நீதியின் கண்ணீர்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: September 4, 2025
பார்வையிட்டோர்: 53 
 
 

(1954ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

நீதித் தெய்வத்திற்கு ஒரு ஆசை பிறந்தது.  பூலோகத்துக்கு விஜயம் செய்து, தனது அருள் அங்கு எப்படிப் பரிணமிக்கிறது என் அறிந் கொள்ள வேண்டும் என்ற ஆவல்தான். 

தெய்வங்களுக்கெல்லாம் இதுமாதிரி ஒரு ஆசை திடீரென்று ஏற்பட்டுவிடுமாம். அப்படித்தான் பக்தர் கள் சொல்கிறார்கள். ஆகவே, நீதியின் தேவு அத்தகைய சபலத்துக்கு உள்ளானதில் ஆச்சரியம் எதுவுமில்லை தான் 

நிலவொளியிலிருந்து திரட்டி எடுத்த சிலை போன்ற உருவம். இள ஞாயிற்றின் ஒளிக் கதிர்கள் புரண்டு சுழல்வது போல மினுமினுக்கும் பொன் மயக் குழற் கற்றை, சரிகைக் கரை இடாத வெண் முகிலை எடுத்துப் போர்த்துக் கொண்டது போல் மிளிரும் ஆடை. கையிலே வாடாத தராசு, நேர்மையின் சின்னமாக கருவண் கள் போல் சுழல வேண்டிய கண்களை மூடித் திரையிடும் மெல்லிய துணி – பகட்டுகளினால் பார்வை கூசி நீதி நிலை தவறிவிடக் கூடாதே என்ற உயர்ந்த நோக்கத்தில் பிறந்த பாதுகாப்பு அது. 

இவ்விதம் தனக்கே உரிய கோலத்துடன் உலாக் கிளம்பியது நீதியின் தெய்வம். மிடுக்காக நடந்தது. ஒளியோடு ஒளியாக நீந்தியது. காற்றோடு காற்றாக மிதந்து வந்தது. 

தெய்வங்கள் எல்லாம் எப்படியும் பிரயாணம் செய் யும். ங்கு வேண்டுமானாலும் போகும். பிறர் கண் களில் தென்படாமலே மனிதரிடையே உலவும் என்று தானே பக்தர்கள் சொல்கிறார்கள்? ஆகையினாலே, நீதித் தய்வம் மனிதரிடையே வந்து சேர்ந்தது யாருக்குமே தெரியாமல் போனதில் வியப்பில்லை. 

கோயில்போல் கட்டிடம் அமைத்து, சட்டத்தின் பாதுகாவலர்கள் கொலுவிருந்து, மனிதரிடையே நியா யத்தை விதைத்து வளர்த்துப் போற்றுவதற்குப் பாடு படும் நகரம் ஒன்றை அடைந்த தேவு, தனது பக்தர் களின் ஆட்சியை அறிய அவாவியது. நியாய சபைக்குள் சென்றது. 

அங்கே…. 

நியாயத்தை நிலைநாட்டுவதற்காக வாதுகள் நடந்தன. கஷ்டமான முயற்சியிலே அலுப்பு ஏற்படாமல் இருப்பதற்காக வாய்தாக்கள் – வாய்தாவுக்குமேல் வாய்தாக்கள் – போடப்பட்டன. சட்டங்கள் அலசிப் பிழியப் பெற்றன. சாட்சிகள், வெற்றிக்கோ தோல்விக்கோ ‘தோன்றாத் துணை’கள் ஆயினர். 

சாட்சியங்கள், வாதமிடுவோரின் வாக்கு சாதுரியங்கள், திரை மறைவிலே புரளும் பணச் சக்தி முதலியவை வெற்றி பெற்றன. ‘தர்மத்தின் வாழ்வதனை சூது கவ்வக் கண்டது நீதித் தெய்வம். 

அதாவது, தனக்கே உரிய அதீதத் தன்மையினால் உணர்ந்தது அத்தெய்வம் இடையிடையே ‘தர்மமும் வெல்லக் கண்டு’ மகிழ்ச்சியுற்றது! முடிவாக ஒரு விஷ யத்தின்மூலம் தன் மனதைத் திருப்திப்படுத்திக்கொண்டு தனது இடத்திற்கே திரும்பிவிட எண்ணியது நீதி. 

ஒரு வழக்கு, பணமும், படாடோபமும், அந்தஸ் தும், அதிகாரமும் பெற்ற கனவான் ஒருவர் காரோட்டிச் சென்றார். அப்போது அவர் தேகத்து நரம்புகளிலே மதுவெறி கிறுகிறுத்தது. மூளையிலே மங்கை வெறி கொதிப்பேற்றிக் கொண்டிருந்தது. தனக்காகக் காத்தி ருக்கும் மதனராணி, மனமோகினி, சினிமாக் குயிலி ‘புல்புல்தாரா’வைக் காணச் செல்லும் லட்சியவாதி அவர். ஆகவே, உல்லாசக் காரை ‘கண்ணு மூக்குத் தெரியாத வேகத்திலே ‘ ஓட்டிச் சென்றார். ஒரு மனிதப் பிராணி அந்த வேளையில்தானா ரஸ்தாவைக் கடக்க முயலவேணும்? மூளை வேண்டாம் அம் மடையனுக்கு? சீமானின் காரிலே சிக்கிச் செத்தான் அல்பன்! அவரது அவசரத்தைக் கெடுத்துவிட்டான். 

முறைப்படி வழக்கு தொடரப்பட்டது. விசாரணை- வாய்தாக்கள் -வாதப் பிரதிவாதங்கள். அன்று தீர்ப்பு நாள். 

சீமான் குற்றவாளி அல்ல. செத்தவனே குற்றம் செய்தான். வேகமாக மோட்டார் வருவதை அறிந்தும் ரோட்டைக் கடக்க முயன்றது அவன் குற்றம். அவனே காரில் வந்து சிக்கித் தனது தவறின் தண்டனையை பவித்தான்.- நீதியும் அறிவும் தந்த முடிவுரை இது. 

‘நீதி நன்று! அது வாழ்க!’ என்றனர் சீமானின் அன்பர்கள். 

‘வாழ்க்கை எனும் பொம்மலாட்டத்தில் மனிதப் பாவைகளை ஆட்டி வைக்கும் சூத்திரக் கயிறு பணம். சமுதாயத்திலே பணம் படைத்தவனே சூத்திரதாரி’ என்று முனங்கினர் சிந்திக்கத் தெரிந்தவர்கள். 

‘பணம் பலவும் பண்ணுமையா!’ என்றார்கள் அப்பாவி மக்கள். 

நீதித் தெய்வத்தின் வலது கண்ணிலிருந்து பெரிய நீர்த்துளி ஒன்று சொட்டியது. 

நீதியின் தேவு நகரவில்லை. அறிய விரும்பிய முடி வின் மறுபாதியை உணர்வதற்காகக் காத்து நின்றது அது. 

மற்றுமொரு வழக்கு- 

ஒரு ட்ரைவர் ரோட்டோரத்தில் நின்ற ஒரு மனிதன் து காரை ஏற்றிவிட்டான். கூலிக் காரோட்டி அவன். திரே ஒரு பெரிய கார் வந்தது. வேகமாக வந்த காரினால் விபத்து விளையலாம் என்று அஞ்சிய ட்ரைவர் தன் காரை விலக்கினான். பிளாட்பாரத்தை விட்டுக் இறங்கி நடந்த ஒரு நபர் மீது ஏறிவிட்டது கார். சந்தர்ப்பச் சதி அது….காரோட்டி ஏழை. கிடைக்கும் கூலி வயி று நிறையச் சாப்பாடு கிட்ட வகை செய்வதில்லை. அவனை நம்பி ஒரு மனைவியும் மூன்று மக்களும் இருக்கிறார்கள். கருணையுடன் நியாயம் வழங்கப்பட வேண்டும் என்று கோரப்பட்டது. 

‘குற்றவாளி அவன். அஞ்சு வருஷம் சிறைத் தண்டனை’ என்று தீர்ப்புக் கிடைத்தது. 

‘நீதி நன்று! அது வாழ்க!’ என்று ஆரவாரித்தது சட்டம். 

‘ஏழைக் கொரு நீதி! பணம் படைத்தவனுக்கு ஒரு நியாயம்! சமதர்மம் இல்லாத சமுதாயத்திலே இப்படித் தானிருக்கும்’ என்று முனங்கினார்கள் சிந்திக்கத் தெரிந்தவர்கள். 

நீதியின் இடது கண்ணிலிருந்து பெருந்துளி ஒன்று உருண்டது. 

பெருமூச்செறிந்தது நீதியின் தெய்வம். அதன் கண் களிலிருந்து பெருகிய வேதனைத் துளிகளினால் அதனு டைய வெண்மயப் புனித ஆடை கறைப்பட்டது. மேலும் அங்கு நிற்க விரும்பவில்லை அது. 

இருளோடு இருளாகி, வந்த விதமே மீண்டது நீதித் தெய்வம்.

– வல்லிக்கண்ணன் கதைகள், முதல் பதிப்பு: ஜூன் 1954, கயிலைப் பதிப்பகம், சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *