சோதனையும் சாதனையும்

சோதிப்பது காலமாக இருந்தாலும் சாதிப்பது நீங்களாக இருக்க வேண்டும்
கரன் என்ற ஒரு வாலிப மகன் இருந்தான் அவனுக்கு லோகேஷ் என்ற ஒரு நண்பனும் இருந்தான்.
கரன் மிகவும் சுறுசுறுப்பானவன் லோகேஷ் ஒரு சோம்பேறி இரண்டு பேருக்கும் உடற்பயிற்சி கூடத்தில் மாநில அளவில் சாதிக்க வேண்டும் என்று ஆர்வம் இருந்தது. இரண்டு பேரும் உடற்பயிற்சி கூடத்தில் பயிற்சி செய்ய தொடங்கினார்கள்.
இப்படியே சில நாட்கள் சென்றது பிறகு பலத்த மழை தொடங்கியது, அந்த மழை இரண்டு வாரமாக தொடர்ந்து பெய்து கொண்டிருந்தது, இந்த காரணத்தினால் லோகேஷ் பயிற்சி கூடத்திற்கு செல்லவில்லை.
ஆனால் கரன் மட்டும் விடாமல் செல்வான். அதன்பிறகு மீண்டும் லோகேஷ் பயிற்சி பண்ண தொடங்கினான்.
அதன் பிறகு கல்லூரி செமஸ்டர் தேர்வின் காரணமாக லோகேஷ் உடற்பயிற்சி செய்யவில்லை. ஆனால் கரன் மட்டும் தன் தேர்வுக்கு படித்துவிட்டு கிடைக்கும் நேரங்களில் பயிற்யையும் செய்தான்.
ஒரு சிறிய போட்டி வந்தது அதில் கரன் பங்கு பெற்று போட்டியில் ஜெயித்து விட்டான், பிறகு மிஸ்டர் தமிழ்நாடு போட்டிக்கு தயாரானான். ஆனால் லோகேஷ் சிறிய சிறிய காரணங்களை காட்டி உடற்பயிற்சி கூடத்திற்கு தொடர்ந்து செல்ல மாட்டான்.
பிறகு சிறிது நாள் கழித்து மிஸ்டர் தமிழ்நாடு போட்டி வந்தது கரன் பங்கு பெற்று அருமையாக ஜெயித்து விட்டான். கரனுக்கு ஒரே மகிழ்ச்சி.
லோகேஷ் கரனை பார்த்து எப்படிடா உன்னால் முடிந்தது என்று கேட்டான் அதற்கு கரன் லோகேஷை பார்த்து
“சோதிப்பது காலமாக இருந்தாலும் சாதிப்பது நாமாக இருக்க வேண்டும்”
என்றான். நீ கால சூழ்நிலையால் பயிற்சியை விட்டு விட்டாய் நான் விடாமல் பயிற்சி செய்தேன் இப்பொழுது ஜெயித்து விட்டேன் என்று மகிழ்ச்சியுடன் சொன்னான்.
– எழு (சிறுகதைகள்), மின்னூல் வெளியீடு : FreeTamilEbooks.com, மின்னூலாக்கம் – ஐஸ்வர்யா லெனின்.
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு:
கதைப்பதிவு: March 6, 2026
பார்வையிட்டோர்: 53