வாழ்க்கையெனும் ஓடம்…வழங்குகின்ற பாடம்!

0
கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: November 9, 2024
பார்வையிட்டோர்: 3,740 
 
 

திடீரென்று ஒன்றும் பாங்க் பாலன்ஸ் காலியாகிவிடாது. நம் ஊதாரித்தனமும், ஒழுங்கற்ற திட்டமும்தான் நம்மைத் திகைப்பில் ஆழ்த்தி திண்டாட வைத்துவிடுகின்றன!.

அன்றும் அப்படித்தான் காலையில் செல்லைத் துருவி துருவிப் பார்த்து பாங்க் பாலன்ஸை ஆராய்ந்து அயர்ந்து போனான் காளியப்பன். பாலன்ஸ் காலி. பாலன்ஸ் இல்லாவிட்டால் நிற்க முடியாதுதானே?!. ‘ஜீபேயில் பாலன்ஸ் பார்க்கையில் ‘ரிவார்டில்’ மின்னியது ஒரு புளு ஸ்டார்.

அடடே இதைப் பார்க்காமல் விட்டுட்டோமே என்று பசியில் துடிப்பவன் இலையை வழித்துத் தின்பதுபோல் புளூ ஸ்டாரைச் சுரண்ட சில செகண்டுகளில் சுத்தமாய் கழுவித் தின்ற இலையாய் வெள்ளை நிறத்துக்கு மாறி வேதாந்தமாய் ஒரு வார்த்தையை உபதேசித்தது அது! .”பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்!’ எரிச்சல் பற்றிக் கொண்டு வந்தாலும் ஒவ்வொரு தடவையும் ஒரு ரிவார்டு தர அவனென்ன தர்ம கர்த்தாவா?!என்று புரிந்தது.

இதுவொன்றும் துரதிர்ஷ்டமில்லை…! அதிர்ஷ்டம்தான் பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம். அடுத்த முறை அடிக்கும் அதிர்ஷ்டமாவது இதைவிட நல்ல அதிர்ஷ்டமாக இருக்கட்டும் என்று தேற்றிக் கொண்டான்.

இப்படித்தான் கீதை உபதேசிக்க கிருஷ்ணன்தான் வரவேண்டும் என்றில்லை ‘வாழ்க்கை’ நமக்கு அனுதினம் பாடத்தை நமக்கு ஒவொரு கணத்திலும் வழங்குகிறது ஆனால், நாம்தான் கிருஷ்ணன் உபதேசிப்பதாய் கீர்த்தியை வேறு ஒருத்தருக்கு வினியோகம் செய்கிறோம்.

‘வாழ்க்கையெனும் ஓடம் வழங்குகின்ற பாடம்
மானிடரின் மனதினிலே மறக்கவொண்ணா வேதம்!’

எனும் கொடிமுடி கோகிலம் பாடிய கலைஞரின் பாடல் வரிகள் கலியுக வேதமல்லவா?!

ஓரு வேலையைச் செய்ய ஒரு ஆளை நியமிக்கிறோம்…! அவன் ஏமாற்றுகிறான் என்று கண்டறிய சில நாட்கள் ஆகின்றன. மாற்று ஆளும் அதே பாடத்தைதான் நமக்குக் கற்பிக்கிறான். பாடங்களால் நாம் படிப்பது என்ன? ஒன்றுமில்லை!

கடமையைச் செய்! பலனை எதிர்பாராதே?!. என்கிறது கீதை! கடமையை நாம் செய்கிறோம்!. ஆனால், நம்மிடம் வருபவனெல்லாம் கடனே என்றுதானே வேலையைச் செய்கிறான்?!. மாற்று ஆளை நியமிக்கையில் மனம் சொல்கிறது ஜீபே கற்றுத்தந்த கீதையாய்… ‘பெட்டர் லக் நெக்ஸ்ட்டைம்’!……

காத்திருக்கிறோம் கண்களில் கனவுகளோடு!

ஆனால், ஒருமுறைகூட உறைக்க மாட்டேன் என்கிறது ‘டைம் அண்டு டைடு வெயிட்பார் நன்’னுகறது!

வளர்கவி இயற்பெயர்: வே.ராதாகிருஷ்ணன் புனைபெயர்: வளர்கவி கோவை பிறந்த ஊர்: ஸ்ரீவில்லிபுத்தூர். வாழ்விடம்: கோவை. கல்வித்தகுதி: எம்.ஏ (வரலாறு)எம்ஏ (தமிழ்) எம்ஃபில் தமிழ்(ஈரோடு தமிழன்பன் கவிதைகளில்). குருநாதர்: தடாகம் இளமுருகு தமிழாசிரியர். பணி: பட்டதாரி ஆசிரியர் மணி மே.நி.ப கோவை - 23 ஆண்டுகள். பகுதிநேர அறிவிப்பாளர்: ஆல் இண்டியா ரேடியோ கோவை - 18 ஆண்டுகள் ஞானவாணி கோவை - 4 ஆண்டுகள். வெளியிட்ட நால்கள் - 3 1.…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *