பட்டை நாமம்




(1945ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஓர் ஊரில் மருதப்பன் என்னும் பெயருடைய வன் ஒருவன் இருந்தான். இவனுக்குச் சிறிது நில புலன்கள் இருந்தன. மக்கட்பேறு அதிகமாகிக் குடும்பம் பெருகிக் கொண்டிருந்தது. நிலபுலங் களின் வருவாய் குடும்பத்தைப் பாதுகாப்பதற்குப் போதியதாக இல்லை.
ஆகவே மருதப்பன் ஊரார்கள் எல்லோரிட மும் நூறுரூபா ஐம்பதுரூபா இப்படியாகக் கடன் வாங்கிச் செலவு செய்தான். நிலபுலங்களையும் கடன்காரர்கட்குக் கொடுத்து விட்டான். இவனி டங் கொடுத்தால் நிலபுலம் இருக்கிறது வாங்கிவிட லாம் என்று எண்ணியவர்கள் இவனுடைய நில புல மதிப்பிற்குமேல் பத்து மடங்கு கடன் இருப் பதை உணர்ந்தார்கள்.
ஒவ்வொருவருந் தத்தமது கடன்களை வாங்கி விட வேண்டும் என்று அலைந்தார்கள். மருதப் பன் எல்லோரையும் வரும்படி ஒரு நாளைக் குறிப் பிட்டான். குறிப்பிட்ட நாளில் கடனைத் தருவ தற்கு ஏதேனும் ஏற்பாடு செய்திருக்கிறான்போலும் என்று எண்ணினார்கள். குறிப்பிட்ட நாளில் மரு தப்பனுடைய வீட்டிற்குச் சென்றார்கள். திருநீறு பூசுபவனாகிய மருதப்பன் அன்று தன்னுடைய நெற் றியிலேயே ஒரு பெரிய பட்டை நாமத்தை அணிந் திருந்ததோடு கை மார்பு முதுகு ஆகிய எல்லா விடங்களிலும் பட்டை நாமங்களைச் சார்த்திக் கொண்டு உட்கார்ந்திருந்தான்.
கடன்கேட்கச் சென்றவர்கள் வாய்திறந்து எதுவுங் கேட்கவில்லை. அவனுடைய பட்டை நாமக் கோலத்தைப் பார்த்துக்கொண்டு யாதும் பேசாமல் திரும்பி விட்டார்கள். மருதப்பன் தன்னுடைய வாய்திறந்து பேசவேண்டிய வேலையே இல்லாமற் போய் விட்டதைக் கண்டு மிகுந்த மகிழ்ச்சியடைந்தான்.
– கதை இன்பம் (சிறு கதைகள்), மலர்-க, முதற் பதிப்பு: 1945, திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், லிமிடெட், திருநெல்வேலி.