தூக்குக் கைதி
கதையாசிரியர்: ஆர்.எஸ்.ஜேக்கப்
கதைத்தொகுப்பு:
ஆன்மிகக் கதை
கதைப்பதிவு: December 13, 2025
பார்வையிட்டோர்: 175
(1962ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
ஓர் இளவரசன் பிரான்ஸ் தேசத்திலுள்ள நூலன் என்ற பட்டணத்திற்கு வந்திருந்தான். அங்குள்ள தூக்குத்தண்டனைக் கைதிகளைப் பார்க்க வந்த இளவர சன் தனக்கு விருப்பமான ஒருவனை விடுதலை செய் யலாம் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இளவரசன் தூக்குக் கைதிகள் ஒவ்வொருவரிடமும் தனித்தனியாகப் பேசினான். அனைவரும் தாங்கள் பாவமறியாதவர்கள் என்று பொய்க்காரணங்களைக் கூறினார்கள். யாரும் தங்களைக் குற்றவாளிகள் என்று ஒப்புக்கொள்ளவில்லை. இறுதியில் ஒருவன் மட்டும் ‘இளவரசே, நான் ஒரு பொல்லாத பாவி. தங்களிடம் மன்னிப்புக் கோருகிறேன்,” என்றான்.
இளவரசன் அவனை உற்று நோக்கினான். பின்பு அவனைத் தட்டிக் கொடுத்துக்கொண்டு சொன்னான்; “இங்கு இருப்பவர்களெல்லாம் மகா யோக்கியர்கள்; நீ மட்டும் மாபாதகன். இவர்கள் மத்தியில் நீ இருக்கக் கூடாது” என்று சொல்லி அதிகாரிகளிடம் “நீங்கள் இவனை விடுதலை செய்ய நான் விரும்புகிறேன்’ என்றான்.
உடனே அந்த மனிதன் விடுதலை செய்யப்பட்டான் “தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடைய மாட்டான்; அவைகளை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான்” [நீதிமொழிகள் 28:13]
“நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியுமுள்ளவராயிருக்கிறார்” [1 யோவான் 1:9]
– குருமாணிக்கம் உவமைக் கதைகள் 101, முதற்பதிப்பு: ஏப்ரல் 1962, ஜெயா நிலையம், பாளையங்கோட்டை.
![]() |
பள்ளி ஆசிரியர், எழுத்தாளர், பத்திரிகை ஆசிரியர், பதிப்பாளர், சமூகசேவகர் எனப் பல திறக்குகளில் முத்திரை பதித்தவர் ஆர்.எஸ். ஜேக்கப். தூத்துக்குடியை அடுத்த ராஜாவின்கோவில் கிராமத்தில், நவம்பர் 19, 1926 அன்று, சந்தோஷம் நாடார், பொன்னம்மாள் இணையருக்கு மகனாகப் பிறந்தார். உடன்பிறந்தவர்கள் 11 பேர். தந்தை விவசாயி, பருத்தி வணிகமும் செய்தார். வணிகத்தின் பொருட்டு ஒவ்வொரு முறை வெளியூர் சென்று திரும்பும்போதும் தின்பண்டங்களோடு கூடவே நல்ல நூல்களையும் வாங்கிவருவார். தன் குழந்தைகளை…மேலும் படிக்க... |
