நிராகரிப்பும் வெற்றியும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: March 6, 2026
பார்வையிட்டோர்: 47 
 
 

உன்னை நிராகரித்த இடத்தில் நிராகரிக்க முடியாத அளவிற்கு வளர்வது தான் உண்மையான வெற்றி.

ஒரு நகரத்தில் விக்ரம் என்பவன் 12ஆம் வகுப்பு முடித்துவிட்டு கல்லூரி படிப்பிற்காக இரண்டு மிக பெரிய கல்லூரியில் பதிவு செய்திருந்தான்.

அவன் கால்பந்து விளையாட்டில் ஆர்வம் உடையவன். அவன் பதிவு செய்துவிட்டு பிறகு அவனும் அவன் தாயும் இரண்டு மாதங்களுக்கு மேலாக போய் அந்த இரண்டு கல்லூரியிலும் சேர முயற்சி செய்தார்கள். ஆனால் முடிய வில்லை தன் தாயிக்கு ஒரே மனகஷ்டம், விக்ரமுக்கு கால்பந்து விளையாடில் ஆர்வம் உடையவனாய் இருந்தபடியால் அவன் விண்ணப்பித்த கல்லூரியில் விளையாட்டு ஒதுக்கீட்டில் சேர வேண்டும் என்பதுதான் அவன் கனவு, ஆசை.ஆனால், நிறைவேறவில்லை.

வேறு வழி இல்லாமல் ஒரு வருடம் வீணாக்க வேண்டாம் என்று எண்ணி வேறு ஒரு சிறிய கல்லூரியில் சேர்ந்து விட்டான் விளையாட்டை ஒரு தனியார் மைதானத்தில் பயின்று வந்தான் கடினமாக உழைத்து ஒரு முழுமையாக கால்பந்து விளையாட்டு வீரனாக மாறினான்.

இவன் இந்த விளையாட்டில் கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காகவே சுலபமான பட்ட படிப்பை தேர்ந்தெடுத்தான். அவன் எடுத்தப் படிப்பு B.A வரலாறு.கால் பந்து போட்டியில் விக்ரம் பங்குப் பெற்று, மாநில அளவில் வெற்றி பெற்று செய்தித்தாளில் வரும் அளவிற்கு உயர்ந்தான். அவன் தாய்க்கு மிகவும் சந்தோஷம் தன் மகனே ஒரு வெற்றி வீரனாக, அனைவருக்கும் சொல்வார்.

இப்பொழுது, அவனை தனியார் நிறுவனம் நடத்தும் போட்டியில் கலந்துக்கொள்ள சொன்னார்கள். அவனும் கலந்துக்கொண்டு ஆட்டநாயகனாக அந்த தனியார் நிறுவனத்திற்கு ஜெயித்துக் கொடுத்தான்.

அடுத்த தேசிய அளவிலான போட்டி வந்தது அதிலும் கலந்து கொண்டு வெற்றி பெற்றான். இப்பொழுது அவன் இளங்கலை பட்டத்தையும் முடித்து விட்டான். முதுகலை பட்ட படிப்பிற்காக திரும்பவும் தான் நினைத்து அந்த இரண்டு கல்லூரிகளுக்கு விண்ணப்பித்து விட்டு விளையாட்டு பயிற்சியில் கவனம் செலுத்த தொடங்கினான்.

அவன் தான் விண்ணப்பித்த கல்லூரிக்கு முயற்சி செய்யவே இல்லை. ஆனால், அவன் விண்ணப்பித்த சில வாரங்களிலேயே இரண்டு கல்லூரியில் இருந்தும் விடாமல் தொலைபேசி அழைப்பு வந்து கொண்டே இருந்தது மற்றும் தொலைபேசி செய்தியும் அனுப்பிக்கொண்டே இருந்தார்கள்.

அப்பொழுது அவன் தன் தாயிடம் இந்த கல்லூரி அழைப்பை பற்றி பேசினான் அதற்கு அவன் தாய் எந்த இடத்தில் நிராகரிக்கப்பட்டாயோ அதே இடத்திற்கு இப்பொழுது நீ தேவைப்படுகிறாய் என்றார்.

“உன்னை நிராகரித்த இடத்தில் நிராகரிக்கவே முடியாத அளவிற்கு வளர்வது தான் உண்மையான வெற்றி”

– எழு (சிறுகதைகள்), மின்னூல் வெளியீடு : FreeTamilEbooks.com, மின்னூலாக்கம் – ஐஸ்வர்யா லெனின்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *