நூலகத்திலிருந்து நான் கொண்டு வந்த பொருள்

0
கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: அறிவியல் புனைவு
கதைப்பதிவு: November 9, 2023
பார்வையிட்டோர்: 6,462 
 
 

நூலகத்திலிருந்து என் போனுக்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது. “நீங்கள் கோரிய பொருள் எங்களிடம் இப்போது இருக்கிறது. இன்னும் மூன்று நாட்களுக்குள் வந்து அதை இரவல் எடுத்து செல்லுமாறு உங்களை கேட்டுக் கொள்கிறோம்.” என்றது அந்தக் குறுஞ்செய்தி.

மிகுந்த மகிழ்ச்சியுடன் நான் நூலகத்திற்கு சென்றேன். நூலகர் எனது அடையாள அட்டையை ஸ்கேன் செய்து, “இதில் கொஞ்சம் கையெழுத்திட்டு கொடுக்கிறீர்களா?” என்று சொல்லி ஒரு காகிதத்தை நீட்டினார்.

நான் அதை படித்து பார்த்தேன். நான் இரவல் எடுக்கும் பொருளை எப்படி கையாள வேண்டும் என்ற நீண்ட விளக்கம் அதில் இருந்தது. மேலும், அந்த பொருளினால் எனக்கு எதாவது ஆபத்து வந்தால் அதற்கு நூலகம் பொறுப்பு அல்ல என்று குறிப்பிட்டு இருந்தது. நான் விரைவாக அதில் கையெழுத்திட்டுக் கொடுத்தேன் .

பத்து நிமிடங்களுக்குப் பிறகு, நூலகர் ஏழுக்கு ஏழு அளவுள்ள ஒரு இரும்புப் பெட்டியை ட்ராலியில் தள்ளிக் கொண்டு வந்தார். அந்தப் பெட்டியின் மேல் ஒரு சிவப்பு லேபிள் ஒட்டியிருந்தது. அதில் இப்படி எழுதியிருந்தது:

· பொருள்: உயிரினம்

· பாலினம்: ஆண்

· வயது: 22

· ஆளுமை: கூச்ச சுபாவம்

· பூமியிலிருந்து கடத்தப்பட்ட தேதி: ஏப்ரல் 16, 1955

நஞ்சப்பன் ஈரோடு பொள்ளாச்சியில் பிறந்து இன்ஜினீரிங் பட்டம் பெற்று தற்போது அமெரிக்காவில் வடக்கு கரோலினாவில் ஒரு வங்கியில் வேலை செய்து வருகிறார். எழுத ஆரம்பித்தது கோவிட் சமயத்தில் ஒரு வாரம் வீட்டில் முடங்கிக் கிடந்த போது. முதலில் எழுதியது ஆங்கிலத்தில் தான்.  அமெரிக்காவில் குடியேறி இருபத்தைந்து வருடங்கள் எந்த தமிழ் வாசனையும் இல்லாத ஒருவரால் தமிழில் எப்படி எழுத முடியம்? சிறுகதைகள்.காம் தளத்தைப் பற்றி அறிந்த போது இவருக்கும் தமிழில் எழுத வேண்டும் என்ற ஆசை வந்தது. அப்போது இவருக்கு கை…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *