கதை வகை: ஒரு பக்கக் கதை
தின/வார இதழ்: குமுதம்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 6,998 
 
 

பக்கத்து வீட்டுக்கு போய்த் திரும்பிய தன் மனைவி உமாவை கவனித்தான் தினேஷ்.

போகும்போது துள்ளலுடன் போனவள் இப்போ வரும்போது தலையை தொங்க போட்டு கொண்டு ஏன் வருகிறாள்?

உமா உனக்கு என்ன ஆச்சு! போறப்போ சந்தோசமா போனே இப்ப ஏன் இப்படி வர்ற?

நம்ம வீட்ல வேலை பார்த்த பொன்னம்மாவை அவ சமையல் சரியில்லைன்னு போக சொல்லிட்டோம்ல

ஆமா அதுக்கென்ன?

பக்கத்து வீட்டு கீதா ஒரு சமையல்காரி வேணும்னு சொன்னா அந்த பொன்னம்மாவை அங்க அனுப்பி அவஸ்தைபட வைப்போம்னு நினைச்சேன்.

பொன்னம்மாவை அவங்க வீட்டு சமையல் வேலையில் மாட்டி வச்சேன். அவ சமையல்லே அந்த கீதா என்ன பாடு படுறான்னு பாக்கத்தான் போனேன். ஆனா அந்த பொன்னம்மா சமையல் சூப்பரா இருக்குன்னு எனக்கு தேங்க்ஸ் சொல்றா. அது தான் எனக்கு புரியலே வாட்டத்துடன் சொன்னாள் உமா.

தினேஷ் புரிதலுடன் சொன்னான்.

உமா உனக்கு பிடிக்கிற சேலை அவளுக்கு பிடிக்காது. ஒவ்வொருத்தர் டேஸ்டும் ஒவ்வொரு மாதிரி இருக்கும்.

நம்ம வீட்லே பொன்னம்மா சமையல் எடுபடவே அவங்களுக்கு அவ சமையல் புடிச்சு போச்சு. உன் திட்டம் பலிக்கலே!

மறு பேச்சு பேசாமல் உள்ளே சென்றாள் உமா.

– கு.அருணாசலம் (செப்டம்பர் 2013)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *