கதையாசிரியர்:
கதை வகை: மொழிபெயர்ப்பு
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: August 11, 2025
பார்வையிட்டோர்: 1,293 
 
 

(1945ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

தன் உடல் மாசற்று இருப்பதில் அவனுக்குப் பெரிய பெருமை. எங்கேயாவது ஒரு துரும்பு முற்றத் தில் விழுந்தால், உடனே அவன் அதை அப்புறப் படுத்துவான். அண்டையிலுள்ள மரங்களின் இலை கள் முற்றத்தில் விழும்; ஆனால் அவ்வப்போது அவன் அந்த இலைகளை ஒவ்வொன்றாக எடுத்து வெளியே எறிவான். 

காலம் மாறியது. அதே முற்றம் வெறிச்சென்று இருந்தது.மாசற்ற முற்றத்தைக் கண்டும் அவனுக்கு. மகிழ்ச்சி இல்லை ! 

அவனுடைய மனத்தில் அமைதி இல்லை. முற்றத் தின் ஒரு மூலையில் அவன் ஒரு மல்லிகைக் கொடி வைத்தான். அவ்வளவு மூலைதானே! போனால போகிறது! பணக்காரன் அவ்வளவு பிச்சையாவது இடவேண்டாமா?’ என்று தன் மனத்துக்குச் சமா தானம் சொன்னான். 

மல்லிகைக் கொடியில் மொட்டுகள் தோன்றின. அவன் அவற்றைத் தூரத்திலிருந்தே பார்ப்பான். மல்லிகை மலர்ந்தது. இப்போது அவனால் தூரத்தில் இருக்க முடியவில்லை. அருகில் சென்று அழகிய இனிய மலர்களைக் கையில் எடுத்துக்கொண்டான். தன்னையும் அறியாமலே அவன் முற்றத்தைப் புறக் கணித்தான். 

நறுமணங் கமழ்ந்த அவன் உள்ளத்தில், அண் டையிலுள்ள மரங்களிலிருந்து முற்றத்தில் விழும் இலைகளின் சத்தம் படவே இல்லை. 

– அரும்பு (உருவகக் கதைகள்), மூலம்: வி.ஸ.காண்டேகர், மராட்டியிலிருந்து மொழிபெயர்ப்பு: கா.ஸ்ரீ.ஸ்ரீ., முதற் பதிப்பு: 1945, கலைமகள் காரியாலயம், சென்னை.

கா.ஸ்ரீ.ஸ்ரீ. கா.ஸ்ரீ.ஸ்ரீ (காஞ்சீபுரம் ஸ்ரீரங்காச்சாரியார் ஸ்ரீனிவாசாச்சாரியார்) (டிசம்பர் 15, 1913 - ஜூலை 28, 1999) தமிழ் எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், இதழாளர். முதன்மையாக வி.எஸ்.காண்டேகரின் நூல்களை மொழியாக்கம் செய்தமைக்காக அறியப்படுபவர். நூல்கள் பதினந்து நாவல்கள், ஏறத்தாழ முன்னூறு சிறுகதைகள், பதினெட்டு திரைக்கதைகள், பதினெட்டு கட்டுரைத் தொகுதிகள், ஆறு நீதிக்கதைத் தொகுதிகள், ஐந்து இலக்கியத் திறனாய்வுகள், ஒன்பது ஆராய்ச்சிக் கட்டுரைகள், மூன்று சொற்பொழிவுத் தொகுப்புகள், இரண்டு சுயசரிதை நூல்கள் கா.ஸ்ரீ.ஸ்ரீயால் எழுதப்பட்டவை. கா.ஸ்ரீ.ஸ்ரீ…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *