வால்மீகி ராமாயணச் சுருக்கம்





(1900ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
யுத்த காண்டம்-2 | உத்தர காண்டம்
55. இராவணாதியரின் ஜனனம்
இராக்ஷசர்களை வதம்செய்து இராமர் இராஜ்யத்தை அடைந்தபிறகு அவரை ஆசீர்வதிக்க எல்லா முனிவர் வர்களும் வந்தார்கள். முனிசிரேஷ்டரான அகத்தியர் “நாங்கள் ரிஷிகள் வந்திருக்கிறோம் என்று தாசரதிக்குத் தெரியப்படுத்தவும்’ என்று காவலாளருக்குச் சொன்னார். இளஞ்சூரியனுக்குச் சமமான பிரகாசமுள்ள முனிகள் வந்தார்களென்று கேள்விப்பட்டு இராமர் அவர்களை வரச்சொல்லென்று பதில் உரைத்தார். அம்முனிவர் வந்த தும் அவர் எழுந்திருந்து, கைகூப்பிக்கொண்டு பாத்யார்க் காதிகளால் மரியாதை செய்த பின்னர் வணக்கத்துடன் அபிவாதனஞ் செய்து முனிகளை ஆசனங்களில் உட்காரச் சொன்னார். அந்த ரிஷிசிரேஷ்டர்கள் இராமரால் குசலம் விசாரிக்கப்பட்ட பின்னர் சொல்லலுற்றார்கள்… மஹா பாஹுவே, ரகுநந்தனரே! நாங்கள் எல்லோரும் க்ஷேம மாய் இருக்கின்றோம். சத்துருக்களைக் கொன்ற தாங்கள் சௌக்கியமாய் இருப்பதைப் பார்க்கின்றோம். தெய்வா தீனத்தினால் இராவணன் கொல்லப்பட்டான். தெய்வா தீனத்தினால் சீதையுடனும், தங்களிடம் ஹிதமுள்ள தம்பி இலக்ஷ்மணரோடும், மாதாக்களுடனும், ப்ராதாக் களுடனும் ஐயம்பெற்ற தங்களைப் பார்க்கின்றோம். இராக்ஷசேந்திரனோடு வந்துவயுத்தம் செய்து தாங்கள் ஐயம்பெற்றிருக்கின்றீர்கள். ஆனால் இராவணனுடைய தோல்வியைப் பெரிதாக எண்ணவில்லை; த்வந்துவ யுத்தம் செய்யப்பட்டு இராவணி கொல்லப்பட்டானே! பகைவர் களையடக்குபவனே! வீரனே! எங்களுக்கு மங்களகர மான அபயம் கொடுத்துத் தாங்கள் ஐயத்துடன் வளர் கின்றீர்கள்.” பிரம்மம் அறிந்த அந்த ரிஷிகளுடைய பேச்சைக் கேட்டு, ஆச்சரியம் கொண்டு இராமர் கூப்பின கையராய்ச் சொல்லலுற்றார். “தேவரீர்கள் மஹா வீரர் களான கும்பகர்ணனையும், இராவணனையும் விட்டு இரா வணியை ஏன் புகழ்கின்றீர்கள்.அவன் பிரபாவம்,பலம், பராக்கிரமம், எப்படி? யாதுகாரணத்தினால் இராவண் னுக்கு அவன் மேலானவன்? இது விஷயம் இரகசியம் இல் லாவிடின் நான் அறிய விரும்புகிறேன். சொல்லுங்கள்.
இராகவருடைய சொல்லைக்கேட்டு அதிதேஜசை அகத்தியர் இராமருக்குச் சொல்லலானார், “இராமா! எந்தத் தேஜோ பலத்தினால் பகைவர்களைக் கொன்றானோ, எதனால் அவன் பகைவர்களால் கொல்லப் படமுடியாதவனாக யிருந்தானோ, அதையும் இராவண் னுடைய குலத்தையும், பிறப்பையும், வரங்கள் பெற்ற தையும் சொல்லுகின்றேன். கேளுங்கள். பூர்வம் கிரதயுகத் சமானமானவர், புலஸ்தியர் எனப்பட்டவர் ஒருவர் இருந் தில் பிரம்மாவின் புத்திரர் பிரம்மரிஷி பிரம்மாவுக்குச் தார். அவர். தர்மத்தை அனுசரித்து மகாகிரியான மேரு வின் பக்கத்திலுள்ள திருணபிந்தாசிரமத்தை யடைந்து இந்திரயங்களையடக்கி தபசுசெய்தார். அப்பொழுது தப சினால் பிரகாசித்துக் கொண்டிருந்த திருணபிந்து என்ற ராஜரிஷி தன் பெண்ணை அழைத்துக் கொண்டு சென்று புலஸ்தியரிடம் சொன்னார். ”பகவானே! சர்வ குணங்களால் பூஷிக்கப்பட்ட என் குமாரியை பிக்ஷையாக அங்கீ கரித்துக் கொள்ளுங்கள். தபசு செய்வதில் முனைந்திருக் கும் உங்களுக்குச் சிரமப்பட்டிருக்கும்போது இடைவிடாமல் சுசுரூஷை செய்வாள் என்பதில் சந்தேகமில்லை.” இதைக்கேட்டு கன்னியை அங்கீகரிக்க ஆசைகொண்டவராய் “நல்லது” என்று அந்தப் பிராமணர் ராஜரிஷிக்குப் பதிலுரைத்தார். பெண்ணை விதிப்பிரகாரம் கொடுத்து விட்டுத் தமது ஆசிரமபதம் சென்றார் ராஜரிஷி; அவளும் புருஷனைத் தன் குணங்களால் சந்தோஷித்துக்கொண்டு வசித்தாள். சுவல்ப காலத்தில் ஒரு மகனைப் பெற்றாள்; அவன் விஸ்ரவசு என்னும் பெயருடன் தகப்பனாரைப் போல் தபசில் முனைந்திருந்தான்.

இந்த விருத்தாந்தத்தை அறிந்த பரத்வாஜ மகாமுனி தன் பெண் தேவவர்ணினியை அவருக்குப் பார்யையாக்கக் கொடுத்தார். அவள், வீர்யமுள்ளவனும், அதிக அற்புத மானவும், எல்லா பிரம்ம குணங்களுள்ளவனுமான புத்திரனைப்பெற்றாள். இதனால் பிதாமஹர் பேரானந்தம் அடைந்தார். குழந்தையின் சிரேயஸ்கரமான புத்தியைப் பார்த்து அவன் தனாத்தியக்ஷன் ஆவான் என்று எண்ணி விச்ரவஸின் புத்திரனாதலாலும், அவருக்குச் சமமாய் இருப்பதாலும் வைச்ரவணனென்று விளங்கட்டுமென்று தேவரிஷிகளின் மத்தியில் பெயரிட்டார். வைசிரவணர் தபோவனமடைந்து மகாதேஜசுடையவராய் ஆஹு தி செய்யப்பட்ட அனல்போல் வளர்ந்தார். அப்படி ஆசிரம பதத்தில் இருக்கும்பொழுது, ‘தர்மமே பரம்பொருள் ; அதை அனுஷ்டிக்க வேண்டும்’ என்று புத்தி உண்டாகி, அநேக வருஷங்கள் தபசு செய்தார். அதனால் பிரீதியடைந் தவராய் பிரம்மா இந்திராதி தேவ கணங்களுடன் அவருடைய ஆசிரமமடைந்து ‘குழந்தாய், ஸுவீரதனே! உன் தபசினால் ஆனந்தமடைந்தேன். உனக்கு மங்களம் உண் டாகுக. வரம்கேள்; நீ வரங்களுக்கு உரியவன்’ என்றார். வைசிரவணர்-“பகவானே! செல்வத்தைக் காக்கின்றதாகிய லோகபாலர் பதவியை விரும்புகின்றேன்” என்று பதிலுரைத்தார். பிறகு பிரம்மா சந்தோஷமடைந்த மனத்துடன் வைசிரவணருக்குச் சொல்லலானார்:-‘நான் லோக பாலர்களில் நான்காவது சிருஷ்டிக்கக் கருதியிருந் வர்ணனுக்குச் தேன்; நீ விரும்பியது யமன், இந்திரன், சமானமான பதவி. செல்,தமர்க்கியனே ! நீதிசன் பதவியை எடுத்துக்கொள். அங்குமிங்கும் செல்ல சூர்யகாந்தியுடைய இந்தப் புஷ்பகமென்ற விமானத்தைப் பெற்றுக்கொள். தேவர்களுடன் சமத்வம் அடை. உனக்கு மங்களமாகுக. நாங்கள் செல்லுகின்றோம்.’
பிரமாதி தேவர்கள் ஆகாயம் சென்ற பிறகு தனேசன் அஞ்சலி செய்துக்கொண்டு தகப்பனாருக்குச் சொல்லலானான்:-“பிரஜாபதி எனக்கு இருப்பிடம் ஒன்றும் கொடுக்கவில்லை. அவரிடமிருந்து வேண்டிய வரங்கள் பெற்றுக் கொண்டிருக்கிறேன். பிராணிகளிட மிருந்து எவ்விடத்தில் யாதொரு பீடையும் இருக்காதோ அப் படிப்பட்ட கிருஹம் காண்பியுங்கள்” என்றான். இதைக் கேட்டு முனிசிரேஷ்டரான விச்ரவஸர்- “தக்ஷிண சமுத்திரத்தின் கரையில் திரிகூடமெனப்பட்ட மலை இருக்கிறது. அதன் சிகரத்தில் மஹேந்திரனுடைய அமராவதியைப்போன்ற இலங்கை என்ற அழகியபுரம், இராக்ஷசர்களுடைய வாசத்திற்காகக் கட்டப்பட்டது. நீ அவ்விடம் வசி; உனக்கு மங்களம்; யாது சந்தேகமும் இல்லை. அது விஷ்ணுவின் பயத்தின்றேல் இராக்ஷசர்களால் விட்டுவிடப் பட்டது” என்றார். தகப்பனாருடைய இந்த தர்மயுக்தமான பேச்சைக் கேட்டு மலைச்சிகரத்திலிருந்த இலங்கையில் தனேசன் வசித்துவந்தான்.
சிலகாலம் கழிந்த பின்னர்,நீலமான மின்னலைப் போன்ற பிரகாசமுள்ளவனும் எரிகின்ற தங்கம்போன்ற குண்டலங்களைப் பூண்டவனான சுமாலியெனப்பட்ட இராக்ஷசன் அழகற்ற பத்மத்தைப்போன்ற பெண்ணை அழைத்துக் கொண்டு கீழ்லோகத்தை விட்டு மனுஷ்ய லோகத்தில் திரியலானான் ; அவள் பெயர் கைகசீ.சுமாலி அவளுக்குச் சொல்லலானான்:-“பெண்ணே! கன்யா தானம் செய்யவேண்டிய யௌவனகாலம் தாண்டிக் கொண்டிருக்கிறது. அருமையான மகளே! லக்ஷ்மியைப் போல எல்லா குணங்களும் பொருந்திய நீ, விச்ரவஸரை நாடி. அவரை வரித்துக்கொள்” என்றான். தகப்பனாரின் பேச்சை மதித்து அவள் விச்ரவசு தபசு செய்துக் கொண்டிருந்த இடத்திற்குச்சென்று அவர்முன் நின்று, தன் கால்களைக் குனிந்து பார்த்துக்கொண்டும் பூமியைக் கால் விரலால் சுரண்டிக்கொண்டும் நின்றாள். அவர் அந்த பூரண சந்திரன் முகமுடையாளைப் பார்த்து தன் தேஜ ஸால் ஜ்வலித்துக்கொண்டு அதிக ஆதரவோடு சொன்னார்:- “மங்களகரமானவளே! நீ யாருடைய பெண்? எவ்விடத்திலிருந்து என்ன காரியமாக இவ்விடம் வந்தாய். உண்மையைச் சொல்.” அவள் கைக் கூப்பிக்கொண்டு – “முனிவரே! தாங்கள் தங்கள் பிரபாவத்தினாலேயே என் எண்ணத்தை அறியக்கூடியவர். என் பிதாவின் கட்டளையின் மேல் வந்திருக்கின்றேன், என்று அறிந்துக்கொள்ளுங்கள். என் பெயர் கைகசீ. மற்றவை உங்களுக்குத் தெரியும்.” என்று பதிலுரைத்தாள். அவர் சிறிது தியானித்துச் சொன்னார். “பத்ரே! உன் மனதிலுள்ள காரணம் எனக்குத் தெரிந்துவிட்டது; என்னிடம் புத்திர லாபம் என்பதே. இந்தக் கடுமையான சமயத்தில் வந்த காரணத்தினால் எப்படிப்பட்ட பிள்ளைகளைப் பெறுவாய் என்று அறிந்துக்கொள். கடுமையானவர்களும், பயங்கரமான உருவமுள்ளவர்களும், துஷ்டர்களை சினேகிக்கிரவர்களுமான குரூரமான செய்கையுடைய புத்திரர்களை நீ பெறுவாய்.” இதைக்கேட்டு அவள் நமஸ்கரித்து “பகவானே! தங்களிடமிருந்து இப்பேர்ப்பட்ட பிள்ளைகளை நான் விரும்பவில்லை. என்மேல் தயவு செய்யுங்கள் ” என்றாள். இதைக்கேட்டு விச்ரவசு “மங்களகரமான முகமுடையவளே! எவன் உனக்கு ஐந்தாவதாகப் பிறக்கிறானோ அவன் என் வம்சத்துக்குத் தகுந்தபடி தர்மாத்மாவாக இருப்பான்” என்று பதில் உரைத்தார்.
காலக்கிரமத்தில் அவள் பயங்கரமானவும், இராக்ஷச ரூபமுடையவனும், கடுமையானவனும், பத்துத்தலையுடையவனும், பெரும் பல்லானும், மின்னலைப்போன்றவனும் இருபது தோள்களும், பெரிய முகமும், எரிவதுபோன்ற மயிரை யுடையவனுமான மகனைப்பெற்றாள். அவனுடைய தகப்பனார் அவனுக்கு தசக்கிரீவன் என்று பெயரிட்டார்.அதன் பிறகு, அளவிடமுடியாத பலம் பொருந்திய கும்பகர்ணன் பிறந்தான். விகாரமுகமுள்ள சூர்ப்பணகை அதற்கப்புறம் பிறந்தாள். ஐந்தாவதாக தர்மாத்மாவான விபீஷணன் கைகசிக்குப் பிறந்தான். அவர்களில் குரூரமான தசக்கிரீவன் லோகத்தை ஹிம்சித்துக்கொண்டு வந்தான். மதம்பிடித்த கும்பகர்ணன் தர்மப்பிரியர்களான மகரிஷிகளை தின்றுக்கொண்டு மூன்று லோகங்களிலும் சஞ்சரித்தான். விபீஷணனோ எப்பொழுதும் தர்மத்தில் நின்றவனாய் வேதமோதுவதிலேயே கருத்துள்ளவனாய் இந்திரியங்களை அடக்கிக்கொண்டு வந்தான். தசக்கிரீவன் தபசில் மனம் செலுத்தினவனாய் தம்பியுடன் “வேண்டிய வரங்களை தபசினால் சம்பாதிப்பேன்” என்று நிச்சயித்துக்கொண்டு சுபமான கோகர்ணாசிரமத்தை அடைந்தான். அங்கு தபசு செய்துகொண்டு ஆயிரம் வரு ஷங்கள் ஆனதும் தன் தலையை அக்னியில் ஆஹுதி செய் தான். இவ்விதமே ஒன்பதாயிரம் வருஷங்கள் கடந்தன; அவனுடைய தலைகள் ஒன்பது அக்னியில் ஆஹுதி செய் யப்பட்டன. மற்றோராயிரம் வருஷங்கள் முடிந்து பத் தாவது தலையை நறுக்க தசக்கிரீவன் உத்தேசித்துக்கொண் டிருந்தபோது, பிரம்மன் அவ்விடம் வந்தார். “தசக்கிரீவ! சந்தோஷமடைந்தேன். உனக்கு வேண்டிய வரங்களை சீக்கிரம் கேட்டுக்கொள். உன் விருப்பத்தைப் பூர்த்தி செய்கின்றேன். உன் பரிசிரமம் வீணாகாது” என்றார்.
தசக்கிரீவன் ஆனந்தமடைந்து தேவரை நமஸ்கரித்து தழுதழுத்த குரலுடன் “பகவானே! ஜீவஜந்துக்களுக்கு மரணத்தை ஒழிய வேறு பயமில்லை. யமனுக்குச் சத்ரு இல்லை. சாவின்மையை வேண்டுகின்றேன்” என்றான். இதைக்கேட்டு பிரம்மா, ”அமரத்வம் கிட்டாது. வேறு வரம் கேள் ” என்று பகன்றார்.
ராம! இவ்விதம் லோக கர்த்தாவான பிரம்மன் சொல்ல, தசக்கிரிவன் அஞ்சலி செய்துகொண்டு ஸுபர்னர்,நாகர். யக்ஷர்,தைத்தியர்,தானவர், ராக்ஷசர்கள். இவர்களினின் றும், தேவர்களினின்றும் நான் கொல்லப்படாமல் இருக்க வேண்டுகின்றேன். தேவர்களால் பூஜிக்கப்பட்டவனே! மற்றப் பிராணிகளிடத்தில் எனக்கு சிந்தையில்லை. மனு ஷன் முதலான பிராணிகளை நான் திருணமாக எண்ணு கிறேன்’ என்றான். பிதாமகர் “இராக்ஷச சிரேஷ்டனே! நீ சொன்னபடியே ஆகுக’ என்று சொல்லி, “மற்றுமொரு வரம் கொடுக்கிறேன் கேள். உன்னால் முன்னர் ஆஹுதி செய்யப்பட்ட தலைகள் மீளவும் உண்டாகின்றன.மேலும் நினைத்த மாத்திரத்தில் உன் உருவம் உன் இஷ்டப்படி ஆகக்கடவது” என்றார்.
பிரம்மன் இப்படிச் சொல்லவும் முன்னம் ஆஹுதி செய்யப்பட்ட சிரசுகள் மீளவும் முளைத்தன. இப்படி தசக்கிரீவனிடம் பேசிவிட்டுப் பிதாமகர் விபீஷணனைப் பார்த்து “விபீஷண! குழந்தாய்! உன்னுடைய தர்மத் தில் நிலைநிறுத்திய புத்தியினால் நான் சந்தோஷமடைந் தேன். நல்விரதம் கொண்டவனே ! வரம் கேட்டுக் கொள் என்றார். விபீஷணன் கைகூப்பிக் கொண்டு “பகவானே ! செய்யவேண்டியதைச் செய்தவனானேன். தாங்கள் பிரீதி அடைந்தவராய் வரம்கொடுக்க வேண்டு மானால் என் வரத்தைக் கேளுங்கள். அதாவது, பெருங் கஷ்டத்திலும் என் மனம் தர்மத்திலேயே நிற்கவேண்டும், பிரம்மாஸ்திரம் எனக்குத் தெரியட்டும்; என் மனப் போக்கெல்லாம் தர்மத்தை ஒத்ததாய் இருக்கட்டும்; எந்த ஆசிரமத்திலும் அதனைச்சார்ந்த தர்மத்தை அனுஷ் டிப்பேனாக.” என்றான். பிரஜாபதி பதில் உரைத்தார்:- “நீ எப்படி தர்மிஷ்டனோ அப்படியாகட்டும். சத்துருக்களை நாசம் செய்பவனே ! இராக்ஷசிக்கு பிறந்தபோதிலும்,உன் மனது அதர்மத்தில் செல்லாது. உனக்குச் சாவின்மை கொடுக்கிறேன்” இப்படி சொல்லிவிட்டு கும்பகர்ணனுக்கு வரம் அளிக்க சென்று கொண்டிருந்தவரை தேவர்கள் அஞ்சலி செய்துக்கொண்டு சொன்னார்கள்: “அப்பேர்ப்பட்ட வரன் கும்பகர்ணனுக்குக் கொடுக்கலாகாது. இந்த கெட்டபுத்தி லோகத்தை பயமுறுத்துகிறான் என்று தங்களுக்குத் தெரிந்ததே. அளவற்ற பிரகாசமுடைய வரே? வரம் கொடுப்பதுபோல அவனை ஏமாற்றிவிடுங் இதைக்கேட்டு பிரம்மா யோசனை செய்தார்; நினைக்கப்பட்ட ஸரஸ்வதிதேவீ பக்கத்தில் வந்தாள். பிரஜாபதி அவளுக்கு-“ வாணி, இந்த இராக்ஷச் சிரேஷ் டனுடைய முகத்தில் வேண்டிய தேவதையாகி இரு” என்றார். அவளும் அப்படியே செய்தாள். பிறகு பிரம்மா, கும்பகர்ணா! மகாபாஹுவே! வேண்டிய வரத்தைக் கேட்டுக்கொள்” என்றார். இதைக்கேட்டு கும்பகர்ணன் தேவர்களுக்கு தேவரே! அநேக வருஷங்கள். தூங்க நான் விரும்புகிறேன்” என்றான். “அப்படியே ஆகட் என்று சொல்லிவிட்டு பிரம்மா தேவதைகளுடன் புறப்பட்டார் : ஸரஸ்வதி தேவியும் இராக்ஷசனை விட்டு அகன்றாள். பிறகு துஷ்ட கும்பகர்ணன் – “ஏன் எனது வாயிலிருந்து இப்படிப்பட்ட பேச்சு வெளி வந்தது. வந் திருந்த தேவர்களால் ஏய்க்கப்பட்டேன்” என்று வருந்தலானான். இவ்விதமாக சகோதரர்கள் யாவரும் வரங்கள் பெற்றுக்கொண்டு சிலேஷ்மாதக வனம் சென்று சுகமாக வசித்துக்கொண்டிருந்தார்கள்.
இவ்விராக்ஷசர்கள் வரங்கள் சம்பாதித்துக்கொண் டார்கள் என்று அறிந்துக்கொண்டு சுமாலி பயம் நீங்கி பரி வாரத்துடன் ரஸாதலத்திலிருந்து வெளியேறினான். தசக் கிரீவனைத் தழுவிக்கொண்டு “பிரியனே! தெய்வானுக்கிர கத்தால், உத்தமமான வரத்தை நீ மூன்று லோகங்களுக்கும் சிரேஷ்டரிடமிருந்து பெற்றுக்கொண்டு விட்டாய். விஷ்ணுவிடமிருந்து எந்த பெரும்பயம் எங்களுக்கு இருந்ததோ, எதனால் இலங்கையைவிட்டு ரஸாதலம் சென்றோ மோ, அது அகன்று விட்டது. இராக்ஷசர்களுக்குத் தகுதி யான இந்த இலங்கை நகரம் நம்முடையது; உனது தமையனால் வசிக்கப்பட்டு வருகிறது. ஸாமத்தாலாவது, தானத்தாலாவது, பலாத்காரத்தினாலாவது இது மீட்கப் பட்டால் நீ இலங்கேச்வரனாக இருப்பாய் என்பதில் சந் தேகமில்லை. அமிழ்ந்திருக்கும் இராக்ஷச வம்சம் உன்னால் கை தூக்கி விடப்பட்டதாகும்” என்றான்.
தசக்கிரீவன் இதைக் கேட்டு களிப்புற்று பேச்சில் திறமையுள்ள பிரஹஸ்தனை தூதாக அனுப்பினான். “பிரஹஸ்த ! நீ விரைவாகச் செல். நைருத சிரேஷ்டனான குபேரனுக்கு என்னிடமிருந்து சாமம் முன்னிட்ட செய்தியாக இராக்ஷ்சர்களுக்குடையதான இந்த இலங்காபுரி உன்னால் கவரப்பட்டது. இது யுக்தமானதல்ல. பெரும் பலமுடையவனே ! இன்று இதைக் கொடாவிடின், நான் என் இஷ்டத்தை நிறைவேற்றிக் கொள்வேன். தர்மமும் நாட்டப்படும். என்று சொல் என்றான். அவனும் இலங்கையை அடைந்து இராவணன் ஏவியபடி சொன் னான். இது கேட்டு குபேரன் தனது தகப்பனாரிடம் சென்று நமஸ்காரம் செய்து இராவணனுடைய விருப்பத்தைத் தெரியப்படுத்தினான். ‘அப்பா! தசக்கிரீவன் எனக்கு தூதனை அனுப்பி இருக்கிறான். முன்னம் இராக்ஷஸர்களால் வசிக்கப்பட்ட இலங்காபுரியைக் கொடுத்துவிடு என்கிறான். விரதம் பூண்டவரே! நான் என்ன செய்யட்டும்” என்றான். பிரம்மரிஷி விச்ரவசு கைகூப்பி நிற்கும் குபேர னுக்கு ” மகனே ! என் பேச்சைக்கேள். இந்த இராக்ஷஸ னோடு பகை உனக்குப் பொருந்தாது. இவனால் விசேஷமான வரம் பெறப்பட்டது என்று நீ அறிவாய். ஆகை யால் பரிவாரத்துடன் இலங்கையை விட்டு வசிப்பதற்காக கைலாஸ மலையைச் சேர்” என்றார். தகப்பனாரைக் கௌரவித்து அவர் பேச்சுக்கிணங்க குடும்பத்தோடும், மந்திரிகளோடும், வாகனங்கள் செல்வம் என்பனவோடும் குபேரன் வெளியேறினான். அதன்பின் பிரஹஸ்தன் தசக்கிரீவனிடம் சென்று உரைத்தான் -“இலங்கை சூன்யமாய் இருக்கிறது. அதைவிட்டு தனதன் சென்றுவிட்டான். எங்களுடன் அந்த நகரத்தைப் புகுந்து உங்கள் தர்மத்தை நடத்துங்கள்” என்றான். அப்படியே மகா பலம் பொருந்திய தசக்கிரீவன், பிரஹஸ்தன், தம்பிகள், சைன்யபரிவாரங்களுடன் இலங்கையை அடைந்தான்.
இராக்ஷசேந்திரன் அபிஷேகம் செய்யப்பட்ட பிறகு தம்பிமார்களுடன், தங்கள் தங்கையின் விவாகத்தைப் சிந்திக்கலானான். தங்கை சூர்ப்பணகையை பற்றி வித்யுத்ஜிஹ்வன் என்ற காலகேயனான தானவேந்திரனுக்கு மணம் செய்து கொடுத்தான். பிறகு வேட்டையாடிக்கொண்டு திரியலானான். ராம! ஒரு நாள் திதியினுடைய குமாரனானமயனைப் பார்த்தான். அந்தத் தானவன் தன் பெண்ணை இராக்ஷசேந்திரனுக்குக் கொடுக்க ஆசை கொண்டு அவனது கையால் அவள் கையைப் பிடிக்கச் செய்து சிரித்த வண்ணம்-“அப்ஸரஸ் ஹேமையிடம் எனக்குப் பிறந்த பெண் மண்டோதரியை பார்யையாக அங்கீகரித்துக்கொள்ளுங்கள்” என்றான். “நல்லது” என்று சொல்லி தசக்கிரீவன் அக்னி மூட்டி விவாஹம் செய்துகொண்டான். வைரோசனனுடைய தௌ ஹித்திரி வஜ்ரஜ்வாலா என்பவளை கும்பகர்ணனுடைய பார்யையாக செய்வித்தான். விபீஷணர் கந்தர்வராஜன் சைலூஷனுடைய பெண்ணும் தர்மமறிந்தவளுமான சரம என்பவளை பத்தினியாக அடைந்தார். இவ்விதம் பார்யைகள் அடைந்து இந்த இராக்ஷஸர்கள் சந்தோஷித்திருந்தார்கள். மண்டோதரிக்கு ஒரு புத்திரன் பிறந்தான். அவன் அழுகையில் மேகம்போல் சப்தம் செய்தான். அவனுடைய சத்தத்தால் இலங்கை முழுவதும் அசைவற்று நின்றது. அதனால் அவன் தகப்பனார் அவனுக்கு மேகநாதன் என்று பெயரிட்டான்! ராம்!
56. இராவணனுடைய வெற்றிகள்
இராவணன், மகாபலம் பொருந்திய ஆறு மந்திரிக ளுடனும் மஹோதர பிரஹஸ்தர்களுடனும்,மாரீச. சுக ஸாரணர்களுடனும், வீரரான தூம்ராக்ஷன் இவர்களால் சூழப்பட்டவனாய் போரிடுவதில் ஆசை கொண்டுத் திரிந் தான். பின்னர் பட்டணங்களையும்,நதிகளையும், மலை களையும், வனங்களையும், உபவனங்களையும் கடந்து சீக்கிர மாக கைலாசகிரியை அடைந்தான். அவன் வந்ததும் யக்ஷர்கள் அவன் தங்கள் அரசனுடைய தம்பி என்று அறிந்து அவனிடம் சென்றார்கள்; அவன் உத்தரவுப்படி போரிடலானார்கள். யக்ஷர்களுக்கும் இராக்ஷசர்களுக் கும் இடையே பெரும்போர் நடந்தது. அப்போது சுக்ரப்ரோஷ்டபதர்களாலும், சங்கபத்மங்களாலும் சூழப் பட்ட கதையை கையில் வைத்திருந்த தாத்யக்ஷன் தூரத்திலிருந்து மரியாதையற்ற தம்பியைப் பார்த்துப் பிதாமஹருடைய குலத்துக்குத் தகுதியாகச் சொல்லலானான். “துன்மதியே! என்னால் தடுக்கப்பட்டும் அறி யாமையினால், நரகம் சென்று இந்த பாபகாரியத்தின் பலனை உணர்வாய். எவன் தாயையும், தகப்பனையும். ஆசார்யரையும் அவமதிக்கிறானோ அவன் யமன் கையில் அகப்பட்டு அதன் பலனை அனுபவிக்கிறான். இந்த நிலை யற்ற தேகத்தோடு எவன் தபசு செய்யவில்லையோ அந்த மூடன் செத்தபின் துஷ்டாத்மாவின் கதியை அடைந்து வருந்துகிறான்.தர்மமாசரிப்பதால் ராஜ்யமும், தனமும், சௌக்கியமும்; அதர்மத்தால் துக்கமுமே. ஆதலால் சுகத் துக்காக தர்மம்செய்யவேண்டும்; பாபம் ஒழிக்கவேண்டும். புண்ணிய கர்மங்களால் மனிதர்கள் உலோகத்தில் புத்தி யும், அழகும், பலமும், புத்திரர்களும், செல்வமும், தைரிய மும் அடைகிறார்கள். இப்படிப்பட்ட புத்தியுடையவனான நீ நரகம் செல்வாய். நான் உன்னுடன் பேசேன். துர் நடத்தையோருக்கு இதுவே தகும்.’
பிறகு இராவணனுடைய மந்திரிகளும், மாரீச முத லானவர்களும் தோற்கப்பட்டு புறங்காட்டி ஓடலானார் கள். தசக்கிரீவனும் தலையின்மேல் யக்ஷேந்திரன் தனது கதையால் அடிக்க அசையவில்லை. ராம! தசமுகன் அப் பொழுது ஒரு பெரிய அஸ்திரத்தை எடுத்து அவன் கதை யை முறித்துத் தள்ளி தனதனைத் தலையின்மேல் அடித் தான். தன்தனும் இரத்தம் பெருக அடி வெட்டப்பட்ட அசோகம் போல் விழுந்தான். இவ்விதமாக இராக்ஷசேந் திரன் தனதனை ஜயித்து சந்தோஷமடைந்து அவனுடைய மனதைப்போல வேகமுடையதும், இஷ்டப்படி செல்லு வதும் வேண்டிய ரூபத்தை எடுத்துக்கொள்ளக் கூடியது மான புஷ்பக விமானத்தைக் கைப்பற்றினான். இவ்விதம் வெற்றியால் கிடைத்த விமானத்தில் ஏறி அந்த துர்புத்தி, செருக்கின் பெருக்கால் மூன்று உலகங்களும் ஜயிக்கப் பட்டதாய் எண்ணினான்.
ராம! இவ்விதம் தமையனை ஜயித்துவிட்டு இராக்ஷ- சாபதிபன் மகத்தான சரவணத்தை அடைந்தான். மலை யின்மேல் சென்று ஒரு அழகான வனத்தைக் கண்ணுற்றான். அவ்விடம் புஷ்பகம். நின்றுவிட்டதை நோக்கி சீன் இஷ்டப்படி இந்தப் புஷ்பகம் செல்லவில்லை. மலை மந்திரிகளால் சூழப்பட்டவனாய் யோசிக்கலானான்:-“ஏன் யின் மேலிருப்பவன் ஒருவனுடைய காரியமாக இருக்க வேண்டும். இப்படி சிந்தித்துக்கொண்டிருக்கையில் பயங்கரமானவும், குள்ளமான பழுப்புவர்ணமான அழ கற்ற, வழுக்கத்தலையனான, சரிந்த தோள்களுடைய சங்கர ருடைய சேவகனான நந்தி கிட்ட வந்து, “தசக்கிரீவனே! திரும்பிச்செல். சங்கரர் மலையின்மேல் கேளித்துக்கொண் டிருக்கிறார் . ஸுபர்ண, நாக. யக்ஷர்கள்,தேவகந்தர்வராக்ஷ சர்களும் மற்ற ஜீவராசிகளும் பர்வதத்தின் மேல் செல்லலாகாது. துஷ்டபுத்தியே! நாசம் அடைய வேண்டா மாயின் திரும்பிச் செல்’ என்றான். இதைக் கேட்டுக் கோபித்து அவன் ”சங்கரன் என்பது யாவன்” என்று சொல்லிக்கொண்டு மலையடியைச் சென்றடைந்தான். அங்கு மகாதேவருக்கருகில் சூலம் பிடித்துக்கொண்டு மற் றொரு சங்கரன்போல் ஜ்வலித்துக்கொண்டிருக்கும் நந்தி யைக் கண்டான். அந்த இராக்ஷசன் வானர முகமுடைய அவனைப் பார்த்து மேகம் போலச் சிரித்தான். சிவ னுடைய மற்றுமொரு வடிவம்போன்ற நந்திபகவான் கோபம் கொண்டு தசானனுக்கு – “என்னைப் பார்த்து அவமதித்து இடிபோல் சிரித்தாய்; ஆகையால் என்னைப் போன்றவர்களும், எனக்குச் சமானமான தேசஸுமுள்ள குரங்குகள் உனது வினாசத்துக்காக உண்டாவார்கள் என்றார்.
அதன்மேல் நந்தியின் பேச்சை யோசியாமல் “நான் ஏறிச்சென்றுக் தசானனன் மலையைச் சேர்ந்து கொண்டிருந்த புஷ்பகத்தின் வழி மறிக்கப்பட்டதற்காக, கோபதியே! இந்த மலையை வேருடன் பிடுங்கி விடுகிறேன்” என்று சொல்லி மலையில் தனது தோள் களைக் கொடுத்துக் கிளப்பினான். மலை அசைந்தது; தேவ ருடைய கணங்கள் பயந்தன. பார்வதிதேவியும் மஹேச் சுவரரைக் கட்டிக்கொண்டாள். தேவசிரேஷ்டரான மஹர தேவர் அப்போது எளிதாக மலையைக் கால் சுண்டு விரலால் அழுத்தினார் ; தசக்கிரீவனுடைய புஜங்கள் மலையின் கீழிருந்து வருத்த முற்றன. வலியால் அந்த இராக்ஷசன் கதறினான்; மூன்று உலகங்களும் பயந்தன. “தசான்னனே! உமாபதியான, மஹாதேவரைச் சந்தோஷப் படுத்துங்கள். இங்கு வேறு கதியில்லை ” என்றார்கள் அவனுடைய மந்திரிகள். அதன்மேல் தசானனன் விருஷபக்கொடியோனுக்கு நமஸ்காரம் செய்து வெவ் வேறான சாமங்களினால் தோத்திரம் செய்தான்; இவ்விதம் ஓராயிரம் வருஷங்கள் கடந்தன. மஹாதேவர் திருப்தியடைந்து, ராம! அவனுடைய தோள்களை விடுவித்து “உனது வீரத்தாலும், தைர்யத்தாலும் சந்தோஷமடைந் தேன்..ராஜனே! நீ பயங்கரமான ராவம் (சத்தம்) செய்ததனால் இராவணன் என்று அழைக்கப்படுவாய் என்றார். இதைக்கேட்டு “மஹாதேவரே ! அப்படி உங்களைத் திருப்தி செய்தேன் என்றால் பிரம்மதேவரிட மிருந்து நான் தீர்க்காயுசு சம்பாதித்திருக்கிறேன். குறைந்துள்ள ஆயுசையும் சஸ்திரமும் கொடுங்கள் என்றான். அதன்மேல் சங்கரர் இராவணனுக்கு சந்திர ஹாஸம் எனப்பட்ட கட்கத்தையும் ஆயுசை யும் கொடுத்து “இதை நீ அவமதிக்கலாகாது; அவமதித் தால் அது என்னிடம் திரும்பி வந்துவிடும் என்றார். இவ்விதமாக இராவணன் என்னும் பெயரை அடைந்து, மஹாதேவரை வணங்கி புஷ்பகம் ஏறி மகாவீர்யமுள்ள க்ஷத்திரியர்களை ஹிம்ஸித்துக் கொண்டு திரியலானான்.
இப்படி அலைந்து வருகையில் இராவணன் இமயமலைச் சாரலை அடைந்தான். அவ்விடம் கிருஷ்ணாஜினமும், ஜடை யும் தரித்துத் தேவதையைப்போல் பிரகாசித்துக் கொண் டிருந்த ஒரு கன்னியைக் கண்டான். அவளை பார்த்து காமம்கொண்டு சிரித்த வண்ணமாய் -“பத்ரே ! உன்யௌவனத்துக்கு எதிராக ஏன் இப்படி இருக்கிறாய்? உன்னழகுக்கு தபசு ஏற்றதன்று. உன் கணவன் யார்? உன்னை. யடைந்தவன் பாக்கியசாலியே. இந்தப் பரிசிரமம் எதற்காக? சொல்” என்றான். அவனுக்கு மரியாதை செய்து அவள் சொல்லலுற்றாள்-“பிரம்மரிஷி குசதுவஜர் என் பிதா. அவர் பிரஹஸ்பதியின் குமாரர்: புத்தியில் அவ ருக்கு சமமானவர்.என் பெயர் தேவவதி. சுரேசுவரரான விஷ்ணுவையே என் தகப்பனார் மாப்பிள்ளையாக உத்தேசித்திருக்கிறார். அந்த மனோரதத்தை சத்தியமாக்கும் பொருட்டு நான் அவரையே மனப்பூர்வமாக விவாஹம் செய்துக் கொள்வேன். எல்லாம் தெரிவித்தாயிற்று. இராஜனே!போகலாம். எனது தபசினால் உலோகத்தில் நடப்பதெல்லாம் எனக்குத் தெரியும்’ என்றாள். இரா வணன் மன்மத பாணங்களால் நோவுண்டு விமானத்தி னின்று இறங்கி சொல்லலானான்:-“அழகீ! இந்த எண்ண முடையவள் கர்வம் வாய்ந்தவளே. எல்லா குணங்களும் உடையவள் இப்படி பேசத்தகாது. யௌவனம் கடந்து விடும். நான் இலங்காதிபதி; தசக்கிரீவன் என்னும். பெயரன். எனது பார்யையாய் எல்லா சுகங்களையும் அனுபவி. விஷ்ணு என்கிறாயே அவன் யாவன் ? எவனை இச்சிக்கிறாயோ அவன் வீரியத்திலாவது, தபசிலாவது, அல்லன்.” இதைக் சம்பத்திலாவது எனக்குச் சமன் கேட்டு தேவவதி:-” அப்படிச் சொல்லாதே. உன்னைத் தவிர வேறு எந்த புத்திமான் தான் ஸர்வலோகங்களால் நமஸ்கரிக்கப்பட்ட விஷ்ணுவை இவ்விதம் அவமதிப் பான் என்று பதிலுரைத்தாள். அப்போது அந்த நிசாசரன் அவளைத் தலைமயிரால் பற்றினான். தேவவதி அப்போது அக்னிமேல் மனம் செலுத்திச் சாக உத்தே சித்து ” அநார்யனே! உன்னால் அவமதிக்கப்பட்டதனால் உன் கண் எனக்கு இனி ஜீவித்திருக்க இஷ்டமில்லை. முன்னரே நெருப்பில் புகுகிறேன். நான் நல்வினை, தானம், முதலியன செய்திருப்பேனாயின் ஓர் தர்மிஷ்டனுடைய சத்குணமுள்ள அயோனிஜையாகப் பிறப் பேனாக.” என்று சொல்லி அக்கினியில் பிரவேசித்தாள். பிரபோ! இவள் தான் ஜனகராஜனுடைய குமாரி; தாங்கள் தான் விஷ்ணு.
பிறகு இராவணன் அனரண்யனால் நன்றாகக் காப் பாற்றப்பட்ட அயோத்தியை யடைந்து அந்த புரந்தரனுக்குச் சமானமான அரசனிடம் “என்னுடன் யுத்தம் செய்; அல்லது தோற்றேன் என்று சொல்: இது தான் என். உத்தரவு” என்றான். அனரண்யன் கோபம் கொண்டு “சண்டை செய்வோம்” என்றான். அனரண்யனுக்கும் இராக்ஷசேந்திரனுக்கும் அற்புதமான யுத்தம் நடந்தது. தீயில் இட்ட ஹவ்யம்போல அரசனுடைய பலம் நசித்தது. கானாறுகள் சமுத்திரத்தை யடைந்து மறைவதுபோல தனது பலம் நசித்ததைக்கண்டு அந்த அரசன் கோபம் கொண்டான். இந்திர தனுஸைக் கைப் பற்றி இராவணனிடம் வந்தான். அவனுடைய பாணங் கள் இராக்ஷசனுக்கு யாதொரு கேடும் செய்யவில்லை. இராக்ஷசராஜன் கோபங்கொண்டு அரசனது தலையின் மேல் அடித்தான் ; அரசனும் இரதத்தினின்று விழுந் தான். அப்பொழுது அந்த இராக்ஷசன் புன்னகையுடன் “என்னுடன் யுத்தம் செய்து பலனை அடைந்தாயா? அர சனே! மூன்று உலகங்களிலும் என்னுடன் போர் புரிய வல்லவன் எவனுமில்லை. நீ போகங்களில் ஆழ்ந்திருந்து என் பலத்தைப்பற்றி கேட்கவில்லை என்று சந்தேகிக் கிறேன்.” என்றான். அதைக்கேட்டுக் குன்றிய பிராண னுடைய அவ்வரசன் “நான் என்ன செய்யமுடியும். காலம் வலியது. இராக்ஷசா! இக்ஷ்வாகு வம்சம் அவ மதிக்கப்பட்டமையால் சொல்லுகிறேன் கேள். நான் நல்வினை தானயாகாதிகள் செய்திருந்தால், எனது பிரஜை களை நன்றாய் காப்பாற்றியிருப்பேனாகில் என் சொல் சத் தியமாகுக. இராமனென்ற பெயருடைய தாசரதி இ வாகு குலத்தில் உதிப்பான்; அவன் உன் பிராணனை அகற்றுவான்” என்றான். பிறகு அந்த அரசன் சுவர்க்க லோகம் சென்றான்; இராக்ஷசனும் அகன்றான்.
துஷ்ட இராவணன் திரும்பி வருகையில் அரச,ரிஷி. தேவ, தந்தர்வ கன்னிகைகளைக் கைப்பற்றலானான். கன்னியோ அல்லது ஸ்திரீயோ அழகுள்ளவளைக்கண்டதும், அவளுடைய பந்து ஜனங்களைக் கொன்று விமானத்தில் ஏற்றிவிடுவான். அவ்விதமே பன்னக, இராக்ஷச, அசுர, மானுஷ, யக்ஷ, தானவ கன்னிகைகளையும் விமானத்தில் ஏற்றினான். அவர்கள் எல்லோரும் ஒருங்கே சோகமும், பயமும் மிகுந்து கண்ணீர் வடித்தார்கள். “அன்னியருடைய பார்யையைத் தொடுதல் உனக்குத் தகுந்த செய் கையே. இராக்ஷசாதமனே! நீ அவர்களுடன் சந் தோஷமடைகிற காரணத்தால் ஸ்திரீயினாலேயே உனக்கு மரணம்” என்று அவர்களுடைய புலம்பலைக் கேட்டுக் கொண்டு நிசாசரர்களால் சூழப்பட்டு இராவணன் இலங்கையுட் புகுந்தான்.
பின்னர் இராக்ஷசேந்திரன் பரிவாரங்களுடன் நிகும் பிலை எனப்பட்ட இலங்கையிலுள்ள உபவனத்தை அடைந்தான். அங்கு நூறு யூபங்கள் கொண்ட சைத்தி யத்தில் ஓர் யக்கியம் நடப்பதையும், தனது மகன் மேக நாதன் கிருஷ்ணாஜினம் உடுத்து இருப்பதையும் கண்டான். அணுகிக் கைகளால் தழுவி இலங்கேசன் அவனை “என்ன நடக்கிறது? உண்மையைச் சொல்” என்றான். பிராமணச்சிரேஷ்டரான உசனஸ் பதிலுறைத்தார்: “நான் எல்லாம் சொல்லுகிறேன்; கேளுங்கள். உமது புத்திரன் அக்னிஷ்டோமம், அசுவமேதம், பகுசுவர்ணகம், ராஜஸூயம், கோமேதம், வைஷ்ணவம், மாஹேச்வரம் என ஏழு யாகங்களை விஸ்தாரமாய்ச் செய்தான். மஹேச் வரம் முடிந்ததும் சாக்ஷாத் பசுபதியிடமிருந்து மனிதர்க திவ்ய ளுக்குக் கிட்டாத வரங்களைப் பெற்றிருக்கிறான். மான ஆகாசத்தில் உலாவும் விமானமும், எதனால் தமஸ் உண்டாகின்றதோ, எது உபயோகிக்கப்பட்டால் அவனு டைய போக்கு சுரர்களுக்காவது, அசுரர்களுக்காவது புலப்படாதோ, அத்தகைய மாயையும், வற்றாத அம்பராத் தூணிகளும், பாணங்களும், சண்டையில் சத்ருவை நாசம் செய்யும் அஸ்திரமும், இந்த வரங்களை எல்லாம் பெற்றுக் கொண்டு யக்கியங்கள் முடிந்தவுடன் உங்களைக் காண ஆவலுள்ளவனாக இருக்கிறான் ”. தசக்கிரீவன் செளம் யனே, சத்ருக்களான இந்திராதிகள் பூஜிக்கப்பட்டார் களே ; இது தகுந்ததல்ல. எப்படியும் நீ செய்தது நல்ல காரியம்தான்; வா. வீடு செல்வோம்” என்று சொல்லி பிள்ளையோடும், விபீஷணனோடும் வீடுசென்று, துக்கித் துக்கொண்டு வந்திருந்த எல்லா ஸ்திரீகளையும் விமானத்தி னின்று இறக்கினான்.
ஓர் இரவு சந்திரன் கிளம்பியதும் புஷ்பதூளியைக் கொண்டதும், புஷ்பமணமுள்ளதுமான, சுகமான காற்று அந்த மலையை வாசனையுள்ளதாகச் செய்து வீசி இராவ ணனுடைய காமத்தைப் பெருக்கிற்று. பெருமூச்சு விட் டுக்கொண்டு அவன் சந்திரனைப் பார்க்கலானான். அப் போது திவ்யமான ஆபரணங்களாலும் புஷ்பங்களாலும் அலங்கரித்துக்கொண்டு அப்சரஸ் சிரேஷ்டையான இரம்பை அவ்விடம் வந்தாள். தனது சேனையின் மத்தி யாகப் போய்க்கொண்டிருந்தவளைக் தசக்கிரீவன் காமம் மேற்கொண்டவனாய் எழுந்திருந்து கையைப்பற்றி அவள் வெட்கிக்கொண்டிருக்க, புன்சிரிப்புடன் “அழகியே. எங்கு செல்லுகின்றாய்? என்ன உத்தேசம்? என்னைத் தவிர உலோகத்தில் வேறொரு பிரபுவும் இல்லை. நான் தசானனன். உன்னை யாசிக்கின்றேன். என்னைக் கணவனாகக் கொள்” என்றான். இதைக் கேட்டு நடுங்கிக் கொண்டும் கைகூப்பிக்கொண்டும் இரம்பை சொன்னாள்-” நீ – எனது குரு . தயவு செய். நீ இப்படிப் பேசலாகாது.தர்மப்படி நான் உனது மருமகள். அன்னியரால் அவமதிக்கப்பட்டால் நீ என்னைக் காக்க வேண்டியவன்”. இராக்ஷசன் “எனது மருமகள் என்று சொன்னாயே, அது ஒரு பத்தினியுடையவர்களினது கிரமம். ஆனால் தேவலோகத்தில் ஏகபதனித்துவமாவது, அப்ஸரஸுகளுக்குக் கணவன் என்பதாவது வழக்கமல்ல” என்று சொல்லி அவளை மானபங்கம் செய்தான். பிறகு, இரம்பை நகைகளும், புஷ்பங்களும் கலைந்தவளாய் நலகூபரனிடம் சென்று அவன் காலில் விழுந்தாள். “என்ன சமாசாரம்” என்று அவன் வினவ இரம்பை பெருமூச்சுவிட்டுக் கொண்டும், கைகூப்பிக்கொண்டும் எல்லா விஷயங்களையும் நடந்தபடி தெரிவித்தாள். இதைக்கேட்டு வெகுகோபங்கொண்டு நலகூபரன் இராக்ஷசேந்திரனைக் குறித்து “எப்பொழுது நீ மனம் ஒவ்வாதவளைக் காமுற்று அவமதிக்கின்றாயோ உன் தலை அக்கணமே ஏழுதுண்டங்களாகக் கடவது” என்று கடும் சாபம் இட்டான். இந்த சாபத்தைக் கேள்வியுற்று அவனால் எடுத்துக்கொண்டு போகப்பட்ட பதிவிரதைகள் சந்தோஷித்தார்கள்.
ஒரு சமயம் இராவணன் கைலாசத்தைத்தாண்டி இந்திரலோகத்தை அடைந்தான். உடனே ருத்ரர்களும், ஆதித்தியர்களும், வஸுக்களும், மருத்துகளும், அசுவினி களும், சன்னத்தர்களாய் இராக்ஷசர்களை நோக்கி வந்தார் கள். அப்பொழுது தேவர்களுக்கும், இராக்ஷசர்களுக்கு மிடையே பெரும் சண்டை நடந்தது. தசக்கிரிவன் கோபங்கொண்டு தேவர்களைக் கொன்றுக்கொண்டு இந்தி ரனை அடைந்தான். இந்திரன் மகாநாதம் கொண்ட பெரிய தனுஸை நாணேற்றி அக்னி சூர்யர்களுக்கொப்பான தேஜஸை உடைய அம்புகளை இராவணன் மேல் எய்தான். தசக்கிரீவனும் அவ்வண்ணமே இந்திரனைப் பாணவர்ஷத் தால் நிரப்பினான். இருளடைந்ததும் தேவர்களும் இராக்ஷ சர்களும் சண்டையிட்டுக்கொண்டு யார் யாரென்று அறி யாமல் இருந்தனர். இந்த அந்தகாரத்தில் இந்திரன், ராவணன். இராவணி இம்மூவருமே மோஹமடையா திருந்தனர். அப்போது இராவணி மிக்க கோபங் கொண் டவனாய் மஹேந்திரனைப் பாண வர்ஷத்தினால் மறுபடியும் தாக்கினான் ; இந்திரன் தனது தேரையும் தேர்ப்பாகனை யும். விட்டு ஐராவதத்தின்மேல் ஏறி இராவணியைத் தேடலானான். ஆனால் மாயை பலமுள்ள இராவணி மாயையால் இந்திரனைக் கட்டித் தனது சேனையின் சமீ பம் கொண்டு சேர்த்துப் போர் முனையில் நின்ற தகப்பனா ரைப் பார்த்து ” அப்பா! போவோம். சண்டையை நிறுத் துங்கள். ஜயித்துவிட்டோமென்று அறியுங்கள். கவலை வேண்டாம். ஸுரசைன்யத்துக்கும் மூன்று உலோகத் துக்கும் குருவானவன் பிடிக்கப்பட்டான். தேவர்களும் கர்வபங்கம் அடைந்தார்கள். இனி மூன்று உலோகங் என்று களையும் பெறுமையுடன் அனுபவியுங்கள்.” சொன்னான். இராவணியின் பேச்சைக்கேட்டு இராவணன் மனச் சமாதானம் அடைந்தான்.
மஹேந்திரன் தோல்வியடைந்ததும் பிரம்மாவை முன் னிட்டுக்கொண்டு தேவர்களெல்லாரும் இலங்கையை சகோதரர்களாலும் அடைந்தார்கள். புத்திரனாலும், சூழப்பட்டிருந்த இராவணனிடம் சென்று பிரம்மா ஆகா யத்தில் இருந்தவண்ணம் சாந்தமாகச் சொல்லலானார்- ” வத்ஸ! நான் சந்தோஷமடைந்தேன். என்ன ஆச் சரியம். உன் புத்திரனுடைய தைரியமும், மஹிமையும் சமமல்லாது மேல்பட்டும் இருக் உன்னுடையதுக்குச் கிறதே. உன் தேஜகினாலே நீ மூன்று உலோகங்களையும் வென்றாய்; உன் பிரதக்கியை நிறைவேற்றினாய். உன் உன் புத்திரன் பிள்ளையினிடம் எனக்கு சந்தோஷம். அதிக பலமுடையவன்; புவியில் இனி இந்திரஜித்து அழைக்கப்படுவான். மஹேந்திரன் விடுதலை பெறட்டும். இதற்கு மாறாக தேவர்கள் என்ன கொடுக்க வேண்டும்” என்றார்.அதன் மேல் இந்திரஜித்து-“இவர் விடப்படவேண்டுமானால் நான் சாவாமை பிரார்த்திக்கிறேன்” என பதிலுரைத்தான். ”புவியில் எந்த ஜீவனுக்கும் அமரத்வம் இல்லை” என்று பிரம்மா கூற மேகநாதன் சொல்லலுற்றான். “நான் சண்டையில் இறங்கி சத்ருவை ஜயிக்க ஆவல் கொண்டு அக்கினியை வளர்த்து ஹவ்யமந்திராதிகளால் பூஜிப்பேனானால், அதிலிருந்து குதிரைகள் பூண்ட இரதம் வெளிகிளம்பட்டும்: அதில் நிற்க எனக்கு அமரத்துவம் கிட்டட்டும்; இது தான் நான் கேட்கும் வரன். அப்படி ஹோமத்தைப் பூர்த்தி செய்யாமல் போருக்குக் கிளம்புவேனாகில் அப்போது நான் நாசமடைக. அப்படியே ஆகட்டும் என்று பிதாமகர் செப்பினார்; இந்திரன் விடுதலை அடைந் தான. தேவர்களும் தேவலோகம் சென்றார்கள். ராம! உலோக கண்டகனான இராவணன் வரலாறு இதுதான்’ என்றார்.
ஒரு காலத்தில் இராவணன் கிஷ்கிந்தையை அடைந்து தங்கமாலையணிந்த வாலியைப் போருக்கு அழைத்தான். அப்பொழுது தாரையின் பிதாவும், மந்திரியு மான தாரன்-“இராக்ஷசேந்திர! உனக்கு நிகரான வாலி வெளியேறி இருக்கிறான். நான்கு சமுத்திரங்களி லும் சந்தியைச் செய்துவிட்டு இதோ திரும்பி வருவான். சிறிது பொருத்திரு. அல்லது மரணமடைய தீவிரப் பாயாகில் தெற்கு சமுத்திரம் செல்’ என்றான். இராவணன் தாரனை பயமுறுத்திவிட்டு தக்ஷிண சமுத் திரம் சென்றான். அங்கு பொன் மலையையும், இளஞ் சூரியனையும் போன்ற வாலியை ஸந்தியோபாஸனையில் இருக்கக்கண்டு விமானத்திலிருந்து இறங்கி அவனை பிடிக்குமாறு நிச்சப்தமாய்ச் சென்றான். இப்படி வந்த இராவணனை அகஸ்மாத்தாய் நோக்கி, வாலி கலவரம் கொள்ளவில்லை ; இராவணனைப் பிடித்துக் கக்ஷத்தில் இடுக்கிக்கொண்டு நான்கு சமுத்திரங்களிலும் ஸந்தியை உபாஸித்துவிட்டு, சிறிதும் களைப்பின்றி, கிஷ்கிந்தையில் இறங்கினான். கக்ஷத்திலிருந்து இராவணனை விடுவித்தான்; சிரித்துக்கொண்டு-“எவ்விடம் உனக்கு?” என்று மெள்ளக் கேட்டான். இராவணன் ஆச்சரிய முற்று சிரமத்தால் வருந்திய கண்களுடன் செப்பினான்-“உன் பலம் என்ன! வீரியம் என்ன/ காம்பீர்யம் என்ன! பசுவைப்போல என்னைப் பிடித்து நான்கு சமுத்திரங்களும் சுற்றினையே! வானர சிரேஷ்டனே! உன் பலம் அறிந்தேன். உன் னுடன் அக்னி சாக்ஷியாக நட்பை விரும்புகிறேன். உடனே தீ மூட்டி வானரனும் இராக்ஷசனும் சஹோதரத் வம் மேற்கொண்டு ஒருவரையொருவர் தழுவிக் கொண்டார்கள்.”
57. அநுமான் ஜனனம்
பிறகு அகத்தியரைக் கைகூப்பிக்கொண்டு. இராமர் கேட்கலானார். “வாலியினுடையவும், இராவணனுடைய வும் பலம் அளவிடக் கூடாததே; ஆனால் இவை அநு மானுடைய பலத்துக்குச் சமானமானவை அல்ல என்பது என் மதம். சூரத்தன்மை, தயை, பலம், தைரியம், பாண்டித்தியம், நீதி,விக்ரமம்,பிரபாவம், இவை யாவும் அநுமானிடத்தில் குடிக்கொண்டிருக்கின்றன என்று தோன்றுகிறது. தன் பிராணனுக்குப் பிரியமான வானரத்தலைவன் துக்கித்துக்கொண்டிருந்ததனால், தனது பலத்தை அநுமான் அறியவில்லையென்று எண்ணுகிறேன். விஸ்தாரமாக யாவற்றையும் சொல்லுங்கள்” என்றார். இதைக் கேட்டு அநுமானுக்கு முன்னிலையில் அகத்தியர் சொல்லலானார்:-“அநுமானைக் குறித்து தாங்கள் சொல்லுவது உண்மையே. சூரியவரன் கிடைத்தவும், தங்கமானதுமான, மலை ஸுமேரு எனப்பட்டது. அவ்விடம் இவனுடைய பிதா கேசரி என்பவன் அரசாண்டு வந்தான். அவனது பார்யை அஞ்சனை என்பவள். அவளிடம் வாயுபகவான் இந்த உத்தமமான மகவைப் பெற்றான். ஒரு நாள் காய்கனிகள் கொண்டுவரக் கருதி காட்டில் சஞ்சரிக்கலானாள். அப்பொழுது இக்குழந்தை தாயாரைக் காணாததாலும், பசியினாலும் சரவணத்தில் ஷண்முகன் அழுததுபோல் மிகவும் அழுதான்; உதித்துக் கொண்டிருக்கும் சூரியனைப் பார்த்து அது ஒரு பழம் என்ற ஆசையால் அதைக் குறித்துக் கிளம்பினான். இப்படிப் பறந்துக்கொண்டு சென்ற புத்திரன் சூரியனால் எறிக்கப்படக்கூடும் என்ற பயத்தினால் அவனை பனியினால் குளிர்ந்து வாயுபகவான் பின் தொடர்ந்தான். ஆகாசம் சென்று அநேக ஆயிர யோசனைகள் கடந்து தகப்பன் பலத்தினாலும் தனது இளமையினாலும் சூரியனை நெருங்கினான். இவன் குழந்தை என்றும், தவறு அறியாதவனென்றும் இவனால் பெரும் காரியம் கைகூடவேண்டு மென்றும் நினைத்து அவனை சூரியன் எரிக்கவில்லை. எந்த தினம் இவ்வண்ணம் சென்றானோ, அதுவே இராகு சூரியனைக் கிரஹிக்கவேண்டியதினம். இராகு, சூரிய னுடைய ரதத்தின்மேல் அநுமானால் தாக்கப்பட்டு பயந்து இந்திரலோகம் சென்று இந்திரனைப் பார்த்து கோபத்துடன் சொல்லலானான் -“விருத்திரனைக் கொன்றவனே! சந்திர சூரியர்களை எனது ஆஹாரமாகக் கொடுத்துவிட்டு எப்படி மற்றொருவனுக்குக் கொடுத்தாய். இன்று ஏற்பட்ட காலத்தில் பிடிக்குமாறு சூரியனண்டை செல்ல, மற்றொரு இராகு அவனைப் பிடித்துக்கொண் டிருந்தான்.”இராகுவின் பேச்சைக்கேட்டு மனங்கலங்கின வனாய் வாஸவன் சூரியனிருந்த இடம் சென்றான். மாருதி ஐராவதத்தைக்கண்டு அதுபெரிதாகயிருந்தும் ஒரு பழம் என்று நினைத்து அதன் மேல் பாய்ந்தான்.இந்திரன் சிறிது கோபம்கொண்டு தனது குலசத்தை எறிந்து அநு மானை அடித்தான் ; அவன் மலையின்மேல் வீழ அவனு டைய வலது கதுப்பு அடியுண்டது. தனது குமாரன் அடிபட்டு விழுந்ததைக் கண்டு வாயு பகவான் கோபம் கொண்டு ஜீவஜந்துக்களுக்கு அஹிதம் செய்பவனாய் அவர் களுள்ளிருந்து விலகிக்கொண்டு தனது சிசுவை எடுத்துக் கொண்டு தன் இருப்பிடம் அடைந்தான். அப்போது பிரஜைகள், கந்தர்வர், தேவர், அசுரர், மானுஷர் எல் லோரும் கூடி சிரமமடைந்து பிரஜாபதியிடம் ஓடினார் கள்: செப்பலானார்கள்—”தாங்கள் எங்களுக்கு ஆயுசின் பதியாக வாயுவைக் கொடுத்தீர்கள். எங்கள் பிராணனுக்கு நாதனாக இருந்து இன்று ஏன் நின்றுவிட்டு, அந்தப் புரத்தில் இருக்கும் ஸ்தீரீகளைப்போல எங்களுக்கு துக்கம் விளைத்திருக்கிறான்? தங்களைச் சரணம் அடைந்தோம். இந்த துக்கத்தை விலக்குங்கள்.” அதன்மேல் எல்லாருட ணும் பிரஜாபதி மாருதி இருப்பிடம் சென்றார்.
பிரஜாதிபதியைக் கண்ணுற்றதும் குழந்தையை எடுத்துக்கொண்டு வாயு பகவான் எழுந்து நின்றான். அவரை மூன்று தரம் வணங்கினான். பிரம்மா தனது கையால் சிசுவைத் தடவிக் கொடுத்தமாத்திரம் அவன் நீர் கிடைத்த பயிரைப்போல் மறுபடியும் ஜீவிதனானான். இதைக்கண்டு வாயு பகவான் தடையை விலக்கினான்; பிராணன் எல்லா ஜீவராசிகளிடத்திலும் சஞ்சரிக்க லாயிற்று. அப்போது பிரம்மா. மாருதிக்குப் பிரியமான தைச் செய்ய எண்ணி “ஓ, மஹேந்திர ஈச. வருண, பிர ஜேச்வர, தனேச்வரர்களே ! நான் சொல்வதைக் கேளுங் கள். இந்த சிசுவால் செய்ய வேண்டிய காரியம் இருக் கின்றது. மாருதனுக்குத் திருப்தி அளிக்குமாறு எல்லோ ரும் வரம் கொடுங்கள் என்றார். அப்பொழுது இந்தி நீர்க்குவளைகொண்ட ஒரு மாலையைத் தந்து “எனது வஜ்ரத்தால் இவன் அநு (கதுப்பு) அடிபட்டபடி யால், இனி அனுமான் என்று விளங்குவான்.இனிமேல் என் வஜ்ராயுதத்தால் இவனுக்கு யாதுகேடும் நேரிடாது” என்றான். மார்த்தாண்டன் “எனது தேஜசில் சதாம்சம் இவனுக்குக் கொடுக்கிறேன். இவன் அத்தியயனம் ஆரம்பித்ததும் இவனுக்குச் சாஸ்திரங்களை அளிக்கின் றேன். அதனால் இவன் வாக்குடையவன் ஆவான்” என் றான். என்னாளும் என் பாசத்தாலாவது, நீரினாலாவது, இவனுக்கு மிருத்யு அண்டாது” என்றான் வருணன். என் தண்டத்தால் கொல்லப்படாமையும், நித்திய ஆரோக்கியமும், போரில் துக்கமின்மையும், கொடுக்கிறேன்” என்றான் யமன். தனதன் தன் கதையால் சாவில்லை’ என்றான். சங்கரன் “எனது ஆயுதங்களால் கொல்லப்படமாட்டாய்” என்று வரன் அளித்தான். பிரம்மா “தீர்க்காயுசாயும், மஹாத்மாவாயும் இருப்பாய் என்றார். விசுவகர்மா ” என்னால் செய்யப்பட்ட சஸ்திரங் களால் நீ மரணம் அடையாய். சிரஞ்சீவியாய் இருப்பாய்” என்று வரமளித்தான். இவ்விதம் தேவர்களின் வரங்களால் இந்த சிசு அலங்கரிக்கப்பட, ஜகத்குருவான பிரம்மா சொல்லலானார்-“மாருதனே! உன் புத்திரன் பகைவருக்கு பயங்கரனாகவும், மித்திரர்களுக்கு அபயங் கரனாகவும், தோல்வி அடையாதவனாகவும், இஷ்டப் படி ரூபம் கொள்ளக்கூடியவனாகவும் இஷ்டப்படி செல் லக்கூடியவனாயும், கீர்த்திமானாகவும், தடுக்கக்கூடாதவ னாயும் இருப்பான். சண்டையில் இராவணனுக்கு இடைஞ் சலையும் இராமருக்கு பிரியமான மயிர்க்கூச்செறியும் காரி காரியங்களையும் இவன் செய்யப்போகின்றான்”. இப்படிச் சொல்லிவிட்டு பிதாமஹரும், மற்றவரும் வந்த வழி திரும்பிச் சென்றார்கள்.
“ராம! இவ்விதம் வரங்களைப்பெற்று இந்த வான ரச் சிரேஷ்டன் சமுத்திரம் போல் வளர்ந்தான்.பய மின்றி மகரிஷிகளின் ஆசிரமங்களில் துன்பம் செய்ய லானான். அப்பொழுது பிருகு, அங்கிரஸு வம்சத்தவர் தங்கள் கோபத்தையடக்கிக் களான மகரிஷிகள் கொண்டு.”வானரனே ! உன் பலச்செருக்கால், எங்களை எங்கள் சாபத்தால் நீ உனது வருத்துகிறாயன்றோ. பலத்தை நெடுநாள் மறந்திருப்பாயாக. எப்பொழுது நினைவு மூட்டப்படுகின்றாயோ அப்பொழுது உன் பலம் வளரும்” என்றார்கள். இந்த சாபத்தால் தான் வாலி சுக்கிரீவருள் பகை மூண்டபோது தன் பலத்தை அநு மான் அறியவில்லை ” இவ்விதம் அகத்தியர் செப்பியதைக் கேட்டு இராமரும், சௌமித்திரியும், வானரர்களும், இராக்ஷசர்களும் ஆச்சரியமடைந்தார்கள். மேலும் அகத் தியர் இராமருக்குச் சொன்னார். “எல்லாம் தாங்கள் கேட்டுவிட்டீர்கள். நாங்கள் தங்களைப் பார்த்தாயிற்று; ராம! நாங்கள் போய் வரு பேசியும் முடித்தோம். கிறோம்.” அப்பொழுது இராமர் மஹரிஷியை நமஸ்கரித்து கைகூப்பிக்கொண்டு சொல்லலுற்றார்:-“தங்களது தரிசனத்தால் இன்று தேவதைகளும், பித்ருக்களும், பிரபிதாம் ஹர்களும், சந்தோஷமடைந்தார்கள். எனது பந்துக்களும் திருப்தி அடைந்தார்கள். ஜனங்களை நிலைநிறுத்திவிட்டு, எனது காரியங்களில் முனைந்தவனாய் தங்களது பிரபாவத் தால் கிரதுக்கள் செய்ய விரும்புகிறேன். தாங்கள் பிரதி தினமும் அந்த யக்கியங்களில் இருந்துக்கொண்டு என்னை அனுக்கிரஹிக்க வேண்டும். தபோநிதிகளான தங்களை அண்டி நான் திருப்தி அடைவேன் அப்படியே என்று பகன்று அகத்தியர் முதலான ரிஷிகள் தங்கள் இருப்பிடம் சென்றார்கள்.
விதிப்பிரகாரம் பட்டாபிஷேகம் முடிய, புரவாஸிகள் இரவை சந்தோஷத்துடன் கழித்தார்கள். காலையில் வந் தினர்கள் இராஜகிரஹம் வந்து அரசனை சந்தோஷப் படுத்துமாறு தோத்திரம் செய்தார்கள். இதைக் கேட்டு இராமர் எழுந்திருந்து ஸ்நானம் செய்துவிட்டு, பரிசுத் தராய் காலத்தில் ஆஹுதிகள் செய்து முடித்து இக்ஷ்வாகு வமிசத்தவரால் சேவிக்கப்பட்ட ஆலயத்தை அடைந்து தேவர்களையும், பித்ருக்களையும், பிராமணர்களை யும் பூஜித்துவிட்டு ஜனங்கள் சூழ வெளிக்கட்டுக்கு வந் தார். அப்பொழுது மந்திரிகளும், வசிஷ்டர் முதலான புரோகிதர்களும் அவரை நெருங்கினார்கள். க்ஷத்திரியர் களும், மற்ற அரசர்களும் வந்தார்கள். வேலையாட்களும் மஹாவீரர்களான கைகூப்பி நின்றார்கள். இருபது வானரர்களும் சுக்கிரீவனுடன் வந்தடைந்தார்கள். நான்கு விபீஷணரும் வந்து சேர்ந்தார். இராக்ஷசர்களுடன் வேதங்களறிந்த குலீனர்களும் தலை குனிந்து வணங்கிக் கொண்டு நின்றார்கள். இவ்வண்ணம் எல்லாராலும் சூழப் பட்டு தேவேந்திரனைவிட அதிகமாக விளங்கினார் இரகு நந்தனர். எல்லாரும் இப்படி இருக்க பௌராணிகர்கள் மதுரமான கதைகளை செப்பினார்கள்.
இவ்விதம் இராகவர் அரசாண்டு வந்தார். இராஜாக் கள் இராமரால் மரியாதை செய்யப்பட்டு தத்தம் தேசம் திரும்பிச் சென்றார்கள். பெருங்காரியம் செய்து முடித்த சுக்கிரீவனுக்கும், விபீஷணருக்கும் தன்னைச் சுற்றியிருந்து ஐயம் கொணர்ந்த இராக்ஷசர்களுக்கும், வானரர்களுக் இராகவர் விதம்விதமான இரத்தினங்களைக் கும், கொடுத்தார். அவர்களும் அந்த இரத்தினங்களைத் தங்கள் தலைமேலும் கைகளிலும் அணிந்துகொண்டார்கள். பிறகு இராமர் அநுமானையும், அங்கதனையும் மடியில் ஏற்றிக் கொண்டு சுக்கிரீவனைப் பார்த்து—”அங்கதன் உன் சத் புத்திரன்; அநுமான் உன் மந்திரி. இவர்கள் எனக்கு ஹிதம் செய்வதில் ஊக்கமுள்ளவர்கள். உன்னிடமும் பல என்று சொல்லி வித மரியாதை பெறத்தகுந்தவர்கள்”என்று சொல்லி தன் மேலிருந்த ஆபரணங்களைக் கழட்டி அங்கதனையும் அநுமானையும் அலங்கரித்தார். பின்னர் நீலன், நளன், குமுதன், கந்தமாதனன், சுஷேணன்,பனசன், மைந்தன், த்விவிதன், ஜாம்பவன், கவாக்ஷன், விநதன், தூம்ரனு மான சேனைத் தலைவர்களைப் பார்த்து-“நீங்கள் எல் லோரும் என் சிநேகிதர்கள் எனது உடல்: என் பிரா தாக்கள். உங்களால் நான் என் விசனத்தினின்று தவிர்க் கப்பட்டேன். உங்களைக் கொண்ட சுக்கிரீவன் அதிர்ஷ்ட சாலியே” என்று மதுரமாகச் சொல்லிவிட்டு அவரவர் களுக்குத் தகுந்தபடி ஆபரணங்களைத் தந்தார் ; ஆலிங் கனம் செய்தார். இவ்விதம் இக்ஷ்வாகு நகரத்திலே வான ரர்களும், இராக்ஷசர்களும், சந்தோஷித்துக்கொண்டிருக்க குளிர் காலத்திரண்டாவது மாதம் கழிந்தது. இராம ருடைய பிரீதியுள்ள செய்கைகளால் காலம் சுகமாகச் சென்றது.
பின்னர் இராமர் சுக்கிரீவனைப்பார்த்து-“ஸௌம்ய! நீ கிஷ்கிந்தை போகலாம். சத்துருக்களின்றி இராஜயத்தைப் பரிபாலி. அங்கதனையும். அநுமானையும் மற்ற மஹா வீரர்களையும் பிரீதியுடன் நடத்திவா; அவர்களுக்கு அபிரீயம் செய்யாதே என்று சொல்லிவிட்டு அவனை ஆலிங்கனம் செய்துக்கொண்டார். பின்னர் விபீஷணனை நோக்கி “ராஜனே ! இலங்கை செல்லுக. நீர் தர்மமறிந்த வர். அதர்மத்தில் மனத்தைச் செலுத்தாதீர். புத்தியுள்ள அரசர்கள் இராஜ்யத்தை நிச்சயம் அனுபவிக்கிறார்கள். நீரும், சுக்கிரீவனும் என்னை மறத்தலாகாது’ என்றார். இதைக் கேட்டு ரிக்ஷர்களும், வானரர்களும், இராக்ஷசர் களும், “நன்று, நன்று’ என்று இராமரைப் புகழ்ந்தார். கள். அநுமான் வணங்கி-“ராஜனே ! என் சிநேகமும், பக்தியும் தங்களிடம் எப்பொழுதும் இருக்கட்டும். வேறு எங்கும் செல்ல வேண்டாம்.” என்றான். அநுமானுடைய பேச்சைக் கேட்டு இராமர் தமது ஆசனத்திலிருந்து எழுந்து அநுமானைக் கட்டிக்கொண்டு சொன்னார்.-‘கபி கிரேஷ்டனே ! அப்படியே இருக்கும். சந்தேகமில்லை. என் கதை உலோகத்தில் இருக்கும் வரையில் அதுவரை உன் கீர்த்தியும் இருக்கும்; உன் உடலில் பிராணனும் இருக் கும். உலோகங்கள் இருக்கும் வரையில் என் கதை நிலை நிற்கும். நீ செய்த ஒவ்வொரு உபகாரத்துக்கும் என் பிராணனைக் கொடுக்கின்றேன் ; மிகுதிக்கு நான் உனக்கு கடன் பட்டிருக்கிறேன் ” என்றார். இதைக் கேட்டு யாவ ரும் கண்ணீர் விட்டுக்கொண்டு பிராணன் தேகத்தை விடுவது போலத் தங்கள் இருப்பிடம் சென்றார்கள். பிறகு இராமர் புஷ்பகத்துக்கு விடை கொடுத்தனுப்பினார்.
58. சீதாவிவாசம்
வெகு காலம் இராமரும் சீதையும் சந்தோஷத்துடன் கூடியிருக்க சிசிர் காலம் வந்தது. காலையில் தரும காரியங் களை முடித்துக்கொண்டு இராமர் எஞ்சிய பகலை அந்தப் புரத்தில் கழிப்பார். சீதையும் காலை வேலைகளையும், தேவ காரியங்களையும் செய்துவிட்டு மாமியார்களெல்லாருக்கும் சுசுரூஷை செய்து பின்னர் நன்றாய் அலங் கரித்துக்கொண்டு இராமரிடம் வருவாள். ஒரு நாள் தேவ கன்னியைப்போன்ற சீதையைப் பார்த்து – “வைதேகி! பிரசவகாலம் கிட்டிவிட்டது. என்ன விரும்புகிறாய்? என்ன செய்ய வேண்டும்” என்றார் இராமர். வைதேகி புன்னகையுடன் “இராகவரே! புண்ணியமான தபோ வனங்களைப் பார்க்க விரும்புகிறேன். அங்கு ஒரு இரவா வது கழிப்பேன்” என்றாள். ”அப்படியே ஆகட்டும். கவலைப்படாதே. காலையில் போவாய்’ என்று இராமர் பதிலுரைத்தார்.
அதன் பின்னர் இராமர் சிநேகிதர்களின் மத்தியில் இருக்க “பத்ர ! நகரத்திலும், நாட்டிலும் ஜனங்கள் என்னைக் குறித்து என்ன சொல்லுகிறார்கள். நல்லதோ கெட்டதோ உள்ளபடி சொல்’ என்றார். இதைக்கேட்டு கை கூப்பிக்கொண்டு வெகு வணக்கத்துடன் பத்ரன் பதில் உரைத்தான்.-“பட்டண வாசிகள் யாது செப்பு கிறார்களோ கேளுங்கள். தேவர்களாலாவது, தானவர்க ளாலாவது செய்யமுடியாததும், நம்முன்னோரால் கேட்கப் படாததுமான சேது அணையை இராமர் கட்டினார்; வெல்ல முடியாத இராவணனையும் கொன்றார். வானரர்களும், ரி ர் களும், இராக்ஷசர்களும் வசப்படுத்தப்பட்டார்கள். இராவணனை போரில் ஜயித்து, பொறுமையுடன் இராகவர் சீதையை அழைத்துக்கொண்டு வந்திருக் கிறார். முன்னம் பலாத்காரமாய் இராவணனால் கொண்டு போகப்பட்டவளை அடைந்து அவருக்கு எவ்வித சுகம்? இராக்ஷசனது வசம் இருந்தவளை அவர் ஏன் வெறுக்க வில்லை. நாமும் நமது பத்தினிகளிடம் அப்படியே பொறுக்க வேண்டுமே! அரசன் செய்வதை பிரஜைகள் அனுஷ்டிப்பார்களன்றோ? இவ்விதம் பலவாறு நகரவாசி கள் சொல்லிக் கொள்ளுகிறார்கள் என்றான். இராமர் இதைக்கேட்டு மிகவும் மனம் நொந்து “இது எப்படி” என்று சிநேகிதர்களைக் கேட்டார். அவர்களும் தலை வணங்கி “அவ்வண்ணமேதான் ” என்றார்கள்,
இராகவர் சிநேகிதர்களுக்குப் போகும்படி உத்திரவு அளித்துவிட்டு, மனதைத் திடப்படுத்திக்கொண்டு காவ லாளனைப் பார்த்து “ஸௌமித்திரியையும், பரதனையும், என்றார். சத்ருக்னனையும் சீக்கிரம் அழைத்து வா” உடனே அவர்கள் நால்வரும் கைகூப்பிக்கொண்டு தலை குனிந்து அவர் முன்னிலையில் வந்து, கண்களில் நீர் ததும்ப ஒளியற்ற அவரது முகத்தை நோக்கிக் கவனத்துடன் நின்றார்கள். இராமர் கண்ணீரை அடக்கிக்கொண்டு அவர்களைத் தழுவி, எழுந்திருக்கச்செய்து ஆசனங்களில் உட்காருவித்து சொல்லலானார். “நீங்கள்தான் எனக்கு யாவும்; நீங்கள்தான் என் பிராணன். உங்களுடன் தான் நான் அரசாளுகின்றேன். நீங்கள் எல்லா சாஸ் திரங்களும் அறிந்தவர்கள்: திடபுத்தி யுள்ளவர்கள். இந்த விஷயம் விசாரிக்க வேண்டியது; இதைக் கவனித்துக் கேளுங்கள். எனது சீதையைக் குறித்து புரவாசிகள் எப்படி பேசிக்கொள்ளுகிறார்கள். அவர்களுடைய அபவாதம் பெரிது. இதைக் குறித்து வெறுப்பு என் மனதை அறுக்கிறது. நானோ மஹாத்மாக்களான இக்ஷ்வாகு வம் சத்தில் பிறந்தவன்; சீதையும் மஹாத்மாக்களாகிய ஜனக குலத்தில் பிறந்தவள். அவள் ஜன சஞ்சாரமற்ற தண்ட காரண்யத்தில் இராவணனால் எப்படி தூக்கிக்கொண்டு போகப்பட்டாள் என்றும், அவன் எப்படி கொல்லப்பட் டான் என்றும் அறிவீர்கள். இராவணனது கிரஹத்தில் வசித்திருந்த சீதையை எவ்விதம் இராஜதானிக்கு அழைத்து வருவது என்று சிந்திக்கையில் எனக்கு நம்பிக்கை ஊட்ட சீதை அக்னியுனுள் புகுந்தாள். அப்பொழுது தேவர்கள் முன்னிலையில் அக்கினிபகவான் ‘சீதை பாபமற்றவள்’ என்றான். அவ்விதமே சுரர்களுக்கும், ரிஷிகளுக்கும் நடுவே வாயுவும், சந்திராதித்யரும், ஜானகி பாபமற்றவள்’ என்றார்கள். இவ்விதம் கேட்ட பிறகு இந்திரனால் சீதை என்னிடம் கொடுக்கப்பட்டாள். என் மனமும் அவள் சுத்தமானவளே என்கிறது. அதனால் தான் நான் சீதையை அயோத்தியைக்கு அழைத்து வந் தேன். இப்பெரிய அபவாதம் என்னை வருத்துகிறது. எவ னைப்பற்றி ஜனங்கள் அபகீர்த்தி சொல்லுகிறார்களோ அவன் தாழ்ந்த உலகத்தை அடைகிறான். அபகீர்த் தேவர்களால் நிந்திக்கப்படுகிறது. கீர்த்தி உலகத்தால் புகழப்படுகிறது. எல்லா செயல்களும் கீர்த்திக்காகவே. அபவாதத்துக்கு பயந்து பிராணனையும் விடுவேன்; உங் களையும் விடுவேன். சீதைமாத்திரம் என்ன? நான் சோக சாகரத்தில் கிடக்கின்றேன்; ஸௌமித்திரியே, சீதையை தேரில் அழைத்துச் சென்று நமது நாட்டுக்கு வெளியே விட்டுவா. கங்கைக்கு அக்கரையில் தமஸைக்கு அருகில் வால்மீகியினுடைய திவ்யமான ஆசிரமம் இருக்கிறது. அந்த ஜனங்களற்ற தேசத்தில் அவளை விட்டு சீக்கிரம் வருக. நான் சொல்வதைக்கேள். உனக்கு மங்களம் உண் டாகுக.கங்கா தீரத்து ஆசிரமங்களைப் பார்க்கவேண்டும் என்று சொல்லியிருக்கிறாள் சீதை. அவள் ஆசை பூர்த்தி யாகட்டும்’ இவ்விதம் உத்திரவு இட்டுவிட்டு கண்ணீர் வடிய இராமர் உள் சென்றார்.
இரவு கழிந்தவுடன் இலக்ஷ்மணர் உலர்ந்த முகத் துடன் ஸுமந்திரரை நோக்கி-‘இரதத்தில் குதிரைகளைப் பூட்டுங்கள் ; சீதைக்காக நல்ல ஆசனம் விரியுங்கள். அர சரின் உத்திரவின்மேல் நான் மகரிஷிகளின் ஆசிரமத் துக்கு சீதையை அழைத்துப்போகவேண்டும்” என்றார். சுகமான படுக்கையும், அழகான விரிப்பும் போடப்பட்ட இரதத்தை ஸுமந்திரர் கொண்டுவர இலக்ஷ்மணர் இராஜ கிரஹத்துள் சென்று சீதையை அடைந்து -“நீங்கள் அரச ரிடம் வரம் கேட்டீர்கள்; அவரும் வாக்களித்தார். ஆகை யால் கங்காதீரத்திலுள்ள முனிகளுக்குப் பிரியமான ஆசிரமங்களில் உங்களைச் சேர்க்க வேண்டியவன்” என்றான். இதைக்கேட்டு வைதேகி சந்தோஷமடைந்தாள்; ரிஷிபத் தினிகளுக்குக் கொடுப்பேன் என்று வஸ்திரங்களையும், விலையுயர்ந்த ஆபரணங்களையும் எடுத்துக் கொண்டு கிளம்புவாளாயினாள். “அப்படியேசெய்க’ என்றுசொல்லி சௌமித்திரி இரதத்தில் மைதிலியை ஏற்றிக்கொண்டு இராமருடைய ஆக்ஞையை நினைத்து வேகமாகச் சென் றான். அப்பொழுது அவரை பார்த்து சீதை “ரகுநந்தன ரே! அநேக அபசகுனங்களைக் காண்கிறேனே. என் கண் துடிக்கிறது. உடல் நடுங்குகிறது. மனதும் சுவஸ்தமாய் இல்லையே” என்றாள். இவ்விதம் ஸௌமித்திரியுடனும் ஸுமந்திரருடனும் சீதை கங்கையை அடைந்தாள்.
பாகீரதியின் கரையை யடைந்து கண்ணீர் ததும்ப இலக்ஷ்மணன் கைகூப்பிக்கொண்டு, “வைதேகி ! ஆரிய ரால் இடப்பட்ட கட்டளை என்னை வருத்துகிறது. னால் நான் லோகாபவாதத்துக்கும் பாத்திரன் ஆகிறேன்: எனக்கு மரணம் மேலானதே. என்மேல் தயை புரிக” என்று சொல்லி பூமியில் விழுந்தான். “எனக்குத் தெரிய வில்லையே; உள்ளத்தைச்சொல்” என்றாள் மைதிலி. இப் படி தூண்டப்பட்டு இலக்ஷ்மணன் மனம் வருந்தி கீழ் நோக்கிக்கொண்டு சொன்னான் “உங்களைக் குறித்து சபையிலும் ஊரிலும் கோரமான அபவாதம் கேள்வி யுற்று இராமர் வருத்தத்துடன் உங்களை இந்த ஆசிரமங்களில் விட்டுவிடவேண்டுமென்று என்னை ஆஞ்ஞாபித்திருக்கிறார். இதுதான் பிரம்மரிஷிகளின் தபோவனம். வருந்தாதீர்கள். வால்மீகி எங்கள் பிதா தசரதரின் பிரியமான சிநேகிதர். அவரை அண்டி உபவாசம் செய்துக் கொண்டு சௌக்கியமாய் இருப்பீர்” என்றான். இந்த கடுமையான செய்தியைக் கேட்டு வைதேகி பூமியில் விழுந்தாள். பிறகு மூர்ச்சை தெளிந்து இலக்ஷ்மணரிடம் சொல்லலுற்றாள்-” என் சரீரம் துக்கத்துக்காகவே ஏற்பட்டதாகக் காண்கிறது. ஸதியாயிருக்க,இப்படி விடப்படும்படி என்ன பாவம் செய் ே த ே (60) முன்னர் எந்தப் பெண்களைப் பிரித்து வைத்தேனோ? ஆசிரமத்தில் இருந்துக் கொண்டு எனது துக்கத் தை யாருக்குச் சொல்லுவேன். ஜாஹ்னவி ஜலத்தில் இப்போதே என் பிராணனை விட்டுவிடுவேன்; ஆனால் எனது பர்த்தாவின் வம்சம் பரிகாசத்திற்கு இடமாகுமே! உன் கட்டளையை நிறைவேற்று. என் பேச்சைக் கேள். எல்லோருக்கும் என் அபிவாதத்தைச் சொல். “இராகவரே! நான் சுத்தமானவள் என்றும் எப்போதும் உங்க ளிடம் பக்திகொண்டவள் என்றும் அறிவீர். நீங்கள் தான் எனக்கு மேலான கதி. கீர்த்தி மிகவும் மேலானது, ஆகையால் என்னைப்பற்றி வருந்தவேண்டாம். பதிதான் ஸ்திரீகளுக்கு தெய்வம், பந்து, குரு. ஆகையால் பர்த் தாவின் காரியம் பிராணனைவிடப் பிரியமானது” இவ்விதம் சுருக்கமாக இராமரிடம் சொல்லவும் என் ன்றாள். இலக்ஷ்மணர் இதைக்கேட்டு சீதையைப் பிரதக்ஷிணம் செய்து திரும்பலானார். அநாதைப்போல் நின்ற சீதையை திரும்பி பார்த்துக்கொண்டு சென்றார். அழுதவண்ணம் நதியின் அக்கரையை அடைந்து புத்தி கலங்கினவராய்த் தேரில் ஏறினார். சீதையும் இரதம் காணப்பட்ட வரையில் இலக்ஷ் மணரைப் பார்த்துக்கொண்டு நின்றாள்.
வால்மீகியின் புதல்வர்கள் சீதை அழுதுக்கொண்டிருந்ததை நோக்கி அம்முனியிடம் தெரிவித்தார்கள். இதைக்கேட்டு அவர் தபசின் மகிமையால் எல்லாமறிந்து மைதிலி இருக்கும் இடம் சென்று மதுரமாகப் செப் பினார் – “நீ தசரதரின் மருமகள். இராமருடைய பிரியமான இராணி. ஜனகருடைய குமாரி. நல்வரவு. பதி விரதையே! உன் வரவை அறிவேன். காரணமும் தெரி யும். ஆசிரமத்து அருகில் தாபஸிகள் இருக்கிறார்கள். அங்கு இரு; அவர்கள் உன்னை கவனித்துக் கொள்ளுவார்கள். அர்க்கியம் பெற்றுக்குள். சொந்த கிருஹத்தில் இருப்பதுபோல் இரு; வருந்தாதே.” சீதை ரிஷியினு டைய இந்த அற்புதமான சொற்களைக் கேட்டு வணங்கி “அப்படியே ஆகட்டும்” என்றாள். முனிவர் சீதையுடன் வருவதைப்பார்த்து முனி பத்தினிகள் நெருங்கி – “வெகு காலம் கழித்து வந்திருக்கிறீர்கள். உங்களுக்கு நமஸ் காரம். நாங்கள் என்ன செய்யவேண்டும்” என்றார்கள். வால்மீகி பதிலுரைத்தார் – “புத்திமானான இராமரின் மனைவி வந்திருக்கிறாள். குற்றமற்றவள். கணவனால் விடப்பட்டிருக்கிறாள். நான் இவளைக் காப்பாற்றவேண் டும். இவளைப் பரம சிநேகத்தோடு கவனிக்கவேண்டும்.” தாபஸிகள் மெள்ள மெள்ள தங்கள் ஆசிரமத்திற்கு சீதையை அழைத்துச் சென்றார்கள்.
அன்றிரவே, சீதாதேவி இரண்டு புத்திரர்களைப் பெற்றாள். இந்த சுப சமாசாரத்தை முனி குமாரர்கள் வால்மீகிக்குத் தெரிவித்தார்கள். வால்மீகி சந்தோஷம் கொண்டார்: சந்திரனைப் போன்றவும், மஹாதேஜ ஸுடையவுமான அக்குழந்தைகளைக் காணச் சென்றார். முதல் பிறந்தவனுக்கு குசன் என்றும், மற்றவனுக்கு லவன் என்றும் பெயரிட்டார்.
59. ராஜசூய யக்கியம்
அயோத்தியைக்கு திரும்பி வருகையில் ஸுதர் இலக்ஷ்மணருக்குச் சொல்லலானார்”முன்னர் துர்வாஸர் வசிஷ்டருடைய ஆசிரமத்தில் மழைக்காலம் கழிக்கலானார். சாயங்கால வேளையில் ரிஷிகளுக்கிடையே பேச்சு நடந்தது. அப்பொழுது உனது தகப்பனார் அவரைக் காண வந்தார். அதன் மத்தியில் அரசர் வணக்கத்துடன் கேட்டார்- மனின் ஆயுள் என்ன? மற்ற புத்திரர்களின் வயதுப் பிர ” பகவானே ! என் வம்சம் எப்படி’ வளரும்? எனது இரா மாணம் யாது? இராமனுடைய புத்திரர்களுடையது எவ்விதம்? இவ்வம்சப் போக்கைத் தெரிவியுங்கள்” என்றார். துர்வாஸர் பதிலுரைத்தார்-” முன்னர் தைத்தியர்கள் ஸூரர்களால் ஹிம்சிக்கப்பட்டு பிருகுபத்தினியை அடைந்தார்கள். அவளிடம் அபயம் பெற்று இருந்தார் கள். அதைக்கண்டு விஷ்ணுபகவான் பிருகு பத்தினியின் சிரசை சக்ராயுதத்தால் வெட்டினார். அப்பொழுது பிருகு கோபம் கொண்டு “என் மனைவியைக் கொன்ற காரணத் தால் நீ பூலோகத்தில் பிறப்பாய். அநேக வருஷ காலம் பத்தினி வியோகம் அடைவாய்” என்று சபித்தார். இப் படிச் சபிக்கப்பட்டவர்தான் உங்களது குமாரன். சீதை யிடம் இராமருக்கு இரண்டு பிள்ளைகள் அயோத்தியை அன்றி வேறு இடத்தில் பிறப்பார்கள். இவர்களுக்கு இராகவர் அபிஷேகம் செய்து வைப்பார்.” என்றார். ஆகையால் சீதையைக் குறித்தாவது, இராமரைக் குறித் தாவது வருந்தாதீர்.” இதைக்கேட்டு இலக்ஷ்மணர் திருப்தி அடைந்தார்.
இலக்ஷ்மணர் கோமதியில் இரவைக் கழித்து பின்னர் அயோத்தியை அடைந்து மனம் சோர்ந்திருந்த இராம மரைக் கண்டார். அவர் கால்களில் வணங்கி – “உங் களது கட்டளை பூர்த்தி செய்தேன். உங்களைச் சேவிக்கத் திரும்பி வந்துள்ளேன். காலம் இப்படிப்பட்டதே; வருந் தாதீர்கள். மரணம் வரையில் பிரிவும் சேர்க்கையும் சக ஜமே. பிரிவு நிச்சயமாதலால் புத்திரர்கள், பாரியை, சிநேகிதர், தனம், இவைகளில் அதிகப்பற்று கூடாது என்றார். இப்படி இலக்ஷ்மணரால் தேற்றப்பட்டு “இலக்ஷ்மணா! நீ சொல்லுவது சரியே. என் வேலையில் சந்தோஷம் அடைவேன். உனது பேச்சினால் சுகம் கிட் டியது’ என்றார்.
ஒரு நாள் தமக்குப் பிரியமான பரத, இலக்ஷ்மணர் களைப் பார்த்து இராமர் சொல்லலானார். “எனது ஆத் மாவைப்போன்ற உங்களுடன் கூடி சர்வபாபநாசினியான இராஜஸூய யக்கியம் செய்ய விரும்புகிறேன். அதிலே சாசுவதமான தர்மம். எது சிரேயஸ்கரம் என்று யோசி யுங்கள்” என்றார். இலக்ஷ்மணர், “அசுவமேதம் மகத் தானது. எல்லா பாவங்களையும் அகற்றுவது. இரகுநந் தனரே! இதுதான் உங்களுக்கு அடுத்தது. பூர்வம், இந் திரன் பிரம்மஹத்தி பாவத்தால் சூழப்பட்டிருந்தபோது, அசுவமேதத்தால் புனிதனானான், என்று கேட்டிருக் கிறோம்” என்றார். காகுத்தர் இதைக்கேட்டு இலக்ஷ்மண ரைப் பார்த்து “இலக்ஷ்மணா! வசிஷ்டராதி பிராமண சிரேஷ்டர்களை வரவழைத்து அவர்களுடன் யாகத்தைக் குறித்து மந்திராலோசனை செய்து உத்தமமான எல்லா இலக்ஷணங்களும் கொண்ட குதிரையைச் செலுத்துவேன்.” என்று தர்மயுக்தமாய் மேலும் செப்பினார். இதைக்கேட்டு இலக்ஷ்மணர் விரைவாக எல்லா பிராமணர் களையும் வரவழைத்து இராகவர் முன் சேர்ப்பித்தார். அவர்கள் தங்களுக்கு அபிவாதனம் செய்த திவ்ய காந்தி யுடைய இராகவரைப்பார்த்து ஆசீர்வதித்தார்கள். இரா மர் அசுவமேதத்தைக் குறித்துள்ள தமது எண்ணத்தைத் தெரிவித்தார். அவர்கள் இதைக்கேட்டு சிவபெருமா னுக்கு நமஸ்கரித்து, அசுவமேதத்தை சிலாகித்தார்கள். அதன்மேல் இராமர் இலக்ஷ்மணருக்குச் செப்பினார். ‘சீக்கிரம் மஹாத்மாவாகிய சுக்கிரீவனுக்குத் தூதனை அனுப்பு. அநேக பெரும் வானரர்களுடன் வந்து இந்த மஹோத்ஸவத்தை அனுபவிக்கட்டும். நிகரற்ற விபீ ஷணரும் அநேக இராக்ஷசர்களால் சூழப்பட்டு இந்த யாகத்துக்காக வரட்டும். எனக்கு பிரியம் செய்ய விருப்ப முள்ள அரசர்களும் பரிவாரங்களுடன் வரட்டும். தபோ ர்களான ரிஷிகளையும் வெளிநாடு சென்ற பிராமணர் களைத் தங்கள் பத்தினிமார்களுடன் அழை. கோமதியின் அருகில் நைமிசாரண்யத்தில் பரிசுத்தமான இடம் ஏற் படட்டும். எல்லா சாந்திகர்மங்களும் செய்விப்பாயாக. எனது தாயார்களையும்,அந்தப்புரத்து மற்றும் எல்லா ஸ்திரீகளையும், தங்கத்தால் செய்யப்பட்ட சீதை விக்ர ஹத்தையும், தீக்ஷாவிதிகளைத் தெரிந்தவர்களை முன் னிட்டுக்கொண்டு பரதன் செல்லட்டும்” என்றார்.
இவ்விதம் எல்லாவற்றையும் முடித்துக் கொண்டு இராமர் சர்வலக்ஷணங்களும் பொருந்திய ஒரு-கருப்பு குதிரையை விடுத்தார். அதைக்காக்க இலக்ஷ்மணரை நியமித்து, அவர் சைனியத்துடன் நைமிசாரண்யம் சென் றார்; அங்கு யக்கிய பூமியை நோக்கி ஆனந்தமடைந்து ”நன்றாயிருக்கிறது” என்றார். அப்படி இருக்கையில் எல்லா அரசர்களும் தங்களது ஈகைகளைக் கொணர்ந்தார் கள். இராமரும் அவர்களுக்குத் தக்கவாறு மரியாதை செய்து அவர்களுக்கும், அவருடன் வந்தவர்களுக்கும் தகுந்த ஏற்பாடுகள் செய்தார். சத்ருக்னர் கூட இருக்க, பரதர் எல்லாருக்கும் அன்னபானாதிகளை உபசரித்தார். வானரர்கள் சுக்ரீவருடன் இருந்துக்கொண்டு எல்லா பிராமணர்களையும் உபசரித்தார்கள். விபீஷணரும் இரா க்ஷசர்களின் சகாயம் கொண்டவராய் ரிஷிகளுக்கு மரி யாதைகள் செய்தார். இவ்விதமாக அசுவமேதம் நடந்தது; இலக்ஷ்மணரால் காக்கப்பட்டு குதிரை சென்றது. அவ் விடமிருந்த வயோதிக முனிவர்கள் “அவ்விதமான யாகத் தைக் கண்டதில்லை என்றார்கள். அதற்கு முன்னர் அத் தகையது நடந்ததுமில்லை. இவ்விதமாக சர்வகுணங்களும் கொண்ட இந்த யாகம் ஒரு வருஷத்துக்கு மேல் செவ்வனே நடந்தது.
60. குசலவர் இராமாயணகானம்
இவ்விதமாக அத்யத்புதமாக யாகம் நடந்துகொண் டிருக்கையில், முனி சிரேஷ்டரான வால்மீகி தமது சிஷ்யர் களுடன் அவ்விடம் சேர்ந்தார்; ரிஷிகளுக்காக நியமிக்கப் பட்ட இடத்தில் தனக்காக குடிசைகளை நியமித்துக் கொண்டார். பின்னர் அவர் சந்தோஷத்துடன், இரு சிஷ்யர்களுக்கும் சொல்லுவாராயினார்-“நீங்கள் அதிக ஆனந்தத்துடன் இராமாயண காவியம் முழுவதையும் பரி சுத்தமான ரிஷிகளிருப்பிடங்களிலும், பிராமண வாசஸ் தலங்களிலும், இராஜமார்க்கங்களிலும், மன்னவர்களின் மாளிகைகளிலும் பாடவேண்டும். விசேஷமாக யக்கியம் நடக்கும் இராமரது பவனத்தண்டையும் ருத்விஜர் களுடைய முன்னிலையிலும் பாடவேண்டும். மலைமேல் உண்டாகும் பலவகையான ருசிகரமான பழங்கள் கிடைக் கும். அக்கனிகளையும் மூலங்களையும் உண்டு நீங்கள் களைப்படையீர்கள். மதுர இராகத்தினின்றும் தவறா தீர்கள். மஹீபாலரான இராமர் ரிஷிகளின் மத்தியில் இருந்துக்கொண்டு கேட்கவிரும்பினால், பாடுங்கள். இனிய குரலுடன் நான் கற்பித்தபடி தினம் இருபது சர்கங்கள் பாடுங்கள். நீங்கள் எவருடைய புதல்வர்கள் என்று இராமர் கேட்டால், வால்மீகியுடைய சிஷ்யர்கள் என்று சொல்லுங்கள்”.
காலையில் அவ்விருவரும் ஸ்நானாதிகளை முடித்துக் கொண்டு ரிஷி நியமித்தபடி பாடலானார்கள். இந்த அபூர்வமான அழகுள்ள தந்திநாதத்தோடு கூடிய காவியத் தைக்கேட்டு இராகவர் குதூகலமடைந்தார். காலைக் காரியம் முடிந்ததும் மகாமுனிகளையும்,அரசர்களையும், பண்டிதர்களையும், வேதியர்களையும், பௌராணிகர் களையும், வயது முதிர்ந்த பிராமணர்களையும், ஸ்வரஞான முள்ளவர்களையும், இவர்கள் எல்லாரையும் கூட்டி பின்னர் பாடகர்கள் இருவரையும் வரவழைத்தார். இவர் களையும், அரசரையும் பார்த்ததும் சபையோர் ஒருவர்க் கொருவர்-“இச்சிறுவர்கள் இராமருக்குச் சமான மானவர்களாயும், அவரது பிரதிபிம்பம்போல் காண்கிறார்கள். இவர்கள் ஜடையும், மரஉரியும் அணிந்திரா விடில் யாதொரு வித்தியாசமும் கண்டிரோம்” என்று சொல்லலானார்கள். இவர்கள் பேசிக்கொண்டிருக்க முனி குமாரர்கள் பாடலானார்கள். இந்த மதுரமானதும் அதி மானுஷமாய் கந்தர்வர்களது போன்றதுமான பாட்டைக் கேட்க அவர்களின் திருப்திக்கு அளவில்லை. இருபது சர்க்கங்களைக் கேட்ட பின்னர் இராமர் “இந்தப் பெருங் காவியத்தின் கர்த்தா எந்த முனி சிரேஷ்டர்” என்று வினவினார். அவர்கள் -“இதை ஆக்கியவர் பகவான் வால்மீகி: அவர் இவ்விடம் வந்திருக்கிறார். அவரால் தங்களுடைய சரித்திரம் முற்றிலும் காண்பிக்கப்பட் டிருக்கிறது. இதைகேட்க விருப்பம் இருப்பின், காரியம் முடிந்ததும் சகோதரர்களுடன் சுகமாய் அமர்ந்து கேளுங் கள் என்று பதிலுரைத்தார்கள். இராமர் அங்கீகரிக்க அவரிடம் உத்திரவு பெற்று சந்தோஷமடைந்தவராய் வால்மீகி மகரிஷியிடம் சென்றார்கள்.
இவ்விதம் இராமர் சபையிலிருந்து இக்கதையைக் கேட்கலானார். கதையின் மத்தியில் இச்சிறுவர்கள் சீதை யின் புத்திரர்களென்று அறிந்து இராமர் நன்னடத்தை யுள்ள தூதரைக் கூப்பிட்டு “பகவான் வால்மீகியிடம் செல்லுங்கள். தான் சுத்த நடத்தையுடையவள்; கல் மஷமற்றவள் என்று உறுதி சொல்ல சீதை இஷ்டப்படு கிறாளா என்று சீதையினுடையவும் முனிவருடையவும் அபிப்பிராயத்தை அறிந்து கொண்டு எனக்கு சீக்கிரம் தெரிவியுங்கள்’ என்றார். இந்த ஆச்சரியமான பேச் சைக்கேட்டு தூதர்கள் முனிபுங்கவரிடம் சென்றார்கள். அவருக்கு நமஸ்கரித்து இராமருடைய உத்திரவைத் தெரி வித்தார்கள். அப்படியே ஆகட்டும். உங்களுக்கு மங்களம். இராகவர் எப்படி செப்புகிறாரோ, அப்படியே சீதை செய்வாள். ஸ்திரீகளுக்கு பதி தெய்வமல்லவோ” என்றார் மகரிஷி. தூதர்கள் விரைந்து வந்து முனியினது வாக்கியத்தை அறிவித்தார்கள்.
மறுநாள் காலை யக்கிய பூமியையடைந்து இராகவர் எல்லாரையும் வரவழைத்தார். வசிஷ்டரும், வாமதே வரும், விசுவாமித்திரரும், அகத்தியரும், மற்ற தபோநிதி களும், இராக்ஷசர்களும், வானரர்களும், பிராம்மணாதி ஏனையரும் குதூகலத்துடன் வந்து சேர்ந்தார்கள். எல் லாரும் வந்து அசைவற்று இருப்பதைக்கேள்வியுற்று வால்மீகி முனிவர் வந்தார். சீதை தலைகுனிந்தும், கைகூப் பிக்கொண்டும், இராமரை மனதில் தியானித்துக்கொண் டும், பிரம்மாவுக்குப்பின் சுருதி செல்லுவதுபோல, ரிஷி யைத் தொடர்ந்து வந்தாள். சோகமடைந்திருந்த எல் லாரிடமிருந்தும் கலகலவென்று சப்தம் கிளம்பியது. இராமர் செய்தது சரி” என்றார் சிலர்.”சீதை செய் தது சரி’ என்றார் சிலர். இருவர் செய்ததும் சரியே’ என்றார் மற்றும் சிலர். அப்போது வால்மீகி சொல்லு வாராயினார். “தாசரதே! இந்த சீதை நல்ல விரதம் பூண்டவள் : தர்மமனுஷ்டிப்பவள். லோகாபவாதத்துக் குப்பயந்து உங்களால் எனது ஆசிரமத்துக்கருகில் விடப் பட்டாள். சீதையின் இந்த இரண்டு புதல்வர்களும் உங்க ளுடையவர்களே. நான் சொல்வது உண்மை. நான் அவள் சுத்தமானவள் என்று தான் காப்பாற்றினேன். மைதிலி துஷ்டையாகில் நான் செய்துள்ள எல்லா தபசின் பலனை அடையாதிருப்பேனாக. பதியையே தெய்வமாகக் கொண்ட அவள் இதை நிரூபிக்க வந்திருக்கிறாள்.”
வால்மீகியின் பேச்சைக்கேட்டு இராமர் எல்லாருக் கும்மத்தியில் சொல்லலுற்றார் -“தாங்கள் சொல்லுவது வாஸ்தவமே. தாங்கள் சொன்னது போதும். முன்னர் தேவர்களின் சந்நிதியில் இவ்விதம் நடந்தபின் தான் நான் அவளை வீட்டுக்கு அழைத்து வந்தேன். லோகா பவாதம் பலமானது. அதனால்தான் சீதையை விலக்கி னேன். தாங்கள் என்னை மன்னிக்கக்கேட்டுக்கொள்ளு கிறேன். மீளவும் இந்த சபையில் அவள் சுத்தமானவள் என்று நிரூபிக்கப்பட்டால் திருப்தியடைவேன். இந்த லவகுசலர்கள் என் குமாரர்களென்று அறிவேன் ”இராமருடைய அபிப்பிராயத்தை அறிந்து பிதாமகர் முன் செல்ல இந்திராதி தேவர்கள் எல்லாரும் வந்து சேர்ந்தார்கள். எல்லோரும் வந்ததை நோக்கி சீதை காஷாய வஸ்திரம் உடுத்தி தலைகுனிந்து, “எப்படி நான் இராமரைத் தவிர வேறொருவரையும் மனதில் நினைத்த தில்லையோ, அப்படியே பூமிதேவி எனக்கு புகலிடம் கொடுப்பாயாக. எப்படி நான் இராமரை மனதா லும் செய்கைகளாலும், வாக்கினாலும் அர்ச்சித்தேனோ அப்படியே எனக்கு புகலிடம் கொடுப்பாயாக. எப் படி இராமரைத் தவிர வேறு யாரையும் அறியேன் என்பது மெய்யோ அப்படியே எனக்கு புகலிடம் கொடுப்பாயாக” என்றாள். இவ்வாறு சீதாதேவி சத்தி யம் செய்ய, பூமியிலிருந்து ஒரு திவ்யமான சிங்காசனம் வெளிவந்தது. அதில் பூதேவி மைதிலியின் கைப்பற்றி நல்வரவு சொல்லி உட்காருவித்தாள். சிங்காதனத்தில் உட்கார்ந்து அந்த பாபமற்றவள் பூமிக்குள் செல்ல திவ்ய மான புஷ்பமாறி பொழிந்தது. யக்கியபூமியிலிருந்த எல் லோரும் ஆச்சரியமடைந்தார்கள். அப்போது லோகமும் பிரமித்ததுபோல நின்றது.
வைதேகி ரஸாதலம் சென்றதும், இராமர் முன்னிலை யில் “நல்லது, நல்லது”, என்று எல்லோரும் ஆரவாரித் தார்கள். இராமர் வெகு துக்கமடைந்து தலை குனிந்த வராய் இருந்தார். பின்னர் குரோத சோக பரவசராய் ‘என் கண் எதிரே சீதை போய் விட்டாளே! பூதேவி! சீதையை எனக்குத் திருப்பிக்கொடுத்துவிடு. இல்லையேல் எல்லா மலைகளையும் உடைத்து எவ்விடமும் நீரால் நிறப்பி விடுவேன்.” என்றார். இராமர் இப்படிச் சொல்ல கணங்களோடு கூடியிருந்த பிரம்மா சொல்லலானார்-” ராம! இப்படி வருந்தாதீர். பூர்வத் தன்மையை நினைவூட்டிக்கொள்ளுங்கள்; நாங்கள் சொல்ல வேண்டியதில்லை. தாங்கள் விஷ்ணுவின் அவதாரம் என்று மறக்காதீர். சீதை பூர்வத்தை அனுசரித்து நாகலோகம் சென்றாள். சுவர்க்கத்தில் மீளவும் சேருவீர்கள் சந்தேகமில்லை.நான் இந்த சபையில் சொல்லுவதைக் கேளுங்கள். தாங்கள் கேள்வியுற்ற இந்த காவியம் சிரேஷ்டமானது. ராம! அது உங்களது பிறப்புமுதல் சுகதுக்கங்களையும், நடக்கப் போவதையும், மற்றெல்லாவற்றையும் விஸ்தாரமாய் தெரிவிக்கிறது. வால்மீகியினால் செய்யப்பட்ட இந்த முதல் காவியம் தங்களை நாடியது. காகுத்தரே. எதிர் காலத்து விஷயத்தைத் தெரிவிக்கும் ‘உத்தரம்’ எனப் பட்ட காவியத்தின் மிகுதியைக் கேளுங்கள்’ இவ்வாறு தேவர்களுக்கு தேவரால் சொல்லப்பட்டதை இராமர் கேட்டு வால்மீகியை நோக்கி “பகவானே! ரிஷிகளும், பிராம்மணர்களும், மற்றெல்லோரும் எனது எதிர்காலத் திய உத்தர காண்டத்தைக்கேட்க வந்திருக்கிறார்கள். நாளை ஆரம்பிக்கலாம்” என்றார். பொழுது விடிந்ததும் முனிவர்களை அழைத்த பின்னர் புத்திரர்களை சாவதான மாய் பாடலாம் என்றார்; அவர்களும் அப்படியே பாடலானார்கள்.
இராமர், யக்கியம் முடிவுபெற எல்லா அரசர்களுக் கும், ரிக்ஷ, வானர, இராக்ஷசர்களுக்கும் செலவு அளித்து விட்டு, பிராமண சிரேஷ்டர்களுக்கு செல்வமும் கொடுத்து புத்திரர்களுடன் சீதையை மனதில் கொண்டவராய் அயோத்தியைக்குத் திரும்பினார். வேறு பார்யைகொள்ள கம் தான் நின்றது. வெகு காலம் செல்ல, இராமரின் வில்லை. பத்தினி ஸ்தானத்தில் சீதையின் பொன்விக்கிர தாயார் கௌசல்யை, புத்திர பௌத்திரர்கள் இடையில் மாண்டாள். அதன் பின்னர் சுமித்திரையும் கைகேயியும் அநேக தர்ம காரியங்களைச் செய்து முடித்து தெய்வலோகம் சென்றார்கள். இராமர் செய்தற்கரிய பித்ருக்கள், தேவதைகள் சம்பந்தமான யக்கியங்களை முடித்து அவர்களைத் திருப்தி செய்தார். இவ்விதம் சுகமாக அநேக ஆயிரம் வருஷங்கள் கழிந்தன.
சிறிது காலம் செல்ல, மாமாவான யுதாஜித்தின் வேண்டுகோளின் மேல் சிந்துவின் இருபக்கங்களிலும் உள்ள கந்தர்வ நாட்டை ஜயிக்குமாறு இராமர் பரதரை ஏவினார். பரதர் தனது தக்ஷன், புஷ்கலன் எனப்பட்ட இரண்டு குமாரர்களுடன் செல்ல, ஏழு நாள் கோரமான சண்டை நடந்தது. யுத்தம் முடிய தக்ஷனை தக்ஷசிலையிலும், புஷ்கலனை புஷ்கலாவதியிலும் அந்த செழிப்பான காந் தர்வ தேசத்தில் இராஜ்யம் புரிய நிலைநிறுத்தி ஐந்து வருஷங்கள் தங்கி பரதர் இராமரிடம் வந்து சேர்ந்தார். இராமர் விஷயங்களை அறிந்து சந்தோஷ மடைந்தார். பின்னர் இலக்ஷ்மணருடைய குமாரர்கள், அங்கதனையும் சந்திரகேதுவையும் அழகானவும், நோயற் றவுமான காருபதம் எனப்பட்ட மேற்கு தேசத்தில் ஒரு பட்டணத்திலும், மல்லருடைய வடக்கு தேசத்திலும் சந்திரகாந்தை எனப்பட்ட பட்டணத்திலும் அரசாள நியமித்தார்கள்.
61. இராம மஹாபிரஸ்தானம்
இராமர் இவ்விதம் தர்மம் செலுத்திக்கொண்டு வெகு காலம் கழிய, காலன் தபசி வேஷத்துடன் இராஜ வாயிலை யடைந்து -“நான் ஒரு காரியமாக வந்திருக்கிறேன் என்று இராமருக்குச் சொல்” என்றான். இலக்ஷ்மணர் அவ்வாறே அறிவிக்கலானார். இராமர். முனிவரை வரச் சொல் என, அவர் உள் சென்றார். இராமர் அவருக்குப் பூஜைசெய்து அர்க்கியம் கொடுத்த பின்னர் குசலம் விசா ரித்தார். அப்போது அந்த தபசி – “தாங்கள் நன்மையை நாடுவீர்களாயின், நம்மிருவருக்குள் தான் பேச்சு நடக்க வேண்டும். எவன் ஒருவன் நமது பேச்சைக் கேட்கிறானோ, அல்லது நம்மைப் பார்க்கிறானோ அவன் சாகவேண்டிய வன்” என்றார். அப்படியே என்று சொல்லி இராமர் “இலக்ஷ்மணா! சேவகனை அனுப்பிவிட்டு நீ வாயிலைக் காறு.நாங்கள் பேசுவதை எவன் கேட்கிறானோ அல்லது எங்களைப் பார்க்கிறானோ அவன் கொல்லப்படுவான் என்றார். அதன்மேல் முனிவர் சொல்லலானார்-“இராஜ னே! நான் வந்த காரியத்தைக் கேளுங்கள். பிதாமகர் என்னை, இவ்விதம் தெரிவிக்க அனுப்பியிருக்கிறார். ‘பூர் வத்தில் நான் உங்களது புத்திரன். உலோகங்களை இரக்ஷிப் பதாக உங்களுடன் உடன்பாடு. அதற்கேற்ப ஜகத்தில் பிரஜைகள் இராவணனால் பாதிக்கப்படுவதை உத்தேசித்து தாங்கள் மானுஷ ரூபம் எடுக்க மனம் கொண்டீர்கள். முன்னம் பத்து ஆயிரம், பத்து நூறு வருஷம் புவியில் இருப்பேனென்று நிர்ணயித்தீர்கள். அந்த காலத்தின் முடிவு நெருங்குகிறது. ஆனால் பிரஜைகளை மேலும் சேவிக்க வேண்டு மென்று ஆசை இருப்பின் அப்படியே இருங்கள். உங்களுக்கு மங்களம். இல்லையேல் தேவர்கள் தங்களையடைந்து கவலையற்று இருக்கட்டும்.” இப்பேச் சைக் கேட்டு இராகவர் சிரித்துக்கொண்டு – “தாங்கள் வந்து செப்பிய பிதாமகருடைய அதி அற்புதமான பேச் சைக்கேட்டு எனக்கு வெகு சந்தோஷம்.மூன்று லோகத் தின் இரக்ஷணைக்காகப் பிறந்தேன். திரும்பிப்போகத் சித்தமாக இருக்கிறேன்” என்றார்.
இவர்கள் இப்படிப் பேசிக்கொண்டிருக்கையில் இரா மரைப் பார்க்கும்பொருட்டு துர்வாஸ பகவான் வந்தார். இலக்ஷ்மணரிடம் “காலதாமதம் ஆகலாகாது. இராம ரிடம் அழைத்துச்செல். நீ அவருக்கு இந்த க்ஷணமே தெரிவிக்காவிடில் தேசத்தையும், உன்னையும்,புரத்தை யும், இராகவரையும்,பரதனையும்,உங்களது சந்ததியை யும் சபித்துவிடுவேன்” என்றார். இந்த கோரமான பேச் சைக் கேட்டு – “எல்லோருடைய நாசம் வேண்டாம். எனது ஒருவனது மரணமே போதும்’ என்று நிச்சயித்து இராமருக்கு ரிஷியின் வரவைத் தெரிவித்தார். இலக்ஷ்மணரின் பேச்சைக்கேட்டு காலனுக்கு விடைகொடுத் தனுப்பி வேகமாய் வெளிவந்து துர்வாஸரை நமஸ்கரித்து “என்ன செய்யக்கடவேன்” என்று விசாரித்தார். “தர்மவச்சலனே! கேள். இன்று ஒரு ஆயிர வருஷத்திய தபசு முடிந்தது. எனக்கு போஜனம் இடுக” என்றார். இராமர் அப்படியே சாப்பாடு செய்விக்க முனி சிரேஷ்டர் அமிருதத்துக்கொப்பான அன்னத்தை உண்டு சந்தோஷ மடைந்து தமதாசிரமம் சென்றார்.
முனிவர் சென்றதும் காலனுடைய பேச்சை நினைத்து இராமர் வருந்தினார். இராகுகிருஸ்த சந்திரன்போல் தீன மான இராமரின் முகத்தை நோக்கி இலக்ஷ்மணர் சொல்ல லானார்:-“மஹாபாஹுவே! எனக்காக வருந்தாதீர். காலத்தின் போக்கு இவ்வாறே. என்னை விலக்கி பிரதிக் கியை நிறைவேற்றுக. பிரதிக்கியை நடத்தாதவர்கள் நரகம் செல்லுகிறார்கள். என்னிடம் பிரியம் இருப் பின், என்னைக்கொன்று தர்மத்தைப் பாலனம் செய்யுங் கள்.” இலக்ஷ்மணர் பேச்சைக்கேட்டு இராமர் மந்திரிகளையும், புரோகிதர்களையும்,கூப்பிட்டு நடந்ததைத் தெரி வித்தார். அப்பொழுது வசிஷ்டர் சொன்னார் – இந்த மயிர் கூச்செறியும் படியான வினாசமும், இலக்ஷ்மண னின்று தங்களது பிரிவும் நான் முன்னமே அறிவேன். இவனை அகற்றுங்கள். காலனுடன் பிரதிக்கியை விணக்காதீர்; இல்லையேல் தர்மமே நசித்துப்போம்” இந்த தர்மயுக்தமான பேச்சைக்கேட்டு சபையின் மத்தி யில் இலக்ஷ்மணரைப் பார்த்து – “தர்மம் கெடவேண் டாம். உன்னை விடுகிறேன்; சாதுக்களின் மனதில் மரண மும் தியாகமும் ஒன்றுதான்” என்றார்.இராமரது பேச் சைக்கேட்டு இலக்ஷ்மனர் தனது கிரஹம் செல்லாமல் கூப் பின கையும், கண்ணீருமாய் ஸரயு தீரத்தைத் துரிதமாய் அடைந்து சுவாசபந்தம் செய்து நின்றார். அப்பொழுது ரிஷிகணங்கள் கூடி தேவர்கள் புஷ்பமாரி பொழிந்தார் கள். இந்திரன் அவனை கைகொண்டழைத்து தேவலோகம் சென்றார். விஷ்ணுவின் ஒரு அம்சம் வந்ததைக் கண்டு தேவர்கள் சந்தோஷமடைந்தார்கள்.
இராமர் இலக்ஷ்மணருக்கு விடை கொடுத்தனுப்பி வீட்டு துக்கம் மேலிட்டவராய் புரோகிதர்களையும், மந்திரிகளையும் வேதவித்துகளையும் சபை கூட்டிதர்மிஷ்டரான பரதனை இன்று அயோத்தியைக்கு அதி பதியாக அபிஷேகம் செய்துவிட்டு நான் வனம் செல்லு கின்றேன்” என்றார். இதைக்கேட்டு பரதர்-“இரகு நந்தனரே! தாங்கள் இன்றி சுவர்க்கலோகமாவது, இராஜ் யமாவது நான் விரும்பேன். இந்த குமாரர்கள் குசலவர் களை தக்ஷிண கோசலத்திலும், உத்தரகோசலத்திலுமாகப் பட்டாபிஷேகம் செய்யுங்கள். நாம் சுவர்க்கம் செல்லுவதைக்குறித்து தூதர்கள் சென்று சத்ருக்னனுக் சொல்லலானார்கள் -“இராமர் போகும் வழி நாங்களும் குத் தெரிவிக்கட்டும்” என்றார். “அப்போது ஜனங்கள் செல்லுவோம். காகுத்தரே! எங்களிடம் தங்களுக்குப் பிரீதியும், சிநேகமும் உண்டேல் தாங்கள் செல்லும் நல் வழியில் எங்களையும் வரவிடுங்கள். இதில்தான் எங்களுக்கு அதிக ஆசை. எங்களைக் கைவிடாதீர்கள்.” ஜனங்களின் இந்த திடபக்தியை அறிந்து இராமர் ‘அப்படியே’ என்றார். குசனை தக்ஷிண கோசலத்திற்கும், கட்டித்தழுவி உச்சி மோந்து அவர்களைத் தம் ஊருக்கு லவனை உத்திர கோசலத்திற்கும் அரசராக்கி அவர்களைக் அனுப்பினார்.
பிறகு சத்ருக்னனுக்காக தூதர்களை அனுப்பினார். அவர்கள் சத்துருக்னனுக்கு எல்லாவற்றையும் தெரிவித்துத் ‘துரிதப்படுத்துங்கள்’ என்றார்கள். இவ்விமான குலநாசனமான செய்தியைக் கேட்டு சத்துருக்னன் மதுரையில் தனது குமாரன் சுபாகுவையும், வைதிசத்தில் சத்ரு காதி என்ற மற்றவனையும் அபிஷேகம் செய்துவிட்டு தான் ஒரு இரதத்துடன் புறப்பட்டான். இதற்குள் இராமரும், பரதரும் எல்லா பிரஜைகளுடன், அயோத்தியை நிர்ஜனமாக, சுவர்க்கம் செல்ல நிச்சயித்தார்கள். சத்ருக்னன் விரைந்துவந்து இராமர் மெல்லிய பட்டாடை உடுத்து முனிவர்களுடன் ஜ்வலித்துக் கொண்டிருப்பதைக் கண்டு அவருக்கு நமஸ்கரித்து எனது புத்திரர்களுக்கு அபிஷேகம் செய்துவிட்டு தங்களைப் பின்செல்ல வந்து விட்டேன் ” என்றான். நல்லது” என்றார் இராமர். இப் பேச்சு முடியும் சமயம் வானரர்களும், ரிக்ஷர்களும். இராக்ஷசர்களும், தேவபுத்திரர்களும், ரிஷிபுத்திரர்களும், கந்தர்வ புத்திரர்களும் இராமருடைய நிர்யாணத்தை அறிந்துவந்து சேர்ந்தார்கள்.” இராஜனே ! தங்களைப் பின் செல்லவந்திருக்கிறோம்” என்றார்கள். சுக்கிரீவனும், அகதனுக்கு முடி சூட்டிவிட்டுத் தங்களைப் பின்தொடர வந்திருக்கிறேன்’ என்றான். சுக்கிரீவனை நோக்கி “சுக்கிரீவரே! கேளும். நீர் இன்றி நான் தேவலோகமும் செல்லேன்; பரமபதத்தையும் அடையேன் “என்றார் இராமர். பின்னர் விபீஷணரை நோக்கி ‘விபீஷணரே ! தங்கள் பிரஜைகள் இருக்கும் அளவும் இலங்கையை ஆளுங்கள் ’ என்றார். விபீஷணர் அப்படியே என்று அங்கீகரித்தார். காகுத்தர் அநுமானைப் பார்த்து “என் கதை லோகத்தில் சரிக்குமளவும் நீ சந்தோஷித்திரு” என்றார். பின்னர் ஜாம்பவனுக்கும், மைந்தனுக்கும் விவிதனுக்கும், வரும் வரையில் ஜீவித்திருக்குமாறு ஆசீர்வதித்தார். இங் ஙனம் சொல்லி ‘உங்கள் பிரியப்படி என்னுடன் செல்லுங்கள்’ என்றார்.
பொழுது விடிந்ததும் இராமரின் சொற்பிரகாரம் வசிஷ்டர் மஹாபிரஸ்தானத்துக்கு வேண்டிய ஏற்பண்டு களைச் செய்தார். இராமர் சூக்ஷம பட்டு உடுத்தி கையில் குசப்புல் பிடித்துக்கொண்டு சூரியனைப்போல பிரகாசித் கொண்டு வீட்டிலிருந்து வெளிக்கிளம்பினார். அவரது தக்ஷிண பக்கம் ஸ்ரீதேவியும், வலது பக்கம் ஸ்ரீதேவியும் நின்றார்கள். நானாவிதமான சரங்களும், தனுசும், மற்ற ஆயுதங்களும் மானிட உருவம் கொண்டு பின் தொடர்ந் தன. வேதங்களும், காயத்ரியும், ஓங்காரமும், வஷட்கார மும் பிராம்மண வேஷம் பூண்டு பின் சென்றன. ரிஷி களும், பிராம்மணர்களும், அந்தப்புரத்து ஸ்திரீகளும், வேலைக்காரர்களும், கிங்கரர்களும், பரதசத்ருக்னரும் தங்களது அந்தப்புரத்தவர்களுடன் அக்னிஹோத்திரங் களுடன், மந்திரிகளும் தங்கள் குடும்பத்தவர்களுடனும் சேவகர்களுடனும் இராமருக்குப் பின்னால் சென்றார்கள். வானரர்கள் ஸ்நானம் செய்து ஆனந்தத்துடன் கிலகில சப்தம் செய்துகொண்டு பின் தொடர்ந்தார்கள். ரிக்ஷர் களும், இராக்ஷசர்களும் அப்படியே சென்றார்கள்.
அரையோசனை வழிநடந்து ரகுநந்தனர் ஸரயுவை அடைந்தார். உடனே பிதாமகர் எல்லா தேவர்களாலும் ரிஷிகளாலும் சூழப்பட்டு அவ்விடம் வந்து சேர்ந்து ஆகா யத்திலிருந்து ‘”விஷ்ணுவே! வாருங்கள். உங்களுக்கு உங்களம். தங்களது தம்பிகளுடன் நிஜ தேகத்தை அடை யுங்கள். தாங்கள் தான் லோக சரண்யர்; தங்கள் மனைவியாகிய மாயையைத் தவிர ஒருவரும் தங்களை அறியார்” என்றார். அதன்மேல் தனது சரீரத்துடனும், கம்பிமார்களுடனும். விஷ்ணுவின் தேசஸை அடைந்தார் இராமர். பின்னர் பிரம்மாவைப் பார்த்து செப்பினார்- இவர்களுக்கு இந்த லோகத்தில் இடம் கொடுக்க வேண் டும்; இவர்கள் என் சிநேகிதர்கள் ; பக்தர்கள், பூஜிக்கத் தகுந்தவர்கள். என் பொருட்டு எல்லாம் துறந்தவர்கள்’ விஷ்ணுவின் பேச்சைக்கேட்டு லோக்குரு எனப்பட்ட லோகத்தை அடையட்டும்” என்றார். பிரம்மா இப்படிச் சொல்ல எல்லோரும் ஸரயுவில் மானிட உருவை ஒழித்து மேலுலகம் சென்றார்கள்.
62. இராமாயண பலன்
தன்னைப் படிப்பவர்களுக்குப் பொருளையும் புகழை யும் ஆயுளையும் அளிப்பதும், அரசர்களுக்கு வெற்றியைக் கொடுப்பதும், வேதத்துக்குச் சமமானதும், முதற் காவிய மும், வால்மீகி மகாமுனிவரால் முன்னர் இயற்றப்பட்டது மான இவ்விராமாயணத்தை எவனொருவன் படிக்கின் றானோ, அல்லது எவனொருவன் கேட்கின்றானோ, அவன் எல்லாவகைத் தீவினைகளிலிருந்தும் விடுபட்டவனாவான். இதைக் கேட்டவன், புத்திரபாக்கியத்தை யடைய விரும் பியவனாக விருந்தால் அப் பாக்கியத்தை யடைவான் பொருளையடைய விரும்பியவனாக இருந்தால் பொருளை யடைவான். அரசனாக விருப்பானேயானால், அவன் இவ் வுலகம் முழுவதையும் வெற்றிகொண்டு தனது சத்துருவை நாசஞ் செய்வான். கேட்பவர் பெண்பாலாகவிருந்தால், கௌசல்யை இராமரைப்புத்திரனாக அடைந்ததுபோலவும் சுமித்திரை இலக்ஷ்மணரைப் புதல்வனாக பெற்றதுபோல வும் கைகேயி பரதரை மகனாக அடைந்ததுபோலவும் ஜீவத் புத்திரனைப் பெற்றுச் சுகமடைவர். இராமாயணத்தைக் கேட்பவர் நீண்ட ஆயுளை யடைவார்கள். ஊரைவிட்டு ஊர் வெகுநாள் போயிருந்தால் அத்துக்கம் நீங்க பந்துக் களின் சேர்க்கையும் உடனே உண்டாகும். அவர்கள் விரும்பிய எல்லா வரங்களையும் அடைவார்கள். பிரயா காதி தீர்த்தங்களையும், கங்கை முதலான புண்ணிய நதி களையும், நைமிசாதி அரண்யங்களையும், குரு க்ஷேத்திராதி களையும் சென்றவராவார்கள் ; விஷ்ணு பதத்தையும் அடைவார்கள்.
இராமாயணத்தைக் கேட்பவர்களிடம் எல்லாத் தேவதைகளும் சந்தோஷமடைகின்றனர். அவர்களுக்கு இடையூறாகவிருந்த கிரகங்கள் யாவும் சாந்தமடைந்து அவர்களுக்கு நன்மையையே விளைக்கும். இராமபிரா னுடைய சரித்திரமாகிய இக் கிரந்தத்தை முழுவதும் படிப்பவரிடமும், கேட்பவரிடமும், இராமர் எப்பொழு தும் அருளுள்ளவராயிருக்கின்றார். அவர்தாம் எல்லாவித வல்லமையுமமைந்த நாராயணர். இக்காவியத்தைக் கேட்ட மாத்திரத்தில் அவ்வாறு கேட்டவன் குடும்பத்தின் விருத்தி யையும் தன தானியங்களின் விருத்தியையும் உயர்ந்த குண முள்ள மடந்தைகளையும், சுகத்தையும், ஜன்மமெடுத்த பயனையும் மற்றும் பலவற்றையும் அடைவான்; ஆயுளை அளிப்பதும், ஆரோக்கியத்தைக் கொடுப்பதும், புகழைத் தருவதும், நல்ல சகோதரர்களின் நட்பை எடுத்துக்காட்டு வதும்,நற்புத்தியைக் கொடுப்பதும் காந்தியை யளிப்பது மான இக்கிரந்தத்தை, நல்லவர்கள் பாக்கியத்தை அடைய விரும்பினால் வெகு ஆசாரத்துடன் கேட்க வேண்டும்.
இக்காவியம் இவ்வண்ணமானது; உங்களுக்கெல்லாம் இது க்ஷேமத்தை யுண்டாக்கட்டும். ஸ்ரீவிஷ்ணுபகவா னுடைய பலத்தை எடுத்துச் சொல்லும் இந்தக்கிரந்தம் எங்கும் பரவட்டும். இவ்விராமாயணத்தை கேட்பவர்களிடமும் இவ்விராமாயணத்தைக் கேட்டவர்களிடமிருந்து விஷயங்களைக் கிரகிப்பவர்களிடமும், எல்லாத் தேவதைகளும் பித்ருக்களும் சந்தோஷமடைகின்றார்கள். மஹரிஷிசெய்த இந்தக் கிரந்தத்தை பக்தியுடனே எவ னொருவன் எழுதுகின்றானோ அவனுக்கு இருப்பிடம் சுவர்க்கலோகமேயாம்.
(முடிந்தது)
– வால்மீகி ராமாயணச் சுருக்கம் (நாவல்), முதற் பதிப்பு: 1900, கே.மகாதேவன், பிரசுரகர்த்தர், விஜயதசமி, 17-10-1953