மண்டூக நாயகி




(1938ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

பாதாளத்தில் வசிக்கும் மண்டூக ராஜனின் பெண் மண்டூக நாயகி அழகிய திவ்ய கன்னிகையின் ரூபமெடுத்துக் கொண்டு மோஹராஜனின் அரண்மனைத் தோட்டத்தில் புஷ்பம் பரிக்கலானாள். மோஹராஜன் அச் சமயம் உல்லாசமாய்த் தோட்டத்தில் உலரவி வந்த பொழுது அக்கன்னிகையைப் பார்த்தான். அவளுடைய ரூபலா வண்யத்தில் ஈடுபட்டான். அவளருகிற் சென்று இனிய மொழிகளை உரைக்கலானான். ஆனால் மண்டூக நாயகி அவனைப் பொருட் படுத்தாமல் நடந்து சென்று அத்தோட்டத்தில் உள்ள ஓர் சிறிய தாமரை ஓடையில் தாவிக் குதித்து மறைந்தாள். அரசன் அவள் தண்ணீரில் மூழ்கி உயிர் துறந்ததாய் எண்ணி தன் ஆட்களை வரவழைத்து ஜலத்தை இறைக்கச் செய்தான். ஓடையின் ஜலம் முழுவதும் இறைக்கப்பட்டும் சவம் அகப்படவில்லை. ஓடையின் அடி தலத்தில் பெரிய தவளைகளைப் பார்த்தான். இவைதான் தன் நாயகியை விழுங்கி இருக்கவேண்டு மென்று ஊகித்து தவளைகளை கொள்வித்தான்.
பின்பு அரண்மனை சென்ற அரசனுக்கு ஒரே பயித்திய மாகிவிட்டது. அக் கன்னிகையை நினைத்து நினைத்து உருகினான். தவளைகளை நிந்தித்தான். அவைகளா லல்லவா தனக்குக் கிட்டிய ஸுகம் எட்டாத தாயிற்று. தனக்குத் தீங்கிழைத்த தவளைகளை உலகத்திலேயே இருக்கக் கூடாதென்று தீர்மானித் தான். உடனே நாடெங்கும் தவளை வேட்டைக்கு உத்தரவு போட்டான். அரசனைப் பார்க்க வருப வர்கள் கொன்ற தவளைகளைக் காணிக்கையாகக் கொண்டு வரலானார்கள். உத்யோகம் அபேக்ஷிப்பவர் தாங்கள் ஸம்ஹாரம் செய்த தவளைகளை முன் அனுப்பிப்பின் வந்தார்கள். அதிக தவளைகளைக் கொன்றவர்க்கு மேல் உத்யோகப் தவளை வேட்டையில் பிராப்தி, சளைத்தவர்க்கு உத்யோக ஹானி இவ்விதமாகத் தவளை ப்ரளயம் பூலோகத்தில் பரவியது. பாதாள லோகத்திலுள்ள தவளை ராஜனுக்கு தெரிந்து அவன் தன் இனத்தாரின் பெரும் சேதத்தைச் சகிக்காதவனாய் இதற்குக் காரணத்தை விசாரிக்கலானான். தான் வேவுக்காரர்களை மாறுவேடம் பூண்டு பூலோகம் சென்று யறிந்துவரக் கட்டளை யிட்டான். அரசனின் நாயகி சிங்கார வனத் தின் ஓடையில் ஜலக்கிரீடை செய்யும்போது தவளைகள் அவளை விழுங்கிவிட்டதால் அரசனுக்கு தவளைகளின் பேரில் த்வேஷ மேற்பட்டதாய் தெரிய வந்தது. மண்டூக ராஜன் தன் பிரஜைகளைக் கூப்பிட்டு விசாரித்தான். “அரசனின் ஆசை நாயகியைத் தின்ற பாவி யார்” என்று தவளை மஹா ஜனங்கள் மிக்க பரிதாபத்துடன் “நாங்கள் ஒன்றும் அறியோமே. உங்களுக்குத் தெரியாதா? நம் இனத்தவர் நர சரிரத்தை உண்பதுண்டா? நாம் என்ன முதலைகளா? நீங்களே எங்களிடம் இப்படிச் சந்தேகப் படலாமா?” என்று முறையிட்டார்கள். மண்டூராஜனுக்கு ஒன்றும் புரியவில்லை. பூலோகத்தில் தவளை ப்ரளயம் கோரமாக நடக்கிறது. யானைகளுக்கு யுத்தப் பயிற்சி யெல்லாம் போய் தவளை களைக் கால்களால் நசுக்குவதே கார்யமாய்விட்டது.
இந்த வேடிக்கையை அரசன் அக்ராஸனம் வஹிக்க பெரும் ஜனக் கூட்டங்களால் பார்வை யிடப்பட்டது. தெருக்களில் கொன்ற தவனைகளைக் கோர்த்துத் தோரணங்கள் கட்டப்பட்டன. இக் கடோரச் செய்திகளைக் கேட்டுக் கேட்டு மண்டூக ராஜனின் மனம் சல்லடைக் கண்ணாகப் போய்விட்டது. அவன் இன்னது செய்வதென்று வகை தெரியாமல் ஏக்கமுற்று வியாதி பிடித்து படுக்கையில் கிடந்து புரண்டுக் கொண்டு “ஹா என்ன செய்வேன், என் இனத்தார் இப்படி மாண்டு போக நான் பார்த்துக் கொண்டிருக்கிறேனே” என்று புலம்பிய வண்ணமா யிருந்தான்.
இவ்வாறு சில நாட்கள் சென்றனை பின் தேக பீடையுற்ற தன் பிதாவை உபசரிக்க வந்துகொண்டிருந்த மண்டூக நாயகி இனித்தான் சும்மா இருக்கக்கூடாதென்று நினைத்துப் பேசலானாள்: “அப்பா, இந்த மஹாப்ரளயத்திற்குக் கஈரணம் நானே”
“ஹா நீயா அப்பெண்ணை விழுங்கினாய்? எது அப்படிச் செய்தாய் ?”
“பெண்ணையாவது தவளை விழுங்கவாவது. அந்த முட்டாள் அப்படி நினைத்துக் கொண்டான். நான் தான் அந்தப் பெண். நான் கன்னிகை வேடம் பூண்டு அவ்வரசன் தோட்டத்தில் உள்ள தாமரை ஓடை வழியாய்ச் சென்று மலர் கொய்தேன். அரசன் என்னை யதிர்ச்சையாய்ப் பார்த்து மோஹம் கொண்டு தூரத்தலானான். நான் மீண்டும் ஓடையில் பிரவேசித்துச் சொந்தமான ஸ்வரூபத்துடன் பாதாளம் வந்தடைந்தேன். இது தான் நடந்த விருத்தாந்தம்”
“குழந்தாய், இந்த மண்டூக ப்ரளயத்தை உடனே நிறுத்த வேண்டும். இது உன் மூலமாய் ஏற்பட்டதால் நீ அரசனை மணந்து கொண்டு எங்கள் வம்சத்திற்கு அபயம் அளிக்க வேண்டும். மறுபேச்சு பேசாதே. எடுத்துக்கொள் கன்னிகை குபத்தை, வா போவோம் பூலோகத்திற்கு” என்று வேண்டிக் கொண்டான்.
மண்டூக நாயகியும் இசைந்தாள்.
மண்டூகராஜன் பெண்ணை அழைத்துக்கொண்டு திவ்ய சிவிகை ஏறி பூலோகம் வந்து அரசனைப் பேட்டி கண்டான். நடந்த விருந்தாந்தத்தைத் தெரிவித்துத் தன் பெண்ணை அங்கீகரிக்கும்படியும், நிரபராதியான தவளைகளை ஹிம்ஸிக்காம விருக்கும்படியும் பிரார்த்தித்துக் கொண்டான்.
அரசன் நிவ்யலாவண்ய வதியான மண்டூக நாயகியை மணந்து கொண்டு மண்டூகங்களுக்கு ஸம்பந்தி உபசாரங்கள் செய்வித்துக் கௌரவித்தான், அன்று முதல் அவன் மண்டூக நாயகியின் முகம் கோணாமல் நடந்து கொண்டான். ஆனால் அவளை ஆறு குளம் கிணறுகளுக்கு அருகாமையில் போகவிடாமல் பாதுகாக்க வேண்டியிருந்தது. அரண்மனைக்கு ஒரு மைல் தூரத்திற்கு குளம் குட்டை கண்ணி கிணறு முதலியவற்றைத் துற்றுவிட உத்தரவிட்டான். மண்டூக நாயகிக்குத் தன் ஜாதி ஞாபகம் வராத படியும் தேங்கிய ஜலம் கண்ணில் படாதபடியும் வெகுஜாக்ரதையாய்ச் செய்துவிட்டு அவளுடன் ஐகிக போகங்களை வெகுகாலம் அனுபவித்தான் மோஹராஜன்.
– சிறுவர் பகுதி, பாரதமணி 1938.