தன்னலம் பேணிய குரங்கு




(1945ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஒரு மாம்பழக்காரனிடம் இருந்த மாம்பழப் பைகளுள் ஒன்றை ஒரு குரங்கு பறித்துக் கொண்டு ஓடிவிட்டது. அதன் தோழர்களாகிய மற்றைக் குரங்குகள் அதில் பங்கு கொள்ளும் அவாவுடன் அதனைப் பின்பற்றி ஓடின.
தன்னிடமிருந்து எந்தக் குரங்கும் மாம்பழங் களைப் பறிக்க முடியாதபடி முதற் குரங்கு கிளைக்குக் கிளை தாவியோடிற்று. பறிக்க முயலாமல் அன்பு டன் பழங்களைக் கேட்டுச் சுற்றிய குரங்குகளிடமும் அக்குரங்கு பரிவு காட்டாமல், அவற்றின் மீது தான் தின்ற பழங்களின் கொட்டையை வீசி யெறிந்தது.
பின்பற்றிச் சூழ்ந்த குரங்குகள் மிகுதி ஆக ஆகக் குரங்கிற்கு ஓடவும் முடியவில்லை. கொட்டை களை எல்லாம் எறிந்து விட்டபின் எறிய வேறு ஒன் றும் அகப்படவுமில்லை. ஆகவே அது முழு மாம் பழங்களையே எடுத்து எறிய வேண்டியதாயிற்று.
விரைவில் பழங்கள் அவ்வளவும் இங்ஙனஞ் செல வாய்ப் போயின. அதன் பின்புதான், பழங்களை யும் இழந்து இனத்தவர் நட்பையும் தான் இழந்து விட்டது குரங்கிற்குத் தெரியவந்தது.
– கதை இன்பம் (சிறு கதைகள்), மலர்-க, முதற் பதிப்பு: 1945, திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், லிமிடெட், திருநெல்வேலி.