நாடே, நீ எங்கே போகிறாய்?

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: March 2, 2026
பார்வையிட்டோர்: 50 
 
 

(2005ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

பாளையம்பதியில் மாம்பழச்சங்கம் என்றொரு விந்தையான விழா வருடந்தோறும் நடைபெறும். நெல்லைத் திருமண்டில இறைமக்களின் துதி தோத்திரப் பண்டிகையாகும். நாலாதிசைகளிலும் உள்ள கிராம மக்கள் மாட்டு வண்டிகளிலும், கால் நடையாயும் வந்து குவிவர். மூன்று நாட்கள் தங்கி இருந்து தாமிரபரணியில் குளித்து பண்டிகை கொண்டாடிச் செல்வர். 

இது மாம்பழம் நிறைந்து வழியும் காலமாதலால் மாம்பழச்சங்கம் என்பர். நூறு ஆண்டுகளுக்கு முன்பு தங்கள் பெண் பிள்ளைகளுக்கு மாப்பிள்ளை பார்க்கும் இடமாகவும் பயன்பட்டமையால் “மாப்பிள்ளைச் சங்கம்” என்பது “மாம்பழச் சங்கம்” என்று மருவிற்று என்பாருமுளர். 

இரண்டும் உண்மைதான். 

எவ்விதத்திலும் இது ஓர் விசேஷித்த மக்கள் பண்டிகையே. 

இந்தப் பண்டிகையின் மிகச்சிறப்பு, திரள் திரளான பிச்சைக்காரர்களின் வருகைதான். ஐயாயிரத்திற்கும் அதிகமானோர் மூன்று நாட்களுக்கு முன்பே வந்து இடம் பிடித்து முகாமிடுவார்கள். 

பண்டிகை நடக்கும் நூற்றாண்டு மண்டபத்தின் முன்பு தங்கள் தங்கள் இடங்களுக்குத் துண்டு விரித்து எல்லை போட்டு முந்திக்கொள்வார்கள். பிச்சைக்காரர்களில் பெரும்பாலோர் வேடிக்கையான வேஷதாரிகள், போலிகள், பரம்பரையல்லாத பண்டிகைப் பண்டாரங்கள். 

கிராமங்களிலிருந்து வரும் எண்ணற்ற மக்கள் அந்தப் பிச்சைக்காரர் களுக்கென்று அரிசி, காய்கறி, காசுகளைக் கொண்டு வந்து ஒவ்வொரு வருடமும் பத்துப் பேருக்காவது பங்கிட்டுக் கொடுத்து ஏழைகளிடம் இயேசுவைக் காண்பார்கள். மனநிறைவு பெறுவார்கள். சராசரி ஒவ்வொருவருக்கும் நான்கைந்து படி அரிசியும், சில்லரையாக முன்னூறு ரூபாய் வரையும் சேர்ந்து விடும். எனவே வருடா வருடம் பரம்பரை அல்லாத பண்டிகைப் பண்டாரங்கள் அதிகமாக அலை மோதுவர். 

பிச்சையர்களில் ஒருவர் தம்\ இரு இடங்களிலும் இராமல் மிகச்சௌடாலாக அங்குமிங்கும் சுற்றி வந்தார். அவரைப்பற்றி விசாரித்தேன். 

அடுத்த பிச்சைக்காரர் சொன்னார். 

‘அவனுக்கென்ன மகாராசா. மூன்று பயல்கள். ஒருவன் மெட்ராசில் பிச்சை எடுக்கான். அடுத்தவன் பம்பாயில் பிச்சை எடுக்கான். கடக்குட்டிப் பயல் டில்லியில் பிச்சை எடுக்கான். பயல்க மாதாமாதம் பணம் அனுப்புறான்க; இவன் பேங்கில பணம் போடறான்’ என்றார். 

பிச்சை எடுப்பது ஒரு கௌரவமான தொழிலாகி விடுமோ என்ற அச்சம் எனக்குள் எழுந்தது. 

“நாடே, நீ எங்கே போய்க் கொண்டிருக்கிறாய்?” என்று புலம்பலானேன்.

– ஆர்‌.எஸ்‌.ஜேக்கப்‌ சிறுகதைகள் (தொகுதி நான்கு), முதற் பதிப்பு: நவம்பர் 2005, ஜெயா பப்ளிகேஷன்ஸ், பாளை.

ஆர்.எஸ்.ஜேக்கப் பள்ளி ஆசிரியர், எழுத்தாளர், பத்திரிகை ஆசிரியர், பதிப்பாளர், சமூகசேவகர் எனப் பல திறக்குகளில் முத்திரை பதித்தவர் ஆர்.எஸ். ஜேக்கப். தூத்துக்குடியை அடுத்த ராஜாவின்கோவில் கிராமத்தில், நவம்பர் 19, 1926 அன்று, சந்தோஷம் நாடார், பொன்னம்மாள் இணையருக்கு மகனாகப் பிறந்தார். உடன்பிறந்தவர்கள் 11 பேர். தந்தை விவசாயி, பருத்தி வணிகமும் செய்தார். வணிகத்தின் பொருட்டு ஒவ்வொரு முறை வெளியூர் சென்று திரும்பும்போதும் தின்பண்டங்களோடு கூடவே நல்ல நூல்களையும் வாங்கிவருவார். தன் குழந்தைகளை…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *