திரு.வி.க. – மறைமலையடிகள்





சென்னை மாநகரில் மாளிகையிடத்தில் திரு. சச்சிதானந்தம் பிள்ளை, திரு.வி.க., மறைமலையடிகள் இவர்களுடன், விருந்துக்கு அமர்ந்து உண்டுகொண்டிருந்தார்.
அப்போது, சச்சிதானந்தம் பிள்ளை ரசத்தைப் பருகிக் கொண்டிருக்கும்போது சிறிது இருமினார். அருகில் இருந்த திரு.வி.க. கேட்டார் – ‘அது என்ன? ரசம். அதிகாரமோ!” இருமும்போது – ரசம் அதிகாரம் பண்ணுகிறதா – என்பதும்.
‘ரசம் அதிக காரமாக இருக்கிறதா?’ எனக் கேள்வியாகவும் பொருள்பட இருந்தது.
– அறிவுக் கதைகள், மூன்றாம் பதிப்பு: 1998, பாரி நிலையம், சென்னை
கி. ஆ. பெ. விசுவநாதம் பிள்ளை (நவம்பர் 11, 1899 - டிசம்பர் 19, 1994) பரவலாக முத்தமிழ் காவலர் கி.ஆ.பெ, தமிழகத்தின் திருச்சியைச் சேர்ந்த தமிழ் உணர்வாளர் ஆவார். நீதிக்கட்சி உறுப்பினராக பிராமணரல்லாதோர் முன்னேற்றத்திற்காகவும் தமிழ்மொழியின் உயர்விற்காகவும் பாடுபட்டவர். துவக்கத்தில் பெரியாருடன் இணைந்து இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டபோதும் அவரது திராவிடநாடு கோரிக்கையுடன் உடன்படாதவர். அது தமிழரின் தனித்தன்மையை நீர்த்துவிடும் என எண்ணினார். இவர் எழுதியுள்ள 23 நூல்களும்…மேலும் படிக்க... |