பெண்ணாக வந்ததொரு மாயப் பிசாசு

நோய் வாய்ப்ப்ட்டு நூலாகிப் போன அம்மா ஒரு புறம் அவள் தாய்நாட்டின் திருமகள் அவளின் கடின உழைப்பும் மாறாத அன்பும் தான் இன்று விசாகனை இப்படிக் கரை ஏற்றி சொர்க்கத்தில், கொண்டு வந்து நிறுத்தி மகிழ்ச்சி கொண்டாட வைத்திருக்கிறது.
சொர்க்கமென்றால், அப்படி ஒரு சொர்க்கம் மிகப் பெரிய பணக்கார நாடு. வல்லரசுகளெல்லாம் அதன் முன் கைகட்டி சேவகம் செய்கிற நிலை தான் இன்னொரு புறம் யுத்த அழு குரல் கேட்கிறதென்றால், அதற்கும் இதுவே காரணம் இதன் தன் முனைப்பு அகங்காரத்தின் முன் உலகமே சாம்பலாகிப் போனாலும், தட்டிக் கேட்க நாதியற்றுப் போன நிலையில் விசாகன் அங்கு வந்து சேர்ந்தது வெறும் கனவாகவே பட்டது எனினும் அது கனவல்ல நிஜம் தான் அம்மா தன் தூய அன்பினால், ஆசீர்வதித்து அவனுக்கு அள்ளிக் கொடுத்த கொடை, இன்று அவன் சாதாரண ஒரு ஆளில்லை என்ஞினியர் என்று பொற் கிரீடமே அவன் தலையில் அதனால், தான் பிறந்த மண்ணை துச்சமாக, உதறித் தள்ளி விட்டு இன்று அவன் அமெரிக்கா வந்து சேர்ந்திருக்கிறான் அடுத்து என்ன? கல்யாணம் தான் காட்சி மயக்கம் தான் அதில்லாமல், ஒரு வாழ்க்கையா?உடம்பு எடுத்ததே அதற்குத் தான். ஒரு சாட்சி புருஷனாக, இருந்து விட்டால் அதன் தேவை கூட இல்லாமல் போய் விடும் . அதைப்பற்றிய அடிப்படை அறிவு கூட அவனுக்கில்லை. புத்தகம் படித்தே பாஸாகி வந்த அவனைப் போய் அப்படி நினைக்க முடியுமா?அதற்கான தகுதி, உயிர்ப் பிரக்ஞையாக வருகிற பூரண சமய அறிவு இருந்தாலொழிய அது வெறும் கானல், நீர் தான் ஆகவே அவன் ஒரு சாட்சி புருஷனில்லை சாதாரண மனிதன் தான் ஆனால் பெரிய என்ஞினியர் அதிலும் அமெரிக்கா என்ற சொர்க்கதில் வாழ நேர்ந்த பெரும் பாக்கியசாலி.
இத்தகைய அவன் தகுதிக்கேற்ற பெண்ணைத் தேர்ந்தெடுக்கிறதென்றால், அதுவே பெரும் சவால் தான் இதை முன்னின்று செய்து, முடிக்க அம்மாவாலும் முடியாது வாதம் வந்து, உடல் இயக்கமே கெட்டு விட்ட நிலையில் அவள், வெறும் நடைப் பிணம் தான் . யுத்த காலத்தில, போக்குவரத்தே, ஸ்தம்பித்து விட்ட நிலையில், அவன் அப்பாவும் அம்மாவுமாக யாழ்ப்பாணத்திலிருந்து, ரிக்ஷா ஏறி, காட்டு வழியாக கஷ்டப்பட்டு, கொழும்பு வந்து சேர்ந்ததே ஒரு தனிக் கதை. அவர்களின் அதீத பிள்ளைப் பாசமே, அவர்களை அப்படி இழுத்து வந்திருக்கிறது . ஆனால் இவர்கள் அதைக் கருத்தில் கொண்டதாகத் தெரியவில்லை. ஆக இரு ஆண்புதல்வன் தான் இவர்களுக்கு விசாகனின் அண்ணா கங்கன் இயக்கத்திற்குப் போய் தலைமறைவாக இருந்து விட்டு, இந்திய ராணுவத்தில் கெடுபிடிகளுக்கு அஞ்சி, இப்போது, கனடாவில் வந்து வாழ்கிறான் அவன் தம்பி விசாகன் நன்றாகப் படித்திருந்த, போதிலும் , வெளிநாட்டு சுக போக வாழ்க்கையை விரும்பி அப்பா அம்மாவைஅவர்களின் மிகப் பெரிய பாசப் பெருங்கடலில் நீந்திக் கரை ஏறுவதைவிட்டு அமெரிக்க மண்ணில் வந்து வாழத் தொடங்கி, இன்னும் ஒருவருடம் கூட பூர்த்தியாவில்லை, அதற்குள் கல்யாண ஆசை வந்து விட கொழும்பிலிருந்து அம்மா போன் எடுத்தால் தினமும் இதைப்பற்றி, அவனின் கேள்விக் கணைகள் அடுக்கடுக்காகாக வந்து சேரும் கேட்டுக் கோண்டிருந்து விட்டு அவள் பொறுமையோடு பதில் அளிப்பாள்.
பொறு விசாகன் இப்ப என்ன, உனக்கு இன்னும் முப்பது வயசு கூட ஆகவில்லை. உன்ரை அண்ணனுக்கு பெண் பார்த்ததே அப்பா களைச்சுப் போனார். இப்ப உன்ரை கல்யாணத்தை நினைச்சுத் தான் மனுஷன் நாயாய் அலைகிறார்.
அதைக் கேட்டு விட்டு, அவன் சொன்னான் அது உங்கடை கடமை. எனக்கும் வயசு ஏறிக் கொண்டிர்க்கு, அதுவும் அமெரிக்காவிலை வந்து வாழ தகுதியான ஒரு பெட்டை தான் எனக்கு வேணும் என்றான் அவன் கொஞ்சமும் வருத்தப்படாமல், இளமை ரத்தம் சூடேறி.
அதைக் கேட்டு விட்டு அக்கரையிலிருந்து அவன் அம்மா சிவமணி, பெருமூச்செறிந்து விட்டு துக்கத்திலாழ்ந்தாள்< ஒன்றும் பேச வரவில்லை தனக்குள்ளே பேசித் தீர்க்கும் அவள் குரலைக் கேட்க முடியாமல், போன மறுதுருவ வாழ்க்கை அவனுக்கு ஆனால் அவள் என்ன நினைத்தாள்? இவனை வளர்க்க மட்டுமல்ல பெறவும் நான் பட்ட கஷ்டமும் வலியும் எனக்குத் தான் தெரியும் . அந்த நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவள் பதில் வராமல், போகவே சற்று சூடாக குரலை உயர்த்திக் கொண்டு அவன் கேட்டான்.
என்னமா யோசிக்கிறியள்?
ஒன்றுமில்லை. வந்த பாதையை திரும்பிப் பார்த்தேன் சொன்னாலும் உனக்கு விளங்காது அதை விடு உனக்கு நல்ல வடிவான பெட்டையைத் தான் பாக்க வேண்ம் அதை விட குணம் முக்கியமல்ல இப்ப அப்ப்டியொன்றைத் தேடுறது கஷ்டம் தான்
ஏனம்மா அப்படிச் சொல்லுறியள்?
முந்தி எங்கடை நிலைமை வேறு வெளி உலகமே பிடிபடேலை அப்பா அம்மா தான் தெய்வம் என்றல்லோ இருந்தம் இப்ப அந்த நினைப்பு வெகுவாக மாறிப் போட்டுது வடிவாயிருந்தாலும் குணத்தைஎடை போட்டு பார்க்க முடியாது. பழகினால், தான் அது பிடிபடும். அது தான் என்ரை யோசனை கவலை எல்லாம் அதுவும் நீ அமெரிக்கா மாப்பிள்ளை.
கவலையை விடுங்கோவம்மா எனக்கு அதிர்ஷ்டம் இருந்தால், எல்லாம் நல்லபடி நடக்கும் .
இது நடந்த முடிந்த மறுநாளே, அக்ரையிலிருந்து அப்பா பேசினார்.
விசாகா! உனக்கு ஒரு பெண் கிடைச்சிருக்கு திறைசேரியில் உயர் பதவியிலிருக்கும் எங்கடை ஊர் ஆள் சுரேந்திரனை உனக்குத் தெரியுமல்லே. அவரின், மூத்த மகள் ஷாலினி தான் , இப்ப உனக்காக நாங்கள் பார்த்திருக்கிற பொம்பிளை நல்ல வடிவு பதிவுத் தபாலிலை அவவின்ரை படமும் போன் நம்பரும் அனுப்பி வைக்கிறன். பிடிச்சால், நீ அவவோடை கதைச்சுப் பாக்காலாம்.
அதைக் கேட்கநேர்ந்ததன் பலன் பூரண நிலவு குளித்து எழும் சந்தோஷம் அவனுக்கு. அழகு மாயை அவனையும் சூழ்ந்து கொண்டது அது தான் வாழ்க்கை என்று தோன்றியது.
அவன் இப்போது இருப்பது சொர்க்கமென்றால், அதற்கும் மேலே. கண்ணைத் திறந்து பார்த்தால், அந்த ஆகாய வெளி உலகம் தான் அழகுப் பிரக்ஞையாய் வந்து கண்ணை மயக்கிற்று ஒரு உலக அழகியே அவன் காலடிக்கு வந்து சேர்வதாய் கனவு வேறு கண்டிருக்கிறான். ஆம் இது அவனுடைய கனவுலகம் மட்டுமல்ல. காட்சி உலகமும் அது வெறும் பொய் என்று தெரியாத வரை இப்படித் தான் நடக்கும்.
ஒரு பொய் அவன் கையில் வந்து சேர்ந்திருக்கிறது; அப்பாவின் கடித உறைக்குள் அந்த தங்கப் பதுமை முகம் சிரித்துக் கொண்டிருந்தாள். சந்தேகமேயில்லை உலக அழகி ஐஸ்வர்யா ராய் போல் இன்னொரு பிம்பம் அவனுக்கு பெரும் கொண்டாட்டமாக இருந்தது. அப் படத்தைக் கையில் வைத்துக் கொண்டு சுழன்று சுழன்று ஆடினான் அவன் ஆடிய ஆட்டம் அப்படி, ஆடிய ஆட்டத்தில் சிவனே தோற்றுப் போனார் தோற்றது, சிவனிடமில்லை கேவலம் ஒரு பெண்ணிடம் அவளோடு கதைத்தால் தான் வெறிதீருமென்று பட்டது என்ன வெறி? ஆடிக் களைக்கிற வெறி தான் அதுவும் மனிதரோடு ஆடுகிற ஆட்டம் மண்ணுக்குள் போகத்தான் அவனுக்குத் தெரியாது அழகு எப்படி அழிக்குமென்று அந்த அழகைதேர் ஏற்றி உலா கொண்டு வரும் களிப்பு மிகுதியால் போனை உடனேயே எடுத்து வாட்ஸஅப்ல அவள் நம்பரைஅடித்தான் வீடியோவில் அவள் முகத்தைத் தரிசித்த போது அவனுக்கு நிலை கொள்ளவில்லை. ஏற்கெனவே அவனிடம் அப்பா சொல்லியிருந்தார் ஷாலினி தற்சமயம் லண்டனில் தன் சித்தியடன் வாழ்ந்து வருவ்தாக எங்கேயிருந்தாலென்ன சொர்க்கம் அவன் காலடியில்.
அப்போது மறுமுனையிலிருந்து அவள் பூவாய் உதிர்வது போல் பேசும் போது உணர்ச்சிவசப்பட்டு அவன் கேட்டுக் கொண்டிருக்க ஒரு வன்முறை பாடம் போதிப்பது, குரலில் சூடேறி, லண்டனிலிருந்து அவள் சொன்னாள்.
எனக்குக் கோபம் வந்தால் பிளேட்டை எடுத்துக் கையை வெட்டிப் போடுவன்.
அவனுக்கு அதைக் கேட்க சர்வாங்கமும் பதறி குலை நடுங்கிற்று . என்ன சொல்கிறாள் இவள் பிளேட் எடுத்து வெட்டுமளவுக்கு, நான் செய்த குற்றம் தான் என்ன? பெரிய மேனகை என்ற நினைப்பு அவளுக்கு அழகு வெறி வந்தால், அன்பு என்ன எல்லாமே மறந்து போகும் இதிலே பட்டுப் போன பெரும் விருட்சம் அன்பு நெறியல்லே அந்த அழகான வாழ்க்கை கூட அறியாமல், இது என்ன பேச்சு?அவனுக்கு தலை சுற்றியது. கோபம் கோபமாக வந்தது அப்பா மீதும், ஏன் இந்த அடங்காத உலகத்தின் மீதும், ஒரு ராட்சதியை என் கண்முன்னால் வந்து நிறுத்திய, அப்பாவா இதற்குக் குற்றவாளி. குற்றச் செயல்களே எங்கும் மலிந்து இகக்க, விபரீத புத்தி வந்து ஓர் அழகியைத் தேடினது மட்டுமல்ல கூட நினைச்சேனே என்ரை புத்தியாத் தான் செருப்பால் அடிக்க வேணும் இதை ஆரிட்டை போய், பேசி, என் ஆவேசத்தை தீர்ப்பது ? அம்மா தான் சரியான ஆள்.
அம்மா! அம்மா! அவன் அமெரிக்கவிலிருந்து கத்தித் தொலைக்க.
அக்கரையிலிருந்து அம்மா திடுக்கிட்டு விழித்தாள் வாதம் வந்துகால் என்ன கையும் வேலைசெயாது எனக்கு. போனையும் தூக்க முடியேலை எனக்கு எனினும் ஒரு நப்பாசைபேசுவது ஆசை மகனல்லோ. இன்று என்ன ? அவன் குரல் இப்படிக் காட்டுக் கத்தலாய் கேட்குது? அழ வேறு செய்கிறான்.
என்ன விசாகா? பேசுறது? நீதானா?அதுவும் இன்னும் சரியாய் விடியக் கூட இல்லை.
ஓமம்மா நான் தான் கதைக்கிறன் அப்பாவிலை எனக்குக் கோபம் கோபமாய் வருகுது.
என்ன சொல்கிற்றாய்?
ஒரு சனியனையல்லே என்ரை தலையிலை கட்டப் பாத்தார்.
என்ன சொல்கிற்றாய் தம்பி? அப்பா உனக்கு நல்லது தானே செய்வார்.
கிழிஞ்சிது. அழகைப் பாத்திட்டா அப்படியே மயங்கி விடுறாதா ?
நீ என்ன சொல்கிறாய்?
அப்பா பாத்து வைச்ச அந்த சனியனோடை கதைச்சனான் அது பிளேட் எடுத்து என்னை வெட்டிபோடுமாம் நல்ல வேளை. அதன் கையிலை மாட்டாமல், நான் உயிர் பிழைச்சதுக்கு கடவுளுக்குத் தான் நன்றி சொல்ல வேணும். இனி எனக்குக் கல்யாணாமே வேண்டாம். இந்த ராட்சதிகளிடம் அம்பிட்டு சாகிறதை விட நான் சாமியாராகவே இருந்திட்டு போறன்.
பொறு தம்பி அவசரப்படாதை. எதோ பிழையாய் நடந்து போச்சு. இனி அப்படி நடக்காது.
அதுக்கு என்ன உத்தரவாதமிருக்கு ? அழகைப் பாத்து நான் ஏமாந்தது போதும்
அதைக் கேட்டு அம்மாவுக்கு பெரும் கவலையே வந்தது. ஷாலினி படத்திலே நன்றாகத் தானே இருந்தாள் இப்படிவிஷத்தைக் கக்குவாளென்று ஆருக்குத் தெரியும்?, இனி இதை மேலும் விசாரிக்கப் போய் ஒன்றும் ஆகப் போறதில்லை . அழகை பாத்து மயங்காமல், முதலிலை மனதைத் தான் தோண்டிப் பாக்க வேணும் பூதம் வந்தால் மறந்து விடுவமென்று அவள் நினைத்துக் கொண்டிருக்கும் போதே அக்கரையிலிருந்து ஒரு வேதாந்தி போல் அவன் குரல் கேட்டது.
அம்மா! ஆளைப் பாத்து மயங்கினால் இது தான் நடக்கும். பூதம் தான் வரும் பிளேட் எடுத்து கீறு மளவுக்கு, அப்படி என்ன கோபம் என் மீது? சொல்லுங்கோவம்மா
இடையில் அவனை இடை மறித்து அப்பா சொன்னார்.
என்னை மன்னிச்சிடு விசாகா, நேற்று ஷாலினியின் அப்பா என்னோடு கதைச்சவர், அவள் ஆரையோ காதலிக்கிறாளாம், அது தெரியாமல் உங்கடை மகனுக்கு முடிச்சுப் போட நினைச்சு இப்ப பாவத்தை சுமக்கிறன்.
சரி விடுங்கோ! நான் அவளை மன்னிச்சு விடுறன். ஓர் அற்ப சங்கதிக்காக, வீண் ஆசாபாசங்களுக்காக அதுவும் ஒரு பெண்ணுக்கு வெறி வந்தால், என்ன நடக்கும். அது தான் நான் பாத்தது கேட்டது எல்லாம் ஒரு நொடியிலை இதை மாற்றி விடலாம். அன்பு வந்தால் ஒழிய இதை மாற்றுவது கடினம். வன்முறையே வாழ்க்கையானால், நரகம் தான். நாம் சொர்ர்கத்தையே தேடிக் கொண்டிருந்தால், இது தான் நடக்கும். பூதம் தான் வரும் என்றான் அவன் புரியாத பாஷையில் , பூதம் என்றுஅவன் சொல்கிற அந்த பெரிய விடயம் அவர் அறிவுக்கு எட்டாத மறை பொருளாகவே இன்று வரை தொடர்கிறது.
![]() |
என் எழுத்துயுகத்தின் இனியதொரு விடிவு. இருள் கனத்த நீண்ட என் எழுத்து யுகம் தாண்டி இது எனக்கு ஒரு மறு மலர்ச்சிக் காலம். இலை மறை காயாக அதில் வாழ்ந்த காலம் போய், இத்தளத்திற்கு வந்த பிறகு பல நூறு அல்ல அதிலும் கூடுதலான வாசகர்களை பெற்று, புறம் தள்ளப்பட்ட என் கதைகள்அமோக வரவேற்புப் பெற்று, கொடி கட்டிப் பறக்க நேர்ந்த பெரும் பேற்றினை, ஒரு கடவுள் வரமாகவே நான்…மேலும் படிக்க... |
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு:
கதைப்பதிவு: November 20, 2025
பார்வையிட்டோர்: 57
