கதையாசிரியர்: ,
கதை வகை: தொடர்கதை
கதை வகை: மொழிபெயர்ப்பு
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 11, 2025
பார்வையிட்டோர்: 172 
 
 

(2004ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் – 6 | அத்தியாயம் – 7

“அப்பா! காலை முதல் உங்களுக் சாக கவலைப் பட்டுக்கொண்டிருக் கிறோம். எங்கே போயிருந்தீங்க?” சுவாமிநாதன் வீட்டுக்கு வந்ததும் சீதா கேட்டாள். 

முகத்தில் எந்த உணர்ச்சியும் காட்டாமல் அதேதோ ரொம்ப சாதாரணமான விஷயம் என்பதுபோல் சுவாமி நாதன் சிரித்து மழுப்பினார், “நேற்றிரவு தூக்கம் வராமல் செகண்ட் ஷோ சினிமாவுக்கு போயிருந்தேன். பொது இடங்களில் சிகரெட் பிடிப்பதை இந்த ஊரில் தடை செய்திருக்காங்களாம். எனக்குத் தெரியாது, சிகரெட் பற்ற வைத்தேனோ இல்லையோ, போலீஸ்காரன் வந்து பிடித்து விட்டான்.” 

“என்ன செய்தாங்க?” பதட்டத்துடன் கேட்டாள் சீதா. 

“என்ன செய்து விடுவாங்க? காலையில் இன்ஸ் பெக்டர் வந்தார். சின்ன வயதில் என்னிடம் படித்தவன் தான் என்னைப் பார்த்ததும் ரொம்ப சந்தோஷப்பட்டான். என்னைப் பிடித்து வந்த போலீஸ்காரனை நன்றாகத் திட்டி. என்னை டாக்ஸியில் வீட்டுக்கு அனுப்பி வைத்தான். 

உள்ளே சாப்பிட்டுக் கொண்டிருந்த பிரகாஷுக்கு சிரிப்பு பொத்துக் கொண்டு வந்தது. 

“சாப்பிட வாங்கப்பா. ஏற்கெனவே நேரமாகி விட்டது.” 

“குளித்து விட்டு இரண்டே நிமிடங்களில் வந்து விடு கிறேன்.” 

சீதா கொல்லைப்புறம் சென்றாள். பிரகாஷ் சாப்பிட்டு முடித்து கையை அலம்பிக் கொண்டான்.

முன் அறையில் காமாட்சியின் குரல் கேட்டது “மாமா! எங்கே போயிருந்தீங்க?” 

சுவாமிநாதன் பதில் சொல்லிக் கொண்டிருந்தார்.

பிரகாஷ் ஷாட்டை எடுத்து அணிந்து கொண்டிருந்த போது முன்னறையில் மறுபடியும் பேச்சுக்குரல் கேட்டது.

“இந்த புடவை என்ன விலை?” சுவாமிநாதன் கேட்டுக் கொண்டிருந்தார். 

“அம்மாதான் வாங்கி வந்தாள். விலை தெரியாது.”

“சினிமாவுக்கு போயிருந்தாயே. படம் நன்றாக இருந்தா? ஹீரோ யாரு?” சுவாமிநாதன் ரொம்ப அக்கறையுடன் விசாரித்தார். 

இளம் பெண்களில் சிலர் ரொம்ப அப்பாவியாக இருப்பார்கள். வயதான ஆண்கள் தங்களிடம் நெருக்கமாக பழக முயற்சி செய்வதை கரிசனம் என்று நினைத்துக் கொள்வார்கள். 

பிரகாஷ் முன் அறைக்கு வந்தான். அந்த நேரத்தில் அவனை எதிர்பாராததால் சுவாமிநாதன் ஒரு நிமிடம் தடுமாறிவிட்டார். உடனே சமாளித்துக் கொண்டு “லஞ்சுக்கு வந்தியா இல்லை என்னைக் காணும்னு பயந்து ஆபீசுக்கு லீவ் போட்டியா?” என்று கேட்டார். 

பிரகாஷைப் பார்த்ததும் காமாட்சி உள்ளே போய் விட்டாள். பிரகாஷ் பதில் சொல்லாமல் வெளியேறினான். பெண்கள் உண்மையிலேயே அப்பாவிகளா இல்லை அப்பாவிகள் போல் நடிக்கிறார்களா என்று அவனுக்குப் புரியவில்லை. 

தன்னைப் பார்த்தும் மாமாவின் முகத்தில் தென் பட்ட குற்ற உணர்வை புரிந்துகொள்ள முடியாத அளவுக்கு பிரகாஷ் முட்டாள் ஒன்றும் இல்லை. 

வேடிக்கை என்னவென்றால் பிரகாஷுக்கு விஷயம் தெரியும் என்று அவருக்குத் தெரியும். தெரியாதது போல் நடிப்பார். கண்டுகொள்ள மாட்டார். 

தந்தை குளிக்கப் போன பிறகு சீதா தாழ்ந்த குரலில் சரவணனைப் பற்றி காமாட்சியிடம் விசாரித்தாள். 

“அதைச் சொல்லத்தான் வந்தேன்.” அக்கம் பக்கத்தில் யாரும் இல்லை என்பதை உறுதி செய்து கொள்வதற்காக சுற்றிலும் பார்வையிட்டாள் காமாட்சி. 

“சீக்கிரமாகச் சொல்லு,” சீதா அவசரப்படுத்தினாள்.

காமாட்சி சொல்லத் தொடங்கினாள். 


அன்று மாலை முழுவதும் காமாட்சிக்கு இருப்பு கொள்ளவில்லை. அந்த சின்ன கடிதத்தை ஐம்பது முறை யாவது படித்திருப்பாள். ‘உங்க இருவருக்கும் ரொம்ப நல்ல பொருத்தம்’ என்று சீதா சொன்னது நினைவுக்கு வந்ததும் வெட்கம் அவளை சூழ்ந்து கொண்டது. சரவணனுக்குப் படிப்பு ஏப்ரல் மாதம் முடிந்துவிடும். மே மாதம் தம் இருவருக்கும் திருமணம் நடக்கும். கடந்த ஐந்து மாதங்களாக அவளுக்கும் சரவணனுக்கும் இடையே காதல் விவகாரம் நடந்து கொண்டிருந்தது. பார்க்கில், கடற்கரையில் அவனு டன் டூயட் பாடுவதுபோல் காமாட்சிக்கு கனவுகள் வந்து கொண்டிருந்தன. கால் காசு கூட வரதட்சணை வாங்கிக் கொள்ளாமல் சரவணன் தன்னைக் கல்யாணம் செய்து கொள்ளப் போவதாக காமாட்சி நினைத்துக் கொண்டிருந்தாள்.

ஜன்னல் வழியாக அவன் அறைப் பக்கம் பார்த்தாள். கதவு பூட்டியிருந்தது. அவன் இல்லை போலும். 

‘இந்தக் கடிதத்திற்கு பதில் எழுதவில்லை என்றால் எனக்கு ரொம்ப கோபம் வரும்’. 

கடிதத்தில் அவன் எழுதியிருந்தது நினைவுக்கு வந்த போது உள்ளூற சிரிப்பு ஏற்பட்டது. நோட்டுப் புத்தகத்தி லிருந்து ஒரு பேப்பரைக் கிழித்தாள். அவள் இதயம் வே மாக துடித்துக் கொண்டிருந்தது. அவளுடைய தந்தை வீட்டில் இருக்கவில்லை. அவசர அவசரமாக இரண்டு வரிகளை எழுதினாள். 

“எனக்கும் உங்களுடன் நிறைய பேச
வேண்டும் போல இருக்கிறது. ஆனால்
பயமாகவும் இருக்கிறது.” 

உங்கள்.

கையெழுத்துப் போடாமல் அப்படியே விட்டு விட்டாள். கடிதத்தை இன்னொரு முறை படித்து விட்டு ப்ளெசுக்குள் மறைவாக வைத்துக்கொண்டாள். 

வீட்டை விட்டுவெளியே வரும்போது “எங்கே கிளம்பி விட்டாய்?” தாயின் குரல் கேட்டது. 

காமாட்சி முதலில் திடுக்கிட்டாலும் உடனே சமாளித்துக்கொண்டு “சீதாவைப் பார்த்துவிட்டு வரு கிறேன்” என்று பதில் சொல்லிக் கொண்டே வேகமாக நடந்தாள். 

கடிதத்தை எடுத்து ஜன்னல் வழியாக உள்ளே வீசப் போனவள் பேச்சுத் குரல் கேட்டதும் நின்று விட்டாள், லேசாசு குனிந்து உள்ளே எட்டிப் பார்த்தாள். உள்ளே சரவணன் நண்பனுடன் பேசிக் கொண்டிருந்தான். கடிதத்தை பிறகு கொடுக்கலாம் என்று முடிவு செய்து திரும்பப் போனபோது உள்ளே தன்னுடைய பெயர் அடி படுவதைக் கேட்டு உன்னிப்பாக கவனித்தாள். 

“ஏதாவது முன்னேற்றம் தெரிந்ததா?” நண்பன் கேட்டுக் கொண்டிருந்தான். 

எண்டமூரி வீரேந்திரநாத் 

“இன்னிக்கு தெரிந்துவிடும்.” 

“அப்போ சீக்கிரமாக வேலையை முடித்துவிடு.”

“ரொம்பக் கஷ்டம். முன் அனுபவம் எதுவும் இல்லைன்னு நினைக்கிறேன்.” 

மேற்கொண்டு அவன் சொன்னது காமாட்சியின் காதுகளில் விழவில்லை. அவள் முகம் பேய் அறைந்த மாதிரி ஆகிவிட்டது. நினைவு தப்பி கீழே விழப் போன வள் சுவற்றைப் பிடித்துக் கொண்டு சமாளித்தாள். அடுத்த நிமிடம் ஓட்டமும் நடையுமாக வீட்டுக்கு வந்து சேர்ந் தாள். உள்ளே இருந்து துக்கம் பொங்கி வந்தது விசும்பி விசும்பி அழத் தொடங்கினாள். அவளுடைய முதல் காதல் கடிதம் கையிலிருந்து நழுவி கீழே விழுந்து காற்றில் அடித்துக் கொண்டு போய்விட்டது. 


“இதெல்லாம் உண்மைதானா?” நம்ப முடியாதவள் போல் கேட்டாள் சீதா. 

காமாட்சி வருத்தம் கலந்த முறுவலுடன் ஆமாம். என்பது போல் தலையை அசைத்தாள். அவன் முகத்தில் ஒரு விதமான விரக்தி குடிகொண்டிருந்தது. இது போன்ற நிலையில் ஒரு பெண் இந்த அனுபவத்தை எளிதாக எடுத் துக் கொண்டு புதிய நட்பை தேடிக் கொண்டு போவாள். இல்லையா எஞ்சிய வாழ்க்கையை நேர்மையாக கழிக்க முற்படுவாள். 

நடுத்தரக் குடும்பங்களில் வளர்ந்த பெண்கள் பெரும் பாலும் இரண்டாவது வழியை பின்பற்றுவார்கள். எதிர் காலத்தைப் பற்றிய பயம் அவர்களை அப்படி வழி நடத்தும். புகை பிடிக்கும் பழக்கமே இல்லாதவனை விட ஒருமுறை புகைத்துவிட்டு அந்த பழக்கத்தை விட்டொழிப் பவன் திடசித்தம் இருப்பவன். 

காமாட்சி அந்த நிலையில்தான் இருந்தாள், பெற்றோரின் வளர்ப்பு முறை, காலங்காலமாக கடைப் பிடிக்கப்பட்டு வரும் பண்பு எல்லாமாக சேர்ந்து அவளை நல்லவழியில் திசை திருப்பி விட்டன. 

“நீ ஒன்றும் வருத்தப்பட்டுக் கொள்ளாதே” சீதா அவளைத் தேற்றுவது போல் சொன்னாள், 

காமாட்சி வியப்புடன் பார்த்துவிட்டு “நான் ஒன்றும் வருத்தப்படவில்லையே?” என்றாள். 

இந்த முறை வியப்படைவது சீதாவின் பங்காயிற்று, காமாட்சியின் முகத்தைக் கூர்ந்து பார்த்தாள். 

காமாட்சி தலையைக் குனிந்துகொண்டாள். “ராகவனை திருமணம் செய்து கொள்ள சம்மதம் என்று வீட்டில் சொல்லி விட்டேன்” என்றாள் தாழ்ந்த குரலில். 

“உண்மையாகவா?” 

“ஆமாம்.” 

“திடீரென்று இந்த முடிவுக்கு வருவானேன்?”

“எனக்கே தெரியவில்லை.” 

வாழ்க்கையில் சில முடிவுகளை நம்மையும் அறியா மல் எடுத்து விடுகிறோம். காரண காரியங்களை பற்றி யோசிக்கும் பொறுமை இல்லாததும் ஒரு காரணம். சில சமயம் அப்பாவியாக இருப்பதும் நல்லதுதான். வாழ்க் கையை அதன் போக்கில் ஏற்றுக் கொள்ள முடியும். 

“சீதா!” உள்ளே இருந்து சுவாமிநாதன் அழைக்கும் குரல் கேட்டது. 

“அப்பா கூப்பிடுகிறார். ஒரு நிமிஷம் இரு. வருகிறேன்” என்றாள் சீதா எழுந்துகொண்டே. 

“நானும் கிளம்புகிறேன். இதைச் சொல்லத்தான் வந்தேன். வரட்டுமா?” காமாட்சி கிளம்பினாள். 

வாசலில் படியிறங்கும் போது ராகவன் எதிரே வந்தான். அவனைப் பார்த்ததும் சட்டென்று பின்னால் நகர்ந்தாள். 

அவனும் ஒரு நிமிடம் தடுமாறினாள். “பிரகாஷ் இருக்கிறானா என்று பார்க்க வந்தேன்.” தலையைக் குனிந்தபடி சொன்னான். 

அவன் அவளைப் பார்க்கவில்லையே தவிர அவள் கடைக்கண் வழியாக அவனைப் பார்த்துக் கொண்டிருந் தாள். ஒல்லியாக, உயரமாக இருந்தான். சரவணனுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது ரொம்ப சாதாரணமாக தென்பட்டான். இருந்தால் மட்டும் என்ன? அவன் தனக்கு மட்டுமே சொந்தமானவன் என்ற திருப்தி அவள் மனதில் பரவியது. 

பின்னால் சத்தம் கேட்டு திரும்பிப் பார்த்தாள். பிரகாஷ் நின்றிருந்தான். இருவரையும் கூர்ந்து பார்த்த பிரகாஷ் உரத்த குரலில் சிரித்தான். காமாட்சி வெட்கப் பட்டுக் கொண்டே அங்கிருந்து வேகமாக வெளியேறி னாள். ராகவனின் முகம் கன்றி சிவந்து விட்டது. 


பிரகாஷ் ஆபீஸில் வேலை பார்த்துக் கொண்டிருந் தான். அவன் கண் முன்னே அந்தக் காட்சி திரும்பத் திரும்ப நினைவு வந்துகொண்டே இருந்தது. மகளை ராகவனுக்கு மணம் செய்து தரவேண்டும் என்று அவளுடைய தந்தை முயற்சி செய்வது அவனுக்குத் தெரியும், அதற்கு காமாட்சி சம்மதிக்கவில்லை என்று பேச்சு வாக்கில் சீதா அவனிடம் சொல்லியிருக்கிறாள். இன்று சம்மதம் தெரிவித்தாள் என்றால்? 

முதல் பார்வையில் காதல் அரும்பும் ‘என்பது தவறு, அது வெறும் ஈர்ப்பு மட்டும்தான். அந்த ஈர்ப்பு நேர்மை யான காதலுக்கு அடிகோலிடக் கூடும். 

மாலை நாலு மணி ஆகும் போது குமாரிடமிருந்து ஃபோன் வந்தது. 

“ஹலோ பாஸ்! என்ன விசேஷம்?” பிரகாஷ் உற்சாகமாக கேட்டான். 

“மாலை ஆறுமணிக்கு உங்க வீட்டுக்கு வருகிறேன். இரண்டு பேரும் சேர்ந்து பொன்னம்பலம் வீட்டுக்கு போவோம். அதைச் சொல்லத்தான் ஃபோன் செய்தேன்.” 

“அப்படியே செய்வோம்” என்றான் பிரகாஷ். திடீ ரென்று ஏதோ நினைவுக்கு வந்தாற்போல் “அது சரி, என்ன கொடுத்தால் நன்றாக இருக்கும்?” என்று கேட்டான். 

குமாருக்குப் புரியவில்லை. “எதைப் பற்றி கேட்கிறாய்?” 

“பரிசு என்ன கொடுக்கலாம் என்றுதான்.” 

குமார் சிரித்து விட்டான். “அது போன்ற ஃபார்மாலிடீஸ் எதுவும் தேவையில்லை. வெறுமே போனால் போதும்.” 

பிரகாஷ் நிம்மதியாக மூச்சுவிட்டுக் கொண்டான். ஏனென்றால் ஏதோ காரணத்தினால் அன்று சம்பளம் தரப்போவதில்லை என்று தெரிவிக்கப்பட்டது. 

ஃபோனை வைத்துவிட்டு சேட் சமனலால் சம்பந்தப் பட்ட வேலையை செய்து முடித்தான். மாலை ஐந்து மணியானதும் ஃபைல்களை மூடிவிட்டு வீட்டுக்குக் கிளம்பினான். 

மாமா திண்ணையில் அமர்ந்திருந்தார். பார்வையா லேயே குசலம் விசாரித்து விட்டு உள்ளே சென்றான். கை கால்களை அலம்பிக்கொண்டு ஹாலுக்கு வந்த போது. சூடான டீ அவனுக்காக காத்திருந்தது. அதைப் பார்க்கும் போது சந்தோஷமாகவும், வியப்பாகவும் இருந்தது. அவனுக்கு நினைவு தெரிந்தது முதல் அவனிடம் அக்கறை யுடன் செயல்படுவது இதுதான் முதல் தடவை. வழக்க மாக பிளாஸ்கில் டீ வைக்கப்பட்டிருக்கும். 

டீயை குடித்துவிட்டு உடைகளை மாற்றிக் கொண்டு வாட்சைப் பார்த்துக் கொண்டான். ஐந்தரை மணிதான் ஆகியிருந்தது. இன்னும் அரைமணி நேரம் எப்படி கழிப்பது என்று தெரியவில்லை. வாசலுக்கு வந்தான். 

வாசலில் சீதா காமாட்சியின் தாயிடம் பேசிக் கொண்டிருந்தாள். அவனைப் பார்த்ததும் அருகில் வந்து “சம்பளம் வந்து விட்டதா அத்தான்?” என்று கேட்டாள், 

“இல்லை. நாளைக்கு வரும்.” 

சீதா அந்த மாமியிடம் ஏதோ சொல்லிவிட்டு அனுப்பி விட்டாள். 

“என்ன விஷயம்? எதற்காக வந்தாளாம்?” காஷூவலாகக் கேட்டான. 

“நாம் அந்த மாமிக்கு ஐம்பது ரூபாய் கொடுக்கணும். எப்போ தருவோம் என்று கேட்பதற்காக வந்திருந்தாள்.” 

“ஐம்பது ரூபாயா?” வியப்புடன் கேட்டான். 

“ஆமாம். இருபதாம் தேதி கடன் வாங்கினேன், மளிகைச் சாமான் வாங்குவதற்காக” 

“இத்தனை நாளும் கடன் வாங்காமல்தானே இருந்தோம்.” அவன் குரவில் கோபம் வெளிப்பட்டது. 

சீதா ஒரு நிமிடம் மௌனமாக இருந்துவிட்டு “நான் என்ன செய்யட்டும்? எவ்வளவு சிக்கனமாக இருந்தாலும் போறவில்லை” என்றாள். 

இனி அந்த விஷயத்தை நீடிக்க விரும்பாமல் “பரவாயில்லை. பார்த்துக் கொள்ளலாம்” என்றான். 

சீதா உள்ளே போய்விட்டு திரும்பி வந்தாள். அவன் கையில் ஒரு நோட்டுப் புத்தகத்தை நீட்டினாள். 

“இதென்னது?” 

“நீங்களே பாருங்க. வரவு செலவு கணக்கு எழுதி வைத்திருக்கிறேன்” என்றாள். 

“என் உத்தேசம் அது இல்லை சீதா” நொந்து கொள்பவன் போல சொன்னான். தன்னால் சீதாவுக்கு வருத்தம் ஏற்படுவதை அவன் விரும்பவில்லை. “சாரி சீதா”. 

“அதற்காக இல்லை. இதில் குறைக்கக் கூடிய செலவுகள் ஏதாவது இருந்தால் நீங்களே சொல்லுங்கள்.” முழுவதும் சொல்லிவிட்டு உள்ளே போய்விட்டாள். 

பிரகாஷ் பட்டியலை பரிசீலிப்பது போல் பார்த்தான். பால், மளிகை, வீட்டு வாடகை, சோப்பு, பவுடர், வேலைக்காரிக்கு சம்பளம் என்று பட்டியல் நீண்டு கொண்டே இருந்தது. எதையும் குறைக்க முடியும் என்று தோன்றவில்லை. தன்னுடைய சம்பளம் முழுவதும் இப்படி வீட்டுச் செலவுகளுக்கே போய்விட்டால் எதிர்காலத்தில் எப்படி வாழமுடியும்? தனக்கே இப்படி என்றால் திருமணமாகி நாலைந்து குழந்தைகள் இருப்பவர்களின் நிலைமை என்ன? எப்படி இவர்கள் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்? ரொம்ப சின்ன கேள்வி இது. பதில்தான் கிடைக்கவில்லை. 

இது போன்ற சூழ்நிலையில் தன்னால் எப்படி கொள்கையை கடைப்பிடிக்க முடியும்? எத்தனை நாட்களுக்கு தன்னுடைய கட்டுப்பாடு நீடிக்கும்? 

பிரகாஷுக்கு தன் மீதே இரக்கம் ஏற்பட்டது. சத்தம் கேட்டு நிமிர்ந்து பார்த்தான். மாமா உள்ளே வந்து கொண்டிருந்தார். பிரகாஷ் புதிய உடைகளை அணிந்திருப்பதை கவனித்து “வெளியே எங்கேயாவது போகிறாயா என்ன?” என்று விசாரித்தார். 

“ஆமாம். சாப்பாட்டுக்கு இருக்க மாட்டேன் சீதாவிடம் சொல்லிவிட்டேன்.” 

“அப்படியா. சரி” என்று உள்ளே போய்விட்டார். 

பிரகாஷ் தனியாக நின்றுகொண்டிருந்தான். ஆறுமணி அடிக்க ஐந்து நிமிடங்கள் இருந்தன. குமார் உள்ளே வருவானோ என்னவோ. அறையைக் கொஞ்சம் எடுத்து வைப்போம் என்று எண்ணியபடி உள்ளே போனான். கொடியில் தாறுமாறாக கிடந்த உடைகளை ஒரு ஓரமாக நகர்த்தினான். படுக்கையை சரி செய்து கொண்டிருந்த போது தலையணைக்கு அடியில் புத்தகம் ஒன்று தென் பட்டது. எடுத்துப் பார்த்தான். வாடகை நூலகத்திலிருந்து எடுத்து வரப்பட்ட மூன்றாம் தர துப்பறியும் நாவல், பக்கம் பக்கமாக சிருங்கார வர்ணனைகள். மதிய நேரத்தில் பொழுது போக்காக படிப்பதற்காக சீதா எடுத்து வந்த புத்தகம். 

பிரகாஷுக்கு அவள் மீது கோபம் வரவில்லை, தாய் இல்லாத, தாயின் சரியான பராமரிப்பு கிடைக்காத பெண் குழந்தை எப்படி திசைமாறிப் போவார்கள் என்பதற்கு இது ஒரு எடுத்துக் காட்டு, யாரோ வந்து நம்மை சீர்திருத்து வார்கள் என்று காத்திருப்பது முட்டாள்தனம். ஒவ்வொரு வரும் நேர்மையுடன் வாழ்ந்தால் அதுவே போதும். அதை கடைபிடிக்காமல் மக்கள் புண்ணியம், தியாகம், பண்பு என்று இல்லாத குணங்களைப் பற்றியெல்லாம் பேசி தங்களையே உயர்வாக எண்ணி பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள். 

வெளியே கார் சத்தம் கேட்டது. ஜன்னல் வழியாகப் பார்த்தான். குமார் இல்லை. வேறு யாரோ. புத்தகத்தை மறுபடியும் பழைய இடத்திலேயே வைத்துவிட்டான். ஆறரை ஆகி விட்டது. குமார் வரும் ஜாடை தெரிய வில்லை. 

பார்ட்டீக்கு எப்படிப் போவது? போய்த்தான் ஆகணுமா?அடி மனதில் ஏதோ தவிப்பு. சுஜாதாவை ஒருமுறை பார்க்கணும். தான் அவளிடம் எதுவும் பேசப் போவதில்லை. தன்னுடைய முறுவலுக்காக அவள் ஏங்கிக் கொண்டு இருப்பாள், தன்னால் அவளிடம் எப்படி சிரித்துப் பேசமுடியும்? தன்னுடைய கொள்கை அதற்கு இடம் தராது. 

“இன்னும் கிளம்பவில்லையா?” மாமா கேட்டார்.

“நண்பன் ஒருவன் வருவதாகச் சொல்லியிருந்தான்.”

மாமாவின் கண்களில் ஏதோ சந்தேகம்! பிரகாஷ் தவறான பாதையில் போகிறானோ. 

பிரகாஷுக்கு இருப்பு கொள்ளவில்லை. “கிளம்பு கிறேன். என்னைத் தேடிக் கொண்டு யாராவது வந்தால் கோவிலில் இருப்பேன்னு சொல்லுங்கீ” என்றான். 

போகும் வழியில் குமாருக்காக பார்த்துக் கொண்டே சற்றுத் தள்ளியிருந்த கோவிலை நோக்கி நடந்தான். கோவி லில் கூட்டம் அதிகமாக இருந்தது. அவனும் போய் வரிசை யில் நின்று கொண்டான். அர்ச்சகர் கற்பூர ஹாரத்தி. காட்டிக் கொண்டிருந்தார். 

நினைத்துப் பார்க்கும் போது பிரகாஷுக்கு சிரிப்பு தான்வந்தது. முந்தா நாள் இதே நேரத்தில் சுஜாதாவுடன் காரில் இருந்தான். நேற்று குமாருடன் பாருக்கு போனான். இன்று கோவிலில், நாளைக்கு? 

(நாளைக்கு எங்கே இருப்பானோ தெரியாது. ஏன் என்றால் இன்று இரவுடன் இந்தக் கதை முடியப் போகிறது.) 

வரிசையில் நிற்கும் வரையில் முன்னால் இருப்பவன் நகர வேண்டுமே என்ற தவிப்பு. தன்னுடைய முறை வந்ததும் சீக்கிரமாக நகரச் சொல்லுவார்களோ என்ற வேதனை. புண்ணியம் கிடைக்கும் என்ற சுயநலத்தைத் தவிர கோவிலுக்கு வருவதில் என்ன பிரயோஜனம் இருக் கிறது? கடவுளை வழிபடுவதால் மனதிற்கு அமைதி கிடைக்கும் என்றால் நல்லதுதான். கடவுள் வழிபாடு என்பதே நம்பிக்கைதானே. பிரசாதம் வாங்கிக் கொண்டு வெளியே வந்தான். 

எதிரே குளம் சலனமற்று இருந்தது. அரளிச்செடியின் கீழே இருந்த திண்ணையின் மீது அமர்ந்து கொண்டான். இயற்கையும் ஓய்வு எடுத்துக் கொள்வது போல் தோன்றியது. மலர்களின் நறுமணம் குளத்தின் மீது வீசும் காற்றுடன் சேர்ந்து இனிமையான சூழ்நிலை உருவாக்கி யிருந்தது. இயற்கையுடன் தான் ஒன்றிவிட்டது போன்ற உணர்வு.

வெளியே ஹாரன் சத்தம் கேட்டது. யோசனைகளி லிருந்து மீண்டவனாய் வெளியே வந்தான். குமார் அவனைப் பார்த்ததும் கையை அசைத்தான். பிரகாஷ் ஏறி உட்கார்ந்து கொண்டதும் கார் நகர்ந்தது. 

“வீட்டுக்குப் போனால் இங்கே இருப்பதாகச் சொன்னார்கள்” என்றான். 

“ஆமாம். சொன்ன நேரத்திற்கு நீ வரவில்லை. எனக்கும் வீட்டில் இருப்பு கொள்ளவில்லை.” பிரகாஷ் பின்னால் சாய்ந்து கொண்டே சொன்னான். 

“கொஞ்சம் தாமதமாகி விட்டது. திருமணப் பத்திரிகை அச்சடிக்க வேண்டியிருந்தது.” 

“திருமணப் பத்திகையா?” 

பிரகாஷ் குரலில் வெளிப்பட்ட தொனிக்கு குமார் சிரித்துவிட்டான். “நீ நினைக்கிறாப்போல் எதுவும் இல்லை. எங்க கிளைண்டின் மகள் ஒருத்திக்கு திடீரென்று இரண்டு வருடங்களுக்கு முன்னால் திருமணம் நடந்ததாக ஆதாரம் தேவைப்பட்டது.” 

“எனக்குப் புரியவேயில்லை.” 

“வரிகளை தவிர்ப்பதற்காக நாங்க பலவழிகளில் பாடுபடவேண்டியிருக்கும், அதெல்லாம் உனக்கு எதுக்கு? அது சரி. அடிக்கடி கோவிலுக்குப் போவாயா?” 

“ஊம். நீ கோவிலுக்கு போவதுண்டா?” பிரகாஷ் கேட்டான். 

ஒரு நிமிடம் மௌனத்திற்கு பிறகு குமார் சொன்னான். “கோவிலுக்குப் போய் வழிபடுவது என்னால் முடியாது, அந்த சத்தம், கூட்டம் எனக்கு தொந்தரவாக இருக்கும். தனிமையில் கிடைக்கும் நிம்மதி கும்பலுக்கு நடுவில் கிடைக்காது.” 

சற்று முன் அரளி மரத்தின் அடியில் தனக்கு ஏற்பட்ட அனுபவம் பிரகாஷிற்கு நினைவு வந்தது. சில அனுபவங்களை உணரத்தான் முடியும். பகிர்ந்துகொள்ள முடியாது. 

“என்ன யோசிக்கிறாய்?” குமார் கேட்டான். 

“மனித வாழ்க்கையைப் பற்றி. என்னைப் பற்றி நினைத்தால் சில சமயம் எனக்கே வெறுப்பாக இருக்கிறது” 

குமார் பதில் சொல்லவில்லை, 

“என்னைப் பார்த்தால் உனக்கு சிரிப்பு வருகிறது இல்லையா?” 

“இல்லை. இல்லை. உன்னுடைய பிரச்னை எனக்குப் புரிகிறது. ஸ்ட்ரகுல் ஃபார் எக்ஸிஸ்டென்ஸ்?” 

“என் சம்பளம் எனக்கு போதும்.” 

“சாப்பாடு ஒன்று மட்டுமே வாழ்க்கை இல்லையே. ரேஷன் கடைகளில் நடக்கும் ஊழல்கள், ப்ளேடோனிக் லவ், ஆன்மீகவாதம்… எல்லாமே வாழ்க்கைப் போராட்டம்தானே,” 

“என் வாழ்க்கையை நீ ஏன் கதையாக எழுதக் கூடாது?” பிரகாஷ் கேட்டான். 

“ஜோக் செய்கிறாயா?” 

“இல்லை சீரியஸாகத்தான் கேட்கிறேன்.” 

“எழுதுவதற்கு என்ன இருக்கிறது உன் வாழ்க்கை யில்? கதை எழுதணும் என்றால் மெலோ டிராமா இருக்கணும். திருப்பங்கள் இருக்கணும்.” 

“நீ ஒரு எழுத்தாளன் இல்லையா. என்னைப் போன்ற சராசரி மனிதனைப் பற்றி ஏன் எழுத முடியாது?” 

“மனிதனின் உள் மனதில் கணநேரம் நடக்கும். போராட்டத்தைப் பற்றி விவரிப்பதற்கு எத்தனை பக்கங்கள் எழுதினாலும் போறாது.* 

“பின்னே எழுதித்தான் பாரேன்.” 

“முயற்சி செய்கிறேன்.” குமார் சொன்னான். 

பொன்னம்பலம் வீட்டின் முன்னால் கார் வந்து நின்றது. பார்ட்டி வெளியே தோட்டத்தில் ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. மேஜைகள் தள்ளித் தள்ளி போடப்பட்டு இருந்ததால் ரொம்ப கூட்டமாக தெரியவில்லை. மரங் களில் மின் விளக்குகள் பொருத்தப்பட்டிருந்தன. ஸ்பீக் கரில் பாட்டு மெலிதாக ஒலித்துக் கொண்டிருந்தது. 

“நாம் லேட் ஆகிவிட்டோம் போலிருக்கு.” கரை லாக் செய்து கொண்டே சொன்னான் குமார். 

பிரகாஷ் பதில் சொல்லவில்லை. அவனுக்கு ஏனோ கொஞ்சம் பதட்டமாக இருந்தது. இது போன்ற பார்ட்டிகளுக்கு வருவது முதல் தடவை என்பதாலோ இல்லை மறுபடியும் சுஜாதாவை பார்க்கப் போகிறோம் என்ற எண்ணமோ. 

இருவரும் உள்ளே நுழைந்தார்கள். எல்லோரும் பேச்சில் ஆழ்ந்திருந்ததால் இவர்களின் வருகையை யாரும் கவனிக்கவில்லை. 

“அப்படி ஒரு ஓரமாக உட்கார்ந்து கொள்வோம்” குமார் சொன்னான். 

இருவரும் உட்கார்ந்துகொள்ளப் போன போது “ஹலோ ஆடிட்டர்” என்று அழைத்தபடி பொன்னம்பலம் அங்கே வந்தார். 

“குட் ஈவினிங்.” குமார் விஷ் செய்தான். 

“குட் ஈவினிங். ஏன் இங்கேயே உட்கார்ந்து விட்டீங்க?” என்றார் பிரகாஷை பார்த்துக்கொண்டே. “இங்கேயே நன்றாக இருக்கு.” குமார் சொன்னான். பொன்னம்பலம் பக்கத்து நாற்காலியில் அமர்ந்து கொண்டே “உங்க ஆபீசரும் வந்திருக்கிறார்” என்றார் பிரகாஷிடம். 

பிரகாஷுக்கு ஏனோ குற்ற உணர்வு ஏற்பட்டது. வேலைக்காரன் வந்து மூன்று டம்ளர்களை வைத்து விட்டுப் போனான். 

“நான் குளிர்பானம் ஏதாவது எடுத்துக் கொள் கிறேன்” என்றான் பிரகாஷ். அவன் குரல் கிணற்றிலிருந்து வருவதுபோல் ஹீனமாக ஒலித்தது. அவனால் அந்தச் சூழ்நிலையில் தன்னை பொருத்திக் கொள்ள முடிய வில்லை. 

பொன்னம்பலம் மேலும் வற்புறுத்தவில்லை. உங்கள் விருப்பம். ஆனால் சாப்பாடு விஷயத்தில் நீங்க குறை வைத்தால் நான் சும்மா இருக்கமாட்டேன்” உரிமையுடன் சொல்லிவிட்டு எழுந்து கொண்டார். மற்ற விருந்தாளி களை உபசரிக்க அடுத்த மேஜைக்குப் போனார். 

ஒரு நிமிடம் கழித்து வேலைக்காரன் கோகோ கோலா பாட்டிலையும் சோடாவும் வைத்துவிட்டு போனான். 

குமார் டம்ளரை உயர்த்தி “சியர்ஸ்” என்றான் பிரகாஷிடம். டம்ளரை உயர்த்தி ஒரு மடக்கு விழுங் கினான். எங்கும் சந்தடியாக இருந்தது. யாரோ உரத்த’ குரலில் சிரித்துக் கொண்டிருந்தார்கள். 

“அவர்களில் யாரையுமே உனக்குத் தெரியாதா?” பிரகாஷ் கேட்டான். 

“ஏறத்தாழ எல்லோரையுமே தெரியும்.”

“பின்னே யாரிடமும் பேசவே இல்லையே ?”

“பத்து பேருடன் கலந்து கொள்வது எனக்குப் பிடிக்காது.” 

திடீரென்று சந்தடி குறைந்ததை உணர்ந்து பிரகாஷ் திரும்பிப் பார்த்தான். 

சுஜாதா வந்து கொண்டிருந்தாள். சிவப்பு கரையிட்ட ஷிபான் புடவை. வானத்திலிருந்து இறங்கி வரும் தேவதை போல் இருந்தாள். இலைகள் வழியாக வந்து விழும் வெளிச்சத்தில் அவள் முகம் அன்று மலர்ந்த மலர் போல் தூய்மையாக இருந்தது. முறுவலுடன் எல்லோரையும் குசலம் விசாரித்துக் கொண்டே வந்தவள் ஒரு மேஜை அருகில் நின்று கணவருக்கு பக்கத்தில் அமர்ந்து கொண்டாள். 

பிரகாஷ் மறுபடியும் அந்தப் பக்கம் பார்த்தாள். செதுக்கிய தந்தச் சிலையைப் போல் சுஜாதா எவ்வளவு அழகாக இருக்கிறாள்! சிரித்த முகத்துடன் கணவரிடம் ஏதோ சொல்லிக் கொண்டிருந்தாள். இந்தப் பக்கம் வந்தால் நன்றாக இருக்கும். 

பொன்னம்பலம் விருந்தாளிகளை உபசரிக்க எழுந்து போனார். 

“விருந்தாளிகளை பார்த்துப் பார்த்து உபசரிக்கிறார். போலிருக்கே.” குமார் சொன்னான். பிரகாஷ் மௌன மாசு இருந்தான். சுஜாதா எழுந்து அவர்களை நோக்கி வந்து கொண்டிருந்தாள். பிரகாஷ் மூச்சை இழுத்துப் பிடித்தான். 

“வணக்கம். செளக்கியம்தானே” குமாரிடம் விசாரித்தாள். 

“வணக்கம். இவன் நம் கிளாஸ்மேட் பிரகாஷ். நினைவு இருக்கிறதா?” 

சுஜாதா பிரகாஷைப் பார்த்து முறுவலித்தாள். பிரகாஷ் பதிலுக்கு புன்னகைக்கவில்லை. 

“வந்து எவ்வளவு நேரமாச்சு?” குமாரிடம் கேட்டாள்.

“இப்பொழுதுதான். ஐந்து நிமிடங்கள் இருக்கும்.”

“ஏன் இவ்வளவு லேட்?” 

பிரகாஷ் மனதில் இனம் தெரியாத அதிருப்தி பரவியது. தான் இருப்பதையே கண்டுகொள்ள வில்லையே ஏன்? 

“பழைய நண்பர்கள் நன்றாக சேர்ந்திருக்கீங்க போலிருக்கே.” பொன்னம்பலம் அருகில் வந்து கொண்டே சொன்னார். கணவருக்கு இடம் கொடுப்பதற்காக சுஜாதா எழுந்து அடுத்த நாற்காலியில் உட்கார்ந்து கொண்டாள். அப்படிச் செய்யும்போது அவளுடைய புடவைத் தலைப்பு பிரகாஷ் மீது பட்டது. சட்டென்று பின்னால் நகர்ந்து கொண்டாள். 

அவர்கள் மூவரும் பேச்சில் ஆழ்ந்து போனார்கள். பிரகாஷுக்கு உடனே அங்கிருந்து போய் விடவேண்டும் போல் இருந்தது. 

‘சுஜாதா ! ஒரு முறை யாருக்கும் தெரியாமல் எனக்கு மட்டுமே புரியும் விதமாக முறுவல் செய். இந்த உலகில் யாருக்குமே தெரியாத ரகசியம் ஒன்று நமக்கிடையே இருக்கு என்பதற்கு அடையாளமாக ஒரே ஒரு புன்னகை. 

“இதோ வருகிறேன்.” பொன்னம்பலம் எழுந்து போனார். சுஜாதாவும் அவருடனே சென்றாள். ஒரு முறை கூட திரும்பிப் பார்க்கவில்லை. 

“என்ன யோசனை? உன் மனம் இங்கே இல்லை போலிருக்கே?* குமார் சொன்னான். 

“அப்படி ஒன்றும் இல்லை.” கலவரத்தை மறைத்து கொண்டே பிரகாஷ் சொன்னான். 

ஸ்பீக்கர் வழியாக வாத்திய இசை ஒலித்துக் கொண்டிருந்தது. வேலைக்காரர்கள் பம்பரமாக சுழன்று சர்வ் செய்து கொண்டிருந்தார்கள். 

“ஒரு நிமிஷம் வந்து விடுகிறேன்.” குமார் எழுந்து போனான். 

பிரகாஷ் தனித்து விடப்பட்டான். இப்பொழுது சுஜாதா இங்கே வந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்? தானும் அவளும் சிரித்துச் சிரித்து பேசிக்கொண்டிருக்கும் போது எல்லோருடைய பார்வையும் தங்கள் மீது பதிந்திருப்பது போல் கற்பனை காட்சி கண்முன்னே விரிந்தது. 

சுஜாதா இந்தப் பக்கம் வருவது தென்பட்டது. ஒரு வினாடி இருவரின் பார்வையும் சந்தித்துக் கொண்டன. இதழ்களை விரித்து சிரிக்கப் போனாள். ஆனால் அதற்குள் பார்வையைத் திருப்பிக் கொண்டு எதிரே வந்தவர் களுடன் கலகலவென்று பேசத் தொடங்கினாள். 

பிரகாஷுக்கு ரோஷம் பொத்துக் கொண்டு வந்தது. சுண்ணிமைக்காமல் அந்தப் பக்கமே பார்த்துக் கொண்டிருந்தான். அவள் சிரித்தபடி ஏதோ சொல்லிக் கொண்டிருந்தாள். காதிலிருந்த ஜிமிக்கி அழகாசு அசைந்து கொண்டிருந்தது. 

நாற்காலியின் மீது நின்றுகொண்டு இந்த சுஜாதா தன்னை எப்படியெல்லாம் காதலித்தாள் என்று சத்தமாக சொல்லி விட்டால் என்ன? 

என்ன சாடிஸம் இது? தன்னைப் பற்றி நேர்மையாக யோசிப்பதற்கு பிரகாஷுக்கு பயமாக இருந்தது. தனித் தன்மை இருப்பதை பெரிய விஷயமாக நினைப்போமே ஒழிய அது எப்போதும் அகம்பாவத்துடன் இணைந்தே இருக்கும். ‘எனக்கு எந்த தனித்தன்மையும் இல்லை, நாள் ரொம்ப சாதாரணமானவன்’ என்று நினைப்பவன்தான் உண்மையான ரிஷி.

சுஜாதா எழுந்து உள்ளே போய்விட்டாள். பிரகாஷ் சுற்றிலும் பார்த்தான். எல்லோரும் தங்களுடைய பேச்சில் ஆழ்ந்திருந்தார்கள். தன்னைத் தவிர உலகம் முழுவதும் சந்தோஷமாக இயங்கிக் கொண்டிருக்கிறது. தன் மனதில் தான் போராட்டம். 

எழுந்து கொண்டான். இனி இந்த மனிதர்களுக்கு நடுவில் தன்னால் இருக்கமுடியாது. வீட்டின் பின்னால் சின்ன கேட் தென்பட்டது. அந்தப் பக்கமாக நடந்தான். கால்களுக்கு அடியில் புல்பூண்டுகள் நசுங்கிக் கொண்டிருந்தன. 

வேகமாக நடந்து போய் கேட்டை அடைந்தான். அவனை கேலி செய்வது போல் சிறிய பூட்டு தொங்கிக் கொண்டு இருந்தது. ஏமாற்றத்துடன் திரும்பினான். பக்கத்திலேயே கார் காரேஜ் தென்பட்டது. மேலும் ஒரு அடி வைத்தான். 

ஏதோ சத்தம் கேட்டது. சுவற்றின் மீது நிழல்கள் அசைந்தன. அவன் நடக்கும் போது காலடியில் காய்ந்த இலைச் சருகுகள் ஓசையை எழுப்பின. அந்த நிசப்தத்தில் அந்த சத்தம் பன்மடங்காகக் கேட்டது. யதேச்சையாக நிமிர்ந்து பார்த்தான். சுவற்றில் நிழல்கள் விலகிக் கொண்டிருந்தன. பாதி திறந்திருந்த காரேஜ் கதவுகள் முழுவதுமாக திறந்துகொண்டன. விளக்கு வெளிச்சத்தில் நிழல்களின் உண்மையான உருவங்கள் தென்பட்டபோது சிலையாக நின்று விட்டான் வானம் இடிந்து மேலே விழுவது போல், காலுக்கடியில் நிலம் நழுவியது போல் நடுநடுங்கிவிட்டான். 

குமாரின் அணைப்பிலிருந்து விடுபட்ட சுஜாதா பிரகாஷைப் பார்த்ததும் வீலென்று சுத்தினாள், 

வேகமாக அங்கிருந்து வெளியேறி பார்ட்டி நடக்கும் இடத்திற்கு வந்தான். கண்களை இருட்டிக் கொண்டு வந்தது. அப்படியே நாற்காலியில் சரிந்தான். எதிரே விஸ்கி பாட்டில் மங்கலாக தென்பட்டது. குடிக்கவில்லை என்று என்னை ஏளனம் செய்தது யாரு? நான் குடிக்கப் போகிறேன். சோடா கூட கலக்கத் தேவையில்லை. 

பாட்டிலை எடுத்து கடகடவென்று குடித்து விட்டான். தொண்டைக் குழியில் எரிவது போல் இருந்தது. மனதில் ஏற்பட்ட எரிச்சலுடன் ஒப்பிட்டால் இது எந்த மூலை? 

எதிராளியின் மனதில் இருக்கும் எண்ணங்களை வெளிப்படையாக பார்க்கக் கூடிய பூதக் கண்ணாடியைக் கடவுள் எனக்குத் தந்தால் இவ்வளவு கல்மிஷத்தை, மோசமான உலகத்தை பார்க்க முடியாமல் தற்கொலை செய்து கொள்வது நிச்சயம். எதற்காக வாழவேண்டும்? யாருக்காக வாழவேண்டும்? 

‘பிரகாஷ்! பிரகாஷ்!” குமார் தட்டி எழுப்பிக் கொண்டிருந்தான். 

தூக்கக் கலக்கத்திலேயே எழுந்து நடந்து போய் காரில் அமர்ந்து கொண்டான். ஐந்து நிமிடங்கள் மெளன மாகக் கழிந்தன. 

“என்னைப் பார்த்தால் உனக்கு வெறுப்பாக இருக் கிறது இல்லையா.” குமார் கேட்டான். 

“இல்லை. இல்லை. இப்போ யார் மீதும் எந்த வெறுப்பும் இல்லை.” தன் குரலில் தென்பட்ட அமைதி அவனுக்கே வியப்பை ஏற்படுத்தியது. 

“உன்னால் புரிந்துகொள்ள முடியும் என்றால் ஒரு விஷயம் சொல்ல விரும்புகிறேன்.” 

“சொல்லு.” 

“நானும், சுஜாதாவும் பழகுவது வெறும் தரில்லுக்காக மட்டும்தான். ஒரு விஷயம் மட்டும் உண்மை. சுஜாதா உன்னை மனப்பூர்வமாக நேசிக்கிறாள்.” 

“உனக்கு… உனக்கு முன்னாடியே தெரியுமா பிரகாஷின் குரல் தடுமாறியது. 

“எல்லாம் தெரியும், கல்லூரியில் இருக்கும் போதே. அது மட்டுமே இல்லை. இரண்டு நாட்களுக்கு முன்பு நீங்க இருவரும் சந்தித்துக் கொண்ட விஷயம் கூட தெரியும். அவள் தான் சொன்னாள். இப்பவும் அவள் உன்னைத் தான் காதலிக்கிறாள்,” 

வீடு நெருங்கிவிட்டது. குமார் காரை ஓரமாக நிறுத்தினான். பிரகாஷ் கீழே இறங்கிக் கொண்டு கார் கதவைப் பிடித்துக் கொண்டே சொன்னான். 

“மை டியர் ஆனரபிள் மெம்பர் ஆஃப் தி பார் பேரியன் சொசைடி! நீங்க எல்லோரும் அரக்கர்கள். மன தளவில் அரக்கர்களாய் இருந்து கொண்டு வெளியில் தேவர் களை போல் நடமாடும் மனிதர்கள். மன சாட்சியை ஏமாற்றிக்கொண்டு நல்லவர்களைப்போல் வேஷம் போடுபவர்கள். சராசரி மனிதன் நான். என்னைப் பார்த்து யாகும் பயப்படத் தேவையில்லை. இன்று முதல் நானும் உங்களில் ஒருவனாக மாறப் போகிறேன்.” கார் டோரை பலமாக சாத்திவிட்டுத் தள்ளாடிக்கொண்டே நடந்து போனான். 

ஒரு நிமிடம் திகைப்புடன் பார்த்த குமார் பெருமூச்சு விட்டபடி காரை முன்னோக்கிச் செலுத்தினான். 

படிகளில் தடுமாறி விழப்போன பிரகாஷ் எப்படியோ சமாளித்துக் கொண்டு கதவைத் தட்டினான். கதவு உள்ளே தாழிடப்படாமல் வெறுமே சாத்தியிருந்தது. குடி மயக்கத்தில் இருந்த பிரகாஷ் அதை கவனிக்க வில்லை. 

கதவைத் தட்டிய சத்தம் கேட்ட சீதா எழுந்து வந்தாள். அந்த நிலையிலும் அவனுக்கு வியப்பு ஏற்பட்டது. அத்தனை நேரம் வரையில் தனக்காக ஒருத்தி காத்திருப்பது அதுதான் முதல் தடவை. 

அறைக்குள் போனான். பின்னாலேயே வந்த சீதா ‘அத்தான்! சாப்பிடப் போவதில்லையா?” என்று கேட்டாள். 

இல்லை என்பது போல் தலையை அசைத்தான். அந்த நேரத்தில் சீதாவைப் பார்க்கும் போது ரொம்ப அழகாக தென்பட்டாள். தூய்மையான அழகு. 

இந்த அழகை கல்யாணத்திற்கு முன்பே சொந்த மாக்கிக் கொண்டால். 

பிரகாஷின் விழிகள் சிவப்பாக மாறின. அவன் உள்ளே இருந்த ‘ஹைட்’ (Hyde) வெளியே வந்து விட்டான். 

“சீதா!” என்று அழைத்தான். 

போகப் போனவள் நின்று பின்னால் திரும்பினாள். “என்ன அத்தான்?”
 
கையை நீட்டி சட்டென்று அருகில் இழுத்துக் கொண்டான். எதிர்பாராத இந்த செயலுக்கு திகைத்துப் போனாள் சீதா. 

“கெட்டுப் போவதில் எவ்வளவு சந்தோஷம் இருக் கிறதோ இன்னிக்கே புரிய வைக்கிறேன். சீதா! இனி நமக்கு எந்த வேதனைகளும் இருக்காது, எல்லாமே சந்தோஷம் தான். இன்றுதான் தொடக்கவிழா, திருமணம் ஆன பிறகு என்ன இருக்கப்போகிறது? ரொட்டீன் வாழ்க்கைதான்.” 

பலமான அவனுடைய அணைப்பில் அவள் நலிந்து போய்க் கொண்டிருந்தாள். அவனுடைய இரும்புப் பிடியிலிருந்து விடுபட தவித்துக் கொண்டிருந்தாள். மேலும் இறுக அணைத்துக் கொண்டான். கொஞ்சம் கொஞ்சமாக அவளுடைய எதிர்ப்பு குறைந்து விட்டது. 

“விடுங்க அத்தான்.” மேலும் நெருங்கி வந்தாள்.

சட்டென்று விட்டுவிட்டான். “போய்விடு.”

மிரண்டவள் போல் அவன் பக்கம் பார்த்தாள். அவன் கண்கள் நெருப்புத் துண்டங்களாக இருந்தன. 

“ஐ ஸே கெட் அவுட்!” உரத்த குரலில் கத்தினான். 

குழப்பத்துடன் பார்த்துக் கொண்டே அறையை விட்டு வெளியேறினாள். ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு படுக்கையில் குப்புறப்படுத்துக் கொண்டு தலையணையில் முகம் புதைத்து அழுதுகொண்டிருந்தான் பிரகாஷ். 

சமுதாயக் கட்டுப்பாடுகளை மீறுவதற்கு தேவையான துணிச்சல் இல்லாத சராசரி மனிதன். 

எல்லோராலேயும் கெட்டுப் போக முடியாது. அதுவும் ஒரு கலைதான். 


என் வாழ்க்கையின் மிக வேதனையான நாட்களில் இந்தக் கதையை எழுத வேண்டும் என்று விரும்பினேன். பிரகாஷ் உயிரோடு இருந்த நாட்கள் அவை. பேனா என் கையில் இருப்பதால் அவனை நல்லவனாக உருவகப் படுத்தினேன். ஆனால் என்னுள்ளே இருக்கும் பிரகாஷை என்ன செய்தேன்? நிர்த்தாட்சண்யமாக கொன்று விட்டேன். 

எப்போதாவது நள்ளிரவு வேளையில் உலகம் முழுவதும் உறக்கத்தில் இருக்கும் போது, தனிமையில் ஜன்னல் வழியாக வெளியே இருளில் பார்த்துக் கொண்டிருக்கும் நேரத்தில் திடீரென்று பிரகாஷ் உயிர்த் தெழுவான் என்னுள். உடனே அடக்கிவிடுவேன். வெளியே வரவிடமாட்டேன். தினமும் மனதில் போராட்டத்தை அனுபவிக்க என்னால் முடியாது. குறைந்த பட்சம் என்னுள் இருக்கும் ‘ஹைட்’ (Hyde) ஆவது நிம்மதியாக வாழ்ந்தால் அதுவே போதும். 

(நிறைந்தது)

– எண்டமூரி வீரேந்திரநாத் எழுதிய ரிஷி என்ற நாவல், கௌரி கிருபானந்தன் மொழிபெயர்த்தது. 

– ரிஷி (நாவல்), முதற் பதிப்பு: 2004, அல்லயன்ஸ் கம்பெனி, சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *