டி. டி. பட்டம்
கதையாசிரியர்: ஆர்.எஸ்.ஜேக்கப்
கதைத்தொகுப்பு:
ஆன்மிகக் கதை
கதைப்பதிவு: December 13, 2025
பார்வையிட்டோர்: 173
(1962ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
குருமாரில் சிலர் “வேதப் பண்டி தர்” என்பதைக் குறிக்கும் டி. டி. பட்டம் (Doctor of Divinity) பெற்றிருக்கின்றனர்
சாத்தானும் குருமார்களுக்கும், பிரசங்கிமார்களுக்கும் டி. டி. பட்டம் கொடுக்கிறான்.
சாத்தான் கொடுக்கும் டி டி. பட்டம் ‘டம் டாக்ஸ்’ (Dumb Dogs) ‘ஊமையான நாயகள்’ என்பதுதான்.
“ஊமையான நாய்கள்” என்ற சொற்றொடர் பைபிளில் உண்டா என்று சந்தேகிக்க வேண்டாம். ஏசாயாவை எடுத்து படியுங்கள்.
ஊமையான நாய்கள் என்ற பட்டத்திற்குக் காரணம் யாது?
அவர்கள் குருடர்:
சத்துருக்களால் வரக்கூடிய அபாயத்தைப் பார்க்கக் கூடாதபடி கண்கள் மூடிப்போயின.
அவர்கள் அறிவீனர்:
அபாயத்தை உணரக்கூடிய – உணர்த்தக்கூடிய சக்தி அவர்களுக்கு இல்லை.
ஏசாயாவின் காலத்திலிருந்த சில தீர்க்கதரிகளைப் பற்றியே இவ்விதம் சொல்லி இருக்கிறது.
பாவத்தைக் கண்டித்து உணர்த்தாத பிரசங்கிமார் தான் சாத்தானிடமிருந்து டி. டி. பட்டத்தைப் பெற்றவர்கள்.
“அவனுடைய காவற்காரர் எவ்லாரும் ஒன்றும் அறியாத குருடர், அவர்களெல்லாரும் குலைக்கமாட்டாத ஊமையான நாய்கள்.” [ஏசாயா 56:10]
“நீங்கள் பாவஞ்செய்யாமல் நீதிக்கேற்க விழித்துக் கொண்டு தெளிந்தவர்களாயிருங்கள்” (1 கொரிந்தியர் 15:34]
– குருமாணிக்கம் உவமைக் கதைகள் 101, முதற்பதிப்பு: ஏப்ரல் 1962, ஜெயா நிலையம், பாளையங்கோட்டை.
![]() |
பள்ளி ஆசிரியர், எழுத்தாளர், பத்திரிகை ஆசிரியர், பதிப்பாளர், சமூகசேவகர் எனப் பல திறக்குகளில் முத்திரை பதித்தவர் ஆர்.எஸ். ஜேக்கப். தூத்துக்குடியை அடுத்த ராஜாவின்கோவில் கிராமத்தில், நவம்பர் 19, 1926 அன்று, சந்தோஷம் நாடார், பொன்னம்மாள் இணையருக்கு மகனாகப் பிறந்தார். உடன்பிறந்தவர்கள் 11 பேர். தந்தை விவசாயி, பருத்தி வணிகமும் செய்தார். வணிகத்தின் பொருட்டு ஒவ்வொரு முறை வெளியூர் சென்று திரும்பும்போதும் தின்பண்டங்களோடு கூடவே நல்ல நூல்களையும் வாங்கிவருவார். தன் குழந்தைகளை…மேலும் படிக்க... |
