மெலனோமா

லாத்வியா நாடு வடக்கு ஐரோப்பாவில் உள்ளது. இதன் எல்லைகளில் வடக்கே எஸ்தோனியா, தெற்கே லித்துவேனியா, கிழக்கே ரஷ்யா மற்றும் பெலாரஸ் ஆகிய நாடுகள் உள்ளன. இதன் தலைநகரம் ரிகா.
லாத்வியா ஐஸ் ஹாக்கி விளையாட்டுக்கு பெயர் போனது. தலைநகர் ரிகாவில் உள்ள மைதானம் அரேனா ரிகா அதில் தினமோ ரிகா மற்றும் லீபாஜாஸ் அணிகளுக்கு இடையே போட்டி நடைபெற்று கொண்டு இருந்தது. அரங்கமே குதூகலத்துடன் இருந்தது. விளையாட்டை காண வந்த ரசிகர்களின் ஒலிகளில் அவ்வப்போது அரங்கமே சத்தத்தில் அதிர்ந்தது.
விளையாட்டை காண வந்தவர்களில் நாடியாவும் ஒருவள். அவள் மருத்துவம் படித்து கொண்டு இருக்கிறாள். இது அவளுக்கு இரண்டாம் ஆண்டு. விளையாட்டில் அவளுக்கு மிகுந்த ஆர்வம்.
உலகில் ஒருவர் போலவே உருவ ஒற்றுமையுடன் பலர் இருப்பார்கள் என்பார்கள். அந்த கூற்று உண்மை போலவே அவள் எழுத்தாளர் எலிஃப் ஷஃபாக், தி ஃபார்டி ரூல்ஸ் ஆஃப் லவ் என்ற புகழ் பெற்ற நூலை எழுதியவர். அவரை போலவே இருந்தாள்.
அரங்கத்தின் பெரிய தொலைகாட்சியில் ஆட்டத்தின் லைவ் காட்சிகள் ஓடி கொண்டு இருந்தது. ரசிகர்களின் உணர்ச்சிகள் விளையாட்டின் முக்கிய நிகழ்வுகள் எல்லாவற்றையும் மாறி மாறி ஓளிபரப்பி கொண்டு இருந்தனர். அதில் லீபாஜாஸ் அணியின் பயிற்சியாளர் ஹாமில்டன் அவரையும் பார்க்க முடிந்தது. அவர் எவ்வாறு ஆட்டத்தை பார்க்கிறார் என்று காட்டினார்கள். அவர் முக கவசம் அணிந்து இருந்தார். அவர் ஒரு முன்னால் ஐஸ் ஹாக்கி விளையாட்டு வீரர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் லாத்வியா நாட்டின் ஐஸ் ஹாக்கி அணியின் தலைவராக இருந்திருக்கிறார். பல போட்டிகளில் தன் நாட்டிற்கு பல வெற்றிகளை கொடுத்துள்ளார். அடுத்து, நாட்டின் அணிக்கு பயிற்சியாளராக வர வாய்ப்பிருக்கிறது. ஏதேச்சையாக நாடியா அவரை ஒளித்திரையில் பார்த்தாள். ஆட்டம் மிகவும் விருவிருப்பாக நடைபெற்று கொண்டு இருந்தது. ஆனால் அவள் மட்டும் எதையோ திரையில் கவனித்து கொண்டே இருந்தாள். அவளுக்கு ஏதோ ஒன்று தவறாக பட்டது. அது ஹாமில்டன் பின் கழுத்து ஓரத்தில் ஒரு வித்தியாசமான மச்சம் கருமை நிறத்தில் கிறுக்கல் கோடு போன்று இருந்தது. அவள் கவனித்ததில் அது வீரியம் மிக்க மெலனோமா புற்றுநோய் அறிகுறியாக பட்டது. அதை பற்றி கொஞ்சம் படித்து இருக்கிறாள். எனவே பார்த்தவுடன் அமைதியாக இருக்க முடியவில்லை. அந்த செய்தியை கைபேசியில் டைப் செய்து விட்டு அந்த செய்தியுடன் தன் செல்பியையும் சேர்த்து அவருக்கு அனுப்பினாள். அதில் முக்கியமாக உடனே மருத்துவரிடம் பரிசோதிக்க வேண்டும் என்று கேட்டு கொண்டாள்.
இந்த செய்தி அவருக்கு கிடைத்தவுடன். பல நாட்கள் நாம் அலட்சியம் செய்து விட்டோம். எனவே மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என்ற எண்ணம் வந்தது.
மருந்துவமனைக்கு சென்று பரிசோதித்ததில் அது மெலனோமா தான் என்பது உறுதியானது. இது ஒரு வகையான தோல் புற்றுநோயாகும். நல்ல வேளை ஆரம்ப கட்டத்தில் இருந்ததால் சிகிக்சையில் பூரண குணம் அடைந்தார்.
மருத்துவமனையை விட்டு வீட்டிற்கு வந்தவுடன். அவருக்கு ஒரே எண்ணம் தான் இருந்தது. நாடியாவை சந்திக்க வேண்டும் என்பது. அவளை உடனே சந்தித்தார். அவளை பார்த்தவுடன் நன்றியுடன் அணைத்து கொண்டார். அவளுக்கு பெருமையாக இருந்தது. அவளுக்கு பத்தாயிரம் ரூபாய் டாலர் பரிசாக கொடுத்தார். அவள் வேண்டாம் என்றாள். உடனே அவர் இந்த தொகை உன்னுடைய மருத்துவ படிப்புக்கு உதவியாக இருக்கும் என்று கூறி அவளிடம் கொடுத்தார்.
செய்தியாளர்கள் சந்திப்பில் ஹாமில்டன் தன் புற்றுநோய் பற்றி விளக்கினார். அதிலிருந்து எவ்வாறு மீண்டேன் என்றார். இதை நான்கு ஆண்டுகளாக அலட்சியம் செய்து விட்டேன்.
நாடியாவை பற்றி கூறும் போது, நான் தீப்பற்றி எரிய ஆரம்பித்த வீட்டில் இருந்தேன். நான் முழுவதுமாக எரிந்து விடாமல் என்னை காப்பாற்றியது நாடியா என்றார்.