ஹாரி பாட்டரும் பாதாள அறை ரகசியங்களும்

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: புனைவு
கதைப்பதிவு: September 28, 2025
பார்வையிட்டோர்: 49 
 
 

(2013ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 3-4 | அத்தியாயம் 5-6 | அத்தியாயம் 7-8

5. நையப் புடைக்கும் விந்தை மரம்

ஹாரிக்கு ஏமாற்றமளிக்கும் விதத்தில் அவனுடைய விடுமுறை வெகு சீக்கிரமே முடிந்துவிட்டிருந்தது. அவன் ஹாக்வார்ட்ஸுக்குத் திரும்பிச் செல்லத் துடித்துக் கொண்டிருந்தபோதிலும், அவன் ரானின் வீட்டில் கழித்த ஒரு மாதம் அவனுடைய வாழ்க்கையிலேயே மிகமிக மகிழ்ச்சியான காலகட்டமாக விளங்கியது. அவன் டர்ஸ்லீயை நினைத்தபோதும், அடுத்த முறை அவர்களுடைய வீட்டிற்குத் திரும்பிப் போகும்போது தனக்குக் கிடைக்கவிருந்த வரவேற்பு எப்படி இருக்கும் என்று கற்பனை செய்தபோதும், ரானைக் கண்டு அவனால் பொறாமைப்படாமல் இருக்க முடியவில்லை.

அவன் அங்கு கழித்தக் கடைசி இரவன்று மோலி மிகப் பிரமாதமான அறுசுவை விருந்தொன்றைத் தயாரித்திருந்தார். அதில் ஹாரிக்குப் பிடித்த அனைத்துப் பதார்த்தங்களும் இடம்பெற்றிருந்தன. அவ்விருந்து வெல்லப் பாயசத்தோடு நிறைவடைந்தது. ஃபிரெட்டும் ஜார்ஜும் அமர்க்களமாக ஃபிலிபஸ்டர் வாணவெடிகளோடு அந்த இரவை நிறைவு செய்தனர்; சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாகச் சமையலறையின் உத்தரத்திற்கும் சுவருக்குமாகக் குதித்துக் கொண்டிருந்த நீலம் மற்றும் சிவப்பு நிற நட்சத்திரங்களால் அவர்கள் அந்த அறையை அலங்கரித்தனர். அவர்கள் படுக்கப் போவதற்கு முன்பாக மீண்டும் ஒரு முறை சூடான சாக்லேட் பானம் அவர்களுக்கு வழங்கப்பட்டது.

அடுத்த நாள் அவர்கள் அனைவரும் புறப்படுவதற்கு வெகுநேரம் பிடித்தது. கோழி கூவுவதற்கு முன்பாகவே அவர்கள் எழுந்து கொண்டிருந்தபோதிலும், செய்து முடிப்பதற்கு இன்னும் ஏகப்பட்ட வேலைகள் இருந்ததுபோலத் தோன்றியது. உபரிக் காலுறைகளையும் மெத்தைகளையும் தேடிக் கொண்டிருந்த மோலி கொஞ்சம் மோசமான மனநிலையில் இருந்தார்; அங்கிருந்தவர்கள் அங்குமிங்கும் ஓடிக் கொண்டிருந்தபோது மாடிப்படிகளில் ஒருவரோடு ஒருவர் இடித்துக் கொண்டனர்; அவர்கள் அரைகுறை ஆடைகளுடனும் கையில் ரொட்டித் துண்டுகளுடனும் திரிந்து கொண்டிருந்தனர்; ஆர்தர், ஜின்னியின் டிரங்குப் பெட்டியைத் தன் காரில் வைப்பதற்காகத் தூக்கிச் சென்றபோது, முற்றத்தில் ஒரு கோழி அவருக்குக் குறுக்கே வந்ததால் கீழே விழுந்து கிட்டத்தட்டத் தன் கழுத்தை முறித்துக் கொண்டார்.

எட்டுப் பேருக்கும், ஆறு பெரிய டிரங்குப் பெட்டிகள், இரண்டு ஆந்தைகள், ஓர் எலி ஆகியவற்றிற்கும் எப்படி ஒரு சிறிய ஃபோர்டு ஏஞ்சலியா காரில் இடமிருக்கும் என்று ஹாரி மண்டையைப் பிய்த்துக் கொண்டிருந்தான். சிறப்பு அம்சம் எதையேனும் ஆர்தர் அதில் இணைத்திருக்கக்கூடும் என்று அவன் கணக்குப் போட்டான்.

ஆர்தர் தன் காரின் டிக்கியைத் திறந்து ஹாரிக்குக் காட்டிவிட்டு, “மோலியிடம் இது பற்றி மூச்சுவிட்டுவிடாதே,” என்று கிசுகிசுத்தார். எல்லா டிரங்குப் பெட்டிகளையும் மிக எளிதாகத் தன்னுள் அடக்கிக் கொள்ளும் விதத்தில் மந்திரவித்தை மூலம் அதை அவர் விசாலமாக்கியிருந்தார்.

கடைசியில் அவர்கள் எல்லோரும் ஒருவழியாகக் காரில் ஏறி அமர்ந்ததும், மோலி பின்னிருக்கையை எட்டிப் பார்த்து, அங்கு ஹாரி, ரான், ஃபிரெட், ஜார்ஜ், பெர்சி ஆகியோர் அருகருகே மிகவும் சௌகரியமாக உட்கார்ந்திருந்ததைக் கண்டதும், “இந்த மகுள்கள் நாம் நினைப்பதைவிட அதிகப் புத்திசாலித்தனம் மிக்கவர்கள், இல்லையா?” என்று கேட்டார். அவரும் ஜின்னியும் காரில் ஏறி முன்னிருக்கையில் அமர்ந்தனர். அந்த இருக்கையும் நீளமாக இழுக்கப்பட்டிருந்ததால், அது பூங்காவிலுள்ள பெஞ்சுபோலத் தோற்றமளித்தது. “வெளியிலிருந்து பார்க்கும்போது உள்ளே இவ்வளவு விசாலமாக இருக்கும் என்று தெரியவே இல்லையே?”

ஆர்தர் காரை இயக்கினார். அது முற்றத்தில் மெதுவாக உருண்டு வந்தபோது, ஹாரி, பின்னால் திரும்பி அந்த வீட்டைக் கடைசியாக ஒருமுறை பார்த்தான். அடுத்து இதைத் தான் மீண்டும் எப்போது பார்க்கப் போகிறோம் என்று அவன் வியந்து கொண்டிருந்தபோது, கார் மீண்டும் அங்கேயே திரும்பி வந்தது. ஜார்ஜ் தன்னுடைய வாணவெடிகளை மறந்துவிட்டிருந்தான். ஐந்து நிமிடங்கள் கழித்து அவர்களுடைய கார் மீண்டும் ஒரு முறை அந்த முற்றத்திற்குள் வந்தது. இம்முறை ஃபிரெட் தன் மந்திரத் துடப்பத்தை எடுக்க மறந்திருந்தான். நெருங்கிக் நெடுஞ்சாலையை அவர்கள் கிட்டத்தட்ட கொண்டிருந்தபோது, திடீரென்று, ஜின்னி தன் நாட்குறிப்பை எடுக்க மறந்துவிட்டிருந்ததாகக் கிறீச்சிட்டாள். அவள் அதை எடுத்துக் கொண்டு மீண்டும் வந்து காரில் ஏறியபோது மிகவும் தாமதமாகிவிட்டிருந்தது. அங்கு பதற்றமான ஒரு சூழல் நிலவியது.

ஆர்தர் தன் கைக்கடிகாரத்தைப் பார்த்துவிட்டுத் தன் மனைவியைத் திரும்பிப் பார்த்தார்.

“மோலி-“

“ஆர்தர், வேண்டாம்!”

“யாருக்கும் எதுவும் தெரியாது. இதோ இங்கு இருக்கும் இந்தச் சிறிய பொத்தான்தான் நான் பொருத்தியுள்ள ‘மறைய வைக்கும் முடுக்கி’ அது நம்மை வானத்தில் தூக்கி விட்டுவிடும் – பின்னர் நாம் மேகங்களுக்கு மேலேதான் பறப்போம். பத்து நிமிடங்களுக்குள் நாம் அங்கு சென்றடைந்துவிடலாம். யாராலும் இதைக் கண்டுபிடிக்க முடியாது -“

“ஆர்தர், வேண்டாம் என்று நான் கூறியது உங்கள் காதுகளில் விழவில்லையா? அதுவும் இந்தப் பட்டப்பகலில்!”

அவர்கள் கிங்ஸ் கிராஸ் ரயில் நிலையத்தை வந்தடைந்தபோது மணி பத்தே முக்கால் ஆகியிருந்தது. காரில் இருந்த டிரங்குப் பெட்டிகளை எடுத்துச் செல்வதற்காகத் தள்ளுவண்டிகளை எடுத்து வர ஆர்தர் சாலையின் குறுக்காகப் பாய்ந்து சென்றார். அவர்கள் அனைவரும் வேகவேகமாக ரயில் நிலையத்திற்குள் விரைந்தனர்.

ஹாரி கடந்த வருடம் ஹாக்வார்ட்ஸ் எக்ஸ்பிரஸில் பயணம் செய்திருந்தான். மகுள்களின் கண்களுக்குப் படாமல் மறைந்திருந்த ஒன்பதே முக்கால் எண் பிளாட்பாரத்திற்கு எப்படிச் செல்வது என்பது அப்போது அவனுக்குச் சிக்கலான ஒரு விஷயமாக இருந்தது. நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், ஒன்பதாவது மற்றும் பத்தாவது பிளாட்பாரங்களுக்கு இடையே இருந்த உறுதியான தடுப்புச் சுவரின் ஊடாக நடந்து செல்ல வேண்டும். அவ்வளவுதான். ஆனால் அதை ஜாக்கிரதையாகச் செய்ய வேண்டும் – ஏனெனில் அங்கிருக்கும் மகுள்கள் எவரும் நீங்கள் திடீரென்று மாயமாய் மறைந்துவிட்டதை அறியக்கூடாது.

“பெர்சி முதலில் போகட்டும்.” என்று மோலி கூறினார். அவர் தன் தலைக்கு மேலாக இருந்த கடிகாரத்தைப் பதற்றத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார். ஏனெனில் அவர்கள் அந்தத் தடுப்புச் சுவரின் ஊடாகச் சென்று மறைவதற்கு அவர்களுக்கு வெறும் ஐந்து நிமிடங்களே இருந்ததாக அது காட்டிக் கொண்டிருந்தது.

பெர்சி சுறுசுறுப்பாகவும் வேகமாகவும் நடந்து சென்று மறைந்தான். அடுத்து ஆர்தர் சென்றார். பின்னர் ஃபிரெட்டும் ஜார்ஜும் சென்றனர்.

மோலி ஹாரியிடமும் ரானிடமும், “நான் ஜின்னியைக் கூட்டிக் கொண்டு செல்கிறேன். நீங்கள் இரண்டு பேரும் என் பின்னால் வாருங்கள்; என்று கூறிவிட்டு ஜின்னியின் கையைப் பிடித்துக் கொண்டு அங்கிருந்து அகன்றார். கண்களை மூடித் திறப்பதற்குள் அவர்களைக் காணவில்லை.

ரான் ஹாரியிடம், “நாம் இரண்டு பேரும் சேர்ந்தே போகலாம். இன்னும் ஒரு நிமிடம் மட்டுமே இருக்கிறது.” என்று கூறினான்.

ஹெட்விக்கின் கூண்டு தனது டிரங்குப் பெட்டியின்மீது பத்திரமாக இருந்ததை உறுதி தள்ளுவண்டியைத் தள்ளிக் கொண்டு அந்தத் தடுப்புச் சுவரை செய்து கொண்டு, ஹாரி தனது அடைந்தான். அவன் முழு தைரியத்துடன் இருந்தான். இது ஃபுளூ பொடியை உபயோகிக்கும் அளவுக்கு அசௌகரியமாத இருக்கவில்லை. அவர்கள் இருவரும் தங்களுடைய தள்ளுவண்டிகளின் கைப்பிடிகளை நோக்கித் தங்களுடைய தலைகளைக் கவிழ்த்துக் கொண்டு, தீர்மானமாக அந்தத் தடுப்புச் சுவரை நோக்கி நடந்தனர். அதை நெருங்க நெருங்கத் தங்களுடைய நடையின் வேகத்தைக் கூட்டினர், அதற்கு ஒருசில அடிகள் இருந்தபோது அவர்களது நடை ஓட்டமாக மாறியது. அடுத்து –

டமால்!

இரண்டு தள்ளுவண்டிகளும் அந்தத் தடுப்புச் சுவரில் மோதிப் பின்னால் எகிறின. ரானின் டிரங்குப் பெட்டி பலத்தச் சத்தத்துடன் கீழே விழுந்தது. ஹாரி நிலை தடுமாறிக் கீழே விழுந்தான். ஹெட்விக்கின் கூண்டு வழுவழுப்பான தரையில் விழுந்து மோதியது. கோபத்தில் கிறீச்சென்று கத்தியபடியே ஹெட்விக் தன் கூண்டோடு உருண்டு கொண்டிருந்தது. அவர்களைச் சுற்றியிருந்த மக்கள் அவர்களை வெறித்துப் பார்த்தனர். அருகே இருந்த ரயில்வே பாதுகாவலர் ஒருவர், “உங்கள் மனத்தில் என்னதான் நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்?” என்று இரைந்தார்.

“தள்ளுவண்டி நிலை தடுமாறிவிட்டது,” என்று கூறிய ஹாரிக்கு மூச்சு வாங்கியது, அவன் தன் விலாவைப் பிடித்தவாறே எழுந்து நின்றான். பெரும் அமளி துமளி செய்து கொண்டிருந்த ஹெட்விக்கை ரான் ஓடிச் சென்று எடுத்துக் கொண்டான். சுற்றிலும் இருந்த மக்கட்கூட்டம் விலங்குகளைச் சித்திரவதைப்படுத்துவது குறித்து ஏதோ முனகிக் கொண்டிருந்தது.

“நம்மால் ஏன் போக முடியவில்லை?” என்று ஹாரி ரானிடம் கிசுகிசுத்தான்.

“எனக்குத் தெரியவில்லை -”

ரான் சுற்றுமுற்றும் பார்த்தான். ஒரு டஜன் மக்கள் இன்னும் அவர்களையே பார்த்துக் கொண்டிருந்தனர்.

“நாம் நம் ரயிலைத் தவறவிடப் போகிறோம்,” என்று ரான் கிசுகிசுத்தான். “நாம் போக வேண்டிய வழி ஏன் தானாகவே அடைத்துவிட்டது என்று தெரியவில்லை…”

ஹாரி அந்தப் பிரம்மாண்டமான கடிகாரத்தையே பார்த்துக் கொண்டிருந்தான். அவனுக்கு வயிற்றைப் புரட்டிக் கொண்டு வந்தது. பத்து விநாடிகள்… ஒன்பது விநாடிகள்…

அவன் கவனமாகத் தனது தள்ளுவண்டியை எச்சரிக்கையுடன் கொண்டு சென்றான். அந்தத் தடுப்புச் சுவர் அருகே கொண்டு தள்ளுவண்டியைத் தனது முழு பலத்துடன் தள்ளினான். ஆனால் அது துளிகூட, நகரவில்லை.

மூன்று விநாடிகள்… இரண்டு விநாடிகள்… ஒரு விநாடி…

“ரயில் போய்விட்டது,” என்று ரான் அதிர்ச்சியுடன் கூறினான். “ரயில் கிளம்பிப் போய்விட்டது. அம்மாவும் அப்பாவும் மீண்டும் நம்மை வந்தடைய முடியாவிட்டால் என்ன செய்வது? உன்னிடம் மகுள்களின் பணம் ஏதாவது இருக்கிறதா?”

ஹாரி வெறுமையாகச் சிரித்தான். “டர்ஸ்லீ தம்பதியினர் சுமார் ஆறு வருடங்களாக என் கைச் செலவுக்குப் பணம் கொடுத்ததே இல்லை.”

ரான் அந்தக் குளிரான தடுப்புச் சுவரில் தன் காதை வைத்து அழுத்தினான்.

“எந்தச் சத்தமும் கேட்கவில்லை,” என்று அவன் பதற்றமாகக் கூறினான். “நாம் இப்போது என்ன செய்வது? நம்மை வந்தடைய அம்மாவிற்கும் அப்பாவிற்கும் எவ்வளவு நேரம் ஆகும் என்று தெரியவில்லையே?”

அவன் தன்னைச் சுற்றி நோட்டம் விட்டான். இன்னும் ஒருசில மக்கள் அவர்களையே பார்த்துக் கொண்டிருந்தனர். ஹெட்விக் தொடர்ந்து கிறீச்சிட்டுக் கொண்டிருந்ததுதான் அதற்கு முக்கியக் காரணம்.

“நாம் வெளியே சென்று காரில் காத்திருப்பது நல்லது,” என்று ஹாரி கூறினான். “நாம் தேவையில்லாமல் நம்மீது அதிகப்படியான கவனத்தை ஈர்த்துக் கொண்டிருக்கிறோம்-”

“ஹாரி,” என்று ரான் சந்தோஷத்துடன் கூவினான். அவனது கண்கள் மின்னின. “அந்தக் கார்!”

“அதற்கென்ன இப்போது?”

“நம்மால் அதில் ஹாக்வார்ட்ஸுக்குப் பறக்க முடியும்!”

“ஆனால் அது மந்திர -“

“நாம் இப்போது சிக்கலில் மாட்டிக் கொண்டிருக்கிறோம். ஆனால் பள்ளிக்குச் சென்றாக வேண்டும், இல்லையா? உண்மையான நெருக்கடி என்றால் வயது முதிராத மந்திரவாதிகளுக்குக்கூட மந்திரவித்தைகளைப் பயன்படுத்த அனுமதி இருக்கிறது. தடுப்புச் சட்டம் பிரிவு பத்தொன்பதோ, என்ன இழவோ ..”

ஹாரியின் பதற்றம் இப்போது பரவசமாக மாறிவிட்டிருந்தது. “உன்னால் அதைப் பறக்க வைக்க முடியுமா?”

“முடியும். அது ஒரு பிரச்சனையே அல்ல,” என்று தெரிவித்த ரான், ரயில்வே நிலையத்திலிருந்து வெளியே செல்வதற்கான வழியை நோக்கித் தன் தள்ளுவண்டியைத் திருப்பினான். “ஹாரி! வா, போகலாம். வேகமாகச் சென்றால் ஹாக்வார்ட்ஸ் எக்ஸ்பிரஸை நம்மால் பின்தொடர முடியும்.”

தங்களை வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்த மகுள்களை விலக்கிக் கொண்டு அவர்கள் ரயில் நிலையத்தைவிட்டு வெளியே வந்து தங்களது பழைய ஃபோர்டு ஏஞ்சலியா கார் நிறுத்தப்பட்டிருந்த பக்கத்துத் தெருவை வந்தடைந்தனர்.

ரான் தன் மந்திரக்கோலால் தொடர்ந்து ஆங்காங்கே தட்டி அந்தக் காரின் பிரம்மாண்டமான டிக்கியைத் திறந்தான். அவர்கள் தங்களுடைய டிரங்குப் பெட்டிகளைத் தூக்க முடியாமல் தூக்கி அதில் வைத்தனர். பின்னர் ஹெட்விக்கைப் பின்னிருக்கையில் வைத்துவிட் முன்னிருக்கைகளில் ஏறிக் கொண்டனர்.

“நம்மை யாரும் கவனிக்கிறார்களா என்று பார்,” என்று கூறிய ரான், தன் மந்திரக்கோலால் ஒரு தட்டுத் தட்டிக் காரை இயக்கினான். ஹாரி சன்னல் வழியாகத் தன் தலையை வெளியே நீட்டினான். முன்னால் இருந்த முக்கியச் சாலையில் போக்குவரத்து ஏராளமாக இருந்தாலும், அவர்கள் இருந்த தெரு காலியாக இருந்தது.

“சரி, புறப்படு,” என்று ஹாரி கூறினான்.

ரான் காரின் டேஷ்போர்டில் இருந்த ஒரு வெள்ளிப் ரு பொத்தானை அழுத்தினான். அந்தக் கார் பார்வையிலிருந்து மறைந்தது. அதேபோல அவர்களும் மறைந்தனர். தன் இருக்கைக்குக் கீழே ஏற்பட்ட அதிர்வை ஹாரியால் உணர முடிந்தது; காரின் எஞ்சின் சத்தத்தை அவனால் கேட்க முடிந்தது; தனது முழங்காலின்மீது இருந்த தனது கையையும் மூக்கின்மீது இருந்த தனது மூக்குக் கண்ணாடியையும் அவனால் உணர முடிந்தது; அழுக்கான ஒரு தெருவில் நிறுத்தப்பட்டிருந்த கார்களுக்கு ஒருசில அடிகள் மேலே தாங்கள் மிதந்து கொண்டிருந்தது அவனுக்குத் தெரிந்தது.

“சரி, நாம் போகலாம்,” என்று ரானின் குரல் அருகிலிருந்து கேட்டது.

அவர்களது கார் மேலே எழும்பத் துவங்கியதும் பூமியும் காருக்கு ருபுறம் இருந்த அழுக்கடைந்திருந்த கட்டிடங்களும் பார்வையிலிருந்து மறையத் துவங்கின. ஒருசில நிமிடங்களில், புகையால் சூழப்பட்டிருந்த லண்டன் மாநகரம் அவர்களுக்குக் கீழே தெரிந்தது.

பிறகு டப்பென்று ஒரு சத்தம் கேட்டது. காரும் அவர்களும் மீண்டும் பார்வைக்குப் புலப்பட்டனர்.

“ஐயையோ,” என்று ரான் கத்தினான். அவன் அந்த ‘மறைய வைக்கும் முடுக்கியை’ ஓங்கிக் குத்தினான். “இது சரியாக வேலை செய்யவில்லை என்பதுபோலத் தெரிகிறது.”

அவர்கள் இருவரும் அதை மீண்டும் பலமாகக் குத்தினர். கார் மீண்டும் பார்வையிலிருந்து மறைந்தது. பின்னர் அது மீண்டும் பார்வைக்குத் தென்பட்டது.

“ஹாரி, இறுக்கமாகப் பிடித்துக் கொள்,” என்று கூறிய ரான், ஆக்ஸிலரேட்டரை நன்றாக அழுத்தினான். பஞ்சுப் பொதிகள்போலத் தோன்றிய மேகங்களின் ஊடாக அவர்கள் விர்ரெனப் பறந்தனர். அவர்களைச் சுற்றி இருந்த எல்லாம் மங்கலாக மாறியது.

நாற்புறமும் தங்களைச் சூழ்ந்து கொண்ட மேகப் பஞ்சுப் பொதிக் கூட்டங்களைப் பார்த்தவாறே, “அடுத்து நாம் என்ன செய்யப் போகிறோம்?” என்று ஹாரி கேட்டான்.

“நாம் எந்தத் திசையில் போக வேண்டும் என்பதைத் தெரிந்து கொள்ள நாம் நமது ரயிலைப் பார்த்தாக வேண்டும்,” என்று ரான் கூறினான்.

“அப்படியானால் காரைச் சற்றுக் கீழே இறக்கு – வேகமாக -”

அவர்கள் மேகக் கூட்டங்களுக்குக் கீழே இறங்கினர். கண்களைச் சுருக்கிக் கொண்டு தங்கள் இருக்கைகளில் இருந்து எட்டிக் கீழே பார்த்தனர்.

“ஆ, ரயிலை என்னால் பார்க்க முடிகிறது,” என்று ஹாரி கத்தினான். “அதோ! அங்கே!”

அவர்களுக்கு வெகு கீழே ஹாக்வார்ட்ஸ் எக்ஸ்பிரஸ் ஒரு சிவப்பு நிறப் பாம்புபோலச் சிறியதாக ஊர்ந்து சென்று கொண்டிருந்தது.

டாஷ்போர்டில் இருந்த திசைகாட்டியைச் சோதித்தபடி, ரான், “நேராக வடக்குப் பக்கம் போக வேண்டும்,” என்று கூறினான். “சரி, நாம் இனி அரை மணிநேரத்திற்கு ஒருமுறை இதைச் சரிபார்த்துக் கொள்ள வேண்டும். ஹாரி, நன்றாகப் பிடித்துக் கொள் . . .” அவர்கள் இப்போது மேகங்களைக் கிழித்துக் கொண்டு மேலே ஏறினர். ஒரு நிமிடத்திற்குப் பிறகு அவர்கள் பிரகாசமான சூரிய ஒளியில் குளித்துக் கொண்டிருந்தனர்.

அது ஒரு வித்தியாசமான உலகமாக இருந்தது. அவர்களது காரின் சக்கரங்கள் கடல்போல வியாபித்திருந்த மேகப் பொதிகளை வருடிச் சென்றன. தகதகத்துக் கொண்டிருந்த வெண் சூரியனுக்குக் கீழே வானம் பிரகாசமான நீல நிறத்தில் எல்லையற்றுப் பரந்து கிடந்தது. “நாம் இப்போது கவலைப்பட வேண்டியது விமானங்களைப் பற்றி மட்டும்தான்,” என்று ரான் கூறினான்.

அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துச் சிரிக்கத் துவங்கினர். வெகு நேரத்திற்கு அவர்களால் தங்கள் சிரிப்பை நிறுத்த முடியவில்லை.

அவர்கள் ஓர் அதிஅற்புதமான கனவில் மூழ்கியிருந்ததுபோலத் தோன்றியது. பனிக் கோபுரங்கள் போலவும் சுழல்கள் போலவும் காட்சியளித்த வெண்மேகக் கூட்டங்களை வேகமாகக் கடந்து கொண்டு, பிரகாசமான சூரிய ஒளியில் குளித்துக் கொண்டிருந்த ஒரு காரில், கை நிறைய மிட்டாய்களோடு உட்கார்ந்து கொண்டு, ஹாக்வார்ட்ஸ் கோட்டையின் முன்னால் பச்சைக் கம்பளம்போல விரிந்து பரந்திருந்த புல்வெளியில் தங்கள் காரில் வெண்ணெய்போல் வழுக்கிக் கொண்டு பிரமிக்கத்தக்க விதத்தில் தாங்கள் இறங்கும்போது, ஃபிரெட் மற்றும் ஜார்ஜின் பொறாமை வெடித்துக் கிளம்பும் முகத்தைக் காணும் வாய்ப்போடு, பயணம் செய்தால் இப்படிப்பட்ட ஒரு வழியில்தான் பயணம் செய்தாக வேண்டும் என்று ஹாரி நினைத்தான்.

அவர்கள் மேலும் மேலும் வடக்குத் திசையை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தனர். கீழே ரயில் சென்று கொண்டிருந்ததா என்பதையும் அவர்கள் அவ்வப்போது கண்காணித்துக் கொண்டனர். மேகங்களுக்குக் கீழே கொண்டு சென்ற ஒவ்வொரு முறையும் அவ்வாறு கண்காணிப்பதற்காக அவர்கள் தங்கள் காரை அவர்களுக்குத் தென்பட்டக் காட்சி மாறிக் கொண்டே இருந்தது. லண்டன் மாநகரம் வெகுவிரைவில் விடைபெற்றுக் கொண்டது. அதன் இடத்தை, நேர்த்தியாகத் தோற்றமளித்தப் பசுமையான வயல்கள் எடுத்துக் கொண்டன. பின்னர் ஊதா வண்ணத்தில் நீண்டு படர்ந்திருந்த தரிசு நிலங்கள், சிறு பொம்மைகள்போலத் தோன்றிய தேவாலங்களுடன்கூடிய சிறிய கிராமங்கள், பல நிறங்களில் இருந்த எறும்புகள்போல ஊர்ந்து கொண்டிருந்த கார்களால் நிரம்பி வழிந்த பெருநகரங்கள் என்று வெவ்வேறு காட்சிகள் மாறி மாறித் தோன்றின. சுவாரசியமான வேறு நிகழ்வுகள் எதுவும் நடைபெறாமல் பல மணிநேரம் கடந்த பிறகு, முதலில் இருந்த குதூகலம் மறையத் துவங்கியிருந்ததை ஹாரி ஒப்புக் கொண்டாக வேண்டியிருந்தது. அவர்கள் விழுங்கியிருந்த ஏராளமான மிட்டாய்கள் அவர்களுக்குத் தாகத்தைத் ஏற்படுத்தின. ஆனால் பருகுவதற்கு அவர்களிடம் எதுவும் இருக்கவில்லை. அவர்கள் தங்களது மேலங்கிகளைக் கழற்றிவிட்டிருந்தனர். ஹாரியின் சட்டை அவனது இருக்கையோடு ஒட்டிக் கொண்டிருந்தது. வியர்வையில் குளித்திருந்த அவனது மூக்கிலிருந்து அவனது மூக்குக்கண்ணாடி நழுவிக் கொண்டே இருந்தது. அற்புதமான வடிவங்களில் காட்சியளித்துக் கொண்டிருந்த மேகக் கூட்டங்களை ரசிப்பதை அவன் நிறுத்திவிட்டிருந்தான். இப்போது பல மைல்கள் கீழே ஊர்ந்து கொண்டிருந்த ரயிலுக்காக அவன் ஏங்கினான். ரயிலில் இருந்தால் ஒரு குண்டான மந்திரவாதினி தள்ளிக் கொண்டுவரும் வண்டியிலிருந்து குளிர்ந்த பூசணிப் பழரசத்தை வாங்கிப் பருகலாம். ஆனால் ஒன்பதே முக்கால் எண் கொண்ட பிளாட்பாரத்திற்குள் அவர்களால் ஏன் நுழைய முடியாமல் போனது?

சூரியன் மேகச் சுவர்களுக்குப் பின்னால் கீழிறங்கி அதை இளஞ்சிவப்பு நிறத்தில் மூழ்கடித்த நேரத்தில், “சீக்கிரம் போய்ச் சேர்ந்துவிடுவோம், இல்லையா?” என்று ரான் முனகினான். “ரயில் இப்போது எங்கே போய்க் கொண்டிருக்கிறது என்று இன்னொரு முறை பார்க்கலாமா?”

ரயில் இன்னும் அவர்களுக்கு நேர்க் கீழேதான் ஊர்ந்து கொண்டிருந்தது. பனி போர்த்தியிருந்த ஒரு மலையைச் சுற்றி அது இப்போது வேகமாகப் போய்க் கொண்டிருந்தது. மேகக் குடைகளுக்குக் கீழே இருள் கவிழத் துவங்கியிருந்தது.

ரான் ஆக்ஸிலரேட்டரில் காலை வைத்து நன்றாக அழுத்திக் காரை மீண்டும் மேலே ஓட்டினான். அவன் அப்படிச் செய்தபோது கார் முனகத் துவங்கியது.

ஹாரியும் ரானும் பதற்றத்துடன் ஒருவரை ஒருவர் பார்த்தனர், “கார் சோர்வுற்றிருக்கக்கூடும்,” என்று ரான் கூறினான். “இதற்கு முன்பு இது இவ்வளவு தூரம் வந்ததில்லை . . .”

வானம் மேலும் மேலும் இருளத் துவங்கியபோது, காரின் முனகல் மேலும் மேலும் சத்தமாகிக் கொண்டு வந்ததைத் தாங்கள் கவனிக்காமல் இருந்ததுபோல அவர்கள் பாவனை செய்தனர். இருண்ட வானில் தாரகைகள் முளைவிடத் துவங்கின. காரின் முன்கண்ணாடியில் இருந்த துடைப்பான்கள் தமது எதிர்ப்பைத் தெரிவிப்பதுபோலச் சுரத்தின்றி ஆடிக் கொண்டிருந்ததை அலட்சியம் செய்தவாறு ஹாரி தன் மேலங்கியை எடுத்து அணிந்து கொண்டான். “இன்னும் சிறிது தூரம்தான்,” என்று ரான் கூறினான். அவன் கூறியதைப் பார்த்தபோது, அவன் அதை ஹாரியிடம் கூறாமல் அந்தக் காரிடம் கூறியதுபோலத் தோன்றியது. “இதோ வந்துவிட்டது,” என்று கூறி அவன் டேஷ்போர்டின்மீது பதற்றத்துடன் தட்டினான்.

அதற்குச் சிறிது நேரத்திற்குப் பிறகு அவர்கள் கொஞ்சம் கீழே இறங்கியபோது, தங்களால் எளிதில் அடையாளம் கண்டுகொள்ளத்தக்க இடங்கள் ஏதேனும் இருந்தனவா என்று பார்ப்பதற்காகத் தங்கள் கண்களை மிகவும் சுருக்கிக் கொண்டு பார்க்க வேண்டியிருந்தது.

திடீரென்று ஹாரி, “அதோ, அங்கே!” என்று போட்டக் கூப்பாடு ரானையும் ஹெட்விக்கையும் துள்ளிக் குதிக்க வைத்தது. “நமக்கு நேராக இருக்கிறது.”

இருண்ட தொடுவானத்திற்கு முன்னால் தன் கோபுரங்களுடனும் உயரமான மதில்களுடனும் செங்குத்தான பாறை ஒன்றில் மிக உயரத்தில் ஹாக்வார்ட்ஸ் கோட்டை மிகவும் கம்பீரமாக வீற்றிருந்தது. கார் அப்போது வேகமாக ஆடிக் குலுங்கியது. அதன் வேகம் குறையத் துவங்கியது.

“இதோ, வந்துவிட்டோம்!” என்று ரான் ஸ்டியரிங் வீலை ஆட்டித் தனது காரைத் தாஜா செய்ய முயன்றான். “கிட்டத்தட்ட வந்துவிட்டோம், இதோ இறங்கிவிடலாம்-“

எஞ்சின் சத்தமாக முனகியது. காரின் ‘பானட்’டிற்கு அடியிலிருந்து நீராவி பீய்ச்சியடித்துக் கொண்டிருந்தது. அவர்கள் ஏரியை நோக்கிப் பறந்து கொண்டிருந்தபோது ஹாரி தன்னை அறியாமலேயே தன் இருக்கையின் முனைகளை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டான்.

கார் பேயாட்டம் ஆடியது. ஹாரி சன்னல் வழியாக வெளியே எட்டிப் பார்த்தான். ஒரு மைல் கீழே கருப்பு நிறத்தில் வழவழப்பாகக் கண்ணாடிபோலத் தெரிந்த நீரை அவனால் பார்க்க முடிந்தது. ஸ்டியரிங் வீலைப் பிடித்திருந்த ரானின் கைவிரல் கணுக்கள் வெளிறிப் போயிருந்தன. கார் மீண்டும் பயங்கரமாகக் குலுங்கியது.

“இன்னும் கொஞ்ச தூரம்தான்!” என்று ரான் முணுமுணுத்தான்.

அவர்கள் ஏரியின் மேலே பறந்து கொண்டிருந்தனர் அவர்களுக்கு நேரெதிரே ஹாக்வார்ட்ஸ் கோட்டை இருந்தது… ரான் தன் காலால் ஆக்ஸிலரேட்டரை அழுத்தினான்.

ஒரு பெரிய சத்தம் கேட்டது. ஏதோ வெடித்ததுபோலத் தோன்றியது. எஞ்சின் தன் இயக்கத்தைச் சுத்தமாக நிறுத்திக் கொண்டது.

“ஜயோ, கடவுளே!” என்று கூறிய ரான் மௌனத்தில் மூழ்கினான்.

கார் முன்னோக்கிச் சரிந்தது. அவர்கள் தங்கள் காரோடு கீழே விழத் துவங்கியிருந்தனர். அவர்களது வேகம் அதிகரித்தது. அவர்கள் நேராகக் கோட்டை மதிற்சுவரை நோக்கிப் பறந்து கொண்டிருந்தனர். ரான், “ஐயோ!” என்று கத்திக் கொண்டே ஸ்டியரிங் வீலைத் திருப்பினான். அந்தக் கார் ஓர் அரை வட்டம் அடித்தது. அப்போது அது கோட்டைச் சுவரிலிருந்து ஓர் அங்குல இடைவெளியில் விலகிச் சென்றது. பிறகு, இருண்ட பசுமைக் குடில்களுக்கும் காய்கறித் தோட்டங்களுக்கும் இருண்ட புல்வெளிகளுக்கும் மேலாகப் பறந்தது. அதே சமயம், அது தொடர்ந்து தாழ்ந்து கொண்டே வந்தது.

ரான் தான் பிடித்திருந்த ஸ்டியரிங் வீலை முழுவதுமாக விட்டுவிட்டுத் தன் பையில் இருந்து தனது மந்திரக்கோலைக் கையில் எடுத்தான்.

அந்த மந்திரக்கோலைக் கொண்டு டேஷ்போர்டிலும் முன்கண்ணாடியிலும் தட்டி, “நில்! நில்!” என்று கத்தினான். ஆனால் அவர்கள் படுவேகமாகக் கீழ்நோக்கிச் சென்று கொண்டிருந்தனர். பூமி அவர்களை விழுங்குவதற்காக வேகமாக அவர்களை நோக்கிப் பறந்து வந்து கொண்டிருந்தது.

“ரான், அங்கே பார்! குறுக்காக குறுக்காக ஒரு மரம் நின்று கொண்டிருக்கிறது!” என்று ஹாரி கத்திக் கொண்டு, ஸ்டியரிங் வீலைப் பிடித்துத் திருப்ப முயன்றான். ஆனால் நேரம் அதற்குள் கடந்துவிட்டிருந்தது –

டமால்!

காதைச் செவிடாக்கும் ஒலியுடன் கனமான அந்த மரத்தில் அவர்களது கார் மோதியதில் அவர்கள் இருவரும் அந்தக் காரோடு சேர்ந்து பலத்த அதிர்ச்சியுடன் தரையில் விழுந்தனர். நசுங்கிப் போயிருந்த காரின் பானட்டிலிருந்து நீரூற்றுப்போல நீராவி பீய்ச்சியடித்துக் கொண்டிருந்தது. ஹெட்விக் பயத்தில் பயங்கரமாக அலறியது. ஹாரி காரின் முன்கண்ணாடியில் மோதியதில் அவனது நெற்றியில் கோல்ஃப் பந்தின் அளவில் ஒரு புடைப்பு ஏற்பட்டது. அவனுக்கு வலது பக்கத்தில் ரான் வேதனையுடன் முனகிக் கொண்டிருந்தான்.

“ரான், உனக்கொன்றும் பலமாக அடிபடவில்லையே?” என்று ஹாரி அவசர அவசரமாகக் கேட்டான்.

நடுங்கிய குரலில் ரான், “என் மந்திரக்கோல்,” என்று கூறினான். “என் மந்திரக்கோலின் கதியைப் பார்!”

அது கிட்டத்தட்ட இரண்டு துண்டுகளாக உடைந்து போயிருந்தது: முன்பாதி ஒடிந்து ஆடிக் கொண்டிருந்தது.

பள்ளியில் அவர்களால் அதைக் கண்டிப்பாக ஒட்ட வைத்துவிட முடியும் என்று கூற ஹாரி எத்தனித்தான். ஆனால் அவனுக்கு அதற்கு வாய்ப்பே இருக்கவில்லை. ஏனெனில், சரியாக அக்கணத்தில், முழு வேகத்துடன் துரத்தி வரும் ஒரு முரட்டுக் காளையின் வேகத்தில், ஏதோ ஒன்று, காரில் அவனிருந்த பக்கத்தைத் தாக்கியது. அவன் வேகமாக ரானின் பக்கமாகச் சாய்ந்தான். அதே அளவு வேகத்துடன் காரின் கூரையிலும் பேரிடி ஒன்று இறங்கியது.

“என்ன நடக்கிறது-“

முன் கண்ணாடி வழியாகப் பார்த்த ரானுக்கு மூச்சே நின்றுவிடும்போல இருந்தது. ஹாரியும் முன்னோக்கித் திரும்பினான். ஒரு பெரிய மலைப்பாம்பின் அளவில் இருந்த மரக்கிளை ஒன்று முன்கண்ணாடியை அடித்து நொறுக்கியதை அவன் கண்டான். அவர்கள் மோதியிருந்த மரம் அவர்களைத் தாக்கத் துவங்கியிருந்தது. அந்த மரம் பயங்கரமாக வளைந்திருந்தது. கணுக்களுடன் இருந்த அதன் கிளைகள், தம்மால் தொட முடிந்த காரின் ஒவ்வோர் அங்குலத்தையும் போட்டு அடித்துத் துவம்சம் செய்து கொண்டிருந்தன.

இன்னொரு கிளை ரான் இருந்த பக்கத்தின் கதவில் அடித்து அதில் ஒரு பெரிய பள்ளத்தை ஏற்படுத்தியபோது, “ஐயோ!” என்று அவன் அலறினான். முன்கண்ணாடியைச் சிறிய கொப்புகள் விடாமல் அடித்துக் கொண்டிருந்ததில் அது லேசாக ஆடத் துவங்கியிருந்தது. கோட்டைக் கதவுகளை உடைக்க உபயோகிக்கப்படும் பெரிய உருளைக்கட்டை அளவில் இருந்த ஒரு கிளை, கோபத்துடன் காரின் கூரையை இடைவிடாமல் தாக்கியதில், கூரை உள்நோக்கிக் கவிழத் துவங்கியிருந்ததுபோலத் தோன்றியது –

“ஹாரி, வேகமாக ஓடிவிடு!” என்று கூறிவிட்டு, ரான் தன் முழு பலத்தையும் உபயோகித்துக் காரின் கதவைத் திறக்க முயன்றான். ஆனால் அடுத்தக் கணம், மரத்தின் இன்னொரு கிளை அடித்தக் காட்டடியில் பின்னால் துள்ளி அவன் ஹாரியின் மடியில் வந்து விழுந்தான்.

காரின் கூரை உள்நோக்கி அமுங்கத் துவங்கியதும், ரான், “நம் கதை முடிந்துவிட்டது!” என்று புலம்பினான். திடீரென்று காரின் தரையில் அதிர்வு ஏற்பட்டது – காரின் எஞ்சின் மீண்டும் இயங்கத் துவங்கியிருந்தது.

“பின்னால் போ!” என்று ஹாரி கூச்சல் போட்டான். உடனே அந்தக் கார் பின்னோக்கி அம்பெனப் பாய்ந்தது. அந்த மரம் அவர்களைத் தாக்க இன்னும் முயன்று கொண்டிருந்தது. அவர்கள் அதன் கைக்கு எட்டாமல் நகர்ந்தபோதும் அது அவர்களைத் தாக்கத் துணிந்ததில் அதன் வேர்கள் கிட்டத்தட்டப் பிய்த்துக் கொண்டு வந்துவிட்டச் சத்தம் அவர்களுக்குக் கேட்டது.

“நாம் சாவின் விளிம்புவரை சென்று வந்துவிட்டோம்,” என்று ரான் மேல்மூச்சுக் கீழ்மூச்சு வாங்கக் கூறினான். “நன்றி காரே! சரியான சமயத்தில் காப்பாற்றினாய்!”

ஆனால் அந்தக் காருக்கு ‘இதோடு போதுமடா சாமி’ என்று தோன்றிவிட்டது போலும். ஒரு சிறிய சத்தத்துடன் அது தன் கதவுகளை விரியத் திறந்தது. தன் இருக்கையானது பக்கவாட்டில் கிழிந்ததுபோல ஹாரிக்குத் தோன்றியது. அடுத்தக் கணம், அவன் தன் கை கால்களை அகலப் பரப்பிக் கொண்டு ஈரமான தரையில் கிடந்தான். அடுத்துக் கேட்ட ஒரு பெரிய சத்தம் அக்கார் தனது டிக்கியைத் திறந்து தங்களது சாமான்களை வெளியே தூக்கி வீசும் ஓசைதான் என்பதை அவன் ஊகித்துக் கொண்டான். ஹெட்விக்கின் கூண்டு வானத்தில் பறந்தது. நடுவானில் அதன் கூண்டுக் கதவு திறந்து கொண்டதும், அது அதனுள்ளிருந்து வெளியே பறந்து கோபத்தில் சத்தமாக அலறியது. பிறகு அது திரும்பிக்கூடப் பார்க்காமல் நேராகக் கோட்டையை நோக்கிப் பறந்தது. உடல் நெடுகிலும் கீறல்களுடன் நெளிந்து போய் விழுந்து கிடந்த அந்தக் கார், நீராவிப் புகையை வெளிவிட்டுக் கொண்டே இருட்டில் முன்னோக்கி உருண்டோடியது. அதன் பின்புற விளக்குகள் கோபமாக முறைத்துக் கொண்டிருந்தன.

உடைந்து போயிருந்த தன் மந்திரக்கோலை ஆட்டியவாறே அந்தக் காரைப் பார்த்து, ரான், “திரும்பி வந்துவிடு,” என்று கூப்பாடு போட்டான். “என் அப்பா என்னைக் கொன்று போட்டுவிடுவார்!”

ஆனால் அந்தக் கார் கடைசியாக ஒரு முறை புகையைக் கக்கிவிட்டுப் பார்வையில் இருந்து மறைந்து போனது.

கீழே குனிந்து தன் செல்ல எலியான ஸ்கேபர்ஸைக் கையில் எடுத்துக் கொண்டே, ரான், “நம் அதிர்ஷ்டம் இவ்வளவுதானா?” என்று பரிதாபமாகக் கேட்டான். “இருக்கும் எல்லா மரங்களையும் விட்டுவிட்டு, திருப்பித் தாக்கும் மரத்தின்மீதுதானா நாம் மோத வேண்டும்?”

அவன் தன் தோளைத் திருப்பி அந்த மரத்தைப் பார்த்தான். அது இன்னும் அச்சுறுத்தும் விதமாகத் தன் கிளைகளை ஆக்ரோஷமாக ஆட்டிக் கொண்டிருந்தது.

ஓய்ந்து போயிருந்த ஹாரி, “வா, நாம் பள்ளிக்குப் போய்ச் சேரலாம்,” என்று கூறினான்.

அவர்கள் கற்பனை செய்து வைத்திருந்த வெற்றிகரமான வருகையாக அது இருக்கவில்லை. காயப்பட்டும் குளிரால் வாடிக் கொண்டும் இருந்த அவர்கள் இருவரும் தங்கள் டிரங்குப் பெட்டிகளை அந்தப் புல்தரையில் மேல் நோக்கி இழுத்துக் கொண்டு கோட்டையின் பெரிய கருவாலி மரக் கதவை நோக்கி நகர்ந்தனர்.

“விருந்து ஏற்கனவே துவங்கிவிட்டது என்று நான் நினைக்கிறேன்,” என்று கூறியவாறே, ரான், கோட்டையின் படிக்கட்டில் தனது டிரங்குப் பெட்டியைப் போட்டுவிட்டு, சத்தமில்லாமல் நடந்து சென்று, பிரகாசமாக ஒளிவீசிக் கொண்டிருந்த ஒரு சன்னலின் வழியாக எட்டிப் பார்த்தான். “ஹாரி, இங்கே வந்து பாரேன் – வகை பிரிக்கும் விழா நடந்து கொண்டிருக்கிறது.”

ஹாரி வேகமாக ஓடி வந்தான். அவர்கள் இருவரும் பேரரங்கினுள் எட்டிப் பார்த்தனர்.

அங்கிருந்த நான்கு நீண்ட உணவு மேசைகளுக்கு மேலே அந்தரத்தில் மிதந்து கொண்டிருந்த எண்ணற்ற மெழுகுவர்த்திகள், அந்த மேசையில் இருந்த தங்கத் தட்டுகளையும் கோப்பைகளையும் தகதகக்கச் செய்தன. அங்கிருந்த கூரை எப்போதும் வெளியே இருக்கும் வானத்தைப் பிரதிபலிக்கும் விதத்தில் மாயாஜாலமாக அமைக்கப்பட்டிருந்ததால், அது நட்சத்திரங்களால் ஜொலித்துக் கொண்டிருந்தது.

கருமை நிற ஹாக்வார்ட்ஸ் கூம்புத் தொப்பிகளின் ஊடாக, அப்பேரரங்கில் கிலியுடன் நின்று கொண்டிருந்த முதல் வருட மாணவர்களின் நீண்ட வரிசையை ஹாரி பார்த்தான். ஜின்னியும் அங்கு நின்று கொண்டிருந்தாள். வீஸ்லீ குடும்பத்தின் பரம்பரைச் சொத்தான சிவப்பு நிறத் தலைமுடியின் காரணமாக அவனால் அவளை எளிதாக அடையாளம் காண முடிந்தது. இதற்கிடையே, தன் கூந்தலைக் கொண்டையாக அள்ளி முடிந்திருந்த, மூக்குக்கண்ணாடி அணிந்திருந்த மந்திரவாதினியான பேராசிரியர் மினர்வா மெக்கானகல், அப்புதிய மாணவர்களின் முன்பு வைக்கப்பட்டிருந்த ஒரு முக்காலியில், ஹாக்வார்ட்ஸின் பிரபலமான வகை பிரிக்கும் தொப்பியை எடுத்து வைத்துக் கொண்டிருந்தார்.

மிகப் பழைய, அழுக்கான, நைந்து போய் ஆங்காங்கே ஒட்டுப் போடப்பட்டிருந்த அந்தத் தொப்பி, ஒவ்வொரு வருடமும் புதிய மாணவர்களை, கிரிஃபின்டார், ஹஃபில்பஃப், ரேவன்கிளா, ஸ்லிதரின் ஆகிய நான்கு ஹாக்வார்ட்ஸ் அணிகளுக்குள் வகை பிரித்தது. சரியாக ஒரு வருடத்திற்கு முன்பு அதைத் தன் தலையில் போட்டுக் கொண்டு, அது தன் முடிவைத் தனது காதுகளில் அறிவிப்பதற்காக உறைந்து அந்தத் தொப்பி, ஏராளமான தீய மந்திரவாதிகளையும் போய்த் தான் காத்துக் கொண்டிருந்ததை ஹாரி நினைவுகூர்ந்தான். தன்னைப் போட்டுவிடுமோ என்று அவன் ஒருசில கணங்கள் பயந்து மந்திரவாதினிகளையும் உருவாக்கியிருந்த ஸ்லிதரின் அணியில் போயிருந்தான். ஆனால், ரான், ஹெர்மயனி, மற்றும் பிற வீஸ்லீ போடப்பட்டான். கடந்த முறை, அணிகளுக்கு இடையேயான சகோதரர்களுடன் சேர்த்து கிரிஃப்ன்டார் அணியில் அவன் ரானும் உதவியிருந்தனர். அப்படிச் செய்ததன் மூலம் அவர்களுடைய பள்ளிக் கோப்பையை கிரிஃபின்டார் அணி வென்றெடுக்க ஹாரியும் அணி ஏழு வருடங்களில் முதன்முறையாக ஸ்லிதரின் அணியினரிடம் இருந்து வெற்றிக் கோப்பையைப் பறித்திருந்தது.

சிறிய உருவத்துடனும் மங்கலான பழுப்பு நிறத் தலைமுடியுடனும் இருந்த ஒரு சிறுவன், வகை பிரிக்கும் தொப்பியைத் தன் தலையில் வைத்துக் கொள்ள அழைக்கப்பட்டான். ஹாரியின் கண்கள் அச்சிறுவனுக்குப் பின்னால் ஆசிரியர்களின் மேசையில் அமர்ந்திருந்த, ஹாக்வார்ட்ஸ் பள்ளித் தலைமையாசிரியரான பேராசிரியர் ஆல்பஸ் டம்பிள்டோரின்மீது நிலைத்தன. வகை பிரிக்கும் விழாவை அவர் பார்வையிட்டுக் கொண்டிருந்தார். அவரது நீண்ட வெண்தாடியும் அரைவட்ட வடிவிலான மூக்குக்கண்ணாடியும் மெழுகுவர்த்திகளின் வெளிச்சத்தில் மின்னிக் கொண்டிருந்தன. அவருக்குக் கொஞ்சம் தள்ளி, நீல நிற அங்கியில் கில்டராய் லாக்ஹார்ட் உட்கார்ந்திருந்ததை ஹாரி பார்த்தான். கடைசியில், பெரிய உருவத்துடனும் அடர்ந்த முடியுடனும் ஹாக்ரிட் உட்கார்ந்திருந்தார். அவர் தனது கோப்பையிலிருந்து தாராளமாகக் குடித்துக் கொண்டிருந்தார்.

“ரான், ஆசிரியர்கள் வரிசையில் ஓர் இருக்கை மட்டும் காலியாக இருக்கிறதே!” என்று ஹாரி ரானிடம் கேட்டான். “ஆமாம், ஸ்னேப்பை எங்கே காணோம்?”

பேராசிரியர் செவரஸ் ஸ்னேப்பை ஹாரிக்குப் பிடிக்காது. அதேபோல அவருக்கும் ஹாரியைப் பிடிக்காது. அவரது அணியான ஸ்லிதரின் அணியைச் சேர்ந்த மாணவர்களைத் தவிர வேறு யாருக்கும் பிடிக்காத, குரூரமான, சுடுசொற்களை அள்ளி வீசிய ஒரு நபர் அவர். மாயத் திரவ வகுப்புகளை அவர்தான் நடத்தி வந்தார்.

“ஒருவேளை அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்திருக்கலாம்,” என்று ரான் நம்பிக்கையோடு கூறினான்.

“தான் பெரிதும் விரும்பி வந்திருந்த, ‘தீய மந்திர சக்திகளுக்கு எதிரான பாதுகாப்பு’ வகுப்பை எடுப்பதற்குத் தனக்குக் கிடைத்த வாய்ப்பு இரண்டாவது முறையாகப் பறி போனதால், ஒருவேளை அவர் வேலையைவிட்டே போயிருக்கலாம்,” என்று ஹாரி கூறினான்.

“அல்லது அவரை வீட்டுக்கு அனுப்பியிருப்பார்கள்,” என்று ரான் ஆர்வமாகக் கூறினான். “நான் என்ன கூற வருகிறேன் என்றால், எல்லோருமே அவரை வெறுக்கின்றனர்”

“அல்லது நீங்கள் இரண்டு பேரும் ஏன் பள்ளி ரயிலில் வந்து சேரவில்லை என்று உங்களைக் கேட்பதற்காக அவர் காத்துக் கொண்டிருக்கலாம்,” என்று ஒரு கடுமையான குரல் அவர்களின் முதுகிற்குப் பின்னாலிருந்து கேட்டது.

ஹாரி வேகமாகத் திரும்பினான். தனது கருப்பு அங்கி அங்கு வீசிய குளிர்க்காற்றில் படபடத்துக் கொண்டிருக்க, பேராசிரியர் ஸ்னேப் அங்கு நின்று கொண்டிருந்தார். அவர் மெல்லிய உடல்வாகுடனும் நோய்த்தன்மையைக் குறிக்கும் வெளிறிய மஞ்சள் நிறத் தோலுடனும் காணப்பட்டார். அவரது மூக்கானது கொக்கிபோல வளைந்திருந்தது. தோள்வரை வளர்ந்திருந்த அவரது தலைமுடி எண்ணெயில் குளித்திருந்தது. அப்போது அவர் அவர்களைப் பார்த்து ‘வசமாக மாட்டிக் கொண்டீர்களா’ என்று கேட்பதைப்போலப் புன்முறுவல் பூத்துக் கொண்டிருந்தார்.

“என்னைப் பின்தொடர்ந்து வாருங்கள்,” என்று ஸ்னேப் கூறினார்.

ஒருவரையொருவர் பார்த்துக் கொள்ளக்கூட பயந்து போய் ஹாரியும் ரானும் அவரைத் தொடர்ந்து படியேறி, தீப்பந்தங்களால் ஒளியூட்டப்பட்டிருந்த அந்தப் பெரிய வரவேற்பறைக்குள் நுழைந்தனர். அடுத்துப் பரிமாறப்படவிருந்த விருந்தின் மணம் பேரரங்கிலிருந்து வந்து மூக்கைத் துளைத்தது. ஆனால் பேராசிரியர் ஸ்னேப் அவர்கள் இருவரையும் அங்கு அழைத்துச் செல்லாமல் ஒரு குறுகிய கற்படிக்கட்டின் வழியாகக் கீழே நிலவறைகள் இருந்த இடத்திற்கு அழைத்துச் சென்றார்.

ஸ்னேப், கடும் குளிராக இருந்த தாழ்வாரத்தின் மத்தியில் இருந்த ஓர் அறையைத் திறந்து அதைச் சுட்டிக்காட்டி, “உள்ளே செல்லுங்கள்”, என்று கூறினார்.

அவர்கள் குளிரில் நடுங்கிக் கொண்டே ஸ்னேப்பின் அறைக்குள் நுழைந்தனர். வெளிச்சமற்று இருந்த அறைச் சுவர்களின் ஓரமாகப் பல பெரிய கண்ணாடி ஜாடிகள் வைக்கப்பட்டிருந்தன. பார்த்தாலே குமட்ட வைக்கும் பல பொருட்கள் அவற்றில் மிதந்து கொண்டிருந்தன. ஹாரி அச்சமயத்தில் அவற்றில் என்ன இருந்தது என்பதைத் தெரிந்து கொள்ளக் கண்டிப்பாக விரும்பவில்லை. கணப்பு அடுப்புக் காலியாகவும் இருட்டாகவும் இருந்தது. ஸ்னேப் அந்த அறைக் கதவை மூடிவிட்டுத் திரும்பி அவர்களைப் பார்த்தார்.

அவர் மெதுவாக, “ஆக, கதாநாயகன் ஹாரி பாட்டருக்கும் அவனது அடிவருடித் தோழன் வீஸ்லீக்கும் ரயில் வசதிப்படவில்லை. அதனால் ஹாக்வார்ட்ஸையே கலக்கும் விதத்தில் வந்திறங்க முயன்றீர்கள், அப்படித்தானே?” என்று கேட்டார்.

“இல்லை சார், கிங்ஸ் கிராஸ் நிலையத்தில் இருந்த தடுப்புச் சுவரை எங்களால் கடந்து வர முடியவில்லை

“வாயை மூடுங்கள்!” என்று அவர் இரைந்தார். “ஆமாம், அந்தக் காரை என்ன செய்தீர்கள்?”

ரான் மென்று விழுங்கினான். ஸ்னேப்பால் அடுத்தவர்களுடைய மனத்தில் இருந்ததைப் படிக்க முடியும் என்று ஹாரிக்குத் தோன்றியது அது முதன்முறையல்ல. ஆனால் அவர் அன்றைய தினத்தின் ‘த ஈவினிங் புராஃபெட்’ பத்திரிகையை விரித்ததும் அவனுக்கு விஷயம் விளங்கியது.

அவர் அப்பத்திரிகையின் முதற்பக்கச் செய்தியைச் சுட்டிக்காட்டியபடி, “உங்களைப் பிறர் பார்த்துவிட்டிருக்கின்றனர்!” என்று சீறினார். பறக்கும் ஃபோர்டு ஏஞ்சலியா கார் மகுள்களை மருள வைத்திருந்தது. அவர் அதை வாய்விட்டுப் படிக்கத் துவங்கினார். “லண்டனில் இருக்கும் இரண்டு மகுள்கள் தபால் அலுவலகக் கோபுரத்திற்கு மேலே ஒரு பழைய கார் பறந்ததைத் தாங்கள் பார்த்ததாகச் சத்தியம் செய்துள்ளனர் . . . நார்ஃபோக்கில் இன்று மதியம் திருமதி பேலிஸ் தனது துணிகளை வெளியே உலர்த்திக் கொண்டிருந்தபோது அந்தக் காரைப் பார்த்திருக்கிறார். பீபில்ஸைச் சேர்ந்த திரு ஆங்கஸ் ஃபிளீட் இது குறித்துக் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார் . . . மொத்தத்தில் ஆறேழு பேர் அந்தப் பறக்கும் காரைப் பார்த்திருக்கின்றனர்.” அவர் ரானைப் பார்த்து இன்னும் வஞ்சகமாகப் புன்னகைத்தபடி, “உன் அப்பா ‘மகுள் கலைப்பொருட்கள் துஷ்பிரயோக அலுவலகத்’தில் வேலை பார்க்கிறார் என்று நான் நினைக்கிறேன். அவருடைய கடைக்குட்டிப் பையன், அட்டா . . .” என்றார்.

முன்பு தங்களைத் தாக்கிய அந்தப் பைத்தியக்கார மரத்தின் பெரிய கிளை ஒன்று தனது வயிற்றில் மீண்டும் பலமாகத் தாக்கியதுபோல ஹாரி உணர்ந்தான். ஆர்தர் தன் காரை மந்திர சக்தியைப் பயன்படுத்தி மாற்றியிருந்தார் என்பது யாருக்காவது தெரிய வந்தால் .. அவனுக்கு ஏன் இது முன்பே தோன்றியிருக்கவில்லை?

“வெளியே தோட்டத்தை அலசியதில், அங்கிருக்கும் மிக மதிப்பு வாய்ந்த ‘நையப் புடைக்கும் விந்தை வில்லோ மரத்’திற்குக் கடுமையான சேதம் விளைவிக்கப்பட்டுள்ளதை நான் காண நேர்ந்தது,” என்று ஸ்னேப் கூறினார்.

“அந்த மரத்திற்கு நாங்கள் விளைவித்தச் சேதத்தைவிட அது எங்களுக்கு விளைவித்தச் சேதம் மிக அதிகம்,” என்று ரான் தட்டுத் தடுமாறிக் கூறினான்.

“வாயை மூடுங்கள்!” என்று ஸ்னேப் மீண்டும் இரைந்தார். “துரதிர்ஷ்டவசமாக, நீங்கள் என்னுடைய அணியில் இல்லை. அதனால் உங்களைப் பள்ளியில் இருந்தே வெளியேற்ற வேண்டும் என்ற தீர்மானத்தை என்னால் எடுக்க முடியாது. அந்த அதிகாரம் இருக்கும் நபர்களை நான் இங்கு கூட்டிக் கொண்டு வரப் போகிறேன். அதுவரை இங்கேயே இருங்கள்.”

ஹாரியும் ரானும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். அவர்களது முகங்கள் வெளிறிப் போயிருந்தன. ஹாரிக்குப் பசி சுத்தமாகப் பறந்து போய்விட்டிருந்தது. திடீரென்று தனது உடல்நிலை மிக மோசமாக ஆகியிருந்ததைப்போல அவனுக்குத் தோன்றியது. ஸ்னேப்பின் மேசைக்குப் பின்னால் இருந்த அலமாரியில் ஒரு பச்சைத் திரவத்தில் பெரிதாகக் கொழகொழவென்று ஏதோ ஒன்று மிதந்து கொண்டிருந்ததைப் பார்க்காமல் இருக்க அவன் மிகவும் பிரயத்தனம் செய்ய வேண்டியிருந்தது. ஸ்னேப் அவர்களுடய கிரிஃபின்டார் அணித் தலைவரான பேராசிரியர் மெக்கானகல்லைக் கூட்டிவரப் போயிருந்தார் என்றால், நிலைமை ஒன்றும் மேம்படப் போவதில்லை என்பது உறுதி. அவர் ஸ்னேப்பைவிட நியாயமாக நடந்து கொள்வார் என்றாலும் அவரும் கண்டிப்பானவரே.

பத்து நிமிடங்கள் கழித்து ஸ்னேப் திரும்பி வந்தார். ஹாரி எதிர்பார்த்திருந்தபடி அவர் கூட்டி வந்திருந்தது பேராசிரியர் மெக்கான கல்லைத்தான். பேராசிரியர் மெக்கானகல் பல தருணங்களில் கோபப்பட்டு அவன் பார்த்திருந்தான். ஆனால், ஒன்று, அவரது உதடுகளால் எவ்வளவு தூரம் இறுகிப் போக முடியும் என்பது அவனுக்கு மறந்து போயிருக்க வேண்டும் அல்லது அவர் இவ்வளவு தூரம் கோபப்பட்டு அவன் இதுவரை பார்த்திராமல் இருந்திருக்க வேண்டும். உள்ளே நுழைந்த அடுத்தக் கணமே பேராசிரியர் மெக்கானகல் தன் மந்திரக்கோலை உயர்த்தினார். ஆனால் அங்கு காலியாக இருந்த கணப்பு அடுப்பை நோக்கி அவர் அதை நீட்டினார். அதில் உடனடியாக நெருப்புப் பற்றிக் கொண்டது.

“உட்காருங்கள்,” என்று அவர் கூறினார். அவர்கள் இருவரும் நெருப்பருகே இருந்த நாற்காலிகளில் சாய்ந்தனர்.

“என்ன நடந்தது என்று விவரியுங்கள்,” என்று அவர் கூறினார். அவரது மூக்குக்கண்ணாடி அச்சுறுத்தும் விதத்தில் மின்னிக் கொண்டிருந்தது.

ரயில் நிலையத்தில் தங்களை உள்ளேவிட மறுத்தத் தடுப்புச் சுவரில் இருந்து ரான் கதையைத் துவக்கினான்.

“…பேராசிரியரே, ரயிலில் ஏற முடியாமல் போனதால் எங்களுக்கு வேறு வழியே இருக்கவில்லை.”

“நீ ஏன் எங்களுக்கு ஆந்தை மூலம் கடிதம் அனுப்பவில்லை? உன்னிடம் ஓர் ஆந்தை உள்ளது என்று நான் நம்புகிறேன்,” என்று பேராசிரியர் மெக்கானகல் ஹாரியிடம் கடுமையாகக் கேட்டார்.

ஹாரி வாயைப் பிளந்து கொண்டு அவரைப் பார்த்தான். அவர் கூறிய பிறகுதான் தாங்கள் அதைத்தான் முதலில் செய்திருக்க வேண்டும் என்பது அவனுக்கு உறைத்தது.

“நான் . . . எனக்குத் தோன்றவில்லை-“

“அதுதான் வெளிப்படையாகத் தெரிகிறதே,” என்று பேராசிரியர் மெக்கானகல் கூறினார்.

அந்த அறைக் கதவை யாரோ தட்டிய சத்தம் கேட்டது. முன் எப்போதையும்விட அதிக சந்தோஷமாகத் தோன்றிய ஸ்னேப் அக்கதவைத் திறந்தார். அங்கு பேராசிரியர் டம்பிள்டோர் நின்று கொண்டிருந்தார்.

ஹாரியின் மொத்த உடலும் மறத்துப் போனது. டம்பிள்டோர் வழக்கத்திற்கு மாறாகத் தீவிரமாகக் காணப்பட்டார். சற்றுக் கோணலான தனது மூக்கின் நுனி வழியாக அவர் அவர்களைப் பார்த்தார். நையப் புடைக்கும் விந்தை மரம் தங்களை இன்னும் அடித்துக் கொண்டிருந்தால் இதைவிட நன்றாக இருந்திருக்கும் என்று ஹாரி நினைத்தான்.

அங்கு நீண்ட நேரம் மௌளம் நிலவியது. பிறகு டம்பிளடோர், “என்ன நடந்தது என்று தயவு செய்து விவரியுங்கள்,” என்று கூறினார். அவர் கத்தியிருந்தால் இதைவிட நன்றாக இருந்திருக்கும். அவரது குரலில் தொனித்த ஏமாற்றத்தை ஹாரியால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. ஏதோ ஒரு காரணத்தால் அவனால் டம்பிள்டோரின் கண்களை நேருக்கு நேராகப் பார்த்துப் பேச முடியவில்லை. அதனால் அவரது கால் மூட்டுக்களைப் பார்த்து அவன் பேசினான். வசியப்படுத்தப்பட்டிருந்த ஒரு கார் ஆர்தரிடம் இருந்தது என்பதைத் தவிர மற்ற எல்லாவற்றையும் அவன் டம்பிள்டோரிடம் கூறினான். ரயில் நிலையத்தைவிட்டு அவர்கள் வெளியே வந்ததும் அங்கு நின்று கொண்டிருந்த ஒரு பறக்கும் காரைத் தற்செயலாக அவர்கள் கண்டுபிடித்திருந்ததுபோல இருந்தது அவனது பேச்சு. டம்பிள்டோர் தங்களது கதையில் இருந்த அந்த ஓட்டையை உடனடியாகக் கண்டுபிடித்துவிடுவார் என்பதை அவன் அறிந்திருந்தான். ஆனால் டம்பிள்டோர் அந்தக் காரைப் பற்றி எதுவும் கேட்கவில்லை. ஹாரி பேசி முடித்ததும் அவர் வெறுமனே தன் மூக்குக்கண்ணாடி வழியாக அவனை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார்.

“நாங்கள் போய் எங்களுடைய அறையிலிருந்து சாமான்களை எடுத்துக் கொள்கிறோம்,” என்று ரான் நம்பிக்கையற்றக் குரலில் கூறினான்.

“என்ன உளறுகிறாய்?” என்று பேராசிரியர் மெக்கானகல் இரைந்தார்.

“நீங்கள் எங்களைப் பள்ளிக்கூடத்தில் இருந்து வெளியேற்றப் போகிறீர்கள் இல்லையா?” என்று ரான் கேட்டான்.

“இன்று இல்லை, ரான்,” என்று டம்பிள்டோர் கூறினார். “ஆனால் நீங்கள் செய்த காரியம் எவ்வளவு தீவிரமானது என்பதை நீங்கள் உணர வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இன்றிரவு நான் உங்களுடைய குடும்பத்தினருக்குக் கடிதம் எழுதப் போகிறேன். நீங்கள் இதுபோல வேறு எதையாவது இனியொரு முறை செய்தால் உங்களைப் பள்ளியைவிட்டு வெளியேற்றுவதைத் தவிர எனக்கு வேறு வழியிருக்காது என்று உங்களை நான் எச்சரிக்கிறேன்.”

ஸ்னேப், கிறிஸ்துமஸ் தினமே ரத்து செய்யப்பட்டுவிட்டதுபோலக் காணப்பட்டார். அவர் தன் தொண்டையைச் செருமிக் கொண்டு, “பேராசிரியர் டம்பிள்டோர் அவர்களே, வயதிற்கு வராத மந்திரவாதிகளுக்கான கட்டுப்பாட்டு விதிகளை இவர்கள் இருவரும் மீறிவிட்டிருக்கின்றனர். ஒரு வயதான, மதிப்புமிக்க ஒரு மரத்திற்குச் சேதம் விளைவித்திருக்கின்றனர் . . . இம்மாதிரிச் செயல்களுக்கு . .” என்றார்.

“ஸ்னேப், இவர்களுக்கு என்ன தண்டனை கொடுக்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்க வேண்டிய பொறுப்பு பேராசிரியர் மெக்கானகல்லுடையது,” என்று டம்பிளடோர் அமைதியாகக் கூறினார். “அவர்கள் அவருடைய அணியில் இருக்கின்றனர் என்பதால் அது அவருடைய பொறுப்பு.” அவர் பேராசிரியர் மெக்கானகல்லை நோக்கித் திரும்பினார். “பேராசிரியர் மெக்கானகல் அவர்களே, நான் மீண்டும் விருந்து நடக்கும் இடத்திற்குச் சென்றாக வேண்டும். நான் ஒருசில அறிவிப்புகளை வெளியிட வேண்டியுள்ளது. ஸ்னேப், வாருங்கள் போகலாம். மிகவும் ருசிகரமாகத் தோன்றுகின்ற நெய்யப்பம் அங்கு இருக்கிறது. அதை நான் ருசித்துப் பார்க்க விரும்புகிறேன்.”

ஸ்னேப் அவர்களைத் தனியாகப் பேராசிரியர் மெக்கானகல்லுடன் விட்டுவிட்டுத் தன் அலுவலகத்தைவிட்டு வெளியே செல்லும் முன்பாக, அவர்களை நோக்கி வீசிய பார்வையில் விஷம் கொப்பளித்துக் கொண்டிருந்தது. பேராசிரியர் மெக்கானகல் அவர்களை இன்னும் சீற்றம் கொண்டிருந்த கழுகுபோலப் பார்த்துக் கொண்டிருந்தார்.

“ரான், நீ விரைவாக மருத்துவமனைக்குச் செல், ரத்தம் ஒழுகிக் கொண்டிருக்கிறது.”

ரான் அவசர அவசரமாகத் தன் சட்டைக் கையை வைத்துத் தன் கண்ணில் இருந்த வெட்டுக் காயத்தைத் துடைத்துவிட்டுக் கொண்டே, “பெரிதாக ஒன்றும் அடிபடவில்லை,” என்று கூறினான். “பேராசிரியரே, அணி பிரிக்கும்போது என் தங்கையை-“

“வகை பிரிக்கும் விழா நிறைவடைந்துவிட்டது,” என்று பேராசிரியர் மெக்கானகல் கூறினார். “உன் தங்கையும் கிரிஃபின்டார் அணியில்தான் இருக்கிறாள்.”

“சந்தோஷம்,” என்று ரான் கூறினான்.

“கிரிஃபின்டார் அணியைப் பற்றி நீங்கள் பேச்செடுத்ததால் -” என்று பேராசிரியர் மெக்கானகல் துவக்கியபோது, ஹாரி அவரை இடைமறித்து, “பேராசிரியரே, நாங்கள் காரை எடுத்தபோது இவ்வருடப் படிப்பு இன்னும் துவங்கியிருக்கவில்லை என்பதால், கிரிஃபின்டார் அணியிலிருந்து புள்ளிகள் எதையும் நீங்கள் கழித்துவிட மாட்டீர்கள், இல்லையா?” என்று அவரைக் கவலையுடன் பார்த்துக் கொண்டே கேட்டான்.

பேராசிரியர் மெக்கானகல் அவனை எரித்துவிடுவதுபோலப் பார்த்தார். ஆனால் அவர் கிட்டத்தட்டப் புன்னகை புரிந்திருந்தார் என்று ஹாரி உறுதியாக நம்பினான். அவரது வாயின் இறுக்கம் கண்டிப்பாகக் குறைந்துதான் இருந்தது.

“நான் கிரிஃபின்டார் அணியிலிருந்து புள்ளிகள் எதையும் பிடுங்கிக் கொள்ளப் போவதில்லை,” என்று அவர் கூறினார். ஹாரியின் மனம் லேசானது. “ஆனால் உங்கள் இருவர்மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.”

ஆனால் அது ஹாரி எதிர்பார்த்திருந்த தண்டனையைவிடக் குறைவாகவே இருந்தது. டம்பிள்டோர் டர்ஸ்லீ தம்பதியருக்கு எழுதுவதைப் பற்றி அவன் துளிகூடக் கவைலப்படவில்லை. நையப் புடைக்கும் விந்தை மரம் அவனை அப்படியே நசுக்கி இருக்காதது குறித்து அவர்கள் ஏமாற்றம் அடைந்திருப்பார்கள் என்பதை ஹாரி நன்றாகவே அறிவான்.

பேராசிரியர் மெக்கானகல் தன் மந்திரக்கோலை மீண்டும் தட்டு நிறைய சான்ட்விச்சுகள், இரண்டு வெள்ளிக் கோப்பைகள், உயர்த்தி ஸ்னேப்பின் மேசையை நோக்கிப் பிடித்தார். ஒரு பெரிய ஒரு கூஜா நிறையக் குளிர்ந்த பரங்கிச் சாறு ஆகியவை ‘டப்’ என்ற சிறு சத்தத்துடன் அந்த மேசையில் தோன்றின.

“நீங்கள் இங்கேயே சாப்பிட்டுவிட்டு, நேராக உங்களுடைய படுக்கையறைக்குச் சென்றுவிடுங்கள்,” என்று பேராசிரியர் மெக்கானகல் கூறினார். “நானும் மீண்டும் விருந்திற்குச் சென்றாக வேண்டும்.”

பேராசிரியர் மெக்கானகல் வெளியேறிய பின் கதவு சாத்தப்பட்டதும் ரான் ஒரு நீண்ட விசிலடித்தான்.

அவன் ஒரு சான்ட்விச்சை எடுத்துக் கொண்டே, “நம் கதை முடிந்துவிட்டது என்றுதான் நான் நினைத்திருந்தேன்,” என்று கூறினான்.

ஹாரியும் தன் பங்கிற்கு ஒன்றை எடுத்துக் கொண்டு, “நானும் அப்படித்தான் நினைத்தேன்,” என்றான்.

ரான் இறைச்சியையும் கோழியையும் தன் வாயில் அடைத்துக் கொண்டு, “ஆனால் நம்முடைய அதிர்ஷ்டத்தை உன்னால் நம்ப முடிகிறதா?” என்று கேட்டான். “ஃபிரெட்டும் ஜார்ஜும் அந்தக் காரை எடுத்துக் கொண்டு ஐந்தாறு முறை பறந்திருப்பார்கள். அப்போது எந்த மகுளும் அதைப் பார்க்கவில்லை.” அவன் தன் வாயில் இருந்ததை விழுங்கிவிட்டு, மீண்டும் ஒரு பெரிய துண்டைக் கடித்தான். “ஆமாம், நம்மால் ஏன் அந்தத் தடுப்புச் சுவரைக் கடந்து செல்ல முடியவில்லை?”

ஹாரி தன் தோள்களைக் குலுக்கினான். “நாம் இனி எடுத்து வைக்கும் ஒவ்வோர் அடியையும் மிகவும் ஜாக்கிரதையாக எடுத்து வைக்க வேண்டும்,” என்று கூறிக் கொண்டே ஒரு பெரிய மடக்குப் பரங்கிச் சாறைக் குடித்தான். “நாமும் விருந்தில் கலந்து கொண்டிருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்.”

“நாம் தம்பட்டம் அடித்துக் கொள்வதைப் பேராசிரியர் மெக்கானகல் விரும்பவில்லை,” என்று ரான் ஒரு ஞானியைப்போலப் பேசினான். “பறக்கும் காரில் வந்து இறங்குவது புத்திசாலித்தனமானது என்ற யோசனையை மற்றவர்களுக்குக் கொடுக்க அவர் விரும்பவில்லை.

தங்களால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு சான்ட்விச்சுகளை அவர்கள் சாப்பிட்டு முடித்ததும் (சான்ட்விச்சுகள் காலியாகக் காலியாக, அவை இருந்த தட்டுத் தானாகவே மீண்டும் மீண்டும் நிரம்பிக் கொண்டிருந்தது), அந்த அலுவலகத்தைவிட்டு வெளியேறி, தங்களுக்கு நன்கு பழக்கமாகிவிட்டிருந்த பாதை வழியாகத் தங்களுடைய கிரிஃபின்டார் கோபுரத்திற்கு அவர்கள் சாவகாசமாக நடந்து சென்றனர். கோட்டை நிசப்தமாக இருந்தது. விருந்து முடிந்துவிட்டிருந்ததுபோலத் தோன்றியது. முணுமுணுத்துக் கொண்டிருந்த ஓவியங்கள், கிரீச்சொலி எழுப்பிக் கொண்டிருந்த மெய்காப்புக் கவசங்களை அணிந்திருந்த சிலைகள் ஆகியவற்றைக் கடந்து சென்று, கற்களால் ஆன, குறுகலான மாடிப்படிகளின் வழியாக ஏறிச் சென்று, கிரிஃபின்டார் கோபுரத்தின் நுழைவு வழியை மறைத்துக் கொண்டிருந்த ஓர் ஓவியத்தை அவர்கள் அடைந்தனர்.

அவர்கள் அந்த ஓவியத்தை அணுகியதும், அதில் இளஞ்சிவப்பு நிறப் பட்டாடையில் ஜொலித்துக் கொண்டிருந்த ஒரு குண்டுப் பெண்மணி அவர்களிடம், “உள்ளே நுழைவதற்கான ரகசிய வார்த்தை?” என்று கேட்டாள்.

“என்ன? ரகசிய வார்த்தையா?” என்று ஹாரி கேட்டான்.

அவர்கள் இன்னும் கிரிஃபின்டார் மாணவ அணித் தலைவனைப் பார்த்திருக்காததால், இப்புதிய வருடத்திற்கான ரகசிய நுழைவு வார்த்தை அவர்களுக்குத் தெரிந்திருக்கவில்லை. ஆனால் உதவி அவர்களுக்கு உடனடியாக வந்தது. அவர்களுக்குப் பின்னால் யாரோ பார்த்தபோது, ஹெர்மயனி அவர்களை நோக்கி ஓடி வந்து அவசரமாக நடந்து வந்த சத்தம் கேட்டது. அவர்கள் திரும்பிப் கொண்டிருந்தாள்.

“நீங்கள் இங்கேதான் இருக்கிறீர்களா? ஆமாம், இவ்வளவு நேரம் நீங்கள் எங்கே போயிருந்தீர்கள்? இங்கு கேலிக்கிடமான ஒரு வதந்தி உலவிக் கொண்டிருக்கிறது – நீங்கள் இருவரும் ஒரு பறக்கும் காரை ஓட்டியதற்காகப் பள்ளியிலிருந்து தூக்கியெறியப்பட்டுவிட்டீர்கள் என்று யாரோ கூறினார்கள்.”

“இல்லை, நாங்கள் பள்ளியிலிருந்து வெளியேற்றப்படவில்லை.” என்று ஹாரி அவளுக்கு உறுதியளித்தான்.

“அப்படியானால் நீங்கள் இருவரும் இங்கே பறந்துதான் வந்தீர்கள் என்று கூற வருகிறீர்களா?” என்று அவள் கேட்டாள். அவளது குரலின் தொனி பேராசிரியர் மெக்கானகல்லின் குரலைப்போலவே கடுமையாக இருந்தது.

“அம்மா, தாயே, நீ உன் அறிவுரையைக் கொஞ்சம் நிறுத்திக் கொள்கிறாயா?” என்று ரான் பொறுமையிழந்து கூறினான். “புதிய ரகசிய நுழைவு வார்த்தை என்னவென்று கூறு.”

“கொண்டைப் பறவை,” என்று ஹெர்மயனி பொறுமையிழந்து கூறினாள். “ஆனால் நான் கேட்க வந்தது-“

ஆனால் அந்த ஓவியம் விலகிக் கொண்டதும் உள்ளே இருந்து கேட்ட பயங்கரக் கரகோஷ ஒலி, அவள் கேட்க வந்ததைப் பாதியிலேயே மூழ்கடித்துவிட்டிருந்தது. கிரிஃபின்டார் அணி மொத்தமும் தூங்காமல் அவர்களுக்காகக் காத்திருந்ததுபோலத் தோன்றியது. அந்த வட்ட வடிவப் பொது அறையில் இருந்த சரிவான மேசைகள், குழைவான நாற்காலிகள் ஆகியவற்றில் ஏறிக் கொண்டும், அறை முழுவதும் நெருக்கியடித்துக் கொண்டும் இவர்களின் வருகைக்காக அவர்கள் அனைவரும் காத்துக் கொண்டிருந்தனர். ஓவியத்திற்குப் பின்னால் இருந்த அந்தத் துவாரத்தின் வழியாக பல கைகள் வெளிப்பட்டு ஹாரியையும் ரானையும் உள்ளே இழுத்துக் கொண்டன. அவர்களுக்குப் பின்னால் ஹெர்மயனி தட்டுத் தடுமாறி உள்ளே சென்றாள்.

“பிரமாதம்!” என்று லீ ஜோர்டன் குதூகலித்தான். “எங்களுக்கு உத்வேகம் ஊட்டியுள்ளீர்கள்! ஆஹா! பறக்கும் காரில் பறந்து வந்தது என்னவோர் அபாரமான நுழைவு! நேராக நையப் புடைக்கும் மரத்தில் மோதியது! இதைப் பற்றி மக்கள் இன்னும் பல வருடங்களுக்குக் கண்டிப்பாகப் பேசிக் கொண்டிருக்கப் போகிறார்கள்!”

“சூப்பராகப் பண்ணினாய்!” என்று, ஹாரி இதுவரை பேசியிராத ஐந்தாவது வருட மாணவன் ஒருவன் அவனிடம் கூறினான். மற்றொருவன், ஹாரி ஏதோ ஒரு பெரிய நெடுந்தூர ஓட்டப் பந்தயத்தில் வென்றுவிட்டு வந்திருந்ததுபோல அவனது முதுகில் ஒரு செல்லத்தட்டுத் தட்டிவிட்டுச் சென்றான். ஃபிரெட்டும் ஜார்ஜும் கூட்டத்தில் முண்டியடித்துக் கொண்டு முன்னால் வந்து, ஒருசேர, “நீங்கள் எங்களையும் கூப்பிட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும்!” என்று கூறினர். ரானின் முகம் ரத்தச் சிவப்பாக ஆகியிருந்தது. அவன் சங்கடத்துடன் நெளிந்து கொண்டே வாயெல்லாம் பல்லாகச் சிரித்தான். ஆனால் அக்கூட்டத்தில் ஒரே ஒருவன் மட்டும் கொஞ்சம்கூட மகிழ்ச்சியாக இல்லாததை ஹாரி கவனித்தான். அது பெர்சி. பெரிதும் உற்சாகம் அடைந்திருந்த முதல் வருட மாணவர்கள் சிலருக்குப் பின்னால் அவனது தலை தெரிந்தது. அவர்களை அந்த இடத்தைக் காலி செய்யுமாறு கேட்டுக் கொள்ள அவன் முயற்சித்துக் கொண்டிருந்ததுபோலத் தோன்றியது. ஹாரி ரானின் விலாவில் இடித்து, பெர்சி இருந்த திசையை நோக்கித் தன் தலையை ஆட்டினான். ரான் சூட்டிகையுடன் நிலைமையைப் புரிந்து கொண்டான்.

அவன் உடனடியாகக் கூட்டத்தினரை நோக்கி, “மிகவும் களைப்பாக இருக்கிறது – படுக்கப் போக வேண்டும், வழி விடுங்கள்,” என்று கூறினான். அவர்கள் இருவரும் கூட்டத்தினரை விலக்கிக் கொண்டு, அறையின் மறுபக்கத்திலிருந்த, சுழல் படிக்கட்டிற்கும் தங்களது படுக்கையறைக்கும் இட்டுச் சென்ற கதவை நோக்கிச் செல்லத் துவங்கினர்.

ஹாரி ஹெர்மயனியைப் பார்த்து, “காலையில் பார்க்கலாம்,” என்று கூறினான். அவளும் பெர்சியைப்போலவே முகஞ்சுளித்துக் கொண்டிருந்தாள்.

முதுகில் இடைவிடாமல் விழுந்து கொண்டிருந்த அன்புத் தட்டல்களின் ஊடாக அறையின் மறுமுனையில் இருந்த கதவை அவர்கள் அடைந்து, அமைதியாக இருந்த படிக்கட்டுகளில் ஏறத் துவங்கினர். அவர்கள் வேகமாக அதன் உச்சியை அடைந்து தங்களுடைய பழைய பொதுப் படுக்கையறையை அடைந்தனர். அதன் கதவில் இப்போது ‘இரண்டாம் வருட மாணவர்கள்’ என்ற அறிவிப்புத் தொங்கியது. தங்களுக்கு நன்கு பரிச்சயமான, வட்ட வடிவில் அமைந்திருந்த அந்த அறைக்குள் அவர்கள் நுழைந்தனர். அந்த உயரமான அறையில், வழக்கம்போல, சிவப்பு வெல்வெட்டால் அலங்கரிக்கப்பட்டிருந்த ஐந்து பெரிய கட்டில்கள் போடப்பட்டிருந்தன. அவர்களுடயை டிரங்குப் பெட்டிகள் எடுத்து வரப்பட்டு அவர்களுடைய கட்டில்களின் ஒரு முனையில் வைக்கப்பட்டிருந்தன.

ரான் ஹாரியை நோக்கி வாயெல்லாம் பல்லாகச் சிரித்தான்.

“நம்முடைய அணியினர் நமக்கு அளித்தத் தடபுடலான வரவேற்புக் குறித்து நான் அவ்வளவு தூரம் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருக்கக்கூடாது என்பது புரிகிறது. ஆனால்-“

அவர்களுடைய பொதுப் படுக்கையறையின் கதவு வேகமாகத் திறந்தது. மற்றபிற இரண்டாம் வருட கிரிஃபின்டார் மாணவர்களான சீமஸ் ஃபின்னிகன், டீன் தாமஸ், நெவில் லாங்பாட்டம் ஆகியோர் உள்ளே நுழைந்தனர்.

“நம்பவே முடியவில்லை!” என்று கூறி சீமஸ் பெரிதாகப் புன்னகைத்தான்.

“அமர்க்களம் பண்ணிவிட்டீர்கள்!” என்று டீன் கூறினான். “அற்புதம்!” என்று நெவில் பிரமிப்புடன் கூறினான். ஹாரியால் தன்னைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அவனும் பெரிதாகப் புன்னகைத்தான்.

6. கில்டராய் லாக்ஹார்ட்

ஆனால் அதற்கடுத்த நாள் ஹாரியால் மருந்துக்குக்கூடப் புன்னகை புரிய முடியவில்லை. பேரரங்கில் நடைபெற்றக் காலைச் சிற்றுண்டியிலிருந்தே எல்லாம் கீழ்முகமாகச் செல்லத் துவங்கியது. அந்தப் பேரரங்கின் மாயாஜாலமாக அலங்கரிக்கப்பட்டிருந்த கூரையின்கீழ் (இன்று அது மங்கலான சாம்பல் நிறத்தில் இருந்தது) நான்கு அணிகளின் உணவு மேசைகளிலும் கணக்கு வழக்கற்றப் பாயசக் கும்பாக்கள், தட்டுத் தட்டுகளாகக் கடல்மீன்கள், மலையெனக் குவித்து வைக்கப்பட்டிருந்த ரொட்டிகள், இறைச்சி மற்றும் முட்டைக் கறிகள் ஆகியவை பரப்பப்பட்டிருந்தன. ஹாரியும் ரானும் கிரிஃபின்டார் அணியின் உணவு மேசையில் ஹெர்மயனிக்கு அருகில் சென்று அமர்ந்தனர். அவள் தன்னுடைய ‘ரத்தக் காட்டேரியுடன் ஒரு கடற்பயணம்’ புத்தகத்தை விரித்த நிலையில் பால் கூஜா ஒன்றின்மீது சாய்த்து வைத்திருந்தாள். காலை வணக்கம் கூறிய அவளது குரல் இன்னும் கொஞ்சம் முறுக்காகவே இருந்தது. முந்தைய நாள் தாங்கள் பள்ளிக்கு வந்து சேர்ந்திருந்த விதத்திற்கு அவள் இன்னும் மறுப்புத் தெரிவித்துக் கொண்டிருந்தாள் என்பதை அது ஹாரிக்கு உணர்த்துவதாக இருந்தது. அதே சமயம், நெவில் அவர்களைப் படுஉற்சாகத்துடன் வரவேற்றான். வட்ட வடிவ முகத்தைக் கொண்டிருந்த நெவில் அடிக்கடி விபத்திற்கு ஆளாகி வந்தான். ஹாரி இதுவரை சந்தித்திருந்த நபர்களில் இவன் அளவுக்கு வேறு எவருக்கும் ஞாபகமறதி இருந்ததில்லை.

“எந்த நிமிடமும் அஞ்சல் வந்துவிடும். வீட்டில் நான் மறந்து வைத்துவிட்டு வந்திருந்ததை என் பாட்டி இன்று எனக்கு அனுப்புவார் என்று நினைக்கிறேன்.”

ஹாரி அப்போதுதான் பாயசத்தை ருசி பார்க்கத் துவங்கியிருந்தான். அக்கணத்தில் அப்பேரரங்கில் நூற்றுக்கணக்கான ஆந்தைகள் ‘விர்’ என்று பறந்து வந்து தலைக்கு மேலே வட்டமிட்டு, கீழே அரட்டையடித்துக் கொண்டிருந்த மாணவர்களின்மீது கடிதங்களையும் பொட்டலங்களையும் போட்டன. ஒரு பெரிய கனமான பொட்டலம் நெவிலின் தலைமேல் பட்டுக் கீழே விழுந்தது. அதையடுத்து, சாம்பல் நிறத்தில் பெரிதாக இருந்த ஏதோ ஒன்று ஹெர்மயனியின் கூஜாவிற்குள் விழுந்து அவர்கள் அனைவரையும் பாலாலும் இறகுகளாலும் குளிப்பாட்டியது.

“எரோல்!” என்று ரான் கத்தினான். சகதியில் குளித்திருந்ததுபோலத் தோற்றமளித்த ஓர் ஆந்தையை அதன் கால்களைப் பிடித்து அவன் வெளியே இழுத்தான். அது அந்த மேசையில் நினைவிழந்து சரிந்தது. அதன் கால்கள் வானத்தைப் பார்த்துக் கொண்டிருந்ததன. அதன் அலகில் ஒரு கடிதம் இருந்தது.

“ஐயோ!” என்று ரான் அலறினான்.

ஹெர்மயனி அந்த ஆந்தையைத் தன் கைகளால் மெதுவாகத் தட்டிக் கொண்ட, “கவலைப்படாதே, அது இன்னும் உயிருடன்தான் இருக்கிறது,” என்று கூறினாள்.

“நான் அதைப் பற்றிக் கூறவில்லை – இதைப் பற்றித்தான் கூறுகிறேன்,” என்று ரான் கூறினான்.

ரான் தனக்கு வந்திருந்த சிவப்பு நிறக் கடிதத்தைச் சுட்டிக்காட்டிக் கொண்டிருந்தான். அது மிகச் சாதாரணமாக இருந்ததாக ஹாரிக்குப் பட்டது. ஆனால் அது எந்த நிமிடமும் வெடித்துவிடக்கூடும் என்று தாங்கள் எதிர்பார்த்ததுபோல ரானும் நெவிலும் அதைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

“ரான், உனக்கு என்னவாயிற்று?” என்று ஹாரி கேட்டான்.

“என் அம்மா… எனக்கு ‘அலறல் கடிதம்’ ஒன்றை அனுப்பியிருக்கிறார்,” என்று ரான் சுரத்தே இல்லாமல் கூறினான்.

நெவில் ரானிடம் தைரியமற்றக் கிசுகிசுப்பான குரலில், “நீ அதைத் திறந்து படித்துவிடுவது நல்லது,” என்று கூறினான். “என் பாட்டி எனக்கு ஒரு முறை ‘அலறல் கடிதம்’ ஒன்றை அனுப்பினார். நான் அதை அலட்சியம் செய்தேன். ஆனால்-” என்று கூறி விழுங்கிவிட்டு, ‘அது நிலைமையைப் படுமோசமாக்கிவிட்டது,” என்று முடித்தான்.

இறுகிப் போயிருந்த அவர்களது முகங்களிலிருந்து ஹாரி தன் பார்வையைத் திருப்பி அந்தச் சிவப்பு நிறக் கடிதத்தின்மீது மேயவிட்டான்.

“அலறல் கடிதம் என்றால் என்ன?” என்று அவன் கேட்டான்.

ஆனால் ரானின் மொத்தக் கவனமும் அக்கடிதத்தின் மீதே லயித்திருந்தது. அதன் முனைகளில் இருந்து இப்போது லேசாகப் புகை வெளிவரத் துவங்கியிருந்தது.

“அதைத் திறந்து படி” என்று நெவில் வற்புறுத்தினான். “ஒருசில நிமிடங்களில் அது முடிந்துவிடும்…”

நடுங்கிக் கொண்டிருந்த தன் கையை நீட்டி, எரோலின் அலகில் இருந்து ரான் அக்கடிதத்தை விடுவித்து, அதன் ஓரத்தைக் கிழித்துத் திறந்தான். நெவில் தன் கை விரல்களைத் தன் காதுகளுக்குள் செருகிக் கொண்டான். அவன் ஏன் அப்படிச் செய்தான் என்பது அடுத்தக் கணமே ஹாரிக்குப் புரிந்தது. முதலில் அது வெடித்துவிட்டதாகவே அவன் நினைத்தான். அப்பேரரங்கை ஒரு பெரிய சத்தம் நிறைத்தது. அது போட்டச் சத்தத்தில் உத்தரத்திலிருந்து தூசுகள் கீழே வந்து விழுந்தன.

“…காரைத் திருடியதற்காக நீ பள்ளியிலிருந்து தூக்கியெறியப்பட்டு இருந்தாலும் நான் ஆச்சரியப்பட்டிருக்க மாட்டேன். நீ என் கையில் அகப்படும்போது உன்னை நான் என்ன செய்யப் போகிறேன் என்று பார்! ரயில் நிலையத்தைவிட்டு நாங்கள் வெளியே வந்தபோது கார் காணாமல் போயிருந்ததைக் கண்டதும் நாங்கள் என்ன பாடுபட்டிருப்போம் என்பதை நீ ஒருகணம்கூட யோசிக்கத் தவறிவிட்டாய் . . .”

மோலியின் காட்டுக் கத்தல் அவரது வழக்கமான குரலைவிட நூறு மடங்கு அதிகச் சத்தமாக ஒலித்தது. அதன் அதிர்வில் உணவு மேசையில் இருந்த தட்டுகளும் கரண்டிகளும் கிலுகிலுத்தன. காதுகளைச் செவிடாக்கும் விதத்தில் அவரது கூச்சல் அந்த அறையின் கற்சுவர்களில் பட்டு எதிரொலித்தது. அந்த அரங்கில் அமர்ந்திருந்த அத்தனைப் பேரும் தங்கள் தலைகளைத் திருப்பி யாருக்கு ‘அலறல் கடிதம்’ வந்திருந்தது என்று பார்த்தனர். ரான் தன் நாற்காலியில் தொடர்ந்து தாழ்ந்து கொண்டே சென்றதில் கடைசியில் அவனது செந்நிறத் தலைமுடி மட்டுமே வெளியே தெரிந்தது.

“…டம்பிள்டோரிடமிருந்து நேற்றிரவு எங்களுக்குக் கடிதம் வந்தபோது, எனக்கும் உன் அப்பாவிற்கும் ஏற்பட்ட அவமானத்தில், நாங்கள் கூனிக் குறுகிப் போனோம். இது மாதிரி நடந்து கொள்வதற்காக நாங்கள் உன்னை வளர்க்கவில்லை. நீயும் ஹாரியும் செத்துப் போயிருக்கக்கூடும்…”

தன் பெயர் எப்போது வெடித்துக் கிளம்புமோ என்று ஹாரி யோசித்துக் கொண்டிருந்தான். தனது காதுச் சவ்வுகள் கிழிந்துவிடக்கூடிய அளவுக்கு உச்சஸ்தாயியில் ஒலித்துக் கொண்டிருந்த அக்குரல் தனக்குக் கேட்கவேயில்லை என்பதுபோல அவன் பாவித்துக் கொண்டிருந்தான்.

“…எனக்கு உன்னை நினைத்தால் கடும் வெறுப்பாக இருக்கிறது. உன் அப்பாவின் அலுவலகம் அவர்மீது ஒரு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. இது முழுக்க முழுக்க உன் தவறு. அடுத்த முறை இது மாதிரி ஏதாவது நடந்தால், நானே அங்கு வந்து உன்னை வீட்டிற்குக் கூட்டி வந்துவிடுவேன்.”

அதைத் தொடர்ந்து ஒரு மயான அமைதி நிலவியது. ரானின் கையில் இருந்து கீழே விழுந்த அந்தச் சிவப்பு நிறக் கடிதம் தீப்பற்றி எரிந்து சாம்பலாகச் சுருண்டது. பேரலை ஒன்று தங்களைக் கீழே தள்ளிச் சாய்த்து விட்டதைப்போல ஹாரியும் ரானும் அப்படியே இடிந்து போய் உட்கார்ந்தனர். ஒருசிலர் சிரித்தனர். பின்னர் கூட்டத்தினரின் பிதற்றல் பேச்சுக்கள் மெதுவாக மீண்டும் துவங்கின.

ஹெர்மயனி தான் விரித்து வைத்திருந்த ‘ரத்தக் காட்டேரியுடன் ஒரு கடற்பயணம்’ புத்தகத்தை மூடிவிட்டு, நாற்காலியின் மேலே லேசாகத் தெரிந்து கொண்டிருந்த ரானின் தலை உச்சியைப் பார்த்தாள்.

“ரான், நீ என்ன எதிர்பார்த்தாய் என்று எனக்குத் தெரியாது. ஆனால் -”

“எனக்கு இது தேவைதான் என்று கூறாதே,” என்று ரான் வெடித்தான்.

ஹாரி தன் பாயசக் கிண்ணத்தைத் தள்ளி வைத்தான். அவன் குற்ற உணர்வால் கொந்தளித்துக் கொண்டிருந்தான். இக்கோடை விடுமுறையில் ரானின் அப்பாவும் அம்மாவும் அவனுக்குச் செய்தவற்றுக்கு . .

ஆனால் அது குறித்து மருகிக் கொண்டிருக்க அவனுக்கு நேரமிருக்கவில்லை. பேராசிரியர் மெக்கானகல் கிரிஃபின்டார் அணியின் உணவு மேசையருகே வந்து அவர்களுக்கான வகுப்புக் கால அட்டவணையை ஒவ்வொருவருக்கும் வினியோகித்துக் கொண்டிருந்தார். தங்களுக்கு முதலில் ஹஃபில்பஃப் அணியோடு சேர்த்துத் தொடர்ச்சியாக இரண்டு மூலிகையியல் வகுப்புகள் இருந்ததை அதிலிருந்து ஹாரி தெரிந்து கொண்டான்.

ஹாரி, ரான், ஹெர்மயனி ஆகிய மூவரும் கோட்டையைவிட்டு ஒன்றாக வெளியே வந்து, காய்கறித் தோட்டத்தைக் கடந்து சென்று, மாயாஜாலத் தாவரங்கள் வளர்க்கப்பட்டு வந்த பசுமைக் குடிலுக்குச் சென்றனர். அலறல் கடிதத்தால் குறைந்தபட்சம் ஒரே ஒரு நன்மை விளைந்திருந்தது. அவர்கள் போதுமான அளவு தண்டிக்கப்பட்டிருந்ததாக ஹெர்மயனி நம்பியதால், அவள் அவர்களுடன் மீண்டும் சுமூகமான நட்பைத் தொடர்ந்தாள்.

பசுமைக் குடிலை நெருங்கியதும் அதன் வாசலில் தங்கள் வகுப்பு மாணவர்கள் அனைவரும் பேராசிரியர் ஸ்புரவுட்டிற்காகக் காத்துக் கொண்டிருந்ததை அவர்கள் கண்டனர். அவர்கள் மூவரும் பிற மாணவர்களை நெருங்கியதும், பேராசிரியர் ஸ்புரவுட் அப்புல்வெளியின் குறுக்காகத் தங்களை நோக்கி நடந்து வந்ததைக் கண்டனர். அவருடன் கில்டராய் லாக்ஹார்ட்டும் வந்து கொண்டிருந்தார். பேராசிரியர் ஸ்புரவுட்டின் கைகள் முழுவதும் கட்டுக்கள் போடப்பட்டிருந்தன. தொலைவில் இருந்த அந்த நையப் புடைக்கும் விந்தை மரத்தின் பல கிளைகளுக்கும் கட்டுக்கள் போடப்பட்டிருந்ததைக் கண்ட ஹாரிக்குக் குற்ற உணர்வு மேலும் பெருக்கெடுத்தது.

பேராசிரியர் ஸ்புரவுட் ஒரு குண்டான, குள்ளமான மந்திரவாதினி. அவரது முடி எப்போதும் அலங்கோலமாகக் காற்றில் பறந்து கொண்டிருக்கும். அவர் எப்போதும் ஒட்டுப் போடப்பட்ட ஒரு தொப்பியை அணிந்திருந்தார். அவரது ஆடையில் தவறாமல் ஏகப்பட்ட மண் ஒட்டியிருக்கும். அவரது கைவிரல் நகங்களைப் பார்த்தால் பெட்டூனியா பெரியம்மா மயக்கம் போட்டு விழுந்துவிடுவார். ஆனால் அவருக்கு நேர்மாறாக, கில்டராய் லாக்ஹார்ட், தரையில் புரண்டு கொண்டிருந்த தனது நீலநிற அங்கியில் மிக நேர்த்தியாக இருந்தார். துல்லியமான கோணத்தில் அவரது தலைமீது சாய்த்து வைக்கப்பட்டிருந்த, தங்க ஓரங்களைக் கொண்டிருந்த அவரது நீல நிறத் தொப்பிக்குள்ளிருந்து அவரது பொன்னிறத் தலைமுடி பளபளப்பாக எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தது.

அங்கு கூடியிருந்த மாணவர்களைப் பார்த்துத் தன் உதடுகளில் மலர்ச்சியான புன்னகையைப் படரவிட்ட லாக்ஹார்ட், “ஓ, வந்துவிட்டீர்களா?” என்றார். “காயப்பட்டுள்ள நையப் புடைக்கும் விந்தை மரத்திற்கு முறைப்படி எவ்வாறு சிகிச்சை அளிக்க வேண்டும் என்று பேராசிரியர் ஸ்புரவுட்டிற்கு நான் கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தேன். ஆனால் மூலிகையியலில் பேராசிரியர் ஸ்புரவுட்டை விட நான் சிறந்தவன் என்று நீங்கள் எண்ணிவிடக்கூடாது. இது போன்ற பல விந்தையான தாவரங்களை என்னுடைய பயணங்களின்போது அதிகமாகக் காண எனக்கு வாய்ப்புக் கிட்டியிருந்தது, அவ்வளவுதான்.”

“இன்று மூன்றாம் பசுமைக் குடிலுக்குச் செல்லலாம்,” என்று பேராசிரியர் ஸ்புரவுட் கூறினார். ஆனால் அவரது வழக்கமான குதூகலம் அவரிடம் இன்று காணப்படவில்லை. அவர் சுரத்தின்றிக் காணப்பட்டார்.

அங்கு உடனே சுவாரசிய முணுமுணுப்புகள் தோன்றின. அவர்கள் இதுவரை முதலாம் பசுமைக் குடிலில் மட்டுமே வேலை செய்து வந்திருந்தனர். மூன்றாம் பசுமைக் குடிலில் அதிக சுவாரசியமான, அதிக ஆபத்தான தாவரங்கள் இடம்பெற்றிருந்தன. பேராசிரியர் தன்னுடைய பெல்ட்டில் இருந்து ஒரு பெரிய சாவியை எடுத்துக் கதவைத் திறந்தார். உடனே உள்ளேயிருந்து ஈர மண்ணின் வாசமும் உரங்களின் நெடியும் வந்து தன்னைத் தாக்கியதை ஹாரி உணர்ந்தான். அதோடு, கூரையிலிருந்து தொங்கிக் கொண்டிருந்த மிகப் பெரிய மலர்களின் நறுமணமும் சேர்ந்து வந்தது. ரானையும் ஹெர்மயனியையும் தொடர்ந்து ஹாரி உள்ளே நுழைய முனைந்தபோது, லாக்ஹார்ட்டின் கை அவனைத் தடுத்தது.

“ஹாரி, நான் உன்னுடன் கொஞ்சம் பேச வேண்டும்,” என்று கூறிய லாக்ஹார்ட், பேராசிரியர் ஸ்புரவுட்டை நோக்கி, “பேராசிரியரே, ஹாரி ஒருசில நிமிடங்கள் தாமதமாக வந்தால் உங்களுக்கு ஒன்றும் பிரச்சனை இல்லையே?” என்று கேட்டார்.

பேராசிரியரின் முகம் போன போக்கைப் பார்த்தபோது அவருக்கு அதில் உடன்பாடு இருக்கவில்லை என்பது வெளிப்படையாகத் தெரிந்தது. ஆனாலும், லாக்ஹார்ட், “நன்றி, பேராசிரியரே,” என்று கூறிவிட்டு, பேராசிரியர் ஸ்புரவுட்டின் முகத்தில் அறைந்தாற்போலக் கதவைச் சாத்தினார்.

“ஹாரி,” என்று லாக்ஹார்ட் அழைத்தார். சூரிய ஒளியில் அவரது முத்துப் பற்கள் தகதகத்தன. அவர் தன் தலையை ஆட்டிக் கொண்டே, “ஹாரி, ஹாரி,” என்று அவனது பெயரைக் கூறிக் கொண்டே இருந்தார்.

திகைத்துப் போயிருந்த ஹாரி வாயே திறக்கவில்லை.

“நான் கேள்விப்பட்ட விஷயம் – அது கண்டிப்பாக – என் தவறுதான். எனக்கே நான் ஓர் உதை விட்டிருக்க வேண்டும்.”

அவர் எதைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார் என்று ஹாரிக்குச் சுத்தமாகத் தெரியவில்லை. அவன் அதைச் சொல்ல எத்தனித்தபோது அவர் மேலும் தொடர்ந்து பேசினார். “நான் இதற்கு முன்பு இந்த அளவுக்கு அதிர்ச்சி அடைந்ததில்லை. ஹாக்வார்ட்ஸுக்கு ஒரு காரில் பறந்து வந்ததை என்னவென்று சொல்ல! ஹாரி, நீ ஒரு தனிப்பிறவி”

அவர் பேசிக் கொண்டிராதபோதுகூட அவரால் எப்படித் தன்னுடைய வெண்முத்துப் பற்களை வெளியே காட்டிக் கொண்டிருக்க முடிந்தது என்பது அதிசயிக்கத்தக்கதாக இருந்தது.

“நான் உனக்கு விளம்பர ருசியை அறிமுகப்படுத்திவிட்டேன், அப்படித்தானே?” என்று லாக்ஹார்ட் கேட்டார். “உன்னை விளம்பர்’ மோகம் பிடித்துக் கொண்டுவிட்டது. பத்திரிகையின் முதல் பக்கத்தை நீ என்னுடன் சேர்ந்து அலங்கரித்தாய். அதை உடனே மறுபடியும் செய்யத் துடித்துவிட்டாய், இல்லையா?”

“ஓ, அப்படியெல்லாம் இல்லை. பேராசிரியரே, நான் -”

ஹாரியின் தோள்களை எட்டிப் பிடித்த லாக்ஹார்ட், மறுபடியும், “ஹாரி, ஹாரி, ஹாரி,” என்று கூறினார். “எனக்குப் புரிகிறது ஹாரி. எதையும் முதன்முதலாக ஒருமுறை ருசித்துவிட்டால், அதை மீண்டும் விரும்புவது இயல்பானதுதான். ஆனால் அதற்கு நான் என்னைத்தான் நொந்து கொள்ள வேண்டும். என் மூலமாகத்தான் அது உன் தலைக்குள் ஏறியிருக்க வேண்டும். ஆனால் இளைஞனே, உன்னைப் பிறர் கவனிக்க வேண்டும் என்பதற்காகக் கார்களைப் பறக்க வைக்கக்கூடாது. உன்னைக் கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொள். நீ வளர்ந்த பின் இதற்கு நிறைய நேரம் இருக்கும். இப்போது நீ என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாய் என்று எனக்குப் புரிகிறது. ‘அவர் பாட்டுக்குச் சொல்லிக் கொண்டு போவார். அவருக்கென்ன! அவர் ஏற்கனவே சர்வதேசப் புகழ்பெற்ற ஒரு மந்திரவாதி!’ ஆனால் எனக்குப் பன்னிரண்டு வயதாக இருந்தபோது, நீ இப்போது எப்படிச் சாதாரணமாக இருக்கிறாயோ, அப்படித்தான் நானும் இருந்தேன். இன்னும் சொல்லப் போனால், நான் உன் அளவுக்குக்கூடப் பிரபலமாக இருக்கவில்லை. ‘பெயர் சொல்லப்படக்கூடாதவன்’ விவகாரத்தினால் இப்போது உன்னை ஒருசிலருக்காவது தெரிந்திருக்கும், இல்லையா?” மின்னல்கீற்று வடிவில் இருந்த அவனது நெற்றித் தழும்பை அவர் உற்று நோக்கினார். “இது ‘மந்திரவாதினி வாராந்திர’ப் பத்திரிக்கையில் தொடர்ந்து ஐந்து வாரங்களுக்குப் ‘புன்னகை மன்னன்’ பட்டத்தை வெல்வது போன்றதில்லை என்பது எனக்குத் தெரியும். நான் அப்பட்டத்தை வாங்கியிருக்கிறேன். ஆனால், ஹாரி, அது ஒரு தொடக்கம். அது ஒரு தொடக்கம் மட்டும்தான்!”

அவர் ஹாரியைப் பார்த்து மகிழ்ச்சியுடன் கண்ணடித்துவிட்டு அங்கிருந்து அகன்றார். ஹாரி ஒருசில நிமிடங்களுக்கு அதிர்ச்சியில் உறைந்து போய் அங்கேயே நின்றான். பின், தான் இப்போது பசுமைக் குடிலின் உள்ளே இருந்தாக வேண்டும் என்பது நினைவிற்கு வந்தவனாக, கதவைத் திறந்து உள்ளே நுழைந்தான்.

பேராசிரியர் ஸ்புரவுட் பசுமைக் குடிலின் நடுப்பகுதியில் போடப்பட்டிருந்த ஒரு தற்காலிகமான பெஞ்சிற்குப் பின்னால் நின்று பேசிக் கொண்டிருந்தார். பல்வேறுபட்ட நிறங்களில் சுமார் இருபது ஜோடிக் காதுறைகள் அந்த பெஞ்சின்மீது கிடந்தன. ரானுக்கும் ஹெர்மயனிக்கும் இடையில் ஹாரி தன்னை நுழைத்துக் கொண்டதும், பேராசிரியர் ஸ்புரவுட், “நாம் இன்று மன்ட்ரேக் செடியைப் பிடுங்கி மீண்டும் நடப் போகிறோம். மன்ட்ரேக் செடியின் குணாதிசயங்கள் பற்றி உங்களில் யாருக்காவது தெரியுமா?” என்று கேட்டார்.

ஹெர்மயனியின் கை முதலில் உயர்ந்தபோது அது யாருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தவில்லை.

ஹெர்மயனி வழக்கம்போல அப்புத்தகத்தை ஏற்கனவே கரைத்துக் குடித்துவிட்டிருந்ததுபோலத் தோன்றிய ஒரு தொனியில், “மன்ட்ரேக் அல்லது மன்ட்ரகோரா என்றழைக்கப்படும் இத்தாவரம் ஓர் ஆற்றல்மிக்கப் புத்துயிரூட்டி,” என்று கூறினாள். “உருவ மாறுபாடு அடைந்துள்ள அல்லது சபிக்கப்பட்டுள்ள நபர்கள் மீண்டும் தங்களது சொந்த உருவத்தை அடைய இது பயன்படுத்தப்படுகிறது.”

“அபாரம். கிரிஃபின்டார் அணிக்குப் பத்துப் புள்ளிகள்,” என்று பேராசிரியர் ஸ்புரவுட் கூறினார். “பெரும்பாலான முறிமருந்துகளின் ஓர் அங்கமாக மன்ட்ரேக் விளங்குகின்ற போதிலும் அது ஆபத்தானது. அது ஏன் என்று உங்களில் யாருக்காவது தெரியுமா?”

ஹெர்மயனியின் கை மீண்டும் வேகமாக உயர்ந்தபோது, ஹாரியின் மூக்குக்கண்ணாடி மயிரிழையில் தப்பித்தது.

“மன்ட்ரேக்கின் கத்தலைக் கேட்கும் நபருக்கு மரணம் நிச்சயம்,” என்று அவள் உடனடியாகக் கூறினாள்.

“மிகச் சரியான விடை. கிரிஃபின்டார் அணிக்கு மீண்டும் ஒரு பத்துப் புள்ளிகள்,” என்று பேராசிரியர் ஸ்புரவுட் கூறினார். “இங்கு நம்மிடம் இருக்கும் மன்ட்ரேக் செடிகள் இளம் நாற்றுகள்தான்.”

தான் பேசிக் கொண்டிருந்தபோதே குழிவாக இருந்த தாம்பாளங்களில் வைக்கப்பட்டிருந்த ஒரு வரிசையை அவர் சுட்டிக்காட்டினார். எல்லோரும் அதை நன்றாகப் பார்ப்பதற்காக முண்டியடித்துக் கொண்டு முன்னே சென்றனர். பச்சை கலந்த செவ்வூதா நிறத்தில் அடர்த்தியாக இருந்த சுமார் நூறு செடிகள் அதில் வரிசை வரிசையாக இருந்தன. அவை வெகு சாதாரணமாக இருந்ததாக ஹாரிக்குப் பட்டது. ‘மன்ட்ரேக்கின் கத்தல்’ என்று ஹெர்மயனி கூறியபோது அவள் எதைக் குறிப்பிட்டாள் என்று அவனுக்குத் துளிகூட யோசனை இருக்கவில்லை.

“எல்லோரும் ஆளுக்கொரு ஜோடிக் காதுறைகளை எடுத்துக் கொள்ளுங்கள்,” என்று பேராசிரியர் ஸ்புரவுட் கூறினார்.

இளஞ்சிவப்பு நிறத்தில் இல்லாத, புசுபுசுவென்று இல்லாத காதுறைகளைத் தேர்ந்தெடுக்க அவர்கள் ஒவ்வொருவரும் முண்டியடித்தபோது ஒரு சிறு சலசலப்பு ஏற்பட்டது.

“காதுறைகளைப் போட்டுக் கொள்ளுங்கள் என்று நான் கூறும்போது அவை உங்கள் காதுகளை நன்றாக மூடியிருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்,” என்று பேராசிரியர் ஸ்புரவுட் கூறினார். “காதுறைகளைக் கழற்றினால் பிரச்சனை ஒன்றும் வராது என்ற நேரம் வரும்போது நான் என் பெருவிரலை உயர்த்திக் காட்டுவேன். அப்போதுதான் நீங்கள் அவற்றைக் கழற்ற வேண்டும். எல்லோரும் தயாரா? இப்போது காதுறைகளை மாட்டிக் கொள்ளுங்கள் !” ஹாரி பட்டென்று தன் காதுறைகளைத் தன் காதுகளின்மீது சுத்தமாக நின்றுவிட்டிருந்தது. மாட்டினான். வெளிச் சத்தம் பேராசிரியர் ஸ்புரவுட், இளஞ்சிவப்பு நிறத்தில் புசுபுசுவென்று இருந்த காதுறைகளைத் தன் காதுகளின்மேல் போட்டுக் கொண்டு. தன்னுடைய அங்கியின் கைகளைச் சுருட்டிவிட்டுக் கொண்டு, ஒரு செடியை இறுக்கமாகப் பற்றி, அதை பலமாகப் பிடுங்கினார்.

ஹாரி ஆச்சரியத்தில் அதிகச் சத்தமின்றிப் பெருமூச்செறிந்தான். வேர்களுக்குப் பதிலாக ஒரு சிறிய, சகதியில் குளித்திருந்த, மிக மிக அருவருப்பான ஒரு குழந்தை பூமியில் இருந்து வெளியே வந்தது. இலைகள் அதன் தலையிலிருந்து முளைத்திருந்தன. தோலில் பலவண்ணப் புள்ளிகளுடனும் வெளிறிய பச்சை நிறத்திலும் காட்சியளித்த அது பெருங்குரலெடுத்துக் கத்திக் கொண்டிருந்தது.

பேராசிரியர் ஸ்புரவுட், மேசைக்கு அடியில் இருந்து ஒரு பெரிய தொட்டியை எடுத்து, அந்த மன்ட்ரேக் செடியை அதில் போட்டு, கருப்பாக இருந்த ஈரமான உரத்தை அதன் இலைகள் மட்டும் வெளியே தெரியும் வண்ணம் அதன்மீது கொட்டி நிரப்பினார். பின் அவர் தன் கையைத் தட்டி மண்ணை உதறிவிட்டு, அவர்களுக்குத் தன் கைப் பெருவிரலைத் தூக்கிக் காட்டினார். பிறகு அவர் தனது காதுறைகளைக் கழற்றினார்.

“இப்போது நாம் பார்த்த மன்ட்ரேக்குகள் இளம் நாற்றுகளாக இருப்பதால் அவற்றின் கத்தலால் நாம் செத்துவிட மாட்டோம்,” என்று, அப்போதுதான் தான் ஒரு பூச்செடிக்குத் தண்ணீர் ஊற்றி முடித்திருந்ததுபோல அவர் அமைதியாகக் கூறினார். “ஆனால் அவற்றின் சத்தம் உங்களைப் பல மணிநேரம் செயலிழக்க வைக்கும். நீங்கள் உங்களுடைய முதல் நாள் வகுப்பைத் தவறவிட விரும்ப மாட்டீர்கள் என்று நினைக்கிறேன். எனவே, நீங்கள் இதில் வேலை செய்து கொண்டிருக்கும்போது, உங்கள் காதுகளைக் காதுறைகளை கொண்டு நன்றாக மூடிக் கொள்ள மறந்துவிடாதீர்கள். இங்கிருந்து கிளம்ப வேண்டிய நேரம் வரும்போது, நான் உங்களுக்குச் செய்கிறேன்.

“ஒரு தாம்பாளத்திற்கு நான்கு பேர் என்ற கணக்கில் நின்று கொள்ளுங்கள் – இங்கு ஏராளமான தொட்டிகள் இருக்கின்றன – உர மூட்டைகள் அங்கே ‘டென்டாகுலா’ செடியிடம் எச்சரிக்கையாக இருங்கள் – அதற்குப் பற்கள் முனைத்துக் கொண்டிருக்கின்றன.”

பேராசிரியர் ஸ்புரவுட், தன் தோளின்மீது திருட்டுத்தனமாகப் படர் முயன்று கொண்டிருந்த, முட்கள் நிறைந்த சிவப்புச் செடியின்மீது பளாரென்று ஓர் அறை விட்டதில் அது தன் உணர்விகளைச் சுருட்டிக் கொண்டது.

ஹாரி, ரான், ஹெர்மயனி ஆகிய மூவரும் ஹஃபில்பஃப் அணியைச் சேர்ந்த ஒரு மாணவனுடன் சேர்ந்து கொண்டனர். ஹாரிக்கு அவனைத் தெரியும் என்றாலும்கூட ஹாரி அதுவரை அவனுடன் பேசியிருக்கவில்லை.

அவன் ஹாரியின் கையைப் பிடித்துக் குலுக்கியவாறு, “என் பெயர் ஜஸ்டின் ஃபின்ச் ஃபிளெட்ச்லீ,” என்று உற்சாகமாகக் கூறினான். “நீ யாரென்று தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை பிரபலமான ஹாரி பாட்டர்… ஹெர்மயனி, உன்னையும் எனக்குத் தெரியும் – எப்போதுமே எல்லாவற்றிலும் முதலிடம் (அவளது கையைப் பிடித்து அவன் குலுக்கியபோது, ஹெர்மயனிக்குப் பெருமை தாங்க முடியவில்லை) – ரான் வீஸ்லீ, ஆமாம் அந்தப் பறக்கும் கார் உன்னுடையதா?”

ரான் பதிலுக்குப் புன்னகைக்கவில்லை. அலறல் கடிதம் இன்னும் அவன் மண்டையைவிட்டு அகலாமல் இருந்தது வெளிப்படையாகத் தெரிந்தது.

அவர்கள் தங்களுடயை தொட்டிகளை டிராகன் எரு உரத்தினால் நிரப்பிக் கொண்டிருந்தபோது, ஜஸ்டின், “அந்த லாக்ஹார்ட் கொஞ்சம் வித்தியாசமான பேர்வழிதான், இல்லையா?” என்று மகிழ்ச்சியுடன் கேட்டான். “உண்மையில் மகா தைரியசாலி. அவரது புத்தகங்களை நீ படித்திருக்கிறாயா? ஓர் ஓநாய்மனிதன் என்னை ஒரு தொலைபேசி பூத்தில் வைத்து நெருக்கியிருந்தால், நான் பயத்திலேயே செத்துப் போயிருப்பேன். ஆனால் லாக்ஹார்ட் பதற்றப்படாமல் அந்த ஓநாய்மனிதனிடமிருந்து தப்பித்துவிட்டார் – பிரமாதம்!

“பிரபலமான ஈட்டன் பள்ளிதான் முதலில் என்னைத் தேர்ந்தெடுத்தது. ஆனால் இங்கு வந்தது குறித்து நான் எவ்வளவு என்பதை என்னால் தூரம் மகிழ்ச்சி அடைந்துள்ளேன் வார்த்தைகளால் விவரிக்க முடியாது. இங்கு வர நான் முடிவு செய்தது குறித்து என் அம்மாவுக்குக் கொஞ்சம் வருத்தம்தான். ஆனால் நான் என் அம்மாவை லாக்ஹார்ட்டின் புத்தகங்களைப் படிக்க வைத்தப் பிறகு, நன்றாகப் பயிற்றுவிக்கப்பட்ட ஒரு மந்திரவாதி எங்கள் குடும்பத்தில் இருப்பது எவ்வளவு உபயோகமாக இருக்கும் என்பது அவருக்கு புரியத் துவங்கியிருப்பதாக நான் நினைக்கிறேன் . . .”

தொடர்ந்து பேசுவதற்கு அதன் பிறகு அவர்களுக்கு அவ்வளவு வாய்ப்புக் கிடைக்கவில்லை. அவர்கள் தங்கள் காதுறைகளை மாட்டிக் கொண்டிருந்ததோடு, மன்ட்ரேக்குகள்மீது ஒருமித்தக் கவனம் செலுத்தவும் வேண்டியிருந்தது. பேராசிரியர் ஸ்புரவுட் அது மிக எளிதான ஒரு விஷயம் என்பதுபோலக் காட்டியிருந்தார். ஆனால் அது அப்படி இருக்கவில்லை. மன்ட்ரேக் செடிகள் நிலத்திலிருந்து வெளியே வருவதற்கு மட்டும் அடம் பிடிக்கவில்லை, மீண்டும் உள்ளே போவதற்கும் பாடாய்ப் படுத்தின. அவை முகம் சுளித்தன, உதைத்தன, கூராக இருந்த தமது குட்டிக் கைகளால் பிராண்டின, பற்களால் கடித்தன. ஓரளவு குண்டாக இருந்த ஒரு மன்ட்ரேக் செடியைத் தொட்டிக்குள் போடுவதற்கு ஹாரி சுமார் பத்து நிமிடங்கள் போராட வேண்டியிருந்தது.

அந்த வகுப்பு முடிவடைந்தபோது, அங்கிருந்த பிற மாணவர்களைப்போலவே ஹாரியும் தொப்பலாக நனைந்திருந்தான்; மண்ணால் அபிஷேகம் செய்யப்பட்டிருந்தான்; அவனுக்கு உடம்பெல்லாம் வலித்தது. கோட்டையை நோக்கி அவர்கள் சாவகாசமாக நடந்து சென்று, ஓர் அவசரக் குளியல் போட்டனர். பின்னர் கிரிஃபின்டார் அணியினர் அவசர அவசரமாக உருவ மாற்ற வகுப்பிற்குச் சென்றனர்.

பேராசிரியர் மெக்கானகல்லின் வகுப்புகள் எப்போதுமே சிரமமானவையாக இருந்து வந்தபோதிலும், குறிப்பாக இன்று மிகவும் கடினமாக இருந்தது. கடந்த வருடம் தான் கற்றிருந்த அனைத்தும் கோடை விடுமுறையின்போது தனது மூளையிலிருந்து ஒழுகி ஓடிவிட்டதுபோல ஹாரிக்குத் தோன்றியது. அவன் ஒரு வண்டை ஒரு பொத்தானாக மாற்ற வேண்டியிருந்தது. ஆனால் அந்த வண்டு அவனுடைய மந்திரக்கோலுக்கு அகப்படாமல் அவனது மேசைமீது அங்குமிங்கும் வேகமாக ஓடிக் கொண்டிருந்ததால், அவன் செய்ததெல்லாம், அந்த வண்டுக்குச் சிறந்த உடற்பயிற்சி அளித்தது மட்டுமே.

ரானின் பிரச்சனை அதைவிட மோசமாக இருந்தது. தான் இரவல் வாங்கிய ஸ்பெல்லோடேப்பைக் கொண்டு அவன் தன் மந்திரக்கோலை ஒட்டியிருந்தான். ஆனால் அது பழுது பார்க்கும் நிலையைத் தாண்டிவிட்டிருந்ததுபோலத் தோன்றியது. எதிர்பார்க்காத தருணங்களில் வெடிப்பதும் சீறுவதுமாக அது இருந்தது. அவன் தனது வண்டை உருவ மாற்றம் செய்ய முனைந்தபோதெல்லாம், அது அவனைச் சுற்றிக் கருப்பான, அடர்த்தியான, அழுகிய முட்டை நாற்றத்துடன்கூடிய ஒரு புகை மண்டலத்தை உருவாக்கியது. அப்புகை அவனது கண்களை மறைத்ததால், அவன் அவ்வப்போது அந்த வண்டைத் தன் முழங்கையால் நசுக்கிவிட்டுப் புதிதாக வேறு வண்டைக் கேட்டுக் கொண்டிருந்தான். பேராசிரியர் மெக்கானகல் அதை ரசிக்கவில்லை.

மதியச் சாப்பாட்டு மணி அடித்ததைக் கேட்டு ஹாரி நிம்மதியடைந்தான். அவனது மூளையானது அழுத்திப் பிழியப்பட்டிருந்த ஒரு ஸ்பாஞ்சைப்போல இருந்தது. ரானையும் ஹாரியையும் தவிர மற்றவர்கள் எல்லோரும் வகுப்பறையைவிட்டு வெளியேறியிருந்தனர். ரான் தன் மந்திரக்கோலைத் தன் மேசையின்மீது கோபத்துடன் தட்டிக் கொண்டிருந்தான்.

“உதவாக்கரை . உருப்படாதது . .”

ரானின் மந்திரக்கோல் சரமாரியாகப் பேரொலியை எழுப்பிக் கொண்டிருந்தபோது, ஹாரி அவனிடம், “வேறு ஒரு மந்திரக்கோல் வேண்டும் என்று கேட்டு உன் வீட்டிற்குக் கடிதம் எழுது,” என்று ஆலோசனை கூறினான்.

இப்போது சீற்றொலி எழுப்பிக் கொண்டிருந்த தனது மந்திரக்கோலைத் தன் பைக்குள் போட்டவாறே, ரான், “ஆமாம், ஆமாம்! ஒரு கடிதம் எழுதி அனுப்பி இன்னோர் அலறல் கடிதத்தைப் பரிசாகப் பெறுவதற்கா?” என்று கேட்டான். “உன் மந்திரக்கோல் உடைந்ததற்கு முழுக்க முழுக்க நீதான் காரணம்…”

அவர்கள் மதியச் சாப்பாட்டிற்குச் சென்றனர். அங்கு ஹெர்மயனி உருவ மாற்ற வகுப்பில் தான் உருவாக்கியிருந்த நேர்த்தியான கோட் பொத்தான்களை அவர்களிடம் காட்டியபோது, ரானின் மனநிலை இன்னும் மோசமானது.

பேச்சை மாற்றுவதற்காக ஹாரி அவசர அவசரமாக, “இன்று மதியம் நமக்கு என்ன வகுப்பு இருக்கிறது?” என்று கேட்டான். ஹெர்மயனி உடனடியாக, ” தீய மந்திர சக்திகளுக்கு எதிரான பாதுகாப்பு,” என்று கூறினாள்.

ரான் அவளது கால அட்டவணையை வெடுக்கென்று பிடுங்கி, “நீ ஏன் லாக்ஹார்ட்டின் வகுப்புகளைச் சுற்றி இதயங்களை வரைந்து வைத்துள்ளாய்,” என்று கேட்டான்.

ஹெர்மயனி அதிகமாக வெட்கப்பட்டுக் கொண்டே அவனது கையிலிருந்து தனது அட்டவணையைப் பிடுங்கினாள்.

அவர்கள் சாப்பிட்டு முடித்தவுடன் மேகமூட்டத்துடன் காணப்பட்ட முற்றத்திற்குச் சென்றனர். ஹெர்மயனி அங்கிருந்த கற்படிக்கட்டில் உட்கார்ந்து கொண்டு மீண்டும் ‘ரத்தக் காட்டேரியுடன் ஒரு கடற்பயணம்’ புத்தகத்திற்குள் மூழ்கிப் போனாள். ஹாரியும் ரானும் பல நிமிடங்கள் குவிடிச் விளையாட்டைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது, தான் உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டுக் கொண்டிருந்தோம் என்ற உணர்வு ஹாரிக்குத் திடீரென்று எழுந்தது. அவன் நிமிர்ந்து பார்த்தபோது, கடந்த இரவில் வகை பிரிக்கும் தொப்பியை அணிய முயன்று கொண்டிருந்த, சிறிய உருவத்துடனும் மங்கலான பழுப்பு நிறத் தலைமுடியுடனும் இருந்த அதே சிறுவன் தன்னைக் கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்ததைக் கண்டான். அச்சிறுவனின் கையில் மகுள்களின் சாதாரணமான கேமரா ஒன்று இருந்தது. ஹாரி அவனைப் பார்த்த அடுத்தக் கணமே அச்சிறுவனின் முகம் ரத்தச் சிவப்பாக ஆனது.

அச்சிறுவன் தயக்கத்துடன் ஓரடி முன்னால் எடுத்து வைத்து, ஹாரி, நான் – என் பெயர் காலின் கிரீவி,” என்று மூச்சு வாங்கக் கூறினான். “நானும் கிரிஃபின்டார் அணியில்தான் இருக்கிறேன். நீ தப்பாக நினைக்கவில்லை என்றால், நான் உன்னை ஒரு புகைப்படம் எடுத்துக் கொள்ளலாமா?”

“என்னது, புகைப்படமா?” என்று ஹாரி உணர்ச்சியில்லாமல் கேட்டான்.

அச்சிறுவன் ஹாரியை நோக்கி மேலும் நகர்ந்தவாறே, “நான் உன்னைச் சந்தித்திருக்கிறேன் என்று நிரூபிப்பதற்காக,” என்று ஆர்வத்துடன் கூறினான். “உன்னைப் பற்றிய சகல விஷயங்களும் எனக்குத் தெரியும். எல்லோருமே என்னிடம் கூறியிருக்கிறார்கள். ‘பெயர் சொல்லப்படக்கூடாதவன்’ உன்னைக் கொல்ல முயன்றபோது நீ எப்படித் தப்பினாய், அவன் எப்படி மாயமாய் மறைந்தான், உள் நெற்றியில் இன்னும் எப்படி மின்னல் கீற்று வடிவத் தழும்பு இருக்கிறது (அவனது கண்கள் ஹாரியின் நெற்றியில் மேய்ந்தன) போன்ற எல்லா விஷயங்களும் எனக்கு அத்துப்படி. என்னுடைய பொதுப் படுக்கையறையில் இருக்கும் ஒரு பையன், மாயத் திரவத்தைச் சரியான விகிதத்தில் கலந்து இப்புகைப்படத்தைக் கழுவினால் இதிலுள்ள உருவங்கள் உயிர்த்தெழும் என்று கூறினான்.” காலின் கிரீவி உற்சாகப் பெருமூச்செறிந்து மேலும் தொடர்ந்தான். “இங்கு மிகவும் அற்புதமாக இருக்கிறது, இல்லையா?’ ஹாக்வார்ட்ஸிலிருந்து எனக்கு அழைப்பு வரும்வரை, வீட்டில் நான் செய்து கொண்டிருந்த வினோதமான விஷயங்கள் அனைத்தும் மந்திரஜாலங்கள் என்பதை ஒருபோதும் நான் அறியவில்லை. என் தந்தை ஒரு பால்காரர். அவராலும் அதை நம்பவே முடியவில்லை. அதனால் நான் வீட்டிற்கு அனுப்புவதற்காக ஏகப்பட்டப் புகைப்படங்களை எடுத்துத் தள்ளிக் கொண்டிருக்கிறேன். அதில் உன் படமும் இருந்தால் நன்றாக இருக்கும்.” பின் அவன் ஹாரியைக் கெஞ்சுவதுபோலப் பார்த்துக் கொண்டு, “உன் நண்பன் இப்புகைப்படத்தை எடுத்தால் இன்னும் நன்றாக இருக்கும். அப்படிச் செய்தால் நானும் உன்னுடன் சேர்ந்து நிற்பதுபோலப் புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம். பிறகு எனக்கு அதில் நீ கையெழுத்திட்டுத் தரலாம்,” என்று கூறினான்.

“கையெழுத்திட்டப் புகைப்படங்களா? ஹாரி, நீ புகைப்படங்களில் கையெழுத்திட்டுக் கொடுக்கப் போகிறாயா?”

பெரிதாகவும் மனத்தைப் புண்படுத்தும் விதமாகவும் சத்தமாக ஒலித்த மால்ஃபாயின் குரல் அந்த முற்றமெங்கும் எதிரொலித்தது. அவன் நேராகக் காலினுக்குப் பின்னால் வந்து நின்றான். ஹாக்வார்ட்ஸில் மால்ஃபாய் எங்கு சென்றாலும் அவனுடன் ஒட்டிக் கொண்ட இரண்டு பெரிய முரடர்களான கிராபும் காயலும் அவனது இரு பக்கங்களிலும் இருந்தனர்.

“எல்லோரும் வரிசையாக நில்லுங்கள். ஹாரி பாட்டர் தான் கையெழுத்திட்டப் புகைப்படங்களைக் கொடுக்கப் போகிறான்,”

ஹாரி தன் கை முஷ்டியை மடக்கிக் கொண்டு, “நான் அப்படி எதையும் கொடுக்கப் போவதில்லை,” என்று கோபத்துடன் கூறினான். “மால்ஃபாய், நீ வாயை மூடு!”

“உனக்குப் பொறாமை,” என்று காலின் கீச்சுக் குரலில் கூறினான். அவனது மொத்த உடம்பும் கிராபின் கழுத்தின் தடிமன் அளவுதான் இருந்தது.

“பொறாமையா? எனக்கா?” என்று மால்ஃபாய் கேட்டான். முற்றத்தில் இருந்தவர்களில் பாதிப் பேர் அவர்கள் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்ததால், இப்போது அவன் கத்திப் பேச வேண்டிய தேவை இல்லாமல் போய்விட்டிருந்தது. “நான் எதற்காகப் பொறாமைப்பட வேண்டும்? எனக்கு ஒன்றும் என் நெற்றியில் ஓர் அசிங்கமான தழும்பு தேவையில்லை. என்னைப் பொறுத்தவரை, மண்டை பிளந்துவிட்ட ஒரே காரணத்தால் ஒருவன் பிரபலமாக ஆகிவிட முடியாது.”

கிராபும் காயலும் அடங்கிய குரலில் முட்டாள்தனமாகச் சிரித்துக் கொண்டிருந்தனர்.

“மால்ஃபாய், போய் நத்தையை விழுங்கு,” என்று ரான் கோபமாகக் கூறினான். கிராப் தன் சிரிப்பை நிறுத்திவிட்டு, அச்சுறுத்தும் விதத்தில் தன் உள்ளங்கைகளைத் தேய்க்கத் துவங்கினான்.

மால்ஃபாய் ரானை இகழ்ச்சியாகப் பார்த்தபடி, “ரான், ஜாக்கிரதை!” என்று கூறினான். “மேலும் பிரச்சனைகளை உருவாக்கிக் கொள்ள நீ விரும்ப மாட்டாய் என்று நான் நினைக்கிறேன். இல்லையெனில் உன் செல்ல அம்மா வந்து உன்னைப் பள்ளியிலிருந்து நிரந்தரமாகக் கூட்டிச் சென்றுவிடுவார்?” பிறகு, உச்சஸ்தாயியில் ஒலித்த, துளைத்தெடுக்கும் ஒரு குரலில், “அடுத்த முறை இதுமாதிரி ஏதாவது நடந்ததோ …” என்று ரானின் அம்மாவைப்போல அவன் பேசி நடித்தான்.

இதைக் கேட்டு அங்கு கூடியிருந்த ஐந்தாவது வருட மாணவர்கள் பலமாகச் சிரித்தனர்.

“ஹாரி, ரானுக்கும் உன் கையெழுத்திட்ட ஒரு புகைப்படத்தைக் கொடு,” என்று மால்ஃபாய் ஏளனமாகக் கூறினான். “அது அவனுடைய வீட்டின் மொத்த மதிப்பைவிட அதிகமாக இருக்கும்.”

ஒட்டுப் போடப்பட்டிருந்த தன்னுடைய மந்திரக்கோலை ரான் கோபமாக உருவினான். ஆனால் அருகிலிருந்த ஹெர்மயனி தான் படித்துக் கொண்டிருந்த புத்தகத்தை அறைந்து மூடிவிட்டு, “அங்கே பார்!” என்று கிசுகிசுத்தாள்.

“இங்கு என்ன நடந்து கொண்டிருக்கிறது? இங்கு என்ன நடந்து கொண்டிருக்கிறது?” என்று கேட்டவாறு, தனது நீலநிற அங்கி காற்றில் படபடக்க, கில்டராய் லாக்ஹார்ட், அவர்களை நோக்கி நடையை எட்டிப் போட்டு வந்து கொண்டிருந்தார். “கையெழுத்திட்டப் புகைப்படத்தை யார் கொடுக்கப் போகிறார்கள்?”

ஹாரி பேச வாயைத் திறந்தான். அதற்குள் லாக்ஹார்ட் அவனது தோளைச் சுற்றித் தன் கையைப் போட்டுக் கொண்டு, களிப்பான குரலில், “என்னவொரு சந்தர்ப்பம்! ஹாரி, நாம் மீண்டும் சந்திக்கிறோம்!” என்று அவனிடம் கூறினார்.

லாக்ஹார்ட்டின் அரவணைப்பில் மாட்டிக் கொண்டு அவமானத்தால் கொதித்துக் கொண்டிருந்த ஹாரி, மால்ஃபாய் இகழ்ச்சிப் புன்முறுவலுடன் கூட்டத்தினரை நோக்கிச் சென்று கொண்டிருந்ததைக் கண்டான்.

லாக்ஹார்ட் காலினை நோக்கி அட்டகாசமாகப் புன்னகைத்துக் கொண்டே, “வா, காலின், இன்று உனக்கு இரட்டை அதிர்ஷ்டம். நாங்கள் இரண்டு பேருமே புகைப்படத்தில் கையெழுத்திட்டுத் தருகிறோம்,” என்று கூறினார்.

காலின் தன் கேமராவுடன் தட்டுத் தடுமாறி அவர்களைப் படம் எடுத்து முடித்தபோது, மதிய வகுப்புகள் துவங்கவிருந்ததை அறிவித்தப் பள்ளி மணி அவர்களுக்குப் பின்னால் ஒலித்தது.

லாக்ஹார்ட் கூட்டத்தினரைப் பார்த்தபடி, “சரி, சரி, எல்லோரும் கிளம்புங்கள்!” என்று கூறிவிட்டு, ஹாரியோடு கோட்டையை நோக்கி நடந்தார். இன்னும் அவரது அன்புப் பிடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்த ஹாரி, தான் மாயமாக மறைவதற்கு ஒரு நல்ல மந்திரம் தனக்குத் தெரிந்திருந்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணினான்.

அவர்கள் பக்கவாட்டுக் கதவு கோட்டையினுள் நுழைந்து கொண்டிருந்தபோது, லாக்ஹார்ட், “நான் ஒன்றின் வழியாகக் உனக்கு ஒரு நல்ல அறிவுரையைக் கூறுகிறேன், கேட்டுக் கொள்,” என்று ஒரு தந்தையின் தொனியில் கூறினார். “நீ வெளியே காலினுடன் இருந்தபோது நான் உன்னைக் காப்பாற்றினேன். நீ என்னுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டால், உன் சகாக்கள், நீ விளம்பரத்திற்காக ஆலாய்ப் பறப்பதாக நினைக்க மாட்டார்கள் …”

ஹாரியின் முணுமுணுப்புகளைக் கொள்ளாமலேயே, ஒரு தாழ்வாரத்தில் வரிசையாக நின்று கொண்டு காதில் வாங்கிக் தங்களையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த மாணவர்களைக் கடந்து, மாடிப்படி வழியாக அவர் ஹாரியைத் தள்ளிக் கொண்டு சென்றார்.

“உன் வாழ்வின் இக்கட்டத்தில், கையெழுத்திட்டப் புகைப்படங்களை வினியோகிப்பது புத்திசாலித்தனமல்ல என்பதை நான் உனக்குக் கூறிக் கொள்ள விரும்புகிறேன். ஹாரி, அது உன்னைக் கொஞ்சம் தலைக்கனம் பிடித்தவனாகக் காட்டும். என் வாழ்வில் நடப்பதுபோல உன் வாழ்விலும் ஒரு கட்டம் வரும். அப்போது நீ எங்கு சென்றாலும், உன் கையெழுத்திடப்பட்டப் புகைப்படங்களைக் கற்றைக் கற்றையாக உன் கைவசம் வைத்திருப்பது நல்லது. ஆனால் _ அவர் மென்மையாகச் சிரித்தவாறே, “நீ அந்தக் கட்டத்தை அடைந்துவிட்டதாக எனக்குத் தோன்றவில்லை,” என்று கூறினார்.

அவர்கள் லாக்ஹார்ட்டின் வகுப்பறையை அடைந்துவிட்டிருந்தனர். அவர் ஒருவழியாக அவனை விடுவித்தார். வகுப்பினுள் நுழைந்து நேராகக் கடைசி வரிசையில் போய் ஹாரி தன் அங்கியை வெடுக்கென இழுத்துச் சரி செய்து கொண்டே அமர்ந்தான். அவன் அங்கு உட்கார்ந்து கொண்டதும், லாக்ஹார்ட்டை நேரில் பார்ப்பதைத் தவிர்ப்பதற்காக அவரது புத்தகங்கள் அனைத்தையும் வெளியே எடுத்துத் தன் முன்னால் குவித்து வைத்துக் கொண்டான்.

மற்ற மாணவர்கள் அரட்டையடித்தபடி வகுப்பினுள் நுழைந்தனர். ரானும் ஹெர்மயனியும் வந்து ஹாரியின் அருகில் ஆளுக்கொரு பக்கமாக அமர்ந்தனர்.

ரான் ஹாரியிடம், “உன் முகம் என்ன இப்படிக் குங்குமச் சிவப்பாய்ச் சிவந்து போயிருக்கிறது?” என்று கேட்டான். “காலினும் ஜின்னியும் ஒருவரை ஒருவர் சந்திக்காமல் இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொள். இல்லையெனில் அவர்கள் இருவரும் சேர்ந்து ‘ஹாரி பாட்டர் ரசிகர் மன்றம்’ ஒன்றைத் துவக்கிவிடுவர்.”

“நீ கொஞ்சம் வாயை மூடிக் கொண்டிருக்கிறாயா?” என்று ஹாரி எரிந்து விழுந்தான். ‘ஹாரி பாட்டர் ரசிகர் மன்றம்’ என்ற வார்த்தை மட்டும் லாக்ஹார்ட்டின் காதுகளில் விழுந்துவிட்டால் தான் தொலைந்தோம் என்று அவன் நினைத்தான்.

எல்லா மாணவர்களும் அவரவர் இருக்கையில் வந்து அமர்ந்ததும் லாக்ஹார்ட் லேசாகச் செருமினார். மொத்த வகுப்பும் மௌனமானது. அவர் சிறிது முன்னால் குனிந்து நெவிலின் முன்னே இருந்த ‘அரக்கப் பேயுடன் ஒரு பிரயாணம்’ என்ற புத்தகப் பிரதியை எடுத்துத் தூக்கிக் காட்டினார். அதில் அவரது சொந்தப் படம் கண் சிமிட்டிக் கொண்டிருந்தது.

அவர் கண்ணடித்தவாறே அதைச் சுட்டிக்காட்டி, “இது நான்தான்!” என்று கூறினார். “கில்டராய் லாக்ஹார்ட், மூன்றாம் நிலை மெர்லின் பதக்கம், தீய மந்திர சக்திகள் பாதுகாப்புச் சங்கத்தில் கௌரவ உறுப்பினர், ‘மந்திரவாதினி வாராந்திர’ப் பத்திரிகையில் தொடர்ந்து ஐந்து வாரங்களுக்குப் ‘புன்னகை மன்னன்’ பட்டம் – ஆனால் நான் அதைப் பற்றிப் பேசுவதில்லை. ஏனெனில், நான் ‘பன்ஷி மோகினிப் பிசாசை’ என் புன்னகையால் வீழ்த்தியிருக்கவில்லை.”

அவர்கள் சிரிப்பதற்காக அவர் கொஞ்சம் நிறுத்தினார். ஒருசிலர் மட்டும் ஒரு பலவீனமான புன்னகையை வீசினர்.

“நீங்கள் எல்லோரும் என்னுடைய புத்தகங்கள் அனைத்தையும் வாங்கிவிட்டிருப்பதை நான் பார்க்கிறேன். நல்லது. நாம் இன்று ஒரு சிறு வினாடி-வினாவுடன் துவக்கலாம் என்று நினைக்கிறேன். பெரிதாகக் கவலைப்பட வேண்டாம். நீங்கள் எவ்வளவு தூரம் படித்திருக்கிறீர்கள், படித்தவற்றை எவ்வளவு தூரம் உள்வாங்கி இருக்கிறீர்கள் என்பதற்கான ஒரு சிறு சோதனை அவ்வளவுதான்.”

அவர் கேள்வித்தாள்களை வினியோகித்துவிட்டு. வகுப்பின் முன்வரிசைக்குச் சென்று, “நீங்கள் இக்கேள்விகளுக்கு விடையளிக்க முப்பது நிமிடங்களை எடுத்துக் கொள்ளலாம். உங்களுடைய நோய் இப்போது துவங்குகிறது!” என்று அறிவித்தார்.

ஹாரி தன் கேள்வித்தாளைக் கையில் எடுத்துப் படித்தான்.

  1. கில்டராய் லாக்ஹார்ட்டிற்குப் பிடித்த நிறம் எது?
  2. கில்டராய் லாக்ஹார்ட்டின் ரகசிய லட்சியம் எது?
  3. கில்டராய் லாக்ஹார்ட்டின் மிகச் சிறந்த சாதனை எது என்று நீங்கள் கருதுகிறீர்கள்?

இவை போன்ற கேள்விகள் மூன்று பக்கங்களுக்கு நீண்ட கடைசியில் –

  1. கில்டராய் லாக்ஹார்ட்டின் பிறந்தநாள் எப்போது? அவருக்குக் கொடுக்கக்கூடிய பொருத்தமான பரிசு எது?

அரைமணி நேரம் கழித்து அவர் அவர்களது விடைத்தாள்களைச் சேகரித்து, அவர்களுக்கு முன்னாலேயே அவற்றைப் புரட்டிப் பார்த்தார்.

“அடடா, எனக்குப் பிடித்தமான நிறம் இளம் ஊதா என்பதை நீங்கள் எவரும் நினைவில் வைத்திருக்கவில்லை. ‘பனி அரக்கனுடன் ஒரு வருடம்’ என்ற புத்தகத்தில் அதை நான் குறிப்பிட்டுள்ளேன். உங்களில் சிலர் ‘ஓநாய்மனிதனுடன் ஒரு யாத்திரை’ புத்தகத்தை இன்னும் கவனமாகப் படிக்க வேண்டும் அப்புத்தகத்தின் பன்னிரண்டாவது அத்தியாயத்தில், மாயாஜால மக்களுக்கும் சாதாரண மக்களுக்கும் இடையே நிலவும் இணக்கம்தான் எனக்குப் பொருத்தமான பிறந்தநாள் பரிசாக இருக்க முடியும் என்று கூறியிருந்தேன் – ஆனால் ஒரு பெரிய ‘ஆக்டென் ஓல்டு ஃபயர் விஸ்கி் பாட்டில் கொடுத்தால் நான் வேண்டாம் என்று சொல்ல மாட்டேன்!”

அவர் இன்னொரு முறை போக்கிரித்தனமாகக் கண்ணடித்தார். ரான் இப்போது அவரைத் திகைப்புடன் பார்த்துக் கொண்டிருந்தான். முன்னால் உட்கார்ந்திருந்த டீனும் சீமஸும் வாயைப் பொத்திக் கொண்டு குலுங்கக் குலுங்கச் சிரித்துக் கொண்டிருந்தனர். ஆனால் ஹெர்மயனியோ லாக்ஹார்ட் பேசுவதை மெய்மறந்து கேட்டுக் கொண்டிருந்தாள். அவர் அவளது பெயரைக் குறிப்பிட்டவுடன் அவளுக்குத் தூக்கிவாரிப் போட்டது.

“…ஆனால், தீய மந்திர சக்திகளை உலகிலிருந்து ஒழித்துக் கட்ட வேண்டும், விதவிதமான தலைமுடிச் சாய மாயத் திரவங்களை நானே சொந்தமாகத் தயாரித்து விற்பனை செய்ய வேண்டும். என்பது என் ரகசிய லட்சியம் என்பதை ஹெர்மயனி கிரேஞ்சர் அறிந்திருக்கிறாள். உண்மையில் -” அவர் அவளது விடைத்தாளைப் புரட்டிப் பார்த்துவிட்டு, “முழு மதிப்பெண்கள்! ஹெர்மயனி எங்கே இருக்கிறாள்?” என்று கேட்டார்.

ஹெர்மயனி நடுங்கிக் கொண்டிருந்த தன் கையைத் தூக்கினாள். லாக்ஹார்ட், “பிரமாதம்!” என்று கூறித் தன் மொத்தப் பற்களும் தெரியச் சிரித்தார். “உண்மையிலேயே பிரமாதம்! இதற்காக கிரிஃபின்டார் அணிக்குப் பத்துப் புள்ளிகள். இப்போது நாம் நமது பாடத்திற்கு வரலாம் . . .”

அவர் தனது மேசைக்குப் பின்னால் குனிந்து, முழுவதும் துணியால் மூடப்பட்டிருந்த பெரிய கூண்டு ஒன்றை எடுத்து மேசையின்மீது வைத்தார்.

“இப்போதே நன்றாகக் கேட்டுக் கொள்ளுங்கள் – நான் உங்களைச் சரியாக எச்சரிக்கவில்லை என்று பின்னால் நீங்கள் என்னைக் குறை கூறக்கூடாது. மந்திரவாதிகளின் உலகத்திலேயே மிகவும் பயங்கரமான உயிரினங்களைக் கையாள்வதற்கு உங்களைத் தயார்படுத்துவதுதான் என்னுடைய வேலை. நீங்கள் உங்கள் வாழ்நாளிலேயே இவ்வளவு தூரம் பயந்திருக்க மாட்டீர்கள். நான் இங்கிருக்கும்வரை உங்களுக்கு எந்த ஆபத்தும் ஏற்படாது என்பதை மனத்தில் இருத்திக் கொள்ளுங்கள். நான் உங்களைக் கேட்டுக் கொள்வதெல்லாம், நீங்கள் அமைதி காக்க வேண்டும் என்பது மட்டும்தான்.”

அந்தக் கூண்டைச் சரியாகப் பார்க்க வேண்டும் என்பதற்காக ஹாரி தன்னை அறியாமலேயே தன் புத்தக மூட்டையின்மேல் சாய்ந்து முன்னால் எட்டிப் பார்த்தான். லாக்ஹார்ட் தனது ஒரு கையை அக்கூண்டின்மீது வைத்தார். தாமஸும் சீமஸும் சிரிப்பதை நிறுத்திவிட்டிருந்தனர். முன்வரிசை இருக்கையில் இருந்த நெவில் பயத்தில் நடுங்கி ஒடுங்கி உட்கார்ந்திருந்தான்.

லாக்ஹார்ட் தன் குரலைத் தாழ்த்திக் கொண்டு, “நீங்கள் கூச்சலிடக்கூடாது என்று நான் உங்களை மீண்டும் கேட்டுக் கொள்கிறன்,” என்று கூறினார். “இது உங்களை அப்படிச் செய்யத் தூண்டும்.”

மொத்த வகுப்பும் மூச்சைப் பிடித்துக் கொண்டிருக்க, அக்கூண்டை மூடியிருந்த துணியை லாக்ஹார்ட் வெடுக்கென்று உருவினார்.

“உங்கள் முன்னால் இருப்பது புதிதாகப் பிடிக்கப்பட்டக் ‘கார்னிஷ் பிக்ஸி’கள்,” என்று அவர் சற்று மிகைப்படுத்தி அறிவித்தார். சீமஸால் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியவில்லை. இகழ்ச்சித் தொக்கிக் கொண்டிருந்த சிரிப்பொன்றை அவன் உதிர்த்தான். அது பயத்தால் எழுந்த ஒன்றல்ல என்பதை லாக்ஹார்ட்டால் கண்டுகொள்ள முடிந்தது.

அவர் சீமஸை நோக்கிப் புன்னகைத்தபடி, “என்ன?” என்று கேட்டார்.

“இல்லை. இவை – இவை – பார்ப்பதற்கு ஒன்றும் அவ்வளவு அபாயகரமானவையாகத் தோன்றவில்லை, இல்லையா?” என்று அவன் திக்கித் திணறிக் கேட்டு முடித்தான்.

எரிச்சலூட்டும் விதத்தில் லாக்ஹார்ட் அவனை நோக்கித் தன் விரலை ஆட்டிக் கொண்டே, “அவசரமாக அப்படி ஒரு முடிவுக்கு வந்துவிடாதே,” என்று கூறினார். “அவை வெறுக்கத்தக்க, தந்திரமான குட்டிப் பிசாசுகளாக இருக்கக்கூடும்.”

அந்தப் பிக்ஸிகள் பிரகாசமான நீல வண்ணத்தில் இருந்தன. சுமார் எட்டு அங்குல உயரம் இருந்த அவற்றின் முகங்கள் கூராக இருந்தன. ‘கிறீச்’ என்றிருந்த அவற்றின் குரல் ஏராளமான குட்டிக் கிளிகள் தமக்குள் விவாதித்துக் கொள்வதைக் கேட்பதுபோல இருந்தது, அந்தக் கூண்டை மூடியிருந்த திரை விலக்கப்பட்டதும் அவை ராக்கெட்டுகள்போலக் கூண்டுக்குள் அங்குமிங்கும் பறந்தன, அலறின, கூண்டுக் கம்பிகளைப் பிடித்துக் குலுக்கின, தமக்கு அருகே இருந்தவர்களை நோக்கித் தமது முகங்களை அஷ்டகோணலாக்கின.

“சரி, இவற்றைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று இப்போது பார்ப்போம்!” என்று லாக்ஹார்ட் சத்தமாகக் கூறினார். பிறகு கூண்டின் கதவை அவர் திறந்துவிட்டார்.

அங்கு பெரும் அமளி துமளி ஏற்பட்டது. பிக்ஸிகள் ராக்கெட்டுகள்போல எல்லாத் திசைகளிலும் பாய்ந்தன. அவற்றில் இரண்டு நெவிலின் காதுகளைப் பிடித்து அவனை அலாக்காகத் தூக்கின. பல பிக்ஸிகள் கண்ணாடி சன்னல்கள் வழியாகப் பாய்ந்து வெளியேறியதில் பின் வரிசை முழுவதும் உடைந்த கண்ணாடிகள் சிதறின. மீதியிருந்த பிக்ஸிகள், வகுப்பில் ஒரு காண்டாமிருகம் புகுந்து அட்டகாசம் செய்தால் எவ்வளவு சேதம் விளையுமோ அதைவிட அதிகமான சேதத்தை விளைவித்தன. அவை பேனா மை பாட்டில்களைப் பிடுங்கி வகுப்பறை முழுவதும் தெளித்தன. புத்தகங்களையும் காகிதங்களையும் கிழித்தன. சுவரில் இருந்த படங்களைப் பிய்த்து எறிந்தன. குப்பைக்கூடைகளைக் கொட்டிக் கவிழ்த்தன. புத்தகங்களையும் பைகளையும் பிடுங்கி, உடைந்திருந்த சன்னல்கள் வழியாக வீசி எறிந்தன. ஒருசில நிமிடங்களுக்குள் பாதி மாணவர்கள் பெஞ்சுகளுக்கு அடியில் அடைக்கலம் புகுந்திருந்தனர். வகுப்பின் கூரையில் தொங்கவிடப்பட்டிருந்த சரவிளக்கில் நெவில் தொங்கிக் கொண்டிருந்தான்.

“வாருங்கள், வாருங்கள், அவற்றைப் பிடியுங்கள்! அவை வெறும் பிக்ஸிகள்தான்” என்று லாக்ஹார்ட் கத்திக் கொண்டிருந்தார்.

அவர் தன் சட்டைக் கைகளை மடக்கிவிட்டுக் கொண்டு, தன மந்திரக்கோலை வெளியே எடுத்து, ‘பெஸ்கிபிக்ஸி பெஸ்டர்நோமி!’ என்று முழங்கினார்.

மந்திரக்கோலைப் பிடுங்கி சன்னல் வழியாக வெளியே எறிந்தது. அதனால் எந்தப் பயனும் விளையவில்லை. ஒரு பிக்ஸி அவரது லாக்ஹார்ட் எச்சிலை விழுங்கியவாறு மேசைக்கடியில் பாய்ந்தார். அடுத்தக் கணம், கூரையில் தொங்கிக் கொண்டிருந்த சரவிளக்கு அறுந்து அவரது மேசைமேல் வந்து விழுந்தது. அதோடு சேர்ந்து விழுந்த நெவிலிடமிருந்து மயிரிழையில் அவர் தப்பினார்.

பள்ளி மணி ஒலித்தது. வெளிவாசல் கதவை நோக்கி எல்லோரும் அலறிப் புடைத்துக் கொண்டு ஓடினர். அதைத் தொடர்ந்து நிலவிய அமைதியில், லாக்ஹார்ட் தன்னைச் சுதாரித்துக் கொண்டு எழுந்து நின்றபோது, ஹாரி, ரான், ஹெர்மயனி ஆகிய மூவரும் கிட்டத்தட்ட வாசல் கதவை அடைந்திருந்ததைக் கண்டார். அவர் அவர்களைப் பார்த்து, “நீங்கள் மூவரும் மீதியிருக்கும் பிக்ஸிகளைக் கூண்டில் அடைத்துவிடுங்கள்!” என்று கூறிவிட்டு, அவர்களைக் கடந்து வேகமாகச் சென்றுவிட்டார். தான் வெளியேறியபோது வகுப்பின் வாசற்கதவைத் தன் பின்னால் சாத்திவிட்டுச் சென்றார்.

மீதியிருந்த பிக்ஸிகளில் ஒன்று ரானின் காதைப் பலமாகக் கடித்தபோது, அவன், “அவர் என்ன இப்படிச் சொல்லிவிட்டுப் போகிறார்?” என்று இரைந்தான்.

“நமக்கு நேரடி அனுபவம் கிடைக்க வேண்டும் என்று அவர் விரும்பியிருக்கலாம்,” என்று ஹெர்மயனி கூறினாள். அவள் புத்திசாலித்தனமான ‘உறைய வைக்கும் மந்திரத்தை’ உபயோகித்து ஒரே சமயத்தில் இரண்டு பிக்ஸிகளைச் செயலிழக்கச் செய்து அவற்றைக் கூண்டிற்குள் அடைத்தாள்.

தன் கையில் அகப்படாமல் தன் நாக்கை வெளியே துருத்திக் கொண்டிருந்த ஒரு பிக்ஸியைத் துரத்திக் கொண்டே, ஹாரி, “நேரடி அனுபவமா?” என்று கேட்டான். “ஹெர்மயனி, தான் என்ன செய்து கொண்டிருந்தோம் என்பது அவருக்குத் துளிகூடத் தெரியவில்லை.”

ஹெர்மயனி, “உளறாதே!” என்று கூறினாள். “அவரது புத்தகங்களை நீ படித்திருக்கிறாய் அல்லவா? அவர் செய்துள்ள அபாரமான காரியங்களைப் பார் . . .”

“அவை அனைத்தும், தான் செய்துள்ளதாக அவர் கூறிக் கொள்ளும் காரியங்களே!” என்று ரான் கூறினான்.

– தொடரும்…

– ஹாரி பாட்டரும் பாதாள அறை ரகசியங்களும், மூலம்: ஜே.கே.ரோலிங், தமிழில்: பி.எஸ்.வி.குமாரசாமி, முதற் பதிப்பு: 2013, மஞ்சுள் பப்ளிஷிங் ஹவுஸ், மும்பை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *