நாட்டு நடப்பு




போதைப் பொருட்கள் கடத்தலில் ஈடுபட்ட ஒரு வழக்கு-
கூலி ஆட்களை வைத்து கொலை செய்ததாக ஒரு வழக்கு-
கம்பியூட்டர் நிறுவனம் வைத்து மோசடி செய்ததாக ஒரு வழக்கு-
ஆட்களை கடத்தியதாக ஒரு வழக்கு-
சொத்து குவிப்பு வழக்கு ஒன்று-
அனைத்து வழக்குகளிலும் ஜாமீனில் வெளி வந்த அந்த கோடீஸ்வர தொழிலதிபரிடம் ஒரு டி.வி. நிருபர் எடுத்த பேட்டி
“ அடுத்து நீங்க என்ன செய்வதாக உத்தேசம்?”
“பெர்னாட்ஷா போன்ற அறிஞர்கள் சொன்ன கடைசி வழி தான்!”
“புரியலே சார்!…..கொஞ்சம் தெளிவா சொல்லுங்க!…”
“சீக்கிரம் பாராளும் மன்றத் தேர்தல் வரப் போகுது…நாட்டில் செல்வாக்குள்ள அரசியல் கட்சியில் மிக செல்வாக்கு உள்ள முக்கிய தலைவர்களை ‘நன்கு கவனித்து’ எம். பி. சீட் வாங்கி எம்.பி. ஆகப் போறேன்!..”
“அது எப்படி அவ்வளவு உறுதியாகச் சொல்லறீங்க?…”
“காந்தியால் கூட பதவி வாங்கித் தர முடியாது!…ஆனால் காந்தி தலை அச்சிட்ட ரூபாய் நோட்டுக்களால் எந்தப் பதவியும் வாங்கிப் தர முடியும்!……அது என்னிடம் கொட்டிக் கிடக்கிறது!….பத்திரிகை நிருபர் தானே நீங்கள்?…..நாட்டு நடப்பு உங்களுக்குத் தெரியாதா என்ன?…….”
நிருபர் பேச மறந்தார்.
![]() |
கடந்த 60 ஆண்டுகளில் கதை, கட்டுரை, நாவல்கள், தொடர்கதைகள் என 600-க்கும் மேற்பட்ட படைப்புகளை எழுதியிருக்கும் துடுப்பதி ரகுநாதன், 80 வயதைக் கடந்த நிலையில் இன்னும் சுறுசுறுப்பாய் எழுதிக்கொண்டிருக்கிறார். தற்போது கோவை நஞ்சுண்டாபுரம் சாலை நேதாஜி நகரில் வசித்து வரும் துடுப்பதி ரகுநாதனை சந்தித்தோம். “பூர்வீகம் ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகேயுள்ள துடுப்பதி. பெற்றோர் செல்லப்பன்-செல்லம்மாள். ஜவுளி வியாபாரம். பெருந்துறை உயர்நிலைப் பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி முடித்துவிட்டு, கோவையில் தங்கி கூட்டுறவில்…மேலும் படிக்க... |