கடிதமும் காவலும்

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: கல்கி
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: July 18, 2024
பார்வையிட்டோர்: 3,593 
 
 

(1948 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“என்ன. வெங்கடேசுவரலுகாரு! பாக்கி ரொம்ட நாளாகத் தங்கீப் போய் விட்டதே வட்டியையாவது கொடுக்கக் கூடாதா?” என்று வினயமாகக் கேட்டார் சேட் சொக்கலால்.

“ஆகட்டும். எல்லாவற்றையுமே கொடுத்து விடுகிறேன் பொழுது வடிந்து பொழுது போனால் இந்த ஊரில் குடியிருக்கவே பயமாயிருக்கிறது. நீ என்னமோ வட்டி நட்டி என்று அடித்துக்கொள்கிறீர்” என்று சொல்லி விட்டுப் போய்விட்டார் லாகோடி வெங்கடேசு வரலுகாரு.

லாகோடி ஆந்திர நாட்டின் எல்லையோரத்தில் உள்ள ஒரு கிராமம். அந்தத் கிராமத்துக்கு ஹைதராபாத் ரஸாக்கர் களால், எப்போது ஆபத்து நேருமோ என்ற பயம் இருந்து வந்தது. ஆனால் முப்பது வருஷங்களுக்கு முன் லாகோடி ஒரு அமைதியான கிராமமாக இருந்தது. அந்தச் சமயத்தில் தான் சேட் சொக்கலால் லாகோடியில் வந்து குடியேறினார்.

சொக்கலால் லாகோடிக்கு வரும் பொழுது அவருக்கிருந்த ஆஸ்தி எல்லாம் அவருடைய மனைவியும் ஐம்பது ரூபாய் வெள்ளிக் காகம்தான். இன்றே லாகோடியில் சொக்கலாலை தெரியாதவர்களே இல்லை. பல ரூபாய்களுக்குச் சொக்கலால் அதிபதியாகி விட்டார். பைசாக்குப் பைசா வட்டி வாங்கிச் சேர்த்த பணம்தான் அவ்வளவும்.


“சார். தபால்!” என்ற சத்தம் கேட்டு வெங்கடேசுவரலுகாரு வெளியே வந்தார். தபால்காரன் ஒரு ரிஜிஸ்தர் தபாலை கொடுத்துக் கை எழுத்து வாங்கிக் கொண்டு போய் விட்டான்.

சேட் சொக்கலாலின் வக்கிலிடமிருந்து நோட்டீஸ் வந்திருந்தது.

“சொக்கலாலுக்குச் சேர வேண்டிய ரூபாய் பத்தாயிரத்தையும் வட்டியையும் இந்த கோட்டீஸ் கண்ட ஒரு வார்த்துக்குள் கொடுக்க வேண்டும். கொடுக்கத் தவறினால்……” என்றிருந்தது.

இதுபோன்ற எத்தனையோ நோட்டீஸ் களையும் எத்தனை சம்மன் களையும் வாங்கிக் கிழித்து எறியும் வெங்கடேசுவரலுவுக்கு இந்த நோட்டிஸைக் கிழித்து எறிய எத்தனை நாழியாகப் போகிறது?


வாரமும் மாதமும் முடிந்துவிட்டன. வெங்கடேசுவரலுவிட மிருந்து எந்த விதமான பதிலையும் காணாத சொக்கலாலுக்குக் கோபம் பொத்துக் கொண்டு வந்தது. தன் தோளில் கிடந்த துண்டை தோளில் போடுவதுமாக வாசல் பக்கத்துக்கும் எடுத்து முகத்தைத் கூடத்தக்கும் உலாவிக் கொண்டிருந்தார். கோபத்தால் சொக்கலாலின் இரண்டு கண்களும் கோவைப் பழம் போலச் செக்கச் செவேலென்றிருந்தன.

அத்தனை நாளும் சொக்கலாலின் வீட்டை நிமிர்ந்துகூடப் பார்க்காமல் சென்று கொண்டிருந்த தபால்காரன் அன்று சொக்கலாலுக்கு ஒரு கடிதத்தைக் கொடுத்து விட்டுப் போனான்: “வெங்கடேசவரலு மட்டும் எனக்கு சரியான பதில் எழுதாமல் இருக்கட்டும் . அவனைச் கோர்ட்டுக்கு இழத்துச் சந்தி சிரிக்க அடிக்கிறேன் பார்” என்று சொல்லிக் கொண்டே கையில் வைத்திருந்த தபாலை ‘த-ர்-ர்-ர்! என்று கிழித்தார். கடிகத்தைப் படித்தார். சொக்கலாலுக்கு உலகமே சுழலுவது அவர் போலிருந்தது. அவர் கையிலிருந்த கடிதமும் அவரைச் சுற்றிச் கழன்று கொண்டு வந்து கீழே விழுந்துவிட்டது.

திடீரென்று மனதைத் திடப்படுத்திக் கொண்டு கீழே விழுந்த கடிதத்தை எடுத்து மீண்டும் படிக்கலானார்:

“ஏழைகளின் பணத்தைப் பகல் கொள்ளைடித்து வரும் தருமப் பிரபுவே!

வரும் திங்கட்கிழமை நடு இரவில் நாங்கள் உங்கள் வீட்டுக்கு வருகிறோம். உம்மிடம் விருந்துக்கு வரவில்லை. திவட்டிக் கொள்ளைக் காரர்களாயே நாங்கள் நீங்கள் பகல் கொள்ளை யடித்துச் சேர்த்த வைத்திருக்கும் பெருளில் பங்குக்கு வருகிறோம். எங்களுக்கு அதிக சிரமம் கொடுக்காமல் தங்களிடம உள்ள ரொக்க ரூபாய்களையும் நகைகளையும் எடுத்துத தயாராக வைத்திருக்க வேண்டும். நாங்கனெலலாரும் ஆயுதபாணிகளாக வருவதால் நீர் போலிஸூக்குச் செல்லி எங்களை ஒன்றும் செய்ய முடியாது. கபர்தார்!

இப்படிக்கு,
ரஸாக்கர்கள்.”

இந்தக் கடிதத்தை மட்டும் சொக்கலால் சேட் நூறு தடவையாவது படித்திருப்பார். அவருடைய மூளை தீவிரமாக வேலை செய்ய ஆரம்பித்து விட்டது. “இந்தமாதிரித் தமக்குக் கடிதம் வந்திருப்பது இந்த லகோடிக்காரன்களுக்குக்குத் தெரிந்தால் அவர்களே நம் வீட்டைக் கொள்ளையடித்து விடுவார்கள்” என்று நினைத்துத் தம் மனைவியிடம் மட்டும் கடிதம் வந்த விஷயத்தை ரகசியமாகச் சொல்லி வைத்தார்.

ஒரே ஒரு பெண்ணிடம் ரகசியத்தைச் சொல்லுவதும் ஊர் பூராவும் தம்பட்டம் அடித்துப் பறைசாற்றுவதும் ஒன்றுதான் என்பது தெரியாமற்போன சொக்கலாயின் சியைகண்டு இரங்க வேண்டிய தாயிற்று, லாசோடி கிராமம் பூராவும் சொக்கலாலுக்கு ரஸாக்கர்களிடமிருந்து பயமுறுத்திக் கடிதம் வந்த செய்தி ஒரு நொடியில் பரவிவிட்டது.

“இந்தப் பாவி சேட்டுக்கு வேணும், எத்தனை பேரிடம் வயிறு எரிய வட்டிக் காசு வாங்கியிருப்பான்” என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டே சேட்டிடம் வந்து “நீங்கள் பயப்பட வேண்டாம். ஆயிரம் ரஸாக்கர்கள் வந்தாலும் நாங்கள் இருந்துறோம்” என்று தைரியம் சொல்லுவது போலக் கேலி செய்து விட்டுப் போனார்கள்.

சொக்கலாவின் மனம் தீவிர யோசனையில் ஆழ்ந்திருந்தது. அவர் ஒரு பதிலும் சொல்லாமல் மௌனமாக உட்கார்ந்திருந்தார்.

அது ஒரு “மொட்டைக் கடிதம்” ஹை கராபாத் எல்லையோரத்தில் உள்ள ரஸாக்கர்களின் அட்டூழியத்தை வைத்துக்கொண்டு வெங்கடேகவரலு காருவே சொக்கலாலுக்கு எழுதிய கடிதம் என்று யாருக்குத் தெரியப் போகிறது?


நேற்று வரையில் சொக்கலாலைக் கேலியும் கிண்டலும் செய்து கொண்டிருந்த லாகோடிக்காரர்கள் இன்றைய தினம் ஒரு பொதுக்கூட்டம் போட்டிருந்தார்கள். பொதுக் கூட்டத்துக்கு எல்லா ஜனங்களுடன் சொக்கலால் சேட்டும் வந்திருந்தார்.

கூட்டத்துக்குத் தலைமை வழித்தவர் காரசாரமாகப் பேசினார்: “இன்றைய தினம் சொக்கலால் வீட்டைக் கொள்ளை வடிக்கக் கடிதம் எழுதிய ராக்கர்கள் காளையதினம் கம் வீட்டிலும் கொள்ளையடிக்க முயலுவார்கள். இது போன்ற சமயங்களில் சர்க்காரை நம்பியிருப்பதை விட நம் கையேதான் நமக்கு உதவி, ஆகையால் வீட்டுக்கு ஒருவராக நாளைய தினமே புறப்பட்டு நம் ஊரை நாம் தான் காவல் செய்யவேண்டும். என்ன சொல்கிறீர்கள்?” என்று கேட்டார்,

கூட்டத்தில் இருந்த எல்லாரும் “அப்படியே செய்கிறோம் அப்படியே செய்கிறோம்!” என்று கோஷம் செய்தனர்.

சொக்கலாலுக்கு மனதிற்குள் சந்தோஷமாக இருந்தாலும் அதை வெளியே காட்டிக்கொள்ளாமல் சோகமாக இருப்பதுபோலவே நடித்தார்.

கூட்டத்தில் செய்த தீர்மானத்தின்படி சென்ற ஆறு மாத காலமாக லாகோடி கிராமத்தைச் சுற்றி இரவு பகல் எந்த நேரத்திலும் கையில் கிடைத்த ஆயுதங்களுடன் சுமார் இருநாறு ‘ரோந்து’ சுற்றிக் கொண்டிருக்கின்றனர். லாகோடி கிராமத்து ஜனங்கள் ரஸாக்கர்களின் தொல்லையின்றி நிம்மதியாக இருக்கிறார்கள், எல்லாரையும் விட சொக்கலால் எந்தவிதக் கவலையுமில்லாமல் சுகமாகத் தூங்கிக் கொண்டிருக்கிறார்.

‘இன்று முதல் ஒரு வருஷ காலத்திற்கு லாகோடியில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் கொள்ளையடிக்கப் போகிறோம். எப்பொழுது வருவோம்;எப்படி வருவோம் என்று சொல்ல முடியாது. ஆனால் கட்டாயம் வருவோம். விணாக உங்கள் மலைவி மக்களை விட்டு யமலோகம் போக ஆசைப்படாமல் உங்களிடம் இருக்கும் பொருள்களை எல்லாம் நாங்கள் வரும் பொழுது கொடுக்கத் தயாரா யிருக்க வேண்டும்.

இப்படிக்கு,
ரஸாக்கர்கள்.”

என்ற லாகோடியில் உள்ள ஒவ்வொரு வீட்டுக்கும் சொக்கலால்தான் கடிதம் எழுதி அனுப்பியிருந்தார் என்பதைத் தயவு செய்து யாரும் லாகோடிக் கிராமத்து ஜனங்களிடம் மட்டும் சொல்லிவிடாதீர்கள்!

– 29-08-1948

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *