மிகச்சிறந்த வசனம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: ஆன்மிகக் கதை
கதைப்பதிவு: December 13, 2025
பார்வையிட்டோர்: 195 
 
 

(1962ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

பெரியவர் ஒருவர் மிகவும் நோய்வாய்ப்பட் படுக்கையிலிருந்தார். அவரைப் பார்க்க வந்த குருவானவரிடம் “பைபிளிலிருந்து ஏதாவது படியுங்கள் குரு ஐயா” என்றார்.

குருவானவர் திருமறையைத் திறந்து, “மிகவும் அருமையான ஒரு வாக்கியத்தை வாசிக்கப்போகிறேன்” என்று சொல்லியபடித்தார்.

“என் தந்தையின் இல்லத்திலே உறைவிடங்கள் பல உள்ளன; உங்களுக்கு இடம் ஏற்பாடு செய்யப்போகிறேன்”

நோயாளியான பெரியார் படுக்கையிலிருந்தவாறே சொன்னார்.

“இந்த வசனம் இடத்தையல்லவா குறிக்கின்றது? இடம் முககியமல்லவே”

“பெரியவர் விவிலிய விற்பன்னர்” என்றறிந்த குருவானவர் அமைதியாக இருந்தார்.

“நீங்கள் வாசித்த வாக்கியத்துக்கு அடுத்த வசனத்தை வாசியுங்கள்” என்றார் நோயாளியான பெரியவர்.

“நான் போய் உங்களக்கு இடம் ஏற்பாடு செய்த பின் திரும்பிவந்து உங்களை என்னிடம் அழைத்துக் கொள்வேன்; அப்போது, நான் இருக்கும் இடத்திலேயே நீங்களும் இருப்பீர்கள்” (அருளப்பர் 14:3)

என்று குரு வாசித்து முடிக்கவும், “இதுதா மிகச் சிறந்த வசனம்; நாம் விருப்புவது இடமல்ல, இயேசுவே” என்று நோய்வாய்ப்பட்ட பெரியவர் அழுத்தம் திருத்தமாகக் கூறினார்.

“கர்த்தரோ என்றென்றைக்கும் இருப்பார்”. [சங்கீதம் 9:7]

“கிறிஸ்து எனக்கு ஜீவன்” – [பிலிப்பியர் 1:21]

– குருமாணிக்கம் உவமைக் கதைகள் 101, முதற்பதிப்பு: ஏப்ரல் 1962, ஜெயா நிலையம், பாளையங்கோட்டை.

ஆர்.எஸ்.ஜேக்கப் பள்ளி ஆசிரியர், எழுத்தாளர், பத்திரிகை ஆசிரியர், பதிப்பாளர், சமூகசேவகர் எனப் பல திறக்குகளில் முத்திரை பதித்தவர் ஆர்.எஸ். ஜேக்கப். தூத்துக்குடியை அடுத்த ராஜாவின்கோவில் கிராமத்தில், நவம்பர் 19, 1926 அன்று, சந்தோஷம் நாடார், பொன்னம்மாள் இணையருக்கு மகனாகப் பிறந்தார். உடன்பிறந்தவர்கள் 11 பேர். தந்தை விவசாயி, பருத்தி வணிகமும் செய்தார். வணிகத்தின் பொருட்டு ஒவ்வொரு முறை வெளியூர் சென்று திரும்பும்போதும் தின்பண்டங்களோடு கூடவே நல்ல நூல்களையும் வாங்கிவருவார். தன் குழந்தைகளை…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *