கதை வகை: ஒரு பக்கக் கதை
தின/வார இதழ்: குமுதம்
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 5,517 
 
 

”அண்ணா, பூ வாங்கிட்டுப் போண்ணா…ரெண்டு முழம் பத்து ரூபாதான்…”அலுவலகத்தின் அருகே இருக்கும் பூக்காரி தினமும் கூப்பிடுவாள்.

இந்த மாதம் என் மனைவி பத்து நாட்கள் அம்மா வீட்டுக்குப் போய் விட்டாள். நான் அலுவலகத்திற்கு வந்து கொண்டுதான் இருந்தேன். ஆனால், ஒரு நாளும் பூக்காரி என்னைக் கூப்பிடவேயில்லை.

சரியாக பதினொன்றாம் நாள்! என் மனைவி வந்த அன்று மாலை பூக்காரி ”வாண்ணே, பூ வாங்கிட்டுப் போ, அட வாங்கண்ணே…” என்று கூப்பிட்டாள்

”என்ன…பத்து நாளா கூப்பிடவேயில்லை. இன்னிக்கு கரெக்டா கூப்பிடுறே..?”’ கேட்டேன்.

”இத்தனை நாளும் வெறுங்கையை வீசிட்டு வந்தே…உன் கையில சாப்பாட்டுப் பை இல்லையே….அக்கா ஊருக்கு போயிருக்குன்னு நினைச்சுக்கிட்டேன்…இன்னைக்கு பாரு, பை கொண்டு வந்திருக்கே…அதான் கூப்பிட்டேன்…எத்தனை முழம் குடுக்கட்டும்…?- பூக்காரி
கேட்டாள்.

பூக்காரியின் புத்திக்கூர்மையை எண்ணி வியந்தபடியே, அஞ்சு முழம் கொடு…”என்றேன்.

– டேவி.சாம் ஆசீர் (ஜனவரி 2013)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *