ஹாரி பாட்டரும் பாதாள அறை ரகசியங்களும்






(2013ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம் 9-10 | அத்தியாயம் 11-12 | அத்தியாயம் 13-14
11. ஒற்றைக்கு ஒற்றைச் சண்டை

ஞாயிற்றுக்கிழமை காலையில் ஹாரி கண்விழித்தபோது, தான் படுத்திருந்த மருத்துவமனை அறை குளிர்காலச் சூரியனின் ஒளியில் குளித்துக் கொண்டிருந்ததைக் கண்டான். அவனது கையில் எலும்புகள் முழுவதுமாக வளர்ந்திருந்தாலும், அவனது கை மட்டும் கொஞ்சம் விறைப்பாகவே இருந்தது. அவன் வேகமாக எழுந்து உட்கார்ந்து, காலினின் படுக்கையை எட்டிப் பார்த்தான். ஆனால் முந்தைய இரவில் அவன் உடை மாற்றுவதற்காக அவனது கட்டிலைச் சுற்றித் தொங்கவிடப்பட்டிருந்த திரைச்சீலைகளைப்போலவே காலினின் படுக்கையைச் சுற்றியும் உயரமான திரைச்சீலைகள் போடப்பட்டிருந்தால் அவனது படுக்கை மற்றவர்களுடைய பார்வையிலிருந்து மறைந்திருந்தது. அவன் விழித்துவிட்டதைப் பார்த்த மேடம் பாம்ஃபிரே, காலை உணவு அடங்கிய ஒரு தட்டை மிகுந்த சுறுசுறுப்புடன் அவனுக்காக எடுத்து வந்தார். பிறகு அவனது கையையும் விரல்களையும் மடித்து நீட்டிவிடத் துவங்கினார்.
“ஹாரி, எல்லாம் சரியாக இருக்கிறது,” என்று அவர் கூறினார். அவன் தனது இடது கையால் கஞ்சியை ஏடாகூடமாகக் குடித்தான். “நீ சாப்பிட்டு முடித்தவுடன் இங்கிருந்து போகலாம்.”
ஹாரி தன்னால் முடிந்த அளவுக்கு விரைவாக உடை மாற்றிக் கொண்டு, காலினைப் பற்றியும் டாபியைப் பற்றியும் ரானிடமும் ஹெர்மயனியிடமும் கூறுவதற்காக கிரிஃபின்டார் கோபுரத்திற்கு விரைந்தான். ஆனால் அவர்கள் அங்கு இருக்கவில்லை. அவர்கள் எங்கே போயிருக்கக்கூடும் என்று வியந்து கொண்டே அவன் அவர்களைத் தேடினான். தனக்கு எலும்பு மீண்டும் வளர்ந்துவிட்டதா இல்லையா என்ற கவலையின்றி அவர்கள் இருவரும் எங்கோ போய்விட்டது அவனது மனத்தை லேசாகக் காயப்படுத்தியது.
ஹாரி நூலகத்தைக் கடந்து கொண்டிருந்தபோது, பெர்சி அங்கிருந்து வெளியேறிக் கொண்டிருந்ததைப் பார்த்தான். கடந்த முறை அவர்கள் இருவரும் சந்தித்துக் கொண்டபோது இருந்ததைவிட, பெர்சி இப்போது அதிக உற்சாகமாகக் காணப்பட்டான்.
“ஹலோ, ஹாரி!” என்று அவன் கூறினான். “நேற்று உன் ஆட்டம் அற்புதம்! உண்மையிலேயே மிக அபாரமான ஆட்டம். கிரிஃபின்டார் அணி, அணிகளுக்கு இடையேயான கோப்பையைக் கைப்பற்றுவதில் முன்னணி இடத்தில் இருக்கிறது. உனக்கு ஐம்பது புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளன.”
“பெர்சி, நீ ரானையும் ஹெர்மயனியையும் பார்த்தாயா?” என்று ஹாரி கேட்டான்.
“இல்லை. நான் பார்க்கவில்லை,” என்று பெர்சி பதிலளித்தான். “ரான் வேறு ஏதாவது மாணவியரின் குளியலறைக்குள் புகுந்திருக்க மாட்டான் என்று நான் நம்புகிறேன்
ஹாரி வலுக்கட்டாயமாக ஒரு சிரிப்பை உதிர்த்தான். பெர்சி தன் பார்வையிலிருந்து மறைந்தவுடன், ஹாரி நேராக முனகல் மர்ட்டிலுடைய குளியலறைக்கு விரைந்தான். ரானும் ஹெர்மயனியும் அங்கு மீண்டும் எதற்காகப் போக வேண்டும் என்று அவனுக்குப் புரிபடவில்லை என்றாலும்கூட, வெளியே ஃபில்ச்சோ அல்லது வேறு மாணவ அணித் தலைவனோ இல்லை என்பதை உறுதி ஏதேனும் செய்து கொண்ட பிறகு அவன் அதன் கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தான். மூடப்பட்டிருந்த தடுப்பு அறை ஒன்றிலிருந்து அவர்களுடைய குரல்கள் வந்தன.
ஹாரி தனக்குப் பின்னால் கதவைச் சாத்திவிட்டு, “நான்தான்,” என்று அறிவித்தான். அந்தத் தடுப்பு அறைக்குள்ளிருந்து ‘கிளங்’ என்று ஒரு சத்தமும், தண்ணீர் பளாரென்று கொட்டிய சத்தமும், யாரோ மூச்சுத் திணறும் சத்தமும் கேட்டது. அங்கிருந்த ஒரு துளை வழியாக ஹெர்மயனியின் கண்கள் எட்டிப் பார்த்தன.
“ஹாரி!” என்று அவள் கூச்சலிட்டாள். “நீ எங்களை நிலை உள்ளே வா! உன் கை குலைந்து போக வைத்துவிட்டாய். வா – எப்படி இருக்கிறது?”
“பரவாயில்லை,” என்று கூறியவாறு ஹாரி அந்த அறைக்குள் தன்னைத் திணித்துக் கொண்டான். அங்கிருந்த தொட்டியின்மீது ஒரு பழைய கொப்பரை இருந்தது. அதன் விளிம்பிலிருந்து வெளிப்பட்டப் படபடவென்ற சத்தம் அதனடியில் நெருப்பு மூட்டப்பட்டிருந்ததை ஹாரிக்கு அறிவித்தது. தண்ணீரால் அணையாத, எந்த இடத்திற்கு வேண்டுமானாலும் எடுத்துச் செல்லப்படக்கூடிய நெருப்பை உருவாக்குவது ஹெர்மயனிக்குக் கை வந்த கலை.
ஹாரி மிகவும் சிரமப்பட்டு அந்த அறையின் கதவை மூடிக் கொண்டிருந்தபோது, “நாங்கள் உன்னைப் பார்க்க வந்தோம். அப்புறம் பலகூட்டுச்சாறு மாயத் திரவத் தயாரிப்பைத் துவக்கலாம் என்று முடிவு செய்தோம்,” என்று ரான் விளக்கினான். “இருப்பதிலேயே மிகவும் பாதுகாப்பான இடம் இதுதான் என்று நாங்கள் முடிவு கட்டினோம்.”
காலினைப் பற்றி ஹாரி சொல்லத் துவங்கியதும், ஹெர்மயனி அவனை இடைமறித்துப் பேசினாள். “எங்களுக்கு ஏற்கனவே தெரியும். இன்று காலையில், பேராசிரியர் மெக்கானகல், பேராசிரியர் ஃபிளிட்விக்கிடம் கூறிக் கொண்டிருந்ததை நாங்கள் கேட்டோம். அதனால்தான் இதை உடனடியாகத் தயாரிக்க நாங்கள் முடிவு செய்தோம்”.
“நாம் மால்ஃபாயிடமிருந்து எவ்வளவு விரைவாக ஒப்புதல் வாக்குமூலத்தை வாங்குகிறோமோ அவ்வளவு நல்லது;” என்று ரான் குமுறினான். “நான் என்ன நினைக்கிறேன் தெரியுமா? குவிடிச் போட்டி முடிந்தவுடன் மாலஃபாய் பயங்கர மோசமான மனநிலையில் இருந்தான். அதைக் காலின்மீது காட்டிவிட்டான அவ்வளவுதான்.”
ஹெர்மயனி முடிச்சுப் புற்களை ஒடித்து அந்த மாயத் திரவத்தில் போட்டுக் கொண்டிருந்ததைப் பார்த்தவாறு, ஹாரி, “இன்னொரு விஷயமும் இருக்கிறது,” என்று கூறினான். “நேற்று அர்த்த ராத்திரியில் டாபி என்னை வந்து பார்த்தது.”
ரானும் ஹெர்மயனியும் ஆச்சரியத்துடன் ஏறிட்டுப் பார்த்தனர். டாபி தன்னிடம் சொன்னது சொல்லாதது எல்லாவற்றையும் ஹாரி அவர்களிடம் கூறினான். ரானும் ஹெர்மயனியும் வாயைப் பிளந்து கொண்டு அதைக் கேட்டுக் கொண்டிருந்தனர்.
“என்ன! ரகசியங்கள் அடங்கிய அறை இதற்கு முன்பு திறக்கப்பட்டுள்ளதா?” என்று ஹெர்மயனி கேட்டாள்.
“இப்போது எல்லாம் கனகச்சிதமாகப் பொருந்துகிறது.” என்று ரான் வெற்றிக் குரலில் கூறினான். “லூசியஸ் மால்ஃபாய் இங்கு படித்துக் கொண்டிருந்தபோது அந்தப் பாதாள அறையைத திறந்திருக்க வேண்டும். அதை எப்படிச் செய்ய வேண்டும் என்று இப்போது அவர் தன் மகனுக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறார். வெளிப்படை. அங்கு எந்த மாதிரி ராட்சஸ விலங்கு இருக்கிறது என்று டாபி கூறியிருந்தால் நன்றாக இருந்திருக்கும், அந்த விலங்கு யாருடைய கண்களிலும் படாமல் எப்படி இப்பள்ளியில் வளைய வந்து கொண்டிருக்கிறது என்பதுதான் எனக்குப் புரியவில்லை.”
ஹெர்மயனி, கொப்பரைக்குள் போடப்பட்டிருந்த அட்டைப் பூச்சிகளைக் கிண்டிவிட்டவாறே, “ஒருவேளை அது பிறர் கண்களுக்குப் புலப்படாதவாறு தன்னை மறைத்துக் கொண்டிருக்கக்கூடும்,” என்று கூறினாள். “அல்லது தன்னை வேறு உருவத்திற்கு – ஒரு மெய்க்காப்புக் கவசச் சிலையாகவோ அல்லது வேறு ஏதாவதாகவோ – மாற்றிக் கொள்ளக்கூடிய சக்தி படைத்ததாக அது இருக்கலாம். நான் ‘கோரைப்பல் ராட்சஸப் பச்சோந்திப் பேயை’ப் பற்றிப் படித்திருக்கிறேன்.”
“ஹெர்மயனி, நீ கண்ட கண்டக் கன்றாவிப் புத்தகங்களையெல்லாம் படிக்கிறாய்,” என்று ரான் கூறினான். அவன் கொப்பரையினுள் அட்டைப் பூச்சிகளுக்கு மேலே லேஸ் இறகுப் பூச்சிகளைக் கொட்டிவிட்டு, காலியான அந்தப் பையைக் கசக்கினான்.
பின் அவன் ஹாரியை நேருக்கு நேராகப் பார்த்தபடி, “அப்படியானால், டாபி நம்மை ரயிலில் ஏறவிடாமல் தடுத்ததுடன் உன் கையையும் முறித்திருக்கிறது. ஹாரி, நான் உன்னிடம் ஒன்று சொல்லலாமா? அந்த டாபி உன் உயிரைப் பாதுகாக்க முனைவதை நிறுத்தாவிட்டால், வெகு சீக்கிரமே உன்னைக் காலி பண்ணிவிடப் போகிறது,” என்றான்.
காலின் தாக்கப்பட்டு மருத்துவமனையில் ஒரு நடைபிணமாகக் கிடந்தான் என்ற செய்தி திங்கட்கிழமை காலைக்குள் பள்ளியெங்கும் காட்டுத் தீபோலப் பரவியது. எல்லா இடங்களிலும் வதந்தியும் சந்தேகமும் தலைவிரித்தாடிக் கொண்டிருந்தன. இப்போது, முதல் வருட மாணவர்கள், தனியாகப் போனால் தாங்கள் தாக்கப்படலாம் என்று பயந்து எப்போதும் ஒரு கும்பலாகவே கோட்டைக்குள் வளைய வந்து கொண்டிருந்தனர்.
வசியப் பாட வகுப்பில் காலினுக்குப் பக்கத்தில் உட்கார்ந்த ஜின்னி மிகவும் மனமுடைந்து போயிருந்தாள். ஆனால் அவளைக் குஷிப்படுத்த முனைந்த ஃபிரெட்டும் ஜார்ஜும் அதை முட்டாளத்தனமாகச் செய்து கொண்டிருந்ததாக ஹாரி நினைத்தான். அவர்கள் இருவரும் ஒருவர் மாற்றி ஒருவராக, விலங்குகளின் தோலை அணிந்து கொண்டோ அல்லது உடம்பு முழுக்கக் கட்டிகள் வந்திருந்ததுபோல வேஷம் போட்டுக் கொண்டோ அவள் முன்னால் திடுதிடுப்பென வந்து குதித்தனர். அவர்கள் அதை நிறுத்தாவிட்டால், தங்களுடைய முட்டாள்தனமான செயல்களின் மூலம் அவர்கள் ஜின்னிக்கு துர்க்கனவுகளை ஏற்படுத்திக் கொண்டிருந்ததாகத் தங்களது தாயாருக்குத் தான் ஒரு கடிதம் எழுதப் போவதாகப் பெர்சி அவர்களை மிரட்டிய பிறகுதான் அவர்கள் அதை நிறுத்தினர்.
இதற்கிடையே, ஆசிரியர்களுக்குத் தெரியாமல், மந்திரத் தாயத்துகள், காப்புகள் போன்றவற்றின் விற்பனை ஹாக்வார்ட்ஸ் பள்ளியில் கொடிகட்டிப் பறந்து கொண்டிருந்தது. குடலைப் பிடுங்கும் நாற்றம் வீசிய ஒரு பெரிய பச்சை நிற வெங்காயம், கூராக இருந்த ஓர் ஊதா நிறப் படிகம், அழுகிப் போயிருந்த ‘நியூட்’ பல்லி வால் ஆகியவற்றை நெவில் வாங்கினான். அப்போது அவனது சக கிரிஃபின்டார் மாணவர்கள், அவன் தூய ரத்தப் பரம்பரையைச் சேர்ந்தவன் என்பதால் அவன் தாக்கப்படுவதற்கான வாய்ப்பு மிகக் குறைவு என்பதை அவனுக்குச் சுட்டிக்காட்டினர்.
“ஆனால் ஃபில்ச்தான் முதலில் குறி வைக்கப்பட்டார்,” என்று நெவில் அம்மாணவர்களிடம் கூறினான். அவனது வட்ட வடிவமான முகத்தில் பயம் தாண்டவமாடிக் கொண்டிருந்தது. “நான் கிட்டத்தட்ட ஒரு ஸ்குயிப் என்பதை எல்லோரும் அறிவார்கள்.”
டிசம்பர் மாதத்தின் இரண்டாவது வாரத்தில், வழக்கம்போல, பேராசிரியர் மெக்கானகல், கிறிஸ்துமஸ் விடுமுறைக்குப் பள்ளியில் யார் யார் தங்கவிருந்தார்கள் என்று கணக்கெடுத்துக் கொண்டிருந்தார். ஹாரி, ரான், ஹெர்மயனி ஆகிய மூவரும் தங்களுடைய பெயர்களைப் பதிவு செய்து கொண்டனர். மால்ஃபாயும் பள்ளியில் தங்கப் போவதாக அவர்கள் கேள்விப்பட்டிருந்தனர். அது அவர்களுக்கு சந்தேகத்தைத் தோற்றுவித்தது. ஆனால் பலகூட்டுச்சாறு மாயத் திரவத்தைப் பயன்படுத்தி மால்ஃபாயிடம் இருந்து ஒப்புதல் வாக்குமூலத்தை வாங்குவதற்கு அந்த விடுமுறை ஓர் அருமையான சந்தர்ப்பமாக இருக்கும் என்பதை அவர்கள் உணர்ந்தனர்.
துரதிர்ஷ்டவசமாக, அந்த மாயத் திரவத்தைக் காய்ச்சும் வேலை பாதிதான் முடிந்திருந்தது. இரட்டைக் கொம்பு விலங்கின் கொம்புப் பொடியும் பூம்ஸ்லேங் பாம்புச்சட்டைப் பொடியும் அவர்களுக்கு இன்னும் கிடைத்திருக்கவில்லை. அது ஸ்னேப்பின் தனிப்பட்ட, சேகரிப்பில் மட்டும்தான் இருந்தது. ஸ்னேப்பின் அலுவலகத்திலிருந்து திருடி அவரிடம் மாட்டிக் கொள்வதைவிட, ஸ்லிதரினின் ராட்சை விலங்கை எதிர்கொள்வதே மேலாக இருக்கும் என்பது ஹாரியின் தனிப்பட்ட அபிப்பிராயமாக இருந்தது.
ஒரு வியாழக்கிழமை மதியம் நடைபெற்ற இரட்டை மாயத் திரவ வகுப்பு முடிவடையும் நிலையில் இருந்தபோது, ஹெர்மயனி, “நமக்குத் தேவையெல்லாம் ஒரே ஒரு திசை திருப்பும் நிகழ்வு மாத்திரம்தான்.” என்று கூறினாள். “அச்சமயத்தில் நம்மில் ஒருவர் அவரது அலுவலகத்தில் திருட்டுத்தனமாக நுழைந்து நமக்கு வேண்டியதை எடுத்துக் கொண்டுவிடலாம்.”
ஹாரியும் ரானும் அவளைப் பதற்றத்துடன் பார்த்துக் கொண்டிருந்தனர்.
ஹெர்மயனி மிகச் சாதாரணமான குரலில், “திருடும் பொறுப்பை நான் எடுத்துக் கொள்கிறேன்.” என்று கூறினாள். “இன்னொரு முறை ஏதாவது ஒரு பிரச்சனையில் நீங்கள் இருவரும் மாட்டிக் கொண்டால், நீங்கள் காலி. ஆனால் இதுவரை என்னுடைய செயல்பாடுகள் அப்பழுக்கற்றவையாக இருந்து வந்துள்ளன. நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், ஸ்னேப்பை ஓர் ஐந்து நிமிடம் படுசுறுசுறுப்பாக வைத்துக் கொள்ளக்கூடிய அளவுக்கு ஏதேனும் ஒரு ரகளையில் நீங்கள் ஈடுபட வேண்டும், அவ்வளவுதான்!”
ஹாரி பலவீனமாகப் புன்னகைத்தான். ஸ்னேப்பின் வகுப்பில் வேண்டுமென்றே ரகளை செய்வது என்பது, தூங்கும் டிராகளின் கண்களை நோண்டுவது எந்த அளவுக்குப் பாதுகாப்பானதோ அளவு பாதுகாப்பானது,
மாயத் திரவ வகுப்புகள் ஒரு பெரிய நிலவறையில் நடைபெற்று வந்தன. அந்த வியாழக்கிழமை மதியநேர வகுப்பும் வழக்கமான பாணியில்தான் சென்று கொண்டிருந்தது. கொதித்துக் கொண்டிருந்த இருபது கொப்பரைகள் மர பெஞ்சுகளுக்கு இடையே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. அந்த பெஞ்சுகளின்மீது பித்தளைத் தராசுகளும் இடுபொருட்கள் அடங்கிய ஜாடிகளும் இருந்தன. வகுப்பின் புகைமண்டலத்திற்கு நடுவே வேட்டை நாய்போல ஸ்னேப் வளைய வந்து கொண்டிருந்தார். அவ்வப்போது கிரிஃபின்டார் அணியினரின் வேலைகளைப் பற்றிச் சவுக்கடி வார்த்தைகளை அவர் அள்ளி வீசிக் கொண்டிருந்தார். அப்போதெல்லாம் ஸ்லிதரின் அணியினர் உள்ளூர நகைத்தனர். ஸ்நோப்பிற்கு மிகவும் பிடித்தமான மாணவனான மால்ஃபாய், உப்பல் மீனின் கண்களை ரானின்மீதும் ஹாரியின்மீதும் எறிந்து கொண்டிருந்தான். ஹாரியும் ரானும் பதிலுக்கு எதையாவது எறிந்து செய்தால், ‘இது நியாயமல்ல’ என்ற வார்த்தைகளைக் கூறி முடிப்பதற்கு ஆகும் நேரத்தைவிடக் குறைவான நேரத்திற்குள் அவர்கள்மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுவிடும் என்ற தைரியம்தான் மால்ஃபாயை அவ்வாறு செய்யத் தூண்டியது.
ஹாரியின் உப்பல் மாயத் திரவம் மிகவும் நீர்த்துப் போயிருந்தது. ஆனால் அவனது கவனம் அதைவிட முக்கியமான விஷயங்களில் லயித்திருந்தது. அவன் ஹெர்மயனியின் சமிக்கைக்காகக் காத்திருந்தான். தனது நீர்த்துப் போன மாயத் திரவத்தைப் பார்த்து ஸ்னேப் பரிகாசமாக அள்ளி வீசிவிட்டுச் சென்ற குத்தல் வார்த்தைகளை அவன் காதில் வாங்கிக் கொள்ளவே இல்லை. ஸ்னேப் அவனிடமிருந்து திரும்பி, நெவிலை அதட்டி உருட்டுவதற்காக அவனருகே சென்றபோது, ஹெர்மயனி ஹாரியைப் பார்த்துத் தலையசைத்தாள்.
ஹாரி வேகமாகத் தன்னுடைய கொப்பரைக்குப் பின்னால் குனிந்து, தனது பாக்கெட்டில் இருந்து ஃபிலிபஸ்டர் வாணவெடிகளில் ஒன்றை வெளியே எடுத்துத் தன்னுடைய மந்திரக்கோலால் அதை லேசாகத் தேய்த்தான். அந்த வெடி பற்றிக் கொண்டு சீறத் துவங்கியது. தனக்கு ஒருசில வினாடிகளே இருந்தன என்பதை அறிந்திருந்த ஹாரி, தன்னை நேராக்கிக் கொண்டு, குறி பார்த்து அதை உயரே எறிந்தான். அது நேராக காயலின் கொப்பரைக்குள் கச்சிதமாகப் போய் விழுந்தது.
காயலின் கொப்பரை வெடித்துச் சிதறி மொத்த வகுப்பையும் குளிப்பாட்டியது. உப்பல் மாயத் திரவம் தங்கள்மீது தெறித்ததால், மாணவர்கள் பெரும் கூச்சலிட்டனர். மால்ஃபாயின் முகம் முழுவதும் அது தெறித்திருந்ததால், அவனது மூக்கு ஒரு பலூன் மாதிரி வீங்கத் துவங்கியது. காயல் தனது கைகளால் தனது கண்களைப் பொத்தியபடி தாறுமாறாக அங்குமிங்கும் ஓடிக் கொண்டிருந்தான். அவை ஒரு சாப்பாட்டுத் தட்டு அளவுக்கு உப்பியிருந்தன. ஸ்னேப் அமைதியை நிலை நிறுத்தவும், என்ன நடந்தது என்பதைக் கண்டுபிடிக்கவும் முயன்று கொண்டிருந்தார். இந்த அமளி துமளிக்கிடையில் ஹெர்மயனி வாசல் வழியாக அங்கிருந்து நழுவியதை ஹாரி கவனித்தான்.
“அமைதி! அமைதி!” என்று ஸ்னேப் கர்ஜித்துக் கொண்டிருந்தார். “யார்மீதெல்லாம் மாயத் திரவம் தெறித்திருக்கிறதோ அவர்கள் எல்லோரும் இங்கு வந்து முறிமருந்தைப் பருகிக் கொள்ளுங்கள்! இதை யார் செய்தது என்பதை நான் கண்டுபிடிக்கும்போது…”
இப்போது மால்ஃபாயின் மூக்கு ஒரு சிறிய முலாம்பழம் அளவுக்கு உப்பியிருந்ததால், அதன் எடை தாங்காமல் அவனது முகம் முன்னால் சாய்ந்திருந்தது. அவன் அக்கோலத்தில் ஸ்னேப்பின் மேசையை நோக்கி வேகவேகமாக முன்னால் ஓடியதைப் பார்த்த ஹாரி தனது சிரிப்பை அடக்க மிகவும் சிரமப்பட்டான். இருந்த பாதி மாணவர்கள் கும்பலாக ஸ்னேப்பின் மேசையருமே முண்டியடித்துக் கொண்டு சென்றனர். சிலருடைய கைகள் பெரிய கட்டைகளைப்போல வீங்கியிருந்தன; சிலருடைய உதடுகள் மிகப் பெரிதாக வீங்கியிருந்ததால் அவர்கள் பேச முடியாமல் தவித்தனர். அப்போது ஹெர்மயனி மீண்டும் வகுப்பறைக்குள் புகுந்து கொண்டதை ஹாரி பார்த்தான். அவளுடைய அங்கியின் முன்புறம் நன்றாகப் புடைத்திருந்தது.
எல்லோரும் முறிமருந்துத் திரவத்தை வாங்கிக் குடித்தவுடன் அவர்களுடைய விதவிதமான உப்பல்கள் தணிந்தன. ஸ்னேப் காயலின் கொப்பரைக்குள் எட்டிப் பார்த்து, அதற்குள் வளைந்து நெளிந்து கிடந்த வெடியின் மிச்சங்களை வெளியே எடுத்தார். உடனே அங்கிருந்தவர்கள் தங்களுக்குள் பரபரப்பாகப் பேசிக் கொண்டனர்.
“இதை யார் எறிந்தார்கள் என்பதை நான் என்றாவது கண்டுபிடித்தால்… அந்த நபரை நான் இப்பள்ளியை விட்டுக் கண்டிப்பாக வெளியேற்றாமல் விடமாட்டேன்,” என்று ஸ்னேப் கண்டிப்பான குரலில் கூறினார்.
வகுப்பில் நிகழ்ந்து கொண்டிருந்த சம்பவத்திற்கும் தனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பது போலவும், அங்கு நிலவிய அமன் துமளி குறித்துத் தான் குழம்பிப் போயிருந்தது போலவும் ஒரு தோற்றத்தை வெளிக்காட்ட ஹாரி கடுமையாக முயற்சித்தான். ஸ்னேப் அவனையே பார்த்துக் கொண்டிருந்தார். பத்து நிமிடங்கள் கழித்து ஒலித்தப் பள்ளி மணியை அவன் ஆவலுடன் வரவேற்றான்.
அவர்கள் வேகவேகமாக முனகல் மாட்டிலின் குளியலறைக்குள் சென்று கொண்டிருந்தபோது, ஹாரி, “அது நான்தான் என்று அவருக்குத் தெரிந்துவிட்டது,” என்று கூறினான். “நான் சத்தியமே செய்வேன்!”
ஹெர்மயனி புதிய இடுபொருட்களை அந்தக் கொப்பரைக்குள் தூக்கிப் போட்டுவிட்டு, பதற்றத்துடன் அதைக் கிளறிவிடத் துவங்கினாள்.
“இது இன்னும் பதினைந்து நாட்களில் தயாராகிவிடும்,” என்று அவள் சந்தோஷமாகக் கூறினாள்.
ஹாரிக்கு உத்வேகம் அளிக்கும் விதமாக, ரான், “அது நீதான் என்று ஸ்னேப்பால் நிரூபிக்க முடியாது,” என்று கூறினான். “அவரால் ஒன்றும் கிழித்துவிட முடியாது.”
கொப்பரையில் இருந்த மாயத் திரவம் நுரையும் குமிழுமாகக் கொதித்துக் கொண்டிருந்தபோது, ஹாரி, “ஸ்னேப்பைப் பற்றி நான் நன்றாகவே அறிவேன். ஏதோ எங்கோ இடறுகிறது,” என்று கூறினான்.
ஒரு வாரம் கழித்து, ஹாரி, ரான், ஹெர்மயனி ஆகிய மூவரும் வரவேற்பறையின் குறுக்காக நடந்து கொண்டிருந்தபோது, அங்கிருந்த அறிவிப்புப் பலகையில் அப்போதுதான் குத்தப்பட்டிருந்த ஒரு தோல் காகிதத்தைப் படித்தபடி ஒரு சிறு கும்பல் அப்பலகையின் அருகே குழுமியிருந்ததை அவர்கள் கண்டனர். உற்சாகமாகக் காட்சியளித்த சீமஸும் டீன் தாமஸும் தங்கள் பக்கம் வருமாறு அவர்களுக்குச் சாடை காட்டினர்.
“இங்கு ‘ஒற்றைக்கு ஒற்றை மோதல் சங்கம்’ ஒன்றைத் துவக்கப் போகிறார்கள்,” என்று சீமஸ் கூறினான். “இன்று இரவுதான் முதல் கூட்டம்! ஒற்றைக்கு ஒற்றைச் சண்டைப் பயிற்சிகளை எடுத்துக் கொள்ள நான் தயங்க மாட்டேன். இக்காலகட்டத்தில் கண்டிப்பாக அது உபயோகமாக இருக்கும் . . .”
“ஸ்லிதரினின் ராட்சஸ விலங்குடன் நம்மால் ஒற்றைக்கு ஒற்றையாகச் சண்டை போட முடியும் என்று நீ நினைக்கிறாயா?” என்று ரான் கேட்டான். ஆனால் அவனும் அந்த அறிவிப்பை ஆவலுடன் படித்தான்.
அவர்கள் மூவரும் இரவு உணவருந்தச் சென்று கொண்டிருந்தபோது, ரான் ஹாரியிடம், “இது உபயோகமாக இருக்கக்கூடும்,” என்று கூறினான். “நாமும் போகலாமா?”
ஹாரியும் ஹெர்மயனியும் அதற்கு முழு ஆதரவு அளித்தனர். அதனால் அன்றிரவு எட்டு மணிக்கு அவர்கள் மீண்டும் பேரரங்கிற்கு விரைந்தனர். அங்கிருந்த நீண்ட மேசைகள் அனைத்தும் மாயமாய் மறைந்துவிட்டிருந்தன. ஒரு சுவரோரமாக ஒரு தங்க மேடை அமைக்கப்பட்டிருந்தது. அதற்கு மேலே தொங்கிக் கொண்டிருந்த ஆயிரக்கணக்கான மெழுவர்த்திகளின் வெளிச்சத்தில் அது தகதகத்துக் கொண்டிருந்தது. மேற்கூரை வழக்கம்போலக் கருப்பு வெல்வெட் அங்கு பள்ளியுமே மொத்தப் நிறத்தில் இருந்தது. குழுமியிருந்ததுபோலத் தோன்றியது. அவர்கள் எல்லோரும் தங்கள் கைகளில் மந்திரக்கோல்களை வைத்திருந்தனர். அவர்களிடம் உற்சாகம் கரைபுரண்டு ஓடிக் கொண்டிருந்தது.
ரானும் ஹாரியும் ஹெர்மயனியும் சலசலவெனப் பேசிக் கொண்டிருந்த கூட்டத்தை நெருங்கிக் கொண்டிருந்தபோது, ஹெர்மயனி, “நமக்கு யார் கற்றுக் கொடுக்கப் போகிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ள நான் மிகவும் ஆவலாக இருக்கிறேன்,” என்று கூறினாள். “இளைஞராக இருந்தபோது ஒற்றைக்கு ஒற்றைச் சண்டையில் பேராசிரியர் ஃபிளிட்விக் வெற்றி வீரராகத் திகழ்ந்தார் என்று யாரோ என்னிடம் கூறினார்கள். ஒருவேளை அவர்தான் கற்றுக் கொடுக்கப் போகிறாரோ என்னவோ!”
“இது நான் நினைக்கும் ஒருவராக இல்லாதவரை நல்லது என்று ஹாரி தொடங்கினான். ஆனால் ஒரு பெருமூச்சுடன் அவன் அதை நிறுத்த வேண்டியதாகிவிட்டது. லாக்ஹார்ட், கருஞ்சிவப்பு நிற அங்கி ஜொலிக்க மேடையில் ஏறிக் கொண்டிருந்தார். அவருடன் வந்தது வேறு யாருமல்ல, ஸ்னேப்தான். ஸ்னேப் தனது வழக்கமான கருப்பு நிற ஆடையையே அணிந்திருந்தார்.
அமைதி காக்குமாறு எல்லோருக்கும் தன் கையை உயர்த்திக் சமிக்கைக் காட்டிவிட்டு, லாக்ஹார்ட், “எல்லோரும் மேடைக்கு அருகே வாருங்கள்! முன்னே வாருங்கள்! எல்லோராலும் என்னைப் பார்க்க முடிகிறதா? எல்லோருக்கும் நான் பேசுவது கேட்கிறதா? பிரமாதம்!” என்று கூறினார்.
“ஒரு சிறிய அளவில் ‘ஒற்றைக்கு ஒற்றை மோதல் சங்கம்’ ஒன்றை நம் பள்ளியில் துவக்குவதற்குப் பேராசிரியர் டம்பிள்டோர் எனக்கு அனுமதி வழங்கியுள்ளார். நான் எண்ணற்றச் சந்தர்ப்பங்களில் செய்துள்ளதுபோல நீங்களும் உங்களைத் தற்காத்துக் கொள்ள இச்சங்கம் உங்களுக்குப் பயிற்சி அளிக்கும். நான் பல சூழ்நிலைகளில் எவ்வாறு என்னைத் தற்காத்துக் கொண்டேன் என்பது பற்றிய விபரங்கள் என்னுடைய புத்தகப் படைப்புகளில் இடம்பெற்றுள்ளன”
லாக்ஹார்ட் ஒரு பெரிய புன்னகையைத் தன் உதடுகளில் பேராசிரியர் ஸ்னேப்பை உங்களுக்கு அறிமுகம் செய்து வைக்க படரவிட்டவாறு, “இப்போது, என்னுடைய உதவியாளரா என்னை அனுமதியுங்கள்,” என்று கூறினார். “ஒற்றைக்கு ஒற்றைச் சண்டை பற்றித் தனக்கு ஓரளவு தெரியும் என்று அவர் என்னிடம் தெரிவித்ததோடு, நாம் இதைத் துவக்குவதற்கு முன்பாக, ஒரு செயல் விளக்கமாக, என்னுடன் ஒற்றைக்கு ஒற்றைச் சண்டை ஒன்றை நிகழ்த்திக் காட்டவும் பெருந்தன்மையுடன் ஒப்புக் கொண்டுள்ளார். இளைஞர்களே, நீங்கள் கவலைப்பட வேண்டாம்! உங்கள் மாயத் திரவ ஆசிரியர், சண்டை முடிந்ததும் உங்களிடம் முழுதாகத் திரும்பி வருவார். பயப்படாதீர்கள்!”
“அவர்கள் இருவரும் ஒருவரையொருவர் காலி செய்துவிட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும்!” என்று ரான் ஹாரியின் காதில் கிசுகிசுத்தான்.
ஸ்னேப்பின் மேலுதடுகள் மடிந்தன. லாக்ஹார்ட் இன்னும் ஏன் புன்னகைத்துக் கொண்டிருந்தார் என்று ஹாரி யோசித்துக் கொண்டிருந்தான். ஸ்னேப் மட்டும் தன்னை இப்படிப் பார்த்துக் கொண்டிருந்தால், தான் இந்நேரம் எதிர்த்திசையில் தன்னால் முடிந்த அளவுக்கு வேகமாக ஓட்டமெடுத்திருக்கக்கூடும் என்று ஹாரி நினைத்துக் கொண்டான்.
லாக்ஹார்ட்டும் ஸ்னேப்பும் எதிரும் புதிருமாக நின்று கொண்டு, ஒருவருக்கு ஒருவர் வணக்கம் தெரிவித்துக் கொண்டனர் – குறைந்தபட்சம் லாக்ஹார்ட் தெரிவித்தார் என்று சொல்லலாம் – அவர் தன் கையை நன்றாகச் சுழற்றித் தன் வணக்கத்தைத் தெரிவித்தார். ஆனால் ஸ்னேப் எரிச்சலுடன் தன் தலையை லேசாகச் சாய்த்தார், அவ்வளவுதான். பின் அவர்கள் இருவரும், தங்கள் வாள்களை உருவுவதுபோலத் தங்கள் மந்திரக்கோல்களை உருவித் தங்களுக்கு முன்னால் நீட்டினர்.
மௌனமாகிவிட்டிருந்த கூட்டத்தினரைப் பார்த்து, லாக்ஹார்ட், “நாங்கள் எங்கள் மந்திரக்கோல்களை, மோதலைத் துவக்குவதற்கு முன் முறைப்படி எப்படிப் பிடித்திருக்க வேண்டுமோ அப்படிப் பிடித்திருப்பது உங்களுக்குத் தெரிகிறதா?” என்று கேட்டார். “முன்று என்று சொல்லி முடித்ததும் நாங்கள் எங்களுடைய முதல் மந்திரத்தைப் பிரயோகிப்போம். கண்டிப்பாக நாங்கள் ஒருவரை ஒருவர் கொல்ல முயற்சிக்கப் போவதில்லை!”
தன் பற்களை நறநறவென்று கடித்துக் கொண்டிருந்த ஸ்னேப்பைக் கவனித்த ஹாரி, “எனக்கு அப்படித் தெரியவில்லை,” என்று கூறினான்.
“ஒன்று – இரண்டு – மூன்று!”
இருவரும் தங்களுடைய மந்திரக்கோல்களைத் தங்களுடைய தோள்பட்டைகளுக்கு மேலாகத் தூக்கிச் சுழற்றினர். ஸ்னேப், “எக்ஸ்பெல்லியார்மஸ்!” என்று கத்தினார். கண்ணைப் பறிக்கும் ரத்தச் சிவப்பு நிற ஒளி ஒன்று வெளிப்பட்டது. லாக்ஹார்ட் பின்னால் தூக்கி எறியப்பட்டார். அவர் மேடையில் இருந்து பறந்து போய், பின்னால் இருந்த சுவரில் டமாலென்று மோதிச் சரிந்து, கை கால்களைப் பரப்பிக் கொண்டு தரையில் விழுந்தார்.
மால்ஃபாயும் இன்னும் சில் ஸ்லிதரின் அணியினரும் கரகோஷம் “லாக்ஹார்ட்டுக்கு ஒன்றும் ஆகவில்லையே?” என்று கேட்டாள். “ஆனால்தான் என்ன?” என்று ஹாரியும் ரானும் ஒருசேரக் கேட்டனர்.
லாக்ஹார்ட் தள்ளாடியபடி எழுந்து நின்றார். அவரது தொப்பி கீழே விழுந்திருந்தது. அவருடைய சுருட்டை முடி குத்திட்டு நின்று கொண்டிருந்தது.
அவர் தள்ளாடியபடியே மேடைக்கு வந்து சேர்ந்த பிறகு, “எப்படி இருந்தது பார்த்தீர்களா?” என்று கேட்டார். “அது நிராயுதபாணியாக்கும் மந்திரம். என்னுடைய மந்திரக்கோல் என்னிடமிருந்து எகிறிவிட்டது – ஸ்னேப், கூட்டத்தினருக்கு இந்த மந்திரத்தின் சக்தியை நீங்கள் நிரூபித்துக் காட்டியது நல்ல யோசனைதான். ஆனால் உங்களிடம் நான் ஒன்றைத் தெளிவுபடுத்திக் கொள்ள விரும்புகிறேன். நீங்கள் என்ன செய்யத் திட்டமிட்டிருந்தீர்கள் என்பது எனக்கு வெளிப்படையாகவே தெரிந்தது. நான் உங்களைத் தடுத்து நிறுத்த விரும்பியிருந்தால், அது எனக்கு மிகமிகச் சுலபமாக இருந்திருக்கும். ஆனால் இந்த மந்திரத்தின் சக்தியை இம்மாணவர்கள் கண்கூடாகப் பார்ப்பது அவர்களுக்கு நல்ல அறிவுறுத்தலாக இருக்கும் என்று நான் கருதியதால் அதை அனுமதித்தேன் …”
ஸனேப்பின் கண்களில் கொலை வெறி கூத்தாடிக் கொண்டிருந்தது. அதை லாக்ஹார்ட்டும் கவனித்திருக்க வேண்டும். என்று அறிவித்தார். “உங்களை ஜோடி ஜோடியாகப் பிரிப்பதற்காக ஏனெனில் அவர் உடனடியாக, “விளக்க நிகழ்ச்சி இதோடு போதும்,” நான் இப்போது கீழே இறங்கி வரப் போகிறேன். ஸ்னேப், நீங்கள் எனக்கு உதவி செய்ய விரும்பினால் . .”
அவர்கள் இருவரும் கீழே இறங்கி வந்து, அங்கிருந்த நெவிலையும் ஜஸ்டினையும் ஜோடி சேர்த்தார். ஸ்னேப் நேராக ஹாரியையும் ரானையும் நோக்கி வந்தார்.
“இணை பிரியாத ஜோடியைப் பிரிப்பதற்கான நேரம் வந்துவிட்டது என்று நான் நினைக்கிறேன்,” என்று அவர் எக்காளமிட்டார். “ரான், நீ சீமஸுடன் ஜோடி சேர்ந்து கொள் ஹாரி ஹெர்மயனியை நோக்கி நகரத் துவங்கினான்.
“அது சரிப்பட்டு வரும் என்று எனக்குத் தோன்றவில்லை,” என்று ஸ்னேப் விறைப்பாகப் புன்னகைத்துக் கொண்டே கூறினார். “மால்ஃபாய் இங்கே வா! நமது கதாநாயகன் ஹாரி பாட்டரை நீ எப்படிச் சமாளிக்கிறாய் என்று பார்க்கலாம். அப்புறம் ஹெர்மயனி, நீ மில்லிசென்ட்டோடு ஜோடி சேர்ந்து கொள்.”
மால்ஃபாய் ஓர் ஏளனப் புன்னகையுடன் திமிராக அங்கு வந்தான். அவனுக்குப் பின்னால் ஒரு ஸ்லிதரின் மாணவி வந்தாள். அவளைக் கண்டதும், ஹாரிக்கு, லாக்ஹார்ட்டின் புத்தகமான ‘யட்சினிப் பிசாசுகளுடன் ஓர் உல்லாசப் பயணம்’ என்ற புத்தகத்தில் இருந்த ஒரு படம்தான் நினைவிற்கு வந்தது. அம்மாணவி, உருவத்தில் மிகப் பெரியவளாகவும் பலசாலியாகவும் இருந்தாள். அவளது வலுவான தாடை முரட்டுத்தனமாக நீட்டிக் கொண்டிருந்தது. ஹெர்மயனி அவளை நோக்கி ஒரு பலவீனமான புன்னகையை வீசினாள். ஆனால் பதிலுக்கு அம்மாணவி புன்னகைக்கவில்லை.
மீண்டும் மேடைக்குச் சென்றுவிட்டிருந்த லாக்ஹார்ட், “உங்களுடைய ஜோடிகளைப் பார்த்துத் திரும்பி நின்று தலை குனிந்து வணக்கம் தெரிவியுங்கள்!” என்று கூறினார்.
ஒருவரையொருவர் முறைத்தபடி நின்று கொண்டிருந்த ஹாரியும் மால்ஃபாயும் ஒப்புக்குத் தலைகளை அசைத்தனர்.
“மந்திரக்கோல்கள் தயாராக இருக்கட்டும்!” என்று லாக்ஹார்ட் கத்தினார். “நான் மூன்று எண்ணியதும் உங்களுடைய எதிரிகளை மந்திர சக்தியால் நிராயுதபாணியாக ஆக்குங்கள் – வெறுமனே நிராயுதபாணியாக மட்டுமே ஆக்க வேண்டும் – இங்கு விபத்து எதையும் நிகழ்த்திவிடாதீர்கள்! ஒன்று – இரண்டு – மூன்று!”
ஹாரி தன்னுடைய மந்திரக்கோலைத் தன் தோளுக்கு மேலாக உயர்த்திச் சுழற்றினான். ஆனால் மால்ஃபாய் இரண்டு என்று எண்ணப்பட்டபோதே ஆரம்பித்துவிட்டிருந்தான். மால்ஃபாயின் மந்திரம் ஹாரியைக் கடுமையாகத் தாக்கியது. தான் ஒரு தோசைக் கல்லால் தலையில் பலமாகத் தாக்கப்பட்டதுபோல அவன் உணர்ந்தான். ஹாரி தள்ளாடினான். ஆனால் தனது உடலுறுப்புகள் அனைத்தும் ஒழுங்காக வேலை செய்ததுபோலத்தான் அவனுக்குத் தோன்றியது. மேலும் நேரத்தை வீணாக்காமல், ஹாரி மால்ஃபாயை நோக்கித் தன் மந்திரகோலை நீட்டியவாறு, “ரிக்டுஸெம்ப்ரா!” என்று கத்தினான்.
ஒரு வெள்ளி ஒளி மால்ஃபாயின் வயிற்றைத் தாக்கியது. அவன் மூச்சுத் திணறலுடன் வயிற்றைப் பிடித்துக் கொண்டு கீழே சுருண்டு விழுந்தான்.
சண்டை போட்டுக் கொண்டிருந்த கூட்டத்தினரைப் பார்த்து, லாக்ஹார்ட், “நான் என்ன சொன்னேன்? நிராயுதபாணியாக மட்டுமே கூச்சலிட்டார். மால்ஃபாய் கீழே விழுந்தபோது, கிச்சுகிச்சு மூட்டும் ஆக்க வேண்டும் என்றுதானே சொன்னேன்?” என்று மேடையிலிருந்து மந்திரத்தை ஹாரி அவன்மீது பிரயோகித்தான். தான் இருந்த நிலைமையில் மால்ஃபாயால் முழுமையாகச் சிரிக்கக்கூட முடியவில்லை. மால்ஃபாய் தரையில் விழுந்து கிடந்தபோது தான் அவனைத் தாக்குவது நியாயமாக இருக்காது என்று ஹாரி கொஞ்சம் தாமதித்தான். ஆனால் அது பெருந்தவறாகப் போய்விட்டது. மால்ஃபாய் மூச்சுத் திணறியவாறே, ஹாரியின் கால் மூட்டுக்களை நோக்கித் தன் மந்திரக்கோலை நீட்டி, “டரான்டலெக்ரா!” என்று முழங்கினான். அடுத்த நிமிடம் ஹாரியின் கால்கள் அவனது கட்டுப்பாட்டை மீறி வேகவேகமாகக் குதிக்கத் துவங்கின.
“நிறுத்துங்கள்! நிறுத்துங்கள்!” என்று லாக்ஹார்ட் கூச்சலிட்டார். ஆனால் ஸ்னேப் உடனடியாகச் செயலில் இறங்கினார்.
“ஃபினைட் இன்கேன்டேடம்!” என்று அவர் கத்தினார். ஹாரியின் கால்கள் நடனமாடுவதை நிறுத்திக் கொண்டன. மால்ஃபாய் சிரிப்பதை நிறுத்தினான். அவர்களால் நிமிர்ந்து பார்க்க முடிந்தது.
அந்த இடத்தை ஒரு பச்சை நிறப் புகை சூழ்ந்திருந்தது. நெவிலும் ஜஸ்டினும் மேல்மூச்சுக் கீழ்மூச்சு வாங்கத் தரையில் விழுந்து கிடந்தனர். சாம்பல் நிற முகத்தோடு இருந்த சீமஸை ரான் தாங்கிப் பிடித்துக் கொண்டு, உடைந்து போயிருந்த தனது மந்திரக்கோல் செய்த விஷயத்திற்காக அவனிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டிருந்தான். ஆனால் ஹெர்மயனியும் மில்லிசென்ட்டும் இன்னும் சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். ஹெர்மயனியின் தலை மில்லிசென்ட்டின் கிடுக்கிப் பிடியில் மாட்டியிருந்ததால், அவள் வலியால் சிணுங்கிக் கொண்டிருந்தாள். அவர்கள் இருவருடைய மந்திரக்கோல்களும் கேட்பாரற்றுத் தரையில் கிடந்தன. ஹாரி பாய்ந்து சென்று மில்லிசென்ட்டை ஹெர்மயனியிடம் இருந்து பிரித்தான். மில்லிசென்ட் ஹாரியைவிடப் பெரியவளாக இருந்ததால்; அது அவனுக்கு மிகவும் சிரமமான காரியமாக இருந்தது.
லாக்ஹார்ட், ஒற்றைக்கு ஒற்றைச் சண்டையின் அலங்கோல விளைவை நோட்டம் விட்டவாறு, கூட்டத்தினருக்கு நடுவே மெதுவாக நடந்து கொண்டே, “அடப் பசங்களா!” என்று கத்தினார். “மேக்மில்லன், மெதுவாக எழுந்திரு! . . . பீட்டர், ஜாக்கிரதை! . பூட், வலுவாக அழுத்து, இன்னும் ஒரு நொடியில் ரத்தம் வடிவது நின்றுவிடும்..”
கொஞ்சம் நிலை குலைந்தவர்போலக் காணப்பட்ட லாக்ஹார்ட், அப்பேரரங்கின் மத்தியில் நின்றவாறு, “உங்களுடைய எதிரி கொஞ்சம் நட்புபூர்வமற்ற முறையில் வீசும் மந்திரப் பிரயோகங்களை எப்படித் தடுப்பது என்பதை நான் உங்களுக்குக் காட்டுவது நல்லது என்று எனக்குத் தோன்றுகிறது,” என்று கூறிவிட்டு, ஸ்னேப்பைப் பார்த்தார். ஸ்னேப்பின் கருமை நிறக் கண்கள் பிரகாசமாயின. பின் லாக்ஹார்ட்’ தன் முகத்தை வேகமாக வேறு பக்கமாகத் திருப்பிக் கொண்டார். “எனக்கு ஒரு ஜோடி தேவை. யார் தாங்களாகவே முன்வரப் போகிறீர்கள்? நெவில், நீயும் ஜஸ்டினும் வருகிறீர்களா?” என்று லாக்ஹார்ட் கேட்டார்.
வஞ்சகமான ஒரு பெரிய வௌவால்போல அங்கு நழுவி வந்த ஸ்னேப், “லாக்ஹார்ட், அது மோசமான யோசனை,” என்று கூறினார். “நெவில் சாதாரண மந்திரங்களை உபயோதித்தாலே பெரும் நாசத்தை ஏற்படுத்திவிடுவான். அப்புறம் நாம் ஜஸ்டினின் மீதமிருக்கும் உடலை ஒரு தீப்பெட்டியில் போட்டுத்தான் மருத்துவமனைக்கு அனுப்ப வேண்டியிருக்கும்.” நெவிலின் உருண்டையான இளஞ்சிவப்பு நிற முகம் இன்னும் சிவந்தது. “ஹாரி பாட்டரையும் மால்ஃபாயையும் மோதவிட்டால் எப்படி இருக்கும்?” என்று அவர் ஒரு கோணல் புன்னகையுடன் கேட்டார்.
லாக்ஹார்ட் ஹாரியையும் மால்ஃபாயையும் அரங்கின் மையத்திற்கு வருமாறு சைகை செய்தவாறே, “பிரமாதமான யோசனை!” என்று கூறினார். கூட்டம் பின்னால் விலகியது.
லாக்ஹார்ட், “ஹாரி, இங்கே பார்,” என்று துவக்கினார். “மால்ஃபாய் தன் மந்திரக்கோலை உன்னை நோக்கி நீட்டியதும் நீ இப்படிச் செய்!”
அவர் தன்னுடைய மந்திரக்கோலை உயர்த்தி, சற்றுச் சிக்கலான முறையில் அதைச் சுழற்றினார். அது அவரது கையிலிருந்து நழுவிக் கீழே விழுந்தது. அவர் தன் மந்திரக்கோலைத் தரையிலிருந்து எடுத்துக் கொண்டு, “அடடா! என் மந்திரக்கோல் மிகவும் உற்சாகமடைந்திருப்பதுபோலத் தெரிகிறது,” என்று கூறிச் சமாளித்தபோது, ஸ்னேப் அவரை நோக்கி ஏளனப் புன்னகை ஒன்றை வீசினார்.
ஸ்னேப் மால்ஃபாயின் அருகே சென்று குனிந்து அவனது காதில் புன்னகை ஒட்டிக் கொண்டது. ஹாரி பதற்றத்துடன் லாக்ஹார்ட்டை எதையோ ஓதினார். மால்ஃபாயின் உதடுகளிலும் ஓர் ஏளனப் நோக்கி, “பேராசிரியரே, எப்படித் தடுக்க வேண்டும் என்பதை மீண்டும் ஒருமுறை எனக்குக் காட்ட முடியுமா?” என்று கேட்டான்.
லாக்ஹார்ட்டிற்குக் கேட்காதவாறு ஒரு மெல்லிய குரலில், மால்ஃபாய், “என்ன ஹாரி, பயந்துவிட்டாயா?” என்று கேட்டான்.
“உனக்குப் பேராசைதான்!” என்று ஹாரி உதட்டோரமாகப் பேசினான்.
லாக்ஹார்ட் சந்தோஷமாக ஹாரியின் தோளைப் பிடித்தவாறே, “ஹாரி, நான் செய்ததை வெறுமனே அப்படியே செய்!” என்று கூறினார்.
“நானும் என் மந்திரக்கோலைக் கீழே போட வேண்டுமா என்ன?”
ஆனால் லாக்ஹார்ட் அதைக் கவனிக்கவில்லை.
“மூன்று – இரண்டு – ஒன்று – மோதுங்கள்!” என்று அவர் கத்தினார்.
மால்ஃபாய் தன் மந்திரக்கோலை வேகமாக உயர்த்தி, “செர்பென்ட்சார்டியா!” என்று முக்காரமிட்டான்.
அவனது மந்திரக்கோலின் முனை வெடித்தது. அதிலிருந்து ஒரு பெரிய பாம்பு வெளிப்பட்டு அவர்கள் இருவரும் நின்று கொண்டிருந்த இடத்திற்கு நடுவே வந்து விழுந்து, தன்னை உயர்த்திப் படமெடுத்துச் சீறியது. ஹாரி அதைத் திகைப்புடன் பார்த்தான். கூட்டம் பெருங்கூச்சல் போட்டுக் கொண்டே இன்னும் பின்னால் விலகியது.
ஹாரி அந்தப் பாம்பைக் கண்ணிமைக்காமல் பார்த்தபடி ஒரு சிலைபோல ஆடாமல் அசையாமல் நின்று கொண்டிருந்ததை ரசித்துக் கொண்டிருந்த ஸ்னேப், “ஹாரி, அசையாதே!” என்று விட்டேத்தியாகக் கூறினார்.
“என்னிடம் விட்டுவிடு!” என்று லாக்ஹார்ட் கத்தினார். அவர் தன் மந்திரக்கோலை அந்தப் பாம்பை நோக்கிச் சுழற்றினார். அப்போது ஒரு பயங்கரமான சத்தம் கேட்டது. பாம்பு மறைந்து போவதற்குப் பதிலாக, பத்தடி உயரம் அந்தரத்தில் பறந்து, தொப்பென்று கீழே வந்து விழுந்தது. கோபம் அடைந்திருந்த அப்பாம்பு, சீற்றத்துடன் சீறியது. அது நேராக ஜஸ்டினை நோக்கி வழுக்கிக் கொண்டு சென்றது. பின் படமெடுத்து, தன் விஷப் பற்கள் வெளியே தெரிய, தாக்குவதற்குத் தயாராக நின்றது.
எது தன்னை அவ்வாறு செய்யத் தூண்டியது என்று ஹாரிக்குத் தெரியவில்லை. அதைச் செய்ய வேண்டும் என்று தான் தீர்மானித்தது பற்றிய பிரக்ஞைகூட அவனுக்கு இருக்கவில்லை. அவனுக்குத் கால்களில் சக்கரங்கள் தெரிந்ததெல்லாம், தனது கட்டப்பட்டிருந்ததைப்போலத் தனது கால்கள் தன்னை நேராக அந்தப் பாம்பை நோக்கி இழுத்துச் சென்றதும், பிறகு தான் அந்தப் பாம்பைப் பார்த்து, முட்டாள்தனமாக, “அவனை விட்டுவிடு!” என்று கத்தியதும் மட்டும்தான். மாயாஜாலம்போல, விவரிப்பிற்கு அப்பாற்பட்ட விதத்தில், அப்பாம்பு, தோட்டத்திற்கு நீர்ப் பாய்ச்சும் தடிமனான கருப்பு நிற ரப்பர் குழாய்போல மிகவும் சாதுவாகத் தரையில் படுத்துக் கொண்டு ஹாரியையே பார்த்துக் கொண்டிருந்தது. ஹாரி தன்னிடமிருந்த பயம் முழுவதும் வடிந்துவிட்டாற்போல உணர்ந்தான். எப்படி என்பது அவனுக்குத் தெரியாமல் போனாலும்கூட, அப்பாம்பு இனி யாரையும் தாக்காது என்பது அவனுக்குத் தெரிந்தது. ஆனால் அதற்கு விளக்கமக்க முடியாத நிலையில் அவன் இருந்தான்
அவன் ஜஸ்டினைப் பார்த்து வாயெல்லாம் பல்லாகச் பிரிந்த பதிலுக்கு ஜஸ்டின் நிம்மதியடைவான் என்றோ, அல்லது புதிராகப் பார்ப்பான் என்றோ, அல்லது நன்றியு கொண்டிருப்பான் என்றோ ஹாரி எதிர்பார்த்தான். ஆனால் பயத்தோடும் கோபத்தோடும் இருப்பான் என்று ஹாரி தன் கனவிலும் எதிர்பார்த்திருக்கவில்லை.
ஜஸ்டின் ஹாரியைப் பார்த்து, “நீ உன் மனத்தில் என்னதான் நினைத்துக் கொண்டிருக்கிறாய்?” என்று கேட்டுவிட்டு, ஹாரி தடி வாயைத் திறப்பதற்கு முன்பாகவே, கடுங்கோபத்துடன் அந்த அரங்கைவிட்டு வெளியேறினான்.
ஸ்னேப் முன்னால் வந்து தன் மந்திரக்கோலை அப்பாம்பை நோக்கி நீட்டினார். அது ஒரு கரிய நிறப் புகையில் மாயமாக மறைந்தது. ஸ்னேப்பும் ஹாரியை வித்தியாசமாகப் பார்த்தார். அ தன்னை அவர் எடைபோட்டதைப்போல ஹாரிக்குத் தோன்றியது. அதை அவன் துளிகூட விரும்பவில்லை. அதோடு, அந்த அரங்கு முழுவதும் எச்சரிக்கை முணுமுணுப்புகள் ஒலித்துக் கொண்டிருந்ததை அவன் லேசாக உணர்ந்தான். பின் யாரோ அவனது அங்கியைப் பின்னாலிருந்து பிடித்து இழுத்ததுபோல இருந்தது.
“வா, இங்கிருந்து போய்விடலாம்” என்ற ரானின் குரல் அவனுக்குக் கேட்டது.
ரான் அவனை லாவகமா அங்கிருந்து வெளியே வழிநடத்தினான். அவர்களுக்குப் பின்னால் ஹெர்மயனி ஓடி வந்து கொண்டிருந்தாள். அவர்கள் வாசலை நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, அங்கிருந்தவர்கள் எதற்காகவோ பயந்து போய் தன்னைக் கண்டு விலகி ஓடியதுபோல ஹாரிக்குத் தோன்றியது. அதற்கான காரணத்தை, காலியாக இருந்த கிரிஃபின்டார் பொது அறைக்கு அவனை இழுத்துச் செல்லும்வரை ரானோ அல்லது ஹெர்மயனியோ அவனிடம் சொல்லவில்லை, அறைக்குள் நுழைந்ததும் ரான் ஹாரியை ஒரு நாற்காலியில் தள்ளிவிட்டு, ‘உனக்கு ஸர்ப்ப பாஷை தெரியும்! நீ ஏன் அதை இதுவரை எங்களிடம் சொல்லவில்லை?” என்று கோபமாகக் கேட்டான்.
“எனக்கு என்ன தெரியுமென்று சொன்னாய்?” என்று ஹாரி கேட்டான்.
“ஸர்ப்ப பாஷை என்று ரான் கூறினான். “உன்னால் பாம்புகளுடன் பேச முடியும்!”
“எனக்குத் தெரியும்,” என்று ஹாரி கூறினான். “நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால், நான் ஒரு பாம்புடன் பேசியது இதுதான் இரண்டாவது முறை. முன்பு ஒரு முறை ஒரு விலங்குக் காட்சிச்சாலையில் தவறுதலாக டட்லீயின்மீது ஒரு பிரேசில் நாட்டு மலைப்பாம்பை நான் ஏவி விட்டுவிட்டேன். அது ஒரு நீண்ட கதை அப்பாம்பு, தான் ஒருபோதும் பிரேசில் நாட்டிற்குச் சென்றதில்ல என்று என்னிடம் கூறியது. நான் என்னை அறியாமலேயே அதைக் கண்டிலிருந்து விடுவித்துவிடடேன் நான் ஒரு மந்திரவாதி என்று எனக்குத் தெரிவதற்கு முன்பு நடந்த கதை அது.”
“என்ன? தான் பிரேசிலுக்குப் போனதே இல்லை என்று ஒரு மலைப்பாம்பு உன்னிடம் கூறியதா?” என்று ரான் மெல்லிய குரலில் கேட்டான்.
“ஆமாம்.” என்று ஹாரி கூறினான். “இது என்ன பெரிய அதிசயமா? இங்குள்ளவர்களில் பலரால் அதைச் செய்ய முடியும் என்று நான் நினைக்கிறேன்.”
“இல்லை. இல்லை. எல்லோராலும் அவ்வாறு செய்ய முடியாது.” என்று ரான் தெரிவித்தான். “இது ஓர் அபூர்வமான திறமை. ஆனால் ஹாரி, இது பயங்கரப் பிரச்சனைக்கு வழி வகுக்கப் போகிறது.”
கொஞ்சம் கோபமடையத் துவங்கியிருந்த ஹாரி. “ஏன் அப்படிக் கூறுகிறாய்?” என்று கேட்டான். “உங்கள் எல்லோருக்கும் என்னவாயிற்று? நான் மட்டும் அந்தப் பாம்பிடம் ‘ஜஸ்டினைத் தாக்காதே’ என்று கூறியிருக்காவிட்டால் -”
“ஆ! நீ அந்தப் பாம்பிடம் அப்படியா கூறினாய்?”
“நீ என்ன உளறுகிறாய்? நீயும் அங்கேதானே இருந்தாய்? நான் பேசியதை நீயும்தானே கேட்டாய்?”
“நீ ‘ஸர்ப்ப பாஷை’யில் பேசியதைத்தான் நான் கேட்டேன்.” என்று ரான் கூறினான். கூறினான். “அது பாம்புகளின் மொழி. நீ எதை வேண்டுமானாலும் கூறியிருக்கலாம் ஜஸ்டின் ஏன் அலறியடித்துக் கொண்டு ஓடினான் என்பது இப்போதுதான் எனக்குப் புரிகிறது. நீ அந்தப் பாம்பிற்கு ஏதோ கட்டளை இட்டதுபோலத்தான் எனக்குத் தோன்றியது. ஹாரி, உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால், அது பயமுறுத்துவதாகத்தான் இருந்தது!”
ஹாரி அவனைப் பார்த்து வாயைப் பிளந்தான்,
“என்ன சொன்னாய்? நான் வேறொரு மொழியைப் பேசினேனா? ஆனால் எனக்கு அந்த உணர்வே இல்லையே! என்னால் பேச முடியும் என்று தெரியாமலேயே என்னால் எப்படி ஒரு மொழியைப் பேச முடியும்?
ரான் நம்ப முடியாதவன்போலத் தலையை அசைத்தான். ரானும் ஹெர்மயனியும் துக்க வீட்டில் இருந்ததுபோல இருந்தனர், அப்படி என்ன மோசமாக நடந்துவிட்டது என்று ஹாரி யோசித்தான்.
“ஜஸ்டினை ஒரு படுபயங்கரமான பாம்பின் வாயிலிருந்து நான் காப்பாற்றியதில் நீங்கள் என்ன தவறைக் கண்டீர்கள் என்று எனக்குப் புரியவில்லை.” என்று அவன் கூறினான். “நான் அதை எப்படிக் நான் தடுத்துவிட்டேன் என்பதுதானே முக்கியம்?” செய்திருந்தால் என்ன? ஜஸ்டின் ‘ஹெட்லெஸ் ஹன்ட்’டில் சேராமல்
“செய்த விதமும் முக்கியம்தான்,” என்று ஹெர்மயனி ஒருவழியாக வாயைத் திறந்தாள். அவளது குரல் மென்மையாக ஒலித்தது.
“ஏனென்றால், பாம்புடன் பேசுவற்கு சலசார் ஸ்லிதரின் போனவன். அதனால்தான் பாம்பு ஸ்லிதரின் அணியின் சின்னமாக இருக்கிறது.”
ஹாரி திறந்த வாயை மூடவேயில்லை.
“ஆமாம். ஹெர்மயனி கூறியது முழுக்க முழுக்கச் சரி, என்று ரான் கூறினான். “இப்போது மொத்தப் பள்ளியும் நீ ஸ்லிதரினின் எள்ளுப் பேரனின் கொள்ளுப் பேரன் என்றோ, அல்லது கொள்ளுப் பேரனின் எள்ளுப் பேரன் என்றோ முடிவு கட்டப் போகிறது. “ஆனால் நான் அந்த வம்சாவழி இல்லை,” என்று ஹாரி பெரும் திகிலுடன் கூறினான். தனக்கு ஏற்பட்ட பீதிக்கான காரணத்தை அவனால் விளக்க முடியவில்லை.
“ஸ்லிதரின் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர். எங்களுக்குத் “அதை நீ நிரூபிப்பது மிகச் சிரமம்,” என்று ஹெர்மயனி கூறினாள்.. தெரிந்தவரை நீ அந்த வம்சாவழியில் வந்தவனாக இருப்பதற்கு நிறையவே வாய்ப்பிருக்கிறது.”
அன்று இரவு வெகு நேரம்வரை ஹாரி தூங்கவில்லை. தனது படுக்கையின் திரைச்சீலையிலிருந்த ஒரு விரிசல் வழியாக, கோபுரத்தின் சன்னலின்மீது பனி படர்ந்து கொண்டிருந்ததைப் பார்த்தவாறு அவன் யோசித்துக் கொண்டிருந்தான்.
தான் சலசார் ஸ்லிதரினின் வாரிசாக இருக்க முடியுமா? அவனுக்குத் தனது அப்பாவின் குடும்பத்தைப் பற்றி எதுவுமே தெரியாது. தனது மந்திரவாதி உறவினர்களைப் பற்றிய பேச்சை டர்ஸ்லீ தம்பதியினர் எப்போதுமே தடை செய்து வந்திருந்தனர்.
ஹாரி பார்ஸேல்டங்கில் எதையோ சொல்ல முயற்சித்தான். ஆனால் எந்த வார்த்தையும் வெளிவரவில்லை. பாம்பை நேருக்கு நேர் அவன் எதிர்கொண்டால்தான் அது சாத்தியம்போலும்.
“ஆனால் நான் கிரிஃபின்டார் அணியில்தானே இருக்கிறேன், என்று ஹாரி நினைத்துக் கொண்டான். “என்னுடைய உடம்பில் ஸ்லிதரினின் ரத்தம் ஓடிக் கொண்டிருந்தால், வகை பிரிக்கும் தொப்பி என்னை இதில் போட்டிருக்காதே! . . .”
அவனது மூளைக்குள்ளிருந்து ஒரு குட்டிக் குரல், “ஹா! ஆனால் வகை பிரிக்கும் தொப்பி உன்னை ஸ்லிதரின் அணியில் போடத்தானே விரும்பியது? அது உனக்கு மறந்து போய்விட்டதா?” என்று கேட்டது.
ஹாரி புரண்டு படுத்தான். அடுத்த நாள் மூலிகையியல் வகுப்பில் ஜஸ்டினைப் பார்த்து, தான் அந்தப் பாம்பை அங்கிருந்து போய்விடுமாறுதான் வேண்டிக் கொண்டதாகவும், அதற்குக் கட்டளை நினைத்துக் கொண்டான். ஹாரி கோபமாகத் தன் தலையணையில் ஏதும் இடவில்லை என்றும் எடுத்துக் கூற வேண்டும் என்று அவன் ஓங்கிக் குத்தியவாறே, இதை எந்தவொரு வடிகட்டிய மடையனும்கூடப் புரிந்து கொண்டிருக்க வேண்டும் என்று தனக்குள் அங்கலாய்த்துக் கொண்டான்.
இரவு பெய்து கொண்டிருந்த பனி மறுநாள் காலையில் பெரிய பனிப்புயலாக உருவெடுத்தால், அப்பருவத்தின் கடைசி மூலிகையியல் வகுப்பு ரத்து செய்யப்பட்டிருந்தது. பேராசிரியர் ஸ்ரவுட் மண்ட்ரேக்குகளுக்குக் காலுறைகளும் கழுத்துக்குட்டைகளும் அணிவிக்க வேண்டும் என்று திட்டமிட்டிருந்தார். அது மிகவும் சிக்கலான, ஆபத்தான வேலையாக இருந்ததால் அதை அவர் பிறரிடம் ஒப்படைக்கத் தயங்கினார். ஆனால் காலினையும் நாரிஸ் பூனையையும் உயிர்த்தெழ வைப்பதற்கு மன்ட்ரேக்குகளை விரைவாக வளரச் செய்ய வேண்டியிருந்தது.
“கிரிஃபின்டார் பொது அறையில் இருந்த கணப்படுப்பு அருகே, வகுப்பு ரத்து செய்யப்பட்டது குறித்து ஹாரி மருகிக் கொண்டிருந்தான். ரானும் ஹெர்மயனியும், வகுப்பு நடக்காததால் கிடைத்த ஓய்வு நேரத்தை மந்திரஜாலச் சதுரங்க விளையாட்டை விளையாடுவதற்குப் பயன்படுத்திக் கொண்டனர்.
ரானின் மந்திரி ஹெர்மயனியின் குதிரை வீரனைக் கீழே தள்ளி, அவனைச் சதுரங்கப் பலகைக்கு வெளியே தரதரவென்று இழுத்துச் சென்றது. அதனால் கடுப்படைந்திருந்த ஹெர்மயனி, ஹாரியைப் பார்த்து, “அடக் கடவுளே, நீ என்ன இப்படி இருக்கிறாய்? உனக்கு அது அந்த அளவுக்கு முக்கியம் என்றால், போய் ஜஸ்டினைத் தேடிக் கண்டுபிடி,” என்று கூறினாள்.
ஹாரி எழுந்து, ஜஸ்டின் எங்கே இருந்தானோ என்று யோசித்துக் கொண்டே, ஓவியத்துளை வழியாக அந்த அறையைவிட்டு வெளியேறினான்.
அனைத்து சன்னல்களிலும் அடர்த்தியாகப் பனி படர்ந்திருந்ததால், கோட்டை வழக்கத்தைவிட இருட்டாக இருந்தது. ஹாரி, பாடம் நடைபெற்றுக் கொண்டிருந்த பல வகுப்புகளை, உள்ளே என்ன நடந்து கொண்டிருந்தது என்று நோட்டம்விட்டுக் கொண்டே கடந்து சென்றான். பேராசிரியர் மெக்கானகல் ஏதோ ஒரு மாணவனைத் திட்டித் தீர்த்துக் கொண்டிருந்தார். அவரது குரலிலிருந்து, அந்த மாணவன் தன்னுடைய நண்பனை ஒரு வளை எலியாக மாற்றியிருந்தான் என்பது ஹாரிக்குத் தெரிய வந்தது. உள்ளே எட்டிப் பார்க்க முளைத்தெழுந்த ஆவலைக் கட்டுப்படுத்திக் கொண்டு, ஹாரி மேலும் நடந்தான். ஜஸ்டின் இந்த ஓய்வு நேரத்தைப் பிற பாடங்களைப் படிப்பதற்கு உபயோகப்படுத்தக்கூடும் என்று யோசித்து, முதலில் நூலகத்தில் அவன் இருந்தானா என்று பார்ப்பதற்காக ஹாரி அதை நோக்கி நடந்தான்.
ஹாரி எதிர்பார்த்தபடி, ஹஃபில்பஃப் அணியினர் பலர் நூலகத்தின் பின்பகுதியில் இருந்தனர். ஆனால் அவர்கள் பாடம் எதையும் படித்துக் கொண்டிருக்கவில்லை. நீண்ட புத்தக அலமாரிகளுக்கு இடையே அவர்கள் நெருக்கமாக உட்கார்ந்து கொண்டு, தங்களுக்கிடையே கிசுகிசுப்பான குரலில் பேசிக் கொண்டிருந்தனர். அவர்களுக்கிடையே ஜஸ்டினும் இருந்தானா இல்லையா என்பதை ஹாரியால் கண்டுபிடிக்க முடியவில்லை. . அவன் அவர்களை நோக்கி நடந்து வந்து கொண்டிருந்தபோது, அவர்க கூறிக் கொண்டிருந்த வார்த்தைகளில் ஒன்று அவனது காதில் விழுந்ததால், ஹாரி அங்கிருந்த புத்தக அலமாரி ஒன்றின் பின்னால் மறைந்து நின்று கொண்டான்.
ஒரு குண்டுப் பையன் அந்த மாணவர்களிடம், “எனவே, நம்முடைய பொது அறையில் மறைந்து கொள்ளுமாறு நான் ஜஸ்டினிடம் கூறினேன்” என்று தெவித்துக் கொண்டிருந்தான், ஹாரி பாட்டர் தன்னுடைய அடுத்த பலிகடாவாக அவனைக் வைத்திருந்தால், கொஞ்ச காலத்திற்கு அவன் அடக்கி நல்லது. தான் மகுள்களுக்குப் பிறந்தவன் என்பதை ஜஸ்டின் ஹார் பாட்டரிடம் உளறிக் கொட்டியிருந்த நாளிலிருந்தே இது போன்ற ஒன்றை ஜஸ்டின் எதிர்பார்த்து வந்திருந்தான். தான் ஈட்டன் பள்ளிக்குத் தேர்வு செய்யப்பட்டிருந்த தகவலை அவன் ஹார் பாட்டரிடம் தெரிவித்திருந்தான். ஸ்லிதரினின் வாரிசு தறிகெட்டு அலைந்து கொண்டிருக்கும் இந்நேரத்தில், இது வம்பை விலை கொடுத்து வாங்குவதற்குச் சமானம்.”
தங்க நிறத் தலைமுடியைச் சடையாகப் பின்னியிருந்த ஒரு மாணவி, “எர்னி, அப்படியானால், அது உறுதியாக ஹாரி பாட்டர்தான் என்று முடிவு கட்டிவிட்டாயா?” என்று கேட்டாள்.
“ஹானா,” என்று எர்னி வருத்தமாகத் தொடர்ந்தான். “அவன் ஸர்ப்ப பாஷை அறிந்தவன். அது தீய மந்திரவாதிகளின் முக்கிய அடையாளம் என்பது எல்லோருக்கும் தெரியும். பாம்புடன் பேசக்கூடிய கண்ணியமான யாராவது ஒருவரை உனக்குத் தெரியுமா? ஸ்லிதரினே ‘பாம்புவாயன்’ என்றுதான் அழைக்கப்பட்டார்.”
இதைக் கேள்விப்பட்டவுடன் அங்கு பலத்த முணுமுணுப்புகள் எழுந்தன. எர்னி தொடர்ந்து பேசினான். “அந்தச் சுவரில் என்ன எழுதப்பட்டிருந்தது என்பது உங்களுக்கு நினைவிருக்கிறதா? வாரிசுதாரர்களின் எதிரிகள் ஜாக்கிரதை! ஹாரி பாட்டருக்கும் ஃபில்ச்சுக்கும் இடையே ஏதாவது சச்சரவு மூண்டிருக்கும். அடுத்து என்ன நடந்தது? ஃபில்ச்சின் பூனை தாக்கப்பட்டது! அந்த முதல் வருட மாணவன் காலின், குவிடிச் போட்டியின்போது ஹாரி பாட்டர் தரையில் சகதியில் விழுந்து கிடந்த நேரத்தில் அவனைப் புகைப்படங்கள் எடுத்து அவனுக்கு எரிச்சலை ஏற்படுத்தினான். அடுத்து என்ன நிகழ்ந்தது? காலின் தாக்கப்பட்டான்.”
“ஆனால் ஹாரி பாட்டர் எப்போதுமே நன்றாகத்தானே பழகி வந்தான்,” என்று ஹானா உறுதியற்றக் குரலில் கூறினாள். “பெயர் சொல்லப்படக்கூடாதவனை மாயமாக மறையச் செய்தது அவன்தானே? பின் அவன் எப்படி இவ்வளவு மோசமானவனாக இருக்க முடியும்?”
எர்னி தன் குரலைத் தணித்துக் கொண்டான். அங்கு கூடியிருந்த ஹஃபில்பஃப் அணியினர் இன்னும் நெருங்கி உட்கார்ந்து கொண்டனர். அவனுடைய வார்த்தைகளைக் கேட்பதற்காக ஹாரியும் சற்று அருகே போனான்.
“பெயர் சொல்லப்படக்கூடாதவனின் தாக்குதலிலிருந்து அவன் எப்படித் தப்பினான் என்பது யாருக்கும் தெரியாது. அச்சயமத்தில் அவன் ஒரு கைக்குழந்தையாக இருந்தான். அவன் அத்தாக்குதலில் சுக்குநூறாகச் சிதறிப் போயிருக்க வேண்டும். மிக அதிக சக்திவாய்ந்த ஒரு தீய மந்திரவாதியால்தான் இப்படிப்பட்ட ஒரு தாக்குதலில் இருந்து தப்பித்திருக்க முடியும்.” எர்னி தன்னுடைய குரலை இன்னும் தணித்துக் கொண்டான். இப்போது அது ஒரு கிசுகிசுப்புப்போல இருந்தது. “ஒருவேளை அதற்காகத்தான் பெயர் சொல்லப்படக்கூடாதவன் அவனைத் தீர்த்துக் கட்ட முயன்றிருக்க வேண்டும். தனக்குப் போட்டியாக இன்னொரு தீய மந்திரவாதி உருவெடுப்பதை அவன் விரும்பியிருக்க மாட்டான். ஹாரி பாட்டர் வேறு எந்தவிதமான சக்திகளை மறைத்து வைத்துக் கொண்டிருக்கிறானோ, யார் கண்டது?”
ஹாரிக்கு அதற்கு மேல் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அவன் சத்தமாகச் செருமிக் கொண்டு, புத்தக அலமாரிக்குப் பின்னாலிருந்து வெளிப்பட்டான். அவன் மட்டும் அப்போது அவ்வளவு கோபத்துடன் இல்லாமல் இருந்திருந்தால், அங்கு அவன் பார்த்தக் காட்சியைக் கண்டு அவன் நகைத்திருப்பான். அங்கிருந்த அனைவரும் அவனது பார்வையால் கல்லாக்கப்பட்டிருந்ததைப்போல உறைந்து போயிருந்தனர். எர்னியின் முகம் மெல்ல மெல்ல வெளிறிக் கொண்டிருந்தது.
ஹாரி, “ஹலோ,” என்று கூறினான். “நான் ஜஸ்டினைத் தேடிக் கொண்டிருக்கிறேன்!”
தாங்கள் எதற்காகக் குலை நடுங்கிக் கொண்டிருந்தோமோ அது உண்மையாகிவிட்டது என்பதுபோல ஹஃபில்பஃப் அணியினர் உணர்ந்தனர். அவர்கள் எல்லோரும் எர்னியையே பயத்தோடு பார்த்துக் கொண்டிருந்தனர்.
“அவனை நீ எதற்காகத் தேடிக் கொண்டிருக்கிறாய்?” என்று எர்னி உதறலுடன் கேட்டான்.
“ஒற்றைக்கு ஒற்றை மோதல்’ சங்கத்தில் அந்தப் பாம்பு விவகாரத்தில் உண்மையிலேயே என்ன நிகழ்ந்தது என்பதை நான் அவனிடம் தெரிவிக்க விரும்புகிறேன்,” என்று ஹாரி கூறினான்.
வெளிறிப் போய் வெள்ளயாக இருந்த தன்னுடைய உதடுகளை எர்னி கடித்துக் கொண்டான். ஆழமாக ஒரு முறை சுவாசித்துவிட்டு, “நாங்கள் எல்லோரும் அங்கு இருந்தோம். அங்கு என்ன நடந்தது என்பதை எங்களது இரண்டு கண்களாலும் நாங்கள் பார்த்தோம்,” என்று கூறினான்.
“அப்படியானால், நான் அந்தப் பாம்புடன் பேசிய பிறகு அது பின்வாங்கியதையும் நீங்கள் பார்த்திருப்பீர்கள்,” என்று ஹாரி கூறினான்.
“நீ ஸர்ப்ப பாஷையில் பேசி அந்தப் பாம்பை ஜஸ்டினை நோக்கி விரட்டியடித்ததைத்தான் நான் பார்த்தேன்,” என்று எானி விடாப்பிடியாகக் கூறினான், அவனது மொத்த உடலும் நடுங்கிக் கொண்டிருந்தது.
ஹாரி கோபத்தில் குமுறியவாறு, “நான் அதை அவனை நோக்கித் தூரத்தவில்லை,” என்று கூறினான். “அது அவனைத் தொடக்கூட இல்லை!”
“அவன் மயிரிழையில் தப்பினான்,” என்று எர்னி கூறினான். “உன் மனத்தில் வேறு ஏதாவது எண்ணம் ஓடிக் கொண்டிருந்தால் நான் இதை உன்னிடம் கூறிக் கொள்ள விரும்புகிறேன். ஒன்பது தலைமுறைகளுக்குப் பின்னால் சென்றாலும் எங்கள் பரம்பரை மந்திரவாதிகள் மற்றும் மந்திரவாதினிகளைத்தான் கொண்டிருந்தது. அதனால் என்னுடைய உடலிலும் தூய ரத்தம்தான் ஓடிக் கொண்டிருக்கிறது -”
“உன் உடலில் எந்த ரத்தம் ஓடிக் கொண்டிருக்கிறது என்பதை பற்றி எனக்கு அக்கறை கிடையாது,” என்று ஹாரி கோபமாக இரைந்தான். “மகுள்களுக்குப் பிறந்தவர்களை நான் ஏன் தாக்க வேண்டும்?”
“நீ இங்கு வருவதற்கு முன் யாருடன் வசித்து வந்தாயோ, அந்த மகுள்களை நீ மிகவும் வெறுத்து வந்தாய் என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன்.” என்று எர்னி உடனடியாக பதிலளித்தான். “டர்ஸ்லீ குடும்பத்தினருடன் வாழ்ந்து வந்தால் யாராலும் அவர்களை வெறுக்காமல் இருக்க முடியாது,” என்று ஹாரி கூறினான். “வேண்டுமானால் நீ முயற்சி செய்து பாரேன்!”
பிறகு அவன் அங்கிருந்து திரும்பி, பயங்கரக் கோபத்துடன் நூலகத்தைவிட்டு வெளியேறினான். அப்போது அங்கு உட்கார்ந்து கொண்டு ஒரு வசியப் புத்தகத்தின் தங்க நிற அட்டையைப் பளிச்சூட்டிக் கொண்டிருந்த மேடம் பின்ஸ், அவனைக் குற்றம் சாட்டுவது போன்ற ஒரு பார்வையை அவன்மீது வீசினார்.
ஹாரி தான் எங்கு போய்க் கொண்டிருந்தோம் என்பதைக் கவனிக்காமல் தாழ்வாரத்தில் தன் கால்கள் போன போக்கில் நடந்து கொண்டிருந்தான். அதன் விளைவாக அவன் மிகப் பெரியதாகவும் வலுவானதாகவும் இருந்த ஏதோ ஒன்றின்மீது மோதினான். அது அவனைத் தரையில் உருட்டியது.
“ஓ! ஹலோ, ஹாக்ரிட்!” என்று ஹாரி கூறினான்.
ஹாக்ரிட்டின் முகம் முழுவதையும் பனியில் குளித்திருந்த அவரது குரங்குக் குல்லாய் மறைத்திருந்தது. ஆனால் அது வேறு இருக்க முடியாது. மிருதுவான விலங்குத் தோலால் ஆன மேலங்கியில் இருந்த அவரது உருவம் அந்தத் தாழ்வாரத்தையே மறைத்துக் கொண்டிருந்தது. கையுறைகள் மாட்டப்பட்டிருந்த அவரது மிக பெரிய கைகளில் ஒன்றில் ஒரு செத்தச் சேவல் தொங்கிக் கொண்டிருந்தது.
ஹாக்ரிட் தான் பேசுவதற்கு வசதியாகத் தனது குல்லாயை மேலே தூக்கிவிட்டுக் கொண்டு, “ஹலோ ஹாரி!” என்று கூறினார். “இந்த நேரத்தில் நீ ஏன் வகுப்பில் இருக்காமல் இங்கே சுற்றிக் கொண்டிருக்கிறாய்?”
ஹாரி தரையிலிருந்து எழுந்து கொண்டே, “வகுப்பு ரத்தாகிவிட்டது,” என்று கூறினான். “ஆமாம், நீங்கள் இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?”
ஹாக்ரிட் தன் கையில் இருந்த செத்தச் சேவலைத் தூக்கிப் பிடித்தார்.
“இப்பருவத்தில் கொல்லப்பட்ட இரண்டாவது சேவல் இது,” என்று அவர் விவரித்தார். “ஒன்று, நரிகள் இதைக் கொன்றிருக்க வேண்டும், அல்லது இது ரத்தத்தை உறிஞ்சும் அரக்கக் கரடி ஒன்றின் வேலையாக இருக்க வேண்டும். கோழிப் பண்ணையைச் சுற்றி ஒரு வசியத்தை ஏற்பாடு செய்து கொள்ள அனுமதி வேண்டி நான் தலைமையாசிரியரைப் பார்க்க வந்தேன்.”
பனியால் மூடப்பட்டிருந்த தனது புருவத்தைச் சுருக்கி, ஹாக்ரிட், ஹாரியை இன்னும் உன்னிப்பாகப் பார்த்தார்.
“நீ ஏன் ஏதோ மாதிரி இருக்கிறாய்? உன்னை ஏதாவது தொந்தரவு செய்து கொண்டிருக்கிறதா?”
எர்னியும் மற்ற பிற ஹஃபில்பஃப் அணியினரும் தன்னைப் பற்றிக் கூறியிருந்ததைத் தன் சொந்த வார்த்தைகளில் மீண்டும் விவரிக்க ஹாரியால் முடியவில்லை.
“ஒன்றுமில்லை,” என்று அவன் கூறினான். “நான் இப்போதே கிளம்புவது நல்லது. அடுத்தது உருவ மாற்ற வகுப்பு. அதற்குத் தேவையான புத்தகங்களை நான் எடுத்துக் கொண்டு போக வேண்டும்.”
ஹாரி அங்கிருந்து நகர்ந்தான். எர்னி தன்னைப் பற்றிக் வளைய வந்து கூறியவையே அவனது மனத்தில் வளைய வந்து கொண்டிருந்தன.
“தான் மகுள்களுக்குப் பிறந்தவன் என்பதை ஜஸ்டின் ஹாரி பாட்டரிடம் உளறிக் கொட்டியிருந்த நாளில் இருந்தே இது போன்ற ஒன்றை ஜஸ்டின் எதிர்பார்த்து வந்திருந்தான் . .
ஹாரி பாட்டர் பூமி அதிரும்படி மாடிப்படிகளில் திம்திம்மென்று ஏறி இன்னொரு தாழ்வாரத்தை அடைந்தான். சரியாகப் பொருத்தப்படாமல் இருந்த சன்னல் கதவுகளுக்கு இடையே இருந்த இடைவெளி வழியாக வீசிய கடுங்குளிர்க்காற்று அத்தாழ்வாரத்தில் இருந்த தீப்பந்தங்களை அணைத்துவிட்டிருந்ததால் அத்தாழ்வாரம் மேலும் இருட்டாக இருந்தது. அவன் அத்தாழ்வாரத்தின் பாதியை அடைந்திருந்தபோது, தரையில் கிடந்த எதன்மீதோ இடறித் தலைகுப்புற விழுந்தான்.
தான் எதன்மீது விழுந்திருந்தோம் என்று அவன் தன் கண்களை இடுக்கிக் கொண்டு பார்த்தான். அங்கு அவன் கண்ட காட்சி அவன் வயிற்றில் யாரோ ஈட்டியைப் பாய்ச்சியதுபோல இருந்தது. அத்தரையில் உறைந்து போயிருந்த நிலையில் ஜஸ்டின் விழுந்து கிடந்தான். அவனது முகத்தில் அதிர்ச்சி உறைந்து போயிருந்தது. அவனது கண்கள் மேற்கூரையை வெறுமையாக வெறித்துக் கொண்டிருந்தன. அது மட்டுமல்ல. அவனுக்கு அருகே இன்னோர் உருவமும் கிடந்தது. ஹாரி தன் வாழ்நாளில் பார்த்த மிக வினோதமான காட்சி அதுவாகத்தான் இருக்க வேண்டும்.
அது கிட்டத்தட்டத் தலையில்லாத நிக். இப்போது அது வெள்ளை வெளேரென்றோ, அல்லது ஒளிபுகக்கூடிய ஒன்றாகவோ இருக்கவில்லை. அது கருப்பாகப் புகைபோல இருந்தது. அது தரையிலிருந்து ஆறு அங்குல உயரத்தில் தரைக்கு இணையாக உயிரற்று மிதந்து கொண்டிருந்தது. அதன் தலை, பாதி அறுந்த நிலையில் கழுத்தோடு ஒட்டிக் கொண்டிருந்தது. அதன் முகத்திலும் ஜஸ்டினின் முகத்தில் இருந்த அதே அதிர்ச்சி உறைந்திருந்தது.
ஹாரி எழுந்து நின்றான். அவனுக்கு வேகமாக மூச்சு வாங்கிக் கொண்டிருந்தது. அவனது இதயம் மத்தளம்போல முழங்கிக் கொண்டிருந்தது. ஆளரவமற்று இருந்த அத்தாழ்வாரத்தில் அவன் அங்குமிங்கும் பார்த்தான். ஒரு நீண்ட வரிசையில் சிலந்திப் பூச்சிகள் தங்களால் முடிந்த அளவுக்கு அந்த உடல்களிலிருந்து வேகவேகமாக வெளியேறிக் கொண்டிருந்தன. அங்கிருந்த ஒரே சத்தம் இரு பக்கங்களிலும் இருந்த வகுப்புகளில் பாடம் எடுத்துக் கொண்டிருந்த ஆசிரியர்களின் மட்டுப்படுத்தப்பட்டப் குரல்கள் மட்டுமே.
அவனால் இப்போது அங்கிருந்து ஓடியிருக்க முடியும். அவன் அங்கு இருந்தான் என்பது யாருக்கும் தெரிய வராது. ஆனால் ஜஸ்டினையும் நிக்கையும் இங்கு அம்போ என்று விட்டுவிட்டு அவனால் போக முடியாது … அவனுக்கு இப்போது உதவி தேவை. அவனுக்கும் இதற்கும் தொடர்பில்லை என்று யாராவது நம்புவார்களா?
என்ன செய்வது என்று பரிதவிப்புடன் ஹாரி அங்கு நின்று கொண்டிருந்தபோது, அவனுக்கு அடுத்து இருந்த ஒரு கதவு சத்தமாகத்
திறக்கப்பட்டது. அதிலிருந்து பீவ்ஸ் படுவேகமாக வந்தது.
“ஹாரி பாட்டர், சூரி பாட்டர்!” என்று அது கொக்கரித்தது. என்ன வேலை? அவர் இங்கே எதற்காகப் பதுங்கி இருக்கிறார்?’ – மூக்குக்கண்ணாடியைத் தட்டிவிட்டது. “ஹாரி பாட்டருக்கு இங்கு பீவ்ஸ் ஒரு குட்டிக்கரணம் அடித்துக் கொண்டிருந்தபோது, தொங்கிக் கொண்டிருந்த நிலையில், அது ஜஸ்டினையும் நிக்கையும் அந்தரத்தில் பாதியிலேயே அப்படியே ஸ்தம்பித்தது. தலைகீழாகத் பார்த்தது. அது தன்னை நேராக்கிக் கொண்டு, ஒரு முறை ஆழமாக சுவாசித்தது. ஹாரி அதைத் தடுத்து நிறுத்த முனைவதற்குள் அது பெருங்குரலெடுத்துக் கத்தத் துவங்கியது. “தாக்குதல்! தாக்குதல்! மற்றொரு தாக்குதல்! மனிதர்களுக்கும் சரி, ஆவிகளுக்கும் சரி, இங்கு எந்தப் பாதுகாப்பும் இல்லை! உங்கள் உயிரைப் பாதுகாத்துக் கொள்ள ஓடிவிடுங்கள்! தாக்குதல்!”
கிறீச்! – கிறீச்! – கிறீச்! தாழ்வாரத்தில் இருந்த அறைகளில், கதவுகள் ஒவ்வொன்றாகத் திறந்தன. மக்கள் கூட்டமாக ஓடி வந்தனர். நீண்ட நொடிகளுக்கு அங்கு பயங்கரக் குழப்பமான சூழல் நிலவியது. அந்தக் களேபரத்தில், ஜஸ்டின், கூட்டத்தினரின் கால்களால் மிதித்துத் தள்ளப்படும் அபாயத்தில் இருந்தான். கிட்டத்தட்டத் தலையில்லாத நிக்கிற்கு உள்ளேயே பலர் நின்று கொண்டிருந்தனர். ஆசிரியர்கள் அமைதி காக்கும்படிச் சத்தம் போட்டுக் கொண்டிருந்தபோது, கூட்டத்தினர் தன்னைச் சுவரோடு சவராக அமுக்கியிருந்ததை ஹாரி கண்டான். முதலில் பேராசிரியர் மெக்கானகல் அங்கு ஓடி வந்தார். அவருக்குப் பின்னால் அவரது வகுப்பு முழுவதும் ஓடி வந்தது. அக்கூட்டத்தில் இருந்த ஒரு மாணவியின் கூந்தல் கறுப்பு வெள்ளையில் பட்டை போட்ட மாதிரி இருந்தது. பேராசிரியர் மெக்கானகல் தன் மந்திரக்கோலை உபயோகித்து ஒரு பயங்கரச் சத்தத்தை ஏற்படுத்தினார். அங்கு உடனே மௌனம் அரங்கேறியது. எல்லோரும் உடனடியாக வகுப்பறைகளுக்கு உள்ளே செல்லுமாறு அவர் உத்தரவிட்டார். அக்கூட்டம் கலைந்து முடிந்த அடுத்தக் கணம், எர்னியும் பிற ஹஃபில்பஃப் அணியினரும் மூச்சு வாங்க அங்கு வந்து சேர்ந்தனர்.
“கையும் களவுமாகப் பிடிபட்டுவிட்டான்!” என்று எர்னி காட்டுக்கூச்சல் போட்டான். அவனது முகம் வெளுத்துப் போயிருந்தது. அவன் தனது விரல்களை ஹாரியை நோக்கிச் சற்று மிகையாகவே நீட்டிக் கொண்டிருந்தான்.
“போதும், எர்னி!” என்று பேராசிரியர் மெக்கானகல் கடுமையாகக் கூறினார்.
பீவ்ஸ் கொடூரமாகப் புன்னகைத்துக் கொண்டு, அந்த இடத்திற்கு மேலாக வட்டமிட்டுக் கொண்டிருந்தது. பீவ்ஸுக்கு அமளி துமளி என்றால் கொள்ளைப் பிரியம். ஆசிரியர்கள் ஜஸ்டின் மற்றும் நிக்கின் உடல்களை ஆராய்ந்து கொண்டிருந்தபோது, பீவ்ஸ் ஒரு பாடலைப் பாடியது.
“ஓ! ஹாரி பாட்டர்! ஓ! சூரிப் பாட்டர்!
அடடா, நீ என்ன காரியம் பண்ணிவிட்டாய்?
நீ மாணவர்களைக் கொன்று குவித்துக் கொண்டிருக்கிறாய்!
அது வேடிக்கை என்று நினைத்தாயோ கொடுங்கோலா!”
“போதும் நிறுத்து!” என்று பேராசிரியர் மெக்கானகல் சுள்ளேன்று விழுந்தார். பீவ்ஸ் தன் நாக்கை ஹாரியை நோக்கி நீட்டியவாறே பின்பக்கமாக நகர்ந்து மறைந்தது.
பேராசிரியர் ஃபிளிட்விக்கும் வானவியல் துறைப் பேராசிரியரான சினிஸ்ட்ராவும் ஜஸ்டினை மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்றனர். ஆனால் நிக்கை என்ன செய்ய வேண்டும் என்று யாருக்கும் தெரியவில்லை. கடைசியில் பேராசிரியர் மெக்கானகல் மந்திரத்தில் ஒரு பெரிய விசிறியை வரவழைத்தார். அதை அவர் எர்னியிடம் கொடுத்து, நிக்கை மாடிப்படிகளில் காற்றில் அடித்துத் தள்ளிக் கொண்டே செல்லுமாறு உத்தரவிட்டார். அவன் நிக்கை அவ்வாறே தள்ளிச் சென்றான். இப்போது ஹாரியும் பேராசிரியர் மெக்கானகல்லும் தனியாக விடப்பட்டிருந்தனர்.
“ஹாரி, என்னுடன் வா!” என்று அவர் கூறினார்.
ஹாரி உடனடியாக, “பேராசிரியரே, நான் இதைச் செய்யவில்லை என்று சத்தியம் செய்கிறேன் -” என்று பதறினான்.
“ஹாரி, இப்போது இது என் கையை மீறிப் போய்விட்டது!” என்று பேராசிரியர் மெக்கானகல் கத்தரித்தாற்போலக் கூறினார். அவர்கள் இருவரும் அமைதியாக ஒரு முனை வரை சென்றனர். கோரமாகத் தோற்றமளித்த ஒரு பெரிய விசித்திர விலங்கின் சிலையருகே அவர் நின்றார்.
பின், “எலுமிச்சம்பழ மிட்டாய்!” என்று கூறினார். அது ஒரு சங்கேத வார்த்தை என்பது தெரிந்தது. ஏனெனில் அந்தச் சிலை திடீரென்று உயிர்ப்பெற்று ஒரு பக்கமாகத் தாவியது. அதன் பின்னாலிருந்த சுவர் ஒன்று இரண்டாகப் பிரிந்தது. அடுத்து என்ன பயங்கரம் நிகழவிருந்ததோ என்று ஹாரி பயந்து கொண்டிருந்தாலும் அவனால் வியக்காமல் இருக்க முடியவில்லை. இரண்டாகப் பிளந்த அந்தச் சுவருக்குப் பின்னால் ஒரு சுழல் படிக்கட்டு இருந்தது. அது ஒரு தானியங்கிப் படிக்கட்டைப்போல மேல் நோக்கி நகர்ந்து கொண்டிருந்தது. அவனும் பேராசிரியர் மெக்கானகல்லும் அதில் ஏறினர். அவர்களுக்குப் பின்னாலிருந்த சுவர் பலத்தச் சத்தத்துடன் மீண்டும் ஒன்றுசேர்ந்து கொண்டது. அவர்கள் வட்டமாகச் சுழன்றபடி மேலும் உயரே உயரே போய்க் கொண்டே இருந்ததில் ஹாரிக்குத் தலை சுற்றத் தொடங்கியது. கடைசியில், ஹாரி, பளபளத்துக் கொண்டிருந்த ஒரு கருவாலி மரக் கதவைக் கண்டான். அக்கதவில் இருந்த அழைப்புத் தட்டி, சிங்கத்தின் உடல், வால் மற்றும் பின்னங்கால்களும், பெரிய கழுகின் முகம், முன்னங்கால்கள் மற்றும் சிறகுகளும் ஒன்றாக இணைக்கப்பட்ட கிரிஃபான் என்ற மாயாஜால் விலங்கின் உருவத்தில் இருந்தது.
தான் எங்கு அழைத்துச் செல்லப்பட்டுக் கொண்டிருந்தோம்என்பது ஹாரிக்குப் புரிந்துவிட்டது. இங்குதான் டம்பிள்டோர் வாழ்ந்து கொண்டிருக்க வேண்டும்.
12. பலகூட்டுச்சாறு மாயத் திரவம்
அவர்கள் அந்த மாடிப்படியின் உச்சியிலிருந்த கற்படிக்கட்டிலிருந்து இறங்கினர். பேராசிரியர் மெக்கானகல் அக்கதவில் மென்மையாகத் தட்டினார். அக்கதவு சத்தமில்லாமல் திறந்ததும் அவர்கள் உள்ளே நுழைந்தனர். பேராசிரியர் மெக்கானகல் ஹாரியைக் காத்திருக்குமாறு பணித்துவிட்டு, அவனைத் தனியாக விட்டுவிட்டுச் சென்றார்.
ஹாரி சுற்றுமுற்றும் பார்த்தான். ஒன்று மட்டும் அவனுக்கு உறுதியாகத் தெரிந்தது. அவன் பார்த்திருந்த ஆசிரியர்களின் அலுவலகங்களிலேயே டம்பிள்டோரின் அலுவலகம்தான் மிகவும் சுவாரசியமானதாக இருந்தது. பள்ளியிலிருந்து தான் வெளியேற்றப்பட்டுவிடுவோம் என்ற பயம் அவனை பயங்கரமாகக் குடைந்து கொண்டிருக்காமல் இருந்திருந்தால், அந்த அலுவலகத்தைச் சுற்றிப் பார்க்கத் தனக்குக் கிடைத்த இந்தச் சந்தர்ப்பத்திற்காக அவன் மிகவும் மகிழ்ந்திருப்பான்.
அது ஒரு பெரிய வட்ட வடிவமான அறை. வேடிக்கையான மென்மையான சத்தங்களால் அது நிறைந்திருந்தது. ஏராளமான வெள்ளிக் கருவிகள் ஒல்லியான கால்களைக் கொண்டிருந்த மேசைகளின்மீது வைக்கப்பட்டிருந்தன. அவை ‘விர்’ என்ற ஒலியுடன் சுழன்று கொண்டிருந்தன. சிறிய புகையையும் அவை வெளிவிட்டுக் கொண்டிருந்தன. முந்தைய தலைமை ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியைகளின் படங்கள் அங்கிருந்த சுவர்களை அலங்கரித்துக் எல்லோரும் தங்களுடைய கொண்டிருந்தன. அவர்கள் சட்டங்களுக்குள் குட்டித் தூக்கம் போட்டுக் கொண்டிருந்தனர். அங்கு பிரம்மாண்டமான மேசை ஒன்றும் இருந்தது. அதன் கால்களின் முனைகள் விலங்குகளின் கூரிய நகங்களின் வடிவில் இருந்தன. அதன் பின்னால் இருந்த ஓர் அலமாரியில் ஓர் அழுக்கான, நைந்து போயிருந்த, மந்திரவாதிகளின் தொப்பி ஒன்று அமர்ந்திருந்தது – வகை பிரிக்கும் தொப்பிதான் அது!
ஹாரி சிறிது தயங்கினான். பிறகு, சுவர்களில் தூங்கிக் கொண்டிருந்த மந்திரவாதிகள் மற்றும் மந்திரவாதினிகளை ஒரு நோட்டம் விட்டான். அந்தத் தொப்பியை எடுத்து ஒரு முறை தன் தலையில் போட்டுக் கொண்டால் ஒன்றும் குடிமூழ்கிப் போய்விடாது என்று அவன் நினைத்தான். தலையில் போட்டுப் பார்த்தால், அது தன்னைச் சரியான அணியில்தான் போட்டிருந்ததா என்பதை அவன் உறுதி செய்து கொள்ளலாமே!
அவன் சத்தமில்லாமல் அந்த மேசைக்கு அருகே சென்று, அத்தொப்பியை எடுத்து மெதுவாகத் தன் தன் தலையில் அணிந்து கொண்டான். அது மிகவும் பெரிதாக இருந்ததால், கடந்த முறைபோலவே இப்போதும் அது அவனது கண்களை மறைத்தது. இருட்டாக இருந்த அதன் உட்புறத்தை ஹாரி வெறித்துக் கொண்டிருந்தான். பின் ஒரு சிறிய குரல் அவனது காதுகளில் ஒலித்தது: “என்ன ஹாரி பாட்டர், உன் மண்டைக்குள் ஏதாவது குடைந்து கொண்டிருக்கிறதா?”
“ஆமாம்!” என்று ஹாரி முணுமுணுத்தான். “ம்ம் . . . உன்னைத் தொந்தரவு செய்வதற்கு மன்னிக்கவும் – நான் உன்னை ஒன்று கேட்கலாமா?-“
“நான் உன்னைச் சரியான அணியில்தான் போட்டிருக்கிறேனா என்று நீ உன் மூளையைக் குழப்பிக் கொண்டிருக்கிறாயா?” என்று அத்தொப்பி சாமர்த்தியமாகக் கேட்டது. “ஒன்றை ஒப்புக் கொண்டாக வேண்டும் . . . உன்னை எங்கு போடுவது என்பதைத் தீர்மானிப்பது எனக்குக் கடினமாகத்தான் இருந்தது. ஆனால் நான் முன்பு என்ன கூறினேனோ அதில் நான் உறுதியாக இருக்கிறேன் -” ஹாரியின் இதயம் படபடத்தது – நீ ஸ்லிதரின் அணியில் இருந்திருந்தால் நன்றாகவே இருந்திருப்பாய்!”
ஹாரிக்கு வயிற்றைப் புரட்டியது. அவன் அத்தொப்பியின் உச்சியைப் பிடித்து அதை வெளியே இழுத்தான். சாயம் போயிருந்த, அழுக்கான அத்தொப்பி அவனது கையில் துவண்டு போய்க் கிடந்தது. அவன் அதை மீண்டும் அந்த அலமாரிக்குள் திணித்து வைத்தான். அவனுக்குக் குமட்டிக் கொண்டு வருவதுபோல இருந்தது.
மௌனமாக இருந்த அத்தொப்பியைப் பார்த்து, ஹாரி, “நீ கூறியது தவறு,” என்று சத்தமாகக் கூறினான். அது அசையவே இல்லை. அதைப் பார்த்தவாறே அவன் பின்னால் நகர்ந்தான். அப்போது வினோதமான, கரகரப்பான ஒரு சத்தம் அவனுக்குப் பின்னாலிருந்து கேட்டது. அவன் ஒரு வட்டமடித்துப் பின்னால் திரும்பினான்.
அவன் அங்கு தனியாக இருக்கவில்லை. கதவிற்கு பின்னால் இருந்த, தங்கத்தில் செய்யப்பட்ட, பறவைகள் உட்கார்வதற்கான இடத்தில், வயதான பறவை ஒன்று அமர்ந்திருந்தது. பாதி முடி பிடுங்கப்பட்ட ஒரு வான்கோழிபோல அது இருந்தது. ஹாரி அதை முறைத்துப் பார்த்தான். அது அவனை அச்சுறுத்துவதைப் போலப் பார்த்தது. பின் அது மீண்டும் அந்தக் கரகரப்பான சத்தத்தை நினைத்தான். அதன் கண்கள் ஜீவனற்று இருந்தன. ஹாரி பார்த்துக் ஏற்படுத்தியது. அது நோய்வாய்ப்பட்டிருக்க வேண்டும் என்று ஹாரி பார்த்துக் கொண்டிருந்தபோதே ஓரிரு இறகுகள் அதன் வாலில் இருந்து உதிர்ந்தன.
டம்பிள்டோரின் அலுவலகத்தில் அவரது செல்லப் பறவையோடு தான் தனியாக இருந்த சமயத்தில் அது இறந்து போவது ஒன்றுதான் தனக்கு இப்போது மிகவும் அவசியம் என்று ஹாரி நினைத்துக் கொண்டிருந்தபோதே அப்பறவையின்மீது திடீரென்று தீப்பற்றிக் கொண்டது.
ஹாரி அதிர்ச்சியில் கத்திவிட்டு, மேசையை நோக்கிப் பின்னால் நகர்ந்தான். அங்கு எங்காவது தண்ணீர் இருக்குமா என்று அவன் தேடித் தட்டழிந்தான். ஆனால் எதுவும் தட்டுப்படவில்லை. இதற்கிடையில் அப்பறவை ஒரு நெருப்புக் கோளமாக மாறியிருந்தது. பிறகு அது பலமாக ஒருமுறை கத்தியது. அடுத்தக் கணம், தரையில் புகைந்து கொண்டிருந்த ஒரு பிடிச் சாம்பலைத் தவிர வேறு எதுவும் மிச்சமிருக்கவில்லை.
அப்போது அலுவலகக் கதவு திறந்தது. டம்பிள்டோர் உள்ளே நுழைந்தார். அவரது முகத்தில் அருளே இருக்கவில்லை.
“பேராசிரியரே,” என்று ஹாரி துவக்கினான். “உங்கள் பறவை என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை – அது திடீரென்று ஒரு நெருப்புக் கோளமாக மாறிவிட்டது -”
ஹாரியை ஆச்சரியத்தில் மூழ்கடிக்கும் விதத்தில் அவர் அவனைப் பார்த்துப் புன்னகைத்தார்.
“அதனுடைய வேளை வந்துவிட்டது,” என்று அவர் கூறினார். “அது பல நாட்களாகவே மிகவும் மோசமான நிலையில்தான் இருந்து வந்தது. ஆக வேண்டியதைப் பார்க்கும்படி நான் அதனிடம் பல முறை சொல்லி வந்துள்ளேன்.”
ஹாரியின் முகத்தில் பரவியிருந்த பிரமிப்பைப் பார்த்து அவர் மென்மையாகச் சிரித்தார்.
“ஃபாக்ஸ் ஒரு பீனிக்ஸ் பறவை. இறப்பதற்கான வேளை வரும்போது பீனிக்ஸ் பறவைகள் நெருப்புக் கோளங்களாக மாறிவிடும். பின் தமது சாம்பலில் இருந்து அவை மீண்டும் உயிர்பெற்று எழுந்துவிடும். இப்போது அதைப் பார்..”
ஹாரி சரியான சமயத்தில் தன் தலையைத் திருப்பினான். அப்போதுதான் பிறந்திருந்த, சுருக்கங்களுடன் இருந்த ஒரு குட்டிப் பறவை அந்தச் சாம்பலில் இருந்து வெளியே வந்து கொண்டிருந்தது. அது அந்த வயதான பறவையைப்போலவே அவலட்சணமாக இருந்தது.
டம்பிள்டோர் தன் இருக்கையில் உட்கார்ந்து கொண்டு, “அது எரியும் தினத்தன்று நீ அதைப் பார்க்க நேர்ந்தது உன் துரதிர்ஷ்டம்தான்,” என்று கூறினார். “இப்பறவை பெரும்பாலான சமயங்களில் தனது சிவப்பு மற்றும் தங்க நீராகி சிறைகளோடு மிக மிக அழகாகவே இருக்கும். இந்த பீனிக்ஸ் பறவைகள் அதிஅற்புதமான ஜீவன்கள். அவற்றால் மிகவும் கனமான பொருட்களைக்கூட மிக எளிதாகச் சுமந்து செல்ல முடியும், அவற்றின் கண்ணீருக்கு நோய்களைக் குணப்படுத்தும் சக்தி உண்டு. அவை மிகவும் நன்றியுடைய செல்லப் பிராணிகள்.”
ஹாரி, ஃபாக்ஸ் ஒரு நெருப்புக் கோளமாக ஆன அதிர்ச்சியில் இருந்ததால், தான் ஏன் அங்கு அழைத்து வரப்பட்டிருந்தோம் என்பதையே மறந்து போயிருந்தான். ஆனால் டம்பிள்டோர் தனது மேசைக்குப் பின்னால் இருந்த, உயரமான, முதுகுடன் இருந்த நாற்காலியில் வசதியாக உட்கார்ந்து கொண்டு தன்னுடைய நீல நிறக் கண்களால் தன்னைத் துளைத்துவிடுவதுபோலப் பார்த்தபோதுதான், ஹாரிக்கு எல்லாமே நினைவிற்கு வந்தது.
டம்பிள்டோர் தன் வாயைத் திறப்பதற்கு முன்னால், அவரது அலுவலகக் கதவு ‘டமால்’ என்று பெரும் சத்தத்துடன் திறந்தது. ஹாக்ரிட் அதிரடியாக உள்ளே நுழைந்தார். அவரது கண்கள் அலைபாய்ந்து கொண்டிருந்தன. அவர் தன்னுடைய குரங்குக் குல்லாயை, காட்டுத்தனமாக வளர்ந்திருந்த தனது கருந்தலைவரை மடித்து விட்டிருந்தார். அந்தச் செத்தச் சேவல் இன்னும் அவருடைய கையில் ஆடிக் கொண்டிருந்தது.
“பேராசிரியரே, அதைச் செய்தது ஹாரியல்ல,” என்று ஹாக்ரிட் அவசர அவசரமாகக் கூறினார். “அந்தப் பையன் கல்லாக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்படுவதற்கு ஒருசில வினாடிகளுக்கு முன்பு ஹாரி என்னுடன்தான் பேசிக் கொண்டிருந்தான். சார், அவனுக்கு அதற்கு நேரமே இருந்திருக்காது”
டம்பிள்டோர் எதையோ கூற முயன்றார். ஆனால் ஹாக்ரிட் தனது புலம்பலை நிறுத்தவே இல்லை. அவர் கோபத்தில் தன் சேவலை ஆட்டி ஆட்டிப் பேசியதில், அதிலிருந்து சிறகுகள் எல்லா இடங்களிலும் விழுந்தன.
“அது கண்டிப்பாக அவனாக இருக்க முடியாது. தேவையானால் நான் மந்திரஜால அமைச்சகத்தின் முன்னால் வந்து சத்தியம் செய்யக்கூடத் தயார் . . .”
“ஹாக்ரிட், நான் -”
“சார், நாம் தவறான பையனைப் பிடித்து வைத்துள்ளோம்! ஹாரி ஒருபோதும் அப்படிச் செய்ய மாட்டான் என்பதை நான் அறிவேன் –”
“ஹாக்ரிட்!” என்று டம்பிள்டோர் சத்தமாகக் கூறினார். “அவர்களை ஹாரி தாக்கினான் என்று நானும் நினைக்கவில்லை.”
“ஓ!” என்று ஹாக்ரிட் கூறினார். அவரது கையிலிருந்த அச்சேவல் நழுவித் தரையில் விழுந்தது. “தலைமையாசிரியரே, அப்படியானால், நான் வெளியே காத்திருக்கிறேன்.”
ஹாக்ரிட் கொஞ்சம் சங்கடத்துடன் நெளிந்தவாறே வெளியே சென்றார்.
டம்பிள்டோர் தன் மேசையில் கிடந்த சேவல் இறகுகளைக் கீழே தட்டிவிட்டுக் கொண்டிருந்தபோது, ஹாரி, “பேராசிரியரே, அது நானல்ல என்று நீங்கள் நினைக்கிறீர்களா?” என்று நம்பிக்கையுடன் கேட்டான்.
“இல்லை ஹாரி, நீ அதைச் செய்தாய் என்று நான் நினைக்கவில்லை,” என்று டம்பிள்டோர் கூறினார். ஆனாலும் அவரது முகம் மீண்டும் ஒளியிழந்தது. “ஆனால் நான் உன்னிடம் சிறிது பேச விரும்புகிறேன்.”
டம்பிள்டோர் தனது நீண்ட விரல்களைக் கோர்த்தவாறு, ஹாரியை எடைபோட்டுக் கொண்டிருந்தார். ஹாரி பதற்றத்துடன் காத்திருந்தான்.
“நீ எதையாவது என்னிடம் கூற விரும்புகிறாயா என்று நான் தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறேன்,” என்று அவர் மென்மையாகக் கூறினார். “எது வேண்டுமானாலும்!”
ஹாரிக்கு என்ன கூறுவதென்றே தெரியவில்லை. “அடுத்து நீங்கள்தான் ஈன ரத்தங்களே!” என்று மால்ஃபாய் கூறியதைப் பற்றியும், பலகூட்டுச்சாறு மாயத் திரவத்தைப் பற்றியும் அவன் நினைத்துப் முனகல் மர்ட்டிலின் அறையில் காய்ச்சப்பட்டுக் கொண்டிருந்த பார்த்தான். அதன் பிறகு, தன் காதுகளில் இருமுறை ஒலித்திருந்த உருவமற்றக் குரலைப் பற்றியும், ரான் அது குறித்து, ‘ஆனால், மந்திரஜால உலகத்தில்கூட வேறு யாருக்கும் கேட்காத ஒரு குரல் ஒருவனுக்கு மட்டும் கேட்பது நல்ல அறிகுறி அல்ல,” என்று கூறியதைக் குறித்தும் நினைத்துப் பார்த்தான். தன்னைப் பற்றி எல்லோரும் என்ன கூறிக் கொண்டிருந்தனர் என்பதைப் பற்றியும் அவன் நினைத்துப் பார்த்தான். அதோடு, தான் ஏதோ ஒரு வழியில் சலசார் ஸ்லிதரினோடு சம்பந்தப்பட்டிருக்கலாம் என்ற பயம் தனக்குள் அதிகரித்துக் கொண்டிருந்ததைப் பற்றியும் அவன் நினைத்துப் பார்த்தான்.
இறுதியில், “இல்லை,” என்று அவன் கூறினான். “பேராசிரியரே, உங்களிடம் கூறுவதற்கு என்னிடம் எதுவுமில்லை.”
ஜஸ்டின் மற்றும் நிக்மீது நடத்தப்பட்ட இரட்டைத் தாக்குதல், மக்களிடம் இதுவரை நிலவி வந்திருந்த பதற்றத்தைப் பீதியாக மாற்றியிருந்தது. ஆச்சரியப்படத்தக்க வகையில், நிக்கிற்கு நேர்ந்த கதிதான் மக்களை அதிகமாகக் கவலை கொள்ளச் செய்தது. ஆவியைப் போய் ஏதாவது ஒன்று இப்படிச் செய்யுமா என்று மக்கள் ஒருவருக்கு ஒருவர் கேட்டுக் கொண்டனர். ஏற்கனவே இறந்து போயிருந்த ஒருவரைத் தாக்க வேண்டும் என்றால் அதற்கு எவ்வளவு சக்தி இருக்க வேண்டும்? கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு வீட்டிற்குச் செல்வதற்காக ஹாக்வார்ட்ஸ் எக்ஸ்பிரஸ் ரயிலில் முன்பதிவு செய்து கொள்ள மிகவும் அடிதடியாக இருந்தது.
ரான் ஹாரியிடமும் ஹெர்மயனியிடமும், “இந்தப் போக்கில் போனால், நாமும், மால்ஃபாய், கிராப் மற்றும் காயலும் மட்டுமே இங்கிருப்போம் என்று தோன்றுகிறது. இது மிக ஜாலியான ஒரு விடுமுறையாக இருக்கப் போகிறது!” என்றான்.
மால்ஃபாய் என்ன செய்தானோ அதையை கிராபும் காயலும் எப்போதும் செய்து வந்ததால், மால்ஃபாயைப் பின்பற்றி அவர்களும் பெரும்பாலானவர்கள் தங்கள் வீட்டிற்குப் போக முடிவு செய்திருந்தது அங்கேயே தங்கிக் கொள்வதென்று முடிவு செய்திருந்தனர். குறித்து ஹாரி மகிழ்ச்சியே கொண்டான். ஏனெனில், தனக்குத் திடீரென்று விஷப் பல் முளைத்துவிடும் என்பதுபோலவோ அல்லது தன்னைக் கண்டு பயந்து ஒதுங்கியதும், தான் அவர்களைக் கடந்து தான் விஷத்தைக் கக்கிவிடுவோம் என்பதுபோலவோ சென்றபோதெல்லாம் அவர்கள் தன்னைச் சுட்டிக்காட்டித் தங்களுக்குள் ரகசியக் குரல்களில் பேசிக் கொண்டதும் அவனுக்குச் சலிப்பை ஏற்படுத்தியிருந்தன.
ஆனால் ஃபிரெட்டுக்கும் ஜார்ஜுக்கும் இது வேடிக்கையாக இருந்தது. ஹாரி தாழ்வாரங்களில் நடந்து சென்றபோதெல்லாம் அவர்கள் அவனுக்கு முன்னால் சென்று, “தீய மந்திர சக்திகளின் சக்கரவர்த்தி, கீர்த்தி வாய்ந்த ஸ்லிதரினின் உண்மையான வாரிசு வந்து கொண்டிருக்கிறார், பராக்! பராக்! வழிவிடுங்கள், வழிவிடுங்கள்!” என்று கத்திக் கொண்டிருந்தனர்.
அவர்களுடைய இந்த நடவடிக்கை பெர்சிக்குச் சுத்தமாகப் பிடிக்கவில்லை.
“இது ஒன்றும் வேடிக்கையான விஷயமல்ல,” என்று அவன் கறாராகக் கூறினான்.
“ஓ! அப்படியா? பரவாயில்லை. இப்போது வழியைவிட்டு விலகு, ஹாரி மகாராஜா அவசரமாக ஓரிடத்திற்குச் செல்ல வேண்டியிருக்கிறது,” என்று ஃபிரெட் கூறினான்.
“ஆமாம்! அவர் தனது விஷப் பற்களுடன்கூடிய ஏவலாளுடன் தனது தர்பாரான ரகசியங்கள் அடங்கிய பாதாள அறைக்குத் தேநீர் குடிக்க விரைந்து கொண்டிருக்கிறார்!” என்று ஜார்ஜ் முழங்கினான்.
ஜின்னிக்கும் அவர்களது இச்செயல் கடுப்பையும் எரிச்சலையும் ஏற்படுத்தியது.
அடுத்து அவன் யாரைக் குறி வைத்திருந்தான் என்று நாலு பேருக்குக் கேட்கும்படி உரத்தக் குரலில் ஃபிரெட் ஹாரியிடம் கேட்ட ஒவ்வொரு முறையும், அல்லது ஜார்ஜ் ஹாரியை எதிர்கொண்டபோது ஒரு பெரிய வெள்ளைப் பூண்டை எடுத்து அவனை விரட்டுவதைப்போலப் பாசாங்கு செய்த ஒவ்வொரு முறையும், ஜின்னி, “அப்படிச் செய்யாதீர்கள்!” என்று ஒப்பாரி வைத்தாள்.
ஆனால் ஹாரி அதைப் பற்றிக் கவலைப்படவில்லை. தன்னை ஸ்லிதரினின் வாரிசாகப் பார்ப்பது நகைப்புக்குரிய விஷயம் என்று ஃபிரெட்டும் ஜார்ஜுமாவது கருதினர் என்பது அவனுக்குத் தெம்பூட்டியது. ஆனால் இவர்களின் கோமாளித்தனமான கூத்துக்கள் மால்ஃபாயைக் கொதிப்படைய வைத்தன. இவர்கள் இம்மாதிரி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்ததைப் பார்த்த ஒவ்வொரு முறையும் அவன் மிகவும் வெறுப்படைந்தான்.
“ஏனென்றால், தான்தான் ஸ்லிதரினின் உண்மையான வாரிசு என்று கூற அவன் துடிதுடித்துக் கொண்டிருக்கிறான்;” என்று ரான் தனக்கு எல்லாம் தெரியும் என்பதுபோலப் பேசினான். “தன்னை நமக்குத் தெரியுமே. இப்போது என்னடாவென்றால் அவனது யார் எதில் தோற்கடித்தாலும் அவனுக்குப் பிடிக்காது என்பதுதான் இருண்ட நடவடிக்கைகளுக்கு நீ சொந்தம் கொண்டாடிக் கொண்டிருக்கிறாய்.”
“இது சீக்கிரம் ஒரு முடிவுக்கு வந்துவிடும்,” என்று ஹெர்மயனி திருப்தியான குரலில் கூறினாள். “பலகூட்டுச்சாறு மாயத் திரவம் கிட்டத்தட்டத் தயாராகிவிட்டது. நாம் வெகு விரைவில் அவனுடைய வாயிலிருந்து உண்மையை வரவழைத்துவிடலாம்.”
ஒருவழியாக அவ்வருடத்தின் முதல் பள்ளிப் பருவம் முடிவடைந்தது. கோட்டைக்கு வெளியே இருந்த மைதானத்தைப் போர்த்தியிருந்த பனியின் ஆழத்திற்கு, கோட்டைக்கு உள்ளேயும் மிக ஆழமான அமைதி படர்ந்திருந்தது. அது பொலிவின்றி இருந்ததாக ஹாரி கருதவில்லை. மாறாக, அந்த அமைதியை அவன் வரவேற்றான். தனக்கும் ரானுக்கும் ஹெர்மயனிக்கும் மட்டுமே கிரிஃபின்டார் கோபுரம் சொந்தமாக இருந்தது என்ற சௌகரியத்தை அவன் கொண்டாடினான். அதாவது, யாரையும் தொந்தரவு செய்யாமல், ‘வெடித்துச் சிதறும் ஸ்னாப்’ என்ற சீட்டு விளையாட்டை அவர்களால் சத்தமாக விளையாட முடியும். ஒற்றைக்கு ஒற்றைச் சண்டையையும் தனிமையில் அவர்களால் பயிற்சி செய்து பார்க்க முடியும். பில்லைப் பார்ப்பதற்காகத் தங்களது பெற்றோருடன் எகிப்திற்குப் போவதற்குப் பதிலாகப் பள்ளியிலேயே தங்கிவிடுவதென்று ஃபிரெட்டும் ஜார்ஜும் ஜின்னியும் முடிவு செய்திருந்தனர். அவர்கள் குழந்தைத்தனமாக நடந்து கொள்வதாகப் பெர்சி கருதியதால், அவன் தனது பெரும்பாலான நேரத்தை கிரிஃபின்டார் பொது அறையில் கழிப்பதைத் தவிர்த்தான். பிரச்சனையான இந்தக் காலகட்டத்தில், ஆசிரியர்களுக்கு ஆதரவு கொடுப்பது மாணவ அணித் தலைவன் என்ற முறையில் தனது கடமை என்ற ஒரே காரணத்திற்காக மட்டுமே தான் விடுமுறையில் அங்கு தங்கியிருந்ததாகத் தற்பெருமையுடன் அவன் ஏற்கனவே தனது சகோதரர்கள் ஜார்ஜ் மற்றும் ஃபிரெட்டிடம் கூறியிருந்தான்.
கடுங்குளிரோடு கிறிஸ்துமஸ் தினம் விடிந்தது. வெளியே வெண் கம்பளம் விரித்தாற்போலப் பனி படர்ந்திருந்தது. ஹாரியின் பொதுப் படுக்கையறையில் அவனும் ரானும் மட்டுமே இருந்தனர். அன்று அதிகாலையிலேயே ஹெர்மயனி அவர்களுடைய அறைக்குள் அதிரடியாக நுழைந்தாள். அவளுடைய கையில் அவர்கள் இருவருக்கும் பரிசுப் பொருட்கள் இருந்தன.
சன்னலில் தொங்கிக் கொண்டிருந்த திரைச்சீலையை விலக்கியவாறு, “ம்ம் – எழுந்திருங்கள்!” என்று அவள் கத்தினாள்.
ரான் தன் முகத்தில் விழுந்த வெளிச்சத்தைத் தன் கைகளால் மறைத்து கொண்டு, ஹெர்மயனி, நீ இந்த அறைக்கு வரக்கூடாது” என்று கூறினான்.
“கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துக்கள்!” என்று கூறி ஹெர்மயனி ரானின் பரிசை அவனை நோக்கி எறிந்தாள். “நான் ஒரு மணிநேரம் முன்பாகவே எழுந்து போய், நம்முடைய மாயத் திரவத்தில் மேலும் கொஞ்சம் லேஸ் இறகுகளைப் போட்டுக் கிண்டிவிட்டு வந்துள்ளேன். பலகூட்டுச்சாறு மாயத் திரவம் தயார்!”
ஹாரி டக்கென்று எழுந்து உட்கார்ந்தான். திடீரென்று அவனது தூக்கம் சொல்லாமல் கொள்ளாமல் விடைபெற்றுக் கொண்டது.
“உண்மையாகவா சொல்கிறாய்?”
“ஆமாம்!” என்று ஹெர்மயனி கூறினாள். தான் அந்தப் படுக்கையின் ஓரமாக உட்கார்ந்து கொள்ள வசதியாக, அதிலிருந்த ஸ்கேபர்ஸ் எலியை அவள் வேறோர் இடத்திற்கு நகர்த்தினாள்.”நாம் இதைச் செய்யப் போகிறோம் என்றால், அதை நாம் இன்றிரவே செய்து முடித்துவிடுவது நல்லது.”
அக்கணத்தில் ஹெட்விக் உள்ளே பறந்து வந்தது. அது தன் அலகில் மிகச் சிறிய பொட்டலம் ஒன்றை வைத்திருந்தது.
அது தன் படுக்கையில் வந்து உட்கார்ந்ததும், “ஹலோ!” என்று ஹாரி சந்தோஷமாகக் கூறினான். “ஹெட்விக், நீ என்னுடன் மீண்டும் பேசப் போகிறாயா?”
அது செல்லமாக அவனது காதைக் கடித்தது. அது கொண்டு வந்திருந்த பரிசைவிட அதன் அச்செய்கை அவனுக்கு மேலான பரிசாகத் தெரிந்தது. அந்தப் பொட்டலம் டர்ஸ்லீ தம்பதியரிடம் இருந்து வந்திருந்தது. பல் குத்துவதற்குப் பயன்படுத்தப்படுகின்ற ஒரு குச்சியை அவர்கள் அவனுக்கு அனுப்பி வைத்திருந்தனர். அதோடு ஒரு குறிப்பும் இருந்தது. கோடை விடுமுறையிலும் அவனால் ஹாக்வார்ட்ஸிலேயே தங்கிக் கொள்ள கண்டுபிடிக்குமாறு அதில் கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது. முடியுமா என்று
அவனுக்குக் கிடைத்த மற்றபிற கிறிஸ்துமஸ் பரிசுகள் அதைவிடத் திருப்திகரமானவையாக இருந்தன. ஹாக்ரிட் அவனுக்கு ஒரு பெரிய டின் நிறைய ‘டிரெக்கிள் ஃபட்ஜ்’ இனிப்புகளை அனுப்பியிருந்தார். நெருப்பில் காட்டி இளக்கி மிருதுவாக்கிய பிறகுதான் அவற்றைச் சாப்பிட வேண்டும் என்று ஹாரி முடிவு செய்தான். ரான் அவனுக்கு ‘ஃபிளையிங் வித் த கேனன்ஸ்’ என்ற புத்தகத்தைப் பரிசாகக் கொடுத்திருந்தான். ஹாரிக்கு விருப்பமான குவிடிச் அணியைக் குறித்த சுவாரசியமான தகவல்கள் அடங்கிய ஒரு புத்தகம் அது. ஹெர்மயனி அவனுக்காக ஆடம்பரமான கழுகு இறகுப் பேனா ஒன்றை வாங்கியிருந்தாள். அவன் தனக்கு வந்திருந்த கடைசிப் பரிசைப் பிரித்தான். கைகளால் பின்னப்பட்டிருந்த ஒரு புதிய ஸ்வெட்டரும் ஒரு பெரிய ‘ப்ளம் கேக்’கும் அதில் இருந்தன. அதை ரானின் அம்மா அனுப்பியிருந்தார். ஆர்தர் வீஸ்லீயின் காரைப் பற்றி நினைத்துக் கொண்டே, ரானின் அம்மா அனுப்பியிருந்த வாழ்த்து அட்டையை மரத்தில் மோதிய பிறகு அந்தக் கார் யாருடைய கண்களிலும் அவன் குற்ற உணர்வோடு பார்த்தான். நையப் புடைக்கும் விந்தை தென்படவே இல்லை. அடுத்துப் பல விதிமுறைகளை மீறத் தானும் ரானும் திட்டமிட்டிருந்ததைப் பற்றியும் அவன் நினைத்துக் கொண்டான்.
பலகூட்டுச்சாறு மாயத் திரவத்தைக் குடிக்க அஞ்சி நடுங்கியவன் உட்பட, யாராலும் ஹாக்வார்ட்ஸின் கிறிஸ்துமஸ் தின விருந்தை உண்டு மகிழாமல் இருக்க முடியாது.
அப்பேரரங்கு பிரமாதமாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. அங்கு பனியால் மூடப்பட்டிருந்த ஒரு டஜன் கிறிஸ்துமஸ் மரங்கள் இருந்தன. தாவர இலைதழைகளால் உருவாக்கப்பட்டிருந்த கொடி அலங்காரங்கள் மேற்கூரையில் குறுக்கும் நெடுக்குமாகச் சென்றன. மாயாஜாலத்தால் உருவாக்கப்பட்டிருந்த பனி மேற்கூரையிலிருந்து பொழிந்து கொண்டிருந்தது. அது ஈரமற்றும் இளஞ்சூடாகவும் இருந்தது. டம்பிள்டோர் தனக்குப் பிடித்தமான சில கிறிஸ்துமஸ் பாடல்களைப் பாடி, எல்லோரையும் தன்னுடன் சேர்ந்து பாட வைத்துக் கொண்டிருந்தார். பால், முட்டை, சீனி மற்றும் ரம் அல்லது பிரான்டி சேர்த்துத் தயாரிக்கப்பட்டிருந்த ‘எக்நாக்’ பானம் உள்ளே போகப் போக ஹாக்ரிட்டின் அடித் தொண்டையிலிருந்து கிளம்பிய சத்தங்களும் அதிகரிக்கத் துவங்கின. ஃபிரெட், பெர்சியின் மாணவ அணித் தலைவன் முத்திரையில் இருந்த எழுத்துக்களை மாயாஜாலம் என்று மாற்றியிருந்ததைப் பெர்சி மூலம் ‘மரமண்டை’ கவனித்திருக்கவில்லை. அதனால், ஏன் எல்லோரும் தன்னைப் பார்த்துச் சிரித்தனர் என்று பெர்சி அவர்களிடமே கேட்டுக் கொண்டிருந்தான். ஸ்லிதரின் பெஞ்சில் இருந்த மால்ஃபாய், உரத்தக் குரலில், தனது புதிய ஸ்வெட்டரைப் பற்றிக் கேவலமாகப் பேசியதை ஹாரி சிறிதுகூடப் பொருட்படுத்தவில்லை. அதிர்ஷ்டம் தங்கள் பக்கம் இருந்தால், இன்னும் ஒருசில மணிநேரத்தில் மால்ஃபாயைத் துரதிர்ஷ்டம் சூழ்ந்திருக்கும்; அவன் தன் கர்மவினைப் பயனை அனுபவித்துக் கொண்டிருப்பான் என்று ஹாரி நினைத்தான்.
ஹாரியும் ரானும் விருந்தின் மூன்றாவது சுற்றை முழுவதுமாக முடிப்பதற்கு முன்பாகவே, அன்றைய இரவு தாங்கள் மேற்கொள்ளத் திட்டமிட்டிருந்தவற்றை முடிவு செய்வதற்காக, ஹெர்மயனி, அவர்களை அந்தப் பேரரங்கிலிருந்து வெளியே அழைத்துச் சென்றாள்.
“நமக்கு இப்போது தேவையானது ஒன்றே ஒன்றுதான். நாம் யாராக மாறவிருக்கிறோமோ, அவர்களுடைய உடலிலிருந்து ஏதாவதுகொஞ்சம் நமக்கு வேண்டும்,” என்று ஹெர்மயனி சர்வ சாதாரணமாகக் கூறினாள். அவள் அதைக் கூறிய விதம், ஒரு பேரங்காடிக்குச் சென்று சோப்புத் தூள் வாங்கி வருமாறு அவர்களைக் கேட்டுக் கொண்டதைப்போல இருந்தது. “கிராப் மற்றும் காயலின் உடல்களிலிருந்து நமக்கு ஏதேனும் கிடைத்தால் மிகவும் இருப்பதால், அவன் அவர்களிடம் எதை வேண்டுமானாலும் நல்லது. ஏனெனில் அவர்கள் மால்ஃபாயின் நெருங்கிய நண்பர்களாக கூறுவான். அதே சமயம், நாம் மால்ஃபாயைக் குறுக்கு விசாரணை செய்து கொண்டிருக்கும்போது, உண்மையான கிராபும் காயலும் அங்கு வந்துவிடாமல் பார்த்துக் கொள்ளவும் வேண்டும்.”
வாயடைத்துப் போய் நின்று கொண்டிருந்த ஹாரியையும் ரானையும் கண்டு கொள்ளாமல் அவள் மேலும் தொடர்ந்து, “நான் இது குறித்து எல்லாவற்றையும் முன்பே நன்றாக யோசித்துவிட்டேன்? என்று கூறினாள். அவள் தன்முன் இரண்டு பெரிய சாக்லேட் திரவத்தை நான் இவற்றில் கலந்திருக்கிறேன். இவற்றைக் கிராப் மற்றும் கேக்குகளை உயர்த்திக் காட்டினாள். “தூங்க வைக்கும் மாயத் காயலின் கண்களில் படும்படிப் பார்த்துக் கொள்ள வேண்டியது உங்கள் பொறுப்பு. சாப்பாட்டைப் பொறுத்தவரை அவர்கள் எவ்வளவு பேராசை பிடித்தவர்கள் என்பது நமக்குத் தெரிந்ததுதானே! அதனால் அவர்கள் இந்தக் கேக்குகளைக் கண்டிப்பாக தின்றுவிடுவார்கள். அவர்கள் நன்றாகத் தூங்கியதும் அவர்களுடைய தலைகளிலிருந்து ஒருசில முடிகளைப் பிடுங்கி எடுத்துக் கொண்டு, பிறகு, துடப்பங்களை வைப்பதற்கான அறையில் அவர்களை மறைத்து வைத்துவிடுங்கள்.”
தாங்கள் கேட்டதை நம்ப முடியாமல் ஹாரியும் ரானும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருந்தனர்.
“ஹெர்மயனி, இது நடக்கிற காரியமா ”
“நாம் ஏடாகூடமாக மாட்டிக் கொள்ளப் போகிறோம்-“
ஆனால் ஹெர்மயனியின் கண்களில் கடும் உறுதி பளிச்சிட்டது. பேராசிரியர் மெக்கானகல்லின் கண்களில் சமயங்களில் தென்பட்ட உறுதியின் சாயல் அதில் அப்படியே பிரதிபலித்தது.
“கிராப் மற்றும் காயலின் தலைமுடி இல்லாவிட்டால் இந்த மாயத் திரவத்தால் எந்தப் பிரயோஜனமும் இல்லை,” என்று ஹெர்மயனி திட்டவட்டமாகக் கூறினாள். “மால்ஃபாயைக் குறுக்கு விசாரணை செய்ய உங்களுக்கு ஆசை இருக்கிறதா, இல்லையா?”
“சரி, சரி,” என்று ஹாரி கூறினான். “அப்புறம், நீ என்ன செய்யப் போகிறாய்? நீ யாருடைய தலைமுடியைப் பிடுங்கப் போகிறாய்?”
“எனக்குத் தேவையானது எனக்கு ஏற்கனவே கிடைத்துவிட்டது;” என்று ஹெர்மயனி உற்சாகத்துடன் கூறினாள். அவள் தன்னுடைய பாக்கெட்டிலிருந்து ஒரு பாட்டிலை வெளியே எடுத்தாள். அதனுள் ஒரே ஒரு முடி இருந்தது. “ஒற்றைக்கு ஒற்றைச் சண்டையை நான் யாரோடு போட்டேன் என்பது உங்களுக்கு நினைவிருக்கிறதா? மில்லிசென்ட்டோடு! அவள் என் கழுத்தை நெறிக்க முயன்றபோது இதை என் அங்கியில் விட்டுவிட்டாள். ஆனால் அவள் கிறிஸ்துமஸ் விடுமுறைக்காக வீட்டிற்குப் போய்விட்டாள் – அதனால் ஸ்லிதரின் அணியினரிடம் ‘நான்’ திரும்பி வந்துவிட்டதாகக் கூற வேண்டும், அவ்வளவுதான்.”
ஹெர்மயனி தடபுடலாக மீண்டும் அந்த மாயத் திரவத்தைச் சரிபார்க்கப் போனதும், ரான் ஹாரியை நோக்கித் திரும்பினான். அவனது முகம் இருளடைந்து இருந்தது.
“ஹாரி, ஏகப்பட்ட விஷயங்கள் தவறாகப் போவதற்கு வாய்ப்பிருக்கும் ஒரு திட்டத்தை நீ எப்போதாவது கேள்விப்பட்டிருக்கிறாயா?”
ஹாரிக்கும் ரானுக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையில், திட்டத்தின் முதற்கட்டம், ஹெர்மயனி கூறியிருந்தபடியே இலகுவாக முடிந்தது. கிறிஸ்துமஸ் தேநீர் விருந்திற்குப் பிறகு அவர்கள் இருவரும் கிராபும் காயலும் வெளியே வருவதற்காக ஆளரவமற்றிருந்த வரவேற்பறையில் பதுங்கியிருந்தனர். அப்போது கிராபும் காயலும் ஸ்லிதரின் பெஞ்சில் தனியாக அமர்ந்து கொண்டு, நான்காவது சுற்று டிரிஃபிள் கேக்கைத் தங்கள் வாய்களில் திணித்துக் கொண்டிருந்தனர். ஹாரி அந்தச் சாக்லேட் கேக்குகளை மாடிப்படிக் கைப்பிடிகளின் முனையில் வைத்தான். கிராபும் காயலும் பேரரங்கைவிட்டு வெளியே வந்து கொண்டிருந்ததைப் பார்த்ததும், ஹாரியும் ரானும் முன்வாசல் கதவருகே இருந்த கவசச் சிலையின் பின்னால் வேகமாகச் சென்று மறைந்து கொண்டனர்.
கிராப் தன் கண்கள் பளபளக்க, படிக்கட்டில் இருந்த கேக்குகளை காயலிடம் சுட்டிக்காட்டிவிட்டு, அவற்றைப் பாய்ந்து எடுத்துக் கொண்டிருந்தபோது, “ஒருவனால் எவ்வளவுதான் உள்ளே தள்ள முடியும்?” என்று ரான் களிப்புடன் கிசுகிசுத்தான். கிராபும் காயலும் பல்லிளித்துக் கொண்டே, தங்களுடைய பெரிய வாய்களில் அந்தக் கேக்குளை அப்படியே திணித்துக் கொண்டனர். அவர்கள் இருவரும் வெற்றிப் புன்னகையோடு, பேராசையுடன் அதைத் தின்றனர். பின் திடீரென்று அவர்களது கால்மூட்டுக்கள் மடிந்தன. அவர்கள் தரையில் பின்னோக்கிச் சாய்ந்தனர்.
அந்த அறையிலிருந்த அலமாரியினுள் அவர்களை அடைப்பதுதான் இருப்பதிலேயே கடினமான காரியமாக இருந்தது. அவர்கள் இருவரையும் துடப்பங்களுக்கும் வாளிகளுக்கும் இடையில் பாதுகாப்பாகத் திணித்து வைத்தப் பிறகு, ஹாரி, காயலின் முன்னந்தலையில் இருந்து ஓரிரு முடிகளைப் பிடுங்கினான். ரான் கிராபின் முடிகள் பலவற்றைப் பிடுங்கினான். அவர்கள் கிராப் மற்றும் காயலின் காலணிகளையும் திருடினர். ஏனெனில் அவர்களுடைய காலணிகள் கிராப் மற்றும் காயலின் கால்களின் அளவைவிட மிகச் சிறியதாக இருந்தன. தாங்கள் அப்போது செய்திருந்த காரியம் குறித்துப் பெரும் ஆச்சரியமடைந்திருந்த அவர்கள் இருவரும் முனகல் மர்ட்டிலின் குளியலறைக்கு ஓடினர்.
உள்ளே இருந்த தடுப்பறையில் ஹெர்மயனி கிளறிவிட்டுக் கொண்டிருந்த கொப்பரையில் இருந்து வந்த புகை அங்கேயே சுற்றிக்கொண்டிருந்ததால், அவர்களால் எதையுமே பார்க்க முடியவில்லை. அவர்கள் தங்களுடைய அங்கிகளைத் தங்கள் தலைகளுக்கு மேலாகப் போட்டுக் கொண்டு, அந்தத் தடுப்பறையின் கதவை மென்மையாகத் தட்டினர்.
“ஹெர்மயனி!”
தாழ்ப்பாள் விலக்கப்பட்டச் சத்தம் கேட்டது. பின் ஹெர்மயனி வெளிப்பட்டாள். அவளது முகம் பளபளப்பாகவும் எதிர்பார்ப்போடும் இருந்தது. அவளுக்குப் பின்னால் அடர்த்தியாக நுரைத்துக் கொதித்துக் கொண்டிருந்த மாயத் திரவத்திலிருந்து ‘கிளர் ‘கிளக்’ என்ற ஒரு சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது. மூன்று டம்ளர்கள் அங்கிருந்த தொட்டியின் விளிம்பில் தயாராக இருந்தன.
ஹெர்மயனி மூச்சு வாங்க, “அது உங்களுக்குக் கிடைத்ததா.?” என்று கேட்டாள்.
ஹாரி காயலின் முடியை அவளிடம் காட்டினான்.
ஹெர்மயனி தன் கையிலிருந்த ஒரு சிறு மூட்டையைச் சுட்டிக்காட்டியவாறு, “சலவை அறையில் இருந்து நான் அங்கிகளைத் திருடி வந்துள்ளேன்;” என்று கூறினாள். “நீங்கள் கிராபாகவும் காயலாகவும் மாறிய பிறகு, உங்களுக்குப் பெரிய அங்கிகள் தேவைப்படுமே!”
அவர்கள் மூவரும் அந்தக் கொப்பரையினுள் உற்றுப் பார்த்தனர். அருகே பார்த்தபோது, அந்த மாயத் திரவம், மெதுவாக நுரைவிட்டுக் கொண்டிருந்த, அடர்த்தியான, இருண்ட சேறுபோல இருந்தது.
‘அதிவீரிய மாயத் திரவம்’ என்ற புத்தகத்திலிருந்த பக்கத்தை ஹெர்மயனி மறுபடியும் படித்துவிட்டு, “நான் எல்லாவற்றையும் சரியாகச் செய்திருக்கிறேன் என்றுதான் தோன்றுகிறது,” என்று கூறினாள். “இது எப்படி இருக்க வேண்டும் என்று அப்புத்தகம் கூறுகிறதோ, அப்படியே இருக்கிறது முடித்தப் பிறகு, சரியாக ஒரு மணிநேரத்தில் நாம் மீண்டும் நம்முடைய நாம் இதைக் குடித்து பழைய உருவத்தை அடைந்துவிடுவோம்.”
“அடுத்தது என்ன?” என்று ரான் கேட்டான்.
“நாம் இத்திரவத்தை இந்த மூன்று டம்ளர்களிலும் ஊற்றி, நம்மிடம் இருக்கும் தலைமுடிகளை இவற்றில் போட வேண்டும்”
ஹெர்மயனி அந்த மாயத் திரவத்தைக் கரண்டியில் எடுத்து அந்த மூன்று டம்ளர்களிலும் ஊற்றினாள். பின் அவள் நடுங்கிய கைகளுடன், பாட்டிலில் இருந்த மில்லிசென்ட்டின் முடியை எடுத்து முதல் டம்ளரில் போட்டாள்.
அதிலிருந்த மாயத் திரவம், கொதித்துக் கொண்டிருக்கும் கெட்டிலைப்போல ‘ஸ்ஸ்ஸ்’ என்ற சத்தத்துடன் சிறியது. அதி நுரைவிட்டுப் பொங்கியது. ஒரு நொடிக்குப் பிறகு, வயிற்றைப் பிரட்டும் ஒரு மஞ்சள் நிறத்திற்கு அது மாறியது.
ரான் அதை அருவருப்புடன் பார்த்துக் கொண்டே “உவ்வே! கன்றாவி! மில்லிசென்ட்டின் சாறு!” என்று கூறினான், “அது குடலைப் புரட்டும் என்பதில் சந்தேகமே இல்லை.”
“சரி, அடுத்து உங்களுடையதைப் போடுங்கள்,” என்று ஹெர்மயனி கூறினாள்.
ஹாரி காயலின் முடியை நடுவில் இருந்த டம்ளரில் போட்டான். ரான் கிராபின் முடியைக் கடைசியில் இருந்த டம்ளரில் போட்டான். நுரைத்துக் கொண்டு வந்தன. காயலினுடையது காக்கி நிறத்திற்கும், அந்த இரண்டு டம்ளர்களும் ‘ஸ்ஸ்ஸ்’ என்று சத்தம் போட்டன, கிராபினுடையது இருண்ட பழுப்பு நிறத்திற்கும் மாறின.
ஹெர்மயனியும் ரானும் தங்களுடைய டம்ளர்களை எடுக்க முயன்றபோது, ஹாரி, “ஒரு நிமிடம்,” என்று கூறினான். “நாம் எல்லோரும் இதே தடுப்பறையில் இருந்து கொண்டு குடிக்காமல் இருப்பது நல்லது. நாம் காயலாகவும் கிராபாகவும் மாறிய பிறகு இந்த இடம் நமக்குப் போதாது. மில்லிசென்ட்டைப் பற்றிச் சொல்லவே வேண்டாம்.”
ரான் அந்தத் தடுப்பறையின் கதவைத் திறந்தவாறே, ‘பரவாயில்லையே, உனக்குக்கூட இப்படி உதிக்கிறதே!” என்று கூறினான். “நாம் வெவ்வேறு தடுப்பறைகளுக்குச் சென்றுவிடலாம்.” ஹாரி தன்னுடயை மாயத் திரவம் ஒரு துளிகூடக் கீழே சிந்தாத வண்ணம், அலுங்காமல் குலுங்காமல், நடுவிலிருந்த தடுப்பறைக்குள் நுழைந்தான்.
“நீங்கள் தயாரா?” என்று அவன் கேட்டான்.
“தயார்,” என்று ரானும் ஹெர்மயனியும் கூறினர்.
“ஒன்று .. இரண்டு . . . மூன்று . . .”
ஹாரி தன் மூக்கைப் பிடித்துக் கொண்டு இரண்டு மடக்கில் அதைக் குடித்து முடித்தான். அது அதிகமாக வேக வைக்கப்பட்ட முட்டைக்கோஸ்போல நாற்றமடித்தது.
உடனே, அவன் ஏதோ உயிருடன் இருந்த பாம்புகளை விழுங்கிவிட்டிருந்ததுபோல அவனது உடலின் உட்பகுதிகள் முறுக்கிக் கொள்ளத் துவங்கின. அவன் சுருண்டு கீழே விழுந்தான், தான் வாந்தி எடுக்கப் போகிறோம் என்று பயந்தான். பின் எரிச்சல்மிக்க ஓர் உணர்வு அவனது வயிற்றிலிருந்து அவனது கைவிரல்கள் மற்றும் கால்விரல்களின் நுனிகள்வரை பரவியது. அவன் தன் கால்களையும் கைகளையும் தரையில் ஊன்றிக் கொண்டிருந்தான். அடுத்துத் தனது உடல் முழுவதும் உருகியது போன்ற ஓர் உணர்வு அவனுக்கு ஏற்பட்டது. அவனது தோல் முழுவதும் சூடான மெழுகுபோலக் குமிழ்விட்டது. அவனது கண் முன்னாலேயே அவனுடைய கைகள் வளர்ந்தன, விரல்கள் தடிமனாயின, நகங்கள் அகலமாயின, கணுக்கள் தெறித்தன, தோள்பட்டை விரிவடைந்தது, தலைமுடியானது புருவம் வரை வளர்ந்தது, நெஞ்சு விம்மிப் புடைத்தது, அவனது அங்கி படாரென்று தெறித்தது. அவனது கால்கள் மிகப் பெரிதாக வளர்ந்திருந்ததால், நான்கு அளவு சிறியதாக இருந்த அவனது காலணிகளுக்குள் பிதுங்கிக் கொண்டு வலியேற்படுத்தின.
அது எப்படித் திடீரென்று ஆரம்பித்திருந்ததோ அதுபோலவே டக்கென்று நின்றும்விட்டது. ஹாரி அந்தக் குளிரான கருங்கல் தரையில் மூஞ்சிக் குப்புற விழுந்து கிடந்தான். கடைசித் தடுப்பு அறையில் மர்ட்டில் முனகிக் கொண்டிருந்தது அவனுக்குக் கேட்டது. மிகவும் சிரமப்பட்டு அவன் தன் காலணிகளை உதறிவிட்டு எழுந்து நின்றான். காயலாக இருந்தால் இப்படியா உணர்வோம் என்று அவன் எண்ணிக் கொண்டான். நடுங்கிக் கொண்டிருந்த தன் கைகளைக் கொண்டு, தன் மூட்டுக்கள்வரை மட்டுமே வந்திருந்த தன் பழைய அங்கியைக் கழற்றிவிட்டுப் புதிய அங்கியை அவன் அணிந்து கொண்டான். பிறகு, காயலின் படகுகள் போன்ற காலணிகளைத் தன் கால்களில் போட்டுக் கொண்டான். தன் நெற்றியில் படிந்திருந்த முடியை ஒதுக்கித் தள்ள அவன் முனைந்தபோது, அங்கு குட்டையாகவும் விறைப்பாகவும் இருந்த முடிதான் அவனது கைகளுக்குத் தட்டுப்பட்டது. பின் தனது மூக்குக்கண்ணாடி தன் பார்வையை மறைத்துக் கொண்டிருந்ததை அவன் கண்டான். ஏனெனில் காயலுக்கு மூக்குக்கண்ணாடி அணிய வேண்டிய தேவை இல்லாமல் இருந்தது. எனவே ஹாரி தனது மூக்குக்கண்ணாடியைக் கழற்றினான். பிறகு, “நீங்கள் இரண்டு பேரும் நன்றாக இருக்கிறீர்களா?” என்று கேட்டான். காயலின் கர்ண கடூரமான குரலில் அவன் கூறிய வார்த்தைகள் அவன் வாயிலிருந்து வெளிப்பட்டன.
அவனுக்கு வலப்பக்கம் இருந்த அறையிலிருந்து, “ஆமாம்,” என்று கிராபின் அடித் தொண்டைக் குரல் கூறியது.
ஹாரி தான் இருந்த தடுப்பறைக் கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்து, உடைந்திருந்த கண்ணாடியின் முன் நின்றான். ஒளியற்று இருந்த தன் கண்களால் காயல் அவனை அக்கண்ணாடியின் வழியாகப் பார்த்துக் கொண்டிருந்தான். ஹாரி தன் தலையைச் சொறிந்தான். காயலும் அவ்வாறே செய்தான்.
ரான் இருந்த அறைக் கதவு திறந்தது. அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் உற்றுப் பார்த்தனர். ரான் வெளுத்துப் போயும் அதிர்ச்சியுடனும் காணப்பட்டான். மற்றபடி, கிராபின் கோணல் தலைமுடியுடனும் கொரில்லாக் கைகளுடனும் இருந்த அவனை இனம் பிரித்துப் பார்க்க முடியவில்லை.
“இதை என்னால் நம்பவே முடியவில்லை,” என்று கூறிய ரான், அந்த அறையிலிருந்த கண்ணாடி முன்பு போய், தட்டையாக இருந்த கிராபின் மூக்கை நோண்டினான். “நம்பவே முடியவில்லை!”
காயலின் மணிக்கட்டை இறுக்கிக் கொண்டிருந்த தன்னுடைய கைக்கடிகாரத்தைத் தளர்த்தியபடி, ஹாரி, “நாம் விரைவாக இங்கிருந்து கிளம்புவது நல்லது,” என்று கூறினான். “ஸ்லிதரின் பொது அறை வேண்டியிருக்கிறது. நாம் பின்தொடர்ந்து செல்வதற்கு நமக்கு யாராவது கிடைத்தால் நல்லது . . .”
ஹாரியையே பார்த்துக் கொண்டிருந்த ரான், “காயல் எப்படி யோசிப்பான் என்று சிந்திப்பது எவ்வளவு வினோதமாக இருக்கிறது தெரியுமா?” என்று கேட்டான். அவன் ஹெர்மயனியின் கதவை ஓங்கித் தட்டியவாறு, “சீக்கிரம் வா! நாம் போக வேண்டும்…” என்றான்.
“நான் உங்களுடன் வர முடியாது என்று நினைக்கிறேன். நீங்கள் தனியாகப் போய்க் கொள்ளுங்கள்,” என்று உச்சஸ்தாயியில் ஒரு குரல் கேட்டது.
“ஹெர்மயனி, மில்லிசென்ட் எவ்வளவு அவலட்சணமானவள் என்பது எங்களுக்கும் தெரியும். அது நீ என்று யாருக்கும் தெரியப் போவதில்லை.”
“முடியாது – உண்மையிலேயே என்னால் வர முடியாது. நீங்கள் இருவரும் உடனே புறப்படுங்கள். நீங்கள் உங்கள் நேரத்தை வீணாக்கிக் கொண்டிருக்கிறீர்கள்.”
ஹாரி தன் கண்களை உருட்டினான். ரானுக்கு ஆச்சரியத்தை அடக்கவே முடியவில்லை.
“இது அச்சசலாக காயலின் முழிபோலவே இருக்கிறது,” என்று ரான் கூறினான். “ஆசிரியர்கள் அவனிடம் கேள்விகள் கேட்கும்போதெல்லாம் அவன் இப்படித்தான் முழிப்பான்.”
“ஹெர்மயனி, உனக்கு என்ன ஆயிற்று?” என்று ஹாரி அவளது தடுப்பறைக் கதவுக்கு வெளியே இருந்து கேட்டான்.
“எனக்கு ஒன்றுமில்லை – நான் நன்றாகத்தான் இருக்கிறேன் – நீங்கள் போய் வாருங்கள் -”
ஹாரி தன் கைக்கடிகாரத்தைப் பார்த்தான். விலை மதிப்பிட முடியாத அறுபது நிமிடங்களில் ஏற்கனவே ஐந்து நிமிடங்கள் காலியாகியிருந்தன.
“அப்படியானால் நாங்கள் உன்னைப் பிறகு சந்திக்கிறோம்!” என்று அவன் கூறினான்.
ஹாரியும் ரானும் அந்தக் குளியலறையின் வெளியே யாரும் இருந்தார்களா என்று கவனமாகப் பார்த்துவிட்டுக் கதவைத் திறந்து வெளியே வந்து அங்கிருந்து நழுவினர்.
“உன்னுடைய கைகளை அப்படி ஆட்டாதே,” என்று ஹாரி ரானிடம் முணுமுணுத்தான்.
“என்ன?”
“கிராப் அவற்றைக் கொஞ்சம் விறைப்பாக வைத்திருப்பான் . . .”
“இது எப்படி இருக்கிறது?”
“ம்ம் – இப்போது பரவாயில்லை.”
அவர்கள் பளிங்குப் படிக்கட்டின் வழியாகக் கீழிறங்கினர். ஸ்லிதரின் அணியைச் சேர்ந்த யாராவது ஒருவர் இப்போது அவர்களுக்குத் தேவை. கிடைத்தால் அவர்கள் அவனைப் பின்தொடர்ந்து போய்விடலாம். ஆனால் யாருமே அவர்கள் பார்வைக்குத் தென்படவில்லை.
“என்ன செய்யலாம்?” என்று ஹாரி கேட்டான்.
ரான், நிலவறைக்குச் செல்வதற்கான வாயிலைச் சுட்டிக்காட்டி “ஸ்லிதரின் அணியினர் காலை உணவிற்கு எப்போதும் அந்த வழியாகத்தான் வருவார்கள்,” என்று கூறினான். அவன் அதைச் சொல்லி முடிக்கவும் அந்த வாயிலில் இருந்து ஒரு மாணவி வெளிப்பட்டாள். அவளுக்கு நீண்ட சுருண்ட கூந்தல் இருந்தது.
அவளை நோக்கி விரைந்த ரான், “மன்னிக்கவும்,” என்றான். “நம்முடைய பொது அறைக்குச் செல்லும் வழி எங்களுக்கு மறந்துவிட்டது.”
“என்ன சொன்னாய்?” என்று அவள் விறைப்பாகக் கேட்டாள். “நம்முடைய பொது அறையா? நான் ரேவன்கிளா அணியைச் சேர்ந்தவள்.”
அவள் அவர்களைச் சந்தேகக் கண்ணோடு பார்த்தபடி அங்கிருந்து அகன்றாள்.
ஹாரியும் ரானும் இருளில் அந்தப் படிக்கட்டுகளில் வேகவேகமாகக் கீழிறங்கினர். அவர்களுடைய காலடி ஓசை பயங்கரமாக எதிரொலித்தது. இது அவர்கள் எதிர்பார்த்திருந்ததுபோல அவ்வளவு சுலபமாக இருக்காதுபோலத் தோன்றியது.
குறுக்கும் நெடுக்குமாகச் சென்ற அவ்வழி வெறிச்சோடிக் கிடந்தது. இன்னும் எவ்வளவு நேரம் இருந்தது என்பதைத் தெரிந்து கொள்வதற்காக, அவர்கள் அடிக்கடி மணி பார்த்துக் கொண்டே, பள்ளிக்குக் கீழே மேலும் மேலும் ஆழமாகச் சென்று கொண்டிருந்தனர். கால் மணிநேரம் கழித்து, அவர்களின் பதற்றம் உச்சகட்டத்தை அடைவதற்குச் சிறிது முன்னால், அவர்களுக்கு முன்பாக ஏதோ ஓர் அசைவு தெரிந்தது.
“அப்பாடா!” என்று ரான் பரவசமாகக் கூறினான். “அவர்களில் ஒருவன்!”
அந்த உருவம் பக்கவாட்டு அறை ஒன்றிலிருந்து வெளியே வந்தது. அவர்கள் அதை நெருங்கியதும், அவர்களது முகம் தொங்கிப் போனது. அது ஸ்லிதரின் அணியைச் சேர்ந்த ஒருவன் அல்ல. அது பொசி.
ரான் ஆச்சரியத்துடன், “நீ இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறாய்?” என்று கேட்டான்.
பெர்சி தான் அவமதிக்கப்பட்டதுபோலக் காணப்பட்டான். “அது உனக்குச் சம்பந்தம் இல்லாத விஷயம்! நீ கிராப்தானே?” என்று அவன் இறுகிய முகத்துடன் கேட்டான்.
“ம்ம் – ஆ – ஆமாம்,” என்று ரான் கூறினான்.
“அப்படியானால் உங்களுடைய பொது அறைக்கு நடையைக் “இப்போது பள்ளி இருக்கும் நிலையில் இருண்ட தாழ்வாரங்களில் கட்டுங்கள்,” என்று பெர்சி கண்டிப்பான குரலில் கூறினான். இப்படி அலைந்து கொண்டிருப்பது பாதுகாப்பானது அல்ல.”
“நீ மட்டும் எப்படி?” என்று ரான் கேட்டான்.
“நானா?” என்று கேட்டப் பெர்சி, தன்னை நன்றாக நிமிர்த்திக் கொண்டு, “நான் ஒரு மாணவ அணித் தலைவன். என்னை எதுவும் தாக்காது,” என்று கூறினான்.
ஹாரிக்கும் ரானுக்கும் பின்னால் திடீரென்று ஒரு குரல் எதிரொலித்தது. மால்ஃபாய் அவர்களை நோக்கி வந்து கொண்டிருந்தான். அவனைப் பார்த்ததில் ஹாரி தன் வாழ்க்கையில் முதன்முறையாக மகிழ்ச்சியடைந்தான்.
அவர்களைப் பார்த்த மால்ஃபாய், “அட, நீங்கள் இங்குதான் இருக்கிறீர்களா?” என்று இழுத்து இழுத்துப் பேசினான். “ஆமாம், நீங்கள் இரண்டு பேரும் இவ்வளவு நேரமும் பன்றிகள் மாதிரிப் கொண்டிருந்தேன். வாருங்கள், வேடிக்கையான ஒன்றை நான் பேரரங்கில் தின்று கொண்டிருந்தீர்களா? நான் உங்களைத் தேடிக் உங்களிடம் காட்டுகிறேன்.”
மால்ஃபாய் பெர்சியை நக்கலாக ஓரக்கண்ணால் பார்த்தான்.
“பெர்சி, நீ இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறாய்?” என்று அவன் பரிகாசம் செய்தான்.
பெர்சிக்கு மூக்கிற்குமேல் கோபம் பொத்துக் கொண்டு வந்தது.
“பள்ளியின் மாணவ அணித் தலைவனுக்கு நீ இன்னும் கொஞ்சம் மரியாதை கொடுக்கக் கற்றுக் கொள்வது நல்லது,” என்று பெர்சி வெடித்தான். “உன்னுடைய நடவடிக்கை எனக்குப் பிடிக்கவில்லை.”
மால்ஃபாய் அவனை இகழ்ச்சியாகப் பார்த்துவிட்டு, ஹாரியையும் ரானையும் தன்னுடன் வரும்படி சைகை காட்டினான். ஹாரி, பெர்சியிடம் மன்னிப்புக் கேட்கும் தொனியில் எதையோ சொல்ல வாயெடுத்தான். ஆனால் நல்லவேளையாகக் கடைசி நிமிடத்தில் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டான். அவனும் ரானும் வேகவேகமாக மால்ஃபாயைப் பின்தொடர்ந்து சென்றனர். அவர்கள் அடுத்தப் பகுதியில் திரும்பியதும், மால்ஃபாய், “அது பீட்டர்,” என்று கூறினான்.
“பெர்சி,” என்று ரான் தன்னையறியாமலேயே அவனைத் திருத்தினான்.
“ஏதோ ஓர் இழவு!” என்று மால்ஃபாய் கூறினான். “அவன் கொஞ்ச காலமாக வேண்டாத விவகாரங்களில் மூக்கை நுழைத்துக் கொண்டு திரிகிறான். அவன் எதற்காக இப்படிக் குட்டி போட்டப் பூனை மாதிரிச் சுற்றிக் கொண்டு திரிகிறான் என்று எனக்குத் தெரியும். அவன் ஸ்லிதரினின் வாரிசைத் தனியொருவனாகவே பிடிக்கத் திட்டமிட்டுள்ளான்.”
ஏளனம் தொக்கி நின்ற சிரிப்பொன்றை அவன் உதிர்த்தான். ஹாரியும் ரானும் பரவசமாக ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
மால்ஃபாய் ஈரப்பதத்துடன் இருந்த ஒரு வெற்றுச் சுவரின் அருகே வந்து நின்றான்.
“நம்முடைய பொது அறைக்கான புதிய ரகசிய வார்த்தை எது?” என்று அவன் ஹாரியிடம் கேட்டான்.
“ம்ம் -” என்று ஹாரி இழுத்தான்.
மால்ஃபாய் அவன் இழுத்ததைக் காதில் போட்டுக் கொள்ளாமல், “ஓ, ஆமாம் – தூய ரத்தம்!” என்று கூறினான். அந்தச் மறைந்திருந்த ஒரு கதவு விலகித் திறந்தது. மால்ஃபாய் உள்ளே சென்றான். ஹாரியும் ரானும் அவனைப் பின்தொடர்ந்தனர்.
ஸ்விதரினின் பொது அறை ஒரு நீண்ட, உயரம் குறைந்த நிலவறையாக இருந்தது. அதன் சுவர்களும் மேற்கூரையும் கரடுமுரடான கற்களால் ஆனவையாக இருந்தன. அதன் மேற்கூரையிலிருந்து சங்கிலிகளில் விளக்குகள் தொங்கிக் கொண்டிருந்தன. அவர்களுக்கு நேராக இருந்த கணப்படுப்பில் நெருப்பு அமர்க்களமாக எரிந்து கொண்டிருந்தது. அந்தக் கணப்படுப்பின் மேலே இருந்த மேடை மிகுந்த வேலைப்பாடுகளுடன் நாற்காலிகளில் ஒருசில ஸ்லிதரின் மாணவர்கள் நெருப்பிற்கு அருகே அழகாகச் செதுக்கப்பட்டிருந்தது. நன்றாக வடிவமைக்கப்பட்டிருந்த உட்கார்ந்திருந்தனர்.
மால்ஃபாய், நெருப்பிலிருந்து தள்ளி இருந்த ஒரு ஜோடி நாற்காலிகளைச் சுட்டிக்காட்டி, “இங்கே காத்திருங்கள்!” என்று கூறினான். “நான் போய் அதை எடுத்து வருகிறேன் – என் அப்பா அதை எனக்காக இப்போதுதான் அனுப்பி வைத்துள்ளார் -”
மால்ஃபாய் தங்களிடம் எதைக் கொண்டு வந்து காட்டப் போகிறானோ என்று வியந்து கொண்டு ஹாரியும் ரானும் உட்கார்ந்தனர். தாங்கள் இயல்பாக இருப்பதாகக் காட்டிக் கொள்ளத் தங்களால் முடிந்த அளவுக்கு அவர்கள் முயன்றனர்.
மால்ஃபாய் ஒரே நிமிடத்தில் திரும்பி வந்தான். கத்தரிக்கப்பட்டச் செய்தித்தாள் போன்ற ஏதோ ஒன்று அவனது கையில் இருந்தது. அதை அவன் ரானின் மூக்கிற்கு நேராக நீட்டினான்.
“இது கண்டிப்பாக உங்களைச் சிரிக்க வைக்கும்,” என்று அவன் கூறினான்.
அதிர்ச்சியால் ரானின் கண்கள் அகலமாக விரிந்ததை ஹாரி கண்டான். ரான் அதை வேகமாகப் படித்துவிட்டு, வலுக்கட்டாயமாக ஒரு சிரிப்பை உதிர்த்துவிட்டு, ஹாரியிடம் கொடுத்தான்.
மந்திரஜால அமைச்சகத்தில் விசாரணை
மகுள் கலைப்பொருட்கள் துஷ்பிரயோக அலுவலகத்தின் தலைவரான ஆர்தர் வீஸ்லீ, மகுள்களின் கார் ஒன்றை மந்திரக் காராக மாற்றியிருந்ததற்காக அவருக்கு இன்று ஐம்பது கேல்லியன்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஹாக்வார்ட்ஸ் மந்திர தந்திர மாயாஜாலப் பள்ளியின் நிர்வாகக் குழு ஓருசில மாதங்களுக்கு முன்பு, அந்த மந்திரக் கார் மோதி விழுந்த உறுப்பினர்களில் ஒருவரான லூசியஸ் மால்ஃபாய், ஆர்தர் விஸ்வி * பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.
“ஆர்தர் மந்திரஜால அமைச்சகத்திற்குக் களங்கத்தை ஏற்படுத்திவிட்டார்,” என்று லூசியஸ் மால்ஃபாய் எமது நிருபரிடம் தகுதியானவர் அல்ல. நகைப்புக்கு இடமான அவரது ‘மகுள்கள் கூறினார். “கண்டிப்பாக நம்முடைய சட்டதிட்டங்களை வகுக்க அவர் பாதுகாப்புச் சட்டம்’ உடனடியாக விலக்கிக் கொள்ளப்பட வேண்டும்”
இது குறித்துக் கருத்துத் தெரிவிக்க ஆர்தர் வீஸ்லீ கிடைக்கவில்லை. ஆனால் அவரது மனைவி, எமது நிருபர்களிடம், அவர்கள் உடனே அந்த இடத்தைக் காலி செய்ய வேண்டும் என்றும், இல்லையெனில் தன்னுடைய தோட்டப் பேய்களை அவர்கள்மீது ரவிவிடப் போவதாகவும் அச்சுறுத்தினார்.
ஹாரி அதை மால்ஃபாயிடம் திருப்பிக் கொடுத்ததும், அவன் பொறுமையிழந்து, “இது வேடிக்கையாக இருப்பதாக நீங்கள் நினைக்கவில்லையா?” என்று கேட்டான்.
ஹாரி, “ஹா, ஹா,” என்று பலவீனமாக நகைத்தான்.
“ஆர்தர் iஸ்லீ மகுள்களை அவ்வளவு தூரம் விரும்புகிறார் என்றால், அவர் தன்னுடைய மந்திரக்கோலை இரண்டாக உடைத்துப் போட்டுவிட்டு, மகுள்களோடு போய்ச் சேர்ந்து கொள்ள வேண்டும்,” என்று மால்ஃபாய் நக்கலாகக் கூறினான். “அவர்கள் நடந்து கொள்ளும் விதத்தைப் பார்த்தால், வீஸ்லீ குடும்பத்தினர் தூய ரத்தப் பரம்பரையைச் சேர்ந்தவர்களா என்பதே சந்தேகமாக இருக்கிறது.”
ரானின் – அதாவது கிராபின் முகம் கட்டுக்கடங்காத கோபத்தால் அஷ்டகோணலானது.
“கிராப், உனக்கு என்ன ஆயிற்று?” என்று மால்ஃபாய் கேட்டான்.
“வயிற்று வலி,” என்று ரான் முனகினான்.
“அப்படியானால் மருத்துவமனைக்குச் சென்று, அங்குள்ள ஈன ரத்தப் பிறவிகளுக்கு என் சார்பில் ஆளுக்கு ஓர் உதை விடு,” என்று மால்ஃபாய் ஏளனமாகச் சிரித்தபடி கூறினான். “பள்ளியில் நடைபெற்றுள்ள இந்தத் தாக்குதல்களைப் பற்றி ‘டெய்லி புராஃபெட்’ பத்திரிகை இன்னும் ஏன் செய்தி வெளியிடவில்லை என்பது எனக்கு வியப்பாக இருக்கிறது,” என்று கூறிய அவன் யோசனையுடன் மேலும் தொடர்ந்தான். “டம்பிள்டோர் இதை மூடி மறைக்கச் சதி செய்து வருகிறார் என்று நான் நினைக்கிறேன். அதைச் சீக்கிரமாக ஒரு முடிவுக்குக் கொண்டுவராவிட்டால், அவரது பதவி பறி போய்விடும். எப்போதுமே கூறி வந்திருக்கிறார். மகுள்களுக்குப் பிறந்தவர்களை டம்பிள்டோர் இந்த இடத்தின் சாபக்கேடு என்று என் அப்பா டம்பிள்டோருக்கு மிகவும் பிடிக்கும். எந்தவொரு கண்ணியமான தலைமையாசிரியராவது காலின் போன்ற முதுகெலும்பில்லாத ஜீவன்களைப் பள்ளியில் சேர்த்துக் கொள்வாரா?”
மால்ஃபாய் கற்பனையாகத் தன் கையில் வைத்திருந்த ஒரு கேமராவைக் கொண்டு புகைப்படம் எடுக்கத் துவங்கினான். கொடுமையானதாகத் தோன்றினாலும், அவன் துல்லியமாக் காலினை அப்படியே பிரதிபலித்தான்: “ஹாரி பாட்டர், நான் உன்னைப் படம் எடுக்கலாமா? ஹாரி பாட்டர், எனக்கு ஒரு கையெழுத்துப் போட்டுத் தருவாயா? ஹாரி பாட்டர், தயவு செய்து நான் உன்னுடைய காலணிகளுக்கு முத்தமிடலாமா?”
புகைப்படம் எடுப்பதுபோல பாவனை செய்து கொண்டிருந்த மால்ஃபாய் தன் கைகளைக் கீழே போட்டுவிட்டு, ஹாரியையும் ரானையும் உற்றுப் பார்த்தான்.
“உங்கள் இரண்டு பேருக்கும் என்னவாயிற்று?”
காலம் கடந்து ஹாரியும் ரானும் வலுக்கட்டாயமாகச் சிரித்தனர். ஆனால் மால்ஃபாய்க்குத் திருப்தி ஏற்பட்டிருந்ததுபோலத் தோன்றியது. ஒருவேளை கிராப் மற்றும் காயலின் மரமண்டைகளுக்குள் எப்போதுமே இவ்வளவு தாமதமாகத்தான் விஷயங்கள் ஏறும்போலும்!
“புனித ஹாரி பாட்டர்! ஈன ரத்தப் பிறவிகளின் ஆபத்பாந்தவன்? என்று மால்ஃபாய் மெதுவாகக் கூறினான். “மந்திரவாதிகளின் முழுமையான உணர்வுகள் இல்லாத பிறவி அவன். இல்லையென்றால் அவன் அந்த அற்பத்தனமான ஈன ரத்தப் பிறவி ஹெர்மயனியின் வாலைப் பிடித்துக் கொண்டு சுற்றிக் கொண்டிருக்க மாட்டான். ஆனால் பரிதாபம்! மக்கள் அவன் ஸ்லிதரினின் வாரிசு என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.”
ஹாரியும் ரானும் மூச்சைப் பிடித்துக் கொண்டு காத்திருந்தனர். தான்தான் ஸ்லிதரினின் வாரிசு என்று மால்ஃபாய் எக்கணமும் சொல்லிவிடக்கூடும். ஆனால் –
‘அது யாரென்று எனக்குத் தெரிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்,” என்று மால்ஃபாய் எரிச்சலுடன் கூறினான். “அவனுக்கு நான் உதவலாம்.”
ரானின் தாடை இறங்கியது. அது கிராபை இன்னும் வடிகட்டிய மடையனாகத் தோன்றச் செய்தது. அதிர்ஷ்டவசமாக மால்ஃபாய் அதைக் கவனிக்கவில்லை. வேகமாகச் சிந்தித்த ஹாரி, “ஆனால் இவை அனைத்திற்கும் பின்னால் யார் இருக்கிறார்கள் என்று உனக்குக் கண்டிப்பாகத் தெரிந்திருக்கும், இல்லையா?” என்று கேட்டான்.
“காயல், அது எனக்குத் தெரியாது. சொன்னதையே நான் உனக்கு எத்தனை முறை சொல்லிக் கொண்டிருக்க வேண்டும்?” என்று மால்ஃபாய் ஹாரியிடம் எரிந்து விழுந்தான். “கடந்த முறை ரகசியங்கள் அடங்கிய பாதாள அறை திறக்கப்பட்டது குறித்து என் வருடங்களுக்கு முன்பு நடந்த விஷயம். அதனால் அது அவருடைய அப்பாவும் என்னிடம் எதையும் கூற மறுக்கிறார். அது ஐம்பது காலகட்டத்திற்கு முந்தைய நிகழ்வு. ஆனாலும் அவருக்கு அது குறித்த அனைத்து விஷயங்களும் தெரியும். அவை எல்லாம் பரம ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன என்பதால், அது குறித்து எனக்கு அளவுக்கு அதிகமாக தெரிந்திருந்தால், என்மீது சந்தேகம் வரும். ஆனால் ஒரே விஷயம் மட்டும் எனக்கு உறுதியாகத் தெரியும். கடந்த முறை ரசியங்கள் அடங்கிய பாதாள அறை திறக்கப்பட்டபோது ஓர் ஈன ரத்தப் பிறவியின் உயிர் காவு கொடுக்கப்பட்டது. அதனால் இம்முறையும் வெகு விரைவிலேயே அவர்களில் ஒருவர் பலியாகப் போவது உறுதி, அது ஹெர்மயனியாக இருந்தால் நன்றாக இருக்கும்.” என்று அவன் குரூரத் திருப்தியுடன் கூறினான்.
ரான் கிராபின் பிரம்மாண்டமான கை முஷ்டியை மடக்கிக் கொண்டிருந்தான். ரான் மால்ஃபாயைக் குத்தினால் தங்கள் சாயம் வெளுத்துவிடும் என்று பயந்த ஹாரி, ரானின் பக்கம் ஓர் எச்சரிக்கைப் பார்வையை வீசிவிட்டு, “கடந்த முறை ரகசியங்கள் அடங்கிய பாதாள அறையைத் திறந்தவன் பிடிபட்டானா என்று உனக்குத் தெரியுமா?” என்று கேட்டான்.
‘ஓ! தெரியுமே! அது யாரென்று எனக்குத் தெரியாது, ஆனால் பள்ளியிலிருந்துஅவன் வெளியேற்றப்பட்டான். அவன் இன்னும் அஸ்கபானில்தான் இருந்தாக வேண்டும்,” என்று மால்ஃபாய் கூறினான்.
“அஸ்கபான்?” என்று ஹாரி குழப்பத்துடன் கேட்டான்.
“அஸ்கபான் – மந்திரவாதிகளின் சிறைச்சாலை,” என்று மால்ஃபாய் கூறிவிட்டு, ஹாரியை நம்ப முடியாமல் பார்த்தவாறு, ‘காயல், நீ இதைவிட மந்தமாக இருந்தால், நீ பின்னோக்கித்தான் வளரப் போகிறாய்,” என்று கூறினான்.
பின் அவன் தன் இருக்கையில் அமைதியற்று நெளிந்தவாறு மேலும் தொடர்ந்தான். “என் அப்பா என்னைக் கொஞ்சம் அடக்கி வாசிக்குமாறு கூறியிருக்கிறார். ஸ்லிதரினின் வாரிசு தன் வேலையைப் பார்த்துக் கொள்ளட்டும் என்று அவர் என்னிடம் கூறியுள்ளார். பள்ளியில் இருக்கும் ஈன ரத்தக் கழிசடைகள் ஒழித்துக்கட்டப்பட வேண்டும் என்பதில் சந்தேகமில்லை, ஆனால் நான் இதில் மூக்கை நுழைக்க வேண்டாம் என்று அவர் என்னிடம் கூறியுள்ளார். அவருக்கு இச்சமயத்தில் தலைக்கு மேல் வேலை இருக்கிறது. எங்களுடைய மாளிகையில் கடந்த வாரம் மந்திரஜால அமைச்சகம் அதிரடிச் சோதனை ஒன்றை நடத்தியிருந்ததைப் பற்றி நான் உங்களிடம் கூறினேனா?”
காயலின் அழுது வடிந்த முகத்தில் கொஞ்சம் கவலையை வெளிப்பட வைக்க ஹாரி முயன்றான்.
“அதிர்ஷ்டவசமாக அவர்களால் பெரிதாக எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை. விலை மதிப்பிட முடியாத தீய மந்திர சக்திச் சமாச்சாரங்கள் என் தந்தையிடம் நிறையவே உள்ளன. ஆனால் அதிர்ஷ்டவசமாக, எங்களுடைய வீட்டு வரவேற்பறைக்குக் கீழே எங்களுக்கு ஒரு ரகசிய அறை இருக்கிறது -“
“ஆ!” என்று ரான் கத்தினான்.
மால்ஃபாய் அவனைப் பார்த்தான். ஹாரியும் அவனைப் பார்த்தான் ரானின் முகம் சிவந்து கொண்டிருந்தது. அவனது மூக்கும் மெதுவாக நீளத் துவங்கியிருந்தது. அவர்களுடைய ஒரு மணிநேரம் முடிவடைய இருந்தது. ரான் மீண்டும் தனது பழைய உருவத்திற்கு மாறத் துவங்கியிருந்தான். ரானின் முகத்தில் திடீரென்று தென்பட்ட அதிர்ச்சியை வைத்துப் பார்த்தபோது, தானும் மாறத் துவங்கியிருக்க வேண்டும் என்று ஹாரி நினைத்தான்.
அவர்கள் இருவரும் துள்ளி எழுந்தனர்.
“என் வயிற்றுக்கு மருந்து வேண்டும்,” என்று ரான் முனகினான். அவர்கள் மறுபேச்சின்றி ஸ்லிதரினின் பொது அறையின் குறுக்காக ஓடி, அந்தக் கற்சுவரில் தங்களைத் தூக்கி எறிந்து, வெளியே போய் மால்ஃபாய் எதையும் கவனித்திருக்க மாட்டான் என்று அவர்கள் அங்குள்ள பாதையில் சிட்டாகப் பறந்தனர். இதற்கிடையே, நம்பினர். காயலின் பெரிய காலணிகளிலிருந்து தன்னுடைய கால்கள் கழன்று கொண்டிருந்ததை ஹாரி உணர்ந்தான். அதோடு, அவன் சுருங்கிக் கொண்டும் இருந்ததால், தன் அங்கியை உயரே தூக்கிப் பிடித்துக் கொண்டான். வெறிச்சோடிக் கிடந்த வரவேற்பறைக்கு அவர்கள் வந்து சேர்ந்தபோது, அங்கிருந்த துடப்ப அலமாரியில் இருந்த கிராபும் காயலும் தங்கள் கால்களால் அந்த அலமாரியை உதைத்துக் கொண்டிருந்ததால் ஏற்பட்ட அடக்கமான சத்தத்தைத் தவிர வேறு எந்தச் சத்தமும் கேட்கவில்லை. தங்களுடைய காலணிகளை அந்த அலமாரிக்கு வெளியே விட்டுவிட்டு, ரானும் ஹாரியும் தங்கள் காலுறைகளுடன் பளிங்குப் படிக்கட்டுகளில் தாவி ஏறி முனகல் மர்ட்டிலின் குளியலறைக்குத் தலைதெறிக்க ஓடினர்.
ரான் தங்களுக்குப் பின்னால் அந்தக் குளியலறையின் கதவை மூடியவாறு, “மொத்த நேரமும் விரயமாகிவிட்டது என்று சொல்லிவிட முடியாது,” என்று மூச்சிரைத்துக் கொண்டே கூறினான். “யார் இந்தத் தாக்குதல்களை நடத்திக் கொண்டிருக்கிறார்கள் என்பதை நாம் இன்னும் கண்டுபிடிக்கவில்லை என்பது உண்மைதான் என்றாலும், மால்ஃபாயின் வீட்டு வரவேற்பறையின் கீழே தேடும்படி நான் என்னுடைய அப்பாவுக்கு ஒரு கடிதம் எழுதப் போகிறேன்.”
ஹாரி, அந்த அறையிலிருந்த உடைந்த கண்ணாடியில் தன் முகத்தைப் பார்த்தான். அவன் மறுபடியும் பழைய நிலைக்கு வந்திருந்தான். அவன் தன்னுடைய மூக்குக்கண்ணாடியை எடுத்து அணிந்து கொண்டிருந்தபோது, ஹெர்மயனி இருந்த தடுப்பறைக் கதவை ரான் பலமாகத் தட்டினான்.
“ஹெர்மயனி, வெளியே வா! உன்னிடம் சொல்வதற்கு எங்களிடம் கொள்ளை கொள்ளையாக விஷயம் இருக்கிறது -“
“இங்கிருந்து போய்விடுங்கள்!” என்று ஹெர்மயனி கீச்சிட்டாள்.
ஹாரியும் ரானும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
“ஹெர்மயனி, உனக்கு என்னவாயிற்று?” என்று ரான் கேட்டான். “இந்த நேரத்தில் நீ பழைய நிலைமைக்கு வந்திருக்க வேண்டும். நாங்கள்- “
திடீரென்று, முனகல் மாட்டில், ஹெர்மயனி இருந்த தடுப்பறைக் கதவின் ஊடாகப் புகுந்து வெளியே வந்தது. முனகல் மாட்டில் இவ்வளவு சந்தோஷமாக இருந்து ஹாரி பார்த்ததில்லை.
“ஊ ஊ ஊஊ, காத்திருந்து பார்” என்று அது கூறியது. “படுபயங்கரமாக இருக்கிறது”
அந்தத் தடுப்பறையின் தாழ்ப்பாள் விலகியது. ஹெர்மயனி அழுது கொண்டே வெளியே வந்தாள். அவள் தன்னுடைய அங்கியைக் கொண்டு தன் தலையில் முக்காடிட்டு இருந்தாள்.
“என்ன ஆயிற்று?” என்று ரான் சந்தேகமாகக் கேட்டான். “மில்லிசென்ட்டின் மூக்கு ஏதாவது உள்னிடம் மிச்சமிருக்கிறதா?”
ஹெர்மயனி தன் அங்கியை நழுவவிட்டாள். ரான் பின்வாங்கி அங்கிருந்த தொட்டியில் சாய்ந்தான்.
கருப்பு முடியால் அவளது முகம் முழுவதும் மூடப்பட்டிருந்தது. அவளது கண்கள் மஞ்சள் நிறத்தில் இருந்தன. இரண்டு நீண்ட காதுகளின் முனைகள் அவளது தலைமுடியின் ஊடாகத் துருத்திக் கொண்டிருந்தன.
“அது ஒரு பூனையின் முடி,” என்று ஹெர்மயனி அலறினாள். “மில்லி – மில்லிசென்ட் – ஒரு பூனையை வளர்த்து வந்திருக்க வேண்டும். நாம் தயாரித்த மாயத் திரவத்தை நாம் விலங்குகளின் உருவத்திற்கு மாற உபயோகிக்கக்கூடாது.”
“ஐயோ!” என்று ரான் அலறினான்,
“உன்னை எல்லோரும் கிண்டலடித்துக் காய்ச்சி எடுக்கப் போகிறார்கள்,” என்று முனகல் மர்ட்டில் சந்தோஷமாகக் கூறியது.
“ஹெர்மயனி, ஒன்றும் பிரச்சனையில்லை,” என்று ஹாரி அவசர அவசரமாகக் கூறினான். “நாங்கள் உன்னை மருத்துவமனைக்குக் கூட்டிச் செல்கிறோம். மேடம் பாம்ஃபிரே ஒருபோதும் அளவுக்கு அதிகமான கேள்விகளைக் கேட்பதில்லை . . .”
ஹெர்மயனியை அந்தக் குளியலறையைவிட்டு வெளியே கூட்டிவர, அவர்கள் அவளை வெகு நேரம் தாஜா செய்ய வேண்டியிருந்தது. முனகல் மர்ட்டில் அவர்களை பயங்கரச் சிரிப்புடன் வழியனுப்பி வைத்தது.
“உனக்கு ஒரு வால் இருப்பதை எல்லோரும் கண்டுபிடித்தவுடன் என்ன நடக்கிறது என்று பார்!”
– தொடரும்…
– ஹாரி பாட்டரும் பாதாள அறை ரகசியங்களும், மூலம்: ஜே.கே.ரோலிங், தமிழில்: பி.எஸ்.வி.குமாரசாமி, முதற் பதிப்பு: 2013, மஞ்சுள் பப்ளிஷிங் ஹவுஸ், மும்பை.