நயத்தக்க நாகரிகம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: September 16, 2025
பார்வையிட்டோர்: 34 
 
 

(1945ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

பிறர் சினங்கொள்ளத் தக்க நேரத்திலும் பொறுத்து நயஞ் செய்யும் அருளாண்மை யாரி டம் இருக்குமோ அவரே, நாகரிகம் உடையவர் என்று கூறுதற்கு உரியவர்.

மேனாட்டில் அறிவியல் ஆராய்ச்சியில் ஈடு பட்ட பெரியார் ஒருவர் இருந்தார். அவருடைய ஆராய்ச்சிக் களத்தில் விலையேறிய பொறி வகை கள் பல இருந்தன. அவற்றுள் ஒன்று ‘வளியெடை அளவை’ என்பது. இதில் உள்ளே இருக்கும் ‘பாதரசம்’ உயர்ந்திருந்தால் சூழ உள்ள காற்று மண்டலம் நெகிழ்ச்சி யுடையது என்றும், தாழ்ந் திருந்தால் அது திட்பமுடையது, எனவே மழை பெய்யும் என்றுங் கூறிவிடலாம். 

ஒருகால், பல நாள் மழை பெய்யாமல் வறட்சி யாக இருந்தது. மழை வருமா, வருமா என்று பலர் கவலையுடன் ”வளியெடை அளவை “யைக் கூர்ந்து பார்க்க வருவர். அங்ஙனம் வந்தவர்களுக்குள் படபடப்புடைய இளைஞனொருவன் அதனைக் கவனக் குறைவுடன் கையாளவே, அது தவறி விழுந்து சுக்கல்சுக்கலாக நொறுங்கி விட்டது. 

வந்திருந்தவர்கள்கூட இளைஞன் மேல் அடக்க முடியாத சீற்றங்கொண்டனர். ஆனால் அறிஞர், தாம் சினங்கொள்ளாததோடு பிறர் சீற் றத்தையும் மாற்றிவிட்டார். 

“அன்பர்களே! இப்போது கவலை தீர்ந்துவிட் டது.. இனி நிறைய மழை வருவது உறுதி,” என்றார் அவர். 

அவர் கூறுவதன் பொருள் விளங்காமல், அனை வரும் சற்று விழித்தனர். அப்போது அவர்,”என் பொறி தாழ்ந்தால் மழை வரும். இன்று அது முற் றிலும் தாழ்வுற்றுவிட்டது. ஆகவே மழை வரும் என்பது உறுதியன்றோ?” என்றார். 

அவர் பொறுமையையும் நகைத்திறம் வாய்ந்த நயத்தையுங் கண்டு அனைவரும் மகிழ்ச்சி யுற்றனர். 

– கதை இன்பம் (சிறு கதைகள்), மலர்-க, முதற் பதிப்பு: 1945, திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், லிமிடெட், திருநெல்வேலி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *