வெட்ட வெளி ஞானமும் வீணாகும் வாழ்க்கையும்

அங்கு வந்த போதே, கல்யாணம் குறித்த உதயாவின் அதீத கற்பனைகளெல்லாம் தரைமட்டமாகி விடும் போல் தோன்றியது.முதல் நாள் வரும் போது அல்ல அதற்கு முன் ஆனந்தன் கழுத்தில் தாலிகட்டும் போதே, அவள் மனத்திரையில் ஒரு காட்சி. பளிங்கு வானமாய் வேதாவின் முகம் ஆம் அவள் கல்யாணம் முடிந்த, போதே, ஒரு அருமையான காட்சி நாடகம் அது அவளைப் பற்றியது கல்யாணம் முடிந்த சிலதினங்களுக்குப் பிறகு ஊரெழுவிலிருந்து மாலை பாலுவோடு அவள் வீடுதிரும்பி வருகையில் அது ஒரு கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது, காரின் கதவு வழியாக களை கொண்டு காட்சிக்கு நின்ற அவள் முகம் வெறும் கற்பனையில் தோன்றியதல்ல நிதர்ஸனமான உண்மை ஆம் அவள் செதுக்கி வார்த்த தங்கச்சிலை போல மெய்மறந்து சிரித்தவாறே, ஒளிரும் அவள் முகத்தைக் காண்கையில் உதயா நினைத்தாள் நானும் ஒரு நாளைக்கு இப்படித் தான் தங்கத் தேரேறி உலா வருவேனே.
ஓ! அது நடக்காமல் போய் அடி சறுக்கியது யார் குற்றம்? கடவுள் கொடுத்த வரமா? அன்றி காட்சி பிழையா? யாரை நோவது? அவளுக்குப் புரியவில்லை அன்பு நெறி கொண்ட அழகான வாழ்க்கைக்கே தவம் செய்தாலொழிய அது நடக்காது.
இங்கு இவளுடைய வாழ்க்கையில், அது பூஜ்யம் தான் அங்கு வந்த முதல் நாளே, ஒருயுத்த பூமியாகவே அவர்கள் வீட்டை அவள் எதிர்கொள்ள நேர்ந்தது.
அவன் காலடி மண்ணும் கசந்தது. காரணம் அன்பு நெறி தவறிய அவன் நடத்தைக் கோளாறு தலையெடுத்த முதல் தருணம்.
கல்யாணாமான புதிதில் அவன் கொண்டு வந்த முதற் சம்பளத்துடனேயே தொடங்கிய போர் அவனுக்கு அப்போது சிறிய வேலை தான் ஒரு சாதாரண எழுதுவினைஞனே அவன் அதாவது கிளார்க் வேலை வேலைசெய்வதென்னவோ மாவட்ட நீதி மன்றத்தில். நீதிக்கும் அவனுக்கும் வெகு தூரம் . ஆரம்பத்திலேயேஅவனை பற்றி அவள் அறிய நேர்ந்த கசப்பான உண்மை , விலங்கு பூட்டியபின் வாழ்ந்து சாவதை விட வேறு வழியில்லை. அவள் அப்படித் தான் செத்தாள்.
கல்யாணமான மறுநாளே அப்படியொரு மரணம் தான் நேர்ந்தது. இப்படி உணர்வுக் கொலைசெய்வதற்கே, அந்த குடும்ப வாழ்க்கையில், அவனைப் பழக்கி வைத்திருந்தார்கள் அதி;ல் முதல் ஆளாய் அவன் ஐயா இருக்க நேர்ந்தது, அவள் கொண்டு வந்த வினைக் கூற்றின் உச்ச கட்ட நிகழ்வு.
அவளுக்கு நல்ல ஞாபகம்.
அவன் முதல் சம்பளம் கல்யாணத்திற்குப் எடுத்துக் பின் கொண்டு வருகையில் நேர்ந்த பூகம்பம் அடித்த புயல் இன்னும் ஓயாமல், அவள் நிலை குத்தி, சுவரோடு சாய்ந்திருக்க, கண்ணீர் தாரை தாரையாக வழிந்தது . அவன் இழுத்த இழுவையில் கை வேறு வலித்தது.
அவன் எதை இழுத்தான் எல்லாம் அந்த மாத சம்பளத்தைத் தான். முதலில் அவள் கைக்கு வந்து சேர்ந்த சம்பளம் , தகப்பன் தகராறு செய்ததால், இழுத்துப் பிடுங்க வேண்டிய நிலைமை. ஏதோ அவள் தர மறுப்பது போல அவன் பாசாங்கு பண்ணிக் கொண்டு ருத்ர தாண்டவம் ஆடிய போது, இது தொடருமென்று அவளுக்குப் பட்டது, அவள் நினைத்து வந்தது என்னவோ வேதா போல் பூ மேடை விரித்து நடக்க வேண்டுமென்று, நினைத்து வந்தற்கு மாறாக பட்ட மரமாய் பட்டுப் போகவே தனக்கு இப்படியொரு கை விலங்கும் கால்கட்டும் நேர்ந்தது என்று மிகவும் கவலையுடன் நினைவு கூர்ந்தாள் அதைக் கவனித்து விட்டு,, எரிச்சலோடு அவன் கேட்டான்
என்ன அழுது வடிகிறாய்? உனக்கு என் காசு தான் வேணுமெண்டு நினைச்சாயல்லே, முதலிலை அதை ஐயாவுக்குத் தான் கொடுத்திருக்க வேணும் அவருக்குத் தான் காசு தேவை நிறைய இருக்கு பெரிய குடும்பம் என்று உனக்குத் தான் தெரியாதே?
இப்ப என்ன சொல்ல வாறியள்? காசை நான் கேட்டேனா?
பட்டும் பொன்னும் கூட எனக்கு வேண்டாம். நீங்களாய் கொண்டு வந்ததற்கு நானா பொறுப்பு?
அத்தோடு கதை முடிந்தது, உலகமே ஒரு கனவாகபட்டது. வேதத்தை இங்கு நம்பினது பூதம் கிளம்பத்தான் இனி அதற்கு என்ன செய்ய முடியும் ? அங்கு இருக்கிற ஒவ்வொரு கணமும் நரகமாகவே பட்டது. ஆனந்தனுக்கே அவள் பரம எதிரிமாதிரி இதுஒருதொடர் சங்கிலி போல் நீண்டது அவளைச் சுற்றி, ஒரு பெரிய நிழல், உலகம் .நிஜமென்பது என்ன?எதிலும் அடி, சறுக்காமல், அன்பு வழிபாடு செய்தால், அதுவே நிஜம் கடவுளின் இருப்பு மாறாக அதைபுரிந்து கொள்ளாம,ல் இரை விழுங்கும் மனிதர்கல் அனைவருமே நிஜத்தின் ஒளி சொரூபங்களல்லர் . அவர்கள் போட்டிருக்கும் மனிதர்க்கான மூடி, கருமுகில் நிழல், போல வந்து கழுத்தறுப்பதாய் அவளுக்குத் தோன்றியது. விலங்கு பூட்டிய பின் அறுத்துக் கொண்டு விட்டு ஓடவா முடியும் ? அதுவும் அந்தக் காலம்.
ஒரு யோக புருஷனைக் காதலிக்கப் போய் அதுநடவாமல், எல்லாம் சகதி குளித்து சரிந்து கிடக்கிறது. அப்பாவிடம், இதை எடுத்துரைக்க போனால் புதுவேத சாஸ்திரம் தான் சொல்வார். மண்டை தான் பிளக்கும்.
இதுவே முதல் அடி. எப்படி துரத்தி துரத்தி, அடித்தாலும், மனம் கேட்க மாட்டேன், என்கிறது மீண்டும் மீண்டும் அவன் காலடி சரணம் தான், தொடர்கதையாய் தொடர்ந்து ,அவளைப் படுகுழியில் தள்ளியது.இதற்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டுமென்று, நினைப்பதே பாவம், கற்பு நெறி போதித்து , சமூகம் அவளைஅப்படி வளர்த்து விட்டிருக்கிறது.
இந்த வளர்ச்சியில் துருப் பிடித்த நிழற் பொம்மை போலவே அவளும் ஆக நேர்ந்தது.அவன் வழியில் போனால், வேறு எப்படி நடக்கும்?எப்படி வேர் அறுந்து விழுந்து கிடந்தாலும் எழுந்திருந்து குலை போடவே விதி வகுத்த பாதை அவளுக்கு இரண்டாவது பையன் வயிற்றில் வந்து, தங்கிய போது, நேர்ந்த கொடூரம். அந்த நிலையிலும், காடு வெறித்த மண் தான் அவளுக்கு.
ஆம் அவர்கள் வீட்டில் அன்பு கோவலோச்சும் தெய்வ சாந்நித்ய இருப்பையே காண, முடியாமல், அழுது வடியும் அதன் முகம் அதற்கேற்பவே அங்கு வாழ்பவர்களும் மிருக சுபாவம் கொண்டு உலாவுவதாய் பட்டது. ஆனந்தனுக்கு யாழ்ப்பாண டவுனிலேயே வேலை என்பதால்,, கல்யாணமான நாள் தொடக்கம் அவளும் அங்கேயே, கூடு கட்டி வாழ்ந்தாள்> வேறு என்னத்தை சொல்ல.
ஒரு நடுத்தரக் குடும்பத்தில் பிறந்து, கஷ்டம் தெரியாமல், வளர்ந்த அவளுக்கு இப்படியொரு நிலைமை. வயிற்றில் சுமை ஏறி விட்டதால், எந்நேரமும் பாய் விரித்து, படுக்கதான் மனம், வந்தது படுப்பதற்கு சுத்தமான, இடம் கூட இல்லை
சிறிய வீடு தான் எனினும் மக்கள் தொகை கூடியதால் வீடே நரகமாக இருந்தது கொஞ்சம் கால் நீட்டி, படுக்கலாமென்று போனால், சாமியறைதான் கிடைத்டது அதுவும் குப்பைகூளமாய், , தலைக்கு மேலே தொங்கும் உடுப்பு வகையறாக்களைப் பார்க்கவே, வயிற்றைக் குமட்டியது எனினும் அவள் அந்தக் குப்பைக் காட்டினுள் இருள் வெறித்துக் கிடந்தாள். அம்மா முகத்தை பார்த்தால், தான் இந்த கருந்தீட்டு விடியும் கடவுளையே கண்ட மாதிரி இருக்கும்.
கடவுள் எங்கே இருக்கிறார் ? ஒவ்வொரு அசைவிலும் ஏன் உயிரிலும் கூட அவர் சுத்த வெளியைக் காண முடியுமே. மனம் வைத்தால்.
அம்மா வீட்டிலே அதைக் கண்டதாக்,, அவள் திடீரென்று நினைவு கூர்ந்தாள் அங்கே போனால், தான் இந்த இருள் கனத்த யுகம் மாறும் அவள் ஓர் உல்லாச தேவதையார் பட்டுச் சிறகை விரித்து வானில் பறக்கவும் இப்போது சிறகு முறிந்து விழுந்த கதை தான் அவளை உயிருடன் சமாதி வைக்கவா, அவளுக்கு இந்தக் கல்யாணம் காட்சி நாடகமெல்லாம் உணர்ச்சிகள் மரத்து பிள்ளை குட்டி பெற்றுப் போட மட்டும் ஒரு கருவியாகவே அவனுக்கு அவள் இருந்தாள்,
இந்த இருட்டில் அம்மா முகத்தையும் அன்பு வழிபாட்டினையும் எங்கே, என்று தேடுவது? இவர்கள் குறிப்பாக ஆனந்தன் ஐயாஇதற்கெல்லாம் இவளை அங்கு போக விடுவார்களா?
முயன்றுதான் பார்ப்போமே. நாளைக்கு ஆனந்தனுக்கு கொழும்பில் ஓர் இண்டவீயூவாம் அதற்குப் போனால் அவனுக்குப் பதவி உயருமாம், அப்படி உயர்ந்து என்ன ஆகப் போகிறது?தன் னை தீக் குளிக்க வைக்கவே இதெல்லாம், நடப்பதாய் தோன்றியது. எனினும் ஒரு நப்பாசை. விடியலைக் காண, சூரிய நமஸ்காரம் அவளுக்குக் கடவுளே அருளிய வரம் இதுஅந்த குறிக்கோளுடன் அன்று மாலை அவள் அவனை நெருங்கி வரும் போது , அவன் சப்பாத்துக்கு பாலிஷ் போட்டுக் கொண்டிருந்தான் . பெரிய கனவான் நினைப்பு அவனுக்கு அதில் அவள் காலடி தூசு மாதிரி. இருந்தாலும் அவள் பயப்படவில்லை. நேர் கொண்ட பார்வையோடு அவனை நெருங்கி வந்து கேட்டாள்.
நீங்கள் கொழும்புக்கு போய் வர, ஒரு கிழமையாவது பிடிக்கும்.நீங்கள் வரும் வரை நான் உடுவிலில் போய் இருந்திட்டு வாறனே. என்ன சொல்லுறியள்.
அங்கை எதுக்கு ? கொம்மாவிட்டைசதியாலோசனை? கேட்கப் போறியே?
அவளுக்கு இதைக் கேட்டு, சர்வ நாடியும் பதறியது. நான் எங்கை வந்துநிக்கிறன். ? இவர் சொன்னதைக் கேட்டு மனம் ரணகளமாய் கொதிக்குது, இவர்களுக்கெல்லாம் என்ன நினைப்பு? அம்மா கூடாது . பெரிய சூனியக்காரி. இதெல்லாம் ஐயா வாய் மொழி மந்திரம் சரியான குடிகாரன், இந்த வீட்டில் எந்த நேரமும் நர வேட்டை. ஆடு கோழி சாப்பிட்டால், இதுகளுக்குப் பசி அடங்கும் ஆனால் எனக்கு அப்படியல்ல தெய்வப் பிறவி, ஒருநாள் வீட்டிலே இவர்கள் இறைச்சிதின்ன, கோழி வெட்டியபோது என்னையறியாமலே, கண்ணீர் விட்டவள் நான் , அது தான் இரண்டு பேருக்கும் ஒட்டேலை,
நாளைக்கு இவர் போன பிற்பாடு, இந்த தர்மயுத்தத்தைத் தொடங்குவம்
அதை ஒரு சங்கற்ப சாந்தி வேள்வியாகவே தன்னுள் பிரகனப்படுத்திக் கொண்டு காத்திருக்கிறாள்.
அன்று மாலையே, அவன் கொழும்புக்குப் புறப்பட்டு போன, பிறகுஅவள் ஐயாவை நெருங்கி வந்து கேட்டாள். அவர் அப்போது முற்றத்து மர நிழல், சாய்மணை போட்டு படுத்திருந்தார். அவள் மாமா, என்று அழைத்ததும் கண்களைத் திறந்து அவர் நிமிர்ந்து பார்த்த போது சுயாதீனமாக கேட்டாள்,
மாமா இவர் ஒருகிழைக்கு இல்லையே அவர் வரும் வரைக்கும் நான் உடுவிலில் போய் இருந்திட்டு வரட்டே?
அவருக்கு, அதைக் கேட்டதும் பொல்லாத கோபம் வந்து விட்டது. தனது சினத்தை வெளிக்காட்டுவது ஒற்றை வரியில் சொன்னார்.
உனக்கு அங்கை அலுவலில்லை.
அதை அவர்சொன்னபோதுஅவள் அவரின் சிவப்பேறிக் கிடக்கும் கண்களையே, சோகமாகப் பார்த்துக் கொண்டிருந்தாள் சதா சாராயம் குடித்தே சீரழிந்து போகிற, இவரின் சித்த விகாரத்துக்கு முன்னால், தர்மத்தையே, வேதவாக்காக நான் எதைச் சொன்னாலும் அன்றிக் கேட்டாலும் எல்லாம் வீண் விரயம் தான் இவர் என்ரை நியாயமான ஆசையைக் கூட பெரிது படுத்தாத நிலையில் ஒரேயொரு வழி, தான் இருக்கு கண் விழிச்சு நாளைக்கு பொழுது விடியட்டும் என்ரை உண்ணாவிரத போராட்டத்தைத் தொடங்குவம்,
மறுநாள்காலை அது அரங்கேறிய போது ஐயா உட்பட அனைவரும் விழித்தே இருந்தனர், அவள் ஒரு வாய் தேனீர் கூட பருகவில்லை. வயிற்றில் குழந்தை வேறு, அதற்காகவாவது இரங்க வேண்டாமா இவர்கள்?அவள் அன்று முழுக்க பட்டினி கிடந்தே, செத்து மடிந்தாள் எனினும் ஐயாவின் வாய் மொழி மந்திரம் அதுவாகவே இருந்தது உனக்கு அங்கை அலுவலில்லை, இதென்ன பகிடிக் கதை?ஆன் எங்கை வந்து நிக்கிறன்?கண்ணை மறைக்கிறது பூதம் தான் என்றுஅவள் மனப்பூர்வமாக நம்பினாள்> பூதம் விழுங்கினால், பிறகென்ன? புரையோடின மனம் அது இருட்டு அவலம் சாந்தியைக் குழப்புகிற, மன விகாரம் ஆனால், எனக்கு? இவர்கள் முன் நான் ஆர்? வெட்டவெளி ஞானம் வந்து விட்டால், எல்லாம் ஒன்றுதான் வாழ்க்கை வீணாகிப் போனால், எனக்கு ஒன்றுமில்லைஎன்று அவனுக்குப் படுவதுபோல அவள் கொஞ்ச்ம் உரத்தே சொல்லும் போது , அவன் அதைக் கேட்கப் பொறுக்காமல், அவன் காதைப் பொத்திக் கொண்டு, அங்கிருந்து கிளம்பும் போது அவன் விட்டுச் சென்ற அந்த வெட்ட வெளி உலகமே அவள் கண்களுக்கு உவப்பான காட்சியாய் கருத்தில் நிறைந்து கரு மூலம் கொண்டது அதுவே கடவுள் என்ற நம்பிக்கையுடன் அவள் தன் மெளன விரதத்திற்கு, ஒரு சாட்சி தேவதையாய் அங்கேயே நிலைத்திருந்தாள் அந்தப் பட்டினிப் பொழுதும் சுகமாகவே கழிந்தது.
![]() |
என் எழுத்துயுகத்தின் இனியதொரு விடிவு. இருள் கனத்த நீண்ட என் எழுத்து யுகம் தாண்டி இது எனக்கு ஒரு மறு மலர்ச்சிக் காலம். இலை மறை காயாக அதில் வாழ்ந்த காலம் போய், இத்தளத்திற்கு வந்த பிறகு பல நூறு அல்ல அதிலும் கூடுதலான வாசகர்களை பெற்று, புறம் தள்ளப்பட்ட என் கதைகள்அமோக வரவேற்புப் பெற்று, கொடி கட்டிப் பறக்க நேர்ந்த பெரும் பேற்றினை, ஒரு கடவுள் வரமாகவே நான்…மேலும் படிக்க... |