ரத்தினக் கிரீடம்
கதையாசிரியர்: ஆர்.எஸ்.ஜேக்கப்
கதைத்தொகுப்பு:
ஆன்மிகக் கதை
கதைப்பதிவு: December 13, 2025
பார்வையிட்டோர்: 214
(1962ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
ஒரு குருவானவர் சொப்பனம் கண்டார். ரத்தினக் கிரீடங்கள் வரிசையாக ஓர் அறையிலிருந்தன, வயது முதிர்ந்த பெரியவர் ஒருவர் பக்கத்தில் நின்றார். குரு வானவர் பெரியவரிடம், “ஐயா, அதோ நடுவில் ஒளிர்கிறதே ஒரு கிரீடம், அது எனக்குத்தானே?” எனக்கேட்டார்.
குருவானவருடைய சபையில் பலர் குணப்பட்டி ருந்தார்கள். ஆனமாக்களை ஆதாயம் செய்வோருக்குக் கிரீடம் உண்டு என்பது குருவுக்குத்தெரிந்த காரியம்.
பெரியவர் குருவிடம் என்ன பதில் சொன்னார் தெரியுமா? “நண்பரே! அந்தக்கிரீடம் உமக்கல்ல, உமது சபையில் வயது முதிர்ந்த செவிடர் ஒருவர் இருக்கிறாரே, அவருக்குத்தான்” என்றார்.
குருவானவர் முகத்தில் கேள்விக்குறி எழுந்தது. மீண்டும் பெரியவர் பேசினார்.
“குரு நண்பரே, நீர் பீடத்தில் நின்று பிரசங்கம் பண்ணும்போதெல்லாம் பிரசங்கபீடத்தின் ஓரத்தில் உட்கார்ந்து கொண்டு, ‘ஆண்டவரே, இந்தப் பிரசங்கத்தின் மூலமாக அநேகர் குணப்படக்கிருபை செய்யும்’ என்று கண்மூடி விண்ணப்பம் செய்து கொண்டேயிருந்தாரே ஒரு செவிடர், அவருக்குத்தான் அக்கிரீடம்” என்றார் பெரீயவர்.
‘கடவுளே, இப்பிரசங்கத்தின் மூலமாக அநேக ஆத்துமாக்கள் ஆதாயப்படக் கிருபை செய்யும்” என்று காது கேட்கும் நாம் ஜெபிக்கலாமே.
“அவர்களது மன்றாட்டு கேட்டருளப்பட்டது. அவர்களது ஜெபம் ஆண்டவரின் உறைவிடமான விண்ணகத்தை எட்டிற்று” -கத். [11 நாளாகமம் 30:27]
“ஆண்டவர், நேர்மையானவர்களைக் கருணை நிறைந்த கண்களோடு நோக்குகிறார். அவர்களுடைய வேண்டுதல்களுக்கு செவிசாய்க்கிறார்.” [1 பேதுரு 3:12]
– குருமாணிக்கம் உவமைக் கதைகள் 101, முதற்பதிப்பு: ஏப்ரல் 1962, ஜெயா நிலையம், பாளையங்கோட்டை.
![]() |
பள்ளி ஆசிரியர், எழுத்தாளர், பத்திரிகை ஆசிரியர், பதிப்பாளர், சமூகசேவகர் எனப் பல திறக்குகளில் முத்திரை பதித்தவர் ஆர்.எஸ். ஜேக்கப். தூத்துக்குடியை அடுத்த ராஜாவின்கோவில் கிராமத்தில், நவம்பர் 19, 1926 அன்று, சந்தோஷம் நாடார், பொன்னம்மாள் இணையருக்கு மகனாகப் பிறந்தார். உடன்பிறந்தவர்கள் 11 பேர். தந்தை விவசாயி, பருத்தி வணிகமும் செய்தார். வணிகத்தின் பொருட்டு ஒவ்வொரு முறை வெளியூர் சென்று திரும்பும்போதும் தின்பண்டங்களோடு கூடவே நல்ல நூல்களையும் வாங்கிவருவார். தன் குழந்தைகளை…மேலும் படிக்க... |
