் கொள் வாயாக. யான் இளமையில் இறைவனை மறந்ததே இல்லை; ஆகையால் அவர் என்னை இம்முதுமையில் மறக்கவில்லை. 

க. நஞ்சுண்பார் கள்ளுண்பவர். -திருவள்ளுவர். 

உ. குடியருடன் கூடிக் குடித்து வெறித்துக் களிப் யவன் குடும்பத்தைத் தலைகுனியச் செய்கின்றான். 

ங. பட்டப்பகலில் மக்கட் கெதிரில் தலைகுனியாமல் முகமேறிட்டு நட. -ஒரு பெரியார். 

– நல்லொழுக்கப் பாடம், முதற் பதிப்பு: ஏப்ரல் 1951, திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், லிட், திருநெல்வேலி.

சேலை_சகதேவ_முதலியார் சேலை சகதேவ முதலியார் (1874 - ஜூலை 28, 1953) தமிழ்ப் பாடநூல்களை எழுதிய முன்னோடிகளில் ஒருவராக அறியப்படுகிறார். திருநெல்வேலி சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தின் பதிப்பாசிரியராகவும், செந்தமிழ்ச்செல்வி இதழின் ஆசிரியராகவும் இருந்த மணி திருநாவுக்கரசு கோரியதற்கு இணங்க பள்ளி மாணவர்களுக்கு எளிதாக புரியும் வண்ணம் சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தின் வெளியீடுகளான கழகத் தமிழ்ப்பாட வரிசையில் ஆறு நூல்களை சேலை சகதேவ முதலியார் செம்மை படுத்திக் கொடுத்தார். அந்நிறுவனம் வெளியிட்ட…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *