வினாவும் விஷமும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: ஆன்மிகக் கதை
கதைப்பதிவு: December 13, 2025
பார்வையிட்டோர்: 161 
 
 

(1962ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

சர்ப்பங்களைபோல வினாவுள்ளவர்களாக இருக்க வேண்டும் என்றார் கிறிஸ்து பெருமான். வினா என்றால் விவேகம். பாம்பு மிகவும் விவேகமுள்ள பிராணி.

1. மனிதனைக் கண்டவுடன், அவன் தன்னைக் கெடுதி செய்ய வருகிறானென்றெண்ணி சர்ப் பம் ஓடும். அப்படியே நாமும் சாத்தானின் கெட்ட சோதனைக்கு விலகி ஓட வேண்டும்.
2. தனக்கு தீங்கு வருகின்ற தென்று கண்டால் சர்ப்பம் மிக விரைந்து ஓடும். அவ்வாறே நாமும் தீவினைக்குத் தீவிரித்து ஓட வேண்டும்.
3. மற்ற எந்தப் பிராணியும் கண்டுபிடிக்காத பாதையைப் பாம்பு கண்டுபிடித்துவிடும். அவ்விதமே, சோதனைகளுக்குத் தப்ப கிறிஸ்து பெருமான் நமக்குப் புதுப்புது பாதைகளைக் காட்டி வருவார்.
4. பாம்பின் கண் மிகக் கூர்மையானது. விழிப்பு மிக்கது; அவ்வண்ண்மே, பிசாசின் போக்கி லிருந்து விலக நாமும் விழிப்பாயிருகக வேண்டும்.
5. சர்ப்பம் தன் தலையில் அடி விழாதபடி சர்வ ஜாக்கிரதையாய் இருக்கும். அதுபோன்றே நாமும் கெட்ட நூற்களைப் படித்தும், கெட்ட எண்ணங்களைச் சிந்தித்தும், தீமையான காரி யங்களைத் தலையில் போட்டுக் கொள்ளாது ஜாக்கிரதையாய் இருக்கவேண்டும்.

படைக்கப்பட்ட அனைத்து வனப்பிராணிகளிலும் சர்ப்பம் தந்திரமுள்ளது. எனவே சர்ப்பத்தைப்போல் வினாவுள்ளவர்களாக இருக்கவேண்டும் என்று சொன்ன கிறிஸ்து பெருமான் ‘சர்ப்பத்தைப்போலிருக்க வேண்டாம்’ என்றும் சொல்லியிருக்கமாட்டாரா?

நிச்சயம் சொல்லி இருப்பார். அது இங்கே விடப் பட்டிருக்கிறது.

விடப்பட்டிருக்கிறதென்று சொல்ல என்ன ஆதாரமிருக்கிறது?

“இயேசு சொன்ன அநேகக் காரியங்களுண்டு; அவைகளையெல்லாம் எழுதினால் எழுதப்படும் புத்தகங் கள் உலகம் கொள்ளாது” [யோவான் 21:25] மேலும், “வாங்குகிறதைப் பார்க்கிலும் கொடுக்கிறதே பாக் கியம்” (அப் 21:35) என்று கர்த்தராகிய இயேசு சொன்ன வார்த்தைகளை நினைக்கவேண்டும் என்றார் பவுல், இந்த வசனம் சுவிசேஷங்களில் சொல்லப்பட வேயில்லை. இதைப் போலவே, “சர்ப்பத்தைப்போலிருக் கவும வேண்டாம்” என்ற வாக்கியம் விடப்பட்டிருக் கிறது என்று கருத இடமுண்டு. ஆகவே, சர்ப்பத்தைப் போலிருக்க வேண்டாம். ஏன்?

1 சர்ப்பம் புழுதியைத் தின்கிறது. (ஏசாயா, 65:25) ஆவிக்குரிய பிரகாரம் இது இழிவான ஆதாயத் தைக் குறிக்கும் (லஞ்சம்).

2 சர்ப்பம் வஞ்சனையுள்ளது. ‘வஞ்சனை செய்வா ரோடு இணங்கவேண்டாம்’ என்பது நீதிமொழி. வஞ்சகம் என்றால் உபாயம். என்ற பொருளும் உண்டு “உப்பிருந்த பாண்டமும் உபாயம் இருந்த நெஞ்சும் தட்டி உடையாமல் தானாகவே உடையும் என்றார் பெரியார் ஒருவர்.

3 பாம்பு தன் சட்டையைக் கழற்றும். நாமும் ஒரு பாவத்தைக் கழற்றி விட்டுப் பிறிதோர் பாவத்தில் சிக்கலாகாது.

4 பாம்பு விஷ ஜந்து. “சர்ப்பத்தின் விஷம் அவர்களி லிருசகிறது” நம் நாக்கும் விஷமாகி விடக்கூடாது” [சங்கீதம் 58:4]

“கர்த்தாவே என் வாய்க்குக் காவல் வையும்”. [சங்கீதம் 141:3]

5 பாம்பு, சட்டையைக் கழற்றும், விஷப்பை யைக் கழற்றாது. வெளியரங்கமான பாவத்தைச் செய்யாது, உள்ளுக்குள் பாவத்தைப் பேணி வைத்துக்கொள்ளுதல் கூடாது. பாவ ஆசையே இருக்கக்கூடாது.

6 பாம்பு சினந்து சீறும். நாம் பிறருடன் அன்பாகப் பேசி எப்பொழுதும் சந்தோஷமாயிருக்கப் பழக வேண்டும். சினம் காக்கவேண்டும்.

7 செவிட்டு வீரியன் பாம்பு என்றார் தாவீது பக்தன். [சங்கீதம் 58:5]

நாமும் காதை அடைத்துக்கொண்டு இதயத்தைக் கடினப்படுத்தலாகாது.

8 வாசனைத் திரவியங்களின், வாசனையைப் பின் பற்றிச் செல்லுமாம் பாம்பு. நாமும் உலகத்தின் சிற்றின்பங்களில் ஆசை வைக்கலாகாது.

9 பாம்பிற்குப் பாட்டு என்றால் நிரம்பப் பிரியம். சிற்றின்பப் பாட்டுகளில் நாட்டம் செலுத்துதல் கூடாது.

10 பாம்புகள் இரண்டு, மூன்று சேர்ந்து ஒருக்காலும் போகாது.

”சர்ப்பம் விஷமுள்ளது; சர்ப்பத்தைப்போலிருக்கலாகாது.” [சங்கீதம் 58:4]

”சர்ப்பங்களைப்போல் வினாவுள்ளவர்களாயிருக்க வேண்டும்;” [மத்தேயு 10:16]

– குருமாணிக்கம் உவமைக் கதைகள் 101, முதற்பதிப்பு: ஏப்ரல் 1962, ஜெயா நிலையம், பாளையங்கோட்டை.

ஆர்.எஸ்.ஜேக்கப் பள்ளி ஆசிரியர், எழுத்தாளர், பத்திரிகை ஆசிரியர், பதிப்பாளர், சமூகசேவகர் எனப் பல திறக்குகளில் முத்திரை பதித்தவர் ஆர்.எஸ். ஜேக்கப். தூத்துக்குடியை அடுத்த ராஜாவின்கோவில் கிராமத்தில், நவம்பர் 19, 1926 அன்று, சந்தோஷம் நாடார், பொன்னம்மாள் இணையருக்கு மகனாகப் பிறந்தார். உடன்பிறந்தவர்கள் 11 பேர். தந்தை விவசாயி, பருத்தி வணிகமும் செய்தார். வணிகத்தின் பொருட்டு ஒவ்வொரு முறை வெளியூர் சென்று திரும்பும்போதும் தின்பண்டங்களோடு கூடவே நல்ல நூல்களையும் வாங்கிவருவார். தன் குழந்தைகளை…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *