மனிதம் மீண்டு எழ, ஒரு மகத்தான இருப்பு

மானுடம் செழிக்க மகத்தான இருப்பே வரும் துரும்பு நிழல், காண உயிர் சோதியுமில்லை பூதம் கிளம்பினால், புரையோடும் நிழல் தான் எல்லாம்.
ஆம் இது என் நெஞ்சில் பட்ட காயங்களினூடாக நான் சொல்ல வரும் கதை மொழி, இதற்கேற்பவே இப்போது நான் தருகிற இந்தக் கதையும் கூட.
அது எந்தக் காலமென்று ஞாபகமேயில்லை. வாழ்க்கையின் மையமே விழித்தெழும் நிலையில் தான் உயிர்த்து வரும் உயிர் சோதி! இது இல்லாமல், போனால், ஜடங்களே, இந்த சடம் வெறித்த காட்டிலே தான் இன்னும் ஒரு கதை. சின்னமாமாவின் முகம் பார்த்து வளர்ந்த மாதுவிற்கு அவரது இன்னொரு முகம் கனவாகவே பட்டது. ஆம் அது கனவல்ல நிஜம் தான். பெரியக்கா அப்போது பூத்திருந்தாள். அம்மாவுக்கு கை நிறைய வேலை. அவள் ஒருகாட்சி பொம்மை என்பது எத்தனை பேருகுத் தெரியும். போகிற போக்கில் அவளுக்குப் புள்ளி குத்தவே மனிதர்கள் இருந்தார்கள். அதென்ன புள்ளி வைத்த கதை இது புள்ளியல்ல. புனிதங்களையே சாகடிக்கும் நெருப்பு என்பதை உணர்வு பூர்வமாக அறிய நேர்ந்ததனால், தான் மாது எதிலும் சரியாமல் புத்த நிஷ்டை கூடி வாழ்கிறாள். சின்னமாமா அம்மா வழி சொந்தம் பெரிய பரியாரி. சித்த மருத்துவமெல்லாம் அவருக்கு கை வந்த கலை அம்மாவுக்கு சிறு வருத்தம் வந்தாலும், முதல் ஆளாய் ஓடி வந்துஅவரே நாடி பிடித்து பார்த்து மருந்து கொடுப்பார் நீண்டு வளர்ந்த ஆஜானனுபாகுவான கம்பீர உருவம் அவருக்கு அவர் வந்தாலே வீடு நிறையும் அப்பா அவருக்கு மறுதுருவம் குட்டையான உடல் வாகுஆனால், இந்த வாழ்க்கை பந்தயத்தில் மட்டுமல்ல, பயணத்திலும் கூட, அப்பாவே முதல், ஆள் சபேசன் வாத்தியாரென்றால், ஊரே விழுந்து வணங்கும். ஏனென்றால் அவர் ஒரு மகா சத்திய புருஷன். சொல்வதையெல்லாம் வேதமாகவே நம்புபவர். ஆனால், சின்ன மாமாவை அவரோடு ஓப்பீடு செய்ய முடியாத அளவுக்கு அவர்மறுதுருவமென்பது வெளிச்சத்துக்கு வராத ஒரு சஙகதி.
மாது இன்னும் குழந்தையல்ல, அக்காவின் அமர்க்களமாக நடந்து முடிந்த திருவிழாவின் போது அவளுக்குதெரிய வந்த ஒரு கசப்பான உண்மை இது பெரியக்கா அப்போது பூத்திருந்தாள். அப்படியென்றால் என்ன? அவளைக் கல்யான தேர் ஏற்றிக் கொண்டு செல்ல கடவுள் கொடுக்கும் கொடை இது கொடையா கொடுவினையா தெரியவில்லை. எதுவானாலென்ன. இப்போது விருந்து களிக்க, வேடிக்கை பார்க்க, இது சடங்கு அதுவும் அப்பா கடன்பட்டு செய்த சடங்கு ஊரெல்லாம் விழாக் கோலம் விட்டையே மறைத்துக் கொண்டு முன்னால் பெரிய வில்லுப் பந்தல், சோடனையாக அக்கா சிம்மாசனம் போட்டு வீற்றிருக்க மணவறை வேறு, ஆயிற்று.
இதோ அக்காவின் முகம் பளிங்கிலே தோய்த்தெடுத்த உயிர் வார்ப்பாக அந்த அரியணையில் அவள் அலங்கார தேவதையாக வீற்றிருக்கும் போது மாதுமனம் குளிர்ந்து அவள் அருகிலேயே நின்றிருந்தாள்.
அந்த நிலவு முகம் பிடிபட இங்கு பல ஆட்களோடு ஒன்றாய் சின்னமாமா முகம் களை கொண்டு பிரகாசிக்க அவள் முன்னால், வந்து நிற்பது தெரிந்தது. அப்போது அவர் அக்காவைப்பார்த்து இவ்வாறு கூறினார்.
பவளம்! நீதான் என்ரை மருமகள் அதாவது என்ரை மகன் சபேசனுக்கு நீதான் சரியான சோடி. அருகில் நின்று அதைக் கேட்க நேர்ந்த புண்ணியம் மாதுவிற்கு. அக்காவின் முகத்தைப் பார்த்தாள்.அவள் வெகுவாக பூரித்துப் போயிருந்தாள்அவள் பளிங்கு முகம் காட்டி ஜொலிகும் போது, பூரணா நிலவே கஈக்கு வந்த மாதிரி, மாது வெகுவாகப் பூரித்துப்போயிருந்தாள். இது நடக்குமா? நடந்தால், அக்காஎப்படியெல்லாம் மனம் மகிழ்வாள் வானமே அவள் வசம் ஊனம் மிகுந்த இந்த உலகிலே வாழ்க்கையை கட்டி எழுப்ப இது போதும் சின்னமாமாவின் வாய் மொழி, இன்னும் வேதமாகவே ஒலித்துக் கொண்டிருந்தது. இது நடக்குமா.
தெரியவில்லை சின்னமாமாவை நம்பித் தான் இந்தப் பெரிய தேர் ஓட்டம் வீதி வழியே அல்ல. அவள் நெஞ்சு முழுவதும் பஞ்சு மெத்தையாகி, பாற் கடலில் அவள் நீந்துகிறாள் உண்மையில், அவள் கொடுத்து வைத்தவள் தான் சபேசனை மணக்க, அவள் எவ்வளவு கொடுத்து வைத்திருக்க வேண்டும் அவன் ஒரு கணித மேதை கண்டி பல்கலைக்கழகத்தில் பேராசிரியனாகவுமிருக்கிறான் இதிலே நீந்துகிற அதீத களை மட்டுமல்ல, கற்பனையும் கூட, அந்த கற்பனைத் தேரும் காட்சி மயக்கமும், எத்தனை நாளைக்கு என்று தெரியவில்லை. சின்னமாமாவின் வாய் மொழியும் , வாக்கு புனிதமும் காற்றில் பறந்தால், என்ன நடக்கும் ? நினைக்கவே குலை நடுங்கிற்று மாதுவிற்கு.
சீக்கிரமே பவளத்தின் கல்யாணத்தை நடத்திவிடுமாறு அம்மா உரிமை கோரிய போதும் அது கானல் மூழ்கிய கதையாக முடிந்து போகுமென்பதை யார் தான் கண்டார்கள். டாக்டர் சுதன் என்பவனே அதற்கு எமனாக வந்து வாய்த்தான்.
வேறொன்றுமில்லை ஒரு முறை, சபேசன் ரயில் பயணம் செய்தபோது, நடந்த கொடூரம். அப்போது சுதனும் கூட இருந்தான். தங்கை தேவியின் போட்டோ அவன் கையில் இருந்தது. அதன் காட்சி அழகிலேயே தடம் புரண்டு, சபேசன் சகதி குளித்த பின் இனி என்ன கல்யாணம் தான் கதை சின்னமாமாவின் காதுக்கு எட்டிய பின், அவருக்குஅடியோடு எல்லாம் மறந்து போனது சத்திய வேதத்திற்கு ஒரு சாட்சி புருஷனாக இருக்க வேண்டியவர் சுதனின் தங்கை அழகில் மயங்கி விட்ட மகன் சபாசனுக்காகவும் அவனுக்கு கிடைக்க இருக்கிற, பணத்திர்காகவுமே அவரின் இந்த திடீர் மனமாற்றம். இதனால், நட்டம் அவருக்கல்ல மாதுவின் கண்களுக்கு முன்னால், அம்புப் படுக்கையில் வீழ்ந்த வெறும் சதைப் பிண்டமாக அக்காவைக் காண்கையில் அவளுக்கு ஒன்றும் பேச்த் தோன்றவில்லை. பேசியே கெட்டு விட்ட ஒரு மனிதனாக இன்று சின்னமாமா வந்து சொல்லி விட்டுப்போன அந்த தீய செய்தி குறித்து மார்பில் அடித்துக் கொண்டு ஓவென்று கதறி அழ வேண்டும் போல் அவளுக்கு ஆவேசம் வந்தது, வைத்தியத் துறையில் ஒரு மகா நிபுணன் இந்த சின்னமாமா என்ற சாக்கடை மனிதனை கழுவிலேற்றி கொன்று விட வேண்டும் போல ஆவாசம் வந்தாலும் இருப்புக் கொள்ளாமல், கங்கை குளிக்க வருவது போல, அவள் நேராக, அப்பாவிடமே ஓடி வந்திருக்திருக்கிறாள்.
அந்த விபரீதமான செய்தி கேட்டதிலிருந்துஎரிக்கின்ற ஓர் அக்கினி முகம் போல சின்னமாமாவால், அந்த வீடும் அதன் மனிதர்குளும் எரிந்து சாம்பலாகி விட அப்பா என்ற தனி மத கோட்டைக்குள் அப்பா எந்த பங்கமுமில்லாமல் சுத்த சைதன்ய வெளியில் அவர் இருப்பது போல குளிர்ந்த நிலவாகவே அவர் இருப்பது கண்டு திடுக்குற்று அவள் கேட்டாள்.
அப்பா! உங்களை ஒன்று கேக்க வேண்டும் இப்ப சின்னமாமா இப்படி தடம் புரண்டு வந்து போனதால், வீடே பற்றி எரியுது. பவளக்காவுக்கு இனி மீட்பர் ஆர் ? நீங்களும் இப்படி சிரித்துக் கொண்டிருந்தால், அக்காவை ஆர் காப்பாத்துறது? சொல்லுங்கோவப்பா.
அதைக் கேட்டு விட்டு, சிரித்துக் கொண்டே, அவர் சொன்னார். எந்த நிலையிலும் சலனமுறால் இருக்க இப்படி எத்தனையோ பாரதப் போரை அதன் தாக்குதல்களை கண்டு மீண்டு வந்திருக்கிற, எனக்கு இனி கங்கை குளித்து எழ வேண்டிய அவசியம் ஒரு போதும் வராது. மாது நீ சின்னப் பிள்ளை. இன்னும் வாழ்ந்து பார்த்து அறிந்தாலொழிய இந்த அனுபவம் கூட உனக்கு புதிராய்த் தான் இருக்கும் நீ விடுபடும் போது இந்த சுத்த வெளி அன்பவம் உனக்கு வரக் கூடும் என்றார் எதிலும் பின் வாங்காத உறுதியோடு அவர் ஆச்சரியமாக நிர்மலமான அவர் கண்களையே பார்த்துக் கொண்டிருந்தாள் மாது உலகம் காலடியின் கீழ் புதைகுழி போல் போனாலும் நிலை சரியாத இந்த உறுதி எதன் பொருட்டு. சுத்த வெளி என்று சொன்னாரே அதுவா இதுவா என்று புரியாமல், இன்னும் ஒரு குழப்பவாதியாகவே அவள் முகம் இருண்டு, கறுத்துக் கிடந்தது இந்தக் கறுப்பும் வெள்ளையும் வெறும் காட்சி மயக்கமே என்று பிடிபட, அவளுக்கு ஒரு யுகமே பிடிக்கும் சுத்த வெளி ஞானம் பிடிபடாத வரை அது வெறும் கனவாகவே போய் விடும் அக் கனவோடு வாழும் வரைவாழ்க்கை முழுதும் வெறும் கானல் நீராகவே போய் விடுமென்று இப்போது அவளுக்கு நினைக்கத் தோன்றியது.
![]() |
என் எழுத்துயுகத்தின் இனியதொரு விடிவு. இருள் கனத்த நீண்ட என் எழுத்து யுகம் தாண்டி இது எனக்கு ஒரு மறு மலர்ச்சிக் காலம். இலை மறை காயாக அதில் வாழ்ந்த காலம் போய், இத்தளத்திற்கு வந்த பிறகு பல நூறு அல்ல அதிலும் கூடுதலான வாசகர்களை பெற்று, புறம் தள்ளப்பட்ட என் கதைகள்அமோக வரவேற்புப் பெற்று, கொடி கட்டிப் பறக்க நேர்ந்த பெரும் பேற்றினை, ஒரு கடவுள் வரமாகவே நான்…மேலும் படிக்க... |
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு:
கதைப்பதிவு: October 31, 2025
பார்வையிட்டோர்: 157
