பகலவனும் பக்தியும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: ஆன்மிகக் கதை
கதைப்பதிவு: December 13, 2025
பார்வையிட்டோர்: 229 
 
 

(1962ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

லார்ட் பேக்கன் என்ற தத்துவஞானி பக்தியைச் சூரியனுக்கு ஒப்பிட்டார்.

உயிருள்ள பிராணிகளுக்கும் உயிரற்ற பிராணிகளுக்கும் பகலவன் இருவித நிலைகளை உண்டாக்கி விடுகிறான்.

உயிருள்ள பிராணிகளுக்குச் சூரியன் உற்சாகம், உத்வேகம், உவப்பு முதலிய உயிரிய குணங்களை உண்டாக்கி விடுகிறான், அதே சூரியன், உயிரற்ற ஜீவிகளுக்குள் புழு, பூச்சிகளை உண்டாக்கி விடுகிறான்.

பக்தியும் இப்படித்தான்.

ஆன்மா ஆரோக்கியமாயிருக்கையில் பக்தியானது விசுவாசம், நம்பிக்கை, அன்பு முதலிய அருங்குணங்களைக் தோற்றுவித்து விடுகிறது. ஆனால் ஆன்மா நோய் கொண்டிருக்கையில் அவிசுவாசம்; அவநம்பிக்கை! சந்தேகம் முதலிய நோய்க்கிருமிகளை உண்டாக்கி விடுகிறது.

பசியானது சரீர சுகத்துக்கு நல்ல அறிகுறி. அவ்வாறே நீதியின்மேல் பசியும் தாகமும் ஆன்ம சுகத்துக்கு அறிகுறி.

கதிரவன பூமியின் அசுத்தமான இடத்தில் பிரகாசித்தாலும் அசுத்தத்தால் கறைபடாமல் அசுத்தங்களைச் சுட்டெரித்துச் சுத்தப்படுத்துகிறது. அப்படியே பக்தி மிகுந்த இறைவாக்கும் துன்மார்க்கரால் கறைபடாமல் அவர்களையும் தூயவராக்குகிறது.

“என் திருப்பெயருக்கு அஞ்சி நடக்கின்ற உங்கள்மேல் நீதிக் கதிரவன் எழுவான்” (மலாக்கி 3:20)

”உலகத்தால் கறைப்படாதபடிக்குத் தன்னைக் சாத்துக் கொள்.” (யாக்கோபு 1:27)

**பகலவன், சூரியன், கதிரவன்-ஒரு பொருள் பல சொற்கள் ஆகும்.

– குருமாணிக்கம் உவமைக் கதைகள் 101, முதற்பதிப்பு: ஏப்ரல் 1962, ஜெயா நிலையம், பாளையங்கோட்டை.

ஆர்.எஸ்.ஜேக்கப் பள்ளி ஆசிரியர், எழுத்தாளர், பத்திரிகை ஆசிரியர், பதிப்பாளர், சமூகசேவகர் எனப் பல திறக்குகளில் முத்திரை பதித்தவர் ஆர்.எஸ். ஜேக்கப். தூத்துக்குடியை அடுத்த ராஜாவின்கோவில் கிராமத்தில், நவம்பர் 19, 1926 அன்று, சந்தோஷம் நாடார், பொன்னம்மாள் இணையருக்கு மகனாகப் பிறந்தார். உடன்பிறந்தவர்கள் 11 பேர். தந்தை விவசாயி, பருத்தி வணிகமும் செய்தார். வணிகத்தின் பொருட்டு ஒவ்வொரு முறை வெளியூர் சென்று திரும்பும்போதும் தின்பண்டங்களோடு கூடவே நல்ல நூல்களையும் வாங்கிவருவார். தன் குழந்தைகளை…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *