தெய்வம் நின்று…
கதையாசிரியர்: மாத்தளை பெ.வடிவேலன்
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு:
சமூக நீதி
கதைப்பதிவு: July 8, 2025
பார்வையிட்டோர்: 892

(1990ல் வெளியான கவிதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
உருவகக்கதை
வார்த்தைகளில் விளக்கமுடியாத அனர்த்தனம்
அடிவயிற்றில் அனலாய் பற்றி எரிகிறது
எங்கும் புகை மண்டலம் . . .
ம்… எல்லோர் மனமும் குமைகிறது
வெதும்பிக் காம்புகின்றது
யார் காப்பாற்றுவது?
உள்ளங்கள் நொந்து கொள்கின்றன
சுடுகாடாய் சுட்டெரிந்தவர்கள்
ராட்சதமாய் திரிகின்றார்கள்
வெந்து தணிந்த பின்னர் வேட்கை
அடங்கிய பின்னர்
மனம் ஓலமிடுகிறது.
ஓ…தெய்வமே…
கே… என்னப்பா தெய்வமும்
மண்ணாங்கட்டியும் – ஒருவர்
குமைந்து வெறுப்புடன் பேசுகிறார்
…ம்.. அப்படி சொல்லாதே..
பொறு… பொறு… அனுபவ முத்திரை
என்ன பொறுமை வேண்டி கிடக்கிறது
தேரை எரித்து கோயிலை இடித்து
இப்படியா அட்டூழியம்
தெய்வம் இருந்தால் இப்படி நடக்குமா?
மற்றவர் யோசிக்கிறார்… தெய்வம்
இருந்தா இப்படி நடக்குமா?
தெய்வம் ஏன் பார்த்துக் கொண்டிருக்கு
இரு … கவலை வேண்டாம்..
தெய்வம் நின்று தான் கேட்கும்
கவலைப்படாதீர்கள் அந்த வழியால்
செல்லும் முதியவர் சொல்கிறார்
இருவரும் ஆறுதல் அடைகின்றனர்
காலம் கனிந்தது
கால சகடஓட்டம் வேகமாக நகர்ந்தது
மீண்டும்
ஒரு பிரளயம்
எங்கும் திகைப்பு
புதிய கோஷங்கள்
வெறியர்கள்
திகைத்து நிற்க
அந்த அம்பாள் சந்நிதி முன்னே
தேரை எரித்தவன்
சுருண்டு விழுகின்றான்
ஆட்டம் அடங்குகின்றது
எல்லோரும் வியக்க…
அம்பாள் அமைதியாக கருவறையில்
கொலுவிருக்க
தெய்வம் நின்று கேட்கும்.
– இந்துகலாசாரம், 15-4-1990
![]() |
சிறுகதை, நாவல், நாடகம், கவிைன ஆகிய இலக்கியத் துறைகளில் ஈடுபாடு கொண்டுள்ள வடிவேலன், இதுவரை ஐம்பதுக்கு மேற்பட்ட சிறுகதைகளையும் இரண்டு நாவல்களையும் எழுதியுள்ளார். கதைகள் சில சிங்களம், ஆங்கிலம் மொழிகளில் பெயர்க்கப் பட்டுள்ளன. இவர் எழுதி தமிழகத்தில் வெளியான சில கதைகள் அங்கு மறுபிரசுரமும் செய்யப்பட்டன. வடிவேலனின் 12 சிறுகதைகள் அடங்கிய 'வல்லமை தாராயோ!' என்னும் சிறு கதைத் தொகுதி மலையக வெளியீட்டகத்தின் பிரசுரமாக வெளிவரவுள்ளது. 'தோட்டக் காட்டினிலே…' என்னும்…மேலும் படிக்க... |
