மின்சாரத் தீப்பெட்டி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: ஆன்மிகக் கதை
கதைப்பதிவு: December 13, 2025
பார்வையிட்டோர்: 183 
 
 

(1962ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அமெரிக்கர் ஒருவர் பிரெஞ்சுத் தலைநகரான பாரீஸில் ஒரு மின்சார நெருப்புப் பெட்டி வாங்கினார். ஒரு பொத்தானை அழுத்தினால் இரவு முழுவதும் வெளிச்சம் கொடுக்கும் என்றான் கடைக்காரன். அப் படியே பரீட்சித்து, வாங்கிவிட்டார்.

அவர் அமெரிக்கா சென்றவுடன் மின்சார நெருப் புப் பெட்டியின் பட்டனை அழுத்தினார். எரியவில்லை. என்னென்னவோ செய்து பார்த்தும் பயனில்லை. பிரெஞ்சுக்காரன் ஏமாற்றிவிட்டான் என்று சொல்லிக் கோபத்தில் எறிந்து விட்டார்.

மறுநாள் காலை, அவருடைய மனைவி மூலையில் கிடந்த நெருப்புப் பெட்டியை எடுத்துப் பரிசோதிக் கையில பிரெஞ்சு மொழிப்பாஷையில் ஏதோ எழுதி இருப்பதைக்கண்டு பக்கத்துத் தெருவிலிருந்த பிரெஞ்சு வேலைக்காரப் பெண்ணிடம் படித்துக்காட்டச் சொன்னாள்.

“நீ என்னைப் பகல் முழுவதும் வெயிலில் போட்டால் நான் உனக்கு இரவு முழுவதும் வெளிச்சம் கொடுப் பேன்” என்று எழுதியிருக்கக் கண்டாள். அப்படியே செய்து இரவில் வெளிச்சம் கொடுக்கச் செய்த மனைவி யின் புத்தியைப் பாராட்டினார் கணவர்.

பகல் முழுவதும் வெளியில் கிடந்து வெளிச்சத்தை பெறும் மின்சார நெருப்புப் பெட்டியைப்போல நாமும் நீதியின் சூரியனாகிய இயேசுகிறிஸ்துவினிடத்திலிருந்து வெளிச்சத்தைப்பெற்று, உலகத்துக்குச் சுடர்களைப் போலப் பிரகாசிக்கவேண்டும். ‘நான் ஒன்றுக்கும் உதவாத குப்பை’ என்று நம்மை நாமே மூலையில் எறிந்து கொள்ளக்கூடாது. சூரிய உஷ்ணம் பட்டபின்தான் மொட்டுகள் மலர்கின்றன. உபத்திர வமாகிய நெருப்பு நம்மை நெருக்கி ஏவினால்தான் நம் இதயமும் இறைவனுக்கு நேராகப் பிரகாசிக்கும்.

ஜீவ ஊற்று உம்மிடத்தில் இருக்கிறது, உம்முடைய வெளிச்சத்திலே வெளிச்சம் காண்கிறோம்” [சங்கீதம் 36:9]

“பிரியமானவர்களே, உங்களைச் சோதிக்கும்படி உங்கள் நடுவில் பற்றியெரிகிற அக்கினியைக்குறித்து ஏதோ புதுமை யென்று திகையாமல் கிறிஸ்துவின் …. பாடுகளுக்கு நீங்கள் பங்காளிகளானதால் சந்தோஷப்படுங்கள்” [1 பேதுரு 4:12, 13]

திருமொழிகள்

ஒரு துண்டு இரும்பு விலை ஒரு பவுண். அதைக் குதிரை லாடங்களாக அடித்தால் 2 பவுண் கிரயமாகும். அதே ஒரு பவுண் இரும்பை ஊசிகளாக அடித்தால் 70 பவுண் மதிப்பாகும். அந்த ஒரு பவுண் இரும்பையே கடிகார ‘மெயின் ஸ்பிரிங்’ ஆக அடித்தால் 1000 பவுண் பெறுமதியாகும். மானிடனின் வேலைத் திறமை அரிய ஆற்றல் கொண்டது. அப்படிப்பட்ட மனிதனுக்கு வேலை இல்லை என்பதும் படித்த வாலிபர்களுக்கு வேலை கிடைக்கவில்லை என்பதும் எவ்வளவு பெரிய தற்கொலைத்தனமாகும்.

– குருமாணிக்கம் உவமைக் கதைகள் 101, முதற்பதிப்பு: ஏப்ரல் 1962, ஜெயா நிலையம், பாளையங்கோட்டை.

ஆர்.எஸ்.ஜேக்கப் பள்ளி ஆசிரியர், எழுத்தாளர், பத்திரிகை ஆசிரியர், பதிப்பாளர், சமூகசேவகர் எனப் பல திறக்குகளில் முத்திரை பதித்தவர் ஆர்.எஸ். ஜேக்கப். தூத்துக்குடியை அடுத்த ராஜாவின்கோவில் கிராமத்தில், நவம்பர் 19, 1926 அன்று, சந்தோஷம் நாடார், பொன்னம்மாள் இணையருக்கு மகனாகப் பிறந்தார். உடன்பிறந்தவர்கள் 11 பேர். தந்தை விவசாயி, பருத்தி வணிகமும் செய்தார். வணிகத்தின் பொருட்டு ஒவ்வொரு முறை வெளியூர் சென்று திரும்பும்போதும் தின்பண்டங்களோடு கூடவே நல்ல நூல்களையும் வாங்கிவருவார். தன் குழந்தைகளை…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *