ப.ஜொ.பா






ப.ஜொ.பா—யின் தலைவர் கன்னத்தில் கைவைத்தபடி இருந்தார்.
”அண்ணே ! கவலையை விடுங்க!” என்றான் ஆபிஸ் பையன்.
”எப்படிடா! விடமுடியும்…. ஒண்ணா….ரெண்டா….. ஆயிரக்கணக்குல போச்சே!” தேம்பி..தேம்பி அழுதார்..
”எண்ணன்ணே! சொல்றீங்க ? ரேஸ்ல விட்டீங்களா? இல்லே ரம்மி சூதாட்டமா? இல்லே அவ்வளவும் ஓட்டுக்களா?”
”டேய் ! பணமும்….ஓட்டும் போனா கூட இந்த கவலைப்படமாட்டேன்டா! அவ்வளுவும் மிஸ்கள்டா!”
”என்னது ? மிஸ்களா? எல்லோரும் டீச்சர்களா? ரொம்ப அழகா இருப்பாங்களா?”
”டேய் மிஸ் இல்லேடா எல்லா வாலிப பொண்ணுங்க. நம்ம பார்ட்டி ஆபிஸ் மூலதனமே அவங்கதாண்டா! என்னம்மா ஆபிஸ் நிறைந்து இருக்கும். காலை எட்டு மணிக்கே கூட்டமா வந்துடுவாங்க இள பசங்க … அம்புட்டு பேரும் காணாம போயிட்டாங்கடா!”
“அண்ணே! திடிர்ன்னு மூலதனம் அது இதுன்னு மார்க்ஸியம் பேசறீங்களே! அந்த கட்சியில கூப்பிட்டாங்களா?”
”போடா! வெண்ணை!”
”அண்ணே! வெண்ணை-ன்னு சொன்ன பிறகுதான் …ஞாபகம் வருது”
பா.ம.கல்லூரியில் ஒரு பொண்ணு வெண்ணை மாதிரி இருந்திச்சு. அதைப் பார்த்து என் பிரண்ட் ஜொல் விட்டான். சும்மா தமாசுக்கு கிண்டல் பண்ணான்.
அந்த பொண்ணு ஈவ் டீசிங்- கம்ப்ளையிண்ட் கொடுத்திடுச்சு அண்ணே!
போலிஸ் அந்த பையனை முட்டிக்கு முட்டி தட்டி ஓரமா ஒக்கார வைச்சிட்டாங்க… இப்போ வீட்டுல வெட்டியா கிடக்கிறான்.
”டேய்! முட்டிக்கு முட்டிக்கு தட்டின போலிஸ்- ஐ சொல்ல சொல்லு… அவரோட சின்ன வயசுல ஜொல்லு விடல கிண்டல் பண்ணலேன்னு”
சொல்ல மாட்டாரு… அவரும் அதைத் தாண்டித்தானே வந்திருப்பாரு. இப்போ பெரிசா முட்டிக்கு முட்டி தட்டுறாரு.
”சங்க காலத்திலேயே ஈவ் டீசிங் சாதாரணம்டா… உதாரணத்துக்கு நம்ம ஔவையாரை ஒரு புலவர் ஈவ் டீசிங் பண்ணினார். உடனே அவங்க அரண்மனைக் காவலாளியை தேடிப்போய் புகார் கொடுக்கலை!
அந்த புலவர் எப்படி ஈவ் டீசிங் பண்ணினார்.
”ஒரு காலடி நாலிலைப் பந்தலடி ” என்ற கிண்டல் தொணியில் கேலி செய்த இந்த பாட்டுக்கு ”திருவிளையாடல் படத்துல போட்டி பாடலுக்கு … நம்ம சிவாஜி. பாணபத்ரர் கதாபாத்திரத்துல எடுத்து விடுவாரு பாரு ஒரு பாட்டு அது மாதிரி எடுத்து விட்டாங்க! அப்புறம் ”இந்த பெண் கிட்டே வைச்சிகிட்டா இருக்கிற மரியாதையும் காணாம போயிடும்-ன்னு ஓட்டம் விட்டார். புலவர்.
அப்படி என்ன பாட்டு எடுத்து விட்டாங்க ஔவையார்.
எட்டேகால் லட்சணமே எமனேறும் பரியே
மட்டில் பெரியம்மை வாகனமே – முட்டமேல்
கூரையில்லா வீடே குலராமன் தூதுவனே
ஆரையடா சொன்னாய் அது—
அவரு ஒரு ”அடி”ன்னு தான் சொன்னாரு… ஔவையாரோ
”டேய் அவலட்சணமே ! எருமையே ! குட்டிச் சுவரே! குரங்கே! ஒரு ”அடியே”க்கு எத்தனைப் பட்டப் பெயர்கள் பார் அப்படி இருக்கணும்! ”செல்லுல டிங்..டிங்.டிங்” கம்ப்ளையிண்ட் பண்றதெல்லாம் ஒரு சாதனையாடா?”
”டேய் இது மாதிரி கம்ப்ளையிண்ட் பண்ணி பண்ணி ”நம்ம பார்ட்டி ஆபிஸே காலி பண்ண வைச்சிட்டாங்கடா அந்த ப.ம.கல்லூரி நிர்வாகம்.
இப்ப புதுசா இடம் பார்த்து அபிஸ் திறக்கணும். அதுவும் நம்ம பார்ட்டியோட கொள்கைக்கு ஆதரவா இருக்கணும்.
”அண்ணே! நம்ம பார்ட்டியோட கொள்கை என்ன அண்ணே!?”
”கேட்டியே ஒரு கேள்வி…. ”சந்தோஷமா பொண்ணுங்களை சைட் அடிச்சு ஜொல்லு விடணும்டா! அம்புட்டேதான்”
“அண்ணே! நம்ம ஊரு மேற்கால புதுசா ஒரு காலேஜ் திறந்திருக்காங்களாம். அது ஒன்லி பார் கேர்ள்ஸ்ஸாம்!
“டேய்! வண்டியை எடுடா!”
“அண்ணே எதுக்குண்ணே ?
“அந்த காலேஜ் எதிர்க்க நம்ம ப.ஜொ.பா. ஆபிஸ் திறக்கணும்டா” புறப்பட்டார் பயங்கர ஜொள்ளு பார்ட்டியின் இளம் தலைவர் ஜொ. கண்ணன்.
![]() |
இயற் பெயர்: கே.அசோகன் (அசோகன் குப்புசாமி)தந்தை பெயர்: த.குப்புசாமிபிறந்த நாள்: 13 Decemberதொழில்: தமிழக அரசு பணி (2013 பணி நிறைவு)நிரந்தர இருப்பிடம்: மனை எண்-சி-374 என்.ஜி.ஜி.ஓ நகர், சேலை, திருவள்ளுர் 631 203தற்காலிக முகவரி: சி-20 சம்பக், ஐ.டி.சி குடியிருப்பு, சாரபாக்கா கிராமம், கம்மம் மாவட்டம், தெலுங்கானா மாநிலம் பின் -507 208தொடர்பு எண்: 9047896065மனைவி பெயர்: அ. சகுந்தலை –குடும்ப தலைவிமகன் பெயர்: அ.ராஜ்மோகன் இலக்கிய பணி:தாய்மண்…மேலும் படிக்க... |