கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
தின/வார இதழ்: குமுதம்
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: January 24, 2025
பார்வையிட்டோர்: 17,962 
 
 

(2018ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“என்னை உன்னால ஒண்ணும் செய்ய முடியாது. எனக்கு இருக்கும் அரசியல் பின்புலமும், பணபலமும் புகழ் பலமும் புரிய வில்லை உனக்கு, நான் சொல்றப்போ வந்து போறதுதான் உனக்கு நல்லது….! புரியுதா…?” என்றார் ரவிக்குமார் மிரட்டலாக.

சுகந்தி மெளனமாய் நின்றிருந்தாள். கண்களில் அருவி மாதிரி கண்ணீர் கொட்டிக் கொண்டே இருந்தது.

“நான் உன் சுய ரூபத்தை தோலுரித்துக் காட்டாம விடப் போவதில்லை… உன்னை உன்னை… என்ன செய்றேன்னு பார்” என்றாள் கோபமாக.

“என்ன ‘மீ… டூல’ போட்டு மானத்தை வாங்கப் போறயோ? பழியை அப்படியே உன்மேல திருப்பிப் போட்டு ஒண்ணும் இல்லாம பண்ணிடுவேன்” என்றான் கூலாக,

”’மீ. டூவுல’ போட்டாத்தானே நீ திருப்பிப் போட்டு ஒண்ணுமில்லாமப் பண்ணிடுவே… ‘மீ…டூ’வையே திருப்பிப் போட்டுட்டா?”

ஹேண்ட் பாக்கைத் திறந்து உள்ளே இருந்து துப்பாக்கியை எடுத்தாள்.

‘டூ..மீ…ல்..’ என்று அது மூன்று முறை முழங்கி முடிய, ‘மீடு’வை, டூமீல் திருப்பிப் போட்டதை புரிவதற்குள் சரிந்து கொண்டிருந்தார் ரவிக்குமார்.

– குமுதம், 14-11-2018.

வளர்கவி இயற்பெயர்: வே.ராதாகிருஷ்ணன் புனைபெயர்: வளர்கவி கோவை பிறந்த ஊர்: ஸ்ரீவில்லிபுத்தூர். வாழ்விடம்: கோவை. கல்வித்தகுதி: எம்.ஏ (வரலாறு)எம்ஏ (தமிழ்) எம்ஃபில் தமிழ்(ஈரோடு தமிழன்பன் கவிதைகளில்). குருநாதர்: தடாகம் இளமுருகு தமிழாசிரியர். பணி: பட்டதாரி ஆசிரியர் மணி மே.நி.ப கோவை - 23 ஆண்டுகள். பகுதிநேர அறிவிப்பாளர்: ஆல் இண்டியா ரேடியோ கோவை - 18 ஆண்டுகள் ஞானவாணி கோவை - 4 ஆண்டுகள். வெளியிட்ட நால்கள் - 3 1.…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *