கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: September 4, 2025
பார்வையிட்டோர்: 58 
 
 

(1954ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஆரம்பம்: 

விஷயத்தைக் கேள்வியுற்ற ஒண்டிப்புலியா பிள்ளை, கருக்கரிவாள் நுனி போல் கூர்த்து நின்ற மீசையிலே கைபோட்டு முறுக்கியபடி கனைப்புச் சிரிப்பு உதிர்த்தார். 

இன்ஸ்பெக்டர் எல்லைக்குநாத பிள்ளைவாள் நல்ல துக்காக இந்த ஊருக்கு வரவில்லை என்று நான் அப்பவே நெனெச்சேன். அவனுடைய நல்ல காலம் இந்த ஊரு எல்லையை மிதிச்ச உடனேயே அவனை விட்டுப் போயிட் டு து. ஐயாவாள் கிட்டே எவன் வாலாட்டினாலும் சரி, அவன் லைஞ்சான்னுதான் அர்த்தம். ஆகவே எல்லைக்கு நாதன் ஒழிஞ்சான்; அவன் பெண்டாட்டி இப்பவே தாலி யறுத்த மாதிரிதான். இதை நீரு நிச்சயமாக நம்பலாம் வேய்!” 

இப்படி அவர் தனது அந்தரங்க நண்பர் ஒருவரிடம் சொன்னார். 


“அஹஹ, ஒண்டிப் புலியாமா அவம் பேரு?ஏன், ஒன்றரை டசன் புளியின்னு பேரு வச்சுக் கிடறதுதாலே! அந்தப் பாச்சா எல்லாம் இன்ஸ்பெக்டர் எல்லைக்கியா பிள்ளையிடம் பலிக்காதய்யா. நான் இந்த எல்லையிலே அடி எடுத்து வைத்ததுமே பய செத்தமாதிரித் தான். ஒண்டிப்புலி கொண்டிப்புலி ஆகிவிட்டதுன்னுதா அர்த்தம். இத்தனை நாள் வரை டிபார்ட்மெண்ட்டுக்குக் கடுக்கா கொடுத்த மாதிரியிலே, இன்னமும் புலியபுள்ளை வாலாட்ட முடியாது. F60) U நசுக்கிற மாதிரியிலே நசுக்கிப் போடுவேன். ஆமா ” என்று அட்டகாசப் பேச்சு உதிர்த்திருந்தார் இன்ஸ்பெக்டர் எல்லைக்குநாத பிள்ளை. 

இடி இடியேறுவோடு மோதுகிறது. வைரம் வைரத் தோடு உராய்கிறது. ஒண்டிப்புலி தனக்குச் சரியான துதையோடு மோதவேண்டிய காலம் வந்துவிட்டது. 

இவ்விதம் எண்ணினார்கள் அந்த வட்டார த்தில் வசித் தவர்கள். கட்சி பிரிந்து வாதித்து மகிழ்ந்தார்கள். “என் சேவல் பெரிது. உன் சேவல் வலியது” என்ற தோரணையிலே.  

ஒண்டிப்புலிக்கு எத்தனை பக்தர்கள் இருந்தார்களோ அத்தனை பக்தர்கள் ‘எல்லைக்கியா பிள்ளை’ க்கும் இருந் தார்கள். ஆகவே அந்தப் பிராந்தியத்திலே உற்சாக ஜூரம் விஷ வேகத்திலே பரவியிருந்தது. 


இன்ஸ்பெக்டர் எல்லைக்குநாத பிள்ளை நீதியும், நேர் மையும் ஒரு சிறிதும் வழுவாத குணக்குன்று. நம்பினபேருக்கு நடராசா; நம்பாத பேருக்கு எமராசா! என்று அவர் புகழ் நெடுகப் பரவியிருந்தது. அவரை நம்பிக் கும்பிட்டுக் குழையடிப்பதினாலே அவரை “நடராசா” வாகக் கொண்டுவிட முடியாது என்பது எல்லோருக்கும் தெரியும். நீதியை, நேர்மையை, உண்மையை, சட்டத்தை, தான் அங்கம் வகித்து வளர்க்கிற இலாக் காவை நம்பி ஒழுங்காகச் செயல் புரியவேண்டும் என்பதே அவர் பிறரிடம் எதிர்பார்க்கும் விஷயம். 

சட்டத்திற்கு அஞ்சாதவர்களைக்கூட தனது கைச் சவுக்குக்கு அஞ்சி நடுங்கும்படி செய்யும் உறுதி பெற்ற வர் அவர். ‘இன்ஸ்பெக்டர் எல்லைக்கியா பிள்ளை’ வரு கிறார் என்பதை அறிவிக்கும் மோட்டார் சைக்கிளின் ‘டபடப சப்தம்; அதைத் தொடர்ந்து அறிவிக்கும் வீணர்களின் ஓடுதல்களும் ஒழிதல்களும். மன்னன் வரும்போதே சவுக்கை துசாரி வலதுசாரி என்று வீசி விளாசிக்கொண்டு தான் வருவான்!’ என வியப்பர் பலர். 

வருடக் கணக்கிலே பிடிபடாமல் ‘டிமிக்கி’ கொடுத் துக்கொண்டிருக்கும் ‘கேஸ்களை’ பைசல் பண்ணு வதற்கு எல்லைக்கியா பிள்ளைதான் வந்து சேருவார். எப் பாடுபட்டாவது ஒழித்துக் கட்டிவிடுவார். அதனால்தான் அவரை ‘எமன்’ என்று பலர் கருதியதில் தவறு ஒன்றும் இல்லை. 


ஒண்டிப்புலியா பிள்ளையைப் பெற்றெடுத்தவர்கள் அவருக்குச் சரியான பெயரையும் சூட்டினார்கள் என்று வியக்காமல் இருக்கமுடியாது. 

எதிலுமே பெரிய புலிதான் அவர்.’எமப்பளுவன்’ ‘மலைக் கோப்பன்’ ‘வில்லாதி வில்லன்’ ‘விளைஞ்ச கொம்பன்’ ‘சூரப்புலி’ என்றெல்லாம் அவரை அர்ச்சித்து வந்தார்கள் பலரும். 

‘அவனாலே ஆகாத காரியம் எதுவுமே இருக்க முடியாது. நினைச்சால்,புலிப்பாலைக்கூடக் கறந்துகொண்டு வந்துவிடுவான்’ என்று மகிழ்ந்து போகும் பெரியவர்கள் உண்மையைத்தான் சொன்னார்கள். 

பண்ணைக்காடு வட்டாரத்தின் சர்வ சக்தி பெற்று ராஜா ஒண்டிப்புலிதான். என் தலையையாவது கொண்டு போகவேண்டுமா பாளை சீவுகிற மாதிரிச் சீவப்பட்டு விடும் அந்த நபரின் தலை அழகிய பெண் எவளாவது புலியா பிள்ளையின் கண்ணிலே தென்பட்டால் அவளுக்கு ஆபத்துத்தான். அப்புறம் அந்த எல்லையில் அவள் தட்டுப்படமாட்டாள். பண்ணையார் ஒண்டிப்புலியின் ஆசைக்கு அவள் இணங்கியிருந்தால் அவளுக்கு நல்லது கிட்டியிருக்கும். அவள் சண்டித்தனம் பண்ணியிருந்தாலோ அவளது பிரேதம் ஏதே கள்ளிப்புதரிலோ – தாழம் புற்றிலோ – தண்ணீர் கசத்திலோ சரண் புகுந்துவிடும். 

பண்ணைக்காட்டுப் பண்ணையார் ஒண்டிப்புலியா பிள்ளை பெரிய சர்வாதிகாரி மாதிரித்தான். அவரது வட்டாரத்திலே அவர் இட்டதுதான் சட்டம். அதனால் அவரை எண்ணி நடுங்கியவர்களுக்குக் குறைவில்லை. அவரைப் பாராட்டியவர்களின் தாகையும் அதிகம் உண்டு. காரணம் அவர் வீட்டுக் காவல் நாய்கள் மாதிரி வளைய வருகிறவர்களுக்கு, அவர் நிறையத் ‘தீனி போடுவது’ வழக்கம். 

தனக்கென ஒரு சட்டமும் வாழ்க்கைத் திட்டமும் வகுத்துக்கொண்டதால், தன்னை அடக்கி ஒடுக்கச் சட்டங்களிடும் ஆட்சி இலாகாவினரை அவர் தனது பரம விரோதியாகக் கொண்டிருந்தார். 

ஒண்டிப்புலியா பிள்ளை அபாயகரமான ஆசாமி என்று எடை போட்டு வைத்திருந்த ஆட்சி இலாகாவினருக்கு, ‘அவர் அடக்கப்படவேண்டிய புள்ளி’ என்று தோன்றிற்று. ஆனால் ஒடுக்க முடியாத எதிரியாகத் திகழ்ந்தார் பண்ணையார். 


பண்ணைக்காடு- 

விசேஷமான வட்டாரம் அது. வளமான பிராந் தியம். ஓங்கி வளர்ந்த மலை ஒருபுறம். அங்கு சந்தன மரங்களும், தேக்கும்,மூங்கிலும் காடுகாடாக வளர்ந்து நின்றன. ஆள்வோர் … அதையெல்லாம் தமது உடமையாக மதித்திருந்தனர்.ஆனாலோ ஒண்டிப்புலி தாரா ளச் சொந்தம்பாராட்டி, இஷ்டம்போல் மரங்களை வெட்டி விற்கத் தயங்கியதில்லை. எச்சரிக்கைகளும், பயமுறுத் தல்களும் பலனளிக்கவில்லை. மேலும் அவர் நேரடியாக ஈடுபடுவதில்லை. கள்ளத்தனமாக இவ்வேலை செய்பவர் களுக்கு ஆதரவளித்து நிறையப் பங்கு பெற்றுவந்தார். 

ஆப்காரி இலாகாவுடனும் போட்டியிட்டார் அவர். கள்ளச் சாராயம் காய்ச்சுகிற தொழில் அவர் எல்லைக்குள் பெரிய அளவில் வளர்ந்தது என்று கணக்கிட்டிருந்தார். கள். ஆயினும் அவரை வசமாக மாட்டி வைக்க இயல வில்லை சம்பந்தப்பட்டவர்களினாலே. 

ஜெயிலிலிருந்து தப்பி ஓடிவந்துவிட்ட பயங்கரக் கைதி மூக்கத்தேவனை பண்ணையார் மறைத்து வைத்துக் கொண்டு, தான் எண்ணியதைச் செய்து முடிக்கக்கூடிய ‘ஏவல் பூதம்’ ஆக உபயோகிக்கிறார் என்றும் சொல்லப்பட்டது 

அவரை அடக்கவந்த அதிகாரிகள் அவரது நண்பர்களாக மாறி வாழ்ந்தார்கள். அவர் மீது சந்தேகம் கொள்ள ஏதுவில்லை என்று ஓங்கி அடித்தார்கள். 

எல்லாவற்றையும் ஆராய்ந்து தீர்த்துக் கட்டுவதற்காகத்தான் இன்ஸ்பெக்டர் எல்லைக்குநாத பிள்ளை அந்த வட்டாரத்திற்கு அனுப்பப்பட்டிருந்தார். 

“ஒண்டிப்புலி என்ன பெரிய மம்மாவோ!” என்று கெக்கலித்தார் இன்ஸ்பெக்டர் பிள்ளை. 

“பூடம் தெரியாமல் சாமி ஆடவந்த பூசாரி அவன். சரியான பாடம் படிக்கப் போகிறான்!” என்று ஆரவாரித்தார் ஒண்டிப்புலி. 

இரண்டு பேரிடமும் பழகிப் பேசித் தூண்டிவிட்டு ‘வத்தி வச்சு வாழும்’அன்பர்கள் அந்த வட்டாரத்திலும் இருந்தனர். 


இன்ஸ்பெக்டர் எல்லைக்குநாத பிள்ளை செயல் திட்டங்களிடும் முன்பு, சுற்றுப்புறங்கள் – எதிராளியின் வலு – வட்டாரத்து நிலைமை முதலிய சகல விஷயங்களையும் ஆராய்ந்தார். 

ஒண்டிப்புலியா பிள்ளையைப் பற்றிய பழைய ரிக்கார்டுகளைப் படித்துப் பார்த்து, அவை கவைக்கு உதவாதவை என்று ஒதுக்கி விட்டார். ஊரில் உள்ள பிரமுகர்கள், சாதாரண ஆசாமிகள் பலரிடம் விசாரித்துப் பார்த்தார். 

இவ்வித விசாரணைகளினால் எல்லாம் அவர் முக்கியமாகப் புரிந்து கொள்ள முடிந்த ஒரு பெரிய உண்மை, ‘ஒண்டிப் புலியா பிள்ளை ஒரு மர்ம மனிதன். அவரைப் பற்றிய விவரங்களைத் தெளிவாக அறிந்துகொள்ளவே முடியாது’ என்பதுதான். 

ஒவ்வொருவர் ஒவ்வொன்றைச் சொன்னார்கள். பலர் அளவுக்கு அதிகமாகப் புளுகியிருக்கலாம். பலர் மழுப்பியும் திரித்தும் குறைத்தும் கூறியிருக்கலாம். ஆனால், எல்லாரும் சொல்லத் தவறாத விஷயம் ஒன்று இருந்தது. 

‘ஒண்டிப்புலியா பிள்ளைக்கு விஷ ஜந்துக்களிடம் பயமே கிடையாது; அவரிடம் ஏதோ ஒரு சக்தி இருக்கிறது. எவ்வளவு பெரிய மலைப்பாம்பாக இருந்தாலும் சரி; எலும்பை நொறுக்கி ஆளை அப்படியே விழுங்கி விடும் பெரிய பெரிய பாம்புகளாக இருந்தாலும் சரி தான் – அவர் கூப்பிட்டால் வந்துவிடும். நாய்க் குட்டி போல் வாலை அசைத்துக்கொண்டு அவர் காலடியிலே கிடக்கும். அவர் மிகவும் செல்வமாகப் போற்றுகிற ஒரு பெரிய மலைப்பாம்பு இருக்கிறது. அவர் ஏவுகிறபடி எல்லாம் ஆடும்.’

இந்த விஷயம் இன்ஸ்பெக்டரின் மனத்தில் உறுத்தியது. ‘ஒண்டிப்புலி மாந்தரீகம் கற்றவரோ?’ என்று கேட்டார் சிலரிடம். 

“கற்றிருக்கலாம். அவருடைய தாத்தா பெரிய மந்திரவாதி. இந்த ஜில்லாவிலேயே அவரைத் தோற்கடிக்கக் கூடிய மந்திரவாதி எவனும் இருந்ததில்லை. கீர்த்தி பெற்ற மலையாளத்து மந்திரவாதி யெல்லாம் அவர் முன் தோற்றுத் தலைகுனிந்து ஓடிப்போனார்கள். அவர் பிழைப்புக்காக அதைக் கற்கவில்லை. சும்மா கலையாகக் கற்று வைக்கலாமே என்று படித்துத் தேர்ச்சி அடைந்திருந்தார். அவர் விட்டுப்போன சுவடிகள் புத்தகங்கள் மூலம் இவரும் ஏதாவது கற்றிருப்பது சாத்தியம்தான். இவரைத் தேடி மலையாளத்து மந்திரவாதி ஒருவன் அடிக்கடி வந்து போவது உண்டு’ என்று தெரியவந்தது. 

‘ஒண்டிப்புலியா பிள்ளை கடின சித்தம் உள்ளவர். ஆளைப் பார்த்தால் அவரது குணம் தெரியவே தெரியாது. சில சமயங்களில் அவர் நடந்து கொள்கிற விதத்தைக் கவனித்தால், இந்த மனுஷனா இவ்வளவு ஈவு இரக்கம் இல்லாமல் நடந்து 2]\ள்கிறார் என்ற ஆச்சர்யம் உண்டா கும் என்று சொன்னார் ஒருவர். 

‘என்ன விஷயம்? ஏன் அப்படிச்சொல்கிறீர்கள்?’ என்று விசாரித்தார் இன்ஸ்பெக்டர் 

‘யாராவது ஆபத்தில் சிக்கிக்கொள்கிறார்கள் என்று வையுங்கள். ஒண்டிப்புலி அருகில் இருந்தால் கூட, காப்பாற்றி உதவக் கூடிய வசதி இருந்தால் கூட, ஒரு விரலையும் அசைக்கமாட்டார். முகத்திலே சிரிப்பு தவழ, அமைதியாக வேடிக்கை பார்த்து நிற்பார். ஒரு சமயம் குழந்தையை மாடு முட்டித் தரையோடு தரையாகக் தேய்க்கும் போதும் அவர் வேடிக்கை பார்த்து நின்றார். அவர் கையில் துப்பாக்கி இருந்தது. ஒரு பெண்ணை எருமை மாடு துரத்திக் கொம்புகளினால் தூக்கி எறிந்த போதும் சிரித்துக்கொண்டு தான் நின்றார். இரண்டு பேர் சண்டையிட்டு ஒருவனை ஒருவன் கத்தியால் குத்தி நின்றனர். கொலை விழக்கூடிய அச்சூழ்நிலையில்கூட அவர் கையைக் கட்டிக்கொண்டு, வேடிக்கை பார்த்து நின்றாரே தவிர அவர்களை விலக்கிவிட எவ்வகை முயற்சி யும் செய்யவில்லை’ என்றனர் விவரமறிந்தவர். 

‘உம்’ என்று தலையாட்டினார் எல்லைக்குநாதர். வேறொன்றும் சொல்லவில்லை, வெளிப்படையாக. 


இங்வளவு புகழ் பெற்ற ஒண்டிப்புலியா பிள்ளையை நேரடியாக சந்திக்க வேண்டியதுதான் என்று தீர்மானித்தார் இன்ஸ்பெக்டர். உத்தியோகத் தோரணை யில் எதிரியாக அல்ல. அந்த வட்டாரத்துக்குப் புதிதாக வந்திருப்பதால், செல்வாக்குள்ள பண்ணையாரோடு அறிமுகம் செய்துகொள்ளும் எண்ணத்தினால்தான். இப்படித் தான் சொல்லிக்கொண்டார் அவர். 

ஒண்டிப்புலியைத் தன் வீடு தேடி வரவைக்கும் ஆற்றல் அவருக்கு இருந்தாலும், இன்ஸ்பெக்டர் அதை விரும்பவில்லை. வரச்சொல்லி ஆள் அனுப்பினால், அதைத் தவறாக எண்ணிக்கொண்டு பண்ணையார் வராமலிருந்து விட்டால், அது தன்னை அவமதித்த செயலாகிவிடும் என்று நினைத்தார் எல்லைக்குநாதர். ‘நாமாக அவனைத் தேடிப் போனால் அவன் உச்சந்தலையிலே வாரியலாலே அடிச்ச மாதிரி, குளிர்ந்து போகும். அவனைப் பற்றிய விஷயங்களை அதிகப்படியா அறிந்து கொள்ளவும் முடியும்’ என்ற நினைப்பு மிகுந்தது அவர் உள்ளத்தில். 

அவர் நினைத்தது சரியாகத்தான் இருந்தது. எதிர் பாராதபடி இன்ஸ்பெக்டர் தனது வீடு தேடி விஜயம் செய்து தன்னை மிகுதியும் கௌரவித்துவிட்டதா தவே நம்பினார் பண்ணையார். உபசாரங்கள் செய்து தடபுடல் படுத்தினார். 

இரண்டு பேரும் தங்கள் மன ஆழத்தின் குமுறல் களை மேலெழவிடாது அமுக்கிவிட்டுச் சுமுகமாகவே பேசி மகிழ்ந்தார்கள். மலை, காடு, வேட்டை முதலிய பல விஷயங்களையும் தொட்டு வளர்ந்தது பேச்சு. தமது அனுபவங்களைப் பற்றிச் சுவையாக அளந்து தள்ளிக் கொண்டிருந்தார் ஒண்டிப்புலி தமது பேச்சுக்கு ஆதார மாகப் பெரிய பெரிய மான் கொம்புகள். மான் தோல்கள் மலை அணில் தோல், காட்டு எருமைக் கொம்புகள் முதலியவற்றை எல்லாம் காட்டினார். 

அவை ஒழுங்காக அடுக்கி வைக்கப்பட்டிருந்த அறையில் ஒரு மூலையில், கண்ணாடிப் பெட்டியினுள் மிகவும் பெரிய பாம்பு ஒன்று சுற்றி வளைத்துச் சுருட்டிக் கொண்டு கிடந்தது. அதைப்பார்த்த ன்ஸ்பெக்டர் ‘யேப்பா! எவ்வளவு பெரிய பாம்பு!’ என்று மலைத்தார். 

“அது உயிருள்ள பாம்பு அல்ல. செத்த பிறகு பதப்படுத்தி, உயிருள்ளது போல் பாவனைக்கு வைத்திருக்கிறது. அவ்வளவு தான்” என்று சொல்லிச் சிரித்தார் ஒண்டிப்புலி. 

”நிஜமாவா? பார்வையிலே அப்படித் தோணலியே உயிருள்ளது போலவே இருக்குதே!” என்று முனங்கினார் எல்லைக்குநாதர். 

“என் பேச்சிலே உங்களுக்கு நம்பிக்கை இல்லையா? அது செத்த பாம்புதான். வேணும்னா தொட்டுத் தூக்கிப் பார்க்கிறேளா?” என்று கனைத்தார் மற்றவர். 

இன்ஸ்பெக்டர் “வேண்டாம் வேண்டாம்” என்று மறுத்துவிட்டார். 

அதிலிருந்து பேச்சு பாம்புகளைப் பற்றித்தான் அடிபட்டது. ஒண்டிப்புலியா பிள்ளை பேசப் பேச பாம்புகளைப் பற்றிய விஷயத்தில் அவர் ஒரு ‘அத்தாரிட்டி’ என்று தான் பட்டது எல்லைக்கு நாதருக்கு. பாம்புகளைப் பற்றிய பல புத்தகங்கள் வைத்திருந்தார். பண்ணையார். போட்டோக்கள், சித்திரங்கள் எல்லாம் சேகரித்து வைத்திருந்தார். எல்லாவற்றையும் பெருமையோடு, இன்ஸ்பெக்டருக்குக் காட்டி மகிழ்ந்தார். 

பண்ணையாரின் ஞானத்தை உணர்ந் இன்ஸ்பெக்டர் பிரமித்து விட்டார் என்றே சொல்ல வேண்டும். விடை பெற்றுப் பிரியும் போது அவருக்குக் கடமை உணர்வு தலை தூக்கியது. பேச்சோடு பேச்சாகச் சொல்லி வைத்தார். 

“என்ன பண்ணையார்வாள், ரிப்போர்ட்டுகள் வரும் படி நீங்க ஏன் வழி வச்சுக்கிடணும்? உங்க எல்லையிலே குற்றம் ஜாஸ்தி இருக்கிறாப்லே தெரியுதே. நீங்களே கவனிச்சு ஒடுக்கி விடப்படாது?” 

பண்ணையார் அவரை ஒரு தினுசாகப் பார்த்தார். தனிரகச் சிரிப்பு ஒன்று உதித்தார். அந்தப் பார்வைக்கும் சிரிப்புக்கும் என்ன பொருள் உண்டு என்பது எல்லைக்கு நாதருக்குப் புரியவில்லை. ஆனால், அவர் உள்ளத்திலே ஒரு பதைப்பு பிறந்தது. அர்த்தமற்ற, தெளிவற்ற, காரணமற்ற, ஒரு அரிப்பு – வேதனையில்லா ஒரு வகைக் குழப்பம் – அவர் உள்ளத்தில் சுழன்றது. 

மோட்டார் சைக்கிளை வேகமாக உதைத்து முடுக்கி விட்டு ஏறினார் எல்லையா பிள்ளை 

“உங்க நன்மைக்குத்தான் சொன்னேன்… ஒரு நாள் நம்ம வீட்டுக்கு வாங்க, பண்ணையார்வாள்!” என்று கத்தியபடியே, வாகனத்துக்கு இயக்கம் கொடுத்தார் அவர். ஓடிய ‘மோட்டார் பைக்கின்’ ஒலிக்கு இயைந்தாற் போன்ற கனைப்புச் சிரிப்பு சிந்தி நின்றார் ஒண்டிப் புலி. 

“என் நன்மைக்காகச் சொல்கிறானாம் – மடையன்!” என்று உறுமியது அவர் உள்ளம். 


எல்லைக்குநாத பிள்ளை பண்ணையாரைச் சந்தித்து விட்டு வந்ததற்கு இரண்டு நாட்களுக்குப் பிறகு, இன்ஸ்பெக்டர் வீட்டுக்கு ஒரு வண்டி நிறையவிற்கு வந்தது. ‘பண்ணையார் அனுப்பி வைத்தார்’ என்றான் வண்டிக்காரன். 

“வீடு தெரியாமல் வந்துவிட்டே போலிருக்கே! பண்ணையார் வீட்டிலே கொண்டு போய் இறக்கு” என் கண்டிப்பாகச் சொல்லி, விறகு வண்டியைத் திருப்பி அனுப்பி விட்டார் இன்ஸ்பெக்டர் 

மறு நாளே வந்து சேர்ந்தார் ஒண்டிப்புலி. 

“என்ன நீங்க! விறகைத் திருப்பி விட்டீங்களே?” என்று விசாரித்தார் அவர். 

“பண்ணையார்வாள்! கோபிக்கக்கூடாது. லஞ்சம் வாங்கும் வழக்கம் எல்லையா பிள்ளையிடம் கிடையாது” என்று ஓங்கி அடித்தார் இன்ஸ்பெக்டர். 

பண்ணையாரின் முகம் கறுத்தது. “இது லஞ்சம் என்ற எண்ணத்தோடு கொடுக்கலியே. நண்பர் என்ற நினைப்பிலே அன்போடு அனுப்பி வைத்தேன். தவறா?” என்றார். 

“இனிமேல் அதுமாதிரி எதையுமே அனுப்பாதீங்க. இவ்வளவு நாள் ஸெர்வ்ஸிலேயே இல்லாத புதிய பாடத்தை எல்லைக்குநாதன் உங்க நட்புக்காகக் கற்றுக் கொள்ளனுமா என்ன? ஹெஹ்!” 

இன்ஸ்பெக்டரின் அழுத்தமான பேச்சு யாரின் இதயத்தில் கல் போல் விழுந்தது. “நீங்கள் தவறான மனோபாவம் கொண்டிருக்கிறீர்கள்…” என்று  தொடங்கினார் அவர். 

எல்லைக்குநாதர் மிடுக்காகச் சிரித்தார். சொன்னார். “உங்கள் அகராதிதான் புதிதாகப் பதிப்பிக்கப்பட வேண்டும். நான் இருக்கிற இடத்திலே தவறுக்கு இடமில்லை! தவறு தலை காட்டவே கூடாது. 

ஒண்டிப்புலி ஒரு தினுசாகப் பார்த்தார். முதல் சந்திப்பின் போது அவர் எறிந்த பார்வையின் ஞாபகம் தான் வந்தது இன்ஸ்பெக்டருக்கு. 

தனி ரகமாகச் சிரிப்பொலி பரப்பினார் பண்ணையார். முன்பொரு தடவை அவர் சிரித்தது எதிரொலித்தது எல்லைக்குநாதரின் நினைவு வெளியிலே. 

எனினும், அந்தப் பார்வையின் அர்த்தம் – சிரிப்பின் பொருள் – விளங்கவே இல்லை! 

“இன்னைக்குக் கொஞ்சம் சந்தனக் கட்டைகள் கொண்டு வந்தேன். ஸ்பெஷலாக எடுக்கப்பட்டவை. இந்தப் பக்கத்துச் சந்தன மரங்களில் தனி வாசனை உண்டு. ஏழெட்டுக் கட்டைகளை வண்டியிலே, எடுத்துப் போடச் சொன்னேன். உள்ளே கொண்டு வந்து வைக்கும்படி…” 

இன்ஸ்பெக்டர் குறுக்கிட்டார்: “பண்ணையார்வாள்! எல்லைக்குநா தனிடம் ஒரே பேச்சுதான். அப்ப ஒரு பேச்சு; அஞ்சு நிமிஷம் கழிச்சு ஒரு பேச்சு என்கிற விவகாரமே கிடையாது. ரொக்கமாகவோ, வேறு ரகங்களிலோ லஞ்சம் வாங்கும் வழக்கம் நம்மிடம் கிடையாது”. 

ஒண்டிப்புலியா பிள்ளை எழுந்தார். ‘உம்’ என்று சொன்னார். சிறு சிரிப்பு உதிர்ந்தது அதன் பின்னால். “உங்க இஷ்டம்!…. நான் வாறேன்” என நகர்ந்தார். 

வாசல் வரை தொடர்ந்த இன்ஸ்பெக்டர் ஞாபக மூட்டுவது போல் எச்சரித்தார். “பண்ணையார்வாள், ஒரு விஷயமில்லா சந்தனக் காடு, மூங்கில் காடுகளில் நம்பர் போட்ட மரங்கள் கூடக் காணாமப் போயிருக்குது என்று ரிப்போர்ட் வந்திருக்குது. உங்க ‘ஏரியா’விலே திருட்டுப்பயலுக ரொம்ப சுதந்திரமாக உலவுவாங்க போல் தெரியுது. நீங்க நடவடிக்கை எடுத்தா நல்லது…” 

“அப்படியா!” என்று சொல்லிவிட்டுத், தமக்கே உரிய தனிரகச் சிரிப்பைச் சிந்தினார் ஒண்டிப்புலி. அவரது வண்டி மாடுகளின் கழுத்து மணி ஓசை பெரும் சிரிப்பாய்ப் பேரொலியாய்ப் பின்ணணி இசைத்து பின் மங்கித் தேய்ந்தது. 


வளர்ச்சி : 

இன்ஸ்பெக்டர் எல்லைக்குநாத பிள்ளை இரவுச் சாப் பாட்டை முடித்து விட்டு ஈஹிச்சேரில் சாய்ந்து கிடந்தார். வீட்டின் முன்வாசல் திண்ணையை ஒட்டிய தரைப்பகுதியில் பிரப்பந் தட்டிகளில் ‘சாய்ப்பு இறக்கி உட்கார திப்படுத்தப்பட்ட இடம் அது. பொழுதும் சுத்தமாகவே இருக்கும். 

அன்றிரவு அவர் பண்ணையார் ஒண்டிப்புலியா பிள்ளையைப் பற்றித்தான் எண்ணிக் கொண்டிருந்தார். அவர் மனம் தெம்பாகச் சிரித்தது. 

“எஹ்! பண்ணையார் எல்லாரையும் போல என்னையும் எண்ணிக் கொண்டார்னு தோணுது. எல்லைக்கியா பிள்ளை குணம் என்னதுன்னு தெரியும்படி செய்யாமலா போவேன்….”

தன் நினைப்பின் தடத்திலே சுகநடை போட்ட மனம் தந்த இனிமையில் சொக்கியிருந்த இன்ஸ்பெக்டரைத் திடுக்கிட வைத்தது “ஐயய்யோ! காலை மேலே தூக்குங்க. நாற்காலி மேலே தூக்கி வையுங்க” என்ற அபாய அலறல். 

அவரது மனைவிதான் அப்படிக் கத்தினாள். சடக் கென்று காலை உயர்த்திக் கொண்ட பிறகுதான், “ஏன், என்ன விஷயம்?” என்று கேட்கத் தோன்றியது அவருக்கு. தே வேளையில் அவர் பார்வை தரை மீது பதிந்தது. 

அங்கே, அதோ, கறுப்பா – வெகு வேகமாக – கோரத்தின் தனிஉருப் போல – ஓடுவது என்ன? 

அவர் உடம்பிலே புல்லரிப்பு பிறந்தது. 

ஸ்ரீமதி மீனாட்சியம்மா அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்தாள், துடைப்பக் கட்டையைத் தேடித் தான். “மாடசாமி…. வேய் தேவரே… சுப்பையாப் பிள்ளேய்!” என்று அவர் வாய் ஓலமிட்டுக் கொண்டிருந்தது – சேவர்களைக் கூவி அழைத்தது. 

பலரும் ஓடி வந்தார்கள். 

“இதோ என்னமோ ஒண்ணு ஓடுதே … கல் எடுத்துப் போட்டு அடியும் வேய்” என்று உத்திரவிட்டார் இன்ஸ்பெக்டர். 

தேவர் மின்னல் போல் பாய்ந்தார். அவரைச்செடி படருவதற்காக நட்டிருந்த பந்தல் காலில் ஒன்றை, பீம பலத்தோடு பிடுங்கிக்கொண்டு வந்து ஓங்கி அறைந்தார். 

வரும் ஆபத்தை இயற்கை நியதியின் இணையிலா நுண்ணுணர்வு புலப்படுத்திக் கொடுக்க அந்த ஐந்து வேகமாக ஓடமுயன்று கொண்டிருந்தது. இடுக்கிகள் போன்ற முன்புற உறுப்புக்கள் இரண்டையும், கறு மெழுகிலே திரட்டி யெடுத்த சிறு குழவிக்கல் போன்ற உடலையும், இரும்புத் தொடுப்பு போன்ற பெரிய வாலையும் கூரிய கொடுக்கு வளைந்து நின்ற பகுதியைத் தூக்கிப் பிடித்தபடி – அது ஓட முயன்றது விசித்திரமாகத்தானிருந்தது. இருந்தாலும் தேவர் கைவீச்சிலிருந்து அதனால் தப்ப இயலவில்லை. 

‘பொத்’ தென்று போட்டார் தடியை. ‘சதக்’கென்று ஓசை. நசுங்கிச் செத்தது அது. குனிந்து பார்த்த தேவர் “நட்டுவாக்காலியில்லா,  எசமான்! ஏம்மா, எம்மாம் பெரிசு! இது கொட்டினால் என்ன ஆகி கிறது?” என்று வியப்புக் குரல் கொடுத்தார். 

மற்றவர்களும் அதைக் குனிந்து கவனித்து ஆராய்ச்சி நடத்தினார்கள். 

“பிசாசுப்பய இது! என்ன ஓட்டம் ஓடிச்சு பார்த்தீர்களா! விசம் ஐயா விசம். அது கொடுக்கைத்தான் வாருங்களேன்!” என்று வாய் பிளந் நின்றார் சுப்பையாப்பிள்ளை. 

மாடசாமி ‘நட்டுவாக்காலி’ கடித்துச் செத்துப் போனவர்களைப் பற்றி அளந்துகொண்டிருந்தான். 

திண்ணைத் தூணிலே குறுகுறு வெனச் சாய்ந்து உட்கார்ந்து விட்ட மீனாட்சியம்மா பெருமூச்செறிந்தாள். ‘கோமதி அம்மன்தான் காப்பாத்தினா. அவதான் என்னைத் திண்ணைப்பக்கம் கூட்டியாந்து விட்டா இவொ என்னசெய்யிதோன்னு பார்க்க நான் வெளியே வந்தேன். சட்டுனு கண்லே பட்டது. கறுப்பா ஒண்ணு ஓடியாறது தெரிஞ்சுது. இவொ காலுக்கிட்டே வந்திட்டுது. இன்னும் கொஞ்சம் தாமதிச்சிருந்தா இவொ காலிலே ஒரு போடு போட்டிருக்கும். எனக்கு மேலு நடுக்குச்சு. என்னது சொல்லனும், ஏது பேசணுமின்னே தோணலே. ‘காலைத் தூக்குங்க, தூக்குங்க’ யின்னு கத்தினேன். இவ்வளவு பெரிய நட்டுவாக்காலியை நான் பார்த்ததே கிடையாதம்மா! …. கோமதித் தாய்க்கு இந்த ஆடித் தவசுக்கு ரெண்டு ரூபா கொடுத்து அனுப்பணும். இப்பவே ரூபாயை எடுத்து முடிஞ்சு வச்சிரணும்” என்று பேசிக் கொண்டிருந்தாள் அவள். 

எல்லைக்குநாதபிள்ளை ஒன்றுமே பேசவில்லை. கொஞ்ச நேரம். அவர் கண்கள் ஜீவனற்று, இயக்கமற்று, கருமொந்தையாகி தான் சிதறிய ஒருவிதத் திரவ பதார்த்தத்திலே நனைந்து கோரமாய் அருவருப்பும, அச்சமும் தருவதாய் கிடந்த சடலத்தின் மீதிந்திருந்தன. சற்று நேரத்திற்கு முன்பு அதன் அங்கங்களிலே இருந்த இயக்கமென்ன? அச்சம் எழுப்பிய சக்தி தான் என்ன! ஆபத்துக்கு இரையாகிச் சாகாமல் இருந்திருப்பின் இதற்குள் அது எத்தகைய ஆபத்தை விளைவித்திருக்குமோ… 

அவர் பெருமூச்செறிந்தார். பெரிய ஆபத்திலிருந்து தப்பிவிட்டவனின் உடல் விதிர் விதிர்ப்பு நீங்கா நடுங்குவது போலவே அவர் தேகமும் நடுங்கியது. மேல் பூராவும் வேர்வை பொடித்திருந்தது. உள்ளத்தின் பயத்தைப் பதுக்கி விடுவதற்காக அவர் ஆர்ப்பாட்டமாகக் கத்தினார். 

“சவத்தைத் தூக்கி உரக் கிடங்கிலே போடாமே, இன்னம் என்னவேய் பார்வை? மாடசாமி, அதை எடுத்து வீசி எறி… தேவரே, ஒரு வாளித் தண்ணி கொண்டாந்து து அந்த எடத்தைத் துப்புரவாக் கழுவிவிடும். விசம் இருந்தாலும் இருக்கும்… உரக்கிடங்கிலேயிருந்து தான் வந்திருக்குமோ என்னமோ! நாளைக்கு உரத்தை எடுத்துப் போக மொட்டை வண்டி கொண்டாரும். என்ன சுப்பையாப் பிள்ளை, உம்ம கிட்டேத்தான் சொல்லுகிறேன். இனி உரக்கிடங்கு இங்கே இருக்கப்படாது. வாய்க்காலடித் தோட்டத்திலே பள்ளம் வெட்ட ஏற்பாடு செய்யும்…. மீனாட்சி, கொஞ்சம் நீத்தண்ணி கொண்டாயேன்…”

தேவர் நட்டுவாக்காலியை அப்புறப்படுத்திய பிறகு கூட அதைப் பற்றிய பேச்சு நிற்கவில்லை. 

எல்லைக்குநாதரின் நினைவு பண்ணையாரை எட்டியது. அதே சமயத்தில் தேவர் சொன்னார்: “பண்ணையார் ஒண்டிப்புலியா பிள்ளை இருக்காரே, அவரு, எவ்வளவு பெரிசா இருந்தாலும் சரி; நட்டுவாக்காலியை அப்படியே கையிலே தூக்கிக்கிடுவாரு. கிளிக்குஞ்சோடு கொஞ்சுகிற மாதிரித்தான் அவருக்கு…”

இன்ஸ்பெக்டரின் உடல் சிலிர்த்தது. உள்ளத்திலே சிறு உதைப்பு. 

பக்கத்துத் தோட்டத்தில் ஓங்கி வளர்ந்து நின்ற வாதநாராயண மரத்தின் கிளையிலிருந்து ஓர் ஆந்தை ஒற்றைக் குரல் கொடுத்தது. மறுபடியும் அலறிவிட்டுப் பறந்து விட்டது! 

எல்லைக்கு நாதருக்கு ஏனோ பண்ணையாரின் தனி ரகச் சிரிப்பொலிதான் நினைவுக்கு வந்தது. 

‘மாடசாமி! இந்த வாதமடக்கி மரத்தின் கொம்புகளை வெட்டிப்போடு என்று எத்தனை தரம் சொன்னேன் நாளைக்கு முதல் காரியமா அதைக் கவனி…ஆந்தை வந்து அடைஞ்சுக்கிட்டு..சே!’ என்று சினக்குரல் காட்டினார் அவர். 

‘ஆகட்டும், எசமான்!’ என்றான் மாடசாமி. 

“இப்பதான் வேலை ஒண்ணுமில்லையே. எல்லாரும் வீட்டுக்கே போகலாம்” என்று அனுமதி கொடுத்து அனுப்பி வைத்தார் இன்ஸ்பெக்டர். ரொம்ப நேரம் வரை அவர் மனசு சரிப்படவேயில்லை. 


மிகவும் விசித்திரமாகத்தான் தோன்றியது- 

அந்த வீட்டிலே அதுவரை விஷ ஜந்துக்களின் நடமாட்டம் இருந்ததே இல்லை. நட்டுவாக்காலி வந்த தினத்திற்குப் பிறகு அடிக்கடி ஒன்று இல்லாவிட்டால் ஒரு பூச்சி விஜயம் செய்வது சகஜமாகிவிட்டது. 

விஷ ஜந்துக்களின் திருவிழா நடப்பதற்குக் கொடியேற்றி வைத்து முதல் ஆஜர் கொடுத்த பெருமையை ‘நண்டுத் தெறுக்கால்’ எடுத்துக் கொண்டதால் இந்த விசேஷ விழாவின் ‘முள்ளுப் பொறுக்கிச்சாமி’ அதுதான். “திருவிழா முதல் நாளிலே தெருக்களைப் பார்ப்பதற்கு அப்படி ஒரு சாமி வருமே, அது மாதிரி! தேளுகதான்  ‘சீவுலி’. ஏன்னு கேட்டா அடிக்கடி வந்து சாகுதுக தேளுக. தேரோட்டமாக எது வருமோ? பாம்பு வந்தாலும் வரும்!’- இப்படிக் கேலி பேசினார் எல்லைக்கு நாதர் 

“இதுமாதிரி எல்லாம் பேசாதிங்க. இந்த வருஷம் தவசுக்கு நாமளே நேரே சங்கரன் கோயிலுக்குப் போயி, கோமதி அம்மனுக்குச் செஞ்சிட்டு வாறதுதான் நல்லது. அம்மனுக்கு நம்ம பேரிலே கோபம் ஏற்பட்டிருக்கு” என்றாள் மீனாட்சி. 

பிள்ளை கனைப்புச் சிரிப்பு சிந்தினார். சொன்னார்: ‘இது உங்க கோமதி அம்மன் கோபம் இல்லை, மீனு. எங்க குட்டிச் சாத்தானின் கோபம் செய்கிற காரியம்னு தான் எனக்குத் தோணுது…’ 

‘கக்கே பிக்கேன்னு உளறாதீங்க!’ என்று சிடுசிடுத்தாள் ஸ்ரீமதி. 

அவள் பேச்சை ஒடுக்கும்படியாக அடித்துப் பேச வேண்டிய அவசியம் ஏற்பட்டுவிடவில்லை என்று எண்ணிய எல்லைக்குநாதர் மௌனமானார். 

எனினும் அவர் மனம் சும்மா இருக்கவில்லை; பண்ணையார் ஒண்டிப்புலியைப் பற்றி இஷ்டம் போல் எண் ணிக் கொண்டிருந்தது. மந்திர தந்திரங்களைப் பற்றி, யட்சிணி வேலைகளைப் பற்றி, குறளிக் கூத்துக்களைப் பற்றி, ஏவல் லீலைகளைப் பற்றி, எல்லாம் நினைவுப் பின்னலை இழைய விட்டது; ‘ஒண்டிப்புலி இது மாதிரி விவகாரங்களில் ஈடுபாடு உள்ளவன் தான்; அதில் சந்தேகமே கிடையாது’ என்று முத்திரை குத்தியது. 

எல்லைக்குநாதர் இவ்விதம் எண்ணியதில் நியாயம் இருந்தது. நட்டுவாக்காலி விஜயம் செய்த நாள், அவர் பண்ணையாருக்கு விரோதமாகச் செயல் புரிந்த தினம் தான். எல்லாம் பண்ணையாருக்குப் பாதகம் விளைவிக்கக் கூடிய முறையில் நடவடிக்கை எடுக்க நேரிட்டபோதெல்லாம் தேளோ, பூரானோ, ஜலமண்டலியோ வந்து பயமுறுத்தியது. விஷ ஜந்து எதுவும் அவரைக் கடிக்கவோ கொட்டவோ இல்லை. அதுவரையில் அதற்குத் தனது மனைவியின் பிரார்த்தனையும், தனது நல்லதனமும்தான் காரணம் என்று நம்பினார் அவர். 

“இதுவரை தீங்கு எதுவும் ஏற்படவில்லை என்பதனால் இனியும் தீமை விளையாது என்று தெம்பாகத் திரிய முடியாது. ஜாக்கிரதையாக இருக்கவேண்டியது அவசியம்” என்று நினைத்தார் அவர். 

இன்ஸ்பெக்டர் எல்லைக்குநாத பிள்ளை உத்தியோகத் தோரணையில் பண்ணைக்காடு வட்டாரத்தை ‘இன்ஸ்பெக்ட்’ செய்யத்தேதி குறித்திருந்தார். அதைப் பண்ணையாருக்கும் அறிவித்திருந்தார். 

இன்ஸ்பெக்டர் தன்னுடைய வீட்டிலேயே தங்கலாம்; சகல வசதிகளும் செய்து தர முடியும்; மறுநாள் வேட்டைக்குப் போகலாம் என்று பண்ணையார் தெரிவித்தார், ஓர் ஆள் மூலம். 

‘எல்லைக்குநாத பிள்ளை இப்பொழுது இன்ஸ்பெக்டர் தோரணையில் வருகிறார். அதனால் பண்ணையாரின் அதிதியாகத் தங்க முடியாது. பரிசோதனைகளில் ஈடுபட்டுத் திருட்டுக் கேஸ்களைக் கண்டு பிடிப்பது தான் இன்ஸ்பெக்டர் கலந்துகொள்ளக் கூடிய வேட்டை. மலை அணிலையும், பழந்தின்னி வௌவாலையும், முயல்களையும், வக்கா கொக்கு, குருவிகளையும் கொல்லுகிற வேட்டை எல்லைக்கு நாதனுக்குப் பிடிக்காது’ என்று எழுதி அனுப்பிவிட்டார் பிள்ளை. 

அவர் பிரயாணத்துக்குக் கிளம்பிக் கொண்டிருந்தார். சேவகர் இசக்கித் தேவர் பூட்ஸ்களைத் தட்டித் துடைத்துக் கொண்டிருந்தார். எதையும் துருவித் துப்புரவாகச் சுத்தம் செய்தால்தான் தேவருக்குத் திருப்தி. பூட்ஸ் களையும் கால் மணி நேரமாகத் தட்டிக் கொட்டி வேலை செய்து கொண்டிருந்தார் தேவர். 

“என்னவே தேவரே, பூட்ஸ் கிளீன் பண்ண இவ்வளவு நேரமா?” என்று கேட்டபடி வந்து சேர்ந்தார் பிள்ளை. 

“இதோ ஆச்சு எசமான்!” என்று சொல்லி ஒரு பூட்சைக் குப்புறக் கவிழ்த்துத் தட்டினார் தேவர். 

“என்ன தேவரே! அதுக்குள்ளே என்னதான் இருக்கும்னு நெனச்சீரு? எதையோ தேடுத மாதிரியில்லா கொட்டிக் கவிழ்த்துத் தட்டி….” 

அவர் வாய் மூடவில்லை, வெளியே வந்து விழுந்தது ஒன்று. சிறுசாக, வெள்ளை வெளேரென்று – ஒரு தேள்!

“பார்த்தேளா, எசமான். இதைத்தான் ராசாத்தேள் என்பாக. இது கொட்டுச்சோ, அவ்வளவுதான். பத்தே நிமிசத்திலே ஆளு அவுட்டு…” 

அத் தேள் இயக்கமற்றுக் கிடந்தது ஒரு கணம். வட்டமிட்டுச் சுற்றியது, திசை காண முயல்வது போல. வேகமாக ஓடத் தொடங்கியது – இன்ஸ்பெக்டர் நின்ற பக்கமாக. 

“வே வே ஓடுது வேய்!” 

‘அது உசிரே இதோ ஓடுது பாருங்க’ என்றார் தேவர், ஒரு அறை; பூட்ஸ் நசுக்கியது தேளை; ஒரு தேய்ப்பு. ‘ராஜாத் தேள்’ துவையலாகிவிட்டது! 

“எசமான், எங்கே போனாலும் எங்கே நின்னாலும், இன்ஸ்பெக்ஷன் சமயத்திலே என்னையும் பக்கத்திலேயே நிக்கச் சொல்லிடுங்க. என்னை வேறே டூட்டிகளுக்கு அனுப்பிப் போடாதிங்க” என்றார் தேவர். 

இன்ஸ்பெக்டரின் உடலில் களுக்கம் ஏற்பட்டது. ‘ஏன் தேவரே. என் அப்படிச் சொல்லுதீரு?’ என்று கேட்டார். 

தேவர் தயங்கித் தயங்கிச் சொன்னார்: “ஒண்டிப் புலியா பிள்ளை பெரிய ஆளு. ஆளுக்குள்ளே ஒம்பது ஆளுங்கிற கணக்கிலே அவரு. அவருகிட்டே பழகும் போது ஜாக்கிரதையாப் பழகணும். பகைச்சுக்கிடுறவங்களோ ரொம்ப ஜாக்கிரதையாக இருக்கணும்… எசமானுக்கு நான் சொல்லியா தெரியணும்!” 

எல்லைக்குநாதர் திடீரென்று கேட்டு வைத்தார் “உமக்கும் மந்திர தந்திரங்களிலே பயிற்சி உண்டோ, தேவரே?” என்று. 

“இப்படித் திட்டாந்தமாகக் கேட்டால்” என்று புடதியைச் சொரிந்தார் தேவர். 

“என்னமோ தோணுச்சு. நீரு பூட்சைத் தேடித் துருளியதுக்கும, தேளு வந்ததுக்கும் ஏதோ தொடர்பு இல்லாமலா இருக்குமுன்னு நெனச்சேன். அதுதான்.”

தேவர் ‘நமூட்டுச் சிரிப்பு’ சிரித்தார். “நல்ல பயிற்சியின்னு சொல்ல முடியாது. ஏதோ தெரியும்னு வையுங்களேன். ஆனால் பண்ணையாரு  பெரிய கை ஆச்சுதே எசமான்!” என்றார். 

இன்ஸ்பெக்டர் பதில் எதுவும் சொல்லவே இல்லை. 


ஒண்டிப்புலியா பிள்ளை மீது சந்தேகம் ஏற்பட்டு விட்டதால், எல்லைக்குநாதர் பண்ணையாரைக் கொஞ்சம் கூட நம்புவதில்லை; “அவன் வீட்டில் சோறு தண்ணிகூட உண்பதில்லை” என முடிவு செய்து விட்டார்.

விஷப் பூச்சிகளின் உதவியாலே மனுஷனைத் தீர்த்துக் கட்டினால், சாட்சிகளோ சந்தேகத்துக்குக் காரணங்களோ ஏற்படாதுன்னு அவன் எண்ணியிருக்கலாம். காரியம் மிஞ்சிப் போகிறபோது விஷம் கொடுத்தாவது முடித்து விடலாம் என்று நினைக்கத் தயங்கவா போகிறான்? குழம்பு கொதிக்கிறபோது அதிலே அரணையைப் புடிச்சிப் போட்டிருந்தான்னு வையும். எப்படித் தெரியப் போவுது?” என்று வாதித்தது அவர் மனம். 

ஆகவே, மனைவி தயாரித்துக் கொடுத்த சித்திரான் னங்களையே சாப்பிட்டார். சுப்பையாப் பிள்ளை கிணற்றிலிருந்து எடுத்து வந்த தண்ணீரையே குடித்தார் இன்ஸ்பெக்டர். 

“இன்ஸ்பெக்டர் வாள் ரொம்ப ஆசார சீலராக மாறிருக்கிறாப்போலத் தோணுதே!” என்றார் பண்ணையார். பழய சிரிப்பே சிந்தினார். இன்ஸ்பெக்டர் தன்னைச் சந்தேகிக்கிறார் என்பதை ஊகித்துவிட்டார் என்றே தெரிந்தது. 

“நீங்க நியாயத்துக்காக ரொம்பவும் பாடுபடுறீங்க, ஸார்!” என்று எடக்கு மொழி புகன்றார் ஒண்டிப்புலி. 

“அநியாயத்துக்காகப் பாடுபடுவதை விட இது நல்லதுதானே!” என்று சொல்லி, எல்லைக்குநாதர் பண்ணையாரின் முகத்தையே கவனித்தார். 

“ஹெஹ்! ஆனா, நல்லதை எல்லாம் அனுபவிக்க முடிகிறது யாராலேயோ? நியாயத்துக்காக உழைக்கிறவங்க ரொம்பவும் கஷ்டப்படுவாங்க என்று கேள்வி. அது நிசந்தானா ஸார்?” 

“இருக்கலாம்.” 

“நியாயம் என்று நேர்மையாக வாழும்போது கஷ்டம். அநியாயமான வகைகளில் வாழ்ந்தாலோ எவ்வளவோ லாபங்கள் கிடைக்கும். விசித்திரமான வாழ்க்கை முறைதான், சரி, இப்படி வாழ்க்கையே நியாயத்துக்கு நன்மை வழங்கத் தயங்குகிற போது, மனிதன் ஏனய்யா நியாயம் நியாயம் என்று சொல்லிக் கஷ்டப் படணும்? அதுதான் என் கேள்வி’ என ஓங்கி அறைந்தார் ஒண்டிப் புலி. 

“நல்ல கேள்விதான். ஆனால், கடவுளைக் கேட்க வேண்டிய கேள்வி அல்லது இப்படி வாழ்க்கை முறையை அமைத்துவிட்ட சக்தியை – லைப் போர்ஸ் என்பார்களே, அதைக் – கேட்க வேண்டிய கேள்வி!” என்றார் எல்லைக்குநாதர். 

“அது கிடக்குது ஸார். உங்களைப் பற்றிச் சொல்லுங்க. நீங்க வாழ்க்கையை அனுபவிக்க விரும்பவில்லையா?” 

“என் இஷ்டம்போல் – எனக்குச் சரி என்று பட்ட வழியிலே – நான் நன்றாக வாழ்கிறேன்.” 

“அப்படியா சொல்கிறீர்கள்?” என்று ஒரு ரகமாகப் பார்த்தார் பண்ணையார். 

“பண்ணையார்வாள்! உலகம் பல விதம், மனிதர்கள் ரகம் ரகம். அதிலே நீங்க ஒரு தினுசு. உங்களுக்கு நேர்மாறான ரகம் நான். நாம் இரண்டு பேரும் சந்திக்க நேர்ந்திருப்பது கூட வாழ்க்கையின் வேடிக்கையான போக்குகளில் ஒன்றுதான்; இல்லையா?” என்று கேட்டு விட்டு, உரக்கச் சிரித்தார் எல்லையா பிள்ளை. 

உயிரற்ற சிரிப்பு படர்ந்தது ஒண்டிப்புலியின் முகத்திலே. அவர் பேச்சை மாற்ற முயன்றது, அவரது குரலிலே தொனித்தது. 

”பண்ணைக்காடு வளமான பிரதேசம், இஷ்டம்போல் அனுபவித்து வாழ, சகல சகல வசதிகளும் கிடைக்கக் கூடிய சொர்க்கம் இது. பழங்கள் சாப்பாட்டுப் பொருள்கள் எல்லாம் அருமையானவை. வாசனைக்கு இந்தப் பக்கத்துச் சந்தனத்துக்கு ஈடானது வேறே கிடையாது. மலைப் பகுதியிலே மேஞ்சிட்டு வர்றதுனாலே இங்குள்ள பசுமாடுகள் கொடுக்கிற பாலின் சுவையே தனி, அதேமாதிரி தான் இந்தப் பக்கத்துப் பொம்பிளைகளும். இயற்கையிலேயே மினுமினுப்பும் உடற்கட்டும் சதைப்பற்றுமாக – இன்பச் சுரங்கங்களாக – இருக்கிறாங்க. அதிலும், மலைப்பாங்கிலே வேலை செய்து உடல் வலு ஏறிய குட்டிகள் – ரொம்ப ஷோக்கு வாய்ந்தவங்க….உங்க கிட்டேப் போயி இதை எல்லாம் சொல்றேனே! உங்களுக்கு இதிலே லயிப்பு இருக்கவா போவுது! மாசிலாமணியா பிள்ளைன்னு ஒரு இன்ஸ்பெக்டரு இருந்தாரே, அவுரு மாசத்திலே பதினைஞ்சு நாள் இங்கே வந்திருவாரு. இங்தே வராத நாட்களிலே, ரகம் ரகமா சரக்குகளை அங்கேயே வரவழைச்சுடுவாரு. அர்ச்சுன நாச வாரிசு அவரு…” 

பண்ணையார் வேறு வகையில் வலைவீசித் தன்னை விழுத்தாட்டலாமா என ஆழம் பார்க்கிறார்  என்பது இன்ஸ்பெக்டருக்கா புரியாது! 

“அதுதான், உலகம் பலவிதம்னு சொன்னேனே.. ஆமா. நீங்க எல்லாத்தையும் வர்ணித்தீங்களே. ஒன்றைச் சேர்க்க மறந்து போயிட்டீங்களே!” என்றார் அவர். 

ஆவலோடு “என்னது? எதைச் சொல்கிறீங்க?” என்று கேட்டார் பண்ணையார். 

“இங்கே விஷப்பூச்சிகள் அதிகம். அவை கூடத் தனிரகமானவைதான். ஆளைத் தேடித் தேடி துரத்தும் குணமுள்ளவை. இந்த விஷயம் கூட உங்களுக்குத் தெரிஞ்சிருக்கணுமே?’ 

இப்படிச் சொல்லிவிட்டு எல்லைக்குநாதர் கண்களைச் சிமிட்டினார், சிரித்தார். 

பண்ணையாரின் கண்கள் இன்ஸ்பெக்டரை மேலும் கீழுமாக ஆராய்ந்தன. அவர் பார்வையின் அர்த்தத்தைப் புரிந்துகொள்ள முயல்வது போல் முறைத்தான பின், இயல்பான பார்வை குடி கொண்டது அங்கு. 

ஒண்டிப்புலி சிரித்தார். தனிரகப் பெருஞ் சிரிப்பு தான்.


அன்று மாலை… 

எல்லைக்கு நாதரும் ஒண்டிப்புலியும் சும்மா உலாத்தி விட்டுத் திரும்பும் வேளை. இசக்கித் தேவரும் இன்ஸ்பெக்டரின் பின்னாலேயே நடந்தார். தேவரின் கண்கள் சும்மா இருக்கவில்லை. விழிப்புடன் சுழன்று புரண்டன. 

“இந்தப் பூவைப் பார்த்தீர்களா?” என்று ஒரு செடி அருகே போனார் ஒண்டிப்புலி. இன்ஸ்பெக்டரும் சென் றார். 

தனிரகமான பூக்கள்தான். பெரிதாகக் கவர்ச் சிக்கும் வர்ணத்துடன், அழகாக ஒளிவீசித் திகழ்ந்தன அவை. மணமும் இருந்தது. 

“இதுமாதிரிப் பூவை இதற்கு முன் நீங்கள் பார்த்திருக்க மாட்டீர்கள். இல்லையா? இந்தப் பக்கத்துக்கு விசேஷமான சிறப்பு தருபவற்றில் இதுவும் ஒன்று” என்றார் பண்ணையார். 

பூவையே பார்த்து ரசித்தபடி நின்றார் இன்ஸ்பெக் டர் கவனித்தபடி நின்ற பண்ணையாரின் கண்களில் திடீரென்று கனல் ஒளி தெறித்தது. உதடுகளில் சிரிப்பு மிதந்தது. சற்று விலகி நின்று, இன்ஸ்பெக்டர் முகத்திற்கும் செடியில் ஓர் இடத்திற்குமாகக் கண்களை மேயவிட்டு மகிழ்ந்தார் அவர். 

‘சொதக்’ என்று ஒலி பேதம். வேகமான வீச்சு. செடியின் கிளை ஒன்று முறிந்து விழுந்தது. அதிலிருந்து துள்ளித் தெறித்தது ஒன்று – பச்சை நிறக்கொடி போல்; செடியின் ஒரு பகுதி போல…. 

கடுகடுப்புடன் திரும்பினார் பண்ணையார். திகைப்போடு நோக்கினார் இன்ஸ்பெக்டர். 

தடியை லாகவமாகச் சுழற்றி வளைவு ஏற்படுத்தி தேவர் வேகமாக முன்வந்து, துள்ளி விழுந்து அதிர்ச்சியில் கிடந்து, தெளிவுற்று ஓட முயன்ற, பச்சைப் பாம்பை ஓங்கி அறைந்து கொன்றார். 

”கண்குத்திப் பாம்பு,எசமான். பூவுக்கு மேலே இருந்து எட்டிப் பார்த்தது. கொத்தினால் உங்க கண்ணைத் கொத்தும்; பேஷாக் கொத்தட்டுமே என்றோ என்னவோ எச்சரிக்கை செய்யாமலே பண்ணை எசமான் வேடிக்கை பார்த்துச் சிரிச்சபடி நின்றார். நான் அப்படி நிற்க முடியுமா, எசமான்?” என்று பவ்யமாக – ஆனால், குத்தும் வகையிலே சொன்னார் இசக்கித் தேவர். 

இன்ஸ்பெக்டர் பார்வையினால் நன்றியை அறிவித்தார். பண்ணையாரை அவர் பார்த்த பார்வையிலே வெறுப்பும் கோபமும் ஒளியிட்டன. 

இரவு நேரம். 

இன்ஸ்பெக்டர் எல்லைக்குநாத பிள்ளை ரிப்போர்ட்டு எழுதிக்கொண்டிருந்தார். 

அப்போது அவர் பண்ணைக்காட்டுச் சத்திரத்துத் திண்ணையில், ஓர் ஈஸிச் சேரில் உட்கார்ந்திருந்தார். அந் நாற்காலியின் நீண்ட கைகளின் குறுக்கே ஒரு பலகையைப் போட்டு, எழுதச் சௌகரியமான மேஜை யாக மாற்றியிருந்தார். அதன் பக்கத்திலே ஸ்டூல் மீது அரிக்கன் லாம்பு எரிந்து கொண்டிருந்தது. விளக்கின் அருகே சில ‘கேஸ் கட்டு களும் நோட்டுகளும் இருந்தன. 

பண்ணைக்காட்டைப் பரிசோதித்துத் தாம் கண்ட வைகளைப் பற்றியும், பண்ணையாரைக் குறித்தும் விரிவாக எழுதி முடித்திருந்த இன்ஸ்பெக்டர் அதைத் திரும்பப் படித்துக் கொண்டிருந்தார். 

“பண்ணையாரிடம் இப்படி இப்படி எழுதியிருக்கி றேன் என்று சொல்லிவிட வேண்டியதுதான். அவரைப் போலக் கோழைத்தனமாகப் பதுங்கியிருந்து தாக்குகிற சுபாவம் நம்மிடம் கிடையாது” என்று மனசோடு புலம்பி வைத்தார் பிள்ளை. 

ஒரு மூலையில், விளக்கின் கதிரொளி மூஞ்சியில் படாதவாறு, உட்கார்ந்திருந்தார் சேவகர் சக்கித் தேவர். அங்குமிங்கும் பார்வை எறிந்துகொண்டிருந்த தேவரின் கண்கள் சடக்கென்று, ஸடூல் மீது ஏற்பட்ட ருவித அசைவினால் கவரப்பட்டன. காகிதக்கட்டுகளி னூடே னவோ ஒன்று ஊர்ந்து தலையை மேலே தூக்கி எட்டிப் பார்த்துவிட்டு உள்ளே இழுத்துக்கொண் டது போல் தெரியவே தேவர் கூர்ந்து கவனித்தார். 

“எசமான், ஸ்டூலிலே காகிதக்கட்டுக்களுக்கு நடுவிலே ஏதாவது இருக்குதோ?” என்று கேட்டார். 

அலட்சியமாகப் பார்த்துவிட்டு “ஒண்ணுமில்லையே!” என்றார் எல்லைக்குநாதர். 

“இல்லை எசமான், என்னவோ ஒண்ணு…” என்று இழுத்தபடி, தேவர் எழுந்து ஸ்டூலின் அருகே வந்து குனிந்து பார்த்தார். “இங்கேயேதான் இருக்குது. எமப்பய இது. என்னமாக் கட்டோடு கட்டாக ஒட்டி கிட்டுது பார்த்தீர்களா!” என்று வியப்புச் சொல் என்று தீர்த்துவிட்டு அங்குமிங்கும் கவனித்தார். 

“என்னது வேய் தேவரே?” 

”பாம்பு, எசமான்!” 

“ஆங்” என்றார் இன்ஸ்பெக்டர் ” உம்ம கண்ணிலே தான் எல்லாம் படு வேய். இது எங்கே-” என்று ஆரம்பித்தவர், “ஓ! இங்கே இருக்காரோ! சரி தான்” என்று தலையசைத்தார். ஈஸிச் சேரின் மறுபக்கம் கீழே தரையில் கிடந்த ‘ரூல் தடி’யை எடுத்துத் தேவரிடம் கொடுத்து, “கவனியும் தேவரே!” என்று சொல்லிவிட்டுச் சிரித்தார் 

காகிதக் கட்டுகளினூடே ஊர்ந்தது பாம்புக்குட்டி ஒன்று. மீண்டும் தலையைத் தூக்கி எட்டிப் பார்த்தது. அதன் கன்னங்கரிய கண்மணிகள் விளக்கொளியில், ரண்டு சொட்டு மைத்துளிகள் போல் மினுமினுத்தன. அதன் சருமம் கூட மின்னியது. அதையே கவனித்து நின்ற தேவர், அதன் தலை வசமாகப் படிந்ததும், ரூல் தடியைப் பதித்து அழுத்தித் திருகினார். பலமாக அழுத் தினார். பாம்புக்குட்டி துள்ளித் துடித்து, வாலைச் சுழற்றிச் சுழற்றி அடித்தது. தடிமீது சுற்றிச் சுழன்று சுழன்று விழுந்து துடித்தது; ஓய்ந்து சுருண்டது; பலமாகத் துடித்துப் பின் ஒடுங்கியது. 

“சவமே தாலைஞ்சியா ?” என்று மீண்டும் பலமாக அழுத்தினார் தேவர். அது அசையவே இல்லை. 

தடியை நீக்கினார். பாம்புக்குட்டியின் தலை நசுங்கிக் கிடந்தது. ‘சனியன் செத்தது!’ எனறு முனங்கினார் தேவர். 

விளக்கைத் தூக்கி, ஒளி நன்றாக அதன்மீது விழும் படியாகப் பிடித்த இன்ஸ்பெக்டர், “இது என்ன பாம்பு தேவரே? மேலெல்லாம் என்னமோ மாதிரித் தெரியுதே” என்றார். 

“இதுதான் கட்டுவிரியன். இது கடிச்சா உடம்பெல்லாம் அதுமேலே கிடக்கிற மாதிரி தடுப்பு தடுப்பா – பத்துப் பத்தாக – விழுமின்னு சொல்லுவாங்க…” 

“அப்படியா” என்றார் பிள்ளை. ”இது எப்படி வே உம்ம கண்ணிலே பட்டுது? நான் கவனிக்கவே இல்லியே!”

“இந்தப் பக்கமே பார்த்தபடி இருந்தேனா? என்னமோ அசையிற மாதிரித் தெரியுதேன்னு பார்த்தேன்…” 

தேவரின் பேச்சு கடைப்பட்டுவிட்டது. “என்ன இன்ஸ்பெக்டர்வாள்! சாப்பாடெல்லாம் முடிஞ்சுதா” என்று விசாரித்தபடி பண்ணையார் புகுந்ததனால்.

“வாங்க!” என்று சொல்லிவைத்தார் இன்ஸ்பெக்டர். 

“தேவரே, இந்த ரிக்கார்டுகளைத் தூக்கி இந்தப் பக்கமா வச்சிரும். பாம்புக்குட்டியை வெளியே எறியும். ஸ்டுலிலே உட்காருங்க பண்ணைப் பிள்ளைவாள்!” 

“பாம்புக்குட்டியா!” என் று ஆச்சர்யப்பட்டார் ஒண்டிப்புலி. “ஏது, இன்ஸ்பெக்டர் ஸார். உங்களுக்கும் பாம்புக்கும் ரொம்ப ராசியோ? உங்ககூட அதிகமா உறவு கொண்டாட வாராப் போலத் தெரியுதே! ஹெஹ, போன ஜன்மத்திலே நீங்க பாம்புப் பிறவி எடுத்திருப்பீக போலிருக்கு” என்று சொல்லிச் சிரித்தார். 

எல்லைக்குநாத பிள்ளை பண்ணையாரை ஒரு தினுசாகப் பார்த்தார். “எல்லாம் உங்க உறவு ஏற்பட்ட பிறகு வந்து சேர்ந்த பாக்கியம்தான். ஒருவேளை, நீங்க இந்தப் பிறவியிலேயே பாம்புக்குத் தாயாதியாக இருப்பீர்களோ என்னவோ!” என்றார். 

‘சளக்!’ என்றொரு சிரிப்பு உதிர்ந்தது. தேவர்தான் அப்படிச் சிரித்தார். 

பண்ணையார் திரும்பி கவனித்தார். ரூல் தடி நுனியில் செத்த பாம்பைத் தொங்க விட்டபடி நின் தேவரைப் பார்க்கப் பார்க்க அவருக்கு எரிச்சலாக வந்தது. “ஏன்யா அதை அப்படிப் புடிச்சிக்கிட்டுத் தீவட்டித் தடியன் மாதிரி நிற்கிறே? தூரக்கொண்டு போய்ப் போடேன்” என்று எரிந்து விழுந்தார். 

தேவரின் கண்களிலே குரோதம் பொங்கிக் கனன்றது ஒரு கணம். அதை யாரும் கவனித்திருக்க முடியாது. நிற்கும் அவரது முக பாவங்களை எடுத்துக் காட்டப் போதுமான விளக்கு வெளிச்சம் தேவர்மீது படியவில்லை. 

தேவர் எடக்காகப் பேசினார் : “பண்ணை எசமான் பாம்பு ஆராய்ச்சி பண்ண விரும்பினாலும் விரும்பலாம். அதனாலேதான் காத்து நிற்கிறேன்!” 

‘மடையன்’ என்று முனங்கினார் ஒண்டிப்புலி. 

தேவர் அலட்சியமாகச் சிரித்துவிட்டு வெளியே போனார். கொஞ்ச நேரத்தில் திரும்பிவந்து, மூலையிடத்தில் உட்கார்ந்து கொண்டார். 


இன்ஸ்பெக்டர் ரிப்போர்ட்டில் எழுதியிருப்பதைச் சொல்லத் தொடங்கவும், “உங்க ஆளை வெளியே போய் இருக்கச் சொல்லுங்களேன்” என்று கேட்டுக்கொண்டார் பண்ணையார். 

“சும்மா இருக்கட்டுமே!” என்று ஒதுக்கி விட்டார் இன்ஸ்பெக்டர் 

“ஒரு முக்கிய விஷயமாகப் பேசணும்; அதுக்காகத் தான் இப்ப வந்தேன்.”

“தேவரு இங்கே இருக்கிறதுனாலே ஒண்ணும் கெட்டுப் போகாது. சும்மா சொல்லுங்க”. 

பண்ணையாருக்கு வேறு வழி இல்லாமல் போயிற்று. இருந்தாலும் குத்தலாகச் சொல்லி வைத்தார். “வேலைக்காரனை எல்லாம் வைக்கிற இடத்திலே வைக்கணும் ஸார். இல்லைன்னு சொன்னா…” 

“தேவர் வேலைக்காரன் இல்லை நீங்க பேசவேண்டிய விஷயம் வேறே ஏதாவது இருந்தால் பேசுங்கள்” எல்லைக்குநாதரின் குரல் கடுமை பெற்றிருந்தது. 

பண்ணையார் தலையைச் சொரிந்து கொண்டார். விளக்கைப் பார்த்தார். வெறும் வெளியைக் கவனித்தார். இன்ஸ்பெக்டர் முகத்தின் மீது வேகப்பார்வை ஒன்று வீசிவிட்டுத் தன் கைவிரல்களைக் கவனிப்பதில் ஈடுபட்டார். பிறகு தொண்டையைக் கனைத்துச் சரி செய்து கொண்டு சொன்னார். 

“இன்ஸ்பெக்டர் ஸார்! நாம் ரெண்டு பேரும் நண்பர் களாகவே பழகலாம் நீங்க என்மீது வீணான சந்தேகம் கொண்டிருப்பதாகத் தெரியுது. என் கூட நீங்க பழகிப் பார்த்தது இல்லே. மனசிலே சந்தேகம் இல்லாமெ, நீங்க என் கூடப் பழகினால், பண்ணையார் ஒண்டிப்புலியா பிள்ளை என்ன மாதிரி மனுஷன்கிறது உங்களுக்குப் புரியும். உங்களுக்கும் நன்மை ஏற்படும்….” 

”பண்ணையார்வாள், உங்கள் நல்லெண்ணத்துக்காக நன்றி செலுத்துகிறேன். உங்ககூட நான் இப்ப பழகி வருகிற முறையிலிருந்தே உங்களைப் பற்றி ரொம்ப றையத் தெரிஞ்சுகொள்ள முடிந்திருக்கு. எனக்கு நன்மை ஏற்படாவிட்டால் பே பாகுது போங்க. நீங்க அதைப்பற்றி வீண் கவலைப்பட வேண்டாமே!” 

பண்ணையார் பெருமூச்செறிந்தார். “என்னைப் பகைச்சுக்கிடறதுனாலே உமக்கு என்னய்யா லாபம்?’ என்று கேட்டார். 

“வாங்குகிற கூலிக்கு கு உண்மையாக உழைக்கணும் என்கிற கொள்கை எனக்கு உண்டு. எனது ஆத்மாவை நானே களங்கப் படுத்திக்கொள்ளத் தயாராகவுமில்லை எனக்கு என் மனச்சாட்சி தான் முக்கியம்; பிறத்தியான் தயவு பெரிசல்ல. அதனாலே, யாருடையந நட்புக்கும் நான் என்னை அடிமையாக்க வேண்டிய தேவை ஏற்படுவதில்லை. பிறர் மிரட்டல்களுக்கு அஞ்சவேண்டிய அவசியமும் இல்லை”. 

இன்ஸ்பெக்டரின் கண்டிப்பான பேச்சு பண்ணை யாரை வாயடைக்கச் செய்தது. என்ன பேசுவது என்று தெரியாமல், உள்ளுக்குள்ளேயே குமுறிக்கொண்டு உட்கார்ந்திருந்தார். சிறிது நேரமானதும் எழுந்து போய் விட்டார். 

நேரம் ஊர்ந் து கொண்டிருந்தது. 

“என்ன தேவரே தூங்கி விட்டீரா?” என்று கேட்டார் எ.பி. 

“இல்லே எசமான்!” 

“நீர் என்ன நெனக்கீரு?” 

“எசமான் ரொம்ப காலத்துக்கு முந்தியே இந்தப் பக்கம் வந்திருக்கணும். ஆரம்பத்திலேயே கவனிச்சிருந்தா, ஒண்டிப்புலியா பிள்ளை இவ்வளவு தூரம் வளர்ந்திருக்க மாட்டாரு. பல பேரும் அவரை ரொம்ப பெரிய மனுஷராக ஆக்கிபிட்டாங்க. இப்ப பண்ணையார் தன் முழு பலத்தோடும் வேலை செய்வார். நாம ரொம்ப ஜாக்கிரதையாக இருக்கணும்னு தான் தோணுது” என்றார் தேவர். 

“உம், என்னமோ பார்ப்போம்” என்று சொல்லி வைத்தார் பிள்ளை. “நான் இந்த சேரிலேயே சாய்ந்தபடி கண்ணை மூடுறேன். நீரு அங்கேயே அப்படிப் படுத்துக் கிடும். விளக்கை அணைக்கவேண்டாம். கொஞ்சமாக இறக்கி, அந்த மூலையிலே வச்சிரும்” என்றார். 

தேவர் அவ்விதமே செய்தார். 

அன்றிரவு அவர்கள் அஞ்சியபடி விசேஷமாகவோ விபரீதமாகவோ எதுவும் நடந்துவிடவில்லை. இரவு சுகமே கழிந்தது. 

தேவர் சுக நித்திரை பயிலவேயில்லை. விழிப்புடன் காவல் காத்தார். 

”பண்ணையார் பெரிய கோப்பன், ஏதாவது பண்ணுவான்” என்று அவர் மனம் முனகிக்கொண்டிருந்தது. 

அதிகாலையில் எல்லைக்குநாத பிள்ளை பிரயாணத்துக்கு ஆயத்தமானார். அவரது வில்வண்டி தயாராக வந்து நின்றது. தேவர் சாமான்களை யெல்லாம் எடுத்து வண்டியில் வைத்துவிட்டார். மற்ற சேவகர்கள் முன்னாலே நடந்து சென்றுவிட்டார்கள். 

இன்ஸ்பெக்டரே சத்திரத்துப் படிகளில் ஒவ்வொன்றாகக் கால் வைத்து இறங்கினார். திடீரென்று ‘வே வே…….. வேய்!’ என்று அலறி அடித்துப் பல்டியடிக்கத் தெரிந்தவர் போல் தள்ளாடினார். கடைசிப் படியிலிருந்து தரையில் கால் பதித்தவர் ‘நளுநளு’ வென்றிருந்த எதன் மீதோ நறுக்கென்று மிதித்துவிட்டார். அது ‘புஸ் புஸ்’ என்று சிறவும் அவர் பயந்து கத்தினார். 

ஜாக்கிரதையாக வண்டியில் சாக்கு மெத்தை ஓரத்தில் பதுக்கி வைத்திருந்த வெட்டரிவாளைத் தேவர், எடுத்துக்கொண்டு ஒடி வந்தார். வண்டிக்காரன் பேட்டரி லைட்டை அடித்து ஒளி வீசினான். 

“வே வே, சீக்கிரம்” என்று கூவியபடி ஒரு குதி குதித்து விலகினார் பிள்ளை. 

பெரிய பாம்பு ஒன்று நெளிந்து கொடுத்தது. வளைந்து சுற்றியது. ‘புஸ்’ என்று சீறிக்கொண்டு, எல்லைக்குநாதரின் பக்கம் திரும்பியது. 

தேவர் தாமதிக்கவில்லை. அரிவாளை ஓங்கி ஒருபோடு போட்டார். பாம்பின் முரட்டு உடலிலே அது எங்கோ பட்டது. தெறித்து விழுந்தது கீழே. 

பாம்பு வேதனையுற்றது போல் உடலை நெளித்து கொடுத்தது. வேகமாக நகரத் தொடங்கியது. 

தேவர் அரிவாளை எடுத்துக்கொண்டு தாவினார். ஓங்கி வீசினார் மறுபடியும். பாம்பு விருட்டென்று ஓடி விட்டது. எனினும் அதனுடைய வால் நுனி துண்டாகி விழுந்தது. 

தேவர் வாயினுள் என்னவோ முணுமுணுத்துக் கொண்டே, அந்த வால் நுனியை அரிவாளால் கொத்து கொத்தென்று கொத்தி அரிந்து தள்ளினார். 

மேல் பூராவும் விதிர்விதிர்க்க நின்றார் இன்ஸ்பெக் டர் பயம் அவரை வாயடைக்க வைத்தது. பேச நா எழவேயில்லை. அவர் உள்ளம் தெய்வத்தின் பெயர்களை உச்சரித்துக்கொண்டிருந்தது. 

எவ்வளவு பெரிய பாம்பு! அது கடித்தால் மனுஷன் என்ன ஆகிறது? – அவர் உள்ளத்தில் பதைப்பு ஏற்பட்டது. 

“வண்டியிலே ஏறுங்க எசமான். இன்னமே ஒரு பயமும் ஏற்படாது” என்று தைரியம் கூறினார் தேவர். 

முடுக்கி விடப்பட்ட யந்திரம் போல் செயல் புரிந்தார் பிள்ளை. 

வண்டி நகர்ந்தது. 

பயம் வண்டிக்காரனையும் பிடித்திருந்தது. ஆகவே, அவன் மாடுகளை ‘விரட்டு விரட்டு’ என்று விரட்டினான். 

விடிவின் ரேகை சிரித்தது. ஒளி எங்கும் பரவத் தொடங்கியது. கீழ்த்திசைச் சூரியன் தன் கதிர்களால் தடவித் தடவி வழி கண்டு மேலெழ முயன்றவன் போல் வானவீதியிலே கிரணங்களை முன் அனுப்பிக் கொண்டிருந்தான். பிறகு எட்டிப்பார்த்தான். 

வண்டி பண்ணைக்காட்டு எல்லையைக் கடந்ததும் தான், இன்ஸ்பெக்டர் பயம் தெளிந்தவர் போல் பெரு மூச்செறிந்தார். 

‘சே, எவ்வளவு பெரிய பாம்பு! அதிகாலை மங்கல் வெளிச்சத்திலே அது கிடக்கறதே தெரியலே. பூட்ஸ் காலால் நளுக்குன்னு மிதிக்கவும் தான்…’ 

தேவர் சிரித்துவிட்டார். 

‘ஏன் வே சிரிக்கீரு?’ – எல்லையா பிள்ளைக்குக் காரணம் புரியவில்லைதான். 

‘பண்ணையார் மார்பில் ஓங்கி மிதிச்ச மாதிரி இருக்கும்!’ என்றார் தேவர். 

‘என்ன வே உளறுதீரு?’ 

தேவர் தெளிவு படுத்தவில்லை. “இந்தப் பாம்பை நீங்க முன்னாலேயே பாத்திருக்கணுமே, எசமான்?” என்று புதிர்தான் போட்டார் அவர். 

“பார்த்திருக்கணுமா? இதையா?” 

பிள்ளை தன் தலையைச் சொரிந்தார். 

“பண்ணையாரின் செல்வக் குழந்தை மாதிரி இது. அவர் வீட்டுக் காட்சிசாலைக் கண்ணாடிப் பெட்டிக்குள்ளே…”

“ஓகோ, அந்தப் பெரிய பாம்புதானா அது செத்தது என்று பண்ணையாரு சொன்னாரே. எனக்கு அன்னைக்கே சந்தேகம்தான். செத்த மாதிரித் தெரியலியேன்னுகூட கேட்டேன். அவரு மழுப்பிவிட்டாரு.. அதே பாம்பு தானா இது! எப்படி வே கண்டுபிடிச்சீரு நீரு?” 

“ஒரு வகையிலே அது செத்த பாம்புன்னுதான் சொல்லணும். வாலை வெட்டினேனே ரத்தம் வந்துதா? வாலைத் துண்டு துண்டாகக் கொத்தின போதுகூட ரத்தம் துளிகூடக் காணலியே!” என்றார் தேவர். 

“அதுனாலேதான் கொத்துனீரா? ஏண்டா இவரு இப்படிச் செய்தாருன்னு…”

“புரியணுமா? இப்ப நீங்க பண்ணையாரைப் பார்த்தால் புரிஞ்சுபோம். ஆனால், மனுஷன் உங்களை நேரே சந்திக்க விரும்பமாட்டார் என்  ே ற நெனக்கிறேன்’ என்றார் தேவர். மிடுக்காகச் சிரித்தார். 

அவர் சிரிப்பிலும் பேச்சிலும் பொருள் புதைந்து கிடப்பதாகத்தான் தோன்றியது எல்லைக்குநா தருக்கு. விஷயத்தை அறிந்துகொள்ள, வண்டியை உடனேயே திருப்பிப் பண்ணையார் வீட்டுக்கே போகலாமா என்று எண்ணினார். ஆனால், உள்ளத்து உணர்வுக் குழப்பம் அறிவின் துடிப்பைவிட வலியதாக இருந்தது. அதனால் அவர் மெளனமானார். 

தேவரும் விளக்கம் தர முன்வரவில்லை. 


தேய்வு 

எல்லைக்குநாத பிள்ளை பண்ணைக் காட்டுக்குப் போய்விட்டுத் திரும்பிய மறுநாள்…. 

அவர் ஏதோ அலுவலில் ஈடுபட்டிருந்த வேளையில் இசக்கித் தேவர் சிரிப்பு முகத்தோடு வந்து சேர்ந்தார். 

“என்னவே தேவரே, சிரிப்பாணி பொங்கி வருதே! என்ன விசேஷம்?” என்று கேட்டு வைத்தார் பிள்ளை. 

தேவர் சொன்னார்: 

“பண்ணைக் காட்டிலே யிருந்து ஒரு ஆளு வந்துது. அங்கே ஒரு விபத்து நேர்ந்துட்டுதாம். அதிகாலையில் மலையடிவாரத்திலே உலாத்தப்போன பண்ணையாரு, அங்கேயிருந்த குளத்திலே இறங்கும்போது பாறாங்கல்லு மகுடிச்சிட்டுதாம்:காலு வழுக்கவே பண்ணையாரு ஒரு கல்லைப் பிடிக்க, அவர் நின்ன கல்லு புரண்டு உருள, இன்னொரு கல்லு காலு மேலேயே விழ, விரலுக சிதைஞ்சு பாதம் அப்படியே துண்டாயிட்டுதாம். எவ்வளவு கட்டுப் போட்டும், ரத்தம் நிற்காமே ஆறாக ஓடிக்கிட்டேயிருந் தாம். அவரு விழுந்த விழுகிலே, மார்பு ஒரு பாறை யிலே இடிச்சிட்டுதாம். கூாகூராக இருந்த பாறை, அரிவாளா லே வெட்டின மாதிரி, காயப்படுத்தி விட்ட சாம். பண்ணையாரு கடக்க முடியாம நடந்து சத்திரம் இருக்கிற தெரு மூலைக்கு வந்ததும் மயங்கி விழுந்து கிடந்தாராம். காலையிலே அந்தப் பக்கமாக வந்த ஆட்கள் அவரை வீடு கொண்டுபோய்ச் சேர்த்து, வேண்டிய சிகிச்சைகள் செஞ்சாகளாம். அவர் கண் திறந்து அறிவுத் தெளிவுபெற்ற பிறகுதான் இவ்வளவு விசயத்தையும் சொன்னாராம்….ஹஹ, எல்லாம் கதை போலிருக்கு. இல்லையா எசமான்?” 

தேவருக்குச் சிரிப்பு தாங்க முடியவில்லை! குலுங்கிக் குலுங்கிச் சிரித்தார். 

எல்லைக்குநாத பிள்ளையின் மூளை விஷயத்தைக் கிர கிக்கச் சிரமப்படுவது போல் தோன்றியது. அவர் பார்த்த பார்வையிலிருந்து திரும்புகிற வழியில் ‘பண்ணையாரைப் பார்த்தால் விஷயம் விளங்கும்’ என்று தேவர் சொன்னது அவர் நினைவில் குதித்தது. பாம்பின் வாலைத் தேவர் துண்டித்ததற்கும் பண்ணையாரின் கால் போனதற்கும் ஏதோ தொடர்பு இருப்பதாகப்பட்டது. ஆனால் அது எவ்விதமான சம்பந்தம் என்றுதான் புரியவில்லை.என்னவோ சொல்வார்களே- தென்ன மரத்திலே தேள் கொட்ட, பனைமரத்தில் நெறி கட்டியதாம் என்று, அந்தக் கணக் கிலே அல்லவா இருக்கிறது இதுவும்!’ என்றுதான் அவர் சிந்தனையில் எழுந்தது. 

“என்ன தேவரே விஷயம்? உமக்கு அதிகப்படியாச் சில விவரங்கள் தெரியும்னுதான் நினைக்கிறேன். அதை வாய்திறந்துதான் சொல்லுமேன்! பாம்பையும் பண்ணை யாரையும் சம்பந்தப்படுத்திப் பேசினீரே, அது ஏன்? பாம்பு அடிபடவும், பண்ணையார் காயம்படவும் நேர்ந்தது எதுனாலே?” என்று விசாரித்தார். 

“எசமான், சில விசயங்களைத் திட்டமாக இது இன்ன மாதிரித் தான்னு எல்லை கட்டி – சர்க்கார் முத்திரை போடுகிற மாதிரி அளவிட முடியாதுன்னு தான் தோணுது. பல காரியங்களை, அவற்றின் காரணங்களை, மனித அறிவு புரிந்து கொள்ளவே முடியவில்லை. புரிந்து கொள்ள முடியாத விஷயங்களைக் கண்டு பிரமித்து, பயந்து,அப்படி அப்படியே ஏற்றுக்கொண்டு,நம்பிக்கை யோடு பக்தி பண்ணி வளர்ப்பது ஒரு வகை. புரிந்து கொள்ள முடியவில்லை; அறிவுக்கு எட்டவில்லை; ஆகவே அது இருக்க முடியாது; அப்படி இருந்தாலும், நமக்கு அது தேவையில்லை என்று ஒதுக்கிவிட முயல்வது மற்றொரு வகை. இந்த இரண்டு வகைகளுக்கும் மத்தியமான இன்னொரு பிரிவும் இருக்கத்தானே வேண்டும்? இருக்கிறதா இல்லையா புரிந்துகொள்ள முடியுமா முடியாதா என்ற துடிப்போடு ஆராய்வது. ஆராய்ந்து ஆராய்ந்து, ஒருவிதப் பயிற்சி பெறுவதனாலே ஒருவகை நம்பிக்கை வளர ஏது உண்டாக்கிக் கொள்வது. ‘இருக்கிறது’ என்ற நம்பிக்கையோடு, அல்லது ‘இல்லை’ என்று முடிவுகட்டி அந்த நம்பிக்கையோடு,காரியம் செய்ய ஈடு படுகிறபோது எவ்வளவோ சாதிக்க முடியும் என்றுதான் எனக்குத் தோணுது. ‘இருக்குமோ…….. இருக்கும், இருக்கும்! அப்படி இருக்கவா போகுது?’- இப்படிக் கணத்துக்கு ஒரு மாதிரியாகச் சஞ்சலப் படுகிறபோது, எதுவும் சரியாக நடக்காது. இந்த விதமாக நானே யோசிச்சு யோசிச்சு மூளையைக் குழப்பிக்கொள்றது வழக்கம். 

”மந்திர வித்தைகள், சித்துக்கள் முதவியவற்றை இருக்கின்றன; வை சக்தி உள்ளவை இவற்றால் இவ்வளவோ சாதனை புரியமுடியும்’ என நம்பி, உபாசிக்கிறவங்க அவற்றைப் பழகித் தங்கள் லாபத்துக்கு உபயோகப் படுத்திக் கொள்கிறாங்க. ‘இவை எல்லாம் கிடையாது, இருக்க முடியாது என்கிறவங்க, இவற்றைப் பற்றி எண்ணாமலே காரியங்களைச் செய்துகொண்டு போகலாம், அவர்களது நம்பிக்கை வலுவாகிப் போகு மானால்,மந்திரம், பேய், பிசாசு என்கிற எதுவுமே அவர் மானால்,மந்திரம்,பேய்,பிசாசு களைப் பாதிக்க முடியாது என்றே வைத்துக் கொள்ள லாம். பேச்சுக்குத்தான். என்னைப் பொறுத்த வரை யில், நான் அவர்களைக் கேள்வி மேல் கேள்வி கேட்டுத் தி ணறடிக்க முடியும். சொல்லுக்கு ஒண்ணு சொல்றேன். 

“ஐயா, நீ வீட்டிலேயே இருக்கிறே. திடீர்னு உன் வீட்டுக் கூரையிலே கல்லு வந்துவிழுது. தீப்பந்தம் விழுது. உன் வீட்டுச் சோத்துப் பானையிலே மண்ணோ ரோமமோ, புழுவோ, அசிங்கமோ வந்து சேர்ந்துவிடுது, இதுக்கு நீ என்ன சொல்லுதே? இதுதான் ‘ஏவல்’னு நான் நம்புறேன். உன்னாலே விளக்க முடியாது. மனித மூளை புரிந்துகொள்ள முடியாத – புரியும்படியாக விளக்க முடியாத – ஒரு வித சக்தியின் லீலைகள் இவை. இப்படி எவ்வளவோ உதாரணம் சொல்ல முடியுமே! 

“எசமான்,நான் துமாதிரிப் பேசிப் பல பேரு வாயை அடைத்துவிட முடியும்…. நான் தேவையான விசயத்தைச் சொல்லாமெ வளவளன்னு பேசிக்கிட்டே இருக்கேனேயின்னு உங்களுக்குத் தோணலாம். இந்த விசயத்தை விளங்கவைக்க இவ்வளவு தூரம் சொல்ல ணும்னு நெனச்சேன். அவ்வளவு தான். 

“பண்ணையார் நம்பினார். அல்லது, இம்மாதிரி லீலை களை மதமாகக் கொண்டிருந்த சில பேர்களிடம் நம்பிக்கை வச்சார். பக்தி பண்ணினார். ஜனங்களை மிரட்டி, தான் உயர்ந்துவிட, இதை வெற்றிகரமாகப் பிரயோகிக்கலாம்னு நம்பி எல்லாத்தையும் படிச்சார். நினைச்ச போது நினைத்த வைகளை ஏவி விடக்கூடிய வல்லமையை அவர் திடமான நம்பிக்கையாலும் உபாசனையாலும் பெற்றுக்கொண்டார். செத்ததுக்குள்ளே சீவனைப் புகவிட்டுத் தனக்குச் சாதகமாக இயக்கக்கூடிய சித்தியையும் அவர் பெற்றிருக்கிறார் என்பது ரொம்பப் பேருக்குத் தெரியாது. அதுதான் ‘கூடுவிட்டுக் கூடு பாய்கிற வித்தை’ தெல்லாம் இந்தக் காலத்திலே ஏது வேய்னு சிரிப்பாங்க பல பேரு.ஆனா அவங்க மனமே, ‘இருந்தாலும் இருக்குமோ?’ என்று அடித்துக் கொள்ளும். 

“அது எப்படியும் போகுது. ஒண்டிப்புலியா பிள்ளை பல வருஷங்களாகப் பாடுபட்டு இதுமாதிரியான பல கலை ளையும் கற்றுக்கொண்டார். மலையாளத்து மந்திரவாதி ஒருத்தர்தான் அவருக்குக் குரு. பண்ணையாரின் அப்பாவும் தாத்தாவும் இவ்வித விவகாரங்களிலே பெரிய கை தான். இவங்க மூலம் பண்ணையார் என்னென்ன படிச்சு எவ்வளவு தூரம் தேறியிருக்கார்னு யாரும் சொல்ல முடி யாது…. அவரு பெரிய பாம்பு ஒன்று வளர்த்தார். அது செத்துப் போச்சு. ஆனாலும்,உடலுகெட்டுப் போகாமல் காப்பாத்தி வச்சிருக்காரு. அதைக் கண்ணாடிப் பெட்டிக்குள்ளே நீங்க பார்த்திருப்பீங்க. தேவைப் படுகிறபோது, அதுக்குள்ளே தன் சீவனைப் புகவிட்டு, இஷ்டமான காரித்தை முடிச்சிர முடியும் அவராலே. அந்தப் பெரிய பாம்புதான் நேற்றுக் காலையிலே வந்தது. அது வாலை வெட்டினதுனாலே தான் பண்ணையாரின் காலு போச்சு. துண்டுதுண்டாகச் சிதைச்சதுனாலே தான், விரல்கள் நசுங்கிச் சிதை பட்டன…” 

இசக்கித் தேவர் பேசப் பேச எல்லைக்குநாத பிள்ளைக்குத் திகைப்பே ஏற்பட்டது. பார்ப்பதற்குச் சாதரணமாகத் தோன்றும் பேர்வழி இவ்வளவு விஷயங்களைக் கற்று வச்சிருக்காரே!’ என்ற பிரமிப்பு வளர்ந்தது. சில சந்தேகங்களும் தலை தூக்கின. 

“அது சரிதான் தேவரே. பண்ணையாரின் உயிர்ச் சக்தியே பாம்புக்குள் புகுந்திட்டது என்றே வைத்துக் கொள்வோம். அப்ப அவர் உடல் எங்கே கிடக்கும்? உயிர் புகுந்திருக்கிற இந்த உடலைக் காயப்படுத்துவதனா லே, சொந்த உடல் பாதிக்கப்படும் – பாதிக்கப்படத் தான் வேண்டும் – என்று எப்படி நிச்சயிக்க முடியும்?” என்று கேட்டார் அவர். 

“அதுதான் சொன்னேனே, எசமான்! இதுமாதிரி விவகாரங்களில் நம்பிக்கை ஏற்டும் படியாக, அறிவுக்குப் பொருத்தமான, விளக்கங்கள் கொடுப்பது சாத்தியமில்லை தான். இருந்தாலும், இப்படி யிருக்கலாம்னு நினைக்கிறேன். உடலும் உயிரும் ஒன்றுக்கொன்று இணைப்பு பெற்றதுதானே? உடல் பாதிக்கப்படுகிற போது, உள்ள மும் பாதிக்கப்படுது; ஆத்மசக்தி பாதிக்கப்படுது. அதே மாதிரி உயிர்ச்சக்தி நேரடியாகப் பாதிக்கப்பட நேர்ந்தால், உடலும் பாதகம் அடையத்தானே வேண்டும்? வெளிப்படையான செயலினாலே – அதன் வலிமையினாலே உடல் பாதிக்கப்படுவது. எண்ணங்களின் வலிமையா உள்ளத்தை, உயிரை, ஆத்மாவைக் களங்கப்படுத்த – கறை படுத்த- காயப்படுத்த முடியுமா முடியாதா? மந்திரம் என்பது வஜ்ர சக்தி பெற்ற எண்ணம் தானே ?… இப்படி உயிரைத் தன் உடலைவிட்டு மாற்றிப் பிற கூட்டுக்குள் பு விடுவதற்கு முன்பு, பாதுகாப்பான டத்திலேதான் உடலைக் கிடத்தி வைப்பது வழக்கம். பண்ணையார் தனது வீட்டு அறைக்குள்ளேயே உடலை விட்டுவைப்பதும் உண்டு, ஊருக்கு வெளியே மறைவான புதரில் நேற்று தன் உடலைப் படுக்க விட்டிருக்கலாம்…” 

“உமக்கு இதெல்லாம் எப்படி வே தெரிஞ்சுது?” என்று வியப்பு அதிகரிக்க விசாரித்தார் பிள்ளை.

தேவர் சிறு சிரிப்பு சிரித்தார். ‘இந்த ஊரிலே செல்லம் பண்டிதர்னு ஒரு மந்திரவாதி இருந்தார். மந்திர வித்தைகளிலே கைதேர்ந்த கில்லாடி அவரு.அவர் கி ட்டேதான் நான் கொஞ்ச நஞ்சம் வித்தை கத்துக்கிட்டேன். செல்லம் பண்டிதருக்கும் பண்ணையார் வீட்டுக்கு வந்து போகும் மலையாளத்து மந்திரவாதிக்கும் சிநேகம். அவர் மூலம்தான் எல்லாம் தெரியவந்தது…” 

“ஒண்டிப்புலி பெரிய சூரர்னு தெரியுதே. நீரு அவரை ஏன் வே பகைச்சுக்கிடணும்? இனிமே அவரு சும்மா இருப்பாரா? என் பேரிலே இருந்த கோபம் உம்ம மேலேயும் திரும்பத்தானே செய்யும்?” என்றார் இன்ஸ்பெக்டர். 

தேவர் சொன்னார்: “நீங்க சொன்னமாதிரி ஒண்டிப் புலியை நொண்டிப் புலியாக்கியாச்சு. அவசியமானால், ஒரேதிரியா அதை மூலையிலே முடக்கிப் போட்டு விடுவது சிரமமா என்ன?… எசமான் மட்டும் முன்னமேயே இந்த ஊருக்கு வந்திருந்தா, நல்லா யிருந்திருக்கும். ஒண்டிப் புலி வாலை ஒட்ட நறுக்கியிருக்கலாம்”. 

இன்ஸ்பெக்டர் ஏதோ யோசனையில் ஆழ்ந்துவிட்டவர் போல் காணப்பட்டார். சட்டென்று கேட்டார்: 

“தேவரே, ஒரு சந்தேகம். நீரு விசயத்தை மறைக்காமே பதில் சொல்லுவீரா?” 

“கேளுங்க, எசமான்!” 

“தேவரே, நீரு இல்லாமே போனா, ஒண்டிப்புலியா பிள்ளை இதுக்குள்ளே என்னை ஒழிச்சிக்கட்டி இருப்பாரு. அது நிச்சயம். நீர்தான் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் குறுக்கிட்டு என்னைத் தப்ப வைத்தீர்…” 

 “என் கடமையைத் தானே செய்தேன், எசமான்” என்று மென்று விழுங்கினார் தேவர். 

“அதைத்தான் குறிப்பிட வாறேன். ரு கை நீட்டி வாங்குகிறது சர்க்கார் சம்பளம். என்மீது உமக்கு ஏற்பட்டிருக்கக் கூடிய விசுவாசம் அல்லது அன்பு, இது களினாலே மட்டுமே நீர் பண்ணையாரைப் பகைக்கத் துணிந்திருப்பீர்னு எனக்குத் தோணலே. பண்ணையாரை உமது பரம வைரியாக நீர் மதிச்சிருக்கணும்; அவரைச் சரியானபடி பழி வாங்கவேணும் என்ற எண்ணம் உமக்கு இருக்கணும் என்றே எனக்குத் தோணுது. உண்டா இல்லையா, சொல்லும்?” 

தேவர் தயங்கி, முழங்கையைச் சொரிந்தவாறே நின்றார். பிறகு “உம், உங்க கிட்டே சொல்லாமல் என்ன! நீங்களும் தெரிஞ்சிகொள்ள வேண்டியதுதான்” என்று முன்னுரை கூறி ஆரம்பித்தார்- 

“எசமான், என் பெண்சாதி பேச்சியம்மை கண்ணுக்கு லெட்சணமா, சிவப்பு நிறமாக இருப்பா….” 

உடனேயே எல்லைக்குநாதருக்கு விஷயம் புரியத் தொடங்கியது. லேசாகத் தலையை ஆட்டி வைத்தார். 

“ஒருநாள், அவள் பண்ணையாரு கண்ணிலே பட்டு விட்டாள். அவன் கேலி பேசி, சின்னத்தனமா நடந்து கொண்டிருப்பான் போலிருக்கு. அவ என்கிட்டே வந்து சொன்னா. ஜாக்கிரதையா இரு, கவனிக்கலாம்னு சொல்லி வச்சேன். ஆனால், அதுக்கு முன்னாடி அவனே கவனிச்சுட்டான். அன்னைக்கு அந்தி நேரத்திலே, குளத்துப் பக்கம் போனா பேச்சி. திரும்பி வரவே இல்லை. மறுநாள் சாயங்காலம், பாம்பு கடிச்சி செத்துக் கிடந்தாள்னு, சொல்லி அவளை – அதுதான் சவத்தை சிலபேரு எடுத்து வந்து போட்டாங்க. அவ காணாமப் போயிட்டா இன்னதுமே, எனக்கு ஒண்டிப்புலி மேலே தான் சந்தேகம் ஏற்பட்டது. திருவிளக்கு மையி போட்டுப் பார்த்தேன். கண்முன்னாலே நடப்பதுபோல எல்லாம் தெளிவாத் தெரிஞ்சுட்டுது… பேச்சி பாம்புக் கடியாலே செத்ததுக்கும் பண்ணையான் தான் காரணம். அது எனக்குத் தெரியும். ஆனா நான் அதை எப்படி நிரூபிக்க முடியும்? என் சொல்லை யாரு நம்புவாங்க?. காலை கையை விளங்காமல் செய்து, அவனை முடக்கிப் போடலாம். அது என்னாலே முடியும். ஆனால் என்னை பத்தி அவன் கொஞ்சமாவது உணரணுமின்னு நெனச்சிருந்தேன். ஊரிலே பெரிய பணக்காரன், செல்வாக்கு உள்ளவன் அவனை நான் எப்படி பகைச்சுகிட்டு வாழ முடியும்? அதிலும் எனக்கு எசமான்களாக வந்து சேர்ந்த மேலதிகாரிகள் அவன் சொன்னபடி ஆடித் திரிஞ்சபோது? போகட்டும் போகட்டும், காலம் வராமலா இருக்கும்னு நெனச்சிருந்தேன். தெய்வம் உங்களை இங்கே கொண்டு வந்து சேர்த்துது. தீர்த்துக் கொள்வதற்குரிய வேளையும் வந்துட்டு துன்னு எனக்கு நிச்சயமாத் தெரிஞ்சு போச்சு!” என்றார் தேவர். 

இன்ஸ்பெக்டர் மௌனமாக இருந்தார். என்ன சொல்வது என்று அவருக்கு விளங்கவில்லை போலும்! 

“அநியாயக்காரனுக் எத்தனை காலத்துக்குத்தான் செயம் செயமுனு போட்டு அடிக்க முடியும்? அவங்களுக்கும் ஒரு முடிவு காலம் வந்து தீரவேண்டியதுதானே எசமான்?” என்று பேச்சை வளர்த்தார் தேவர். 

“சரி தேவரே; ஒண்டிப்புலியா பிள்ளையைக் குற்றவாளி என்று நிரூபித்துக் கோர்ட் விசாரணைக்குக் கொண்டு வந்து, சர்க்காரே தண்டனை அளிக்க வேண்டும். அதுக்கு வழி இருக்குதா பாரும், முதலிலே. அதுதான் முக்கியம்” என்றார் எல்லைக்குநாதர். 

தேவர் சிரித்தார். “ஒண்டிப்புலி பெரிய ஆளு எசமான். எந்த வ கையிலும் லேசிலே சிக்கிக் கொள்ளக் கூடிய ஆசாமி யில்லை. எப்படியாவது நாம அவருக்கு பாடம் கற்பிக்கவில்லையோ, ஆபத்துத்தான். நமக்கே சீட்டு கிழிச்சுடுவாரு. அது நிச்சயம் தான்” என்றார். 


இன்ஸ்பெக்டர் எல்லைக்குநாத பிள்ளை,இரண்டு நாட்களுக்குப் பிறகு, இசக்கித் தேவரிடம் கேட்டார்: “என்னவே தேவரே, பண்ணையார் ஒண்டிப் புலியா பிள்ளையைப் பார்க்கணும்கிற ஆசை உமக்கு இருக்குதா?” என்று. 

“போய் பார்த்து விட்டு வரச்சொன்னா, நான் போகத் தயார் தான்” என்று சிரித்தபடி சொன்னார் தேவர். 

“நான் எழுதி அனுப்பிய ரிப்போர்ட்டு ஒன்றிலிருந்து சில குற்றங்களைக் குறிப்பிட்டு, இதற்கெல்லாம் ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது என்பதற்குத் தக்க காரணங்களோடு சமாதானம் கூறவும்; இல்லாவிடில் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டியதாகும் என்று அறிவிச்சிருக்காங்க. இந்தக் காகிதத்தைப் பண்ணையாரிடம் கொடுத்து, கையெழுத்து வாங்கி வரணும். நீரே போறீரா? அல்லது, வேறு யாரையாவது அனுப்பலாமா?” 

உற்சாகமாகச் சொன்னார் தேவர்: “என்னையே அனுப்புங்க எசமான்!” 

எல்லைக்குநாதர் ஆட்சேபிக்கவில்லை. 


தேவரைக் கண்டதும் பண்ணையார் வெறுப்பு கக்கும் பார்வை சிந்தினார். அவர் பங்களாவின் வெளியிலேயே ஈஹிச்சேரில் சாய்ந்தபடி இருந்தார். வீட்டுக்குள் மட்டும் இருந்திருப்பின், தேவரைச் சந்திக்க முடியாது என்றே சொல்லியிருப்பார். 

தேவர் கும்பிடு போட்டுவிட்டுக் கேட்டார், “காலிலே என்ன கட்டு ஐயா? பலத்த காயம் போலிருக்குதே?” என்று 

அவரது குரலிலும் விழிகளிலும் பண்ணையார் என்னத்தைத்தான் கண்டாரோ! அவர் முகம் கறுத்தது. ஒன்றும் பதில் பேசவில்லை. தேவரின் உள்ளத்துச் சிரிப்பு உதட்டிலும் நெளிந்தது. 

“இன்ஸ்பெக்டர் எசமான் அனுப்பினாக. இந்தக் காகிதத்தைப் பெற்றுக்கொண்டு, கையெழுத்துப் போட்டு அனுப்புங்க” என்று கவரையும், துண்டுத் தாளையும நீட்டினார். 

பண்ணையார் அவசரமாகக் கவரைக் கிழித்து கடி தத்தைப் பிரித்துப் படித்தார். அவர் ஆத்திரம் அதிக மாகியதாகவே தோன்றியது. 

“சரி, நீர் போகலாமே!” என்றார் அலட்சியமாக. 

“கையைழுத்து?”

“ஓ!” என்று மிடுக்காகக் கூறி, தாளில் கிறுக்கி அதை வீசி எறிந்தார் தேவர் நின்ற பக்கமாக. 

தேவர் குனிந்து அதை எடுத்துக்கொண்டு விஷமச் சிரிப்போடு அவரை நோக்கினார்; “மார்பு வலி சரியாப் போயிட்டுதா ஐயா?” என்று அக்கறையோடு விசாரித்தார். 

“ஊம்ம்” என்று உறுமினார் ஒண்டிப்புலி அது கூடவேதனையின் முனகல் என்றே பட்டது. 

“எசமான், நீங்க பெரிய பாம்பு ஒன்று வளர்ப்பதாக எல்லோரும் சொல்றாகளே. கண்ணாடிப் பெட்டியிலே இருக்கிற பாம்பை நானும் பார்க்கலாமா?” – தேவரின் எடக்குக் கேள்வி இது. 

பண்ணையார் விஷம் கக்குவது போல் பார்த்தார். தட்டித் தட்டிச் சீற்றம் உண்டாக்கியதால் வெகுண்டு நோக்கும் சர்ப்பத்தின் மணிக்கண்கள் போலவே மிளிர்ந்தன பண்ணையாரின் விழிகள். 

‘போடா கழுதை!’ என்று எரிந்து விழுந்தார் அவர். 

‘க்ளக்’ என்று தனி ரக ஒற்றைச் சிரிப்பை உதிர்த்து விட்டுக் குத்தும் பார்வையை வீசியபடி, வெளியேறினார் இசக்கித் தேவர். 

தேவர் உடனடியாகவே ஊருக்குத் திரும்பிவிட வில்லை. இருட்டுவதற்கு முன்பே பண்ணைக்காட்டு எல்லையைக் கடக்கும் உத்தேசம் அவருக்கு இல்லவே இல்லை. பண்ணையாருக்குத் தெரியும்படியாக அங்குமிங்கும் அலைந்தார். பண்ணையாரின் ஆட்களைக் கண்டு அநாவசியமாகப் பேச்சுக் கொடுத்து பேச்சு வாங்கிக் கொண்டிருந்தார். ஒண்டிப்புலி கூப்பிட்டு விசாரிக்கக்கூடிய நபர்கள் என்று தோன்றியவர்களிடம், அவரைப்பற்றி மோசமாகவே பேசினார். 

“பண்ணையாரு என்ன, கேள்வி முறை கிடையாதுன்னு நினைச்சுப் போட்டாரு போலிருக்கு பொம்பிளை களைச் சிறைப்படுத்தி மானபங்கப்படுத்தறது, கொலை பண்றது – இப்படி எல்லாம் செய்துகிட்டிருக்கிறாராமே? தான் செய்கிற அட்டூழியம் எதுவும் வெளியே தெரியாமல் போய்விடும் என்கிற தெம்பிலே வாழ்கிறாராக்கும்! ஒரு நாள் இல்லாட்டா ஒருநாள் பலனை அனுபவித்துத் தானே ஆகணும்? வல்லவனுக்கு வல்லவன் வையகத்திலே உண்டுன்னு சும்மாவா சொல்லியிருக்காங்க?…”

இவ்விதம் வினையை வளர்த்தார் தேவர். ‘புத்தி கெட்டதனமாகப் புலம்புகிறானே’ என்றுதான் மற்றவர்களுக்குத் தோன்றியது. ஆனால் அவர் ஒரு திட்டத்தோடு தான் வேலை செய்தார். அது பலிக்கும் என்ற நம்பிக்கை யோடு திரும்பினார். 

அப்போது அந்திக் கருக்கல் நேரம். ஒளி மங்கி, எங்கும் இருள் கவிந்து கொண்டிருந்தது. இசக்கித் தேவர் பண்ணைக்காட்டு எல்லையைக் கடந்துகொண்டிருந்தார். 

செடிகள் புதராக அடர்ந்த வெளியை ஒட்டி ஓர் ஓடை. பெரும்பாலான நாட்களில் அதில் தண்ணீரே ராது. அதைத் தாண்டும்போது, தற்செயலாகத் திரும்பிப் பார்த்தார் தேவர். குறும்பாகச் சிரித்தார். கையில் முன் ஜாக்கிரதையாக வைத்திருந்த வெட்டரி வாளை வீசினார் குறிபார்த்து. 

அரிவாள், அவரை நோக்கிவந்த பெரிய பாம்பின் தலையிலே ஆழமாகப் பதிந்தது. ஒரு துள்ளுத் துள்ளியது பாம்பு… அதற்கு முந்திக்கெண்டு வெகு வேகமாகத் தடியைச் சுழற்றி அடித்தார். ஓங்கி ஓங்கி அடித்தார்.  தேவர். மந்திர உச்சாடனம் செய்தவாறே அடித்தார். 

பாம்பு அசைவற்றுக் கிடந்தது. இடுப்பிலிருந்த சூரிக் கத்தியை எடுத்து, தேவர் பாம்பின் மேல் குத்தினார். “என் பேச்சி அம்மையைக் கொன்றதுக்காக உன்னை நான் பழி வாங்கியாச்சு. நீ தொலை, நாசமாய்ப் போ!” என்று கூறிக்கத்தியை இன்னும் ஆழமாகச் சொருகினார். 

ஒரு துள்ளல். ஒரு துடிப்பு. பாம்பு செத்தே போயிற்று. 

வெற்றிச் சிரிப்பு சிரித்தார் தேவர். அருகே தென்பட்ட பள்ளம் ஒன்றிலே பாம்பைத் தூக்கி எறிந்து, கல், மண்கட்டிகள் முதலியவற்றை எடுத்து வீசி நிரப்பி, நிரந்தரமான சமாதி அமைத்தார். மன நிம்மதியோடு நடந்தார். 

அந்த முன்னிருட்டு வேளையிலே – பண்ணையார் ஒண்டிப்புலியா பிள்ளையின் தனி அறையில் ஒரு சப்தம் கேட்டது. வேதனை யொலி போல் பிறந்து நீண்டு ஓடுங்கியது ‘பொத்தென்று’ ஒரு சத்தமும் வந்தது. பிறகு ஒரே அமைதி. 

கணக்குப் பிள்ளையும், வேலைக்காரர்களும் எதுவும் புரியாமல் அங்குமிங்கும் ஓடினர். கணக்கர் கதவைத் தட்டினார். 

கதவு உள்ளே தாழிடப்பட்டிருந்தது. திறக்க முடிய வில்லை. எல்லோரும் கூடிப் பேசி, கதவை உடைத்துத் திறந்தனர். 

விளக்கொளி அறையில் படர்ந்தது. அனைத்தையும் பளிச்சென எடுத்துக் காட்டியது. 

முதலில் நுழைந்தவர் பயந்து கத்தினார். உள்ளே எட்டிப் பார்த்த பலரும் பயந்து அலறினர். 

ஒண்டிப்புலியா பிள்ளை கட்டிலிலிருந்து உருண்டு கீழே விழுந்து கிடந்தார். அவர் மார்பிலும் வாயிலும் ரத்தம் பொங்கிப் பிரவகித்தது போல் ஒரே சிவப்பு மயம்… 

துணிந்து அவர் அருகில் சென்று கவனித்தார்கள் சிலர். பண்ணையார் இறந்து கிடப்பதாக உணர்ந்தார்கள்.

அவரது கண்கள் பயமெழுப்பும் தன்மையிலே உறுத்து நோக்கி நின்றன. அவர் மூஞ்சி கோரமாய், விகாரமாய், அச்சமும் அருவருப்பும் தருவதாக இருந்தது. 

எல்லோரும் வெளியே வந்துவிட்டனர். 

‘பண்ணையாரு தன்னையே சாகடிச்சுக்கிட்டாருன்னு தெரியுது. என்ன காரணமோ, ஏதோ! அவர் மனசை யாரு தான் எந்தக் காலத்திலே தான் புரிஞ்சு கொள்ள முடிந்தது?’ என்று பேசிக்கொண்டார்கள் அவர்கள். 

எல்லைக்குநாத பிள்ளைக்கு மன அமைதியே இல்லை. 

‘தேவர் இன்னும் வரக்காணோமே. காரண புரியலியே!’ என்று நெஞ்சு பதைத்தது அவருக்கு. நேரம் ஆக ஆக அவருக்கு வேலை எதுவுமே ஓடவில்லை. 

இரவு பத்துமணி சுமாருக்கு ‘எசமான்!’ என்று கூப்பிடும் குரல் காதில் விழுந்ததும் தான் இன்ஸ்பெக்டர் நிம்மதியாக மூச்சுவிட்டார். வெளியே வந்து தேவரைப் பார்த்து மகிழ்வடைந்தார். 

‘என்ன தேவரே, ஏன் இவ்வளவு நேரம்? நீரு வரலேன்னதும் என்ன நடந்ததோ ஏதோன்னு என் மனசு சங்கடப்பட்டுக் கொண்டே இருந்தது. ஏன்வே, என்ன நடந்தது?’ என்று பரபரப்புடன் கேட்டார். 

‘எல்லாம் முடிஞ்சு போச்சு, எசமான்!’ எனக் கூறி விட்டு, வெற்றி மிடுக்கோடு சிரித்தார் தேவர். பிறகு விரிவாகவே விஷயத்தை விளக்கினார். முழுவதையும் கேட்டு முடித்ததும் இன்ஸ்பெக்டர், ‘நீர் செய்ததும் சரிதான்!’ என்று ஆமோதித்தார். 

இருந்தாலும், அயோக்கியத்தனங்கள் செய்து அட்டகாசமாய் வாழ்ந்த ஒண்டிப்புலியைச் சட்டரீதியாக மாட்டிவைத்துச் சரியான பாடம் கற்பிக்க முடியாமல் போயிற்றே என்ற வருத்தம் தான் அவருக்கு!

– வல்லிக்கண்ணன் கதைகள், முதல் பதிப்பு: ஜூன் 1954, கயிலைப் பதிப்பகம், சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *