போஸ்ட் மார்டம்…!!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: கிரைம்
கதைப்பதிவு: July 21, 2022
பார்வையிட்டோர்: 24,292 
 
 

பிணவறையின் கட்டிலில் சுகந்தி சலனமற்றுக் கிடந்தாள். அருகில் கடைநிலை ஊழியன் முனியன் முழு போதையில் கண்கள் சிவக்க நின்றிருந்தான்.

அவனுக்கு இரண்டடி தள்ளி கையில் குறிப்பேட்டுடன் பே னாவும் கையுமாக டாக்டர் குணா இருந்தான்.

“ம்ம்… ஆரம்பி முனியா..?” குணா அவனுக்கு உத்தரவிட்டான்.

அதற்காகவே காத்திருந்த முனியன் அவள் மேலிருந்த அத்தனைத் துணிகளையும் வழித்து எடுத்து கீழே போட்டான்.

பளிச்சென்ற நிறத்தில் பிறந்த மேனியாக இருந்த அந்த உடலை இறந்த உடல் என்பதையும் மறந்து வெறித்துப் பார்த்தான் குணா.

எத்தனையோ உடல்களை அறுத்துக் கூறு போட்ட முனியனுக்கே அந்த உடலை அப்படிப் பார்க்கையில் கொஞ்சம் தடுமாற்றமாகத்தானிருந்தது.

குணா…. உடலை அங்குலம் அங்குலமாகப் பார்வையிட்டான். ஒன்று விடாமல் அங்க அடையாளங்கள் அத்தனையையும் குறிப்பேட்டில் குறித்துக் கொண்டான்.

அடுத்து முனியனைப் பார்த்து…..

“இரைப்பைப் பார்க்கனும்.” என்றான்.

அந்த வெண்ணிற வயிற்றில் கத்தி வைத்து நேர் கோடாக இழுத்து மாங்காய்ப் பிளப்பாகப் பிளந்தான் முனியன்.

குணா குறிப்பெடுத்துக் கொண்டான்.

“கர்ப்பப்பை..”உத்தரவிட அதுவும் வெட்டி வெளியில் எடுக்கப் பட்டது.

கையோடு வந்த ஜவ்வும் அறுத்து உதற….. பின்னர் அதுவும் கிழிக்கப் பட நான்கு மாத கரு இருந்தது.

அப்புறம் தலையைக் குறி வத்து சுத்தியலால் பக்கவாட்டில் பலமாகத் தட்டினான் முனியன்.

முடியோடு கபாலம்”ஆ.’வென்று திறந்து மூளையைக் காட்டியது. ஆராய்ந்தான் குணா.

அவைகளையும் கவனமாக ஆராய்ந்து குறித்துக்கொண்டான்.

முகம் திருப்தியாக….

“போதும் முனியா…!” என்ற குணா அப்படியே நாற்காலியில் அமர்ந்து ஆய்வுகள் எழுதத் தொடங்கினான்.

முனியன் துரிதமாக செயலில் இறங்கினான். தைக்க வேண்டியவைகளைத் தைத்தான். முழு உடலாக்கி வேலையை முடித்தான்.

அதற்குள் உடற்கூராய்வை எழுதி முடித்த குணா… முடித்த குணா உடலை உற்றுப் பார்த்தான்.

“காதல் என்கிற பேர்ல கள்ளத்தனம் பண்ணியாச்சு. கலைக்கச் சொன்னேன். கலைக்கலை. முரண்டு பண்ணினே. முரண்டு பண்ணாம இருந்திருந்தா நான் உன் கழுத்தை நெரிச்சி கொல்ல வேண்டிய அவசியம் இருந்திருக்காது. என் அதிர்ஷ்டம் பார். கொன்ன உடம்புக்கு நானே போஸ்ட்மார்டம் செய்யும் வேலை.’தப்பு செய்துவிட்டு பாவம் ! தற்கொலை செய்திருக்காள்’ன்னு எழுதி தப்பிச்சுட்டேன். !” என்று மனசுக்குள் சொல்லி எழுந்த குணா இரண்டடி எடுத்து வைத்தான். மூன்றாவது அடி எடுத்து வைக்க… சட்டென்று சாய்ந்து மடேரென்று மல்லாக்க விழுந்தான். பின் பக்க தலையில் பலமான அடி !!.

தலை கிறுகிறுக்க..

‘எது சறுக்கியது..?’சிரமப்பட்டு பார்த்தான். கர்ப்பப்பை ஜவ்வு இவனைப் பார்த்து சிரித்தது.

அடுத்த வினாடி கண்கள் சொருக…

“ஐயோ டாக்டர் !” முனியன் அலறினான்.

Karai adalarasan என்னைப் பற்றி... இயற்பெயர் : இராம. நடராஜன்தந்தை : கோ. இராமசாமிதாய் : அண்ணத்தம்மாள்.பிறப்பு : 03 - 1955படிப்பு : பி.எஸ்.சி ( கணிதம் )வேலை : புத்தகம் கட்டுநர், அரசு கிளை அச்சகம் காரைக்கால்.( ஓய்வு )மனைவி : செந்தமிழ்ச்செல்விமகன்கள் : நிர்மல், விமல்முகவரி : 7, பிடாரி கோயில் வீதி,கோட்டுச்சேரி 609 609காரைக்கால்.கைபேசி : 9786591245 இலக்கிய மற்றும் எழுத்துப்பணி 1983ல் தொடங்கி 2017.....இன்றுவரை தொடர்கிறது...…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *