நான் உன்ன வாழ்த்திப் பாடுகிறேன்…!

0
கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 6, 2026
பார்வையிட்டோர்: 2,162 
 
 

காலை வாக்கிங்க் போவது வாசுவின் வழக்கம். அன்றும் அப்படித்தான் போனான். ஏற்கெனவே மைதானத்தில் குவிந்திருந்த வாக்கிங்க் குரூப்பில் ராஜன் ‘ அதோ வாசு வந்துட்டானே…?!’ என்று ஆச்சரியமாகக் கூவினான். வாசுவுக்கு மகிழ்ச்சியாகத்தான் இருந்தது.

‘சே! நம்மையும் எதிர்பார்த்துக் காத்திட்டிருக்கே நண்பர் கூட்டம்..?!’ என்ற எண்ணத்தில் அவர்களை நெருங்க, அவர்களில் ராஜன் சொன்னான்… ‘ இப்பத்தான் உன்னைப் பத்திப் பேசீட்டிருந்தோம்..! கரெக்ட்டா வந்துட்டே..! ஆயூசு நூறு!!’ என்று வாழ்த்தினான்.

என்னதான் வாக்கிங்க் போனாலும் ஆரோக்கியம் கூடினால்தானே, ஆயுசும் கூடும்?! மகிழ்ச்சியில் நடந்து அவனருகே போக…

மீண்டும் அதையே சொல்லி ‘ஆயுசு நூறு!’ கைகுலுக்கி விட்டு, பிறகு ‘இருக்கணும்தானே?!…. ம்ம்ம்?’ என்று வாசுவையே கேட்டான்.

வாசுவுக்குள் ஒரு எண்ணம்.. ‘இவன் என்னை நூறாண்டு இருக்கணும்னு வாழ்த்தறானா? இல்லை, நான் இருந்திருவேனான்னு நெனைக்கிறானா?! வாழ்த்துவதானால் நூறாயுசோடு நிறுத்த வேண்டியதுதானே?! எதுக்கு இருக்கணும்தானேன்னு கேட்கணும்?!. அப்ப வாழ்த்து, உதட்டளவில்தானா? உள்ளத்திலிருந்து இல்லையா?’

ஓருவன் இருப்பதும் இல்லாமல் போவதும் வாய் வார்த்தையில் இல்லை., வாழும் வாழ்க்கையில்..! வாக்கிங் முடிந்ததும்..

அன்றைக்கு எல்லாருக்கும் ‘டீ’ ‘காப்பி வாங்கித் தந்து திரும்பினான்.

ராஜன் சொன்னான் ‘இவனை வாழ்த்தினா டெய்லி டீ கிடைக்கும் போலிருக்கேன்னு?!’

என்ன செய்ய….?!

வளர்கவி இயற்பெயர்: வே.ராதாகிருஷ்ணன் புனைபெயர்: வளர்கவி கோவை பிறந்த ஊர்: ஸ்ரீவில்லிபுத்தூர். வாழ்விடம்: கோவை. கல்வித்தகுதி: எம்.ஏ (வரலாறு)எம்ஏ (தமிழ்) எம்ஃபில் தமிழ்(ஈரோடு தமிழன்பன் கவிதைகளில்). குருநாதர்: தடாகம் இளமுருகு தமிழாசிரியர். பணி: பட்டதாரி ஆசிரியர் மணி மே.நி.ப கோவை - 23 ஆண்டுகள். பகுதிநேர அறிவிப்பாளர்: ஆல் இண்டியா ரேடியோ கோவை - 18 ஆண்டுகள் ஞானவாணி கோவை - 4 ஆண்டுகள். வெளியிட்ட நால்கள் - 3 1.…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *