தங்கச்சியின் பேராசை…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 30, 2025
பார்வையிட்டோர்: 98 
 
 

பகுதி – 1 | பகுதி – 2

உடனே அவள் போனில் g pay app install செய்தேன். Installed ஆக இரவு 1.00 மணி ஆனது. ஒரு வழியாக ரூ.1050/- ஐ மச்சானுக்கு அனுப்ப மணி 2.00 ஆகிவிட்டது..

ஒரு வழியாக பணம் அனுப்பிவிட்டேன். பின்னர் அப்போதே amount transfer செய்ததை screenshot எடுத்து whatsapp ல் அனுப்பிவிட்டு, நாளை காலை போன் செய்வதாக message type செய்தேன்.

‘என் முகத்தை பார்த்தாள் மஞ்சுளா’. பணம் அனுப்பி விட்டேன். போதுமா? என்றேன். லேசாக புன்னகைத்தாள்.

“ஆமா உங்க போன் எங்கே? என்றாள்”. அடடா….? “மணி 2.00 ஆகுது, போய் தூங்கு…விவரமா காலைல சொல்றேன் என்று கூறி விட்டு” அப்படியே சோஃபாவில் படுத்து உறங்க ஆரம்பித்தேன்.

மறுநாள் காலையில் அவளும் என்னை எதுவும் கேட்கவில்லை, நானும் எதுவும் கூறவில்லை.

ஆபீஸ் போகும் வழியிலேயே கடைக்கு சென்று போனை வாங்கி கொண்டு ஆபீஸ் சென்றேன். 10.00மணிக்கு என் மச்சான் போன் செய்தார். நான் ஆபீஸ் மீட்டிங்கில் இருந்ததால் போனை ஆன் செய்யாமல் அப்படியே பார்த்தேன். அட ராஜசேகர் தான்..!, பணம் தான் அனுப்பி விட்டோமே? WhatsApp ல் screenshot ம் அனுப்பி விட்டோம். எதற்கு போன் செய்கிறார்? தெரியவில்லையே…? மீட்டிங் முடிய மதியம் 1.00 மணி ஆகும். சரி மீண்டும் போன் வந்தால் வெளியே சென்று பேசலாம் என்று எண்ணினேன்.

மீண்டும் போன் வரவில்லை. மீட்டிங் முடிந்தது. நானே போன் செய்தேன். ராஜசேகர் சாரி, போன் கீழே விழுந்து display உடைந்து போச்சு, அதனால்தான் பணம் அனுப்ப முடியல… நேற்று இரவு தான் போன் ரெடியானது உடனே உங்களுக்கு இரவே பணம் அனுப்பி வைத்தேன். நான் ஆபீஸ் மீட்டிங்கில் இருந்தேன், அதனால் போனை சைலண்ட் மோடில் வைத்திருந்தேன். இப்ப தான் மீட்டிங் முடிந்ததும் நீங்கள் போன் செய்திருப்பதை பார்த்தேன். லாட்டரி சீட்டுக்கு பணம் நேற்று இரவு அனுப்பிருந்தேன் பார்த்தீங்களா…? என்று நானே தொடர்ந்து அவரிடம் பேசிக் கொண்டே, சொல்லுங்க… என்ன விஷயம்? நீங்க எனக்கு போன் பண்ணீங்க என்று கேட்டேன்.

என்னத்த சொல்றது? அன்னைக்கு உங்க தங்கச்சி என் அண்ணன் எதுக்கு உங்களுக்கு போன் செய்தாரு கேட்க… நான் அவளிடம் சொல்ல… என்று ஆரம்பித்தார் , இருங்க மச்சான், அன்னைக்கு நீங்க உங்க போனை ஆஃப் செய்யல, அதனால் என் தங்கச்சி உங்க கிட்ட கேட்டது, நீங்க சொன்னது எல்லாம் நான் கேட்டு கொண்டே தான் இருந்தேன்.

இப்ப சொல்லுங்க… என்றேன். நான் உங்களுக்கு வாங்கி அனுப்பிய லாட்டரி சீட்டுக்கு முதல் பரிசு 25 கோடி ரூபாய் விழுந்திருக்கு.

அட அப்படியா என்றேன் மிகுந்த சந்தோஷத்தில்….!

“அந்த லாட்டரி சீட்டை எனக்கு விற்ற கடைக்காரர் எனது நண்பர். அதனால் அவர் சந்தோஷமாக இன்னிக்கு காலையில் எங்க வீட்டுக்கே வந்து இதை சொல்லிட்டாரு “.

“அவ்வளவு தான்… உன் தங்கச்சி இப்பவே சென்னைக்கு போய் அந்த லாட்டரி சீட்டை நாம வாங்கி வந்து விடலாம், என் அண்ணன் தான் அதுக்கு இன்னும் பணமே தரலையே என்று ஒரே சண்டை போடறா…!.. அப்ப தான் என் மொபைலை ஆன் பண்ணா, நீங்க ராத்திரி 2.00 மணிக்கு பணம் அனுப்பியிருக்கீங்க…

போனை அவ கிட்ட காட்டினேன், அத பார்த்துட்டு, நேற்று காலையில் 10.00 மணிக்கு தானே குலுக்கல், அவர் ராத்திரி 2.00 மணிக்கு தான் பணம் அனுப்பியிருக்காறரு, அவரு லாட்டரி ரிசல்ட்டை தெரிஞ்சுகினுதான் பணம் அனுப்பி இருக்கிராரு….? அத நான் ஒத்துக்க மாட்டேன்னு, மடத்தனமான பேசறா…!

ரிசல்டே இன்னிக்கு காலையில் தானே பேப்பரில் இங்கே வரும், எல்லோருக்கும் தெரியும் … அதுவும் அவர் இருக்கறது சென்னையில ….அது எப்படி அவருக்கு நேற்றே தெரியும்னு கேட்டேன்?. என்றார் ராஜசேகர்.

இது மாதிரி ஏதாவது நடக்கும்ன்னு மஞ்சுளா அன்னிக்கே ஏதேச்சையாக சொன்னா… அது அப்படியே பலிச்சிடுச்சே! என்றேன் ராஜசேகரிடம்.

அப்படியா…? என்று ராஜசேகர் கேட்க..

“சரி நான் என்ன செய்யணும்? அத சொல்லுங்க என்றேன் ”

நான் என்ன சொல்றது? லாட்டரி சீட்டு கேட்டது நீ… உனக்காக வாங்கி அனுப்பியது நான் , என்ன? பணம் கொஞ்சம் லேட்டா அனுப்பியிருக்கே… அதுவும் பரிசு விழுந்த விஷயம் உனக்கு தெரிவதற்கு முன்னாடியே….தான்

எனக்கும், இந்த பரிசு பணத்திற்கும் எந்த விதமான சம்மந்தமும் இல்லை. நான் உன்னிடம் பரிசு பணத்தை கேட்பது தர்மம் இல்லை. உன் தங்கச்சி தான் புரியாமல் பேராசை படுகிறாள்.

உனக்கு இந்த தகவல் சொல்ல தான் போன் செய்தேன். இனி உன் பாடு, உன் தங்கச்சி பாடு. அவ உனக்கு போன் பண்ணா…? கறாரா பேசு. நான் உனக்கு சொன்னதை உன் தங்கச்சியிடம் சொல்லி விடாதே….சரியா? வாழ்த்துக்கள் ராகவன் என்று கூறி போனை வைத்து விட்டார். எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. ஆபீஸ்க்கு அரை நாள் லீவு போட்டுட்டு வீட்டுக்கு ஓடினேன்.

என்னங்க சீக்கிரம் வந்துட்டீங்க? உடம்பு சரியில்லையா? என் முகத்தை பார்த்தாள், என்னை தொட்டு பார்த்தாள் ஜுரம் எதுவும் இல்லையே….?

நான் சிரித்துக்கொண்டே மஞ்சுளா லாட்டரில நமக்கு முதல் பரிசு 25 கோடி விழுந்திருக்கு என்றேன். அட நீங்க வேற…! ஏங்க, நான் என்ன கேட்கிறேன்? நீங்க என்ன சொல்றீங்க?

உண்மைதாம்மா…! இப்ப தான் என் மச்சான் ராஜசேகர் போன் பண்ணி சொன்னார் என்றேன்.

“அவள் அப்படியா என்றாள் ஆச்சரியம்.?” கலந்த பயத்துடன்…! ” “ஏங்க இது…..”

“இரு ,இரு, நீ என்ன கேட்க போறேன்னு? தெரியும்…! என்று கூறி, ராஜசேகர் கூறிய அனைத்தையும் சொன்னேன்”.

“நான் தான் அன்னைக்கே சொன்னேனே…! நான் சொன்னது அப்படியே நடக்குது பாத்தீங்களா?

“இப்ப என்ன பண்ண போறீங்க?”

“நீ சொல்லு என்ன பண்ணலாம்?”

“போன் display உடையாம இருந்திருந்தா நேற்று காலையில் பணம் அனுப்பியிருப்பீங்க, பிரச்சினையே வந்திருக்காது, எல்லாம் நம்ம நேரம் என்றாள் மஞ்சுளா”.

நம்ம மேல தப்பேயில்லை, சரியா? ராஜசேகரும் பரிசு பணத்துக்கும் அவருக்கும் எந்த வித சம்மந்தமும் இல்லைன்னு சொல்லிட்டாரு இல்ல..? அப்பறம் நீங்க ஏன் பயப்படுறீங்க?

கோகிலா வர மாட்டா, அப்படியே இங்க வந்தா….! பேசிக்கலாம் , நான் பேசறேன், என்ன நான் சொல்றது சரியா..? என என் மனைவி கூற, சரி, சரி என்றேன். ஆனால் என் மனதிற்குள் சற்று பயம் வந்தது.

மறுநாள் கோகிலா மட்டும் வந்தாள். எனக்கு மஞ்சுளா போன் செய்தாள்.ஏங்க உங்க தங்கச்சி வந்திருக்காங்க, உங்க கிட்ட ஏதோ அவசரமா பேசணுமாம். சரி போனை கொடு என்றேன். போன்ல பேச முடியாதாம், உங்க கிட்ட நேர்ல பேசணுமாம், லீவு போட்டுட்டு வர சொல்றாங்க . சரி வர்றேன்னு சொல்லு.

ஏற்கெனவே தெரிந்த விஷயம் என்பதால் எனக்கு கோபம் வரவில்லை. அரை நாள் லீவு போட்டுட்டு வீட்டுக்கு வந்தேன்.

கோகிலாவை பார்த்து வாம்மா, எப்ப வந்தே?, மச்சான் வரலையா என்றேன். நீ மட்டும் தனியாவா வந்தே என்றேன்? ஒன்றும் தெரியாதது போல்.

அண்ணா வீண் பேச்சு வேண்டாம், பேச நேரம் இல்லை.மணி இப்ப 1.00 ஆகுது. எனக்கு 3.00 மணிக்கு பிளைட், நான் போக வேண்டும் . எங்க வீட்டுக்காரர் உனக்கு வாங்கி கொடுத்த லாட்டரி சீட்டை கொடுங்கள் என்றாள். ஏன் அதை கேட்கறே? நான் தான் அவருக்கு பணம் அனுப்பி விட்டேனே? என்று கூறினேன். “பணம் எப்ப அனுப்பினே? பணம் வரல அதனால்தான் கேட்கிறேன் கொடு அந்த லாட்டரி சீட்டை என்றாள்” எதுக்கு கேட்கறே? ஆமா…இதுக்கா திருவனந்தபுரத்தில் இருந்து பிளைட்ல. வந்திருக்கே…? பிளைட்ல போறேன்னு சொல்றே…! அதுக்கு ஏதாவது பரிசு விழுந்திருக்கா ? என்று எதுவும் தெரியாது போல கேட்டேன்.

சென்னைக்கு ஒரு வேலையா வந்தேன்.. அப்படியே உன்னை பார்த்து, அவரு உனக்கு அனுப்பிய லாட்டரி சீட்டுக்கு நீ பணம் அனுப்பலையாம், அதனால அவர் அந்த லாட்டரி சீட்டை திருப்பி வாங்கி வரச் சொன்னார் என்றாள் கோகிலா.

நான் சிரித்துக்கொண்டே அப்படியா? இரு நான் அவருக்கு போன் போட்டு கேட்கிறேன் என்று போனை எடுத்தேன்.

உடனே கோகிலா என் மேல் நம்பிக்கை இல்லையா..? போன் போட்டு கேட்கிறேன்னு சொல்றியே? டைம் ஆகுது, அந்த லாட்டரி சீட்டை கொடுங்கள் என்றாள்.

நான் நேற்றே அவருக்கு பணம் அனுப்பி விட்டேன், பரிசுகிடைத்தாலும், கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை, அது என் கிட்டேயே இருக்கட்டும் என்றேன்.

அவர் தான் பணம் வரலைன்னு சொன்னாரே..! நீ ஏன் பொய் பேசறே..? பணம் அனுப்பிட்டேன்னு,

யார் பொய் பேசறது நீயா? நானா என்றேன்.

அது வரை பேசாமல் இருந்த என் மனைவி, ஏம்மா அண்ணன் என்ற மரியாதை இல்லாம பேசறே என்றாள். நீங்க எதுவும் பேசாதீங்க… இத பத்தி உங்களுக்கு ஒன்னும் தெரியாது என்றாள் கோகிலா.

ஏன் பேச கூடாது? உங்க அண்ணன் என் போனில் இருந்து தான் நேற்றே பணம் அனுப்பினாரு , பணம் அனுப்பியதை காட்டட்டுமா என்றாள் என் மனைவி.

கோகிலா சற்று அதிர்ச்சி அடைந்தாள். அந்த கதையெல்லாம் எனக்கு வேணாம். அவருக்கு பணம் வந்து சேரல, அவ்வளவு தான், அதனால் லாட்டரி சீட்டை திருப்பி கொடுங்கள் என்றாள் மீண்டும்.

அதெல்லாம் தர முடியாது கிளம்பு என்றாள் என் மனைவி.

அதை நீ சொல்லாதே…! இது என் அண்ணன் வீடு, அண்ணன் வீடா…? இது எங்க அப்பா எனக்கு வாங்கி கொடுத்தது. அண்ணனுக்கு மரியாதை கொடுக்க தெரில, ஆனா அண்ணன் வீடு மட்டும் தெரியுதா..? என்றாள் மஞ்சுளா.

இருவரும் மாறி, மாறி பேசுவதை பார்த்த நான் இதோ பார், கோகிலா இதோடு நிறுத்திக்க , பணம் அனுப்பியாச்சு, லாட்டரி சீட்டை தர முடியாது…! கிளம்பு பிளைட் உன்னை விட்டுட்டு போயிட போகுது என்றேன் கிண்டலாக… சிரித்துக்கொண்டே.

சிரிக்கிறியா..? நல்லா சிரி.. என்று கோபமாக கூறினாள் மஞ்சுளா

பின்ன என்ன பண்ண சொல்றே ?உன்ன பார்த்த சிரிக்கத்தான் தோணுது என்றேன்

அப்படியா…? இதோ பார் ராகவா…!! என்று கோகிலா கூற…

“என்ன? அண்ணனை பேர் சொல்லி கூப்பிடறே? என்று என் மனைவி கேட்டாள்”.

ஏமாற்று பேர்வழிக்கு மரியாதை வேற கேட்குதா…? என்றாள் கோகிலா

நான் அமைதியாக இருந்தேன்.

உனக்கு அவ்வளவு தான் மரியாதை…! கோகிலாவை வீட்டை விட்டு வெளியே போடி, என அவளை தள்ளிவிட்டாள் மஞ்சுளா…!

வந்ததே கோபம் கோகிலாவுக்கு என்னையா வெளியே தள்ளினே…?

இருடி… உன்னை என்ன பண்றேன் பாரு? என்று கூறி விட்டு கோபத்துடன் சென்று விட்டாள் கோகிலா.

எனக்கு சிரிப்பு தான் வந்தது. என்னங்க இங்க என்ன நடந்ததுன்னு நீங்க சிரிக்கிறீங்க என்றாள் மஞ்சுளா..

இல்ல, “பணம் வந்தா பகையும் கூட சேர்ந்து வரும்ன்னு நீ அன்னைக்கு சொன்னியே அத நினைச்சேன், சிரிச்சேன் என்று கூறினேன்”.

ஏங்க ராஜசேகருக்கு போன் போட்டு இங்க நடந்ததை சொல்லுங்க என்று மஞ்சுளா கூறினாள். அதுக்கும் சிரித்துக்கொண்டே என் போனை ON செய்து ஒரு மணி நேரம் ஆகுது, இங்கே நடக்கிறத Live relay வா அவர் அங்கே இருந்து கேட்டு கொண்டு தான் இருக்கிறார் என்றேன்.

பின்னர், இப்ப பாரு என்று speaker ON செய்து , என்ன மச்சான் எப்படி இருந்தது என் தங்கச்சியின் சண்டை என்றேன் . அவரும் சிரித்தார்.

மஞ்சுளாவுக்கு மேலும் ஆச்சர்யம் , உடனே அவள் ராஜசேகரிடம் அண்ணா என்னை தப்பா எடுத்துக்காதீங்க, கோகிலா அவரை ரொம்ப அதிகமா பேசிட்டா அதனால் தான் நானும் பேச வேண்டியதாயிற்று என்றாள். பரவாயில்லைம்மா, உன் மேல எந்த தப்பும் இல்லை. என்னையும் தப்பா நினைக்காதீங்க….சரியான பேராசைக்காரியா இருக்காள். நான் தான் லாட்டரி சீட்டை வாங்கி வரச் சொன்னதாக கூறினாளே, அதுவே எனக்கு கோபம் தான். நான் ஏற்கனவே ராகவன் கிட்ட பரிசு கிடைத்துள்ளது எனவும், கோகிலா அங்கு வர இருப்பதையும் சொன்னதால் என்னை நீங்க தப்பா நினைக்க மாட்டீங்கன்னு தெரியும்.

சரி ராகவா நீ என்ன பண்றே நாளைக்கே பிளைட்ல புறப்பட்டு வா, நேரா நான் airport க்கு வந்து விடுகிறேன். அங்கிருந்து Bankக்கு போய் deposit செய்திடலாம் என்றார்.

அவர் கூறியபடியே மஞ்சுளாவுடன் சென்றேன். எனக்காக லாட்டரி ஏஜெண்ட்டையும் அவருடன் அழைத்து வந்திருந்தார் . நாலவரும் வங்கிக்கு சென்று லாட்டரி சீட்டை கொடுத்தோம். Bank Manager லாட்டரி சீட்டை சரி பார்த்து விட்டு, என்னை பற்றியும், என் வங்கி விவரங்களையும், மற்றும் தேவையான அனைத்து விவரங்களையும் கேட்டு எழுதிக் கொண்டு என்னிடம் கையொப்பம் மற்றும் கைரேகைகளை வாங்கிக் கொண்டு வாழ்த்துக்கள் கூறினார்.

பின்னர் நான் வங்கி மேலாளரிடம் வருமான வரி மற்றும் இதர கமிஷன்கள் போக மீதம் பணம் எவ்வளவு வரும் , எப்போது கிடைக்கும் என்று கேட்டேன். சுமார் 15 கோடி ரூபாய் கிடைக்கும் எனவும் , ஒரு மாதத்திற்குள் எங்கள் வங்கிக்கு வந்து விடும், நாங்கள் அதை உங்கள் வங்கி கணக்கிற்கு transfer செய்து விடுவோம் என்று கூறினார்.

“நான் என் மச்சானிடம் அவர் வங்கி கணக்கின் விவரங்களை கேட்க”

‘அவர் எதற்கு? என்றார்’.

“சொல்லுங்க… என்றாள் என் மனைவி”.

‘காரணம் சொல்லுங்க? என்றார்’.

“உடனே வங்கி மேலாளர் இவர் எங்கள் வங்கியில் தான் கணக்கு வைத்துள்ளர் என்றார்”. ” நான் நல்லதா போச்சு என்று கூறி , மேலாளரிடம் தாங்கள் கூறிய படி பிடித்தங்கள் போக மீதம் எவ்வளவு தொகை வருகிறதோ அதில் 50% இவர் கணக்கில் சேர்த்து விடுங்கள். மீதமுள்ள 50% என் சென்னை வங்கிக் கணக்கிற்கு transfer செய்து விடுங்கள் என்றேன்”. என்ன மஞ்சுளா ? சரி தானே என்றேன்? YES ஏன்றாள்.

என்ன ராகவன் இதெல்லாம்…? மொத்த பணமும் உங்களுக்கு தான் சொந்தம், எனக்கு எதற்கு 50% என்று ராஜசேகர் கேட்க, வங்கி மேலாளர் சற்று குழப்பத்துடன் எங்கள் இருவரையும் பார்த்தார்.

நான் வங்கி மேலாளரிடம் அய்யா இவர் என் மைத்துனர் , தவிர நான் லாட்டரி வாங்க சொன்னது, அவர் வாங்கி அனுப்பியது, குலுக்கல் நடந்த அன்றைய இரவு தான் நான் இவருக்கு பணம் அனுப்பியது, என் தங்கை என்னிடம் வந்து சண்டை போட்டது என எல்லா விவரங்களையும் கூறினேன். ராஜசேகர் சிரித்தார். வங்கி மேலாளர் மகிழ்ச்சியுடன் எங்கள் இருவர் கைகளையும் பிடித்துக் கொண்டு இந்த காலத்தில் இப்படி ஒரு உறவுகளா….? என்று ஆச்சரியத்துடன் கேட்டார்.

“எல்லா உறவுகளும் இவர்களைப் போல் இருந்து விட்டால் பல குடும்பங்களில், பல பிரச்சினைகள் காணாமற் போய் விடும் என்று கூறினார்”.

குறிப்பு: இக்கதை என் கற்பனையில் உருவாக்கப்பட்டது. இக்கதையினை படித்த வாசகர்கள் எவர்க்கேனும் இது குறித்து குறும்படம் எடுக்கவிருப்பமிருந்தால் என்னை தொடர்பு கொள்ளவும்.

வேலூர் டி.சீனிவாசன் என் பெயர்: D. சீனிவாசன் வயது: 65 (02.1960) பணி: ஓய்வு பெற்ற்வர் Mobille No: 9382899982 தற்போதைய முகவரி: சென்னை  email ID : mvdsrinivasan@gmail.comமேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *