கண்ணில் தெரியுது காதல் – ஒரு பக்க கதை

1
கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: February 13, 2020
பார்வையிட்டோர்: 36,926 
 
 

கொஞ்ச நாட்களாக அவர்கள் இருவரும் நட்புடன் பழகியபோது அவர்களுக்குள் நல்ல புரிந்துணர்வு இருந்தது. அதனாலோ என்னவோ, ஒருவரை ஒருவர் ஈர்க்கப்பட்டார்கள். ஆனால் அதை எப்படிச் சொல்வது என்பதி;ல் இருவருக்கும் தயக்கம் இருந்தது.

ஓவ்வொரு தடவையும் மனம் திறந்து சொல்லிவிடுவோமா என்று நினைக்கும் போதெல்லாம், மற்றவர் தவறாக எடுத்துக் கொள்வாரோ, தூயநட்பு இதனால் உடைந்து விடுமோ என்ற பயத்தில் இருவருமே மௌனம் காத்தனர்.

இனியும் தாங்கமுடியாது என்ற நிலையில், அவள்தான் துணிந்து அவனிடம் கேட்டாள்,

‘பிரதீப், கேட்கிறேனே என்று தப்பாய் எடுத்திடாதே, உனக்கு கேர்ள்பிரண்ட் இருக்கா?’

அவன் புன்சிரிப்பு ஒன்றை உதிர்த்து விட்டு ‘ஆமா’ என்று தலை அசைத்தான்.

அவளுக்கு அதிர்ச்சியாக இருந்தாலும், அதை வெளியே காட்டிக் கொள்ளாமல் மென்று விழுங்கினாள். யார் அந்த அதிர்ஸ்டசாலி என்பதை அறிவதில் ஆர்வம் காட்டினாள்.

‘உன்னோட உள்ளத்தைக் கவர்ந்தவளின் போட்டோ இருந்தால் கொஞ்சம் கொடேன், பார்க்கலாம்!’ என்றாள்.

‘எல்லோரும் தங்க காதலியை நெஞ்சிலே சுமப்பாங்க, நான் மட்டும் வித்தியாசமா கண்ணுக்குள்ளே சுமக்கிறேன்’ என்றான்.

‘போட்டோவைக் கேட்டால் கண்ணுக்குள் சுமக்கிறன் என்கிறாய், விரும்பினால் காட்டு இல்லை என்றால் வேண்டாம்’ என்றாள் பொய்யான கோபத்தோடு.

‘சரி, சரி கோபப்படாதே, இங்கேபார்’ என்று தான் அணிந்திருந்த பாதரசம் பூசப்பட்ட தனது கூலிங்கிளாசைச் சுட்டிக்காட்டினான்.

எதிரே நின்ற அவளது ‘அழகான முகம்’ அதிலே பளீச்சென்று தெரிந்தது.

குரு அரவிந்தன் குரு அரவிந்தன் கனடாவில் வாழ்ந்து வரும் தமிழ் எழுத்தாளர்களில் ஒருவர். சிறுகதை, புதினம் எழுதுவதுடன் கனடாவில் இருந்து வெளிவரும் தமிழ்த் திரைப்படங்களுக்கு திரைக்கதை, வசனங்கள், மற்றும் நாடகங்களும் எழுதி வருகிறார். வாழ்க்கைக் குறிப்பு இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். தந்தை பெயர் அருணசலம் குருநாதபிள்ளை. காங்கேசன்துறை நடேசுவரா கல்லூரி, தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரி ஆகியவற்றின் பழைய மாணவர். எழுத்துத் துறையில் இவரின் சிறுகதைகள், தென்னிந்திய சஞ்சிகைகளான ஆனந்த…மேலும் படிக்க...

1 thought on “கண்ணில் தெரியுது காதல் – ஒரு பக்க கதை

  1. கண்ணில் தெரியுது காதல் என்ற ஒரு பக்கச் சிறுகதையில், காதலியின் சந்தேகத்தையும் கோபத்தைச் சொல்லியும்;
    காதலனின் கண்களில் பளீரென்று தன் முகத்தையேக் கண்டபோது அவளுக்கு ஏற்பட்டிருக்கும் இன்ப அதிர்ச்சியைச் சொல்லாமல் சொல்லியும் வாசகர்களை மகிழ்வித்த ஒரு பக்கக் கதை.
    வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்
    ஜூனியர் தேஜ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *